11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 08/10/2019
இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)
2.
பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை ms1 இல் மாற்றுக.
3.
100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s.
4.
இயற்பியலின் முக்கியத்துவம் யாது?
5.
இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையில் இருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது?
6.
தொழில் நுட்பவியல் என்பது யாது? இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
7.
ஒரு இயற்பியல் அளவின் பரிமாணங்கள் என்றால் என்ன?
8.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?
9.
முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக்க.
10.
ஒரு கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு (100 ± 5) V மற்றும் அதன் வழியே பாயும் மின்னோட்டம் (10 ± 0.2) A எனில். அக்கம்பியின் மின்தடையைக் காண்க.
1.
ஆற்றலானது நிறை மற்றும் ஒளியின் திசைவேகத்தைப் பொறுத்தது எனில்
E \(\alpha \) ma cb
E = kma cb இங்கு k என்பது மாறிலி
ஆற்றலின் பரிமாண வாய்ப்பாடு E = [ML2 T2]
நிறையின் பரிமாண வாய்ப்படு = [M]
திசைவேகத்தின் பரிமாண வாய்ப்பாடு
c = [LT-1]
பரிமாண மதிப்புகளை சமன்பாட்டில் பிரதியிட
[ML2T2] = K [M]a [LT 1]b
அடுக்குகளை இருபுறமும் சமன்செய்ய,
a = 1
b = 2
E = k.mc2
இங்குமாறிலி k = 1
E = mc2
இதுவே நிறை ஆற்றல் சமன்பாடாகும்.
2.
n1 = 72 kmh-1 n2 = ?
L1 = 1 km L2 = 1m
T1 = 1h T2 = 1s
\({ n }_{ 2 }={ n }_{ 1 }{ \left[ \frac { { L }_{ 1 } }{ { L }_{ 2 } } \right] }^{ a }{ \left[ \frac { { T }_{ 1 } }{ { T }_{ 2 } } \right] }^{ 6 }\)
திசைவேகத்தின் பரிமாண வாய்ப்பாடு
[M0 L T1] = [L T1]
a = 1 b = -1
\({ n }_{ 2 }=72{ \left[ \frac { 1km }{ 1m } \right] }^{ 1 }{ \left[ \frac { 1h }{ 1s } \right] }^{ 1 }\)
\({ n }_{ 2 }=72{ \left[ \frac { 1000m }{ 1m } \right] }^{ 1 }{ \left[ \frac { 3600s }{ 1s } \right] }^{ 1 }\)
= 72 \(\times\) 1000 \(\times\) 1/3600 = 20 m s-1
72 km h-1 = 20 m s-1
3.
மனிதனின் வயது = 100 வருடங்கள்
100 வருடத்தில் 76 சாதாரண ஆண்டுகளும் 24 லீப் ஆண்டுகளும் உள்ளன.
மொத்த நாட்கள் = (76 \(\times\)365) + (24\(\times\)366)
= 36524 நாட்கள்
வினாடிகளின் எண்ணிக்கை
= 36524 \(\times\) 24 \(\times\) 3600
= 3.155 \(\times\) 109 நொடிகள்
துடிப்புகளின் எண்ணிக்கை
\(=\frac { 3.155\times 10^{ 9 } }{ 0.8 } =3.94\times { 10 }^{ 9 }\)
4.
(i) எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களை உள்ளடக்கி மீச்சிறு அளவுகள் [1018s to 10-22s] முதல் வானியல் நிகழ்வுகள் போன்ற மிகப் பெரிய அளவுகள் 1055 kg முதல் 9.11 x 10-31 kg வரை இயற்பியல் எடுத்துரைக்கிறது.
(ii) சில அடிப்படை கருத்துக்கள் மற்றும் விதிகள் வேறுபட்ட பல இயற்பியல் நிகழ்வுகளை விளக்குவதாக உள்ளன.
(iii) இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டு பலவகை பயன்பாட்டுக் கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன.
(உ.ம்) (1) ரோபோக்களின் பயன்
(2) நிலவு மற்றும் அருகில் உள்ள கோள்களுக்கான பயணத்தை பூமியில் இருந்து கட்டுப்படுத்துவது
(3) உடல் நல அறிவியலில் பயன்படும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் போன்றவை
(iv) இயற்கையான உண்மையான இரகசியங்களை வெளிப்படுத்தக்கூடிய புதிய சவால் விடும் செயல்முறைகளை பயன்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள அறிவியல் கோட்பாடுகளின் உண்மை நிலையை உறுதிப்படுத்துதல்.
(v) இயற்கையின் நிகழ்வுகளுக்குப்பின் உள்ள அறிவியலைநன்கு ஆய்ந்து புரிந்து கொள்ளல்.
(vi) தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளுக்கு அடிப்படையாக இயற்பியல் விளங்குகிறது.
5.
1.இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையில் இருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு மாற்றுதல்.
2.இந்த முறையானது ஓர் அளவின் எண் மதிப்பையும் (n) அதன் அலகையும் (u) பெருக்கக் கிடைப்பது ஒரு மாறிலி என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது.
அதாவது n[u] =மாறிலி அல்லது n1u1=n2u2
ஓர் இயற்பியல் அளவானது நிறையின் 'a' பரிமாணத்தையும் நீளத்தின் 'b' பரிமாணத் தினையும், காலத்தின் 'c' பரிமாணத்தையும் பெற்றுள்ளதாக கொள்வோம்.
3.ஓர் அலகிடும் முறையின் அடிப்படை அலகுகள். M1,L1மற்றும் T1 எனவும் மற்றொரு அலகிடும் முறையின் அடிப்படை அலகுகள் முறையே M2,L2 மற்றும் T2 எனவும் கொண்டால்,
\(n_1[M^a_1L^b_1T^c_1]=n_2[M^a_2L^b_2T^c_2]\)
6.
1.இயற்பியலின் கோட்பாடுகளை நடைமுறையில் பயன்படுத்துவதே தொழில் நுட்பமாகும்.
2.பல்வேறு துறைகளில் பயனுள்ள பொருட்களை கண்டுபிடிக்கவும் அவற்றைத் தயாரிக்கவும் மற்றும் நடைமுறைப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் அறிவுத் திறனைப் பயன்படுத்துவதே தொழில் நுட்பவியலாகும்.
3.எனவே, நம் சமுதாயத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
4. மின்னோட்டவியல் மற்றும் காந்தவியலின் அடிப்படை விதிகளின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட கம்பியில்லா தொலைத் தொடர்பு முறை உலகத்தைச் சுருக்கி மிக நீண்ட தொலைவிற்கான மிகச்சிறந்த தொடர்பை ஏற்படுத்துகிறது.
5.விண்வெளியில் (space)நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் தொலைத் தொடர்பில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்குகின்றன.
6.நுண் எலக்ட்ரானியல் (Microlectroncs)லேசர் (Laser),கணினி (Computer),மீக்கடத்தி (Super Conductor )மற்றும் அணுக்கரு ஆற்றல் ஆகியவை மனிதனின் சிந்தனையையும், வாழ்க்கை முறையையும் முழுமையாக மாற்றியுள்ளன.
7.
இயற்பியல் அளவின் பரிணாமத்தை பெறுவதற்காக அடிப்படை அளவுகளின் பரிணாமங்களின் உயர்த்தப்பட்ட படிகள் அந்த இயற்பியல் ஆல்வின் பரிணாமங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டாக

எனவே திசைவேகத்தின் பரிமாணம், நிறையின் சுழி பரிமாணத்தினையும், நிலத்தின் l பரிமாணத்தையும் காலத்தின் -l பரிமாணத்தையும் கொண்டது.
8.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள்:
(i) எண்கள் TT, e (ஆய்லா் எண்) போன்ற பரிமாணமற்ற மாறிலிகளின் மதிப்பை இம்முறையின் மூலம் பெற முடியாது.
(ii) கொடுக்கப்பட்டுள்ள அளவு வெக்டா் அளவா? அல்லது ஸ்கேலா் அளவா? என்பதை இம்முறை மூலம் தீா்மானிக்க முடியாது.
(iii) திரிகோணமிதி, அடுக்குக்குறி மற்றும் மடக்கை சாா்புகள் உள்ளடங்கிய சமன்பாடுகளின் தொடா்புகளைக் கண்டறிய இம்முறையில் இயலாது.
(iv) மூன்றுக்கு மேற்பட்ட இயற்பியல் அளவுகள் உள்ளடங்கிய சமன்பாடுகளுக்கு இம்முறையைப் பயன்படுத்த இயலாது.
(v) இம்முறையில் ஒரு சமன்பாடு பரிமாணமுறையில் சரியானதா, என்றே மெய்ப்பிக்க முடியும் அதன் உண்மையான சமன்பாட்டைக் கண்டறிய முடியாது.
(vi) எடுத்துக்காட்டாக, s = ut + 1/3 at2 என்பது பரிமாண முறைப்படி சரி. ஆனால் உண்மையான சமன்பாடு s = ut + 1/2 at2 ஆகும்.
9.
| வ.எண் | விதிகள் | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| 1. | சுழியற்ற அணைத்து எண்களும் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். | 1342 ஆனது நான்கு முக்கிய எண்ணுருக்களை கொண்டது |
| 2. | சுழியற்ற இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும் | 2008 ஆனது நான்கு முக்கிய எண்ணுருக்களை கொண்டது. |
| 3. | சுழியற்ற எண்களுக்கு வலது புறமும், ஆனால் தசம புள்ளிக்கு இடது புறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். | 30700 ஆனது ஐந்து முக்கிய எண்ணுருக்களை கொண்டது |
| 4. | a) தசம புள்ளி அற்ற ஒரு எண்ணில் இறுதியாக வரும் சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகாது b) அலகுடன் எழுதப்படும் இயற்பியல் அளவீடுகளில் வரும் எல்லா சுழிகளும் முக்கிய எண்ணுருக்களே. |
அ) 30700 ஆனது மூன்று முக்கிய எண்ணுருக்கள் கொண்டது ஆ) 30700 m ஆனது ஐந்து முக்கிய எண்ணுருக்கள் கொண்டது. |
| 5. | ஒன்றைவிடக் குறைவான தசம எண்ணில், தசமபுள்ளிக்கு வலது புறமும் ஆனால் முதல் சுழியற்ற எண்ணுக்கு இடது புறமும் வரும் சுழிகள் முக்கிய எண்ணுருக்களைக் ஆகாது | 0.00345 ஆனது மூன்று எண்ணுருக்களைக் கொண்டது |
| 6. | தசமபுள்ளிக்கு வலதுபுறம் உள்ள சுழிகளும் தசம எண்ணில் சுழியற்ற எண்ணின் வலதுபுறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். | 40.00 முக்கிய எண்ணுறு நான்கு கொண்டது 0.030400 முக்கிய எண்ணுறு ஐந்து கொண்டது |
| 7. | முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை பொருத்தது அல்ல | 1.53 cm , 0.0153 m 0.0000153 km ஆகியவை மூன்று முக்கிய எண்ணுரு கொண்டது. |
10.
மின்னழுத்தம் V= (100 ± 5) V
மின்னோட்டம் I = (10 ± 0.2) A
மின்தடை R = ?
ஓமின் விதிப்படி \(R={V\over I}\)
\(={100\over 10}=10Ω\)
\({ΔR\over R}=\left({ΔV \over V}+{ΔI\over I}\right)\)
\(ΔR=\left({ΔV\over V}+{ΔI\over I}\right)R\)
\(=\left({5\over 100}+{0.2\over 10}\right)\times10\)
= (0.05 + 0.02) × 10
= 0.07 × 10 = 0.7
மின்தடை R = (10 ± 0.7) Ω
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards