11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஓடும் பேருந்தின் திறந்த வாயிற்படியின் அருகில் நிற்பது ஆபத்தானது ஏன்?
2.
(i) சாய் நிலையில் எறியப்பட்ட எறிபொருள் எந்த அளவு மாறாதது?
(ii) எறிபொருளின் திசைவேகம் 10ms-1 எனில் அது பெரும கிடைமட்டத் தொலைவை அடையுமானால் கிடைமட்டத்தில் ஏற்படுத்தும் கோணம் யாது?
3.
A என்ற சமநிலையிலிருந்து B என்ற சமநிலைக்கு செல்ல அமைப்பினால் செய்யப்பட்ட வேலையில் அளவு 300 J வாயுவானது A யிலிருந்து B நிலைக்கு ஒரு முனையின் வழியாக எடுத்துச் செல்லும் போது அமைப்பினால் கவரப்பட்ட மொத்த வெப்பம் 10 கலோரி, எனில் இதில் அமைப்பினால் செய்யப்பட்ட மொத்த வேலையின் அளவு யாது?[1கலோரி=4.2J ]
4.
ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொருஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் யாவை?
5.
ஒரு சுருள்வில்லில் நிறை 'm' அனைத்து இணைக்கப்பட்டு 2s அலைவு காலத்தில் அலைவுறுகிறது. நிறையானது 2 kg உயர்த்தப்படும்போது அலைவுயுறு காலம் செகண்டகளுக்கு உயர்த்தப்படுகிறது. ஹீக்ஸ் விதிக்குட்பட்டது எனக் கொண்டு தொடக்க நிறை M ஐக் காண்க.
6.
ரெனால்டு எண் Rc ன் முக்கியத்துவம் யாது? அதன் மூலம் ஒற்றுமை விதி என்பதை விளக்கு.
7.
ஆற்றல் சம பங்கீட்டு விதியின்படி ஓரணு, ஈரணு, மூவனு மூலக்கூறு இவற்றின் சராசரி இயக்க ஆற்றலைக் கூறு?
8.
தொடுவிசை, தொடாவிசை விவரி.
9.
தனிச் சீரிசை இயக்கத்தில் இடப்பெயர்ச்சியினை விளக்குக.
10.
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)
11.
20 N ஒரு விசை செகுத்துடன் உண்டாகும் ஒரு கோணம் 600.500 g நிறையுள்ள ஒரு பொருள் கிடைமட்ட திசையில் நகரும் போது உண்டாகும் முடுக்கத்த காண்க.
12.
அச்சைப் பொருத்து திருப்பு விசை செயல்படுவதை படத்துடன் விவரி.
13.
இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையில் இருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது?
14.
ஒரு ரயில் 100 km/h வேகத்தில் இயங்குகிறது.15m தொலைவிற்குப்பிறது வேகத்தடை மூலம் நிறுத்தப்படுகிறது அதே ரயில் 120km/h வேகத்தில் இயங்குமானால் அதை நிறுத்தத் தேவையான சிறுமத் தொலைவு யாது?
15.
செய்யப்பட்ட வேலையை கணக்கிடுதல் எவ்வாறு எந்நேர்வுகலீல் வேலை சுழியாகும்?
16.
இரண்டு வெவ்வேறு அழுத்தங்களில் நடைபெறும் அழுத்தம் மாறா நிகழ்வுக்கான V-T வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது. இவற்றுள் எந்நிகழ்வு உயர் அழுத்தத்தில் நடைபெறும் என்று கண்டறிக.

17.
ஒரு முனை சுவரில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்றைக் கருதுவோம். படத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்கண்ட இரு சூழல்களிலும் (அலைகள் ஒரு வினாடியில் இந்த தொலைவைக்க கடப்பதாக கருதுக)
a) அலைநீளம் b) அதிர்வெண் c) திசைவேகம் ஆகியவற்றை கணக்கிடுக.
18.
இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:
19.
தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள மனிதர் ஒருவர், (1) வடக்கு நோக்கி 2 மீட்டரும், (2) கிழக்கு நோக்கி 1 மீட்டரும், பின்பு (3) தெற்கு நோக்கி 5 மீட்டரும் நடக்கிறார். இறுதியாக (4) மேற்கு நோக்கி 3 m நடந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இறுதி நிலையில் அம்மனிதரின் நிலை வெக்டரைக் காண்க.
20.
படத்தில் காட்டியுள்ளவாறு 100 kg நிறையுள்ள ஒரு பொருள் தரையிலிருந்து 10 m உயரத்திற்கு இரு மாறுபட்ட வழிகளில் தூக்கப்படுகிறது. இரு நேர்வுகளிலும் புவியீர்ப்பால் செய்யப்பட்ட வேலை என்ன? சாய்தளத்தின் வழியாக பொருளை எடுத்துச் செல்வது எளிதாக உள்ளது ஏன்?
.png)
.png)
1.
(i) பேருந்து திடீரென ஒரு வளைவு திருப்பத்தை அடையும் போது மையவிலக்கு விசையின் காரணமாக பேருந்திலிருந்து வெளியே தள்ளப்படுவார்.
(ii) மைய விலக்கு விசை போலியான விசையாக இருந்தாலும் கூட அதன் விளைவுகள் மெய்யானவை
2.
(i) திசைவேகத்தின் கிடைமட்டக் கூறு ux = u cos θ
(ii) 450 கோணத்தில் கிடைமட்டமாக இருக்கும்.
3.
அமைப்பானது A யிலிருந்து B க்கு பின்பு A க்கும் செல்வது ஒரு சுழற்சி மாற்றம் இம்முறையில் அக ஆற்றல் \(\triangle U=0\).
வெப்ப இயக்கவியலின் முதல் விதிப்படி
\(\triangle Q =\triangle U +\triangle W \)
\(=\triangle W \) [\(\therefore \triangle U=0\)]
அமைப்பினால் கவரப்பட்ட வெப்பத்தின் அளவு
=10கலோரி -30ஜூல்
=(10 x 4.2-30) J
=(42-30)J
\(\therefore \) அமைப்பினால் செய்யப்பட்ட மொத்த வேலை =12J
4.
ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, கீழ்க்கண்ட நிகழ்வுகள் ஏற்படும்.
a) ஒலியின் எதிரொலிப்பு: இரண்டாவது ஊடகம் மிகுந்த அடர்த்தியுடையதாக (உறுதியானதாக) இருந்தால், ஒலியானது முழுவதுமாக முதல் ஊடகத்திற்குள்ளேயே (மீண்டு எழுகிறது) எதிரொலிப்பு அடைகிறது.
b) ஒலியின் விலகல்: ஒலி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது (இரண்டாவது ஊடகம் முதல் ஊடகத்தை விட அடர்த்தி அதிகமாக உள்ள போது) அதன் ஆற்றல் இரண்டாவது ஊடகத்தால் உட்கவரப்படுவதால், ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.
5.
\(T=2\pi \sqrt { \cfrac { m }{ k } } \) k=சுருள் மாறிலி
முதல் நேர்வு \(2=2\pi \sqrt { \cfrac { m }{ k } } \) ....(1)
இரண்டாம் நேர்வு \(3=2\pi \sqrt { \cfrac { m+2 }{ k } } \) ....(2)
இரண்டையும் வர்க்கப்படுத்தி சமன் 2 ஐ 1 ஆல் வகுக்க
\(\cfrac { { 3 }^{ 2 } }{ { 2 }^{ 2 } } =\cfrac { M+2 }{ M } \)
\(\cfrac { 9 }{ 4 } =\cfrac { M+2 }{ M } =1+\cfrac { 2 }{ 3 } \left[ 8=5M,M=\cfrac { 8 }{ 5 } \right] \)
\(\cfrac { 9 }{ 4 } =1+\cfrac { 2 }{ m } =1.6\quad kg\)
6.
திரவத்தின் ஓட்டத்தை புரிந்து கொள்ள ரெனால்டு Rc மதிப்பை கீழ்கண்டவாறு கண்டறிந்தார் .
| வ.எண் | ரெனால்டு எண் | ஓட்டம் |
|---|---|---|
| 1 | Rc < 1000 | வரிச்சீர் ஓட்டம் |
| 2 | 1000 < Rc < 2000 | சீரற்ற ஓட்டம் |
| 3 | Rc > 2000 | சுழற்சி ஓட்டம் |
சுழற்சி ஓட்டம் தொடங்கும் Rc இன மாறுநிலை மதிப்பு வடிவியலாக ஒரே மாதிரியுள்ள ஒட்டங்களுக்கு சமான மதிப்பை கொண்டுள்ளது. உதரணமாக மாறுபட்ட அடர்த்திகள் மற்றும் பாகியல் எண்கள் மதிப்புள்ள இரு திரவங்கள் (எண்ணெய் மற்றும் நீர் )சம வடிவம் மற்றும் அளவுகளை கொண்ட இரு ககுழாய்கள் வழியே சென்றால் ஒரே Rc மதிப்பில் சுழற்சி ஓட்டம் தொடங்குகிறது. மேற்கண்ட கருத்திலிருந்து ஒற்றுமை வவிதியை பெறலாம், அதன் கூற்றானது இரு வடிவியல் ரீதியாக ஒரே மாதிரியான பாய்ம ஓட்டங்கள் இருந்தால் அவை இரண்டும் ஒரே ரெனால்டு எண்ணை கொண்டிருக்கும் வரை அடிப்படையில் ஒன்றுக்கொன்று சமமானதாகும்
7.
ஓரணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்
\((f=3)=3\times{1\over2}kT={3\over2}kT\)
தாழ் வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்
\((f=5)=5\times{1\over2}kT={5\over2}kT\)
உயர் வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்
\((f=7)=7\times{1\over2}kT={7\over2}kT\)
நேர்க்கோட்டு மூவணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்
\((f=7)=7\times{1\over2}kT={7\over2}kT\)
நேர்க்கோட்டு அமையாத மூவணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்
\((f=6)=6\times{1\over2}kT={3}kT\)
8.
(i)தொடுவிசை:
இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் விசை தொடு விசை ஆகும். விசையை ஏற்படுத்தும் காரணியும் பொருளும் ஒன்றுக்கொன்று தொடுவதன் மூலம் ஏற்படும் தொடு விசையால் பொருளின் இயக்கமானது ஏற்படுகிறது.
(ii) தொடாவிசை: சூரியனை புவி சுற்றி வருவதை கருதுவோம். சூரியனும் புவியும் ஒன்றை ஒன்று தொடவில்லை என்றாலும் அவை ஒன்றையொன்று இடைவினை புரிகின்றன. அதன் காரணமாக புவியானது சூரியனின் ஈர்ப்பு விசையை உணர்கிறது. இவ்வகை ஈர்ப்புவிசை ஒரு தொடா விசை ஆகும்.
9.
எந்த ஒரு கணத்திலும் அதிர்வடையும் துகளானது நடுநிலையிலிருந்து கடந்துவந்த தொலைவு இடப்பெயர்ச்சி எனப்படும். துகள் Pயில் உள்ளபோது, y அச்சில் அதன் இடப்பெயர்ச்சி y ஆகும்.

ΔOPNல் sinθ =\(\frac { ON }{ OP } \)
ON=y=OP sinθ
y=OP sin ωt [∵ θ=ωt]
OP வட்டத்தின் ஆரம் a. எனவே அதிர்வடையும் துகளின் இடப்பெயர்ச்சி.
∴ y=a sinωt
நடுநிலையிலிருந்து துகள் மேற்கொள்ளும் பெரும இடப்பெயர்ச்சியை வீச்சு என வரையறுக்கலாம்.
10.
ஆற்றலானது நிறை மற்றும் ஒளியின் திசைவேகத்தைப் பொறுத்தது எனில்
E \(\alpha \) ma cb
E = kma cb இங்கு k என்பது மாறிலி
ஆற்றலின் பரிமாண வாய்ப்பாடு E = [ML2 T2]
நிறையின் பரிமாண வாய்ப்படு = [M]
திசைவேகத்தின் பரிமாண வாய்ப்பாடு
c = [LT-1]
பரிமாண மதிப்புகளை சமன்பாட்டில் பிரதியிட
[ML2T2] = K [M]a [LT 1]b
அடுக்குகளை இருபுறமும் சமன்செய்ய,
a = 1
b = 2
E = k.mc2
இங்குமாறிலி k = 1
E = mc2
இதுவே நிறை ஆற்றல் சமன்பாடாகும்.
11.
(m) = 500 g = 0.5 kg
கோணம் (\(\theta \))
விசை (f ) = 20 N
விசையின் கிடை மட்டக் கூறு = F sin \(\theta \)
பொருளின் முடுக்கம் = \(a=\frac { Fsin\theta }{ m } \)
= \(\frac { 20sin{ 60 }^{ 0 } }{ 0.5 } \)
'a' = 17.32 m/s2
12.
(i) திண்மப்பொருளில் P என்ற புள்ளியில் F விசை செயல்படுகிறது என கொள்க. விசை F ஆனது தளம் ABP ல் அமையாமல் இருக்கலாம். அச்சு AB யில் ஏதேனும் ஒரு புள்ளியை ஆதிப்புள்ளி O என எடுத்துக்கொள்வோம்.
(ii) புள்ளி O வைப்பொருத்து F ன் திருப்புவிசை \(\tau =\vec r \times \vec F \) மேலும் அச்சின் திசையில் இத்திருப்பு விசையின் கூறானது அச்சைப் பொருத்து விசையின் திருப்பு விசையாகும்.
(iii) இதனை கண்டறிய நாம் முதலில் திருப்புவிசை வெக்டர் \(\tau =\vec r \times \vec F \) க்கும் மற்றும் அச்சு AB க்கும் இடையேயான கோணம் \(\phi \) யை காணவேண்டும். (விசையின் தளம் ABP யில் இல்லை என்பதை நினைவில் கொள்க)
(iv) AB யை பொருத்து உலா திருப்புவிசை என்பது AB இன் வழியாகச் செல்லும் திருப்பு விசை \(\left| \vec r \times \vec F \right|\)யின் கிடைத்தளக்கூறு \(\left| \vec r \times \vec F \right|cos \phi \)ஆகும்.அதைபோல AB க்கு செங்குத்தான திருப்புவிசை \(\left| \vec r \times \vec F \right|sin \phi \) அச்சைபொருத்து ஒரு பொருளின்மீது செயல்படும் திருப்புவிசை அப்பொருளின் அச்சைபொருத்து சுழல்கிறது.
(v) மேலும் அச்சுக்கு செங்குத்தாக உள்ள திருப்பு விசை சூழல் அச்சை பொருத்து சுழற்றுகிறது. இவை இரண்டு ஒரே நேரத்தில் திண்மப் பொருளின்மீது செயல்படும் போது பொருளானது அச்சுச் சுழற்சியை (precession) மேற்கொள்ளும்.
13.
1.இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையில் இருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு மாற்றுதல்.
2.இந்த முறையானது ஓர் அளவின் எண் மதிப்பையும் (n) அதன் அலகையும் (u) பெருக்கக் கிடைப்பது ஒரு மாறிலி என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது.
அதாவது n[u] =மாறிலி அல்லது n1u1=n2u2
ஓர் இயற்பியல் அளவானது நிறையின் 'a' பரிமாணத்தையும் நீளத்தின் 'b' பரிமாணத் தினையும், காலத்தின் 'c' பரிமாணத்தையும் பெற்றுள்ளதாக கொள்வோம்.
3.ஓர் அலகிடும் முறையின் அடிப்படை அலகுகள். M1,L1மற்றும் T1 எனவும் மற்றொரு அலகிடும் முறையின் அடிப்படை அலகுகள் முறையே M2,L2 மற்றும் T2 எனவும் கொண்டால்,
\(n_1[M^a_1L^b_1T^c_1]=n_2[M^a_2L^b_2T^c_2]\)
14.
தொடக்க திசைவேகம் u =100km/h
=100 x \(\frac {5}{18}\)=27.7m/s2
கடந்த தொலைவு =15 m
இறுதி திசைவேகம் v =0
\(\therefore \)முடுக்கம் a =\(\frac { { -u }^{ 2 } }{ 2s } \)
\(a=\frac { { -(27.7) }^{ 2 } }{ 2\times 15 } =\frac { 771.6 }{ 30 } =25.7m/{ s }^{ 2 }\)
a=25.72m/s2
u=120km/s எனில்
u=120\(\frac{5}{18}\)=33
கடந்த தொலைவு
s =\(\frac { { -u }^{ 2 } }{ 2s } \)=\(\frac { { (-33) }^{ 2 } }{ 2\times 25.72 } \)
\(=\frac { 1089 }{ 51.44 } =21.17\)
=21m
15.
விசையினால் செய்யப்பட்ட வேலை என்பது விசை(\(\vec{F}\)) இடப்பெயர்ச்சி (\(d \vec {r}\)) மற்றும் அவற்றிற்கிடையே உள்ள கோணம்\(\theta \) ஆகியவற்றை சார்ந்தது.
வேலை W =Fdr cos\(\theta \)
கீழ்கண்ட நேர்வுகளில் செய்யப்பட்ட வேலை சுழியாகும்.
(i) விசை சுழியாகும் போது (F=0)
உதாரணமாக உராய்வற்ற ஒரு கிடைத்தளப் பரப்பிள் மாறா திசைவேகத்தில் நகரும் (உராய்வு இல்லாததால்) ஒரு பொருள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும் (இது ஒரு இலட்சிய (ideal) சூழ்நிலை).
(ii) இடப்பெயர்ச்சி சுழியாகும் போது (dr=0).
உதாரனமாக திடமாக உள்ள ஒரு சுவரின் மீது விசை செலுத்தப்பட்டால் விசையானது எந்த இடப்பெயர்ச்சியைம் ஏற்படுத்தாது. செய்யப்பட்ட வேலை சுழியாகும்.
(iii) விசையும் இடப்பெயர்ச்சியும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ள போது (\(\theta \)=90o ).
ஒரு பொருளானது கிடைத்தளத் திசையில் நகரும் போது புவியீர்ப்புவிசை (mg) பொருளின் மீது வேலை ஏதும் செய்யாது. ஏனெனில் அது இடப்பெயர்ச்க்கு செங்குத்தாக செயல்படுகிறது. வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசையானது வேலை ஏதும் செய்யாது. ஏனெனில் அது எப்போதும் இடப்பெயர்ச்சிக்கு செங்குத்தாக உள்ளது.
16.
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிலிருந்து,
\(V=\left( \frac { \mu R }{ P } \right) T\)
V -T வரைபடம் அதிப்புள்ளி வழியேச் செல்லும் ஓர் நேர்கோடாகும்.
அதன் சாய்வு =\(\frac { \mu R }{ P } \)
V -T வரைபடத்தின் சாய்வு, அழுத்தத்திற்கு எதிர்விகிதத் தொடர்புடையது ஆகும். சாய்வு பெருமமாக இருபின், அழுத்தம் குறைவானதாகும். இங்கு P1 இன் சாய்வு P2 வை விட அதிகம். எனவே P2 > P1.
17.
| முதல் நேர்வு | இரண்டாம் நேர்வு | |
|---|---|---|
| (a) அலைநீளம் | ⋋ = 6m | ⋋ = 2m |
| (b) அதிர்வெண் | f = 2Hz | f = 6Hz |
| (c) திசைவேகம் | v = 6 x 2 = 12ms-1 | v = 2 x 6 = 12ms-1 |
இதிலிருந்து நாம் அறிவது கம்பியில் ஏற்படும் அலையின் திசைவேகம் மாறிலி. அதிர்வெண் அதிகரிக்கும்போது அலைநீளம் குறைகிறது. மறுதலைக்கும் (vice vrsa) இது பொருந்தும். அவற்றின் பெருக்குத்தொகையான திசைவேகம் நிலையாக (மாறாமல் இருக்கிறது)
18.
(i) இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒன்று அடிப்படை அளவுகள், மற்றொன்று வழி அளவுகள்.
(ii) வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
(iii) அவை நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு (amount of a substance) ஆகும்.
(iv) அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எடுத்துக்காட்டு: பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், விசை மற்றும் பல.
19.
படத்தில் காட்டியுள்ளவாறு நேர்குறி x அச்சை கிழக்கு திசையாகவும், நேர்குறி y அச்சை வடக்கு திசையாகவும் கருதுக.

பயணமுடிவில் P புள்ளியை அடைந்த மனிதரின் நிலை வெக்டர் \(\overrightarrow{r}=-2\hat{i}-3\hat{j}\) ஆகும். மேலும் இடப்பெயர்ச்சியின் திசை தென் மேற்கு ஆகும்.
20.
m = 100 kg, h = 10 m
பாதை (1) இன் வழியே:
பொருளை 10 m உயரத்திற்குத் தூக்கத் தேவையான சிறும விசை F1 ஆனது புவியீர்ப்பு விசைக்குச் சமமாக இருக்க வேண்டும்.
F1 = mg = 100 × 10 = 1000 N
பாதை (1)இன் வழியே நகர்ந்த தொலைவு h = 10 m
பாதை (1) இன் வழியே பொருளின் மீது செய்யப்பட்ட வேலை
W = Fh = 1000 × 10 = 10,000J
பாதை (2) இன் வழியே:
சாய்தளத்தின் வழியே பொருளைக் கொண்டு செல்ல பொருளின் மீது நாம் செலுத்தும் சிறும விசை F2 ஆனது mg-க்கு சமமாக இல்லை, மாறாக
mg sinθ-க்கு சமமாகும். இங்கு θ = 30°
mg sin θ = 100 x 10 x sin300
= 100 x 10 x 0.5 = 500 N
எனவே (mg sinθ < mg)
சாய்தளப் பாதையின் நீளமானது
\(l=\frac{h}{\sin 30^{\circ}}=\frac{10}{0.5}=20 \mathrm{~m}\)
பாதை (2) இன் வழியே பொருளின் மீது செய்யப்பட்ட
வேலை W = F2l = 500 × 20 = 10,000 J
புவியீர்ப்பு விசையானது ஆற்றல் மாற்றா விசை என்பதால் புவியீர்ப்பால் பொருளின் மீது செய்யப்பட்ட வேலை அதனை கொண்டு சென்ற பாதையைச் சார்ந்ததல்ல.
இரு பாதைகளிலும் புவியீர்ப்பு விசையால் செய்யப்பட்ட வேலை 10,000 J ஆகும்.
பாதை (1) இன் வழியே: குறைவான தொலைவு நகர்த்த புவியீர்ப்புக்கு எதிராக அதிகமான விசை செலுத்த வேண்டியுள்ளது.
பாதை (2) இன் வழியே: அதிகமான தொலைவு நகர்த்த புவியீர்ப்புக்கு எதிராக குறைவான விசை செலுத்த வேண்டியுள்ளது.
சாய்தளத்தின் வழியே செலுத்தப்பட வேண்டிய விசை குறைவாக உள்ளதால் சாய்தளத்தின் வழியாக பொருளை எடுத்துச் செல்வது எளிதாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards