11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஹரப்பா மக்களின் 'நம்பிக்கைகள்' குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
2.
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.
3.
இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?
4.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
5.
6.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
7.
தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.
8.
தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
9.
'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.
10.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.
1.
1. ஹரப்பா மக்கள் இயற்கையை வழிபட்டார்கள், அரச மரத்தை வழிபட்டிருக்கிறார்கள்.
2. அங்கு கிடைத்த சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.
3. காலிபங்கனில் வேள்வி பீடங்கள் காணப்பட்டுள்ளன.
4. ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.
5. இறந்த உடல்களை எரித்தற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
6. இறப்பிற்கு பின்னரான வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
2.
1. ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
2. மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
3. கார்னிலியன்(மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும்,
4. செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
5. சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலனைச் செய்தார்கள்.
6. இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
7. இவை மெசப்பட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
3.
1. இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
2. குகைகளிலும், திறந்த வெளிகளிலும் வசைத்தனர்.
3. இக்கால மக்கள், நெருப்பை பயன்படுத்தினர். இறந்தோரைப் புதைத்தார்கள்.
4. அவர்களுக்கு கலைத்திறன் இருந்ததை பிம்பிட்கா போன்ற இடங்களில் கிடைக்கும் சான்றுகளிருந்தும் அறியலாம்.
5. அவர்களின் நுண்கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின.
6. மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.
4.
1. இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம் பரவியிருந்தது.
3. பீகாரில் பயிஸ்ரா, குஜராத்தில் லங்னஜ்,
4. உத்திரப்பிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா
5. ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
6. ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்.
7. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.
5.
6.
அ) மட்பாண்டம் செய்தல்
1. ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
2. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
3. அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நிரைச் சேர்த்து வைக்கும் கலர், துகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
4. நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
5. அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
6. ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.
ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
1. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
2. சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
3. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்ப்புகளைக் குறிப்பிடுகின்றன.
4. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள்,தயக்கட்டைகள் மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
6. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
ஹரப்பா நாகரிக்கப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.
இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
வணிக பரிவர்த்தனைக்கான ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
1. ஹரப்பா நாகரிக்கப்பகுதியிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
3. எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8:16:32 என பின்பற்றப்பட்டுள்ளது,
4. இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
5. சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் =1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விகிதத்தில் அளவு கோலையும் பயன்படுத்திருக்கிறள்.
ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும்:
அ) முத்திரைகள்:
1. ஸ்டீட்டைட், செம்மண், சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிக்கப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
3. பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.
ஆ) எழுத்துமுறை:
1. ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
2. 5000 த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
7.
தென்னிந்தியாவில் புதிய கற்காலம்:
பரவியுள்ள இடங்கள்:
1. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம்,தமிழ்நாட்டின் வேடமேற்குப்பகுதிகளில் புதிய கற்கால பண்பாடு நிலவியதாக கண்டறியப்படுகிறது.
2. கோதாவரி, கிருஸ்ணா, பொண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவில் உள்ள சங்கனகல்லு, தெக்கலகோடா, பிரம்மகிரி, மஸ்கி, பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.
முக்கிய கூறுகள்:
1. சில தொடக்ககாலப் புதிய கற்கால ஆய்விடங்கள் சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
2. புதிய கற்கால வளாகத்தின் ஒரு பகுதியாக 200 க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
3. அந்திரப்பிரதேசத்தில் உள்ள உட்னுர், பல்வோய், கர்நாடகத்தில் உள்ள கொடெக்கல், குப்கல், படிகல் ஆகியவை இத்தகைய சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
4. மெல்லிய சாம்பலும், நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
5. சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும், புதைகுழிகளும் மனித வாழிடங்களுக்கான சான்றுகளாக உள்ளன.
8.
புதிய கற்கால பதொடக்கம்:
1. வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது.
பரவல்:
புதிய கற்கால பண்பாட்டின் பழைமையான சான்றுகள் எகிப்தின் செழுமை பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்து பகுதி, கங்கைப்பள்ளத்தாக்கு, சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலம் : பொ.ஆ.மு. 10,000-5,000
வேளாண்மை:
1. தாவரங்களையும், விலங்குகளையும் பழக்கப்படுத்தியதின் மூலம் உணவு தானியங்கள் கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
2. ஆறுகளின் மூலம் படியும் செம்பலான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தனியா உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
புதிய கற்கால புரட்சி :
1. பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
2. எனவே இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதியகற்கால புரட்சி எனப்படுகின்றன.
9.
1. மனிதர்களின் அறிவாற்றல் திறன்களின் மேம்பட்டத்தன்மையை மேல் பழங்கற்கால மக்களிடம் காணமுடிகிறது.
2. கல்லில் வெட்டுக் கருவிகள் செய்யும் தொழிற் கூடங்கள் இக்கால கட்டத்தில் வளர்ச்சி பெற்றன.
3. கருவிகளுக்கான தொழில் நுட்பத்தில் புதுமையை புகுத்தினர்.
4. கற் கருவிகள், கத்தி, வாள்போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
5. மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
6. இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பய்னபடுத்தப்பட்டன.
10.
| கீழ்ப் பழங்கற்காலம் | இடைப் பழங்கற்காலம் |
| இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. | 3,85,000-40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது. |
| இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர். | இக்கலக்கட்டத்துக்கும் ஹோமோ எரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர். |
| மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். | நர்மதை, கோதாவரி, கிருஸ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன. |
| வேட்டையாடியும், கிழக்கு கோட்டை, பலம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்துள்ளனர். | வேட்டை ஆடுபவர்களையம் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர். |
| திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர். | திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர். |
| கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினார். | இக்கருவிகள் சிறியதாயின. இக்கருவிகள் உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards