11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
ஐரோப்பியரின் வருகை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?
2.
“வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?
3.
“கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?
4.
“சராப்” மற்றும் “உண்டியல்” பற்றி நீ அறிவன யாவை ?
5.
நாயக்க அரசுகள் யாவை ? அவை நிறுவப்பட காரணம் என்ன ?
6.
ஆங்கிலேயரின் வருகை குறிப்பு வரைக.
7.
பிரான்சிஸ் சேவியர் குறிப்பு வரைக.
8.
இடைநிலைத் துறைமுகங்கள் என்றால் என்ன?
9.
கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம் என்ன?
10.
வணிகர்கள் ஒரே வகையான குழு அல்ல என்பதை விளக்குக.
11.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?
12.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?
13.
14.
_______________ நிலப்பரப்பை குறித்து பிரான்ஸிஸ் மார்ட்டின் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.
சென்னை
புதுச்சேரி
கோவா
மும்பை
15.
_______________ ல் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்தது.
ஐரோப்பா
ஆசியா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
16.
_______________ பொருட்கள் கடல் வழியாக பாரசீக வளைகுடாவிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
நறுமணப் பொருட்கள்
தங்க நகைகள்
வெள்ளிப் பொருட்கள்
இரும்புப் பொருட்கள்
17.
__________________ 1600-களில் ராஜஸ்தானையும் குஜராத்தையும் கைப்பற்றினார்.
அக்பர்
ஷாஜகான்
பாபர்
உமாயுன்
18.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு __________________
1757
1857
1885
1980
19.
ராபர்ட் கிளைவ் _______________ இல் வெற்றி பெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச் செய்தார்.
கர்நாடகப்போர்கள்
ஏழாண்டுப் போர்
பக்சார் போர்
பிளாசிப் போர்
20.
இரண்டாம் சார்லஸ் வரதட்சணையாகப் பெற்ற. ________________ ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
மதராஸ்
கல்கத்தா
பம்பாய்
தில்லி
21.
_________________ போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும்.
மயிலாப்பூர்
சாந்தோம்
பரங்கிமலை
பழவேற்காடு
22.
மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழை வாயிலாக இருந்த துறைமுகம் ___________ ஆகும்.
டையூ
கல்கத்தா
பம்பாய்
சூரத்
23.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.
கோவா
டையூ
டாமன்
சூரத்
1.
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள்:
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார்.
2. அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசு பதவியை ஏற்றார். மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரிஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்ச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது.
2.
1. வணிக நிறுவனம் (factory) என்பது அயல்நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக, வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகும்.
ஐரோப்பிய வணிக நிறுவனங்கள்:
1. போர்த்துகீசிய கிழக்கிந்தியக் கம்பெனி.
2. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
3. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி
4. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
5. டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி.
3.
1. "கார்ட்ஸ்" என்பது போர்த்துகீசியர்கள் வணிகத்திற்கு வழங்கும் பாதுகாப்பு முறை ஆகும். அவர்கள் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப் போவதாக பயமுறுத்துவர்.
2. கார்ட்ஸ் முறையில் போர்த்துகீசியர் வணிகரிடமிருந்து பணம் பறித்தனர். கடற்கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டனர்.
4.
சாரப்:
1. பல்வகைப்பட்ட நாணயங்கள் புழக்கத்திலிருத்தால், அவற்றின் தூய்மை நிலையைப் பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் 'சாரப்" (Shroffs) எனப்பட்ட பணம் மாற்றுவோரும் இருந்தனர். அவர்கள் உள்ளூர் வங்கியாளராகவும் செயல்பட்டனர்.
உண்டியல்:
1. ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக வணிகர்கள் பணமாற்று முறிகளை (bills of exchange) வழங்கினர்.
2. ஊண்டி என்றழைக்கப்பட்ட இவை பல்வேறு இடங்களில் 'சராப்' களால் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றப்பட்டன.
5.
1. விஜயநகர ஆட்சியின்போது தமிழகப் பகுதியில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
2.இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் மனித ஆற்றலையும் (இராணுவ வீரர்களை) திரட்டிக் கொடுப்பதுதான்.
6.
1. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனம் இலண்டன் நகரின் லேடன்ஹால் வீதியைச் சேர்ந்த ஒரு வணிகக்குழு, கீழை நாடுகளுடனான பெரும் இலாபத்தை ஈட்டித் தரும் நறுமணப் பொருட்கள் வியாபாரத்தில் தாங்களும் பங்கு பெற அரசியார் முதலாம் எலிசபெத்திடமிருந்து பட்டயம் (உரிமை ஆணை) ஒன்றைப் பெற்றனர்.
2. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பணம் படைத்த வணிகரையும், மேட்டுக்குடி மக்களையும் பங்குதாரர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
3. இந்நிறுவனம் ஒரு ஆளுநராலும் 24 இயக்குநர்களைக் கொண்ட குழுவாலும் மேலாண்மை செய்யப்பட்டது.
7.
1. போர்த்துக்கீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களை கீழ்கடற்கரைக்கு அனுப்ப, ஆயிரக்கணக்கான பரதவ குல மக்களை கத்தோலிக்கக் கிறித்துவ மதத்திற்கு மாற்றினர்.
2. இதனைத் தொடர்ந்து சேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்ஸிஸ் சேவியர் 1542 இல் கோவா வந்தார்.
3. பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்.
8.
1. சீனாவிலிருந்து, ஏனைய தூரக்கிழக்கு நாடுகளிலிருந்தும் வந்த கப்பல்கள் மலாக்காவை வந்தடைந்து, சரக்குகள் அங்கு இறக்கப்பட்டு, மேற்கயிருந்து வந்த பொருட்கள் ஆக்கப்பலில் ஏற்றப்பட்டன.
2. ஏற்கனவே இறக்கப்பட்ட சரக்குகள் வேறு கப்பல்களில் ஏற்றப்பட்டு அவை மேற்குக் கடற்கரையிலுள்ள கள்ளிக்கோட்டை அல்லது குஜராத்திலுள்ள சூரத் துறைமுகத்தை வந்தடையும். இது இடைநிலைத் துறைமுகங்கள் (Entrepots) என்றழைக்கப்பட்டன.
9.
1. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் சில இடங்களைத் தங்களுக்குச் சொந்தமானதாகப் பெற்று அவற்றின் மேல் தங்கள் உரிமையை நிறுவினர்.
2. நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தோனேசியத் தீவுகளுடனான வணிகத்திற்குத் தேவைப்படும் சில்லறைப் பொருட்களைக் கொள்முதல் செய்யத் தங்களுக்குச் சோழமண்டலக் கடற்கரையில் வணிகத்தளம் தேவை என்பதை டச்சுக்காரர்உணர்ந்தனர்.
3. செஞ்சி நாயக்கரிடமிருந்து பழவேற்காடு பகுதியைப் பெற்ற அவர்கள் அங்கே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டனர்.
10.
1. பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளைப் போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவைச் சார்ந்தவர்கள் அல்ல. சிறிய இடங்களிலிருந்த சந்தைகளுக்குச் சேவை செய்ய வியாபாரிகளும், சில்லரை வர்த்தகர்களும் இருந்தனர்.
2. வணிக நடவடிக்ககைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்து கொண்டால் இவ்வணிகர்கள் பிரமிடின் அடித்தளப் பகுதிகளிலிருந்தனர். பிரமிடின் உச்சத்தில் பெரும் வர்த்தகர்கள் இருந்தனர். பெருமளவிலான மூலதனத்தைக் கையிருப்பாகக் கொண்ட இவர்களே கடல் வணிகத்தை முன்னின்று இயக்கியதோடு, துறைமுகங்களின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்தினர்.
3. இவர்கள் தங்களின் கீழ் தரகர்களையும் துணைத்தரகர்களையும் பணியமர்த்தி உள்நாட்டு பகுதிகளிலோ, துறைமுக நகரங்களின் உட்பகுதிகளிலோ உற்பத்தியாகும் பொருட்களைக் கொள்முதல் செய்தனர். இவர்களை வணிகர்களின் பிரமிடில் இடை அடுக்கைச் சார்ந்தவர்களாக கருதலாம்.
11.
1. வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தெளலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர்.
2.இம்மூவரும் வணிக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவுப்புச் செய்தனர். 1764 இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
3. பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765 இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
4.இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்களாம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது.
5.மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது.
6. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
12.
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார்.
2.மரிய தேரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகிதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தேரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும்களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
5.போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
6. ஆனால் பார்னெட் என்பவரின் தலைமையிலான ஆங்கிலக் கடற்படை இந்தியக் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
7. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
13.
14.
(a)
சென்னை
15.
(a)
ஐரோப்பா
16.
(a)
நறுமணப் பொருட்கள்
17.
(a)
அக்பர்
18.
(a)
1757
19.
(c)
பக்சார் போர்
20.
(c)
பம்பாய்
21.
(d)
பழவேற்காடு
22.
(c)
பம்பாய்
23.
(a)
கோவா
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards