11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
ஐரோப்பியரின் வருகை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?
2.
முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?
3.
“வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?
4.
இந்தியாவில் டச்சுக்காரரின் காலனியாதிக்கக் கோட்டைகளையும் குடியே குடியேற்றங்களின் பெயர்களையும் குறிப்பிடுக
5.
“கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?
6.
“ஆனந்தரங்கர் நாட்குறிப்பு”
7.
ஆம்பூர் போர்
8.
தரங்கம்பாடி
9.
பழவேற்காடு
10.
1565ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?
11.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியில் தலைமையிடம் _________________ ஆகும்.
காரைக்கால்
புலிகாட்
மசூலிப்பட்டினம்
மதராஸ்
12.
அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள் ________________
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
போர்த்துகீசு கிழக்கிந்தியக் கம்பெனி
பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி
13.
_________________ போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும்.
மயிலாப்பூர்
சாந்தோம்
பரங்கிமலை
பழவேற்காடு
14.
மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழை வாயிலாக இருந்த துறைமுகம் ___________ ஆகும்.
டையூ
கல்கத்தா
பம்பாய்
சூரத்
15.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.
கோவா
டையூ
டாமன்
சூரத்
1.
1. 1765 இல் கையெழுத்தான உடன்படிக்கை அலகாபாத் உடன்படிக்கை ஆகும். ராபர்ட் கிளைவும், இரண்டாம் ஷாஆலமும் இவ்உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
2. இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்களாம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் தீவாளி (நிலவரி வசூலிக்கும் உரிமை உரிமையைப் பெற்றது.
3. மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது.
4. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
2.
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள்:
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார்.
2. அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசு பதவியை ஏற்றார். மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரிஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்ச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது.
3.
1. வணிக நிறுவனம் (factory) என்பது அயல்நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக, வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகும்.
ஐரோப்பிய வணிக நிறுவனங்கள்:
1. போர்த்துகீசிய கிழக்கிந்தியக் கம்பெனி.
2. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
3. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி
4. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
5. டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி.
4.
1. சென்னை நகருக்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழவேற்காட்டில் டச்சுகாரர் ஜெல்டிறியா என்னும் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்.
2. 400 ஆண்டுகள் கடந்தும் அதன் எச்சங்களை இன்றும் காணலாம். இக்கோட்டை ஒருகாலத்தில் டச்சுகாரரின் அதிகார பீடமாக இருந்தது. இந்த அதிகாரத்தை 1605ல் மசூலிப்பட்டினத்தில் நிறுவிய டச்சுகாரர் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை 1610 இல் நிறுவினர்.
3. நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக் காயல், பரங்கிபேட்டை, கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), தேவனாம்பட்டினம் ஆகியவை டச்சுகாரரின் ஏனைய கோட்டை மற்றும் காலனியாதிக்கப் பகுதிகளாகும்.
5.
1. "கார்ட்ஸ்" என்பது போர்த்துகீசியர்கள் வணிகத்திற்கு வழங்கும் பாதுகாப்பு முறை ஆகும். அவர்கள் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப் போவதாக பயமுறுத்துவர்.
2. கார்ட்ஸ் முறையில் போர்த்துகீசியர் வணிகரிடமிருந்து பணம் பறித்தனர். கடற்கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டனர்.
6.
1. ஆனந்தரங்க பிள்ளை (1709-1761) அக்காலத்தில் தலைசிறந்த வணிகராக விளங்கிய திருவேங்கடம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் பிரெஞ்சு ஆளுநர்களான டூமாஸ், துய்ப்ளே ஆகியோர் கொடுத்த ஆதரவால் புதுச்சேரியில் மாபெரும் வணிகரானார்.
2. துய்ப்ளே இவரை தலைமை துபாஷியாகவும் (துபாஷி இரு மொழிகள் அறிந்தவர்) தலைமை வணிக முகவராகவும் (1746) அமர்த்தினார். இது அவரை புதுச்சேரியில் பெரும் அரசியல் செல்வாக்குள்ள நபராக மாற்றியது. ஆனால் அவருடைய உண்மையான புகழ், தமிழ்ல் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய அவருடைய நாட்குறிப்புகளைச் சார்ந்துள்ளது.
3. அவரின் நாட்குறிப்பு 1736 முதல் 1760 வரையிலான காலத்திற்கு, முக்கியமாக துய்ப்ளே ஆளுநராக இருந்த காலப்பகுதியின் வரலாற்றுக்கு மிகவும் மதிப்புமிக்க சான்றாதாரமாகும். மேலும் அது சமகால நிகழ்வுகள் குறித்த அவருடைய பார்வை மற்றும் கருத்துக்களின் பதிவுமாகும்.
7.
1. ஆம்பூர் போர் 1749-இல் நடைபெற்றது.
2. ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முஜாபர் ஜங், கர்நாடக அரியணைக்கு உரிமைகோரிய சந்தா சாகிப் ஆகிய இருவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரேஞ்சுக் காலாட்படைகளின் உதவியோடு அன்வாருதீன் படைகளைத் தாக்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினார்.
3. போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் நவாபாக ஆற்காட்டினுள் நுழைந்தார்.
4. இதே சமயத்தில் அன்வாருதீன் மகனான முகமது அலி திருச்சிக்குத் தப்பிச் சென்றார்.
8.
1. டேனியர்கள் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.
2. 1620 நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான அவ்வொப்பந்தத்தின்படி டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
3. தரங்கம்பாடி டேனியர் கோட்டை அடிக்கடி சாலைகளையும் வீடுகளையும் சேதப்படுத்திய பேரலைகளின் முன் பாதுகாப்பற்றதாக இருந்தது.
4. டென்மார்க்கிற்கும், தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் தடைபட்டாலும் மீண்டும் நடைபெறத் துவங்கியது. பல புதிய வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
5.தஞ்சாவூர் நாயக்க அரசர் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களைப் பரிசாக அளித்தார்.
9.
1. சென்னை நகருக்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழவேற்காட்டில் டச்சுகாரர் ஜெல்டிரியா என்னும் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்.
2. 400 ஆண்டுகள் கடந்தும் அதன் எச்சங்களை இன்றும் காணலாம்.
3. இக்கோட்டை ஒருகாலத்தில் டச்சுக்காரரின் அதிகார பீடமாக இருந்தது.
4. இதன் அதிகாரத்தை 1605ல் மசூலிப்பட்டினத்தில் நிறுவிய டச்சுக்காரர் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை 1610 இல் நிறுவினர்.
10.
1. 1565 இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னர் ஆதிக்கம் செய்த மைய அரசு வலிமை குன்றியது.
2. விஜயநகரப் பேரரசின் அதிகாரத்தைப் பெயரளவிற்கு அங்கீகரித்த இந்த நாயக்க அரசுகள் நடைமுறையில் சுயாட்சி பெற்றவைகளாகச் செயல்பட்டன. அளவில் பெரிதான இந்நாயக்க அரசுகளோடு பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியர்கள் வசமும் இருந்தன.
3. அவர்களில் முக்கியமானவர் இராமநாதபுரம் அரசின் சேதுபதி ஆவார். அவரும் தன்னைச் சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
4. தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக செஞ்சி, மதுரை, தஞ்சாவூர் அரசுகள் பல போர்களைச் செய்தன. விஜயநகர்ப் பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
11.
(c)
மசூலிப்பட்டினம்
12.
(b)
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
13.
(d)
பழவேற்காடு
14.
(c)
பம்பாய்
15.
(a)
கோவா
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards