11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
இயக்க விதிகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
நியூட்டனின் இரண்டாவது விதி (F=Ma) அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா? காரணம் கூறு
2.
மையநோக்கு விசை என்றால் என்ன?
3.
தொகுபயன் விசை என்றால் என்ன?
4.
மைய விசைகள் என்றால் என்ன?
5.
மேசை ஒன்றின் மீது +1 இயற்பியல் தொகுதி 1 மற்றும் தொகுதி 2, +2 இயற்பியல் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 இவை வரிசையாக ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
a) ஒவ்வொரு புத்தகத்தின் மீதும் செயல்படும் விசைகளைக் காண்க.“தனித்த பொருள் விசை படங்கள்” அவற்றிற்கு வரைக .
b) ஒவ்வொரு புத்தகமும் மற்ற புத்தகங்கள் மீது தரும் விசைகளைக் கண்டுபிடி.
6.
உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?
7.
பனிக்கட்டி மீது நடக்கும் போது நெருக்கமாக அடி எடுத்து வைக்க வேண்டும் ஏன்?
8.
ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றுமா?
9.
கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?
10.
துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?
11.
ஸ்கேலர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக
12.
நிலைமக் குறிப்பாயம் என்றால் என்ன?
13.
போலி விசை என்றால் என்ன?
14.
ஒரு நியூட்டன் – வரையறு.
15.
புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரண்டாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளை ஆராய்க.
16.
விசையின் அடிப்படை வரையறையைத் தருவது_____
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் முதல் விதி
மேற்கண்ட அனைத்தும்
17.
மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்
18.
பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?
பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி
ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல
ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல
19.
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.
1
1 ஐ விடக் குறைவு
1 ஐ விட அதிகம்
மேற்கண்ட அனைத்தும்
20.
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
நிலைமமற்ற தன்மை
21.
நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.
22.
ஒரு மையவிசைகள் என்றால் என்ன? லாமியின் தேற்றத்தைக் கூறு.
1.
அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது.ஏனெனில் இரண்டாம் விதியானது உள்ளீட்டு நிலைமக் குறிப்பாயத்தில் இயங்கும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். நிலைமக் குறிப்பாயத்தில் இயங்காத பொருட்களுக்கு பொருந்தாது.
2.
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் செயல்படும் மாறாத விசை மையநோக்கு விசை எனப்படும்.
3.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விசைகள் ஒரே நேரத்தில் செயல்பட்டு ஏற்படுத்தும் விளைவை தனியொரு விசை ஏற்படுத்தினால் அவ்விசை தொகுபயன் விசை எனப்படும்.
4.
அனைத்து விசைகளின் கோடுகளும் ஒரு பொதுவானப் புள்ளியில் வெட்டினால் அந்த விசைத் தொகுதி மைய விசைகள் எனப்படும்.
5.
6.
ஆம்.M > 1 உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்கும் போது நிலைமம் அதிகரிக்கும்.
7.
i) பனிக்கட்டி மீது நடக்கும்போது சறுக்கலை தடுப்பதற்காக நாம் நெருக்கமாக அடி எடுத்து வைக்க வேண்டும்.
ii) இதனால் உறைவு விசை அதிகரித்து சறுக்காமல் நடக்க இயலும்.
8.
தனித்த விசை இயற்கையில் தோன்றாது. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின்படி ஒவ்வொரு விசைக்கு அதற்குச் சமமான எதிர் விசை நிகழும். எடுத்துக்காட்டாக A மற்றும் B என்ற பாறைகள் ஒன்றையொன்று விசையுடன் மோதினால், அவை சம விசையுடன் குறிப்பிட்ட தொலைவிற்கு பின் திசையில் செல்லும்.
9.
i) நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் எதிரான அதே அளவிலான வினை ஏற்படும்.
ii) இதன்படி உள்ளிருந்து நாம் காரினை தள்ளும் போது அதற்கு இணையான எதிர்வினையை அது ஏற்படுத்தும்.எனவே காரினை நாம் உள்ளிருந்து தள்ளும் போது எதிர்வினையின் காரணமாக நாம் பின்னோக்கி செல்கிறோம் கார் நிலைத் தன்மையை பெறுகிறது.
iii) ஆகையால் காரினை உள்ளிருந்து தள்ளுவதால் பயனில்லை.
10.
துகளின் திசைவேகம் =
\(\overrightarrow { v } =\frac { d\overrightarrow { r } }{ dt } =\frac { d }{ dt } \left( 3t \right) \hat { i } +\frac { d }{ dt } \left( { 5t }^{ 2 } \right) \hat { j } +\frac { d }{ dt } \left( 7 \right) \hat { k } \)
\(\frac { d\overrightarrow { r } }{ dt } =3\hat { i } +10t\hat { j } \)
துகளின் முடுக்கம்
\(\overrightarrow { a } =\frac { d\overrightarrow { v } }{ dt } =\frac { { d }^{ 2 }\overrightarrow { r } }{ { dt }^{ 2 } } =10\hat { j } \)
இங்கு, நேர்குறி y அச்சுத்திசையில் மட்டுமே துகள் முடுக்கமடையும். நியூட்டன் இரண்டாம் விதிப்படி நிகர விசையின் திசையும் நேர்குறி y அச்சின் திசையிலேயே அமையும். மேலும் இத்துகள் நேர்குறி x அச்சுத்திசையில் மாறாத் திசைவேகத்தைப் பெற்றுள்ளது. ஆனால் z அச்சுத்திசையில் எவ்வித திசைவேகத்தையும் பெறவில்லை. எனவே , x அல்லது z திசையில் எந்த நிகர விசையும் செயல்படவில்லை.
11.
(i) அளவிடுதல் என்பது அவற்றை வெளிப்படுத்த அளவு மட்டுமே தேவைப்படும் அளவுகளாகும்.
(ii) இயற்கணிதத்தின் எளிய விதிகளின்படி அளவிடல் பெருக்கப்பட்டு பெருக்கப்படலாம், ஆனால் அதை திசையன்களால் செய்ய முடியாது.
(iii) இரண்டு திசையன்களின் அளவிடுதல் தயாரிப்பு என்பது அவற்றின் அளவு மற்றும் அவற்றுக்கிடையேயான கோணத்தின் கொசைனின் தயாரிப்பு ஆகும்.
(iv) எடுத்துக்காட்டு- நிறை, தூரம், வேகம்.
12.
நிலைமக் குறிப்பாயம்
(i) எந்தக் குறிப்பாயம் ஓய்வுநிலையில் அல்லது நேர்க்கோட்டில் சீரான திசை வேகத்துடன் செல்கின்றதோ அது நிலைமக் குறிப்பாயம் எனப்படும்.
(ii) இது, நியூட்டன் இயக்க விதிகளுக்கு உட்படும்.
(iii) இது முடுக்கமடையாத குறிப்பாயம் எனப்படும்.
(iv) விழுகின்ற ஆப்பிளின் முடுக்கத்தைக் கணக்கிடும் போது பூமி நிலைமக் குறிப்பாயமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
(v) கோள்களின் இயக்கத்தை அறிவதற்கு சூரியன் நிலைமக் குறிப்பாயமாகக் கருதப்படுகின்றது.
எடுத்துக்காட்டு
ஒய்வில் உள்ள மின்தூக்கி, சீரான வேகத்தில் செல்லும் மின்தூக்கி மற்றும் நேர் சாலையில் மாறாத திசைவேகத்துடன் செல்லும் கார்.
13.
மையவிலக்கு என்பதன் பொருள் மையத்தை விட்டு வெளிநோக்கிச் செயல்படுவது என்பதாகும். சுழற்சிக் குறிப்பாயத்தைப் பொருத்து கல்லின் சுழற்சி இயக்கத்தை ஆய்வு செய்யும் போது மட்டும் மையவிலக்கு விசை கல்லின் மீது செயல்படுவதாகத் தோன்றும். இக்காரணத்தினால் தான் மையவிலக்கு விசையை ஒரு போலியான விசை என்று அழைக்கிறோம். இப்போலியான விசை எந்த மூலத்திலிருந்தும் தோன்றுவதில்லை இங்கு போலி விசை தோன்றுவதற்கான காரணம், நாம் கருதும் சுழற்சி குறிப்பாயம் ஒரு நிலைமமற்ற குறிப்பாயம் என்பதாலே ஆகும்.
14.
1 kg நிறையுடைய பொருளின் மீது ஒரு விசை செயல்பட்டு அந்த விசையின் திசையிலேயே 1 ms-2 முடுக்கத்கை ஏற்படுத்தினால், அவ்விசையின் அளவே ஒரு நியூட்டன் எனப்படும்.
15.
நிலைமக்குறிப்பாயமாகக் கருதப்படும் புவியைப் பொருத்து பொருளொன்று ஓய்வு நிலையில் உள்ளது எனக். அப்பொருளின் மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன அவை.
.jpg)
(i) எதிர்க்குறி y அச்சுதிசையில் செயல்படும் புவியீர்ப்பு விசை (mg)
(ii) நேரக்குறி y அச்சுதிசையில் செயல்படும் புவிப்பரப்பு செங்குத்துவிசை (N) பொருளின் விசைப்படம் பின்வருமாறு.
.jpg)
\(\overrightarrow { { F }_{ g } } =-mg\hat { j } \)
\(\overrightarrow { N } =N\hat { j } \)
தொகுபயன் விசை \(\overrightarrow { { F }_{ net } } =-mg\hat { j } +N\hat { j } \) ஆனால், பொருள் எவ்வித முடுக்கத்தையும் பெறவில்லை எனவே \(\overrightarrow { a } =0\)
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
\(\left( \overrightarrow { { F }_{ net } } =m\overrightarrow { a } \right) \)
இருபுறமும் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடும்போது
\(\left( -mg+N \right) \hat { j } =0\)
- mg + N = 0
N = mg
மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து நாம் அறிவது என்னவெனில், பொருள் ஓய்வு நிலையில் உள்ளபோது செங்குத்து விசையின் எண்மதிப்பும் புவியீர்ப்பு விசையின் எண்மதிப்பு ஒன்றுக்கொன்று சமமாகும்.
16.
(c)
நியூட்டனின் முதல் விதி
17.
(a)
அதிகரிக்கும்
18.
(c)
ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
19.
(c)
1 ஐ விட அதிகம்
20.
(a)
திசையில் நிலைமம்
21.
நியூட்டன் விதிகள்:
(1) ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை ஒன்று செயல்படாதவரை, அது தனது ஓய்வு நிலையிலோ அல்லது மாறாத் திசைவேகத்திலுள்ள சீரான இயக்க நிலையிலோ தொடா்ந்து இருக்கும்.
(2) ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது அந்தப் பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு சமமாகும்.
(3) எந்தவொரு செயல் விசைக்கும் சமமான எதிர் செயல்விசை உண்டு.
விளக்கம்:
(1) நியூட்டன் விதிகள் வெக்டா் விதிகளாகும். \(\overrightarrow{\mathrm{F}}=\mathrm{ma}\) என்ற சமன்பாட்டை, கார்டீசியன் ஆயக்கூறுகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
\(F_x \hat{i}+F_y \hat{j}+F_z \hat{k}=m a_x \hat{i}+m a_y \hat{j}+m a_z \hat{k}\)
இருபுறமும் ஒப்பிட,
\(F_x=m a_x \)
\(F_y=m a_y \)
\(F_z=m a_z\)
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில், y திசையில் செயல்படும் வினை, x திசையில் ஏற்படும் முடுக்கத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதே போன்று Fz ஆனது ay மற்றும் ax ஐ எவ்விதத்திலும் பாதிக்காது.
(2) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (t), பொருள் அடையும் முடுக்கம், அதே நேரத்தில் அப்பொருளின் மீது செயல்படுமு வினையினை மட்டுமே சார்ந்தது. இதனை இவ்வாறு எழுதலாம்.
\(\overrightarrow{\mathrm{F}}(\mathrm{t})=\mathrm{ma}(\mathrm{t})\)
பொருளின் முடுக்கம். கடந்தகால விசையைச் சார்ந்ததல்ல. எடுக்துக்காட்டாக. பந்து வீச்சாளரால் வீசப்பட்ட பந்து, அவரின் கரத்தை விட்டு விடுபட்ட பின்பு பந்து, புவியீர்ப்பு விசை மற்றும் காற்றின் உராய்வுவிசை இவைகளை மட்டுமே உணரும். பந்தின் முடுக்கம் அது எவ்வளவு வேகத்தில் வீசப்பட்டது என்பகை பொருத்து அமையாது.
(3) பொதுவாக பொருளின் இயக்கம் விசையின் திசையிலிருந்து மாறுபட்டு அமையலாம்.
(a) விசையும் இயக்கமும் ஒரே திசையில் அமைதல்.
(எ.கா.) மரத்திலிருந்து கீழே விழும் பழத்தின் இயக்கம்.
(b) விசையும் இயக்கமும் வெவ்வேறு (செங்குத்து) திசைகளில் அமைதல்.
(எ.கா.) நிலா புவியினை நோக்கி ஒரு விசையை உணா்கிறது. ஆனால் நிலா புவியை ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
(c) விசையும் இயக்கமும் எதிரெதிர் திசையில் அமைதல்
(எ.கா.) பொருளை. புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி எறிதல்.
(d) சுழிநிகர விசையுடன் பொருளின் இயக்கம் அமைதல்.
(எ.கா.) மழைத்துளி மாறாத்திசைவேகத்துடன் தரையில் விழுதல்.
(4) ஒரு பொருளின் மீது பல்வேறு விசைகள், \(\vec{F}_1, \vec{F}_2, \vec{F}_3 \ldots \ldots . \vec{F}_n\) செயல்படும் போது, நிகரவிசை \(\left(\vec{F}_{n e t}\right)\), தனித்தனி வெக்டா் கூடுதலுக்குச் சமம்.
\(\vec{F}_{\text {net }}=\vec{F}_1, \vec{F}_2, \vec{F}_{3 \ldots} \vec{F}_n\)
(5) நியூட்டனின் இரண்டாம் விதியை பொருளின் இடப்பெயர்ச்சி வெக்டரின் இரண்டாம்படி வகைக்கெழு வடிவத்திலும் எழுதலாம்.
\(\vec{F}=m \frac{d^2 \vec{r}}{d t^2}\)
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில், எப்பொழுதெல்லாம் இடப்பெயர்ச்சி வெக்டரின் இரண்டாம் வகைக்கெழு சுழியல்லாத மதிப்பினை பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் பொருளின் மீது விசை செயல்படுகிறது.
(6) பொருளின் மீது எவ்விதமான விசையும் செயல்படாத நிலையில் நியூட்டனின் இரண்டாம் விதி \(m=\frac{d \vec{v}}{d t}=0\).. அதாவது பொருள் மாறாத் தினைவேகத்துடன் இயங்குகிறது என்று நமக்கு உணர்த்துகிறது. நியூட்டனின் இரண்டாம் விதி, முதல் விதியோடு இயல்பாக பொருந்துவதை நாம் உணரலாம். இருப்பினம் அவை இரண்டும் ஒன்றையொன்று சாராத தனித்தனி விதிகளாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றை தருவிக்க இயலாது.
(7) நியூட்டனின் இரண்டாம் விதி காரணம் மற்றும் விளைவு வகையைச் சார்ந்தது. விசை ஒரு காரணம் எனில் முடுக்கம் அதற்கான விளைவு ஆகும். எனவே விதியின் சரியான வடிவம் \(m \vec{a}=\vec{F}.\)
22.
பல்வேறு விசைகள் ஒரே புள்ளியில் சந்திக்குமானால் அவ்விசைகளை ஒருமைய விசைகள் என்று அழைக்கலாம். படம் ஒருமைய விசைகளைக் காட்டுகிறது. ஒருமைய விசைகள், ஒரே தளத்தில் அமைய வேண்டிய அவசியமில்லை. மாறாக அவை ஒரேதளத்தில் அமைந்தால் அவ்விசைகளை ஒருமைய மற்றும் ஒருதள விசைகள் என்று அழைக்கலாம்.
லாடியின் தேற்றம்
லாமி தேற்றத்தின்படி, சமநிலையில் இருக்கும் மூன்று ஒருதள மற்றும் ஒருமைய விசைகள் கொண்ட அமைப்பில், ஒவ்வொரு விசையின் எண் மதிப்பும், மற்ற இரண்டு விசைகளுக்கிடைப்பட்ட கோணத்தின் சைன் மதிப்பிற்கு நேர்த்தகவில் இருக்கும். இம்மூன்று விசைகளுக்கான தகவுமாறிலி சமமாகும்.
படத்தில் காட்டியுள்ளபடி \(\vec { F1 } ,\vec { F2 } \) மற்றும் \(\vec { F3 } \) என்ற மூன்று ஒரு தள மற்றும் ஒரு மைய விசைகள்ளி என்ற புள்ளியில்செயல்பட்டு அப்புள்ளியை சமநிலையில் வைக்கின்றன என்க. லாமியின் தேற்றப்படி
\(\left|\vec{F}_3\right| \propto \sin \alpha \)
\(\left|\vec{F}_2\right| \propto \sin \beta \)
\(\left|\vec{F}_3\right| \propto \sin \gamma\)
எனவே, \(\frac{\left|\vec{F}_1\right|}{\sin \alpha}=\frac{\left|\vec{F}_2\right|}{\sin \beta}=\frac{\left|\vec{F}_3\right|}{\sin \gamma}\) ....(1)
விசைகள் செயல்பட்டு, ஓய்வுச் சமநிலையில் உள்ள பொருள்களை பகுப்பாய்வு செய்வதில், லாமியின் தேற்றம் மிக முக்கியமாகப் பயன்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards