11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கான்பூர் படுகொலை .
2.
கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?
3.
திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
4.
1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?
5.
1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக
6.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
7.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
8.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
9.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ______.
ஹென்றி லாரன்ஸ்
மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
சர் ஹீயூக் வீலர்
ஜெனரல் நீல்
10.
கோல் எழுச்சிக்குக் காரணமானவர் _______ஆவார்.
பின்த்ராய் மன்கி
சிடோ
புத்தபகத்
கானு
11.
வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ______ ஆவார்.
W.C ஜாக்சான்
A . பானர்மேன்
S.R லூஹிங்டன்
P .A ஆக்னியூ
12.
திப்பு சுல்தான் _____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
கள்ளிக்கோட்டை
குடுகு
கொடுங்களூர்
திண்டுக்கல்
13.
உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின் ____ உண்மையான அரசர் ஆனார்.
ஹைதர் அலி
நாஞ்சராஜா
நாகம நாயக்கர்
திப்பு சுல்தான்
1.
1875 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் போது கான்பூரில் ஆங்கிலேய பெண்கள், குழந்தைகள், உட்பட 125 பேர் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் கிணற்றுக்குள் வீசப்பட்டன. இதுவே கான்பூர் படுகொலை எனப்பட்டது.
2.
சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை கொங்கு நாடு.
தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர்.
1801 - ல் காவிரிக்கரையிலும், 1802 - ல் ஓடநிலையிலும், 1804 - ல் அரச்சலூரிலும் அவர் நடத்தியது மூன்று முக்கியமான போர் ஆகும்.
1805- ஆம் ஆண்டு சின்னமலை கைது செய்யப்பட்டு சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
3.
ஸ்ரங்கப்பட்டண உடன்படிக்கை திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது .
திப்பு ஆங்கிலேயர்க்கு தன் ஆட்சிப் பகுதியின் பாதியைக் கொடுக்க வேண்டும்.
போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
திப்புவின் அதிகாரம் பாதியாக குறைக்கப்பட்டது.
போர் இழப்பீடு கொடுக்கும் வரை தன் இரு மகள்களை பிணைக் கைதியாக அனுப்பி வைக்க வேண்டும்.
4.
1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள்:
1858 -ஆம் ஆண்டு மகாராணியின் பேரரறிக்கையின் படி, இதுவரை ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவால் ஆட்சி செய்யப்பட்டு வந்த இந்தியா, இனிமேல் ஆங்கிலேயே முடியரசின் பெயரால் அரசு செயலாளர் மூலம் ஆளப்படும்.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும், இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும்.
கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன.
1861 - இல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்.
5.
1801 - 1806 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலப் படையில் இந்திய வீரர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி உண்டானது.
காரணம் அவர்களின் மத அடையாளமாக நெற்றியில் இடப்பட்ட குறியீடுகளுக்கு தடை விதிக்கப்பட்டன.
ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு தலைப்பாகை அறிமுகம் செய்தார்.
இதன் மேல் இருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் வீரர்களுக்கு அருவருப்பைத் தந்தது.
அதுமட்டுமல்லாது சிப்பாய்களின் சீருடையில் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பல காரணங்களால் 1806 - ஆம் ஆண்டு வேலூர் புரட்சி வெடித்தது.
6.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
7.
காரணங்கள்
நாடுகளை ஆக்கிரபித்தல்:
டல்ஹெளசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலம் அவகத்தையும். ஜான்சியையும் இணைத்தார். இது நானா சகிப்புக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலம் வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு நியமித்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000 க்கு அதிகமான தோட்டங்கள் பரிமுதல் செய்யப்பட்டன.
அவகத்தில் அரச குடும்பத்தை நம்பி வேலை செய்யும் வேலையாட்கள், தொழில் புரிவோர் வேலையிழந்ததால் அவர்களும் கோபமுற்றனர்.
நியாயமற்ற நிலவருவாய் முறை:
ஆங்கில அரசுக்கு முன்னர் இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூல் செய்தனர்.
ஆனால் ஆங்கிலேயர் ஒரு வாடகையைப் போல், வரி வசூல் செய்தனர்.
எவ்வாறு என்றால் நிலத்தில் விவசாயம் செய்தலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூல் செய்யப்பட்டன.
முஸ்லீம் உயர்குடியினர் மற்றும் கற்றறிந்தோர் நிலை:
முஸ்லிம்கள் பெரும்பாலும் அரசு பணியையே சார்ந்திருந்தனர்.
சில பேர் குதிரைப்படைத் தளபதிகளாக உயர்ந்த ஊதியம் பெற்று வந்தனர்.
ஆனால் கம்பெனியின் ஆட்சியில் அவர்கள் பலவாறு இன்னலுற்றனர்.
நீதிமன்றம் பொதுப் பணித்துறையில் பாரசீக மொழி ஒழிக்கப்பட்டது; முஸ்லிம்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.
மத உணர்வுகள்:
சதி ஒழிப்பு, விதவை மறுமணம், பெண் சிசு கொலை ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்கள் சமய நம்பிக்கையில் கம்பெனி அரசு தலையிடுவதாக கருதப்பட்டது.
1850- யில் இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி சட்டம் கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது.
இறுதியாக, இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தோட்டக்களில் பசுவின் கொழுப்பு, பன்றியின் கொழுப்பு தடவப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இது வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
விளைவுகள்:
இதுவரை கிழக்கிந்தியக் கம்பெனியால் ஆளப்பட்டு வந்த இந்தியா இனிமேல் ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசு செயலாளர் மூலம் ஆளப்படும்.
வாரிசு உரிமை இழப்புக் கொள்ளையும், இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும்.
கல்வி, பொதுப்பணித்துறை சார்ந்த திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்.
கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் ஒழிக்கப்பட்டன.
இந்திய அரசர்கள், மக்களின் உரிமைகளும், மற்றும் கண்ணியமும் காக்கப்படும்.
1861 - இல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதமர் நியமிக்கப்படுவர்.
8.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
9.
(b)
மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
10.
(a)
பின்த்ராய் மன்கி
11.
(a)
W.C ஜாக்சான்
12.
(c)
கொடுங்களூர்
13.
(a)
ஹைதர் அலி
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards