11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
“ஒரு கணத்திலுள்ள ஓர் உறுப்பு எப்பொழுதும் தன் கணத்திற்கே உட்கணமாக அமையாது” என்ற கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்க.
2.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
P என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்படுகிறது.
3.
X={1,2,3,....,10}= மற்றும் A = {1,2,3,4,5} எனில், A-B={4} என்று உள்ளவாறு அமையக்கூடிய X -ல் உள்ள B உட்கணங்கள், அதாவது B ⊆ X எத்தனை உள்ளது?
4.
Z என்ற கணத்தில், m – n என்பது 12 -ன் மடங்காக இருந்தால் தொடர்பு mRn என வரையறுக்கப்படுகிறது எனில், R ஒரு சமானத் தொடர்பு என நிரூபிக்க.
5.
கணம் A ஆனது A = {x : x = 4n + 1, 2 < n < 5, n ∈ N} எனில், A–ன் உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.
6.
y = x2 என்ற வளைவரையிலிருந்து y = 3(x-1)2+5 என்ற வளைவரையை காணும் படிநிலைகளை எழுதுக.
7.
y = x2 - 1, y = 4(x2-1) மற்றும் y=(4x)2-1 ஆகிய வரைபடங்களை ஒப்பீடு மற்றும் வேறுபடுத்திக் காண்க.
8.
n(p(A))=1024, n(AUB)=15 மற்றும் n(p(B))=32 எனில் n(A∩B) காண்க
9.
n(A) = 10 மற்றும் n(A ∩ B) = 3 எனில், n ((A∩B)'∩A) -ஐ காண்க.
10.
A மற்றும் B எனும் இரு கணங்கள், n(B-A) = 2n(A-B) = 4n(A⋂B) = 4n(A⋂B) மற்றும் n(AUB) = 14, என அமைந்தால், n(p(A)) காண்க.
11.
S = { 1, 2, 3, ....., n } எனும் கணத்தின் மீது தொடர்பு R = { (1, 1), (2, 2), (3, 3), ... (n, n) } எனில், மூன்று அடிப்படைத் தொடர்புகளையும் சோதிக்கவும்.
12.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\) என்ற சார்பின் மீப்பெரு சார்பகத்தைக் காண்க
13.
y = | x | என்ற வளைவரையின் மூலம்
1. y = | x - 1 | + 1
2. y = | x + 1 | - 1
3. y = | x + 2 | + 3 ஆகியவற்றை வரைக.
14.
X = {a, b, c, d} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R -ஐ
(i) தற்சுட்டு (ii) சமச்சீர் (iii) கடப்பு (iv) சமானத் தொடர்பு என உருவாக்க R–உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
15.
\(f:R\rightarrow R\)-ல் \(f(x)=\sin\ x+\cos\ x\) எனில் f ஆனது ________.
ஒரு ஒற்றைப்படைச் சார்பு
ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல
ஒரு இரட்டைப்படைச் சார்பு
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு
16.
X = { 1, 2, 3, 4 }, Y = { a, b, c, d } மற்றும் f = { (1, a), (4, b), (2, c), (3, d) ,(2, d) } எனில் f என்பது ________.
ஒன்றுக்கொன்றானச் சார்பு
மேற்கோர்த்தல் சார்பு
ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு
சார்பன்று
17.
f(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே________.
R, R
\(R,(0, \infty)\)
\((0,\infty),R\)
\([0,\infty),[0,\infty)\)
18.
n(A)= 2 மற்றும் \(n(B\cup C)=3,\) எனில் \(n[(A\times B )\cup (A\times C)]\) என்பது ________.
23
32
6
5
19.
இயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \(A'\cup[(A\cap B)\cup B']\) என்பது________.
A
A'
B
N
20.
\(A= \left\{ (x,y);y={e}^{x},x\in R \right\} \) மற்றும் \(B = \left\{ (x,y);y={e}^{-x},x\in R \right\} \) எனில், \(n(A\cap B)\) என்பது________.
\(\infty\)
0
1
2
1.
P={a,b,c,d}
உட்கணங்கள் P(A)={{a},{b},{c},{d}}
ஒரு கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அக்கணத்தின் உட்கணம் அல்ல.
எனவே கொடுக்கப்பட்ட கூற்று தவறு.
2.
l,m,n \(\in\) p என்க.
தற்சுட்டு:
ஆனதிற்கு செங்குத்தாக இருக்க முடியாது.
ஒரு தற்சுட்டு தொடர்பு அல்ல.
சமச்சீர் தொடர்பு:
lRm=mRl
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது l ற்குச் செங்குத்து
\(\therefore R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
l R m மேலும் m R n\(\neq\)l R n
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது n ற்குச் செங்குத்து
ஆனால் l ஆனது n ற்குச் செங்குத்து ஆக இருக்க முடியாது
\(\therefore R\) ஆனது ஒரு கடப்புத் தொடர்பு அல்ல.
\(\Rightarrow R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு மட்டுமே.
3.
{6,7,8,9,10} எனும் கணத்தின் ஒவ்வொரு உட்கணமாகிய C கணத்திற்கு, B=CU{1,2,3,5} என எடுத்துக்கொள்வோம். இங்கு A-B={4} என்கிற நிபந்தனை பொருந்தும். இதனால் X ல் உள்ள B உட்கணங்களின் எண்ணிக்கையும், {6,7,8,9,10} என்கிற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையும் சமம். எனவே, B உட்கணங்களின் எண்ணிக்கை 2⁵ = 32
4.
m – m = 0 என்பதால், 0 = 0 × 12 என எழுதுவதன்மூலம் பூஜ்ஜியமும் 12 -ன் மடங்கு என்பது உண்மை. ஆகவே mRm என்பது எல்லா \(m \in Z\) -க்கும் பொருந்தும். எனவே, R தற்சுட்டாகும்.
mRn என்க. அப்பொழுது \(k,\in Z\) க்கு m-n = 12k ஆகும். இதனால் n-m=12(-k) ஆகையால் nRm ஆகும். இது R சமச்சீர் என்பதைக் காட்டுகிறது.
mRn மற்றும் nRp என்க. அதாவது ,\(k,l\in Z\) -க்கு, m–n = 12k மற்றும் n–p = 12l ஆகும். ஆகவே m – p = 12(k+l). அதாவது mRp. இது R என்பது கடப்பு தொடர் எனக் காட்டுகிறது. எனவே R என்பது சமானத் தொடர்பு ஆகும்.
5.
A = {x : x = 4n + 1, n = 2,3,4,5} = {9,13,17,21} எனவே (n)A = 4 = n(p(A)) = 2⁴ = 16
6.
படி 1
y = x2யின் வரைபடம் வரைக.

படி 2: y =(x-1)2 ஓரலகு வலது புறத்தில் நகர்த்தப்பட்டு வரையப்படுகிறது.
படி 3:y = 3(x-1)2-ன் வரைபடம் y-அச்சை நோக்கி அழுத்தப்பட்டு அதாவது x அச்சிலிருந்து விலகுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் (x-1)2ஆனது 3ஆல் பெருக்கப்பட்டு பெறப்படுகிறது.3>1
படி 4:y = 3(x-1)2+5-ன் வரைபடம் 5அலகுகள் மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
7.

வரைபடங்கள் 1.55 மற்றும் 1.56 ஆகியவை y -அச்சு அளவீட்டில் காண்பதற்கு முன், இவை ஒன்றுபோல் காட்சி அளிக்கின்றன. படம் 1.56 -ல் உள்ள அளவீடு மூலச் சார்பினை (படம்1.55) நான்கால் பெருக்குவதால் y அளவீட்டை நான்கு மடங்காக மாற்றுகிறது. ஒரே அளவீட்டில் இந்தச் சார்புகளை ஒரே தளத்தில் வரைபடங்களாக வரைந்தால் படம்1.57 -ன் படி வேறுவகையில் காட்சியளிக்கிறது.
y = (4x2) - 1-ன் வரைபடம் படம் 1.58 -ல் கொடுக்கப்பட்டுள்ளது . படம் 1.55 மற்றும் படம் 1.58 ஆகிய இரு வரைபடங்களுக்கிடையே உள்ள வேறுபாடு கண்டுபிடிக்க இயலுமா? இங்கு x அளவீடு படம் 1.55 -ல் பயன்படுத்திய அதே நான்கின் காரணியால் மாறுபட்டுள்ளது. இந்த வேறுபாட்டைக் காண
y = (4x)2-1 ல் x = \({1\over 4}\) எனப் பிரதியிடக் கிடைப்பது 12 -1. அதுவே மூலச் சார்பில் (படம் 1.55) x = 1 -ஆல் பிரதியிடக் கிடைக்கும் மதிப்பு ஆகும். ஒரே தளத்தில் இரண்டு சார்புகளையும் வரையும்போது (படம் 1.59) y = (4x)2 - 1 என்ற வளைவரை y -அச்சை நோக்கி நெருங்கிக் காட்சியளிக்கின்றது. இங்கு x -வெட்டுத்துண்டுகள் வெவ்வேறானாலும் y -வெட்டுத்துண்டுகளில் மாற்றம் இல்லை.

8.
n(p(A))=1024=210
n(p(A))=2n(A)
\(\therefore n(A)=10\)
n(P(B))=32=25
n(B)=5
n(AUB)=n(A)+n(B)-n(A∩B)
15=10+5-n(A∩B)
n(A∩B)=15-15=0
9.
(A∩B)' ∩ A = (A'UB')∩A = (A'∩A) U (B'∩A) = ΦU(B'∩A)
=(B'∩A)=A-B
எனவே n((A∩B)' ∩A) = n(A-B)=n(A) - (A∩B)=7
10.
n(p(A)) - ஐக் காண n(A) தேவைப்படும்.
n(A∩B) = k என்க.
எனவே, n(A-B) = 2k மற்றும் n(B-A) = 4k ஆகும்
இந்நிலையில், n(AUB) = n(A-B) + n(B-A) + n(A∩B) = 7k
மேலும் n (AUB) = 14 எனக் கொடுக்கப்பட்டுள்ளது
இதனால் 7k = 14, k = 2 ஆகும்
ஆகையால், n (A-B) = 4 மற்றும் n(B - A) = 8
n(A) = n(A - B) + n(A∩B) என்பதால் n(A) = 6
எனவே n(P(A)) = 2⁶ = 64
11.
அனைத்து \(a \in S\) க்கும், \((a, a)\in R\) என்பதால் R ஆனது தற்சுட்டாகும்.
\((b,a)\notin R\) என்பதுபோல் அமையுமாறு \((a,b)\in R\) என எந்த உறுப்பும் இல்லை. வேறு விதமாகக் கூறினால் ஒவ்வொரு உறுப்பு \((a,b)\in R\) க்கும் \((b,a)\in R\) எனக் கூற முடியும். இதனால் R ஆனது சமச்சீராகும்.
\((a,c)\notin R\) எனுமாறு (a, b) மற்றும் (b, c)ஆகிய இரு உறுப்புகளை R-ல் காண இயலாது. இதனால் R ஆனது ”கடப்பு அல்ல” என்பது உண்மையன்று. எனவே “R ஆனது கடப்பு ஆகும்” என்ற கூற்று உண்மையாகும். எனவே R ஆனது கடப்பு ஆகும்.
இதனால் R ஆனது தற்சுட்டு, சமச்சீர், கடப்புத் தொடர்பு ஆகும். எனவே கொடுக்கப்பட்ட தொடர்பு சமானத் தொடர்பாகும்.
12.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\)
x=2 எனில் f(x)= \({\sqrt{4-2^2}\over \sqrt{2^2-9}}={\sqrt{0}\over \sqrt{-5}}={0\over \sqrt{-5}}=0\)
x=-2 எனில் f(x)=\({\sqrt{4-(-2)^2}\over \sqrt{(-2)^2-9}}={{0}\over \sqrt{-5}}=0\)
x=ன் மற்ற எல்லா மதிப்புகளுக்கும் குறை எண்களின் வர்க்க மூலமாக கிடைப்பதால் அது சார்பாகாது. எனவே மீப்பெரு சார்பகம்=\(\varphi \)
13.
1. y = | x - 1 | + 1

வரைபடம் ஓரலகு வலப்புறமாக மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
2. y = | x + 1 | - 1

வரைபடம் ஓரலகு இடப்புறமாக கீழ்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
3. y = | x + 2 | + 3

வரைபடம் 2 அலகுகள் இடது புறமாக மற்றும் 3அலகுகள் கீழ்ப்புறமாக நகர்த்துவதால் பெறப்படுகிறது.
14.
X = {a, b, c, d}
R = {{a, a}, {b, b} {a, c}}
(i) தற்சுட்டு
(c, c), (d, d) R - ல் சேர்க்கப்பட வேண்டும்
(ii) சமச்சீர்
(c, a) R- ல் சேர்க்கப்பட வேண்டும்
(iii) கடப்பு
R ஒரு கடப்புத் தொடர்பு ஆக இருக்க R-ல் (c,d),(a,d)இருக்க வேண்டும்.
(iv) சமானத் தொடர்பு
{(c, c), (d, d), (c, a)}
15.
(b)
ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல
16.
(d)
சார்பன்று
17.
(d)
\([0,\infty),[0,\infty)\)
18.
(c)
6
19.
(d)
N
20.
(c)
1
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards