11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
இயக்க விதிகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
5 kg மற்றும் 20 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் தொடக்கத்தில் ஓய்வுநிலையில் உள்ளன. 100 N விசை அப்பொருட்களின் மீது 5 வினாடிகளுக்குச் செலுத்தப்படுகிறது.
A) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் உந்தத்தின் மதிப்பு என்ன?
B) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் வேகத்தின் மதிப்பு என்ன?
2.
சக்கரம் பயன்படுத்தும் போது பொருளை நகர்த்துவது எளிதானதாகிறது. ஏன்?
3.
நிறை 20 kg உடைய ஒரு பொருளின் மீது விசை செயல்படுத்தப்பட வேண்டும்.4 ms-1 முடுக்கத்துடன் அது மேல் நோக்கி நகர்கிறது.வெற்றிடத்தில் விசையைக் கன்டுபிடி.
4.
இரு நிறைகள் m1=m2=0.5kg ஒரு கம்பியில் இணைக்கப்பட்டுள்ளது.அதுஉராய்வில்லாத வழுவழுப்பான நிறை கப்பியின் வழியே செல்கிறது.நிறைகளின் முடுக்கம் யாது?
5.
துப்பாக்கியை கையில் ஏந்தும் போது தோல் பட்டையின் உதவி தேவைப்படுகிறது ஏன்?
6.
மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் எதிர் செயல்வினை எவ்வாறு இருக்கும்.
7.
மையநோக்கு விசை என்றால் என்ன?
8.
நேர்கோட்டு உந்த அழிவன்மை விதியைக் கூறுக.
9.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிக்கான எ.கா மூன்றினை கூறுக.
10.
இயக்கம் பற்றிய அரிஸ்டாட்டிலின் கூற்று என்ன?
11.
சரிசமமான வளைவுச் சாலையில் கார் ஒன்று சறுக்குவதற்கான நிபந்தனை என்ன?
12.
உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?
13.
பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை குறைவதற் குப்பதிலாக அதிகரிப்பதன் காரணம் என்ன?
14.
கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?
15.
துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?
1.
ஒவ்வொரு பொருளும் பெரும் இறுதி உந்தம்
\(\Delta\)P=F\(\Delta\)t=100x5=500kg ms-1
5 kg நிறை கொண்ட பொருளின் இறுதிவேகம்
5 kg = 500 /5 = 100 m s–1
20 kg நிறை கொண்ட பொருளின் இறுதிவேகம்
20 kg =500 /20 = 25 m s–1
5 வினாடிகளுக்குப்பின்பு ஒவ்வொரு பொருளின் உந்தமும் சம்மதிப்பினைப் பெற்றுள்ளன. ஆனால் திசைவேகம் 5 வினாடிகளுக்குப் பின்பு ஒரே மதிப்பைப் பெறவில்லை. கனமான பொருள் இலேசான பொருளை விட குறைந்த வேகத்தையேப் பெற்றுள்ளன.
2.
சக்கரம் பரப்பில் இயங்கும் போது சக்கரத்தின் எப்புள்ளி பரப்பைத் தொடுகிறதோ, அப்புள்ளி எப்பொருள் பரப்பிற்கும் இடையே எவ்விதமான சார்பியக்கமும் இல்லை. எனவே, உராய்வு விசையும் மிகக் குறைவு. அதே நேரத்தில் பொருளொன்று சக்கரங்கள் இன்றி செல்லும் போது பொருளுக்கும் பரப்பிற்கும் இடையே ஒரு சார்பியக்கம் ஏற்படுகிறது. எனவே, அதிக உராய்வு விசை ஏற்படுகிறது. இதனால் பொருளை நகர்த்துவது கடினமாகும்.
3.
விசை F கீழ்நோக்கி செயல்பட வேண்டும்.ஏனென்றால் பொருள் மேல்நோக்கி நகருமெனில் அதன் முடுக்கம் g ஐ விட அதிகமாக இருக்கும்.
நியூட்டனின் 2ம் விதிப்படி
F+mg=ma
F=m(g+a) =20(9.8+4)
F=276N.
4.
\(a=\frac{(m_{1}-m_{2})}{(m_{1}+m_{2}}\times g\) [∴g➝acceleration due to gravity ]
=\(\frac{(0.5-0.5)}{0.5+0.5}\times9.8\)
=\(\frac{0}{1}\times 9.8\)
நிறைகளின் முடுக்கம்=0.
5.
ஏனெனில் துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் போது அதன் நிலைத் தன்மை வேறுபடுகிறது இதனை சரிசெய்யும் பொருட்டு நாம் தோள்பட்டையில் துப்பாக்கியை தாங்கிக் கொள்ளும்.
6.
புத்தகத்தின் எதிர் செயல்வினை புவியீர்ப்பு விசையின் திசையில் இருக்கும்.
7.
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் செயல்படும் மாறாத விசை மையநோக்கு விசை எனப்படும்.
8.
புறவிசைகளின் தாக்கம் சுழி எனில்,அமைப்பின் மொத்த உந்தம் மாறாது.
9.
1.துப்பாக்கிக் குண்டு வெளியேறும் போது துப்பாக்கி பின்னோக்கி இயங்குதல்.
2.படகிலிருந்து ஒருவர் கரைக்கு தாவும்போது படகு பின்னோக்கி தள்ளப்படுதல்.
3.பறவை பறக்கும்போது இறக்கையால் காற்றை கீழ்நோக்கி தள்ளும்போது அது காற்றால் மேல்நோக்கி தள்ளப்படுதல்.
10.
1.பொருள் தொடர்ந்து இயங்க ஒரு விசை தேவைப்படுகிறது.
2.அவரின் கூற்று பொதுப்புரிதலின் (common sense) அடிப்படையில் அமைந்திருந்தது.
3.அரிஸ்டாட்டில் இயக்கத்தோடு விசையினை இணைத்தார்.
11.
வாகனம் சறுக்குவதற்கான நிபந்தனை
\(\frac { { mv }^{ 2 } }{ 2 } >{ \mu }_{ s }mg\) அல்லது \({ \mu }_{ s }<\frac { { v }^{ 2 } }{ rg } \) (சறுக்குதல்)
வாகனம் வளைவதற்குத் தேவையான மையநோக்கு விசையை நிலைஉராய்வு விசையினால் கொடுக்க இயலவில்லை எனில்,வாகனம் சறுக்கத் தொடங்கும்.
12.
ஆம்.M > 1 உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்கும் போது நிலைமம் அதிகரிக்கும்.
13.
பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை அதிகரிப்பதன் காரணம் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை அதிகரிப்பதே ஆகும்.
14.
i) நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் எதிரான அதே அளவிலான வினை ஏற்படும்.
ii) இதன்படி உள்ளிருந்து நாம் காரினை தள்ளும் போது அதற்கு இணையான எதிர்வினையை அது ஏற்படுத்தும்.எனவே காரினை நாம் உள்ளிருந்து தள்ளும் போது எதிர்வினையின் காரணமாக நாம் பின்னோக்கி செல்கிறோம் கார் நிலைத் தன்மையை பெறுகிறது.
iii) ஆகையால் காரினை உள்ளிருந்து தள்ளுவதால் பயனில்லை.
15.
துகளின் திசைவேகம் =
\(\overrightarrow { v } =\frac { d\overrightarrow { r } }{ dt } =\frac { d }{ dt } \left( 3t \right) \hat { i } +\frac { d }{ dt } \left( { 5t }^{ 2 } \right) \hat { j } +\frac { d }{ dt } \left( 7 \right) \hat { k } \)
\(\frac { d\overrightarrow { r } }{ dt } =3\hat { i } +10t\hat { j } \)
துகளின் முடுக்கம்
\(\overrightarrow { a } =\frac { d\overrightarrow { v } }{ dt } =\frac { { d }^{ 2 }\overrightarrow { r } }{ { dt }^{ 2 } } =10\hat { j } \)
இங்கு, நேர்குறி y அச்சுத்திசையில் மட்டுமே துகள் முடுக்கமடையும். நியூட்டன் இரண்டாம் விதிப்படி நிகர விசையின் திசையும் நேர்குறி y அச்சின் திசையிலேயே அமையும். மேலும் இத்துகள் நேர்குறி x அச்சுத்திசையில் மாறாத் திசைவேகத்தைப் பெற்றுள்ளது. ஆனால் z அச்சுத்திசையில் எவ்வித திசைவேகத்தையும் பெறவில்லை. எனவே , x அல்லது z திசையில் எந்த நிகர விசையும் செயல்படவில்லை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards