11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
பாமினி - விஜயநகர அரசுகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
2.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
3.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
4.
கோல்கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி.
5.
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் சிறந்த ஆட்சியாளராகப் போற்றப்படக் காரணங்கள் யாவை?
6.
நாயக்க முறை.
7.
முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
8.
விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
9.
_____ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.
இராஜா கிருஷ்ண தேவ்
சுல்தான் குலிகுதுப்பான்
முகமது கவான்
பாமன் ஷா
10.
ஷா நாமாவை எழுதியவர் _______
பிர்தெளசி
இபின் பதூதா
நிக்கோலோ டி கோன்டி
டோமிங்கோ பயஸ்
11.
12.
_____ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
வீர நரசிம்மர்
13.
இபன் ____ நாட்டுப் பயணி.
மொராக்கோ
வெனிஷிய
போர்த்துகல்
சீனா
1.
(i) பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார்.
(ii) 1363 இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
(iii) கோல்கொண்டா கோட்டையை அவர் கைப்பற்றினார்.
(iv) அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.
2.
(i) இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
(ii) கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக் கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர்.
(iii) சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்து விஜய நகரத்திற்கும், இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர்.
3.
(i) கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்கள் மேலதிகச் செய்திகளை வழங்குகின்றன.
(ii) கோவில்கள், அரண்மணைகள், கோட்டைகள், மசூதிகள் ஆகியவை வளமான தொல்லியல் சான்றுகளாக உள்ளன.
(iii) நாணயச் சன்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.
4.
(i) ராஜா கிருஷ்ண தேவ் வாரங்கல்லைத் தலை நகராகக் கொண்ட காகத்திய வம்ச அரசர் கட்டிய கோட்டை இது.
(ii) 1495-1496 இல் இக்கோட்டை சுல்தான் குலிகுதப்ஷா விற்கு ஒரு ஜாகீராகத் (நிலமாக) தரப்பட்டது. அவர் அக்கோட்டையைக் கருங்கற்கள் கொண்டு புனரமைத்தார்.
(iii) அதன் பின் இக்கோட்டைப் பகுதி இருந்த நகரம் முகம்மது நகர் எனப்பட்டது. பிற்காலத்தில் பாமினி அரசின் கைவசமாகி அதன்பின்னர் குதுப்ஷாகி வம்சஅரசின் தலைநகரானது.
(iv) கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலை மீது 120 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
(v) கோல்கொண்டா கோட்டை அதன் ஒலி அம்ச அடிப்படையில் கட்டப்பட்ட சிறந்த கட்டடக்கலையின் அம்சமாகும். இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலாஹிசார் என்றழைக்கப்படுகிறது.
(vi) இதில் ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்து மலையின் கீழுள்ள அரண்மனைக்குச் செல்வதாகச் சொல்லப்படுகின்றது.
(vii) இக்கோட்டையில் அரச அவையும் (Durbar Hall), மாளிகையும் உள்ளது.
5.
(i) கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசர் எனப் போற்றப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவ கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார். பல கோவில்கள் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்று வரை உள்ளன.
(ii) விஜயநகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டு2பயணிகளாக நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை குறித்தும் விஜயநகரத்தின் உயர் நிப்பிளை செல்வச் செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
(iii) அவருடைய தலைசிறந்த சாதனை, ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்ததாகும்.
6.
(i) நாயக்க என்னும் சொல் தெலுங்கு கன்னடப் பகுதிகளில் பதிமூன்றாம் நுற்றாண்டிலிருந்தே இராணுவத் தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
(ii) பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
(iii) கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக்கட்டணம் எனவும், நாயக்தானம் என கன்னடத்திலும், நாயன்கரமு எனத் தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.
(iv) இம்முறையானது கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர் ஆகியோரின் ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது.
(v) கிருஷ்ண தேவராயரைப் போன்ற வலிமையான அரசர்கள் இருந்தவரை இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது.
(vi) தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர்.
7.
(i) முதலாம் முகமது சிறந்த அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசுமுறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
(ii) அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன்படி,
1. வகில் உஸ்சுல்தானா : படைத்தலைவர்; அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்.
2. வசீர் குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற் பார்வையிடுபவர்.
3. அமீர் இஜூம்லா : நிதியமைச்சர்.
4. வசீர் இஅஷ்ரப் வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர்.
5. நசீர்: நிதித்துறை இணையமைச்சர்.
6. பேஷ்வா: அரசப் படைகளின் பொறுப்பாளர்.
7. கொத்வால்: காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி.
8. சதர் இஜஹான்: தலைமைநீதிபதி; சமய அறநிலையத்துறை அமைச்சர்.
(iii) வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
(iv) நிறுவன மற்றும் புவியியல் ரீதியாக முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
8.
1. பதினாறாம் நூற்றாண்டில், நாயக்க நிர்வாக முறையில் நாயக்குகள் நெசவு போன்ற கைவினைத் தொழில்களை வளர்ப்பதற்காக அவ்வப்போது வரிச்சலுகை வழங்கினார்.
2. விஜயநகர அரசின் காலத்தில் வேளாண் சாராத கைவினைத் தொழில் உற்பத்தி வியத்தகு வளர்ச்சியை அடைந்தது.
3. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பொருளாதாரம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்திருந்தது.
4. பணப் பொருளாதாரத்தின் தொடக்கத் தோடு, நாணயப் பணத்தின் பயன்பாடும் அதன் செலாவணியும் பலமடங்காகப் பெருகியது.
5. சமூகத்த்தில் நெசவு செய்வோர், உலோக வேலை செய்வோர், கட்டடக்கலைஞர்கள் போன்ற கைவினைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
6. வேளாண் அல்லாத பிரிவுகளைச் சார்ந்த 'பட்டடை' அல்லது 'காஸய வர்க்கம்' என்றழைக்கப்பட்ட இவர்கள் வரிகளைப் பணமாகவே வழங்கினர்.
7. தமிழகத்தின் வடபகுதி, ராயலசீமை, ஆந்திரக் கடற்கரைபகுதி ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் வணிக மையங்களும் நெசவு மையங்களும் உருவாயின.
8. இயல்பாகவே தென்னிந்தியத் துறை முகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களில் ஜவுளி முக்கியப் பண்டமாக விளங்கியது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஜவுளி வணிகமானது.
9. இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர் மற்றும் ஏனைய ஐரோப்பிய வணிகர்களைப் பெரிதும் ஈர்த்த ஒன்றாகும்.
9.
(a)
இராஜா கிருஷ்ண தேவ்
10.
(a)
பிர்தெளசி
11.
(c)
12.
(b)
இரண்டாம் தேவராயர்
13.
(a)
மொராக்கோ
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards