11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/09/2019
ஈர்ப்பியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஈர்ப்பியல் விசையின் தன்மை யாது?
2.
கலிலியோவின் கண்டுபிடிப்பு யாது?
3.
புவிமையக் கொள்கை என்றால் என்ன?
4.
புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே 200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?
5.
புவி மற்றும் சூரியன் அமைப்பின் ஈர்ப்பு நிலை ஆற்றல் யாது? (புவியின் நிறை =5.9 x 1024kg மற்றும் சூரியனின் நிறை 1.9 x 1030kg. புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு =150 மில்லியன் கிலோ மீட்டர் (தோராயமாக))
6.
ஒரு கோளின் கோண உந்தம் \(\overrightarrow { L } =5{ t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } \) எனில் கோளின் மீது செயல்படும் திருப்பு விசை, கோண உந்தத்தின் திசையில் செயல்படுமா?
7.
இரு நிறைகளும் மற்றும் அந்நிறைகளுக்கு இடையேயான தொலைவு இரு மடங்கு ஆக்கப்பட்டால் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம் யாது?
8.
நிலாவின் மீதான புவியின் ஈர்ப்பு விசை திடீரெனெ மறைந்தால் சந்திரனுக்கு என்ன நிகழும்?
9.
புவியானத்து தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?
10.
எடை - வரையறு
11.
புவியின் விடுபடு வேகம் என்றால் என்ன?
12.
ஈர்ப்புத் தன்னிலை ஆற்றல் - வரையறு
13.
ஈர்ப்பு நிலை ஆற்றல்-வரையறு.
14.
கோளின் கோண உந்தம் மாறுமா? உன் விடையை நிரூபி.
15.
கெப்ளரின் விதிகளைக் கூறு.
1.
ஈர்ப்பியல் விசை எப்பொழுதும் ஈர்க்கும் தன்மை உடையது என்பதை குறிக்கிறது. ஈர்ப்பியல் விசையானது எப்போதும் இருநிறைகளையும் இணைக்கும் நேர்க்கோட்டின் வழியே செயல்படும்.
2.
புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞர் கலிலியோ புவிக்கு அருகில் மேலிருந்து கீழ் விழும் பொருள்கள் அனைத்தும் புவியினை நோக்கி சம வீதத்தில் முடுக்கமடைகின்றன என கண்டறிந்தார்.
3.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ரோமானிய வானியல் அறிஞர் கிளாடியஸ் தாலமி (Claudius ptolemy) வான் பொருள்களான சூரியன், நிலா, செவ்வாய், வியாழன் போன்றவற்றின் இயக்கத்தை விளக்குவதற்காக ஒரு கொள்கையை உருவாக்கினார். இம்மாதிரியே புவிமையக் கொள்கை என அழைக்கப்பட்டது.
4.
புவிப் பரப்பிற்கு மேலே உள்ள = h = 200km
gh = ? Re = 6371 km
\({ g }_{ h }=g\left[ 1-\frac { 2h }{ R } \right] \)
\({ g }_{ h }=g\left[ 1-\frac { 2\times 200 }{ 6371 } \right] =\frac { 5971 }{ 6371 } g\)
gh = 0.937g (or) gh = 0.94 g
புவி பரப்பிற்குக் கீழே ஆழம் d = 200km
gd = ? Re = 6371km
\({ g }_{ d }=g\left( 1-\frac { d }{ { R }_{ e } } \right) \)
\(g=\left( 1-\frac { 200 }{ 6371 } \right) =g\left( \frac { 6171 }{ 6371 } \right) \)
gd = 0.968g.
\(\therefore\) gd < gh
5.
புவியின் நிறை Me = 5.9 \(\times\) 1024
சூரியனின் நிறை Ms = 1.9 \(\times\) 1030 kg
புவிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவு
=150 மில்லியன் கிலோமீட்டர் = 150 \(\times\) 1011m
ஈர்ப்பு நிலை ஆற்றல் U = ?
\(U(r)=\frac { -{ GM }_{ e }{ M }_{ s } }{ R } \)
\(=\frac { 6.67\times { 10 }^{ -11 }\times 5.9\times { 10 }^{ 24 }\times 1.9\times { 10 }^{ 30 } }{ 1.5\times { 10 }^{ 11 } } \)
= - 4.984 \(\times\) 1032J
ஈர்ப்பு நிலை ஆற்றல் U = -4.984 \(\times\) 1032 ஜூல்
6.
ஒரு கோளின் கோண உந்தம் = \(\overrightarrow { L } ={ 5t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } \)
கோளின் மீது செயல்படும் திருப்புவிசை = \(\tau \)= ?
\(\tau =\frac { dL }{ dt } =\frac { d }{ dt } ({ 5t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } )\)
\(\tau =10t\hat { i } -6\hat { j } \)
7.
\({ F }_{ 1 }=\frac { { GM }_{ 1 }{ M }_{ 2 } }{ { r }^{ 2 } } \)
M1, M2 = 2M1, 2M2
தொலைவு r = 2r
எனில் \({ F }_{ 2 }=\frac { G2{ M }_{ 1 }2{ M }_{ 2 } }{ ({ 2r) }^{ 2 } } =\frac { 4GM_{ 1 }{ M }_{ 2 } }{ 4r } \)
\(\therefore\) F2 = F1
நிறைகளும், அவற்றிற்கிடையேயான தொலைவும் இருமடங்காகும் போது அவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசையில் மாற்றம் இல்லை.
8.
ஈர்ப்பு விசை திடீரென மறையும் போது சந்திரன் புவியைச் சுற்றி வரும் தனது சுழற்சியை நிறுத்திவிடும்.அதன் வழக்கமான சுற்றுப்பாதைக்கு தோடு கோட்டுத் திசையில் ஒரு வேகத்துடன் பூமியைச் சுற்றுமாறு சாய்ந்து அமையும்.
9.
இரவு நேரங்களில் விண்மீன்கள் நகர்வது போல தோன்றுவதை உற்று நோக்குவதன் மூலம் புவி தன்னைத்தானே சுழல்கிறது என நிரூபிக்கலாம்.புவியின் தற்சுழற்சி காரணமாகவே துருவ விண்மீனை மற்ற விண்மீன்கள் வட்டப்பாதையில் சுற்றி வருவது போல தோன்றுகிறது.
10.
ஒரு பொருளின் எடை \(\vec{W}\) ஆனது கீழ்நோக்கிய விசையாகும். இந்த எடையின் எண் மதிப்பானது அப்பொருளை தரையைப் பொறுத்து ஓய்வு நிலையிலோ அல்லது மாறாத திசைவேகத்திலோ வைத்திருக்க செலுத்த வேண்டிய மேல்நோக்கிய விசையின் எண் மதிப்புக்கு சமம் ஆகும்.
11.
(i) ஒரு பொருள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ அல்லது குறிப்பிட்ட கோணத்தில் பொருள் எறியப்பட்டாலோ புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு செல்வதற்காக தேவையான சிறும வேகம் விடுபடு வேகம் எனப்படும்.
(ii) இது ஈர்ப்பின் முடுக்கம், புவியின் ஆரம் ஆகிய இரு காரணிகளை சார்ந்துள்ளது. பொருளின் நிறையையும் பொருள் எறியப்படும் திசையையும் சார்ந்தது அல்ல.
12.
ஒரு நிறையிலிருந்து r தொலைவில் உள்ள புள்ளியில் ஈர்ப்பு தன்னிலை ஆற்றலானது. ஓரலகு நிறையை முடிவிலாத் தொலைவிலிருந்து அப்புள்ளிக்கு கொண்டு வரச் செய்த வேலை ஆகும். இது V(r) என குறிக்கப்படும். மேலும் r தொலைவில் உள்ள புள்ளியில் ஓரலகு நிறைக்கான ஈர்ப்பு ஆற்றல் என்பது அப்புள்ளியில் ஓரலகு நிறைக்கான ஈர்ப்பு நிலை ஆற்றலுக்குச் சமம் என்றும் வரையறுக்கலாம். ஈர்ப்பு தன்னிலை ஆற்றல் ஒரு ஸ்கேலார் அளவு ஆகும். அதன் அலகு J/kg.
r தொலைவில் நிறை m1 ஆல் ஏற்படும் ஈர்ப்பு தன்னிலை ஆற்றல்
V(r)=-\(\frac { -G{ m }_{ 1 } }{ r } \)
13.
ஒரு பொருளின் ஈர்ப்பு நிலை ஆற்றல் என்பது புவிஈர்ப்பு புலத்தில் மற்றொரு பொருளின் நிலைக்கான ஆற்றலுடன் தொடர்புடையது. மேலும் ஈர்ப்புப் புலத்தில் மற்றொரு பொருளை முடிவிலாத் தொலைவிலிருந்து (infinity) ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு எட்டாம் பெயரச் செய்யப்படும் வேலையின் அளவு ஆகும்.
W =\(\frac { G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ r } +\frac { G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ r' } \)
W =U(r)-U(r')
U(r)=\(\frac { -G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ r } \) (அலகு ஜூல்)
14.
கோண உந்தம் மாறாது, சூரியனைச் சுற்றி கோள்கள் சுற்றி வரும்போது ஈர்ப்பு விசையின் இயங்கு அச்சானது, பாதையின் அச்சுடன் பொருத்தும்போது புறத்திருப்பு விசை சுழியாகும்.
\(\tau=\frac{d L}{d t}\) திருப்புவிசை \(\tau\) சுழியாகும்போது கோண உந்தம் (L) மாறாது.
15.
சுற்றுப்பாதைகளுக்கான விதி:
சூரியனை ஒரு குவியப் புள்ளியாகக் கொண்டு ஒவொரு கோளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
பரப்பு விதி:
சூரியனையும் ஒரு கோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால இடைவெளியில் சம பரப்புக்களை ஏற்படுத்தும்.
சுற்றுக்காலங்களின் விதி:
நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றும் கோளின் சுற்றுக்காலத்தின் இருமடி, அந்த நீள்வட்டத்தின் அரைநெட்டச்சின் மும்முடிக்கு நேர்தக்கவில் இருக்கும். அதனை கீழ்கண்டவாறு எழுதலாம்.
T2 \(\propto \) a3 ....(1)
\(\frac { { T }^{ 2 } }{ { a }^{ 3 } } \) = மாறிலி ...(2)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards