11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.
2.
ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக.
3.
குறிப்பு வரை: செலியுகஸ் நிகேடர்
4.
காந்தார கலையை பற்றி கூறுக.
5.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.
6.
பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்
7.
“சத்ரப்கள்” பற்றி நீவிர் அறிவது யாது?
8.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
9.
சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?
10.
இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியவோடும் சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச்சென்றது எது?
1.
i) குஷாண அரசர்களில் புகழ்பெற்றவர் கனிஷ்கர் ஆவார்
ii) பௌத்தத்தின் மகாயானப்பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார், நான்காம் பௌத்த மகா சங்கத்தை கூட்டியவர்
iii) இவரது காலத்தில் தான் காந்தார கலை வளர்ச்சியுற்றது.
iv) அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்ரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்த தத்துவ ஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
2.
i) ரோமானியக் குடியரசு பொ.ஆ.மு 27ல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று.
ii) ஐரோப்பாவிலும் வாடாஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப்பெரும் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரொம்பதான் உலகிலேயே மிகப்பெரிய செலவச் செழிப்பு மிக்க நகரமாகும்.
3.
i) அலெக்ஸ்சாண்டரின் திறமை மிக்க தளபதிகளுடன் ஒருவரான செலியுகஸ் நிகேடர் பொ.ஆ.மு 311க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார்.
ii) பொ.ஆ.மு 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகசை எதிர்த்து போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும் இது அலெக்ஸ்சாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதை போன்ற கொடூரமான தோல்வி அல்ல.
4.
i) பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாராம் கிரேக்க மற்றும் ரோமானிய பண்பாடுகளின் செல்வாக்கு ரோமானியம் உட்பட்டது.பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாராக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன.
ii) குஷாணப் பேரரசுக் காலத்தில் ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலைநுட்பங்கள் இந்தியக் காலை நுட்பங்களோடு கலந்து, வடமேற்கு இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டன.
iii) ஆன்மநிலையில் - கண்கள் [பாதி மூடிய நிலையில் தியானத்திலிருந்து புத்தரை சித்தரித்ததற்காக காந்தாராகலை புகழ் பெற்றது.
5.
i) வணிகம் பெருமளவு வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினார்.
ii) கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
iii) வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
iv) இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
v) எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
6.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
இந்தியாவிலிருந்து ரோமுக்கு மிளகு, முத்துகல், தந்தம், பட்டுத்துணி, விளாமிச்சை வேர் தைலம், தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு மற்றும் பருத்தி துணிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன
இறக்குமதி பொருட்கள்
ரோமிலிருந்து இந்தியாவிற்கு நாணயங்கள், புஸ்பராசக்கல், அஞ்சனம், பவழம் கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
7.
i) சாகர்களின் ஆட்சிக்காலத்தில் மாகாண ஆளுநர்கள் "சத்ரப்கள்" என்று அழைக்கப்பட்டனர்
ii) சத்ரப்கள் பலரும் தங்களை சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டு தங்களுக்கு மஹாசத்ரபாகள் என்ற பட்ட பெயரை சூட்டிக் கொண்டனர்
iii) புகழ் பெற்ற சாக சத்ரப்களில் புகழ் பெற்றவர் "ருத்ரதாமன்" என்பவராவார்.
iv) இவர் சாதவாகனர்களையும் தோற்கடித்தார்.
8.
i) இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுதும் பாப்போம்.
ii) இச்சொல் பாரசீக மொழியில் கிரேக்கர்களை குறிக்கும். "யாயுனா" என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
iii) இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களை கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
9.
i) பொ.ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்து போரிட்டு அவரை தோற்கடித்தார்.
ii) இருப்பினும் இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதை போன்ற கொடூரமான தோல்வி அல்ல.
iii) மாறாக சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்
iv) சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்கு பதிலாக 500 போர் யானைகளை பெற்றுக்கொண்டார்.
10.
i) பேரரசர் அசோகர் இரக்கத்தையும் அதன் விளைவாக மௌரியப் பேரரசின் வீழ்ச்சியையும் தொடர்ந்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவை சேர்ந்த இந்தோ - கிரேக்கர், சாகர், குஷானர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின.
ii) இவர்கள் அனைவருமே இந்தியாவின் பெரும் பகுதிகளில் தங்களின் ஆட்சிகளை நிறுவினர்.
iii) மேலும் இது விரிவான வணிகத் தொடர்புகள் மூலம் மத்தியத் ஆசியா சீனா ஆகியவற்றோடு இந்தியாவை ஒருங்கிணைத்தது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards