11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தானா தரோக குறிப்பு வரைக.
2.
ரயத்வாரி முறை குறிப்பு வரைக.
3.
“செல்வவளங்க ள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது” – எவ்வாறு?
4.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.
5.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக.
6.
மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.
7.
ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக.
8.
ஒப்பந்தக் கூலிமுறை
9.
பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்
10.
சார்லஸ் உட் அறிக்கை
11.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
12.
இரட்டையாட்சி முறை
13.
இருப்புப் பாதையும் தபால் தந்தியும் விரிவான விடை தருக.
14.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
15.
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.
16.
தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை போக்குவரத்து 1856 இல் சென்னையிலிருந்து ______ வரை இயக்கப்பட்டது.
வாணியம்பாடி
காட்பாடி
விழுப்புரம்
அரக்கோணம்
17.
______ இந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும் , பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தினார்.
காரன்வாலிஸ்
வில்லியம் பெண்டிங்
தாமஸ் மெக்காலே
தாமஸ் மன்றோ
18.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம் _______
நாகபூர்
அவத்
ஜான்சி
சாதரா
19.
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
காரன்வாலிஸ்
தாமஸ் மன்றோ
ராபர்ட் கிளைவ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
20.
_____ உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம் , பீகார் , மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது.
அலகாபாத்
,மத ராஸ்
பூனா
புதுச்சேரி
21.
_________ இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
பிளாசிப் போர்
முதலாம் கர்நாடக போர்
பக்சார் போர்
வந்தவாசிப் போர்
1.
(i) ஒவ்வொரு மாவட்டமும் தானாக்காளாகப் (காவல் நிலையம் )பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வசிக்கப்பட்ட தரோக என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.
(ii) காரன்வாலிஸின் காவல்துறை நிர்வாக முறை பின்னர் மேலும் மெருகேற்றப்பட்டது. நீதியதிகாரத்திற்கும் வருவாய் அதிகாரத்திற்கு இடையேயான திடமான பிரிவு கைவிடப்பட்டது.
(iii) ஆட்சியரே நீதி வழங்குபவராகவும் செயலாற்றத் துவங்கினார்.
2.
(i) ரைய்யா என்ற அரசு வார்த்தையின் ஆங்கில திரிபே ' ரயத்' ஆகும்
(ii) ரயத் என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள்.
(iii) எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொல்வதே இம்முறையாகும்.
(iv) நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலமிருப்பது உறுதி செய்யப்பட்டது.
3.
(i) வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சி (Poverty and Unbritish Rule in India ) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நெவ்ராஜி விளக்குகிறார்.
(ii) ஆங்கிலேயருக்கு முன்பு படையயெடுத்து வந்தவர்கள் கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
இதன் விளைவு இந்தியாவை ஏழ்மையாக்கியது.
4.
(i) வங்காளத்தில் முன்பு வளைந்த ஒரு வகைபட்டுப் போன்ற பருத்தியிலிருந்து டாக்கா மஸ்ஸின் என்ற மெல்லிய துணியை நெய்தார்கள்.
(ii) அதுபோன்ற மஸ்லின் துணி ரகத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று அபே டுபாய் என்ற பிரெஞ்சு கத்தோலிக்க சமய போதகர் குறிப்பிடுகிறார்.
5.
(i) 1830ல் யமுனைக் கால்வாயும் , 1857ல் கங்கை கால்வாயும் 450 மைல்கள் நீட்டிக்கப்பட்டன.
(ii) கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையை கட்டினார்.
(iii) கிருஷ்ணா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
(iv) 1856 இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரிஇடைத் துறைக்கு கால்வாய் தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.
6.
(i) கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமைய பெற்றிருக்கும் இடம் மாகாணம். ஆகும்.
(ii) அவ்விதத்தில் சென்னை , பம்பாய் , கல்கத்தா ஆகியவை மாகாணங்கால் ஆகும்.
(iii) பின்னர் இம் மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம் ஒருங்கிணைத்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.
7.
(i) தாமஸ் மன்றோ 1780 இல் மதராஸ் வந்தடைந்தார் முதல் 12 வருடங்கள் அவர் ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார்
(ii)அவர் பாரமஹால் பகுதியில் 1792 முதல் 1799 வரையிலும் கன்னட பகுதியில் 1799 முதல் 1800 வரையிலும் பணியில் இருந்தார்.
(iii) பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டங்களான கடப்பா, கர்னுள் , சித்தூர் , ஆன்ந்தப்பூர் ஆகியவற்றிற்கு ஆட்சியராக பணிபுரிந்தார்.
8.
(i) இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர் திட்டதிற்கு முற்றிலும் மாறான தண்டனைக்குரிய ஒப்பந்தமாகும்.
(ii) இம்முறையின்படி கூலி (ஒப்பந்த தொழிலாளரை அழைக்கும் முறை ) சிறைசாலை போன்ற சுழலில் பணி செய்ய வேண்டும்.
(iii) பணியில் அல்டசியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ , மிடுக்காக திரிந்தாலோ , உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலோ , ஒப்பந்த காலம் முடியும் முன் பணியை விட்டு விலகினாலோ கூலியை மறுக்கவோ அல்லது சிறை தண்டனை வழங்கவோ முடியும்.
(iv) ஒரு அர்ப்ப பிரச்சினைக்காகக்கூட சட்டச் சரத்துக்களை காட்டி தோட்ட உரிமையாளர் , தொழிலாளர்களின் சம்பளத்தை மறுக்கவோ அல்லது அவர்களை சிறையில் அடைக்கவோ செய்தனர்.
9.
(i) பிண்டாரிகள் கொள்ளை கூட்டத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என்ற இரு சமயத்தை சார்ந்தவர்கள் இருந்தனர்.
(ii)துணைப்படை திட்டத்தினால் வேலை இழந்த பலவீரர்கள் இக்கொள்ளை கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவிற்கு பெறுகினர்.
(iii) பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர் பிரகடனம் செய்தது.
(iv) தக்கர்கள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து தில்லிக்கு ஆக்ராவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்.
(v) தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க பென்டிங் பிரபு ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமனை நியமித்தார்.
10.
(i) சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை 1854 இல் ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும் கல்லூரி படிப்பையும் உள்ளடக்கிய ஒருவிரிவான வரைவாகும்.
(ii) பொதுக்கல்வி துறை துவங்கப்பட்டு மூன்று மாகாண தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
(iii) இதன் தொடர்ச்சியாக 1857 இல் சென்னை பல்கலைக்கழகமும் , பம்பாய் , கல்கத்தா பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டன.
(iv) டல்ஹெள சி தாய் மொழி கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தார்.
11.
(i) இந்து சம்பரதாயங்களின் படி வாரிசு இல்லாத மன்னர் ஒரு ஆண் மகவை தத்து எடுக்க முடியும்.
(ii) அவ்வாறு தத்து எடுக்கப்பட்ட மகனுக்கு சொத்தின் முழு சுவிகாரம்உரிமை உண்டு.
(iii) ஆனால் டல் ஹெளசி பிரபு இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .
(iv) வாரிசு இல்லாத அரசை கம்பெனி இணைத்துக் கொள்ளும்.
(v) வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும்.
(vi) ஜான்சியின் அரசர் கங்காதரராவ் இறந்த மறுகணமே அவ்வரசு டல்ஹெளசியால் இணைக்கப்பட்டது.
12.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி உண்மையான முழு அதிகாரத்தையும் தன் வசம் தக்க வைத்துக் கொண்டு வெற்று நிர்வாகச் சுமையை மட்டுமே நவாபிடம் விட்டு வைத்தது.இத்தகைய நிர்வாக '' இரட்டைஆட்சி முறையே '' ஆகும்
13.
(i) இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும்.இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப்பாதை ப் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம்.
(ii) கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குனரர்களிடம் இருக்கவே செய்தது. இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று டல் ஹெளசி வாதிட்டு அதை வலியுறுத்தினர்.
(iii) எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
(iv) இந்தியாவிற்கும் லண்டனுக்குமிடையே தந்திப் போக்குவரத்தை உருவாக்க பல கோரிகைகள் வைக்கப்பட்டபோதும் தந்திப் போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
(v) 1857 ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்கு பின் அதிமுக்கியத் தேவையென்ற நிலையை எட்டியது.லண்டனுக்கும் , கல்கத்தாவிற்கு மிடையே தொடர்புகொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி இருபத்தியெட்டு நிமிடங்களில் தொடர்புகொள்ள தந்தி வழிசெய்தது.
(vi) ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள தூரம் 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது.
(vii) லண்டனில் இந்திய அலுவலகத்தில் செயலாற்றி வந்த பிரிட்டிஷ் அரசின் செயல்தலைவேரோடு தொடர்பு தவிர்க்க முடியாததானது.
(viii) இதன்பின் கர்சன் நீங்கலாக மற்ற கவர்னர் ஜெனரல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்த ' வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ளாமல் முடிவெடுக்கத் தயங்கினார்கள்.
14.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
15.
துணைப்படைத் திட்டத்தின் கூறுகளாவன :
(i) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகாரக (resident) ஏற்க வேண்டும்.
(ii) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும்.அது முடியாதபோது மாகானத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
(iii) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசை பிற ஐரோப்பிய நாடுகளுக்கான தொடர்பை த் துண்டித்துத் கொள்ள வேண்டும்.அதிலும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்ககூடாது.
(iv) பிரிட்டிஷார் அனுமதிக்காமல் மார் ஐரோப்பியறை பணியிலமர்த்தக் கூடாது.
(v) பிற இந்திய அரசுகளாடு கம்பெனியின் அனுமதியில்லாமல் பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடாது.
(vi) எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சிலைகளில் தலையிடக் கூடாது.இவ்வாறு சுதேச அரசுகள் தங்கள் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனி சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.
(vii) துணைப்படைத் திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஓட்டுமொத்த திறனையும் கூட்டியது.அதன் உடனடி விளைவு என்பது சொந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில் முறை போர் வீரர்கள் வேலை இழந்ததே ஆகும்.
(viii)அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட வீரர்கள் கொள்ளைக்கரைகளாக மாறினார்கள்.பிண்டாரிகள் (கூட்டமாக சூறையாடுவோர)எண்ணிக்கை துணைப்படைத் திட்டத்திற்கு பின் கனிசமாக உயர்ந்தது.
(xi ) அரசர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதும், பாதுகாப்பிற்குள்ளிருந்த பல அரசுகளின் நிர்வாகம் திறம்பட இல்லை எனக் குற்றம் சுமத்தி அவற்றை இலகுவாக இணைப்பதும் நடந்தேறியது.
16.
(d)
அரக்கோணம்
17.
(c)
தாமஸ் மெக்காலே
18.
(d)
சாதரா
19.
(b)
தாமஸ் மன்றோ
20.
(a)
அலகாபாத்
21.
(c)
பக்சார் போர்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards