11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
வெப்பமும் வெப்ப இயக்கவியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
உனது வகுப்பறையில் உள்ள காற்றின் நிறையை இயல்பு வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (NTP) கணக்கிடுக. இங்கு இயல்பு வெப்பநிலை என்பது அரை வெப்பநிலையும், இயல்பு அழுத்தம் என்பது ஒரு வளி மண்டல அழுத்தத்தைக் (1atm) குறிக்கும்.

2.
8 km தொலைவிலிருந்து மிதிவண்டியின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவியின், மிதிவண்டியின் சக்கரத்தின் காற்றழுத்தம் 27oC இல் 240 kPa. அம்மாணவி பள்ளியை அடைந்தவுடன் சக்கரத்தின் வெப்பநிலை 39oC எனில் சக்கரத்தின் காற்றழுத்தத்தின் மதிப்பினைக் காண்க.

3.
4.
நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
5.
வெப்பக் கடத்துத்திறன் வரையறு. அதன் அலகைத் தருக.
6.
இரண்டு வெவ்வேறு அழுத்தங்களில் நடைபெறும் அழுத்தம் மாறா நிகழ்வுக்கான V-T வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது. இவற்றுள் எந்நிகழ்வு உயர் அழுத்தத்தில் நடைபெறும் என்று கண்டறிக.

7.
300 k வெப்பநிலையுள்ள 0.5 மோல் வாயு ஒன்று தொடக்கப்பருமன் 2L இல் இருந்து இறுதிப்பருமான் 6L க்கு வெப்பநிலை மாறா நிகழ்வில் விரிவடைகிறது எனில், பின்வருவானவற்றைக் காண்க.
a. வாயுவால் செய்யப்பட்ட வேலை?
b. வாயுவிற்குக் கொடுக்கப்பட்ட வெப்பத்தின் அளவு?
c. வாயுவின் இறுதி அழுத்தம்?
(வாயுமாறிலி, R= 8.31 J mol-1 K-1)
8.
மீமெது நிகழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
9.
நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறன் ______.
6.25%
20%
26.8%
12.5%
10.
பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?
W = O
Q = O
U = O
T = O
11.
மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது.
\(\Delta \)U > O , Q = O ,
\(\Delta \)U > O , W < O ,
\(\Delta \)U > O , Q > O ,
\(\Delta \)U = O , Q > O ,
12.
சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.
ஒரு நீள்வட்டம்
ஒரு வட்டம்
ஒரு நேர்க்கோட்டு
ஒரு பரவளையம்
13.
வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளிந்த பின்னர் நமது உடலின் ______.
அக ஆற்றல் குறையும்
அக ஆற்றல் குறையும்
வெப்பம் குறையும்
அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது
1.
வகுப்பறை ஒன்றின் சராசரி அளவு முறையே 6m நீளம், 5m அகலம் மற்றும் 4m உயரமாகும். எனவே அறையின் பருமன் V = 6 × 5 × 4 = 120 m3 ஆகும். இப்பருமனில் உள்ள மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும்.
அறை வெப்பநிலையிலுள்ள (300K) ஒரு மோல் வாயுவின் பருமன் 24.6லிட்டர். எனவே,
மூலக்கூறுகளின் எண்ணிக்கை
\(\mu =\frac { { 120 }m^{ 3 } }{ 24.6\times { 10 }^{ -3 }{ m }^{ 2 } } \approx 4878\quad mol.\)
காற்றில் 21% ஆக்ஸிஜன், 78% நைட்ரஜன் மற்றும் 1% ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் செனான் போன்ற வாயுக்களின் கலவை உள்ளது. காற்றின் மூலக்கூறு நிறை 29 g mol-1 எனவே அறையில் உள்ள காற்றின் மொத்த நிறை m = 4878 × 29 = 141.4 kg ஆகும்
2.
சக்கரத்தில் உள்ள காற்றினை நல்லியல்பு வாயுவாகக் கருதினால், வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சக்கரத்தின் பருமனும் இங்கு மாறிலி ஆகும். வாயு மூலக்கூறுகள் P1V1 = NkT1 இலட்சிய வாயுச் சமன்பாட்டையும், 39o வெப்பநிலையிலுள்ள வாயு மூலக்கூறுகள் P2V2 = NkT2 என்ற இலட்சிய வாயுச் சமன்பாட்டையும் நிறைவு செய்யவும்.
இங்கு T1 மற்றும் T2 என்பது கெல்வின் வெப்பநிலை ஆகும். நாம் அறிந்தபடி
V1 = V2 = V
\(\frac { P_{ 1 }V }{ { P }_{ 2 }V } =\frac { Nk{ T }_{ 1 } }{ { NkT }_{ 2 } } \)
\(\frac { P_{ 1 } }{ { P }_{ 2 } } =\frac { { T }_{ 1 } }{ { T }_{ 2 } } \)
\({ P }_{ 2 }=\frac { { T }_{ 2 } }{ { T }_{ 1 } } P_{ 1 }\)
\(P_{ 2 }=\frac { 312K }{ 300K } \times 240\times { 10 }^{ 3 }pa=249.6kPa\)
3.
4.
வெப்பம் மற்றும் வேலை இவை வெப்ப இயக்கவியல் நிலை மாறிகள் அல்லது செயல்மாறிகள் ஆகும்.
5.
வெப்பத்தைக் கடத்தும் திறனுக்கு வெப்பக்கடத்துத்திறன் என்று பெயர்.
மாறாநிலை நிபந்தனையை ஓரலகு வெப்பநிலை வேறுபாட்டில், ஓரலகு தடிமன் கொண்ட பொருளின் வழியே ஓரலகு பரப்பிற்குச் செங்குத்தாக உள்ள திசையின் கடத்தப்படும் வெப்பத்தின் அளவே, பொருளின் வெப்பக்கடத்துத்திறன் என அழைக்கப்படுகிறது.
\(\frac { Q }{ t } =\frac { KA\triangle T }{ L } \)
இங்கு K என்பது வெப்பக்கடத்தல் எண் ஆகும்.
(இதனை கெல்வின் வெப்பநிலை K எனத் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது)
வெப்பக்கடத்துத்திறனின் SI அலகு J s-1 m -1 K-1 அல்லது Wm-1 K-1.
6.
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிலிருந்து,
\(V=\left( \frac { \mu R }{ P } \right) T\)
V -T வரைபடம் அதிப்புள்ளி வழியேச் செல்லும் ஓர் நேர்கோடாகும்.
அதன் சாய்வு =\(\frac { \mu R }{ P } \)
V -T வரைபடத்தின் சாய்வு, அழுத்தத்திற்கு எதிர்விகிதத் தொடர்புடையது ஆகும். சாய்வு பெருமமாக இருபின், அழுத்தம் குறைவானதாகும். இங்கு P1 இன் சாய்வு P2 வை விட அதிகம். எனவே P2 > P1.
7.
a. நாம் அறிந்தபடி வாயுவால் செய்யப்பட்ட வேலை ஓர் வெப்பநிலை ஓர் மாறா விரிவாகும்.
இங்கு \(\mu \)=0.5
\(W=0.5mol\times \frac { 8.31J }{ mol.K } \times 300K\times ln\left( \frac { 6L }{ 2L } \right) \)
W = 1.369 kJ
இங்கு வேலை நேர்குறியில் உள்ளதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் வாயுவால் வேலை செய்யப்பட்டுள்ளது.
b. வெப்ப இயக்கவியலின் முதல் விதிப்படி, வெப்பநிலை மாறா நிகழ்வில் அமைப்பிற்குக் கொடுக்கப்படும் வெப்பம் வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எனவே, Q = W = 1.369 kJ
இங்கு Q வும் நேர்குறியாகும். ஏனெனில் வெப்பம் அமைப்பிற்குள் செல்கிறது.
c. வெப்பநிலை மாறா நிகழ்விற்கு
PiVi = PfVf = μRT
\({ P }_{ f }\frac { \mu RT }{ { V }_{ f } } =0.5mol\times \frac { 8.31J }{ mol.K } \times \frac { 300K }{ 6\times { 10 }^{ -3 }{ m }^{ 3 } } \)
=207.75 k Pa
8.
பருமன் V, அழுத்தம் P மற்றும் வெப்பநிலை T உடைய வாயு ஒன்று கொள்கலனில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது என்க. படத்தில் காட்டியுள்ளவாறு பிஸ்டன் மீது ஒவ்வொரு மின்துகளாகப் போடும்போது பிஸ்டன் உள்நோக்கி மிக மெதுவாக நகரும். இந்நிகழ்வினை கிட்டத்தட்ட மீமெது நிகழ்வாகக் கருதலாம்.

(ஒவ்வொரு மண்துகளாக பிஸ்டனின் மீது போடும்போது ஏற்படும் மீமெது நிகழ்வு)
9.
(c)
26.8%
10.
(a)
W = O
11.
(c)
\(\Delta \)U > O , Q > O ,
12.
(c)
ஒரு நேர்க்கோட்டு
13.
(a)
அக ஆற்றல் குறையும்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards