11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
இருபரிமாண பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0 என்ற இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இருசமவெட்டியின் சமன்பாட்டைக் காண்க.
2.
y -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
3.
நீளம் 6 அலகுகள் கொண்ட ஒரு நேரான கம்பியின் முனைகள் A மற்றும் B ஆனது முறையே எப்போதும் x மற்றும் y-அச்சுகளைத் தொடுமாறு நகர்கிறது. O-ஐ ஆதியாகக் கொண்ட ΔOAB என்ற முக்கோணத்தின் நடுப்புள்ளியின் (centroid) நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க
4.
A(1,0) மற்றும் B(5,0) என்ற புள்ளிகளிலிருந்து சம தூரத்திலிருக்குமாறு நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
5.
(5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.
6.
x-2y-3=0 மற்றும் x+y+5=0 என்ற தனித்தனிச் சமன்பாடுகளைக் கொண்ட கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டைக் காண்க.
7.
5x-4y+3 = 0 என்ற கோட்டிற்கு இணையாக, x -அச்சின் வெட்டுத்துண்டு 3 எனக் கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
8.
ஒரு நேர்க்கோட்டின் ஆய அச்சுகள் சமமாகவும், எதிர்மறை குறிகளையும் கொண்ட வெட்டுத் துண்டுகளை உடைய மற்றும் (-1, 1) என்ற புள்ளி வழியே செல்லக்கூடிய கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
9.
\(\left( ct,\frac { c }{ t } \right) \) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t ≠ 0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.
10.
ஒரு மாணவன், அவனுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குச் சராசரியாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நடந்து சென்றால் பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்னதாகப் பள்ளியைச் சென்றடைகிறான். அதே வேளையில், சராசரியாக மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடந்து செல்லும்போது 5 நிமிடம் தாமதமாகப் பள்ளியைச் சென்றடைகிறான். அம்மாணவன் தினமும் காலை 8.00 மணிக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றால் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.
(i) அவனுடைய வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு
(ii) சரியான நேரத்திற்கு அவன் பள்ளிக்குச் செல்ல ஆகும் குறைந்தபட்சச் சராசரி வேகம் மற்றும் மாணவன் பள்ளியைச் சென்றடைய ஆகும் நேரம்?
(iii) பள்ளி தொடங்கும் நேரம்?
(iv) மாணவன் நடந்து செல்லும் பாதையின் இரட்டை நேர்க்கோடுகளின் சமன்பாடு.
11.
\(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. செங்குத்து வடிவம்
12.
ஒரு நகரத்தில் மக்கள் தொகை 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் முறையே 1,35,000 மற்றும் 1,45,000 எனில், 2015 ஆம் ஆண்டு மக்கள் தொகையை தோராயமாகக் காண்க. (மக்கள் தொகையின் வளர்ச்சி ஒரு மாறிலி).
13.
கீழ்க்காண்பவைகளிற்கு தீர்வு காண்க. 5x + 12y – 3 = 0 என்ற கோட்டிற்கும் (1,2) புள்ளிக்கும் இடையே உள்ள தூரம்.
14.
Q என்ற புள்ளி 2x2 + 9y2 = 18 என்ற வளைவரையின் மீது அமைந்துள்ளது. P(2,-7) கொடுக்கப்பட்ட புள்ளி எனில் கோட்டுத்துண்டு PQ-ன் நடுப்புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
15.
பாக் நீரிணைப்பின் மீது அமைக்கப்பட்டுள்ள பாம்பன் என்கின்ற தொடர்வண்டிக்கான கடல் பாலம் சுமார் 2065 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் தீவு நகரமான இராமேஸ்வரத்தையும் இந்தியப் பகுதியில் உள்ள மண்டபத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தின் மீது தொடர்வண்டி செல்வதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன் சீரான வேகம் 12.5 மீ/வி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள பாலத்தின் துவக்கப் பகுதியிலிருந்து, 560 மீட்டர் நீளம் கொண்ட தொடர்வண்டி நகரத் தொடங்குகிறது எனில்,
(i) தொடர்வண்டி செல்லும் இயக்கச் சமன்பாட்டைக் காண்க.
(ii) எப்போது இராமேஸ்வரத் தீவில் தொடர்வண்டி இயந்திரமானது நுழையும்?
(iii) எப்போது தொடர்வண்டியின் கடைசி பெட்டி பாலத்தின் தொடக்கப் பகுதியைக் கடக்கும்?
(iv) பாம்பன் கடல் பாலத்தைத் தொடர்வண்டி கடந்து செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் என்ன?
16.
\(x^2+2xy\ \cot \theta-y^2=0\) என்ற இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாடுகளில் ஒரு சமன்பாடு ______.
\(x-y\cot\theta =0\)
\(x+y\ \tan\theta =0\)
\(x\cos \theta +y(\sin\theta +1)=0\)
\(x\sin\theta +y(\cos \theta +1)=0\)
17.
6x2-xy+4cy2=0 என்ற கோடுகளில் ஒரு கோடானது 3x+4y=0 எனில் c -ன் மதிப்பு ______.
-3
-1
3
1
18.
6x2+41xy-7y2=0 என்ற இரட்டைக் கோடுகள் x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணங்கள் \(\alpha\) மற்றும் β எனில், tan α tan β = ?
-\(\frac { 6 }{ 7 } \)
\(\frac { 6 }{ 7 } \)
-\(\frac { 7 }{ 6 } \)
\(\frac { 7 }{ 6 } \)
19.
x+(2k-7)y+3=0 மற்றும் 3kx+9y-5=0 இவ்விரு கோடுகள் செங்குத்தானவை எனில் k -ன் மதிப்பு ______.
k = 3
k =\(\frac { 1 }{ 3 } \) .
k =\(\frac { 2 }{ 3 } \)
k =\(\frac { 3 }{ 2 } \)
20.
y= –x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி ______.
(–3, –2)
(–3, 2 )
(–2, –3)
( 3, 2 )
21.
ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.
\(\sqrt { \frac { 3 }{ 2 } } \)
6
\(\sqrt { 6 } \)
3\(\sqrt { 2 } \)
22.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.
5, –5
5, 5
5, 3
5, –4
23.
4+2\(\sqrt { 2 } \) என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு______.
x + y + 2 = 0
x+y-2=0
x+y-\(\sqrt { 2 } \)=0
x+y+\(\sqrt { 2 } \)=0
24.
3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி ______.
(0,0)
(-2, 3)
(1, 2)
(0, -1)
25.
ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.
x2+3y2=0
x2-3y2=0
3x2+y2=0
3x2-y2=0
1.
கொடுக்கப்பட்ட சமன்பாடுகள் 3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0
முதலில், இரு சமன்பாடுகளின் மாறிலியை மிகையாக மாற்ற,
3x + 4y + 2 = 0 மற்றும் -5x -12y +5 = 0 ஆகும்.
இரு கோடுகளின் இரு சமவெட்டியின் சமன்பாடு,
\(\frac { 3x + 4y + 2 }{ \sqrt { { 3 }^{ 2 }+{4 }^{ 2 } } } = ± \frac { -5x -12y +5 }{ \sqrt { { 5 }^{ 2 }+{12 }^{ 2 } } } \)
(நகரும் புள்ளி கோட்டிலிருந்து சமதூரத்தில் இருக்கும்)
a1a2 + b1b2 = – 15 – 48 < 0, என்பதால்
இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இரு சமவெட்டிகளின் சமன்பாடு,
\(\frac { 3x + 4y + 2 }{ 5 } = + \frac { -5x -12y +5 }{ 13 } \)
\(\Rightarrow \) 64x + 112y + 1 = 0
2.
y -அச்சுடன் கோணம் 30° ஏற்படுத்தும் கோடுகள் இரண்டு உள்ளன.
படத்திலிருந்து அக்கோடுகள் x -அச்சுடன் 60° மற்றும் 120° ஆகிய கோணங்களை ஏற்படுத்துகின்றன எனத் தெளிவாகிறது.
m1=tan 60°=\(\sqrt { 3 } \) மற்றும்
m2=tan 120° =tan (180°-60°)
=-tan 60° =-\(\sqrt { 3 } \)
m1=\(\sqrt { 3 } \), m2 =-\(\sqrt { 3 } \) மற்றும் b=7
தேவையான நேர்க்கோடுகளின் சமன்பாடுகள்
y=m1x+b மற்றும் y=m2x+b
y=\(\sqrt { 3 } \)x+7 மற்றும் y=-\(\sqrt { 3 } \)x+7

3.
P(h,k) என்பது தேவையான பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி என்க
O, A மற்றும் B ஆகிய புள்ளிகளின் ஆயக் கூறுகள் முறையே (0, 0), (a,0) மற்றும் (0, b) என்க.
ΔOAB -ன் நடுப்புள்ளி \(\left( \frac { 0+a+0 }{ 3 } ,\frac { 0+0+b }{ 3 } \right) \) = (h,k)
\(\frac { a }{ 3 } =h\Rightarrow a=3h,\frac { b }{ 3 } =k\Rightarrow b=3k\)
செங்கோணம் ΔBOA லிருந்து
OA2+OB2 =AB2
(3h)2+ (3k)2 = (6)2 ⇒ h2+k2 =4
எனவே P(h,k) என்ற புள்ளியின் நியமப்பாதை, x2+y2 =4
4.
கொடுக்கப்பட்ட இரு புள்ளிகள் A(1,0) மற்றும் B(5,0) ஆகும்.
P(h,k)என்பது தேவையான பாதையின்மீது அமைந்துள்ள ஏதேனும் ஒரு புள்ளி என்க.
கொடுக்கப்பட்ட நிபந்தனையின்படி AP = BP
அதாவது
\(\sqrt { (h-1)^{ 2 }+(k-0)^{ 2 } } =\sqrt { (h-5)^{ 2 }+(k-0)^{ 2 } } \)
⇒ h = 3
எனவே, புள்ளி P(h,k)-ன் நியமப்பாதை, x = 3
இது y-அச்சிற்கு இணையாக உள்ள நேர்க்கோடு ஆகும்.
5.
(x1,y1) மற்றும் (x2,y2) என்பன முறையே (5, 7) மற்றும் (7, 5) என்க.
\(\theta \) என்பது x -அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் என்க.
கோட்டின் சாய்வு m=\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { 5-7 }{ 7-5 } \)=-1
மேலும், m =tanፀ
tanፀ=-1 ⇒ \(\theta =\frac { 3\pi }{ 4 } \) அல்லது 135°
சாய்வு மற்றும் சாய்வு கோணம் முறையே
m =-1 மற்றும் \(\theta =\frac { 3\pi }{ 4 } \).

6.
தனித்தனிச் சமன்பாடுகள் x- 2y -3 = 0, x + y + 5 = 0
அவற்றின் ஒருங்கிணைந்த சமன்பாடு
\(\Rightarrow { x }^{ 2 }\) + xy +5x -2xy -2y - 10y -3x -3y -15 =0
\(\Rightarrow { x }^{ 2 }-{ 2y }^{ 2 }\) -xy + 5x -3y -15 =0
7.
x வெட்டு 3 எனில், A(3, 0) தேவையான கோட்டின் மீதுள்ள புள்ளியாகும்.
5x-4y+3=0 என்ற கோட்டிற்கு இணையான கோடு 5x-4y+k =0 ஆகும்
(3, 0) என்ற புள்ளியை (1)-ல் பிரதியிட.
5x3-4x0+k=0 \(\Rightarrow \)15+k=0 \(\Rightarrow \)k=-15
\(\therefore \)தேவையான கோட்டின் சமன்பாடு 5x-4y-15=0
8.
x-அச்சின் வெட்டுத்துண்டு = a மற்றும்
y -அச்சின் வெட்டுத்துண்டு = –a என்க.
எனவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
\(\frac { x }{ a } -\frac { y }{ a } \)= 1
⇒ x-y=a
மேற்கண்ட சமன்பாடானது (-1, 1) வழியே செல்வதால்,
(-1)-(1)= a ⇒ a = – 2
தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
x - y + 2 = 0

9.
தேவையான நியமப்பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(h,k)என்க.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, h = ct மற்றும் \(k=\frac { c }{ t } \) ஆகும்.
இவ்விரு சமன்பாடுகளைப் பெருக்கி t-ஐ நீக்கலாம்.
(h)(k) = ct\(\left( \frac { c }{ t } \right) \) ⇒ hk = c2, h = x மற்றும் k = y எனப் பிரதியிட
∴ தேவையான நியமப்பாதையின் சமன்பாடு xy=c2
10.
x -அச்சானது நேரத்தை மணியிலும், y -அச்சானது தூரத்தை கிலோமீட்டரிலும் குறிப்பிடுகிறது என்க.கொடுக்கப்பட்ட தகவலின்படி,
\(y=6(x-\frac { 10 }{ 60 } )\Rightarrow y=6x-1\) (6.43)
\(y=4(x-\frac { 5 }{ 60 } )\Rightarrow y=4x+\frac { 1 }{ 3 } \) (6.44)
மேற்கண்ட சமன்பாடுகள் (6.43) மற்றும் (6.44) தீர்க்க (x,y) = \(\left( \frac { 2 }{ 3 } ,3 \right) \)
x =\(\frac { 2 }{ 3 } \) மணிகள் = 40 நிமிடங்கள், y = 3 கிமீ
(i) அவனது பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு 3 கிமீ
(ii) பள்ளிக்கு நேரத்திற்குச் செல்ல எடுத்துக் கொள்ளும் குறைந்தபட்ச சராசரி
வேகம் = \(\frac { 60 }{ 40 } \times 3\)=4.5கிமீ / மணி மற்றும் பள்ளியை அடைய ஆகும் நேரம் =\(\frac { 2 }{ 3 } \) மணி அல்லது 40 நிமிடம்
(iii) பள்ளி தொடங்கும் நேரம் காலை 8.40 ஆகும்
(iv) நடைபாதையின் இரட்டை நேர்கோடுகளின் சமன்பாடு
(6x-y-1) (4x-y+\(\frac { 1 }{ 3 } \)) =0
72x2-30xy+3y2-6x+2y-1 = 0
11.
செங்குத்து வடிவம்
\(\sqrt { 3 } x-y+4=0\)
⇒ (-\(\sqrt { 3 } \))x+y=4 (6.17)-ஐ
Ax+By+C=0 என்ற சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது
A =-\(\sqrt { 3 } \) மற்றும் B =1 ∴ \(\sqrt { { A }^{ 2 }+{ B }^{ 2 } } \)=2
சமன்பாடு (6.17) -ஐ இருபுறமும் 2 ஆல் வகுக்க
⇒ \(-\frac { \sqrt { 3 } }{ 2 } x+\frac { 1 }{ 2 } y\) (6.18)-ஐ
x cosα+y sinα = p இச்சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது
cosα=\(-\frac { \sqrt { 3 } }{ 2 } \), sinα =\(\frac { 1 }{ 2 } \) மற்றும் p =2 என்க.
⇒ α =150° =\(\frac { 5\pi }{ 6 } \) மற்றும் p =2
செங்குத்து வடிவத்தின் சமன்பாடு
\(xcos\frac { 5\pi }{ 6 } +ysin\frac { 5\pi }{ 6 } \)=2 ஆகும்.
12.
x என்பது வருடங்களின் எண்ணிக்கையையும், y என்பது மக்கள் தொகையையும் குறிக்கிறது எனக் கொள்வோம்.
x1(2005) y1(1,35,000)
x2(2010) y2(1,45,000)
இரு புள்ளி வடிவம், x, y ற்கு இடைப்பட்ட தொடர்பு
\(\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } \)
\(\Rightarrow \frac { x-2005 }{ 2010-2005 } =\frac { y-1,35,000 }{ 1,45,000-1,35,000 } \)
\(\Rightarrow \frac { x-2005 }{ 5 } =\frac { y-1,35,000 }{ 10,000 } \)
\(\Rightarrow x-2005=\frac { y-1,35,000 }{ 2000 } \)
= 2000(x-2005)+1,35,000 ....(1)
2015-ம் ஆண்டு மக்கள் தொகையைக் காண்க.
x = 2015(1) பிரதியிட
y = 2000(2015-2005)+1,35,000
= 2000(10) + 1,35,000
= 20000+1,35,000
= 1,55,000
2015-ம் ஆண்டு மக்கள் தொகை = 1,55,000
13.
ax+by+c =0 என்ற கோட்டிற்கும் (x1,y1) என்ற புள்ளிக்கும் இடையே உள்ள தூரம்
\(D=\left| \frac { { ax }_{ 1 }+{ by }_{ 1 }+c }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \right| \)
அதாவது, 5x + 12y – 3 = 0 என்ற கோட்டிற்கும் (1 , 2) என்ற புள்ளிக்கும் இடையே உள்ள தூரம்.
\(D=\left| \frac { 5(1)+12(2)-3 }{ \sqrt { { 5 }^{ 2 }+{ 1 }2^{ 2 } } } \right| =2\)
14.
R(h, k) ன் நகரும் புள்ளி P(2, -7),Q புள்ளி (2x2 + 9y2 = 18)-ன் மீது அமையும்
R(h, k) ஆனது PQ-ன் நடுப்புள்ளி
2x2 + 9y2 = 18 \(\div \) 9
\(\Rightarrow \frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 2 } =1\)
\(\Rightarrow \frac { { x }^{ 2 } }{ { 3 }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { \sqrt { 2 } }^{ 2 } } =1\)
\(\Rightarrow a=3,b=\sqrt { 2 } \)
(a cos\(\theta\), b sin\(\theta\) வளைவரையின் அமைந்துள்ளதால்
\(\therefore Q=\left( 3cos\theta ,\sqrt { 2 } sin\theta \right) \)
R என்பது PQ-ன் நடுப்புள்ளி
\((h,k)=\left( \frac { 2+3cos\theta }{ 2 } ,\frac { -7+\sqrt { 2 } sin\theta }{ 2 } \right) \)
\(\Rightarrow h=\frac { 2+3cos\theta }{ 2 } ,k=\frac { -7+\sqrt { 2 } sin\theta }{ 2 } \)
\(\Rightarrow 2h-2=3cos\theta ,\quad 2k+7=\sqrt { 2 } sin\theta \)
\(\Rightarrow \frac { 2h-2 }{ 3 } =cos\theta ,\frac { 2k+7 }{ 2 } =sin\theta \)
வர்க்கப்படுத்தும் மற்றும் கூட்டுவதன் மூலம் கிடைப்பது
\(\Rightarrow { \left( \frac { 2h-2 }{ 3 } \right) }^{ 2 }+{ \left( \frac { 2k+7 }{ \sqrt { 2 } } \right) }^{ 2 }={ cos }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta \)
\(\Rightarrow \frac { { 4h }^{ 2 }-8h+4 }{ 9 } +\frac { 4{ k }^{ 2 }+28k+49 }{ 2 } =1\)
\(\Rightarrow 2({ 4h }^{ 2 }-8h+4)+9({ 4k }^{ 2 }+28k+49)=18\)
\(\Rightarrow { 8h }^{ 2 }-16h+8+36{ k }^{ 2 }+252k+441-18=0\)
\(\Rightarrow 8{ h }^{ 2 }+36{ k }^{ 2 }-16h+252k+431=0\)
\(\Rightarrow \therefore \) (h, k)-ன் நியமப்பாதை = 8x2 + 36y2 - 16x + 252y + 431 = 0
15.
x - அச்சில் நேரத்தை வினாடியிலும்
y - அச்சில் தொலைவை மீட்டரிலும் குறிக்கின்றது என்க.
தொடர்வண்டி இயந்திரம் ஆதிப்புள்ளி O-ல் உள்ளது என்க. எனவே தொடர் வண்டியின் நீளம் 560 மீ. y -அச்சின் குறை வெட்டுத்துண்டாகும்.
எனவே, b =-560
தொடர்வண்டியின் இயக்கத்தின் சீரான வேகம் 12.5 மீ/வி என்பதைச் சாய்வாகக் கருதலாம்.
m =12.5 
சாய்வு மற்றும் வெட்டுத்துண்டு கொடுக்கப்பட்டால் நேர்க்கோட்டின் சமன்பாடு
y= mx + b
(i) m = 12.5 மற்றும் b = -560 என்பதால் தொடர்வண்டியின் இயக்கச் சமன்பாடு
y =12.5x -560
(ii) பாலத்தின் எதிர்ப்புற முனையைத் தொடர்வண்டியின் இயந்திரம் தொடும் நேரம் y = 2065 மற்றும் b = 0
2065 = 12.5x
x = 165.2 வினாடிகள்
(iii) தொடர்வண்டியின் கடைசி பெட்டியானது பாலத்தின் தொடக்க முனையை அடையும்போது
y = 0 ⇒ = 12.5x – 560
எடுத்துக்கொள்ளும் நேரம், x = 44.8 வினாடிகள்
(iv) தொடர்வண்டி பாம்பன் பாலத்தைக் கடந்து செல்வதற்காக எடுத்துக்கொண்ட நேரம்
y = 2065 ⇒ 2065 =12.5x - 560
x = 210 வினாடிகள்

16.
(d)
\(x\sin\theta +y(\cos \theta +1)=0\)
17.
(a)
-3
18.
(a)
-\(\frac { 6 }{ 7 } \)
19.
(a)
k = 3
20.
(a)
(–3, –2)
21.
(c)
\(\sqrt { 6 } \)
22.
(b)
5, 5
23.
(b)
x+y-2=0
24.
(c)
(1, 2)
25.
(d)
3x2-y2=0
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards