11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
'டாமின் - இ -கோ' என்பது என்ன?
2.
வேலூர் நிகழ்வின் தாக்கம் எங்கெல்லாம் பரவியது?
3.
'மாபுஸ்கான்' - பற்றி எழுதுக.
4.
நாச்சியார் - பெண்கள் படை பற்றி கூறுக.
5.
கான்சாகிப் - பற்றி எழுதுக.
6.
கான்பூர் படுகொலை .
7.
‘செயில் ராகப்’ பற்றி விளக்கு.
8.
கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?
9.
‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?
10.
திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
1.
பழங்குடிகளான சந்தால்கள் வங்காளம், பிகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்தனர்.
பல்வேறு காரணங்களால் தாய் மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜமகள் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி அங்கு வாழ்ந்தனர்.
அந்தப் பகுதியை சந்தால்கள் டாமின் -இ -கோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள்.
2.
ஹைதராபாத், வாலாஜாபாத், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை, பெல்லாரி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களில் பரவியது.
அதுபோல் 1857 - ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறி குறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன.
3.
ஆற்காடு நவாப்பின் மூத்த அண்ணன் மாபுஸ்கான் என்பவர்.
இவர் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கர்னல் ஹெரான் திருநெல்வேலிக்கு படையெடுத்த போது உடன் சென்றார்.
களக்காட்டில் நடந்த போரில் புலித்தேவரால் மாபுஸ்கான் தோற்கடிக்கப்பட்டார்.
4.
வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பெண்கள் படையை உருவாக்கி இருந்தார்.
இதில் பெண்களை உளவாளிகளாகப் பயன்படுத்தினார்.
குயிலி என்ற பெண் தன்மீது நெருப்பை வைத்துக் கொண்டு ஆங்கிலேய வெடிமருந்து கிடங்கை வெடிக்கச் செய்தார்.
மேலும், உடையாள் எனும் பெண்ணும் ஆயுத கிடங்கை வெடிக்கச் செய்தார்.
5.
கான்சாகிப் என அழைக்கப்பட்ட யூசப்கானின் இயற்பெயர் மருதநாயகம் பிள்ளை.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 1752 ல் கிளைவ் தலைமையிலான கம்பெனி படையில் இணைந்தார்.
அவர் நிர்வாகப் பொறுப்பில் இருந்த போது கோயில் நிலங்களை மீட்டெடுத்தார். நெசவு தொழிலை ஊக்குவித்தார்.
6.
1875 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் போது கான்பூரில் ஆங்கிலேய பெண்கள், குழந்தைகள், உட்பட 125 பேர் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் கிணற்றுக்குள் வீசப்பட்டன. இதுவே கான்பூர் படுகொலை எனப்பட்டது.
7.
முண்டாக்கள் என்போர் பிகார் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக முண்டா சமூகத்தை சேர்ந்த பெண்கள் செயிலராகப் என்னும் இடத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள் கண்முடித்தனமாகக் கொல்லப்பட்டனர். இது செயிலராகப் படுகொலை எனப்படுகிறது.
8.
சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை கொங்கு நாடு.
தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர்.
1801 - ல் காவிரிக்கரையிலும், 1802 - ல் ஓடநிலையிலும், 1804 - ல் அரச்சலூரிலும் அவர் நடத்தியது மூன்று முக்கியமான போர் ஆகும்.
1805- ஆம் ஆண்டு சின்னமலை கைது செய்யப்பட்டு சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
9.
விஜயநகர பேரரசால் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்படும்.
ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது.
திப்பு சுல்தான் ஆட்சியல் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்கு சமமாகக் கொள்ளப்பட்டது.
தமிழில் இதனை வராகன் என்பர்.
10.
ஸ்ரங்கப்பட்டண உடன்படிக்கை திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது .
திப்பு ஆங்கிலேயர்க்கு தன் ஆட்சிப் பகுதியின் பாதியைக் கொடுக்க வேண்டும்.
போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
திப்புவின் அதிகாரம் பாதியாக குறைக்கப்பட்டது.
போர் இழப்பீடு கொடுக்கும் வரை தன் இரு மகள்களை பிணைக் கைதியாக அனுப்பி வைக்க வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards