11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
இயக்கவியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு புகைவண்டியின் நீளம் 20 m . அது 40 km/h வேகத்தினால் இயங்கியங்குகிறது எனில் 500 m நீளமுள்ள பாலத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?
2.
முடுக்கிவிடப்பட்ட இயக்கம்?
3.
நிலைவெக்டர் பற்றி விவரி.
4.
பறக்கும் நேரம் (T1) க்கான கோவையைப் பெறுக.
5.
\(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் அவற்றின் கூறுகள் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. \(\overrightarrow{A}=5\hat{i}+7\hat{j}-4\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=6\hat{i}+3\hat{j}+2\hat{k}\) எனில் கீழ்கண்டவற்றைக் காண்க.
\(\overrightarrow{A}+\overrightarrow{B},\ \ \overrightarrow{B}+\overrightarrow{A},\ \overrightarrow{A}-\overrightarrow{B}, \ \ \overrightarrow{B}-\overrightarrow{A}\)
6.
எதிர்க்குறி x, y மற்றும் z அச்சுத் திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?
7.
\(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) இன் எண்மதிப்பையும், \(\overrightarrow{A}\) வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) திசையையும் காண்க.
8.
முப்பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா. தருக.
9.
இரு பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா. தருக.
10.
ஒரு பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா தருக.
11.
கொடுக்கப்பட்ட சார்பு x = A0 + A1t + A2 t2 இன் வகைக்கெழுவினை t ஐ பொறுத்துக் காண்க. இங்கு A0, A1 மற்றும் A2 ஆகியவை மாறிலிகள் ஆகும்.
12.
கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடுக \({\overrightarrow{F}}_{1}+{\overrightarrow{F}}_{2}+{\overrightarrow{F}}_{3}={\overrightarrow{F}}_{4}\)
13.
படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow{A}\) வெக்டரிலிருந்து \(4\overrightarrow{A}\) மற்றும் \(-4\overrightarrow{A}\) ஜக் காண்க.

14.
\(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j},\) எனில் \(3\overrightarrow{A}\) ஐக் காண்க.
15.
y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.
16.
தடங்கலின்றித் தானே கீழே விழும் பொருள் 1,2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு ______
1:2:3
1:3:5
1 :4:9
9:4:1
17.
ஒய்வு நிலையில் இருக்கும் துகள், கிடைத்தளத்தில் நேர்க்கோட்டில் சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது. நான்காவது மற்றும் மூன்றவாது நொடிகளில், அது கடந்த தொலைவுகளின் தகவு _______
\(\frac { 3 }{ 4 } \).
\(\frac { 26 }{ 4 } \)
\(\frac { 7 }{ 5 } \)
2
18.
பொருளின் நிறையானது 10kg அதன் திசைவேகம் 25ms-1 எனில் உந்தம் _______
100 kg ms-1
100 N
250 N
250 kg ms-1
19.
எப்பொழுது பொருளின் உந்தம் மாறாது?
F =0
J =0
M =0, V =0
mv =0
20.
விசை ஒரு _____ அளவு
ஸ்கேலார்
வெக்டர்
இரண்டும்
எதுவுமில்லை
21.
கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
g = 20 m s–2
g = 25 m s–2
g = 15 m s–2
g = 30 m s–2
22.
கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.
\({R}_{30°}={R}_{60°}\)
\({R}_{30°}=4{R}_{60°}\)
\({R}_{30°}={{R}_{60°}\over 2}\)
\({R}_{30°}=2{R}_{60°}\)
23.
துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும் எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம் _______.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழி
24.
பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?
\(\hat{i}+\hat {j}\)
\({\hat{i}\over \sqrt{2}}\)
\(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)
\({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)
25.
பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.




1.
ரயிலின் நீளம் s1 = 20m
பாலத்தின் நீளம் s2=500m
காலம் (t)=?
மொத்த நீளம் S =S1+S2
=20+500=520m
ரயிலின் வேகம் S = 40kmh-1 = 40 x\(\frac {5}{18}\)m/s
=11m/s (approx)

=\(\frac {520}{11}\)47sec
2.
(1) சீரற்ற இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேகம் ஒவ்வொரு நேரத்திலும் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். அதாவது திசைவேகம் நேரத்தைப் பொருத்து மாற்றமடைந்து கொண்டே இருக்கும். இவ்வகையான இயக்கத்திற்கு முடுக்கிவிடப்பட்ட இயக்கம் என்று பெயர்.
(2) முடுக்கிவிடப்பட்ட இயக்கத்தில், ஓரலகு நேரத்தில் மாற்றமடைந்த பொருளின் திசைவேகம் சமமாக (மாறிலியாக) இருப்பின், அப்பொருள் சீராக முடுக்கிவிடப்பட்ட இயக்கத்தில் உள்ளது எனக் கருதலாம்.
(3) ஓரலகு நேரத்தில் மாற்றமடைந்த பொருளின் திசைவேகம் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறாக இருப்பின் அப்பொருள் சீரற்ற முடுக்கிவிடப்பட்ட இயக்கத்தில் உள்ளது எனக் கருதலாம்.
3.
(1) நிலையினைக்குறிப்பாயம் அல்லது ஆய அச்சுத் தொகுப்பினைப் பொருத்து குறிப்பிடும் வெக்டர், நிலைவெக்டர் ஆகும்.
(2) P என்ற புள்ளியில் உள்ள துகள் ஒன்றின் நிலை வெக்டரை \(\vec { r } \) கீழ்க்காணுமாறு குறிப்பிடலாம்.
(3) \( \vec { r } =x\hat { i } +y\hat { j } +z\hat { k } \)
(4) இங்கு x,y மற்றும் z ஆகியவை நிலை வெக்டர் \(\vec { r } \)இன் கூறுகள் ஆகும். மேலும் \(\hat { i } ,\hat { j } \) மற்றும் \(\hat { k } \) ஆகியவை செங்குத்து அச்சுகளான x,y மற்றும் z அச்சில் செயல்படும் செங்குத்து ஓரலகு வெக்டர்கள் ஆகும். படம் செங்குத்து ஓரலகு வெக்டர்களைக் காட்டுகிறது.

4.
(1) எறியப்பட்ட புள்ளியிலிருந்து, எறியப்பட்டபுள்ளி உள்ள கிடைத்தளத்தரையை அடைய எறிபொருள் எடுத்துக்கொள்ளும் நேரம், பறக்கும் நேரம் எனப்படும்.
(2) இங்கு பறக்கும் நேரம் என்பது எறிபொருள் O புள்ளியிலிருந்து A புள்ளி வழியாக B புள்ளியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரமாகும்.
நாம் அறிந்த படி Sy=uyt+\(\frac { 1 }{ 2 } \)ayt2
இங்கு, Sy=y=0 (y-அச்சு திசையில் தொகுபயன் இடப்பெயர்ச்சி சுழி ) uy=u
sin\(\theta \), ay=-g, t=Tf
0=u sin\(\theta \) Tf-\(\frac { 1 }{ 2 } \)g Tf2
Tf = 2u\(\frac { sin\theta }{ g } \).
5.
\(\overrightarrow{A}+\overrightarrow{B}=(5\hat{i}+7\hat{j}-4\hat{k})+(6\hat{i}+3\hat{j}+2\hat{k})=11\hat{i}+10\hat{k}-2\hat{k}\)
\(=11\hat { i } +10\hat { j } -2\hat { k } \)
\(\vec { B } +\vec { A } =\left( 6\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) +\left( 5\hat { i } +7\hat { j } -4\hat { k } \right) \)
\(=\left( 6+5 \right) \hat { i } +\left( 3+7 \right) \hat { j } +\left( 2-4 \right) \hat { k } \)
\(=11\hat { i } +10\hat { j } -2\hat { k } \)
\(\overrightarrow{A}-\overrightarrow{B}=(5\hat{i}+7\hat{j}-4\hat{k})-(6\hat{i}+3\hat{j}+2\hat{k})=-\hat{i}+4\hat{j }-6\hat{k}\)
\(\overrightarrow{B}-\overrightarrow{A}=\hat{i}-4\hat{j}+6\hat{k}\)
\(\overrightarrow{A}+\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{B}+\overrightarrow{A}\) ஒன்றுக்கொன்று சமம், ஆனால் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{B}-\overrightarrow{A}\) ஆகியவை ஒன்றுக்கொன்று எதிராக உள்ளதை கவனிக்கவும்.
6.
பின்வரும் படம், எதிர்குறி x, y மற்றும் z அச்சு திசையில் செய்லபடும் ஓரழகு வெக்டர்களைக் காட்டுகிறது.

படத்திலிருந்து, எதிர்க்குறி x அச்சு, y அச்சு மற்றும் z அச்சு திசைகளில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் முறையே \(\hat{i},-\hat{j},\) மற்றும் \(-\hat{k}\) ஆகும்.
7.
\( |\overrightarrow{A}-\overrightarrow{B}|=\sqrt{A^2+B^2-2AB\cos \theta }\)
\(\Rightarrow|\overrightarrow{A}-\overrightarrow{B}|=\sqrt{5^2+7^2-2\times5\times7\ \cos 60°}\)
\(=\sqrt{25+49-35}=\sqrt{39}\) அலகுகள்
\(\vec A \) வெக்டரைப் பொருத்து \(\vec A - \vec B \) ஏற்படுத்தும் திசை
\(\tan{ \alpha }_{ 2 }=\frac { 7\sin 60^{ 0 } }{ 5-7\cos 60^{ 0 } } =\frac { 7\sqrt { 3 } }{ 10-7 } =\frac { 7 }{ \sqrt { 3 } } =4.041\)
\({ \alpha }_{ 2 }=\tan^{ -1 }\left( 4.041 \right) \cong 76^{ o }\)
8.
(1) முப்பரிமாண வெளியில் இயங்கும் துகளின் இயக்கம், முப்பரிமாண இயக்கம் எனப்படும்.
(2) இவ்வகை இயக்கத்தில் மூன்று ஆய அச்சுக்கூறுகளும், நேரத்தைப் பொருத்து மாற்ற மடையும்.
(3) துகளின் முப்பரிமாண இயக்கத்தில், ஆய அச்சுக்கூறுகள் x,y மற்றும் z ஆகிய மூன்றும் மாற்றமடையும்.
(4) (எ.கா) பறக்கும் பறவையின் இயக்கம், மூலக்கூறின் இயக்கம், காற்றாடியின் இயக்கம்.
9.
(1) தளம் ஒன்றில் வளைவு பாதையில் இயங்கும் துகளின் இயக்கத்தினை, இருபரிமாண இயக்கம் என்று அழைக்கலாம்..
(2) இவ்வகை இயக்கத்தில் மூன்று செங்குத்து ஆய அச்சுகளில் இரண்டு ஆய அச்சுகள் மட்டுமே நேரத்தைப் பொருத்து மாற்றமடையும்.
(எ.கா) கேரம் பலகையில் (carrom board) இயங்கும் வில்லை, அறை ஒன்றின் தளத்தில் அல்லது சுவற்றில் ஊர்ந்து செல்லும் பூச்சி.
10.
(1) துகள் ஒன்று நேர்க்கோட்டில் இயங்கினால் அவ்வியக்கம் ஒருபரிமாண இயக்கம் எனப்படும்.
(2) சிலநேரங்களில் இவ்வியக்கம் நேர்க்கோட்டு இயக்கம் ((Linear motionl Rectilinear motion) எனவும் என அழைக்கப்படும்.
(3) இவ்வகை இயக்கத்தில் மூன்று செங்குத்து ஆய அச்சுகளில் ஏதேனும் ஒரு ஆயு அச்சுக்கூறு எண்மட்டுமே நேரத்தைப் மாற்றமடையும்.
(4) (எ.கா) நேரான இருப்புப்பாதையில் இயங்கும் இரயில் வண்டி, புவிஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் பொருள்.
11.
இங்கு சார்பற்ற மாறி ‘t’ மற்றும் சார்புடைய மாறி ‘x’ ஆகும்.
நமக்குத் தேவையான வகைக்கெழு
dx/dt = 0 + A1 + 2A2t
இரண்டாம்படி வகைக்கெழு d2x/d2t = 2A2 ஆகும்.
12.
கார்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டை x, y மற்றும் z கூறுகளாகப் பகுத்து அதன் கூறுகளை ஒப்பிட வேன்டும்.
F1x + F2x + F3x = F4x
F1y + F2y + F3y = F4y
F1z + F2z + F3z = F4z
13.
இயற்பியலில் சில வெக்டர் அளவுகள், மற்றொரு வெக்டரின் ஸ்கேலர் மடங்காக இருப்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக
(1) விசை \(\overrightarrow{F} = m \overrightarrow{a }\) இங்கு நிறை ‘m’ ஒரு நேர்க்குறி ஸ்கேலர் மற்றும் முடுக்கம் \(\overrightarrow{a }\) ஒரு வெக்டர் ஆகும். இங்கு விசையின் திசையிலேயே பொருள் முடுக்கமடைகிறது.
(2) உந்தம் \(\overrightarrow{p} = m \overrightarrow{v }\) இங்கு என்பது பொருளின் திசைவேகம். எனவே, இங்கு பொருள் இயங்கும் திசையிலேயே நேர்கோட்டு உந்தமும் செயல்படுகிறது.
(3) ஒரு மின்புலத்தால், மின்னூட்டமுள்ள ஒரு துகளின் மீது செயல்படும் விசை \(\overrightarrow{F} = q \overrightarrow{E}\). இங்கு 'q' என்பது மின்னூட்டம், ஒரு ஸ்கேலர் மற்றும் மின்புலம் \(\overrightarrow{E}\) ஒரு வெக்டர். விசை \(\overrightarrow{F}\)இன் திசை மின்னூட்டம் நேர்க்குறி எனில் \(\overrightarrow{E}\) இன் திசையிலும், மின்னூட்டம் எதிர்க்குறி எனில் \(\overrightarrow{E}\) திசைக்கு எதிர்த்திசையிலும் இருக்கும்.
14.
\(3\overrightarrow{A}=3(2\hat{i}+3\hat{j})=6\hat{i}+9\hat{j}\)
\(3\overrightarrow{A}\) வெக்டரின் திசை \(\overrightarrow{A}\) வெக்டரின் திசையிலேயே இருக்கும்.
15.
x1 = 2 மற்றும் x2 = 3 என்ற இரண்டு புள்ளிகளைக் கருதினால் y1 = 4 மற்றும் y2 = 9 என்ற இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.
இங்கு \(\triangle x=1\) மற்றும் \(\triangle y = 5\)
எனவே, \({\triangle y \over \triangle x}={9-4\over 3-2}=5\)
x1 = 2 மற்றும் x2 = 2.5 எனில்
y1 = 4 மற்றும் y2 = (2.5)2 = 6.25 எனக் கிடைக்கும்.
இங்கு \(\triangle x=0.5={1\over 2}\) மற்றும் \(\triangle y = 2.25\)
எனவே, \({\triangle y \over \triangle x}={6.25-4\over 0.5}=4.5\)
x1 = 2 மற்றும் x2 = 2.25 எனில்
y1 = 4 மற்றும் y2 = 5.0625 எனக் கிடைக்கும்
இங்கு \(\triangle x=0.25={1\over 4}\) மற்றும் \(\triangle y=1.0625\)
எனவே, \({\triangle y\over \triangle y}={5.0625-4\over 0.25}={(5.0625-4)\over{{1\over4}}}=4(5.0625-4)=4.25\)
x1 = 2 மற்றும் x2 = 2.1 எனில்
y1 = 4 மற்றும் y2 = 4.41 எனக் கிடைக்கும்
இங்கு \(\triangle x=0.1={1\over 10}\) மற்றும் \(\triangle y=0.41\)
\({\triangle y\over \triangle y}={(4.41-4)\over{{1\over10}}}=10(4.41-4)=4.1\)
16.
(c)
1 :4:9
17.
(d)
2
18.
(d)
250 kg ms-1
19.
(b)
J =0
20.
(a)
ஸ்கேலார்
21.
தானாக விழும் பொருளுக்கு,
\(h =\frac{1}{2} g p t^2 \)
\(\therefore g_p =\frac{2 h}{t^2}=\frac{2+50}{4}=25 m s^{-2}\)
22.
θ மற்றும் 90-θ ஆகிய கோணங்களுக்கு நெடுக்கம் ஒன்றுபோல் இருக்கும்.
23.
திசைவேகத்தின் திசையும் முடுக்கத்தின் திசையும் ஒரே திசையில் இருந்தால் வேகம் அதிகரிக்கும்,
24.
அலகு வெக்டர் என்பது திசையை மட்டும் குறிப்பது ஆகும்.
\(\widehat{A} =\frac{\vec{A}}{|\vec{A}|} \)
\(\therefore \hat{i}+\hat{j} =\frac{\hat{i}+\hat{j}}{|\hat{i}+\hat{j}|}\)
\(\hat{i}\) மற்றும் \(\hat{j}\) ஒன்றுக்கொன்று செங்குத்தாய் அமைந்த வெக்டா்கள்.
\(\therefore|\hat{j}+\hat{j}| =\sqrt{1^2+1^2} \)
\(=\sqrt{1+1} \)
\(=\sqrt{2}\)
25.
(அ) (ஆ) மற்றும் (இ) ஆகிய தோ்வுகள் எதிர்க் கடிகாரத் திசையில் அமையப் பெற்ற அச்சுகளைக் கொண்டுள்ளது. தேர்வு (ஈ) மட்டும் கடிகாரத் திசையில் அச்சுகள் அமைந்துள்ளன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards