11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
வெப்பமும் வெப்ப இயக்கவியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
முப்புள்ளி என்பது யாது? நீரின் முப்புள்ளி மதிப்பு யாது?
2.
உள்ளுறை வெப்பத்தின் மூன்று வகைகள் யாவை? அவை யாவை?
3.
சூடான, வேகவைக்கப்பட்ட முட்டையிலிருந்து ஓட்டினை பிரிப்பதன் தத்துவம் யாது?
4.
இறுக்கமாக மூடப்பட்ட கண்ணாடிக்குவளையின் மூடியை திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும். ஏன்?
5.
மின் உற்பத்தி உலைகள், அணுக்கரு உலைகளில் குளிரூட்டியாக பயன்படுவது யாது?எது?
6.
ஒரு பொருளைத் தொடுவதன் மூலம் அப்பொருளின் வெப்பநிலையை அளவிட முடியுமா?
7.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியைக் கூறுக.
8.
ஜூல் இயந்திர ஆற்றலை, வெப்ப ஆற்றலாக மாற்றினாரா? விளக்குக.
9.
ஒரு கலோரி வரையறு.
10.
அக ஆற்றலும், வெப்ப ஆற்றலும் ஒன்றா? விளக்குக.
11.
நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
12.
வெப்பச் சமநிலை என்றால் என்ன?
13.
வெப்ப இயக்க அமைப்பின் வகைகள் யாவை?
14.
வெப்ப இயக்க அமைப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டுத்தருக.
15.
கரும்பொருள் என்றால் என்ன?
1.
கொடுக்கப்பட்ட பொருளொன்றின் மூன்று நிலைகளும் (திட, திரவ மற்றும் வாயு) வெப்ப இயக்கச் சமநிலையில் உள்ளேபோது, அப்பொருளின் வெப்பநிலை மற்றும் அழுத்தமே பொருளின் முப்புள்ளி என அழைக்கப்படுகிறது. நீரின் முப்புள்ளி 273.1 K மற்றும் பகுதி ஆவி அழுத்தம் (Partial Vapour Pressure) 611.657 பாஸ்கலாகும்.
2.
(i) உருகுதலின் உள்ளுறை வெப்பம் - திட- திரவ நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பம்.
(ii) ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - திரவ -வாயு மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பம்.
(iii) பதங்கமாதலின் உள்ளுறை வெப்பம் - திட- வாயு நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பம்.
3.
வேகவைக்கப்பட்ட சூடான முட்டையை குளிர்ந்த தண்ணீரில் போட்டு அதன் ஓட்டினை உரித்தால் அது முட்டையிலிருந்து எளிதாக பிரிந்து வரும். ஏனெனில் முட்டை மற்றும் ஒடு ஒவ்வொன்றும் வெவ்வேறு வெப்பவிரிவைப் பெற்றிருப்பதாகும்.
4.
இறுக்கமாக மூடப்பட்டுள்ள கண்ணாடிக்குவளையின் மூடியை எளிதாகத்திறக்க, அதனை சூடான தண்ணீரில் அருகே சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும், பின்னர் அதனை எளிதாகத் திறக்கலாம். ஏனெனில் கண்ணாடிக் குவளையின் மூடியின் வெப்ப விரிவு கண்ணாடியைவிட அதிகமாக இருப்பதாகும்.
5.
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் பெரும மதிப்பைப் பெற்றுள்ளது. அதாவது 4186 JKg-1K-1 .எனவே குளிரூட்டிகளில் பயன்படுகின்றன.
6.
ஒரு பொருளைத் தொடுவதன் மூலம் வெப்பநிலையை அளவிட முடியாது. ஏனெனில் வெறும் காலில் தரையில் நிற்கும்போது குளிர்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் விரிப்பின் மீது நிற்கும் போது வெப்பத்தை உணரமுடியும். அதாவது இரண்டும் ஒரே அறை வெப்ப நிலையில் இருந்தாலும் தொடுதல் மூலம் வெவ்வேறு அளவீடுகளைப் பெறுகிறோம். ஆனால், இதே அமைப்பில் ஒரு வெப்பமானியை பயன்படுத்தும் போது வெப்பநிலை சமமாக இருக்கும்.
7.
அமைப்பின் அக ஆற்றல் மாறுபாடானது \(\left( \triangle U \right) \) அமைப்பிற்க்கு கொடுக்கப்பட்ட வெப்பத்திற்கும் (Q) சுழலின்மீது அவ்வமைப்பு செய்த வேலைக்கும் (W) உள்ள வேறுபாட்டிற்குச் சமமாகும். கணிதமொழியில் இதனைப் பின்வறுமாறு குறிப்பிடலாம். \(\triangle U=Q-W\)
8.
(i) பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் ஜூல் என்ற அறிவியல் அறிஞர் இயந்திர ஆற்றலை அக ஆற்றலாகவும், மாற்ற முடியும் என்று நிரூபித்தார்.
(ii) இரண்டு நிறைகள் கயிறு ஒன்றின் வழியே துடுப்பு சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புவியீருப்பு விசையால் இரண்டு நிறைகளும் h தூரத்திற்கு கீழே வரும்போது 2mhg அளவு நிலை ஆற்றலை இரண்டு நிறைகளும் இழக்கின்றன, நிறைகள் கீழே வரும்போது நீரினுள் உள்ள துடுப்பு சக்கரம் சுறறும். எனவே துடுப்பு சக்கத்திற்கும் நீருக்கும் இடையே ஓர் உராய்வு விசைத்தோன்றும்.
(iii) இது நீரின் வெப்பநிலையை உயர்த்தும் இங்கு ஈர்ப்பு நிலை ஆற்றல் (Gravitational otential energy) நீரின் அக ஆற்றலாக மாற்றமடைவதை இது உணர்த்துகிறது. புவியீர்ப்பு விசையால் செய்யப்பட்ட வேலையினால் நீரின் வெப்ப நிலை உயர்ந்துள்ளது.
(iv) உண்மையில் வெப்பத்தை கொடுப்பதால் ஏற்படும் அதே விளைவை இயந்திரத்தைக் கொண்டு செய்யப்படும் வேலையினால ஏற்படுத்த முடியும் என்று ஜூல் நிரூபித்துள்ளார்.
(v) 1 கிராம் நிறையுடைய நீரின் வெப்பநிலையை 1oC உயர்த்த 4.186 J ஆற்றல் தேவைப்படும் என்று ஜூல் கண்டறிந்தார்.
9.
ஒரு கலோரி ஒரு வளிமண்டலம் அழுத்தத்தில் 1 கிராம் நிறையுடைய நீரின் வெப்பநிலையை 1oC உயர்த்தத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு ஆகும். வெப்பமான கலோரி என்ற எண்ணால் அழைக்கப்பட்டது.
1 கலோரி = 4.186 J.
10.
(i) அக ஆற்றலும், வெப்ப ஆற்றலும் ஒன்றல்ல. வெப்பம் எப்போதும் உயர் வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து தாழ் வெப்பநிலையிலுள்ள பொருளுக்கு பாயும்.
(ii) மேலும் இது அமைப்பின் ஆற்றலைச் சார்ந்ததல்ல. பொருளுக்கு வெப்பம் மாற்றப்பட்ட உடன் அவ்வெப்பம் பொருளின் அக ஆற்றலாக மாறிவிடும்.
(iii) அமைப்பு ஒன்றின் அக அதிகரிப்பதற்கு வெப்பப்படுத்துவது சிறந்த முறை.
(iv) ஆனால் அக ஆற்றல் என்பது அமைப்பின் நிறைமையத்தைப் பொருத்து அமைப்பிலுள்ள அனைத்து மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல்களின் கூடுதலுக்கு சமம்.
11.
வெப்பம் மற்றும் வேலை இவை வெப்ப இயக்கவியல் நிலை மாறிகள் அல்லது செயல்மாறிகள் ஆகும்.
12.
இரு அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒரே வெப்ப நிலையில் நேரத்தைப் பொருத்து மாறாமல் இருப்பது வெப்பச் சமநிலை எனப்படும்.
13.
வெப்ப இயக்க அமைப்பின் வகைகள்: (i) திறந்த அமைப்பு, (ii) மூடப்பட்ட அமைப்பு, (iii) தனித்த அமைப்பு
| (i) | திறந்த அமைப்பு | திறந்த அமைப்பானது பருப்பொருள் மற்றும் ஆற்றலையும் சுற்றுச்சுழலோடு பரிமாறிக்கொள்கிறது . |
| (ii) | மூடப்பட்ட அமைப்பு | மூடப்பட்ட அமைப்பானது ஆற்றலை மட்டும்(பருப் பொருளை அல்ல) சுற்றுச் சூழலோடு பரிமாறிக் கொள்கிறது. |
| (iii) | தனித்த அமைப்பு | தனித்த அமைப்பானது சுற்றுச் சூழலோடு பருப்பொருளையும் பரிமாறிக் கொள்ளவில்லை மற்றும் ஆற்றலையும் பரிமாறிக் கொள்ளவில்லை |
14.
வெப்ப இயக்க அமைப்பு (Thermodynamic system) என்பது (P), பருமன் (V) போன்ற முக்கிய அளவுகளால் வரையறுக்கப்பட்ட பெரும எண்ணிக்கையிலடங்கிய துகள்களின் (அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள்) தொகுப்பு ஆகும்.
எடுத்துக்காட்டுகள்:
1. வாளியில் உள்ள தண்ணீர்
2. அறை ஓன்றினுள் உள்ள காற்று மூலக்கூறுகள்
3. மனித உடல்
4. கடலின் உள்ள மீன்.
15.
(i) கரும்பொருள் என்பது அதன்மீது விழுகின்ற அனைத்து அலை நீளங்களும் உடைய வெப்பக் கதிர்வீச்சை உட்கவர்கிறது.
(ii) கரும்பொருள் எந்த வெப்பக்கதிர்வீச்சினையும் எதிரொளிப்பது அல்லது கடத்துவது, சூரியனை கிட்டத்தட்ட ஒரு கரும் பொருளாகக் கருதலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards