11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/12/2018
11th math- Important 2 mark questions
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு குறிப்பிட்ட வான்வழிப் பயணக் கட்டணமானது, அடிப்படை வானூர்திக் கட்டணம் (ரூபாயில்) C உடன் எரிபொருள் கூடுதல் கட்டணம் S உள்ளடக்கியது. C மற்றும் S ஆகிய இரண்டுமே வான் தொலைவு அளவு m ஆல் அமைகிறது. மேலும் C(m) = 0.4m + 50 மற்றும் S(m) = 0.03m எனில் வான் தொலைவு அளவு ரீதியாக ஒரு பயணச் சீட்டின் மொத்தக் கட்டணத்தினை m -ன் சார்பாக எழுதுக. மேலும் 1600 வான் தொலைவு மைல்களுக்கான பயணச் சீட்டின் தொகையைக் காண்க.
2.
log3 5 log25 27 - ன் மதிப்பைக் காண்க.
3.
பொதுத் தீர்வை காண்க: \(\sec { \theta } =-2\)
4.
4, A1, A2, ..., A7, 7 என்ற தொடர்முறை கூட்டுத் தொடர்முறையாக இருக்குமாறு, A1,A2, ..., A7 என்ற ஏழு எண்களைக் காண்க . மேலும், 12, G1,G2 ,G3 ,G4 , \(\frac{3}{8}\)என்ற தொடர்முறை பெருக்குத் தொடர்முறையாக இருக்குமாறு, G1,G2 ,G3 ,G4 என்ற நான்கு எண்களையும் காண்க.
5.
log2x + log4x + log16x = \(\frac { 7 }{ 2 } \) எனில், x-ன் மதிப்பைக் காண்க.
6.
"VOWELS" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கமுடியும்.
(i) E இல் தொடங்கும் வகையில்
(ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்
7.
N என்பது நாட்களின் எண்ணிக்கை என்க. N நாட்களின் உள்ள மொத்த மணி நேரங்களின் எண்ணிக்கை N! எனக் கொண்டால், N-ன் மதிப்புக் காண்க?
8.
ஒரு இசைத் தொடர் முறையின் ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது உறுப்புகள் முறையே\(\frac {1}{19}\) மற்றும்\(\frac {1}{35}\)எனில்,அந்த தொடர் முறையின் பன்னிரண்டாவது உறுப்பினைக் காண்க.
9.
பின்வரும் அடுக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. e-2x.
10.
ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (1.01)1000000 மற்றும் 10000 ஆகியவற்றில் எது பெரியது எனக் காண்க .
11.
விரிவு படுத்துக.\({ \left( { 2x }^{ 2 }-\frac { 3 }{ x } \right) }^{ 3 }\)
12.
ஒரு கிராமத்தில் உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் தென்னந்தோப்பையும், 65 சதவீதம் பேர் நெல் வயலையும் வைத்துள்ளனர். குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் பேர் இரண்டையும் வைத்திருப்பார்கள்?
13.
வரைபடம் வரையாமல் y = x2 + x + 2 ஆகியவை x- அச்சை வெட்டுமா எனச் சோதித்தறியவும். மேலும் வெட்டும் புள்ளிகளைக் காண்க.
14.
n (A) = 3 மற்றும் n(B) = 2 எனும் நிபந்தனைக்குட்பட்டு அமைந்துள்ள இரு கணங்கள் A, B ஆகும். (x,1),(y,2)(z,1) என்பவை A x B எனும் கணத்திலுள்ள சில உறுப்புகள் எனில், A, B கணங்களைக் காண்க. (இங்கு x, y, z முற்றிலும் வேறுபட்ட உறுப்புகள் )
15.
(2 -3x)7-ன் விரிவில் x3 -ன் கெழுவினைக் காண்க .
16.
நிறுவுக: \(\sin(45°+\theta )-\sin(45°-\theta )=\sqrt { 2 } \sin\theta \)
17.
தீர்வு காண்க. \(\left| 3-\frac { 3 }{ 4 } x \right| \le \frac { 1 }{ 4 } \)
18.
5 செ .மீ. ஆரம், மையக் கோணம் 15° -ஐ கொண்ட வட்ட வில்லின் நீளம் காண்க.
19.
மூன்று ஆண்களிடம் 4 சட்டை, 5 மேல் சட்டை மற்றும் 6 தொப்பிகள் உள்ளன. அவற்றை அவர்கள் எத்தனை வழிகளில் அணியலாம்
20.
மதிப்பினைக் காண்க :\(\frac { 12! }{ 9!\times 3! } \)
21.
1, 2, 3, 4, 5 என்ற இலக்கங்களை திரும்ப வராத முறையில் பயன்படுத்தி எத்தனை இரண்டு – இலக்க எண்களை உருவாக்கலாம்?
22.
பின்வருவனவற்றைக் கூட்டல் மற்றும் கழித்தலைப் பெருக்கலாக கூறுக \(\cos\frac { 3x }{ 2 } -\cos\frac { 9x }{ 2 } \)
23.
\({ cosec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \) முதன்மை மதிப்பைக் காண்க.
24.
n - ஆவது உறுப்பு an ஐக் கொண்ட பின்வரும் தொடர்முறைகளின் முதல் 6 உறுப்புகளைக் காண்க ..png)
25.
மதிப்புக் காண்க. \(\sin { \left( -\frac { 11\pi }{ 3 } \right) } \)
26.
மதிப்புக் காண்க. \(\tan { \left( \frac { 19\pi }{ 3 } \right) } \)
27.
f(x) = 4x2 - 25 என்ற பல்லுறுப்புச் சார்பின் பூஜ்ஜியங்களைக் காண்க
28.
f(x) = x2 + 5x + 4 - ஐ வர்க்கங்களின் கூடுதலாக எழுதுக.
29.
A x A என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன. மேலும் அதிலுள்ள இரு உறுப்புகள் (1, 3) மற்றும் (0, 2) எனில், A –ன் உறுப்புகளைக் காண்க
30.
கீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.
{x ∈ N : x என்பது ஒரு விகிதமுறு எண்}.
31.
கீழ்க்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக
(x - 1) (x + 1) (x2 - 1) = 0 எனும் சமன்பாட்டின் மிகை மூலங்களின் கணம்
32.
7 மற்றும் –3 ஆகிய மூலங்களையுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
33.
மதிப்பைக் காண்க: cos (– 45°)
34.
மதிப்பைக் காண்க: sin (– 45°)
35.
98⁴ -ன் மதிப்பினைக் காண்க .
36.
மதிப்பிடுக: 8P4
37.
நிறுவுக: \(\cos\left( \pi +\theta \right) =-\cos\theta \)
38.
கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
x ≥ -1 மற்றும் x < 4
39.
(2x+3)⁵ -ன் விரிவாக்கம் காண்க .
40.
15 புள்ளிகளில் 7 புள்ளிகள் ஒரு கோட்டிலும் மற்றும் மீதமுள்ள 8 புள்ளிகள் மற்றொரு இணைக்கோட்டிலும் அமைந்துள்ளது எனில் இந்த 15 புள்ளிகளைக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
41.
7 இந்தியர்கள் மற்றும் 5 அமெரிக்கர்களில் இருந்து இந்தியர்கள் அதிக அளவில் இருக்கும்படியான 5 நபர்களைக் கொண்ட எத்தனை விதமான குழுக்களை அமைக்கலாம்?
42.
எத்தனை 3 – இலக்க ஒற்றைப்படை எண்களை 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி இலக்கங்கள் திரும்ப வருமாறு காணலாம்
43.
log5-x(x2 - 6x + 65) = 2 - ன் தீர்வு காண்க.
44.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. x \(\le \) 3y, x \(\ge \)y.
45.
மதிப்புக் காண்க. 994
46.
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது கடப்பு என்பதை சரிபார்க்க.
47.
இயல் எண்களில் கணத்தில் R என்பது “ 2a + 3b = 30 எனில் aRb” என வரையறுக்கப்படுகிறது. R –ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது சமச்சீர் என்பதை சரிபார்க்க.
48.
A = {a, b, c} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R-ஐ (i) தற்சுட்டு (ii) சமச்சீர் (iii) கடப்பு (iv) சமானத் தொடர்பு என உருவாக்க R–உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
1.
வானூர்திக் கட்டணம்
C(m)=0.4m+50
எரிபொருள் கட்டனாம் S(m)=0.03m
வானூர்தி பயணக் கட்டணம் =C(m)+S(m)
\(\therefore f(x)=0.4m+50+0.03m\)
\(=0.43m+50\)
m=1600 மைல்கள்
\(\therefore 1600\) மைல்கல் வான்தொலைவு பயணச்சீட்டின் கட்டணம் =0.43 x 1600+50=Rs. 738.
2.
log3 5 log25 27 = log35 log25 33
= log35 \(\times\)3 log253(அடுக்கு விதியின்படி)
\(=3{ \log }_{ 25 }5=\frac { 3 }{ { \log }_{ 5 }25 } =\frac { 3 }{ 2{ \log }_{ 5 }5 } =\frac { 3 }{ 2 } \)
3.
\(\sec { \theta } =-2\)
\(\sec { \theta } =-2\Rightarrow \cos { \theta } =-\frac { 1 }{ 2 } \)
\(\cos { \theta } =\cos { \alpha } ,\alpha \in \left[ 0,\pi \right] \) இன் பொதுத் தீர்வு
\(\theta =2n\pi \pm \alpha ,n\in Z\) என நமக்குத் தெரியும்
\(\alpha \in \left[ 0,\pi \right] \) என்றவாறு \(\cos { \alpha } =-\frac { 1 }{ 2 } =\cos { \left( \pi -\frac { \pi }{ 3 } \right) } =\cos { \frac { 2\pi }{ 3 } } \)
ஆதலால் \(\alpha =\frac { 2\pi }{ 3 } \)
எனவே பொதுத் தீர்வு \(\theta =2n\pi \pm \frac { 2\pi }{ 3 } ,n\in Z\) ஆகும்.
4.
a = 4 மற்றும் 4 + 8d = 7. இதிலிருந்து, d=\(\frac{3}{8}\)எனக் கிடைக்கும். எனவே தேவையான 7 எண்கள் 4\(\frac{3}{8}\),4\(\frac{6}{8}\),5\(\frac{1}{8}\),5\(\frac{4}{8}\),5\(\frac{7}{8}\),6\(\frac{2}{8}\),6\(\frac{5}{8}\)ஆகும். மேலும், a = 12 மற்றும் ar5 =\(\frac{3}{8}\)என்பதால் r5 =\(\frac{1}{32}\Rightarrow r=\frac{1}{2}.\)எனவே , தேவையான 4 எண்கள் 6,3,1\(\frac{1}{2},\frac{3}{4}\)ஆகும்.
5.
x>0 என்பதைக் கவனத்தில் கொள்க.
\({ \log }_{ 2 }x+{ \log }_{ 4 }x+{ \log }_{ 16 }x=\frac { 7 }{ 2 } \Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }2 } +\frac { 1 }{ { \log }_{ x }4 } +\frac { 1 }{ { \log }_{ x }16 } =\frac { 7 }{ 2 } \) (அடிமான மாற்று விதியின்படி)
\(\frac { 1 }{ a } +\frac { 1 }{ 2a } +\frac { 1 }{ 4a } =\frac { 7 }{ 2 } ,\) இங்கு a = logx2, அதாவது, \(\frac { 7 }{ 4a } =\frac { 7 }{ 2 } \)
\(a=\frac { 1 }{ 2 } \)மற்றும் \({ \log }_{ x }2=\frac { 1 }{ 2 } \Rightarrow { x }^{ 1/2 }=2.\)
எனவே, x = 22 = 4
6.
கொடுக்கப்பட்ட வார்த்தையில் 6 எழுத்துகள் (V, O, W, E, L, S) உள்ளன.
(i) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் துவங்க வேண்டும். எனவே, மீதமுள்ள 5 எழுத்துகளை வரிசைப்படுத்த 5P5 = 5! வழிகள் உள்ளன. ஆகவே, E இல் தொடங்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 5! = 120.
(ii) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் தொடங்கி, W இல் முடிக்க வேண்டும், 5! = 120.

எனவே, E ஐ முதலிலும், W ஐ கடைசியிலும் வைக்கவேண்டும். மீதமுள்ள 4 எழுத்துகளை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
ஆகவே, E இல் தொடங்கி, W இல் முடிக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 4! = 24.
7.
இதற்கு N! = 24 x N என்ற சமன்பாட்டை தீர்க்க வேண்டும்.
N = 1,2,3,4 எனில்,\(N!<24\times N\)
N = 5 எனில்,\(N!=5!=4!\times 5=24N\)
\(N>5\) எனில்,\(N!\ge 5!N>24\times 7\) எனவே,N = 5
8.
(hn) ஒரு இசைத்தொடர்முறை என்க மற்றும் \({a}_{n}=\frac{1}{{h}^{n}}\)என்க.(an) என்பது கூட்டுத்தொடர்முறை என்பதால் a5=19 மற்றும் a9=35. a + 4d =19, a + 8d =35 எனக் கிடைக்கும். இவற்றைத் தீர்க்க , a = 3 மற்றும் d = 4 என கிடைக்கும். எனவே , கூட்டுத்தொடர்முறையின் 12 ஆவது உறுப்பு a12 = a + 11d = 47. இதனால் இசைத்தொடர் முறையின் 12 வது உறுப்பு \(\frac{1}{47}\)ஆகும்.
9.
∵ e-x=\(1-\frac { x }{ 1! } +\frac { { x }^{ 2 } }{ 2! } -\frac { { x }^{ 3 } }{ 3! } +...\)
⇒ e-2x=\(1-\frac { 2x }{ 1! } +\frac { (2x)^{ 2 } }{ 2! } -\frac { (2x)^{ 3 } }{ 3! } +\frac { (2x)^{ 4 } }{ 4! } -\frac { (2x)^{ 5 } }{ 5! } \)+..
=\(1-2x+2x^{ 2 }\frac { 4x^{ 3 } }{ 3 } +\frac { 2x^{ 4 } }{ 3 } -\frac { 4x^{ 5 } }{ 15 } +...\).
10.
(1.01)1000000-10000
= (1+.01)1000000 10,000
= 100000C0+1000000C1(.01)+1000000C2(.01)2+....+(.01)1000000-10,000
=(1+1000000 x (.01) + சாதகமான எண் )-10,000
= 1 + சாதகமான எண்
∴ (1.01)1000000-10,000>0
⇒ (1.01)1000000 > 10,000.
11.
\({ \left( { 2x }^{ 2 }-\frac { 3 }{ x } \right) }^{ 3 }\)
∵ (x-a)n=xn+nC1xn-1(-a)1+nC2xn-2(-a)2+......+(-a)n
⇒ \(\left( 2x^{ 2 }-\frac { 3 }{ x } \right) ^{ 2 }=(2x^{ 2 })^{ 3 }+{ C }_{ 1 }(2x^{ 2 })\left( \frac { -3 }{ x } \right) ^{ 1 }+{ c }_{ 2 }\left( \frac { -3 }{ x } \right) ^{ 2 }+\left( \frac { -3 }{ x } \right) ^{ 3 }\)
= 8x6+3(4x4)\(\left( \frac { -3 }{ x } \right) +\frac { 3\times 2 }{ 2\times 1 } (2x^{ 2 })\left( \frac { 9 }{ { x }^{ 2 } } \right) +\left( \frac { -27 }{ { x }^{ 3 } } \right) \)
= \({ 8x }^{ 6 }-{ 36 }x^{ 3 }+54-\frac { 27 }{ { x }^{ 3 } } \)
12.
தென்னந்தோப்பை வைத்திருப்பவர்களின் சதவீதத்தை n(C) எனவும் நெல்வயலை வைத்திருப்பவர்களின் சதவீதத்தை n(P) எனவும் கொள்க. இங்கு n(C) = 80, n(P) = 65 என கொடுக்கப்பட்டு உள்ளது. சேர்த்தல் - நீக்கல் கொள்கையின் படி, \(n\left( C\cap P \right) =n\left( C \right) +n\left( P \right) -n\left( C\cup P \right) \)\(n\left( C\cup P \right) \) ன் பெரும மதிப்பு 100. எனவே, \(n\left( C\cap P \right) \)-ன் குறைந்தபட்ச மதிப்பு 80 + 65-100 = 45. எனவே, குறைந்தபட்சம் 45 சதவீதம் பேர் இரண்டையும் வைத்திருப்பார்கள்.
13.
y = x2 + x + 2
a = 1, b = 1, c = 2
D = b2 - 4ac = 12 -4 x 1 x 2
= 1 - 8
= -7 < 0
எனவே கொடுக்கப்பட்ட வரைபடம் x அச்சை வெட்டாது.
14.
A x B = {(x,1),(y,2),(z,1)}எனத் தரப்பட்டுள்ளது
n(A)=3, n(B)=2 என்பதால்
n(A x B)=6
A x B={(x,1),(y,2),(z,1),(x,2),(y,1),(z,2)}
\(\Rightarrow\)A= {x, y, z},B = {1,2}
15.
(a +b )7-ன் ஈருறுப்பு விரிவில் a = 2 மற்றும் b = -3x எனக் கொள்க . x3 ஆனது (-3x)3 எனக் கொண்டுள்ள உறுப்பில் மட்டுமே காணப்படும். x3 ஐக் கொண்ட உறுப்பு.
7C3a4b3 =\(\frac {7 \times 6 \times 5}{3 \times 2 \times 1}{2}^{4}{-(3x)}^{3}=35 \times {2}^{4} \times {(-3)}^{3}{x}^{3} .\)
எனவே (2-3x)7 -ன் விரிவில் x3 -ன் கெழு 35 \(\times\) 16 \(\times\)(-27) = -15120 ஆகும்.
16.
LHS = (sin 450 + θ) - sin (450 - θ)
= sin 450 . cosθ + cos 450 sinθ - [sin 450. cosθ - cos 450 sinθ]
= \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) cosθ + \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) sinθ - [ \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) cosθ - \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) sin θ]
= \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) cosθ + \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) sinθ - \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) cosθ + \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) sinθ
= \(2\frac { \sin { \theta } }{ \sqrt { 2 } } \)
= \(\sqrt { 2 } \) sinθ = RHS
17.

\(\Rightarrow \frac { -1 }{ 4 } \le 3-\frac { 3 }{ 4 } x\le \frac { 1 }{ 4 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 4 } -3\le -\frac { 3 }{ 4 } x\le \frac { 1 }{ 4 } -3\)
\(\Rightarrow \frac { -13 }{ 4 } \le \frac { -3 }{ 4 } x\le \frac { -11 }{ 4 } \)
4 ஆல் பெருக்க
\(\Rightarrow -13\ge -3x\ge -11\)
\(\Rightarrow \frac { 11 }{ 3 } \le x\le \frac { 13 }{ 3 } \)
18.
வில்லின் நீளம் s, ஆரம் r, மையக்கோணம் \(\theta\) எனில், s = r\(\theta\)
\(\theta\) = 15° = 15 x \(\frac{\pi}{180}=\frac{\pi}{12}\) ஆரையன்கள்
s = r\(\theta\) \(\Rightarrow\) s = 5 x \(\frac{\pi}{12}=\frac{5\pi}{12}\) செ.மீ.
19.
4 சட்டைகளை 3 ஆண்கள் = 4P3 வழிகளில் அணியலாம்.
5 மேல் சட்டைகள் 3 ஆண்கள் = 5P3 வழிகளில் அணியலாம்.
6 தொப்பிகளை 3 ஆண்கள் = 6P3 வழிகளில் அணியலாம்.
\(\therefore \) மொத்தமாக வழிகள் அணியும் வழிகள் = 4P3 x 5P3 x 6P3
=
= 24 x 60 x 120
= 1,72,800 வழிகள்.
20.
= \(\frac { 12\times 11\times 10\times 9! }{ 9!3\times 2 } =\frac { 12\times 11\times 10 }{ 6 } \)
= 2 x 11 x 10 = 220
21.
| பத்துகள் | ஒன்றுகள் |
| 4 | 5 |
ஒன்றாவது இடத்தை 1,2,3,4,5 என்ற எண்களைப் பயன்படுத்தி 5 வழிகளில் நிரப்பலாம்.
பத்தாவது இடத்தை 4 வழிகளில் நிரப்பாலம்.
\(\therefore \) இரண்டு இலக்க எண்களை (எந்த எண்ணும் திரும்ப வராத முறையில் 4 x 5 = 20 வழிகளில் நிரப்பலாம்.)
22.
cosC - cos D = 2sin \(\frac { C+D }{ 2 } \sin\frac { D-C }{ 2 } \) என நமக்குத் தெரியும்
c = \(\frac { 3x }{ 2 } \) மற்றும் D = \(\frac { 9x }{ 2 } \)
\(\cos\frac { 3x }{ 2 } -\cos\frac { 9x }{ 2 } =2\sin\frac { \frac { 3x }{ 2 } +\frac { 9x }{ 2 } }{ 2 } \sin\frac { \frac { 9x }{ 2 } -\frac { 3x }{ 2 } }{ 2 } =2\sin3x \sin \frac { 3x }{ 2 } \) எனக் கிடைக்கிறது
23.
\({ cosec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \) = y என்க. இங்கு \(-\frac { \pi }{ 2 } \le y\le \frac { \pi }{ 2 } \)
\(\Rightarrow cosec{ y }=\frac { 2 }{ \sqrt { 3 } } =\sin { y } =\frac { \sqrt { 3 } }{ 2 } \)
எனவே, \({ cosec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \) இன் முதன்மை மதிப்பு \(\frac { \pi }{ 3 } \) ஆகும்.
24.
a1=1
a2=2
a3=3
a4=a1+a2+a3=3+2+1=6
a5=a2+a3+a4=6+3+2=11
a6=a3+a4+a5=11+6+3=20
முதல் 6 உறுப்புகள் 1,2,3,6,11,20,....
25.
sin \(\left( \frac { -11\pi }{ 3 } \right) \) = sin (-11 x 600)
= sin (-6600)
= - sin (2 x 360 - 600)
= - (- sin600)
= sin 600 = \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
26.
\(\tan { \left( \frac { 19\pi }{ 3 } \right) } \) = \(\tan { \frac { 19 }{ 3 } } \) x 1800 tan (19 x 600)
= tan (11400)
= tan (3 x 360 + 600)
= tan 600 = \(\sqrt { 3 } \)
27.
பூஜ்ஜியங்களைக் காண f (x) = 0 என்க
4x2 - 25 = 0
4x2 = 25
\({ x }^{ 2 }=\frac { 25 }{ 4 } \Rightarrow x=\sqrt { \frac { 25 }{ 4 } } \)
\(\Rightarrow x=\pm \frac { 5 }{ 2 } \)
எனவே பூஜ்ஜியங்கள் \(\frac { 5 }{ 2 } ,\frac { -5 }{ 2 } \)ஆகும்.
28.
y = f(x) = x2 + 5x + 4 என்க.
\({ x }^{ 2 }+5x+\left( \frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\left( \frac { 5 }{ 2 } \right) ^{ 2 }+4\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\frac { 25 }{ 4 } +4\)
\(=\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\frac { 25+16 }{ 4 } =\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\left( \frac { 3 }{ 2 } \right) ^{ 2 }\)
29.
A x A-ல் என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன எனில் A-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 4 ஆகும்.
\(\Rightarrow n(A)=4\)
A x A -ல் உறுப்புகள் (1,3),(0,2) எனில்
A-ல் உள்ள உறுப்புகள் A = {0, 1, 2, 3}} என இருக்கலாம்.
30.
E = {x ∈ N : x என்பது ஒரு விகிதமுறு எண்}.
\(\Rightarrow E=\{{1\over1},{2\over1},{3\over1},{4\over1}......... \}\)
\(\Rightarrow E\) ஒரு முடிவுறா கணம்.
31.
B = {(x - 1)(x + 1)(x2 - 1) = 0 எனும் சமன்பாட்டின் மிகை மூலங்களின் கணம்} என்க
\(\Rightarrow x=1,-1 \therefore \) B = {1}.
32.
7, -3 மூலங்கள்
மூலங்களின் கூடுதல் = 7+ (-3) = 4
மூலங்களின் பெருக்கற்பலன் = 7 x -3 = -21
\(\therefore \) தேவையான இருபடிச் சமன்பாடு
\(\Rightarrow x^{ 2 }-\)(மூலங்களின் கூடுதல்) x + மூலங்களின் பெருக்கற்பலன் = 0
\(\Rightarrow x^{ 2 }-4x-21=0.\)
33.
cos (– 45°) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
34.
sin (– 45°) = – sin (45°) = \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
35.
(a-b)n -ன் ஈருறுப்பு விரிவில் a = 100, b = 2 மற்றும் n = 4 எனப் பிரதியிட
984 = (100 - 2)4
= 4C01004 - 4C110032 + 4C2100222 - 4C3100123 + 4C4100024
= 100000000 - 8000000 + 240000 - 3200 + 16
= 92236816.
36.
8P4= 8×7×6×5 = 1680
37.
cos (π + θ) = - cos θ
L.H.S = cos (π + θ) = - cosθ = RHS
எனவே நிரூபிக்கப்பட்டது
38.
\(x\ge -1\)மற்றும் x < 4
\(\Rightarrow x\in \left[ -1,4 \right] \)

39.
(a+b)n என்ற ஈருறுப்புத் தேற்றத்தின் விரிவில் a = 2x, b = 3 மற்றும் n = 5 எனப் பிரதியிட
(2x + 3)5 = (2x)5+ 5(2x)43 + 10(2x)332 +10(2x)233 +5(2x)34 + 35
= 32x5 + 240x4 + 720x3 + 1080x2 + 810x + 243
40.
ஒரு முக்கோணம் வரைய ஒரே கோட்டிலமையாத 3 புள்ளிகள் தேவை.
7 புள்ளிகள் குழு A என்றும் 8 புள்ளிகள் குழு B என்றும் கொள்வோம்.
| A (7 புள்ளிகள் ) | B (8 புள்ளிகள் ) | சேர்வுகள் | |
|---|---|---|---|
| a ) | 3 | 1 | 7C2 x 8C1 |
| b ) | 1 | 2 | 7C1 x 8C2 |
முக்கோணம் அமைக்க தேவையான வலிகளின் எண்ணிக்கை = 7C2 x 8C1 + 7C1 x 8C2 = \(\frac { 7\times 6 }{ 1\times 2 } \times 8+7\times \frac { 8\times 7 }{ 1\times 2 } \)
= 21 x 8 + 7 + 28 = 168 + 196 = 364
41.
இந்தியர்கள் 7, அமெரிக்கர்கள் 5 இவர்களில் 5 பேரை தேர்வு செய்தல் நிபந்தனை இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
| இந்தியர்கள (7) |
அமெரிக்கர் (5) |
சேர்வு | |
|---|---|---|---|
| (i) | 4 | 1 | 7C4 x 5C1 |
| (ii) | 3 | 1 | 7C3 x 5C2 |
| (iii) | 5 | 0 | 7C5 x 5C0 |
குழுவை அமைக்கும் மொத்த வழிகள்

= 7 x 25 + 35 x 10 + 21 = 175 + 350 + 21 = 546
42.
இலக்கங்கள் திரும்ப வருமாறு (0,1,2,3,4,5)
| நூறுகள் | பத்துகள் | சான்றுகள் |
|---|---|---|
| 5 | 6 | 3 |
1ம் இடத்தை நிரப்புவதற்கு தேவையான வழிகள் = 3
10ம் இடத்தை நிரப்புவதற்கு தேவையான வழிகள் = 6
100ம் இடத்தை நிரப்புவதற்கு தேவையான வழிகள் = 5
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி = 3 x 6 x 5 = 90 வழிகள்.
43.
கொடுக்கப்பட்டது: log5-x(x2- 6x + 65) = 2
\(\Rightarrow { x }^{ 2 }-6x+65(5-x)^{ 2 }\)
\(\Rightarrow { x }^{ 2 }-6x+65=25+{ x }^{ 2 }-10x\Rightarrow 10x-6x=-65+25\)
\(\Rightarrow 10x-6x=-65+25\Rightarrow 4x=-40.\)
\(\therefore x=-10.\)
44.
\(x=3y\Rightarrow \frac { x }{ 3 } =y\)
| x | 0 | 3 | 6 | -3 |
| y | 0 | 1 | 2 | -1 |
x = yஎனில்
| x | 1 | 2 | 0 | -1 |
| y | 1 | 2 | 0 | -1 |

45.
∵ (a-b)n=nC0an+nC1an-1b+nC2an-2b2+..........nCna0bn
⇒ 994=(100-1)4
=1004-4C11003+4C21002-4C3100(13)+14
=100000000-4(1000000)+\(\frac { 4\times 3 }{ 2\times 1 } \)(10000)-4(100)+1
=100000000-4000000+60000-400+1
=96,059,601
46.
a+b\(\le\)6,a,b ∈ N ; a R b
\(a+b\le6\Rightarrow a\le6-b\)
| a | 5 | 4 | 3 | 2 | 1 |
| b | 1 | 2 | 3 | 4 | 5 |
வரிசை ஜோடிகள் (5,1),(4,2),(3,3),(2,4),(1,5)
கடப்புத் தொடர்பு:
\((4,2)\in R\)
\((2,4)\in R\)
\(\Rightarrow(4,4)\notin R\) \(\therefore R\) ஒரு கடப்புத் தொடர்பு அல்ல;
47.
இயல் எண்களில் கணத்தில் R என்பது “ 2a + 3b = 30 எனில் aRb” என வரையறுக்கப்படுகிறது.
a,b \(\in\) N\(\Rightarrow\)2a + 3b = 30;2a + 3b = 30
2a= 30-3b
\(a={30-3b\over 2}\)
| a | 12 | 9 | 6 | 3 |
| b | 2 | 4 | 6 | 8 |
வரிசைச் சோடிகள்: (12,2),(9,4),(6,6),(3,8)
சமச்சீர் தொடர்பு:
\((9,4)\in R\Rightarrow (4,9)\notin R\)
\(\therefore R\) ஒரு சமச்சீர் தொடர்பு அல்ல.
48.
(i) தற்சுட்டு
\(\Rightarrow R=\) {(a,a),(b,b),(a,c)} ஒரு தற்சுட்டு ஆக இருக்க முடியும்.
(c, c) என்ற உறுப்பு R-ல் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) சமச்சீர்
R={(a,a),(b,b),(a,c)} உடன் (c, a) சேர்த்தால் அது ஒரு சமச்சீர் தொடர்பு உடையதாகும்.
(iii) கடப்பு
R = {(a, a), (b, b), (a, c)} ஒரு கடப்புத் தொடர்பு ஆக இருக்க சேர்க்கப்பட வேண்டும்.
(iv) சமானத் தொடர்பு
R ஒரு சமானத் தொடர்பு ஆக இருக்க அது ஒரு தற்சுட்டு, சமச்சீர், கடப்பு தொடர்பு ஆக இருக்க வேண்டும்.
∴R = {(a, a), (b, b), (a, c)} (c, c) மற்றும் {(c, a). எனவே குறைந்த பட்ச உறுப்புகள் (c,c) மற்றும் (c,a).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards