11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/09/2019
அரபியர், துருக்கியரின் வருகை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________
முபாரக் ஷா
ஆலம் கான்
கிசர் கான்
துக்ரில் கான்
2.
3.
உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______
ராஷ்டிரகூடர்
டோமர்
சண்டேளர்
பரமர்
4.
பாலம் பவோலி கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது
சமஸ்கிருதம்
பாரசீக மொழி
அரபி
உருது
5.
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் ______ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்
15
17
18
19
6.
நாற்பதின்மர் அமைப்பு
7.
துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்
8.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
9.
முகமது துக்ளக்கின் சோதனை முயற்சிகள் தோல்வியடைந்தற்கான காரணங்கள் என்னென்ன?
10.
மாலிக் காஃபூரின் தென்னிந்தியத் தாக்குதல்கள் குறித்து எழுதுக.
11.
12.
அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்
13.
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
1.
(b)
ஆலம் கான்
2.
(a)
3.
(c)
சண்டேளர்
4.
(a)
சமஸ்கிருதம்
5.
(b)
17
6.
(i) டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
(ii) இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
(iii) கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
(iv) வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
7.
(i) துருக்கிய படையெடுப்பின் போது வட இந்தியாவில் பல ராஜபுத்திர அரசர்கள் ஆட்சிபுரிந்தனர்.
(ii) முக்கிய ராஜபுத்திர அரசுகளாக சௌகான், கடவாலா, பரமர் மற்றும் சந்தேலர்கள் இருந்தனர்.
(iii) இதில் விக்ரகராஜ், பிருத்திவிராஜ் போன்றோர் சிறந்தர்களாக திகழ்ந்தனர்.
(iv) பரமர் வம்சத்தில் போஜரும், கடவாலாவில் ஜெயசந்திராவும், சந்தேலர்களில் யாசோவர்மனும், கீர்த்திவர்மனும் வறுமையுடன் காணப்பட்டனர்.
8.
(i) கஜினி முகமது இந்தியா வரும்போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
(ii) அல்பெருனி ஹிதாப் -இ-ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
(iii) பாரசீக கவிஞரான பிர்தொளசி, ஷாநாமாவை இயற்றினார்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி, சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
9.
முகமது-பின்-துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர். திறமை வாய்ந்த அரசர் என்ற போதிலும் இரக்கமற்றவர். கொடூரமானவர் நியாயமற்றவர் என்றும் பெயர் பெற்றிருந்தார்.
(i) முகமது பின் துக்ளக்கின் சோதனை முயற்சிகள்:
(i) தலைநகர் மாற்றம்
(ii) அடையாள நாணயங்கள்
(iii) வேளாண் விரிவாக்கத்திட்டம்
(i) தலைநகர் மாற்றம்:
தில்லியிலிருந்து தென்னிந்திய அரசுகளை ஆள்வது கடினம் என எண்ணிய துக்ளக் தலைநகரை இந்தியாவின் மையத்திலிருந்து தேவகிரிக்கு (தொளலதாபாத்) மாற்றினார்.
இங்கிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்று உணர்ந்த பிறகு மீண்டும் தில்லிக்கே தலைநகரை மாற்றினார். இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
(ii) நாணயச் சீர்திருத்தம்:
வெள்ளி நாணயத்திற்கு பதில் வெண்கல நாணயங்களை வெளியிட்டார். ஆனால் வெண்கல நாணயங்களை பலர் போலியாக அச்சிட்டனர். இது அரசு கஜானாவை காலி செய்தது. எனவே துக்ளக் அரசாங்கம் புதிய நாணயங்களை திரும்ப பெற்று மீண்டும் வெள்ளி நாணயங்களை அச்சிட வேண்டியதாயிற்று. இத்திட்டமும் தோல்வியில் முடிந்தது.
(iii) வேளாண் விரிவாக்கத் திட்டம்:
தோவாப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவிய போது முறையற்ற நிலவரி விதிக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பு இவற்றை சீர் செய்ய கால்நடை, விதைகள், கிணறு வெட்ட கடன் தரப்பட்டது. அலுவலர்கள் திறம்பட செயல்படவில்லை ஆதலால் இதுவும் பயன்தரவில்லை.
முகமது பின் துக்ளக்கின் திட்டங்கள் புதுமையானது என்றாலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
10.
அலாவுதீன் கில்ஜியின் தக்காண படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தென்னிந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூரே ஆவார்.
(i) தேவகிரி அரசர் ராமச்சந்திர தேவருக்கு எதிராக 1307 ல் மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தார். அடிப்பணிந்த அந்நாட்டு அரசர் ஏராளமான செல்வத்தை நிறையாகவும் செலுத்தினர்.
(ii) 1309ல் மாலிக்காபூர் வாராங்கல் மீது படையெடுத்து அதன் அரசர் பிரதாப ருத்ர தேவன் தோற்கடிக்கப்பட்டான். ஏராளமாக செல்வம் கைப்பற்றப்பட்டது.
(iii) மாலிக்காபூர் 1310ல் துவாரசமுத்திர அரசன் மூன்றாம் வீரவல்லிளானை தோற்கடித்தான். பெரும் செல்வத்தைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தான்.
(iv) பிறகு மாலிக்காபூர் தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களை கொள்ளையடித்தான்.
(v) பின்னர் மதுரைமீது படையெடுத்தார். தலைநகர் மதுரையை விட்டு தப்பி ஓடினான்.
(vi) 1311ல் ஏராளமான செல்வக்குவியலுடன் மாலிக்காபூர் தில்லி திரும்பினார்.
11.
12.
அலாவுதின் கில்ஜியின் பரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
நிர்வாக சீர்திருத்தங்கள்:
(i) பிரபுக்கள் குவித்து வைத்திருந்த செல்வம் பறிமுதல் செய்தார். பிரபுக்கள் சதிகள் எய்வதற்கான வாய்ப்பை தடுக்க எடுத்த முதல் நடவடிக்கை இது.
(ii) சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
(iii) கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த மரபுரிமைகளை பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களை தடைச் செய்தார்.
(iv) ஊழல் அரசு அலுவலர்களை கடுமையாகத் தண்டித்தார்.
சமூக சீர்திருத்தம்:
(i) உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டது.
(ii) இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.
(iii) அலாவுதீன் விதித்த வரிசுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
(iv) தனது பேரரசின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
சந்தை சீர்திருத்தங்கள்:
(i) படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக கொடுத்த முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார் குறைந்த ஊதியமும் அளிக்கப்பட்டது.
(ii) அத்யாவசியப்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஒற்றர் முறையை பயன்படுத்தினார்.
(iii) கொடுக்கல், வாங்கல், பேரங்கள் அனைத்து விபரங்களையும் ஒற்றர் மூலம் அறிந்து கொண்டனர்.
(iv) அத்யாவசியப் பொருள்களின் விலை குறித்து அலுவலர்களும், ஒற்றர்களும் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
தண்டனை:
(i) விலை ஒழுங்கு முறை விதிகளை மீறுவோர் கடமையாக தண்டிக்கப்பட்டனர்.
(ii) ஏதேனும் எடைக்குறைவு கொண்டு பிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண்முன்னே வீசப்பட்டது.
இவ்வாறாக எளியோர் மீது வரியை குறைத்து செல்வந்தர்கள் மீது அதிக வரியை புகுத்தி, தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தினார்.
13.
கோரி முகமதுவின் வட இந்திய போர்களில் முக்கியமானது தரைன் போர்களாகும். தெற்கு ஆசிய இஸ்லாமிய ஆட்சி அமைய அடித்தள மிட்டவரும் இவரே.
முதல் தரைன் போர் 1191:
அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகானுக்கும் கோரி முகமதுவுக்கும் இடையே 1191ல் முதல் தரைன் போர் நடைபெற்றது. இதில் கோரி முகமது தோல்வியுற்றார். காயம் அடைந்த கோரி முகமதுவை ஒரு குதிரை வீரன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.
இரண்டாம் தரைன் போர் 1192:
1. முதல் தரைன் போரில் தோல்வியுற்ற கோரி முகமது மீண்டும் பிருத்விராஜ் சௌகான் மீது 1192 2வது தரைன் போர் நிகழ்த்தினார்.
2. இம்முறை கோரியின் ஆற்றலை பிருதிவிராஜ் குறைத்து மதிப்பிட்டார். தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
3. சிறிய படைக்குழுவுக்குத் தலைமை தாங்கி 2வது தரைன் போரில் ஈடுபட்டார்.
4. 2வது தரைன் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
5. இந்திய வரலாற்றின் திருப்பு 2வது தரைன் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி பிருதிவிராஜிடமமே ஆட்சியை ஒப்படைத்தார்.ஆனால் ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரைக் கொன்றார்.
6. தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப்பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
இவ்வாறாக இரண்டாவது தரைன் போர் ராஜபுத்திர ஆட்சியின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சிக்கும் வழிவகை செய்தது எனலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards