11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/12/2018
11th Physics - Important 2 mark questions
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
நெட்டிலையின் அலைநீளம் வரையறு.
2.
ஒரு தனிசீரிசை இயக்கத்தில் ஒரு துகள் 2cm தொலைவிற்கு பெரும இடப்பெயர்ச்சியடைகிறது. 2cm/s2 ல் சராசரி தொலைவிலிருந்து 0.5cm தொலைவில் முடுக்கம் அடைகிறது. சராசரிப் புள்ளியிலிருந்து 1cm தொலைவில் உள்ளதுபோது திசைவேகம் யாது?
3.
பெர்னெளலி தேற்றத்தின் பயன்பாடுகள் யாவை?
4.
கலிலியோவின் கண்டுபிடிப்பு யாது?
5.
வெப்ப ஏற்புத்திறன் வரையறு.
6.
இயக்கவியற்கொள்கையின் அவசியம் யாது?
7.
எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)
8.
ஒரு தூக்கி 5.0 ms-2முடுக்கத்துடன் கீழே இறங்குகிறது.லிப்டில்[தூக்கி]உள்ள நபரின் எடையில் ஏற்படும் சதவீத மாற்றம் யாது?
9.
ஒரு பொருள் ஆய ஆச்சு அமைப்பின் x அச்சு வழியே இயங்குமாறு ஒரு நிலையான விசை \(\overrightarrow { F } =(2\hat { i } -\hat { j } +4\hat { k } )N,\)க்கு உட்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. எனில் x அச்சில் 4 மீ தொலைவிற்கு பொருளை நகர்த்தி செய்யப்பட்ட வேலை யாது?
10.
சீரான வடிவம் கொண்ட பொருட்களில் நிறைமையம் எங்கு அமையும் ? எ.கா தருக
11.
சராசரி தனிப்பிழை என்பது யாது?
12.
எதிர்க்குறி x, y மற்றும் z அச்சுத்திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?
13.
சராசரி மோதலிடைதூரத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
14.
தனி ஊசலின் விதிகளைத் தருக?
15.
நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
16.
கீழ்க்கண்ட தொடர்புகளைக் கருதுக
(a) y = x2 + 2 ∝ tx
(b) y = (x + vt)2
மேற்கண்டவற்றுள் எது அலையைக் குறிக்கிறது.
17.
100 cm பக்கத்தைக் கொண்ட ஒரு உலோக கனசதுரம் அதன் முழு பக்கங்களிலும் செயல்படும் சீரான செங்குத்து விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அழுத்தம் 106 பாஸ்கல் பருமன் 1.5 x 10-5m3 என்ற அளவு மாறுபாடு அடைந்தால், பொருளின் பருமக்குணத்தைக் கணக்கீடுக.
18.
புவிப் பரப்பிலிருந்து எறியப்பட்ட பொருள் ஒன்று சுழி அல்லாத இயக்க ஆற்றலுடன் \(\left[ K.E(r=\infty )=\frac { 1 }{ 2 } { Mv }_{ \infty }^{ 2 } \right] \)ஈறிலாத் தொலைவை அடைகிறது எனில் புவிப்பரப்பிலிருந்து அப்பொருள் எறியப்பட்ட வேகம் யாது?
19.
x அச்சினை கிழக்குத் திசையாகவும் y அச்சினை வடக்குத்திசையாகவும் மேலும் z அச்சினை செங்குத்தான மேல் நோக்கிய திசையாகவும் கருதி கீழ்க்கண்டவற்றை வெக்டர் முறையில் குறிப்பிடுக.
a) 5 மீட்டர் வட கிழக்கு மற்றும் 2 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்
b) 4 மீட்டர் தென்கிழக்கு மற்றும் 3 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்
c) 2 மீட்டர் வடமேற்கு மற்றும் 4 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்.

20.
கொடுக்கப்பட்ட வெக்டர் \(\vec r=3\hat i+2\hat j\) இவ்வெக்டரை ஓரலகு வெக்டராக மாற்றுக.
21.
A மற்றும் b என்ற இரு நிறை தெரியாத வெவ்வேறு பொருள்கள் மோதிக் கொள்கின்றன. தொடக்கத்தில் பொருள் மோதிக் A ஓய்வு நிலையிலும் B ஆனது v வேகத்தையும் கொண்டுள்ளது.மோதலுக்கு பின் பொருள் B ஆனது \(\frac { V }{ 2 } \) என்ற வேகத்தையும் பெற்று அதன் ஆரம்ப இயக்க திசைக்கு செங்குத்தாகச் செல்கிறது, மோதலுக்குபின் பொருள் A செல்லும் திசையைக் காண்க
22.
அதிர்வடையும் கம்பியின் அதிர்வெண்(υ)ஆனது
i. அளிக்கப்பட்ட விசை (F)
ii. நீளம் (l)
iii. ஒரலகு நீளத்திற்கான நிறை (m) ஆகியவற்றைப் பொறுத்தது எனக் கொண்டால், பரிமாண முறைப்படி அதிர்வெண் \(v ∝ {1\over l}\sqrt{F\over m}\) என நிரூபி
23.
2 kg நிறையுடைய பொருளின்மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன. \(\overrightarrow { { F }_{ 1 } } =5\hat { i } +8\hat { j } +7\hat { k } \) மற்றும் \(\overrightarrow { { F }_{ 2 } } =3\hat { i } -4\hat { j } +3\hat { k } \) பொருளின் முடுக்கத்தைக் காண்க.
24.
ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் விழுக்காட்டுப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.
25.
தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.
1.
அடுத்தடுத்த இரு இறுக்கங்கள் அல்லது தளர்ச்சிக்கு இடைபட்ட தொலைவு ஒரு அலை நீளம். SI அழகுமீட்டர்.
2.
ஒரு புள்ளியில் முடுக்கம்=ω2y,
a=2cm/s2, y=0.5 cm
∴ a=ω2y
2=ω2 x 0.5
ω2=\(\frac{2}{0.5}\)=4
ω=2 rad/s
v=ω\(\sqrt { { a }^{ 2 }-{ y }^{ 2 } } \)
ω=2, a=2, y=1
v=2\(\sqrt { { 2 }^{ 2 }-{ 1 }^{ 2 } } =2\sqrt { 4-1 } \).
3.
(i) பெர்னெளலி தேற்றமானது, முக்கியமாக தணியங்கி வாகனங்களில் கார்புரேட்டர் , வடிகட்டி பாம்புகள் , தெளிப்பான்கள் ஆகியவற்றை வடிவமைக்கப் பயன்படுகிறது.
(ii) உதாரணமாக கார்புரேட்டரில் குழாய்முனை எனப்படும் நுண்ணிய துளையின் வழியாக காற்றானது மிக வேகமாக உள்ளே வருகிறது.இந்நேர்வில் நுண்ணிய கழுத்துப் பகுதியில் அழுத்தம் குறைக்கப்பட்து, பெட்ரோல் அல்லது எரிபொருள் உள்ளிழுக்கப்பட்டவுடன் கலனில் பற்றவைப்புக்கு சரியான அளவில் காற்றும் எரிபொருளும் கலக்கப்படுகிறது.
4.
புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞர் கலிலியோ புவிக்கு அருகில் மேலிருந்து கீழ் விழும் பொருள்கள் அனைத்தும் புவியினை நோக்கி சம வீதத்தில் முடுக்கமடைகின்றன என கண்டறிந்தார்.
5.
கொடுக்கப்பட்ட பொருளின் வெப்பநிலை, T யிலிருந்து \(T+\triangle T\) ஆக உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவே "வெப்ப ஏற்புத்திறன்" என வரையறுக்கப்படுகிறது.
வெப்ப ஏற்புத்திறன் \(S=\frac { \triangle Q }{ \triangle T } \)
6.
1. இயக்கவியர்கொள்கையானது வாயு ஒன்றின் அழுத்தம் மற்றும் வெப்பநிலையை அதன் மூலக் கூறு இயக்கத்துடன் தொடர்பு படுத்துகிறது.
2. நியூட்டனின் இயந்திரவியலுடன் வெப்ப இயக்கவியலை இணைக்கிறது.
7.
எலக்ட்ரானின் நிறை m =9x 10-31kg
எலக்ட்ரானின் வட்டப் பாதையின் ஆரம்
r=0.53 Ao =0.53x 10-10m
எலக்ட்டரானின் திசை வேகம் v =2.2x 106ms-1
எலக்ட்ரானின் கோண உந்தம் L=Iω
எலக்ட்ரானின் நிறையை புள்ளி நிறையாக எடுத்துக் கொள்க.
இதன் நிலைமைத் திருப்புத்திறன் I=mr2
மேலும்\(\omega=\frac{v}{r}\) என்ற தொடர்பையும் பயன்படுத்தும்போது
கோண உந்தம் L=mr2\(\frac{v}{r}\)x =mvr
=9.1x 10-31x 2.2x 106x 0.53x 10-10
L = 10.61 × 10−35= 1.06 × 10−34 kg m2 s−1
8.
'a'=முடுக்கம் எடை நபரின் = W
W=mg=ma=m(g-a)
நபரின் எடையில் பகுதி மாற்றம்
=\(\frac{mg-W}{mg}\)
=\(1-\frac{W}{mg}=\frac{mg-(mg-ma)}{mg}\)
=\(\frac{a}{g}=\frac{5.0}{9.8}=0.51\)
சதவீத மாற்றம் =\(0.51\times100=51\%\).
9.
விசை \(\overrightarrow { F } =(2\hat { i } -\hat { j } +4\hat { k } )N\)
இடப்பெயர்ச்சி \(\overrightarrow { s } =4\hat { x } \)
செலுத்தும் விசையின் திசையில் இருப்பதால் \(\theta =0°\)
\(w=\vec { F } .\vec { S } =(2\hat { i } -\hat { j } +4\hat { k } ).(4\hat { i } )\)
= 8
விசையால் செய்யப்பட்ட வேலை w = 8 J.
10.
ஒழுங்கான வடிவம் மற்றும் சீரான நிறையைப் பெற்றிருக்கும் பொருட்களில் நிறைமையானது பொருளின் வடிவில் மையத்தில் அமைந்திருக்கும் (உ.ம்) வட்டம், கோளம்
11.
சராசரி தனிப்பிழை என்பது அனைத்து அளவுகளின் தனிப் பிழைகளின் எண் மதிப்புகளின் கூட்டுச்சராசரி ஆகும்.
\(\triangle a_{ m }=\frac { 1 }{ n } \overset { n }{ \underset { i=1 }{ \Sigma } } |\triangle a_{ i }|\)
am -உண்மையான மதிப்பு
Δam-சராசரி தனிப்பிழை எனில் அளவுகளின் எண் மதிப்புகள் (am+Δam) மற்றும் (am-Δam) இடையில் இருக்கும்.
12.
படத்தில் எதிர்க்குறி x, y மற்றும் 2 அச்சு திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்களைக் காட்டுகிறது. அவை முறையே \(-\widehat { i } ,-\widehat { j } \) மற்றும் \(-\widehat { k } \) ஆகும்.

13.
1. வெப்பநிலை உயரும்போது, சராசரி மோதலிடைத் தூரமும் அதிகரிக்கும்.ஏனெனில் வெப்பநிலை உயரும்போது ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி வேகமும் அதிகரிக்கும்.
2. சராசரி மோதலிடைத்தூரம் வாயுவின் அழுத்தம் குறையும்போது மற்றும் வாயு மூலக்கூறின் விட்டம் குறையும் போதும் அதிகரிக்கும்.
14.
தனி ஊசல் கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
நீளத்தின் விதி: கொடுக்கப்பட்ட புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பிற்கு, தனி ஊசலின் அலைவு நேரம் தனி ஊசலின் நீளத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவல் அமையும்.
\(T\propto =\sqrt { l } \)
முடுக்கத்தின் விதி: கொடுக்கப்பட்ட தனி ஊசலின் நீளம் மாறாதிருக்கும்போது ஊசலின் அலைவு நேரம் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவல் அமையும்.
\(T\propto =\frac { 1 }{ \sqrt { g } }\)
15.
வெப்பம் மற்றும் வேலை இவை வெப்ப இயக்கவியல் நிலை மாறிகள் அல்லது செயல்மாறிகள் ஆகும்.
16.
(a) y = x2 + 2 ∝ tx அலையைக் குறிக்கவில்லை,
(b) y = (x + vt)2 இது அலைச்சமன்பாட்டுடன் பொருந்துவதால் அலையைக் குறிக்கிறது.
17.
வரையறைப்படி,
\(K=\frac { \frac { F }{ A } }{ \frac { \Delta V }{ V } } =\frac { V }{ \Delta V } \)
\(K=\frac { { 10 }^{ 6 }\times 1 }{ 1.5\times { 10 }^{ -5 } } =6.67\times { 10 }^{ 10 }N{ m }^{ -2 }\)
18.
\(K.E.(r=\infty )=\frac { 1 }{ 2 } { Mv }_{ \infty }^{ 2 }\)
\({ V }_{ e }=\sqrt { 2g({ R }_{ E }+h) } =\sqrt { 2g({ R }_{ E }+\infty ) } \)
\(r=\infty \)
\({ v }_{ e }=\sqrt { { v }_{ \infty }^{ 2 }+2g{ R }_{ E } } \)
19.
வடகிழக்குத் திசையில் அலகு வெக்டர் \(=\frac{\hat{i}+\hat{j}}{|\hat{i}+\hat{j}|} \)
தென்கிழக்குத் திசையில் அலகு வெக்டர் \(=\frac{\hat{i}-\hat{j}}{|\hat{i}-\hat{j}|}\)
வடகிழக்குத் திசையில் அலகு வெக்டர் \(=\frac{-\hat{i}+\hat{j}}{|-\hat{i}+\hat{j}|} \)
\(|\hat{i}+\hat{j}| =\sqrt{1^2+1^2}=\sqrt{2} \)
\(|\hat{i}-\hat{j}| =\sqrt{2} \)
\(|-\breve{i}+\hat{j}| =\sqrt{2} \)
\(\mathrm{a} \Rightarrow \frac{5(\hat{i}+\hat{j})}{\sqrt{2}}+2 \hat{k} \)
\(\mathrm{b} \Rightarrow \frac{4(\hat{i}-\hat{j})}{\sqrt{2}}+3 \hat{k} \)
\(\mathrm{c} \Rightarrow \frac{2(-\hat{i}+\hat{j})}{\sqrt{2}}+4 \hat{k} \)
\(=-(\hat{i}+\hat{j}) \sqrt{2}+4 \hat{k}\)
20.
\(\vec{r} =3 \hat{i}+2 \hat{j} \)
அலகு வெக்டா் \(=\frac{\vec{r}}{\mid \vec{r}} \)
\(|\vec{r}| =\sqrt{3^2+2^2} \)
\(=\sqrt{13} \)
அலகு வெக்டர் \(=\frac{(3 \hat{i}+2 \hat{j})}{\sqrt{13}}\)
21.
x அச்சில் மோதலுக்குப்பின்
\(\mathrm{m}_1 \mathrm{u}_1 =m_1 v_1 \cos \theta_1+m_2 v_2 \cos \theta_2 \)
Y அச்சில்
\(0 =m_1 v_1 \sin \theta_1+m_2 v_2 \sin \theta_2 \)
\(m_1 v_1 \sin \theta =m_2 v_2 \sin \theta_2 \)
\(m_1 =m_2 \)
\(v \sin \theta =\frac{v}{2} \sin 90^{\circ} \)
\(\sin \theta =\frac{1}{2} \times 1=\frac{1}{2} \)
\(\therefore \theta =\sin ^{-1}\left(\frac{1}{2}\right)=30^{\circ}\)
\(\theta =26^{\circ}33'\)
22.
அதிர்வடையும் கம்பியின் அதிர்வெண் \(=v \propto \frac{1}{l} \sqrt{\frac{F}{m}}\)
அதிர்வெண்ணின் பரிமாணம் \(=\mathrm{M}^0 \mathrm{~L}^0 \mathrm{~T}^{-1}\)
நீளத்தின் பரிமாணம் \(=\mathrm{M}^0 \mathrm{LT}^0\)
விசையின் பரிமாணம் \(=\mathrm{MLT}^{-2}\)
நிறையின் பரிமாணம் \(=\mathrm{M}^1 \mathrm{~L}^0 \mathrm{~T}^0\)
அதிர்வெண் \(\gamma=K[F]^{\mathrm{x}}[\mathrm{m}]^{\mathrm{y}}[l]^{\mathrm{z}}\)
பரிமாணங்களின் மூலம்,
\(M^0 L^0 T^{-1}=\left[M L^{-2}\right]^x[M]^y[L]^z \)
\(M^0 L^0 T^{-1}=M^{x+y} L^{x+z} T^{-2 x}\)
படிகளை ஒப்பிட, x + y = 0
x + z = 0
-2x = -1
\(\therefore x =\frac{-1}{-2} \)
\(x =\frac{1}{2} \)
\(z =-x=-\frac{1}{2} \)
\(y =-x=-\frac{1}{2} \)
k = 1
\(\therefore \gamma =1[F]^{1 / 2}[\mathrm{~m}]^{-1 / 2}[\mathrm{~L}]^{-1 / 2} \)
\(\therefore \gamma \propto \frac{1}{l} \sqrt{\frac{F}{m}}\)
23.
நியூட்டனின் இரண்டாவது விதிப்படி, \(\overrightarrow { { F }_{ net } } =m\hat { a } \) இங்கு \(\overrightarrow { { F }_{ net } } =\overrightarrow { { F }_{ 1 } } +\overrightarrow { { F }_{ 2 } } \)
மேற்கண்ட சமன்பாடுகளின்படி \(\overrightarrow { a } =\frac { \overrightarrow { { F }_{ net } } }{ m } \)
\(\overrightarrow { { F }_{ net } } =\left( 5+3 \right) \hat { i } +\left( 8-4 \right) \hat { j } +\left( 7+3 \right) \hat { k } \)
\(\overrightarrow { { F }_{ net } } =8\hat { i } +4\hat { j } +10\hat { k } \)
\(\overrightarrow { a } =\left( \frac { 8 }{ 2 } \right) \hat { i } +\left( \frac { 4 }{ 2 } \right) \hat { j } +\left( \frac { 10 }{ 2 } \right) \hat { k } \)
\(\overrightarrow { a } =4\hat { i } +2\hat { j } +5\hat { k } \)
24.
விழுக்காட்டுப்பிழை = 0.04 × 100 = 4%
25.
கோணம் θ = 60˚
மரத்திற்கும் புள்ளிக்கும் இடையேயான தொலைவு (x) = 50 m
மரத்தின் உயரம் (h) = ?
முக்கோண முறைப்படி \(\tan\theta ={h \over x }\)
h = x tan θ
h = 50 × tan 60°
= 50 × 1.732
∴ மரத்தின் உயரம் h = 86.6 m
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards