11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
வாயுக்களின் இயக்கவியற் கொள்கை
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஐன்ஸ்டீன் மற்றும் ஜீன் பெரினின் சோதனை முடிவுகள் இயற்பியல் முக்கியத்துவம் வாய்ந்தவை ஏன்?
2.
விரல்களை நீர்ப்பரப்பில் வைக்கும்போது குறுக்கு நெடுக்கான இயக்கம் நடைபெறுவதில்லை ஏன்?
3.
\(V=\frac { 3 }{ 2 } NkT\) என்ற சமன்பாடு எக்காரணிகளை சார்ந்தது?
4.
வாயுவின் அக ஆற்றல் எவ்வாறு பெறுவாய்?
5.
இயக்கவியற்கொள்கை என்பது யாது?இது ஏன் பயன்படுத்தப்படுகிறது
6.
25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.
7.
2 மோல் ஆக்சிஜனும் 4 மோல் ஆர்கானும் சேர்ந்த வாயுக்கலவையின் கெல்வின் வெப்பநிலை T என்க. RT யின் மதிப்பில் அவ்வாயுக்கலவையின் அக ஆற்றலை காண்க. (இங்கு வாயு மூலக்கூறுகளின் அதிர்வை புறக்கணிக்கவும்)
8.
வாயுக்களின் வெப்ப இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் நிலவிற்கு வளிமண்டலம் இல்லை என நிரூபி. (இங்கு k = 1.38 x 10-23 JK-1, மற்றும் வெப்பநிலை T = 0oC = 273K).
9.
80°C வெப்பநிலை மற்றும் 5 x 10-10Nm-2 அழுத்தத்திலும் உள்ள வாயு ஒன்றின் ஓரலகு பருமனில் (1m3) உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க. (இங்கு போல்ட்ஸ்மென் மாறிலியின் மதிப்பு 1.38 x 10-23JK-1)
10.
தூயக்காற்றில் (78%) நைட்ரஜனும் (N2), (21%) ஆக்சிஜனும், (O2) உள்ளன. 200C வெப்பநிலையில் N2 ,மற்றும் O2 வின் சராசரி இருமுடி மூல வேகத்தை (Vrms) காண்க.
11.
பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் யாது?
12.
இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் பாயில் விதியினை வருவி.
13.
சராசரி இயக்க ஆற்றல் மற்றும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?
14.
வெப்பநிலையின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?
15.
அழுத்தத்தின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?
1.
ஏனெனில், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் இருப்பதற்கான நேரடிச் சான்றாக இவைகள் உள்ளன.
2.
நமது விரல்களின் நிறை நீர் மூலக்கூறுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம், எனவே மூலக்கூறு மோதல்களில் ஏற்படும் உந்தப்பரிமாற்றம் விரல்களை நகர்த்துவதற்கு போதுமானதல்ல.
3.
நல்லியல்பு வாயுவின் அக ஆற்றல் அதன் கெல்வின் வெப்பநிலையை மட்டுமே சார்ந்தது. அதன் அழுத்தம் மற்றும் பருமனைச் சார்ந்ததல்ல.
4.
ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலையும், வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையால் பெருக்கும்போது வாயுவின் அகஆற்றல் கிடைக்கும்.
5.
இயக்கவியற்கொள்கை சில அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது.ஏனெனில் இவ்வணுமானங்கள் கணக்கீடுகளை எளிமைப்படுத்தும். இவை மிகச் சரியாக இல்லை என்றாலும் இதன் அடிப்படையில் அமைந்த இயக்கவியற்கொள்கையை நாம் அனைத்து வாயுக்களுக்கும் பயன்படுத்த முடியும்.
6.
அறையின் பருமன் V=25.0m3
அறையின் வெப்பநிலை T=27oC=300K
அறையின் அழுத்தம் P=1 x 1.013 x 105 மதிப்பீடு
நல்லியல்பு வாயுக்கான அழுத்தம் P, பருமன் (v) தனி வெப்பநிலை (T) இதனை
PV=KB NT
\(\frac { 1.013\times { 10 }^{ 5 }\times 25 }{ 1.38\times { 10 }^{ -23 }\times 300 } \)
N = 6.11 x 1026 x 300
N = 6.1 x 1026 மூலக்கூறுகள்.
7.
\(v=\frac { { n }_{ 1 }{ f }_{ 1 } }{ 2 } RT+\frac { { n }_{ 2 }{ f }_{ 2 } }{ 2 } RT\)
f = தன்னிச்சையாக செயல்படுப்பனவற்றின் எண்ணிக்கை
f1= இரு அணுப்படி வாயுக்களுக்குரியது=5
f2=ஒரு அணுப்படி வாயுவிற்கானது =3
\(\therefore v=\frac { 2\times 5 }{ 2 } RT+\frac { 4\times 3 }{ 2 } RT\)
v=5RT+6RT
v=11RT
8.
சந்திரனில் வாயு மூலக்கூறுகளில் இருமுடி மூல சராசரி வேகம் (vrms)=?
\({1\over2}mv^2_{rms}={3\over2}kT\)
\(v_{rms}=\sqrt{3KT\over m}\)
போல்ட்ஸ்மேன் k=1.38 x 10-23 J/K
வெப்பநிலை T=0oC=273k
m=3.33 x 10-27 kg
vrms =\(\sqrt{3\times 1.38\times10^{-23}\times273\over 3.33 \times10^{-27}}\)
=18.422 x 102 (or) 1.842 x 103ms-1
vrms =1.842 x 103ms-1
9.
வாயுவின் வெப்பநிலை T=80°C =80+273=353 K
வாயுவின் அழுத்தம் P=5 x 10-10 Nm-2
போல்ட்ஸ்மேனின் மாறிலி k=1.38 x 10-23JK-1
வாயுவின் பருமன் V=1 m3
மூலக்கூறுகளின் எண்ணிக்கை n=?
n=\({PV\over kT}={5\times 10^{-10}\times 1\over 1.38\times 10^{-23}\times 353}\)
\(={5\times 10^{-10}\over 487\times 10^{-23}}\)
n=0.1026 x 1013 (or)1.02 x 1011
10.
நைட்ரஜனுக்கான் மோலார் நிறை m=0.0280 kg/mol
வெப்பநிலை T20oC=20+273=293 K
R=8.314 J/mol K
\(v_{rms}=\sqrt{3RT\over m}\)
\(=\sqrt{3\times8.31\times293\over 0.0280}=\sqrt{2610\times10^{2}}\)
= 511 m/s
ஆக்சிஜனுக்கான மோலார் நிறை M=0.0320 kg/mol.
\(v_{rms}=\sqrt{3\times8.31\times293\over 0.0320}=\sqrt{2280\times 10^2}\)
= 478m/s
11.
இயக்கவியல் கொள்கையின்படி, திரவம் அல்லது வாயுவில் மிதந்து கொண்டிருக்கும் எந்த ஒரு துகளும் அனைத்து திசைகளிருந்தும் தொடர்ந்து தாக்கப்படும்.எனவே சராசரி மோதலிடைத்தூரம் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்படும். இதன் விளைவாக துகள்கள் ஒழுங்கற்ற மற்றும் குறுக்கு நெடுக்கான இயக்கத்தை மேற்கொள்ளும்.
12.
பாயில் விதி: மாறாவெப்பநிலையில், சராசரி இடப்பெயர்வு இயக்கஆற்றல் ஒரு மாறிலியாகும். இதிலிருந்து PV=மாறிலி என அறியலாம்.
எனவே, மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு ஒன்றின் அழுத்தம் அதன் பருமனுக்கு எதிர்த்தகவில் இருக்கும்,இதுவே பாயில் விதியாகும்.
13.
சராசரி இயக்க ஆற்றல் அடர்த்தியில் அடிப்படையில் வாயுவின் அழுத்தத்தை பின்வருமாறு எழுதலாம்.
\(P=\frac { 1 }{ 3 } nm\overline { { v }^{ 2 } } =\frac { 1 }{ 3 } \rho \overline { { v }^{ 2 } } \).....(1)
இங்கு \(\rho =nm=\) நிறை அடர்த்தி (n என்பது எண்ணடர்த்தி என்பதை நினைவில் கொள்ளவும்)
சமன்பாடு (1) இன் வலது பக்கமுள்ள பதத்தை மட்டும் 2ஆல் பெருக்கி வகுக்குபோது
\(P=\frac { 2 }{ 3 } \left( \frac { \rho }{ 2 } \overline { { v }^{ 2 } } \right) \)...(2)
சமன்பாடு (2) இல் இருந்து, அழுத்தம் என்பது ஓரலகு பருமனுள்ள வாயுவின் சராசரி இயக்க ஆற்றலின் மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமம் என அறியலாம்.
14.
1.வாயு மூலக்கூறு ஒன்றின் வெப்ப நிலையை தீர்மானிப்பது, அவ்வாயுவின் சராசரி இயக்க ஆற்றல்.
2. வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல், அவ்வாயுவின் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
3.ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றல்,வாயுவின் கெல்வின் வெப்பநிலையை மட்டுமே சார்ந்ததாகும். மூலக்கூறின் நிறையைச் சார்ந்ததல்ல
15.
1. வாயு முலக்கூறு சுவரின்மீது மோதும்போது, ஒரு உந்தத்தை சுவரின் மீது செலுத்துகிறது.
2. இந்த உந்த மாற்றத்தினால் கொள்கலனின் சுவர் ஓரலகு பரப்பில் உணரும் விசை,சுவரின் மீது வாயுவால் ஏற்படும் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards