11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?
தேவாரம்
திருவாசகம்
நாலாயிரத்திவ்யபிரபந்தம்
பன்னிரு திருமுறை
2.
ஐஹால் கல்வெட்டை எழுதியவர் _________
சீத்தர்
ரவகீர்த்தி
மெய்கீர்த்தி
முதலாம் புலிகேசி
3.
ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………
அத்வைதம்
விசிஷ்டாத்வைதம்
சைவசித்தாந்தம்
வேதாந்தம்
4.
அயல்நாட்டு வணிகர்கள் ………… என்று அறியப்பட்டனர்.
பட்டண சாமி
நானாதேசி
விதேசி
தேசி
5.
………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.
சரவணபெலகொலா
மதுரை
காஞ்சி
கழுகுமலை
6.
காம்போஜம் என்பது நவீன ………………
அஸ்லாம்
சுமத்ரா
ஆனம்
கம்போடியா
7.
கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி
விஷயம் - ராஷ்ட்டிரகூடர்
நம்மாழ்வார் - குருகூர்
8.
'உருக்காட்டுக் கோட்டம்' செப்புப் பட்டயம் குறிப்பு தருக?
9.
பல்லவர்களின் தோற்றம் பற்றி கூறுக.
10.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
11.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
12.
"ஏரிப்பட்டி" குறிப்பு தருக.
13.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
14.
புகழ்பெற்ற சைவ மூவர்கள்.
15.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்.
16.
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
17.
18.
பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
1.
(c)
நாலாயிரத்திவ்யபிரபந்தம்
2.
(b)
ரவகீர்த்தி
3.
(d)
வேதாந்தம்
4.
(b)
நானாதேசி
5.
(a)
சரவணபெலகொலா
6.
(d)
கம்போடியா
7.
(a)
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
8.
(i) இப்பட்டயம் 1879-ல் புதுச்சேரிக்கு அருகே 'உருக்காட்டுக் கோட்டம்' எனும் இடத்தில் கண்டறியப்பட்டது.
(ii) இங்கு லிங்கம், நந்தி பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில், பதினோறு செப்புப் பட்டயங்கள் கோர்க்கப்படுகின்றன.
(iii) இதில் அரசன் நந்திவர்மன் 22 ஆண்டில் மானியமாக வழங்கிய கிராமம் குறித்த செய்திகளை இது கூறுகின்றது.
(iv) அரசரை சமஸ்கிருத மொழியில் புகழ்ந்து, மானிய விவரங்களை தமிழில் கூறி சமஸ்கிருத செய்யுளோடு முடிகிறது.
9.
(i) பல்லவர்களின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொன்றுமையில்லை.
(ii) தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான 'பஹல்வ' என்ற சொல்லின் திரிபே பல்லவ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
(iii) தக்காணத்தில் ஆட்சி புரிந்த வாகாடகர்கள் என்ற பிராமண அரச குலத்தின் ஒரு பிரிவினரே பல்லர்கள் என்ற கருத்து நிலவுகிறது.
(iv) இருப்பினும் பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தே அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
10.
(i) கவிராஜமார்க்கம், பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
(ii) இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
11.
(i) பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
(ii) முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
(iii) பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜீத வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
(iv) போரில் பல்லவ வெற்றிபெற்றார்
v) சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றிபெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
12.
(i) ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்பு வகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம்.
(ii) தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த அந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும்.
(iii) இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிகிறது.
(iv) ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன.
(v) ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்து கொண்டனர்.
(vi) ஏரிகளை பராமரிப்பது கிராமத்தின் பொறுப்பாகும்.
13.
(i) சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
(ii) விஜயபத்திரிக்கா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
(iii) அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
(iv) அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
(v) கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
(vi) ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
14.
(i) 1. திருஞான சம்பந்தர், 2. அப்பர், 3. அந்தரர் ஆகியோர் புகழ்பெற்ற சைவ மூவர் ஆவார்.
(ii) முதல் ஏழு நூல்களில் உள்ள தேவாரப் பாடல்கள் இம்மூவரால் இயற்றப்பட்டது.
(iii) பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.
15.
(i) எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற கோவில் கைலாசர் கோவில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
(ii) மூலக்கோவில், நுழைவுவாயில், நந்திமண்டபம், வாடி முக மண்டபம் என நான்கு பகுதிகளுடைய இக்கோவில் 25அடி உயரமுள்ள மேடையில் கட்டப்பட்டுள்ளது.
(iii) மேடையின் முகப்பில் யானைகளும், சிங்கங்களும் மேடையைத் தாங்குவது போல் உள்ளது.
(iv) 16 சதுர தூண்கள் கொண்ட மண்டபம், துர்க்கை எருதுமுக அரக்கனை கொல்வது போன்ற சிற்பம், ராவணன் கைலாய மலையை தூக்க முயற்சிப்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
(v) அவர்களின் இராமாயணக்காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கைலாசர் கோவிலின் பொதுபண்பு திராவிட கலைப்பாணியைச் சேர்ந்தது.
16.
(i) பல்லவர்கால அரசியல் நிர்வாகப் பிரிவின் தலைவர் அரசர் ஆவார்.
(ii) அரசருக்கு உதவ 'மந்திரி மண்டல' என்ற அமைச்சர் குழு இருந்தது.
(iii) மாநில ஆளுநர்களுக்கு அமைச்சர் குழு ஆலோசனை வழங்கியது.
(iv) கிராமங்களில் கிராமமன்றங்கள் நிர்வாகம் செய்தன.
(v) ரகஸ்யதிகரா, கொடுக்காபிள்ளை, கோச அதீயஷா, தர்மாதிகாரி போன்றவர்கள் நிர்வாகத்தினை நடத்தும் மற்ற அதிகாரிகளாவார்.
(iv) மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர்.
17.
18.
(i) பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகள் வாணிபம் சார்ந்தே இருந்தன.
(ii) பல்லவர் கால வணிகர்கள் வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு "நானாதேசி" ஆகும். "நானாதேசியின்" செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.
(iii) இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
(iv) தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வாணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா, சம்பா, ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
(v) மேற்கு கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரேபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
(vi) அயல் நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
(vii) மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது.
மேற்கண்டவாறு பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை வரையறுத்துக் கூறலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards