11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
வாயுக்களின் இயக்கவியற் கொள்கை
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
கோய் மற்றும் வீ னரின் (Gouy & Wiener) விளக்கம் யாது?
2.
இயக்கவியற்கொள்கையின் அவசியம் யாது?
3.
ஆவியாதலால் குளிர்வு நிகழ்வது ஏன்?
4.
வாயுவின் மாறா பருமனில் 1மோலுக்கான மொத்த சீரற்ற இயக்கி ஆற்றலை கம்=கணக்கிடுக.
5.
25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.
6.
2 x 103ms-1 வேகத்தில் இயங்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கொள்கலன் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டுள்ள்ளன. 4cm2 சுவரின் பரப்பை ஒரு வினாடிக்கு 1020 முறை இந்த ஆக்சிஜன் மூலக்கூறுகள் செங்குத்துத்தளத்துடன் 300 கோணத்தில் தாக்குகின்றன.எனில், அம்மூலக்கூறுகள் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தத்தினைக் காண்க. (ஒரு அணுவின் நிறை = 1.67 x 10-27kg)
7.
பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் யாது?
8.
சராசரி மோதலிடைதூரத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
9.
ஆற்றல் சமபங்கீட்டு விதியை கூறுக.
10.
சுதந்திர இயக்கக்கூறுகள் வரையறு.
11.
சராசரி இருமுடி மூலம் வேகம் () வரையறு? இச்சமன்பாட்டிலிருந்து நீவிர் அறிவன யாவை? அவற்றின் விளைவுகள்
12.
300 k வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க.
13.
பிரௌனியன் இயக்கத்தினை விளக்குக.
14.
மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மேன் பகிர்வுச் சார்பினை விரிவாக விளக்கவும்.
15.
இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.
16.
17.
பின்வரும் வாயுக்களில், எவ்வாறு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தை (vrms) பெற்றுள்ளது?
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஆக்சிஜன்
கார்பன் - டை - ஆக்ஸைடு
18.
கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?
f
\(f\over 2\)
\(f\over f +2\)
\(f+2\over f\)
19.
நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?
இருமடங்காகும்
மாறாது
பாதியாக குறையும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
20.
ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள A0C அறையின் வெப்பநிலை B அறையைவிட 4 குறைவாக உள்ளது. எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்?
அறை A
அறை B
இரண்டு அறைகளிலும் ஒரே அளவுள்ள காற்று இருக்கும்
கண்டறிய இயலாது
21.
22.
வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகளை விளக்குக?
1.
கோய் மற்றும் வீ னரின்பிரெளனியன் இயக்கத்திற்கான உரிய விளக்கத்தினை கொடுத்தனர். இதன்படி திரவப்பரப்பிலுள்ள துகள்களின் மீது அதனைச் சூழ்ந்துள்ள திரவ மூலக்கூறுகள் தொடர்ந்து மோதுவதால் அத்துகள்கள் ஒழுங்கற்ற இயக்கத்தை மேற்கொள்கின்றன.
2.
1. இயக்கவியர்கொள்கையானது வாயு ஒன்றின் அழுத்தம் மற்றும் வெப்பநிலையை அதன் மூலக் கூறு இயக்கத்துடன் தொடர்பு படுத்துகிறது.
2. நியூட்டனின் இயந்திரவியலுடன் வெப்ப இயக்கவியலை இணைக்கிறது.
3.
திரவப் பரப்பிலிருந்து வேகமாக இயங்கும் மூலக்கூறுகள் தப்பியோடுவதால் ஏற்படும் நிகழ்வு ஆவியாதல் என அனுமானிக்கப்படுகிறது.
எனவே ஆவியாதல் எஞ்சியுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் குறைவாக இருக்கும்
\(\frac { 1 }{ 2 } m \overline { { v }^{ 2 } } \propto T\)
ஆதலால் மீதமுள்ள திரவத்தின் வெப்பநிலை குறைவாக இருக்கும். இதனால் ஆவியாதலால் குளிர்வு ஏற்படுகிறது.
4.
வாயுவின் ஒரு மோலுக்கான இயக்க ஆற்றல்
\(\frac { 1 }{ 2 } M\overline { { v }^{ 2 } } =\frac { 3 }{ 2 } RT\)
\(R=NK\)
5.
அறையின் பருமன் V=25.0m3
அறையின் வெப்பநிலை T=27oC=300K
அறையின் அழுத்தம் P=1 x 1.013 x 105 மதிப்பீடு
நல்லியல்பு வாயுக்கான அழுத்தம் P, பருமன் (v) தனி வெப்பநிலை (T) இதனை
PV=KB NT
\(\frac { 1.013\times { 10 }^{ 5 }\times 25 }{ 1.38\times { 10 }^{ -23 }\times 300 } \)
N = 6.11 x 1026 x 300
N = 6.1 x 1026 மூலக்கூறுகள்.
6.
I அணுவின் நிறை =1.67 x 10-27 kg
ஆக்சிஜன் அணுவின் நிறை =1.67 x 10-27 kg
=26.72 x 10-7 kg
உந்தம் P =mv
=26.72 x 10-7x 8 x 2 x 103
=427.5 x 10-4 kgm s-1
ஆக்சிஜன் மூலக்கூறுகள் செங்குத்துத் தளத்துடன் 30o கோணத்தில் தாக்கும்போது
= 427.5 x 10-4x cos 30o
= 427.5 x 10-4x \({\sqrt 3\over 2}\)
= 370.2 x 10-4 kgm s-1
அழுத்தம் =\({F\over A}\)
\(={370.2\times 10^{-4}\over 4\times 10^{-4}}\)
P=92.4Nm-2
7.
இயக்கவியல் கொள்கையின்படி, திரவம் அல்லது வாயுவில் மிதந்து கொண்டிருக்கும் எந்த ஒரு துகளும் அனைத்து திசைகளிருந்தும் தொடர்ந்து தாக்கப்படும்.எனவே சராசரி மோதலிடைத்தூரம் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்படும். இதன் விளைவாக துகள்கள் ஒழுங்கற்ற மற்றும் குறுக்கு நெடுக்கான இயக்கத்தை மேற்கொள்ளும்.
8.
1. வெப்பநிலை உயரும்போது, சராசரி மோதலிடைத் தூரமும் அதிகரிக்கும்.ஏனெனில் வெப்பநிலை உயரும்போது ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி வேகமும் அதிகரிக்கும்.
2. சராசரி மோதலிடைத்தூரம் வாயுவின் அழுத்தம் குறையும்போது மற்றும் வாயு மூலக்கூறின் விட்டம் குறையும் போதும் அதிகரிக்கும்.
9.
இயக்கவியல் கொள்கையின்படி,T என்ற கெல்வின் வெப்பநிலையில், வெப்பச்சமநிலையிலுள்ள அமைப்பு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல், அவ்வமைப்பின் அனைத்து சுதந்திர இயக்கக்கூறுகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். எனவே ஒவ்வொரு சுதந்திர இயக்கக்கூறும் \(\frac { 1 }{ 2 } kT\) ஆற்றலைப்பெறும். இதுவே ஆற்றல் சமபங்கீட்டு விதி என்று அழைக்கப்படுகிறது.
10.
முப்பரிமாண வெளியிலுள்ள வெப்ப இயக்கவியல் அமைப்பு ஒன்றின் நிலை மற்றும் அமைப்பினை விவரிக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச சார்பற்ற ஆய அச்சுக்கூறுகளின் எண்ணிக்கையே சுதந்திர இயக்கக் கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
11.
அனைத்து மூலக்கூறுகளின் இருமுடி வேதங்களின் சராசரியின் இருமடிமூல மதிப்பு என இதனை வரையறுக்கலாம். இதை பின்வருமாறு எழுதலாம்.
vrms=\(\sqrt{\overline{v^ 2}}\)
சராசரி இருமுடி வேகம் \(\overline { { v }^{ 2 } } =\frac { 3KT }{ m } \)
சராசரி இருமுடிமூல வேகம்
vrms=\(\sqrt { \frac { 3KT }{ m } } =1.73\sqrt { \frac { KT }{ m } } \)...(1)
சமன்பாடு (1)இல் இருந்து பின்வருவனவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
1. சராசரி இருமுடி மூல வேகமானது கெல்வின் வெப்பநிலையில் இருமுடி மூலத்திற்கு நேர்த்தகவிலும், மூலக்கூறு நிலையின் இருமுடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும் இருக்கும். எனவே கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த நிலைகொண்ட மூலக்கூறுகளின் சராசரி வேகம், அதிக நிலை கொண்ட மூலக்கூறுகளின் சராசரி வேகம், அதிக நிலை கொண்ட மூலக்கூறுகளின் சராசரி வேகத்தைவிட அதிகமாக இருக்கும்.
எடுத்துக்காட்டு:ஒரே வெப்பநிலையில் இலேசான மூலக்கூறுகளான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்றவற்றின் சராசரி இருமுடி மூலத்திசைவேகம் (vrms) கனமான மூலக்கூறுகளான ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் (vrms)மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.
2.வெப்பநிலை உயரும்போது வாயுமூலக்கூறுகளின் சராசரி இருமடிமூல வேகமும் (vrms) அதிகரிக்கும். வாயு மாறிலி Rஐப் பயன்படுத்தி சமன்பாட்டினை பின்வருமாறு அமைக்கலாம் சமன்பாடு (1)லிருந்து
\({ v }_{ rms }=\sqrt { \frac { { 3N }_{ A }kT }{ { N }_{ A }m } } \)இங்கு \({ N }_{ A }\)என்பது அவகாட்ரோ எண் ஆகும்.
இங்கு\({ N }_{ A }k =R \) மற்றும் \({ N }_{ A }m =M \)(மூலக்கூறு நிறை )ஆகும்.
எனவே,சராசரி இருமுடி மூலவேகம் அல்லது rms வேகம் என்பது
\({ v }_{ rms }=\sqrt { \frac { 3RT }{ M } } \)
சராசரி இருமுடி மூல வேகத்தில் அடிப்படையில் பின்வருமாறு எழுதலாம்.
\(P=\frac { 1 }{ 3 } nm{ { v }^{ 2 } }_{ rms }\)ஏனெனில் \({ { v }^{ 2 } }_{ rms }=\overline { { v }^{ 2 } } \)
சராசரி இருமுடி மூல வேகம் (vrms) இயற்கையில் ஏற்படுத்தும் விளைவுகள்:
3.நிலவில் வளிமண்டல அற்ற நிலை:
நிலவின் குறைந்த ஈரப்புவிசையின் காரணமாக, நிலவுப் பரப்பில் உள்ள வாயுக்களின் சராசரி இருமுடி மூல வேகமானது அதன் விடுபடு வேகத்தைவிட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நிலவுப்பரப்பில் உள்ள அனைத்து வாயுக்களும் நிலவிலிருந்து வெளியேறி விடுகின்றன.
4. புவியின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் வாயுவற்ற நிலை:
ஹைட்ரஜன் வாயுவற்ற சராசரி இருமுடி மூல வேகமானது, நைட்ரஜனைவிட மிகவும் அதிகமானது. எனவே நைட்ரஜன் புவியின் வளிமண்டலத்திருந்து எளிதாகத் தப்பிச்சென்றுவிடும்
12.
சமன்பாடு (9.6) இலிருந்து \(\lambda =\frac { 1 }{ \sqrt { 2 } \pi { nd }^{ 2 } } \)
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிலிருந்து நாம் எண் அடர்த்தி n ஐக் கணக்கிட வேண்டும்.
\( \lambda =\frac { N }{ V } =\frac { P }{ kT } =\frac { 101.3\times { 10 }^{ 3 } }{ 1.381\times { 10 }^{ -23 }\times 300 } \)
= 2.449× 1025 மூலக்கூறுகள்/மீ3
\( \lambda =\frac { 1 }{ \sqrt { 2 } \times \pi \times 2.449\times { 10 }^{ 25 }\times { \left( { 1.2\times 10 }^{ -10 } \right) }^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 15.65\times { 10 }^{ 5 } } \)
\(\lambda \) = 0.63 × 10−6 m
13.
1.இராபர்ட் பிரெளன் என்ற தாவரவியல் அறிஞர் திரவப்பரப்பிலுள்ள மகரந்தத்துகள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒழுங்கற்று இயங்குகின்றன எனக் கண்டறிந்தார்
2.திரவப்பரப்பிலுள்ள இந்த மகரந்தத் துகள்களின் ஒழுங்கற்ற (குறுக்கு-நெடுக்கான)இயக்கம் பிரெளனியன் இயக்கம் எனப்படும். நிர்ப்பரப்பிலுள்ள தூசுத்துகள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை நாம் சாதாரணமாகக் காணலாம்.
3.இக்கண்டுபிடிப்பு நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது. முறையான ஆய்வுகளுக்குப் பின்பு, வீனர் மற்றும் ஃகோய் (Wiener and Gouy) என்ற இரு அறிஞர்கள் பிரெளனியன் இயக்கத்திற்கான உரிய விளக்கத்தினை கொடுத்தனர்.
4.இவ்விளக்கத்தின்படி திரவப்பரப்பிலுள்ள துகள்களின்மீது, அதனைச் சூழ்ந்துள்ள திரவ மூலக்கூறுகள் தொடர்ந்து மோதுவதால் அத்துகள்கள் ஒழுங்கற்ற இயக்கத்தை மேற்கொள்கின்றன.
5.1905 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் பிரெளனியன் இயக்கத்திற்கான முறையான கொள்கை விளக்கத்தைக் கொடுத்தார். இக்கொள்கையிலிருந்து மூலக்கூறு ஒன்றின் சராசரி அளவினைக் கணக்கிட்டார்.
6.இயக்கவியல் கொள்கையின்படி, திரவம் அல்லது வாயுவில் மிதந்து கொள்கையின்படி, திரவம் அல்லது வாயுவில் மிதந்து கொண்டிருக்கும் எந்த ஒரு துகளும் அனைத்து திசைகளிலிருந்தும் தொடர்ந்து தாக்கப்படும். எனவே சராசரி மோதலிடைத்தூரம் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்படும்.இதன் விளைவாக படத்தில் காட்டியுள்ளவாறு துகள்கள் ஒழுங்கற்ற மற்றும் குறுக்கு நெடுக்கான இயக்கத்தை மேற்கொள்ளும்.

பிரெளனியன் இயக்கத்தைப் பாதிக்கும் காரணிகள்:
வெப்பநிலை உயரும்போது பிரெளனியன் இயக்கமும் அதிகரிக்கும். திரவம் அல்லது வாயுத் துகள்களின் பருமன் அதிகரிக்கும்போதும், உயர் பாகியல் தன்மை மற்றும் அடர்த்தி காரணமாகவும் பிரெளனியன் இயக்கம் குறையும்.
14.
(i) வாயு மூலக்கூறுகள் ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மூலக்கூறும் மற்ற மூலக்கூறுகளுடன் மோதலுற்று அவற்றின் மேகங்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
(ii) .v முதல் v + dv என்ற வேக எல்லைகளுக்குள் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை மேக்ஸ்வெல்-போல்ட்ஸ்மேன் வேகப்பகிர்புச் சார்பினைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.
\({ N }_{ v }=4\pi N{ \left( \frac { m }{ 2\pi kT } \right) }^{ \frac { 3 }{ 2 } }{ v }^{ 2 }{ e }^{ -\frac { { mv }^{ 2 } }{ 2kT } }\)
வேகப்பகிர்வு சார்பின் வரைபடம் காட்டப்பட்டுள்ளது.
(iv) படத்திலிருந்து, கொடுக்கப்பட்ட கெல்வின் வெப்பநிலையில் குறைந்த வேகத்தைப் வெப்பநிலையில் குறைந்த வேகத்தைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை பரவளைய வடிவில் (v2) அதிகரித்து, மிகவும் சாத்தியமான வேகத்தை அடைந்தவுடன் அடுக்குகுறியீட்டு (exponentially) \({ e }^{ -\frac { { mv }^{ 2 } }{ 2kT } }\) மதிப்பில் குறையும் என்பதைத் தெளிவாக அறியலாம். மேலும் படத்தில் சராசரி இருமடிமூல வேகம் vrms சராசரி வேகம் v மற்றும் மிகவும் சாத்தியமான வேகம் Vmp ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கொடுக்கப்பட்ட மூன்று வேகங்களில் vrms பெரும மதிப்பைப் பெற்றுள்ளதையும் அறியலாம். உதாரணமாக 50 ms-1 முதல் 60 ms-1 வரை வேகமதிப்புகளைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்பதற்கு
\(\int _{ 50 }^{ 60 }{ 4\pi N } { \left( \frac { m }{ 2\pi kT } \right) }^{ \frac { 3 }{ 2 } }{ v }^{ 2 }{ e }^{ -\frac { { mv }^{ 2 } }{ 2kT } }dv =N \) (50 முதல் 60 ms-1) எனத் தொகைப்படுத்த வேண்டும்.
(v) பொதுவாக v யிலிருந்து v + dv வரை வேக மதிப்புகளைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை பின்வருமாறு வரையறை செய்யலாம்.
\(\int _{ v }^{ v+dv }{ 4\pi N } { \left( \frac { m }{ 2\pi kT } \right) }^{ \frac { 3 }{ 2 } }{ v }^{ 2 }{ e }^{ -\frac { { mv }^{ 2 } }{ 2kT } }dv=N(v \ to \ v+dv)\)
வாயு மூலக்கூறுகளின் செயல்பாட்டை இவ்வரைபடத்தின் அடிப்படையில் நம்மால் அனுமானிக்க இயலும்.
வரைபடத்திற்குக் கீழே உள்ள பரப்பு, அமைப்பிலுள்ள வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையைக் கொடுக்கும்.
படத்தில் இருவேறு வெப்பநிலைகளில் உள்ள வாயு மூலக்கூறுகளின் வேகப்பகிர்வு, வரைபட வடிவில் காட்டப்பட்டுள்ளது. கெல்வின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வளைகோட்டின் உச்சி வலதுபக்கத்தை நோக்கி நகர்கின்றது. இது ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி வேகமும் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. ஆனால் வரைபடத்தின் பரப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏனெனில் வரைபடத்தின் பரப்பு வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கைக்குச் சமமாகும்.
15.
1. வெப்பநிலையில் உட்கருத்தை நுட்பமாக உணர்வதற்கு பின்வருமாறு மாற்றியமைக்க வேண்டும்.
\(P={1\over3}{N\over V}m\overline{v^2}\)
\(PV={1\over3}{N}m\overline{v^2}\)
2.நல்லியல்பு வாயுச் சமன்பாடு PV=Nkt யுடன் சமன்பாடு (1)ஐ ஒப்பிடும்போது பின்வரும் சமன்பாடு கிடைக்கும்
\(Nkt={1\over3}Nm \overline{v^2}\)
\(kt={1\over3}Nm \overline{v^2}\)
மேலே உள்ள சமன்பாட்டின் இருபுறமும் ஆல் பெருக்கும்போது, பின்வரும் சமன்பாடு கிடைக்கும்
சமன்பாடு (3) இன் வலதுப்பக்கமுள்ள பதம், மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றலைக் () குறிக்கிறது.
3. மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் வாயு மூலக்கூறு ஒன்றின் வெப்ப நிலையை தீர்மானிப்பது, அவ்வாயுவின் சராசரி இயக்க ஆற்றல் என்பதை சமன்பாடு (3)அல்லது (4)லிருந்து அறிந்து கொள்ளலாம். சமன்பாடு (4) என்பது வாயுக்களின் இயக்கவியர் கொள்கையிலிருந்து பெறப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாகும். அச்சமன்பாட்டிலிருந்து நாம் பின்வருவனவற்றை அறிந்து கொள்ளலாம்.
i) வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல், அவ்வாயுவின் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும். சமன்பாடு (9.9) பேரளவான உலகத்துடன், (வெப்பநிலை) மீறுண் உலகத்தை (வாயுமூலக்கூறுகளின் இயக்கம் தொடர்புபடுத்துகிறது.
ii. ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றல். வாயுவின் கெல்வின் வெப்பநிலையை மட்டுமே சார்ந்ததாகும். மூலக்கூறின் நிறையைச் சார்ந்ததல்ல. வேறு வகையில் கூறுவோமாயின் நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்பநிலையை, வெப்பநிலை மானியைக் கொண்டு அளவீடு செய்யும் அதே வேளையில், ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலையும் அம்மூலக்கூறுகளை நாம் கண்களால் பார்க்காமலேயே நம்மால் கணக்கீடு செய்ய இயலும்.
ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலையும், வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையால் பெருக்கும்போது, வாயுவின் அகஆற்றல் கிடைக்கும்.
16.
17.
(d)
கார்பன் - டை - ஆக்ஸைடு
18.
(d)
\(f+2\over f\)
19.
(b)
மாறாது
20.
(a)
அறை A
21.
(c)
22.
1. எண்ணடர்த்தி :\((n ={N \over V })\)
எண்ணடர்த்தி அதிகரிக்கும்போது, வாயுவின் அழுத்தமும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக சைக்கிள் அல்லது காரின் சக்கரத்திற்கு காற்றை நிரப்பும்போது நாம் எண்ணடர்த்தியை அதிகரிக்கிறோம். அதனைத் தொடர்ந்து அழுத்தமும் அதிகரிக்கிறது.
2.வாயு மூலக்கூறின் நிறை:
வாயு மூலக்கூறு சுவரின் மீது செலுத்தும் உந்தத்தின் விளைவாக அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நிலையான வேகத்தில், அதிக நிறையுள்ள மூலக்கூறு அதிக உந்தத்தைக் கொடுக்கும்.எனவே வாயு மூலக்கூறின் நிறை அதிகரிக்கும்போது அழுத்தமும் அதிகரிக்கும்.
3.சராசரி இருமுடி வேகம்:
நிறையை மாறிலியாக எடுத்துக்கொண்டு வாயு மூலக்கூறின் வேகத்தை அதிகரித்தால் அதன் சராசரி வேகமும் அதிகரித்தால் அதன் சராசரி வேகமும் அதிகரிக்கும். இதன் பயனாக அழுத்தமும் அதிகரிக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards