11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
அலைவுகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.
\(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)
\(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)
\(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)
\(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)
2.
தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 1/3 மடங்காக குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?
1/5
2/3
1/6
1/9
3.
ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும்போது அதன் அலைவுநேரம்_______.
ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்
ஆரம்பத்தில் குறைந்து பிறகு அதிகரிக்கும்
தொடர்ந்து அதிகரிக்கும்
தொடர்ந்து குறையும்
4.
ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.
5/6
11/10
6/5
5/4
5.
தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______
நீள்வட்டம்
வட்டம்
பரவளையம்
நேர்கோடு
6.
திணிப்பு அதிர்வுகளை வரையறு. எடுத்துக்காட்டு தருக
7.
தடையுறு அலைவுகளை விளக்குக. எடுத்துக்காட்டு தருக.
8.
கட்டற்ற அலைவுகள் என்றால் என்ன?
9.
சுருள்வில்லின் செங்குத்து அலைவுகளை விவரி.
10.
11.
சுருள்வில் தராசு 0.25 m நீளமும் 0 முதல் 25 kg வரை நிறையை அளவிடும் வகையிலும் அமைக்கப்படடுள்ளது. இச்சுருள்வில் தராசானது 11.5 ms-2 ஈரப்பு முடுக்கம் கொண்ட X என்ற நாம் அறிந்திராத கோள் ஒன்றில் எடுததுக் கொள்ளப்படுகிறது. M kg நிறை கொண்ட ஒரு பொருள் சுருள் வில்லில் தராசில் தொங்க விடப்படும் பொழுது 0.50-s அலைவுக்காலத்துடன் அலைவுறுகிறது. பொருளின் மீது செயல்படும் ஈரப்பியல் விசையை கணக்கிடுக.
12.
ஒருபரிமாண இயக்கத்திற்கான இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றல் இவற்றின் சமன்பாடுகளை நேர்கோட்டு உந்தத்தை கொண்டு எழுதுக.
13.
ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.
1.
(a)
\(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)
2.
(d)
1/9
3.
(a)
ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்
4.
(c)
6/5
5.
(d)
நேர்கோடு
6.
திணிப்பு அதிர்வுகளில், பொருளானது ஆரம்பத்தில் இயல்பு அதிர்வெண்ணில் அதிர்வுறும் பின்னர் புற சீரழிவு விசையின் காரணமாக புற சீரலைவு விசையின் அதிர்வெண்ணில் அதிர்வுறும். இத்தகைய அதிர்வுகள் திணிப்பு அதிர்வுகள் என்று அழைக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு: இழுத்துக் கட்டப்பட்ட ஒலிப்பானிலிருந்து பெறப்படும் அதிர்வுகள்.
7.
ஊடகத்தின் உராய்வு மற்றும் காற்றின் இழுவையால் காலம் அதிகரிக்கும்போது வீச்சு குறைகின்றது. இதன் அலைவுகள் நிலைநிறுத்தப்படாமல் இருக்கும் மற்றும் சீரிசை அலையியற்றியின் ஆற்றல் படிப்படியாக குறைகின்றது. இந்த ஆற்றல் இழப்பு அலையியற்றியின் ஆற்றல் படிபடியாக குறைகின்றது. இந்த ஆற்றல் இழப்பு அலையியற்றியின் ஆற்றல் இழப்பு அலையியற்றி சூழ்ந்துள்ள ஊடகம் உட்க்கவர்த்தலால் ஏற்படுகிறது.இந்த வகை அலை இயக்கம் தடையிறு அலைவுகள் என அழைக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டுகள்:
1.தனி ஊசலின் அலைவுகள் (காற்றின் தடையுடன்)அல்லது எண்ணெய் நிரப்பப்பட்ட கலணிற்குள் தனி ஊசலின் அலைவுகள்.
2. தொட்டிச் சுற்றில் ஏற்படும் மின்காந்த அலைவுகள்.
3.கால்வனா மீட்டரில் ஏற்படும் தடையுறு அலைவு .
8.
கட்டற்ற அலைவுகள்: அலையியற்றியை அதன் சமநிலைப் புள்ளியிலிருந்து இடம்பெயரச் செய்து அலைவுறச் செய்தால் அது அலைவுறும் அதிர்வெண்ணானது இயல்பு அதிர்வெண்ணிற்கு சமமாக இருக்கும். இவ்வகை அலைவுகள் அல்லது அதிர்வுகள் கட்டற்ற அழிவுகள் அல்லது கட்டற்ற அலைவுகள் எனப்படும்.
9.
(i) நிறையற்ற விசை மாறிலி அல்லது சுருள்வில் மாறிலி k (spring constant) கொண்ட சுருள்வில்லானது கூரையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம். நிறை l இணைக்கப்படுவதற்கு முன்பு சுருள்வில்லின் நீளம் என்க. சுருள்வில்லின் மற்றொரு முனையில் நிறை m இணைக்கப்படும்போது சுருள்வில்லானது l நீளத்திற்கு விரிவடைகிறது. சுருள்வில்லானது l நீளத்திற்கு விரிவடைகிறது. சுருள்வில்லின் நீட்சி காரணமாக ஏற்படும் மீள்விசை F1 என்க. நிறை m-ல் செயல்படும் ஈர்ப்பு விசையானது செங்குத்தாக கீழ்நோக்கி செயல்படும். இந்த அமைப்பிற்கு தனித்த பொருளின் விசைப்படம் வரைய முடியும்.

(ii) அமைப்பானது சமநிலையில் உள்ளபோது
F1+mg=0
ஆனால் சுருள்வில் I இடப்பெயர்ச்சிக்கு நீட்சியடைந்துள்ளது. எனவே
F1 ∝ I ⇒ F1=-k1
-kl+mg=0
mg=kl அல்லது \(\frac { m }{ k } =\frac { l }{ g } \) .....(1)
(iii) மிகச் சிறிய அளவிலான புற விசையை நிறை மீது செலுத்தினால், அந்த நிறை மேலும், கீழ்நோக்கிய திசையில் இடப்பெயர்ச்சி y க்கு நீள்கிறது. பிறகு அது மேலும் (y + l) சுருள்வில்லின் மொத்த நீட்சி காரணமாக ஏற்படும் மீள்விசை.
F2 ∝(y+l)
F2=-k(y+1)=-y-kl ....(2)
\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \) என்ற முடுக்கத்துடன் இயங்கும் நிறைக்கு தனித்த விசைப்படம் வரைந்தால், நாம் பெறுவது
-ky-kl+mg=m\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \)
நீட்சி காரணமாக நிறை மீது செயல்படும் மொத்த விசை
F=F2+mg
F=-ky-kl+mg .....(3)
ஈர்ப்பு விசையானது மீள்விசைக்கு எதிராக அமையும். சமன்பாடு (1)ஐ சமன்பாடு (3)ல் பிரதியிட
F=-ky-kl+kl=-ky
நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த
m\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \)=-ky
\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \)=-\(\frac { k }{ m } \)y
(iv)இச்சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழு சமன்பாட்டின் வடிவமாகும். எனவே
அலைவுநேரம் T=\(2\pi \sqrt { \frac { m }{ k } } \)s
சமன்பாடு (1)ஐ பயன்படுத்தி, அலைவுநேரத்தை வேறு வடிவில் எழுதினால்
அலைவுநேரம் T=\(2\pi \sqrt { \frac { m }{ k } } =2\pi \sqrt { \frac { l }{ g } } \)
இச்சமன்பாட்டிலிருந்து புவிஈர்ப்பு முடுக்கம் மதிப்பை பெறலாம்.
g=\(4{ \pi }^{ 2 }\left( \frac { l }{ { T }^{ 2 } } \right) \)ms-2.
10.

11.
சமன்பாடு (10.29) பயன்படுத்தி, முதலில் சுருள்வில் தராசின் விறைப்பு மாறிலியை நாம் கணக்கிடலாம்.
\(K=\frac { mg }{ l } =\frac { 25\times 11.5 }{ 0.25 } ={ 1150 }Nm^{ -1 }\)
அலைவுகளின் அலைவுநேரம் \(T=2\pi \sqrt { \frac { M }{ k } } \)
இங்கு M என்பது பொருளின் நிறையாகும். M என்பது தெரியாத நிலையாதலால் சமன்பாட்டை மாற்றி அமைக்க நாம் பெறுவது
\(M=\frac { k{ T }^{ 2 } }{ { 4\pi }^{ 2 } } =\frac { \left( 1150 \right) { \left( 0.5 \right) }^{ 2 } }{ { 4\pi }^{ 2 } } =7.3kg\)
பொருளின் மீது செயல்படும் ஈரப்பு விசை
W = Mg = 7.3 × 11.5 = 83.95 N ≈ 84 N
12.
இயக்க ஆற்றல் \(KE={1\over 2}mv^2_x\)
பகுதி மற்றும் தொகுதியை m ஆல் பெருக்க
\(KE={1\over 2m}m^2v^2_x={1\over 2m}(mv_x)^2={1\over2m}p^2_x\)
இங்கு px என்பது சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகளின் நேர்கோட்டு உந்தம்
13.
T ∝ √l என்பதால்
T = மாறிலி √l
\({T_f\over T_i}=\sqrt{l+{44\over 100}l\over l}=\sqrt{1.44}=1.2\)
எனவே Tf = 1.2 Ti = Ti + 20% Ti
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards