11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
வாயுக்களின் இயக்கவியற் கொள்கை
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
300 k வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க.
2.
ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் விகிதத்திற்கான கோவையை வருவி
3.
இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.
4.
5.
இயல்பு வெப்பநிலையிலுள்ள (270C) ஓரணு வாயு மூலக்கூறுகள் மற்றும் ஈரணு வாயு மூலக்கூறுகளின் அளவுகள் முறையே \({ \mu }_{ 1 }\)மோல் மற்றும் \({ \mu }_{ 2 }\)மோல் ஆகும். இவ்வாயுக்கலவையின் வெப்பபரிமாற்றமில்லா அடுக்குறியீடு \(\gamma \)வின் மதிப்பைக் கணக்கிடுக.
6.
25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.
7.
இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் பாயில் விதியினை வருவி.
8.
சராசரி இயக்க ஆற்றல் மற்றும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?
9.
மாறா வெப்பநிலையில் கொடுக்கப்பட்ட வாயு மூலக்கூறின் மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வு வளைகோட்டின் பரப்பு பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.
\(PV\over kT \)
\(kT\over PV\)
\(P\over NkT \)
PV
10.
ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே SP மற்றும் SV எனில் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானது?
SP - SV= 28R
SP - SV = R /28
SP - SV= R /14
SP - SV= R
11.
நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?
இருமடங்காகும்
மாறாது
பாதியாக குறையும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
12.
வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்தது?
மோல்களின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை
வெப்பநிலையை மட்டும்
அழுத்தம் மற்றும் வெப்பநிலை
அழுத்தத்தை மட்டும்
13.
m நிறைகொண்ட பந்து ஒன்று u வேகத்துடன் x அச்சைபொருத்து 600 கோணத்தில் சென்று சுவரொன்றின் மீது மீட்சி மோதலை ஏற்படுத்துகிறது. x மற்றும் y திசையில் அப்பந்தின் உந்தமாறுபாடு என்ன?

Δpx = -mu, Δpy = 0
Δpx = -2mu, Δpy = 0
Δpx =0, Δpy = mu
Δpx = mu, Δpy = 0
1.
சமன்பாடு (9.6) இலிருந்து \(\lambda =\frac { 1 }{ \sqrt { 2 } \pi { nd }^{ 2 } } \)
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிலிருந்து நாம் எண் அடர்த்தி n ஐக் கணக்கிட வேண்டும்.
\( \lambda =\frac { N }{ V } =\frac { P }{ kT } =\frac { 101.3\times { 10 }^{ 3 } }{ 1.381\times { 10 }^{ -23 }\times 300 } \)
= 2.449× 1025 மூலக்கூறுகள்/மீ3
\( \lambda =\frac { 1 }{ \sqrt { 2 } \times \pi \times 2.449\times { 10 }^{ 25 }\times { \left( { 1.2\times 10 }^{ -10 } \right) }^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 15.65\times { 10 }^{ 5 } } \)
\(\lambda \) = 0.63 × 10−6 m
2.
ஒரு பேபால் நல்லியல்பு வாயு ஒன்றின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களுக்கிடையே உள்ள தொடர்பை, மேயர் தொடர்பு CP - CV = R கொடுக்கிறது.
ஆற்றல் சமபங்கீட்டு விதியைப் பயன்படுத்தி CP - CV மதிப்பையும் மேலும் அவற்றிற்கிடையேயான விகிதம் = γ = CP - CV யையும் கணக்கிடலாம்.
(γ -வெப்பப்பரிமாற்றமில்லா அடுக்குக்குறியீடு
1. ஓரணு மூலக்கூறு:
மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் = 3/2 kT
ஒருமோல் வாயுவின் மொத்த ஆற்றல் = 3/2 kT × NA = 3/2 RT
ஒருமோல் வாயுவின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் =

•மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் தகவு γ = CP / CV

2. ஈரணு மூலக்கூறு:
தாழ்வெப்பநிலையில் உள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் = 5/2 kT
ஒரு மோல் வாயுவின் மொத்த ஆற்றல்
= 5/2 kT × NA = 5/2 RT
ஒரு மோல் வாயுவின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
CV = dU / dT = [5/2RT ] ; CV = 5/2 R

உயர் வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் அகஆற்றல் = 7/2 RT

CV மற்றும் CP இன் மதிப்பானது ஓரணு மூலக்கூறுகளை விட, ஈரணு மூலக்கூறுகளுக்கு அதிகமாக உள்ளது.
ஓரணு வாயு மூலக்கூறுகளின் வெப்பநிலையை 1°C உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தை விட ஈரணு வாயு மூலக்கூறுகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படும்.

III மூவணு மூலக்கூறுகள்:
1. நேர்க்கோட்டிலமைந்த மூவணு மூலக்கூறு :
ஒரு மோல் மூலக்கூறின் அக ஆற்றல்

2. நேர்க்கோட்டில் அமையாத மூவணு மூலக்கூறு :
ஒரு மோல் மூவணு மூலக்கூறின் அக ஆற்றல் =

வாயுக்களின் இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில், பருமன் மற்றும் அழுத்தம் மாறா தன்வெப்ப ஏற்புத்திறன்கள் வெப்பநிலையில் சார்ந்ததல்ல.
3.
1. வெப்பநிலையில் உட்கருத்தை நுட்பமாக உணர்வதற்கு பின்வருமாறு மாற்றியமைக்க வேண்டும்.
\(P={1\over3}{N\over V}m\overline{v^2}\)
\(PV={1\over3}{N}m\overline{v^2}\)
2.நல்லியல்பு வாயுச் சமன்பாடு PV=Nkt யுடன் சமன்பாடு (1)ஐ ஒப்பிடும்போது பின்வரும் சமன்பாடு கிடைக்கும்
\(Nkt={1\over3}Nm \overline{v^2}\)
\(kt={1\over3}Nm \overline{v^2}\)
மேலே உள்ள சமன்பாட்டின் இருபுறமும் ஆல் பெருக்கும்போது, பின்வரும் சமன்பாடு கிடைக்கும்
சமன்பாடு (3) இன் வலதுப்பக்கமுள்ள பதம், மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றலைக் () குறிக்கிறது.
3. மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் வாயு மூலக்கூறு ஒன்றின் வெப்ப நிலையை தீர்மானிப்பது, அவ்வாயுவின் சராசரி இயக்க ஆற்றல் என்பதை சமன்பாடு (3)அல்லது (4)லிருந்து அறிந்து கொள்ளலாம். சமன்பாடு (4) என்பது வாயுக்களின் இயக்கவியர் கொள்கையிலிருந்து பெறப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாகும். அச்சமன்பாட்டிலிருந்து நாம் பின்வருவனவற்றை அறிந்து கொள்ளலாம்.
i) வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல், அவ்வாயுவின் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும். சமன்பாடு (9.9) பேரளவான உலகத்துடன், (வெப்பநிலை) மீறுண் உலகத்தை (வாயுமூலக்கூறுகளின் இயக்கம் தொடர்புபடுத்துகிறது.
ii. ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றல். வாயுவின் கெல்வின் வெப்பநிலையை மட்டுமே சார்ந்ததாகும். மூலக்கூறின் நிறையைச் சார்ந்ததல்ல. வேறு வகையில் கூறுவோமாயின் நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்பநிலையை, வெப்பநிலை மானியைக் கொண்டு அளவீடு செய்யும் அதே வேளையில், ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலையும் அம்மூலக்கூறுகளை நாம் கண்களால் பார்க்காமலேயே நம்மால் கணக்கீடு செய்ய இயலும்.
ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலையும், வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையால் பெருக்கும்போது, வாயுவின் அகஆற்றல் கிடைக்கும்.
4.
5.
ஒரு மோல் ஓரணுவாயு மூலக்கூறின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் \({ C }_{ V }=\frac { 3 }{ 2 } R { \mu }_{ 1 }\) மோல் வாயுவிற்கு,
\({ C }_{ V }=\frac { 3 }{ 2 } { \mu }_{ 1 }R\quad { C }_{ p }=\frac { 5 }{ 2 } { \mu }_{ 1 }R\)
ஒரு மோல் ஈரணு வாயு மூலக்கூறின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் \({ C }_{ V }=\frac { 5 }{ 2 } R { \mu }_{ 2 }\)மோல் வாயுவிற்கு,
\({ C }_{ V }=\frac { 5 }{ 2 } { \mu }_{ 2 }R\quad { C }_{ p }=\frac { 7 }{ 2 } { \mu }_{ 2 }R\)
வாயுக்கலவையின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
\({ C }_{ V }=\frac { 5 }{ 2 } { \mu }_{ 1 }R+=\frac { 5 }{ 2 } { \mu }_{ 2 }R\)
வாயுக்கலவையின் அழுத்தம் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
\({ C }_{ P }=\frac { 5 }{ 2 } { \mu }_{ 1 }R+=\frac { 7 }{ 2 } { \mu }_{ 2 }R\)
வெப்பபரிமாற்றமில்லா அடுக்குறியீடு
\(\gamma =\frac { { C }_{ P } }{ { C }_{ V } } =\frac { 5{ \mu }_{ 1 }+7{ \mu }_{ 2 } }{ 3{ \mu }_{ 1 }+5{ \mu }_{ 2 } } \)
6.
அறையின் பருமன் V=25.0m3
அறையின் வெப்பநிலை T=27oC=300K
அறையின் அழுத்தம் P=1 x 1.013 x 105 மதிப்பீடு
நல்லியல்பு வாயுக்கான அழுத்தம் P, பருமன் (v) தனி வெப்பநிலை (T) இதனை
PV=KB NT
\(\frac { 1.013\times { 10 }^{ 5 }\times 25 }{ 1.38\times { 10 }^{ -23 }\times 300 } \)
N = 6.11 x 1026 x 300
N = 6.1 x 1026 மூலக்கூறுகள்.
7.
பாயில் விதி: மாறாவெப்பநிலையில், சராசரி இடப்பெயர்வு இயக்கஆற்றல் ஒரு மாறிலியாகும். இதிலிருந்து PV=மாறிலி என அறியலாம்.
எனவே, மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு ஒன்றின் அழுத்தம் அதன் பருமனுக்கு எதிர்த்தகவில் இருக்கும்,இதுவே பாயில் விதியாகும்.
8.
சராசரி இயக்க ஆற்றல் அடர்த்தியில் அடிப்படையில் வாயுவின் அழுத்தத்தை பின்வருமாறு எழுதலாம்.
\(P=\frac { 1 }{ 3 } nm\overline { { v }^{ 2 } } =\frac { 1 }{ 3 } \rho \overline { { v }^{ 2 } } \).....(1)
இங்கு \(\rho =nm=\) நிறை அடர்த்தி (n என்பது எண்ணடர்த்தி என்பதை நினைவில் கொள்ளவும்)
சமன்பாடு (1) இன் வலது பக்கமுள்ள பதத்தை மட்டும் 2ஆல் பெருக்கி வகுக்குபோது
\(P=\frac { 2 }{ 3 } \left( \frac { \rho }{ 2 } \overline { { v }^{ 2 } } \right) \)...(2)
சமன்பாடு (2) இல் இருந்து, அழுத்தம் என்பது ஓரலகு பருமனுள்ள வாயுவின் சராசரி இயக்க ஆற்றலின் மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமம் என அறியலாம்.
9.
(a)
\(PV\over kT \)
10.
(b)
SP - SV = R /28
11.
(b)
மாறாது
12.
(a)
மோல்களின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை
13.
(a)
Δpx = -mu, Δpy = 0
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards