11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
அலைவுகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒத்ததிர்வின் நன்மை, தீமைகள் யாவை?
2.
தனிச் சீரிசை இயக்கத்தில் இடப்பெயர்ச்சியினை விளக்குக.
3.
ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.
4.
ஒரு செவிலியர் நோயாளி ஒருவரின் சராசரிஇதயத்துடிப்பை அளவிட்டு மருத்துவரிடம் 0.8s என்ற அலைவு நேரத்தில் குறிப்பிட்டார். நோயாளியின் இதயத்துடிப்பை ஒரு நிமிடத்திற்கான துடிப்புகளின் எண்ணிக்கையில் கூறவும்.
5.
y-அச்சின் வழியே ஒரு துகள் மேற்கொள்ளும் தனிசீரிசை இயக்கத்தின் சமன்பாடு y=A sin(ωt)+B, வீச்சு
A
B
A + B
\(\sqrt { A+B } \).
6.
சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீது 27 அலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது எனில் அச்சுருள்வில்லின் மீது செயல்படும் பெரும விசை______.
15 N
3 N
6 N
12 N
7.
இரு ஊசல்களின் அதிர்வெண்களின் விகிதம் 2:3 எனில் நீளங்களின் விகிதம்
\(\sqrt { \frac { 2 }{ 3 } } \)
\(\sqrt { \frac { 3 }{ 2 } } \)
\(\frac { 4 }{ 9 } \)
\(\frac { 9 }{ 4 } \)
8.
ஒரு துணைக்கோளில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தனி ஊசலின் கால அளவு (T -பூமியின் மீது கால அளவு)
சுழி
T
முடிவில்லாதது
\(\frac { T }{ \sqrt { \in } } \)
9.
l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.
\(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)
\(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)
\(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)
\(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)
10.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?
\({d^2y\over dt^2}+y=0\)
\({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)
\({d^2y\over dt^2}+k^2y=0\)
\({dy\over dt^2}+y=0\)
11.
தனிஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளபோது, சீரிசை அலை இயற்றியை போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4m தொலைவில் ஊசல் குண்டின் முடுக்கமானது 16ms-1 எனில் அதன் அலைவுநேரம்_______.
2s
1s
2\(\pi\)s
\(\pi\)s
12.
ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.
5/6
11/10
6/5
5/4
13.
1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள் முறையே kA மற்றும் kB சுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும்போது அவற்றின் பெரும்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளபோது A யின் வீச்சானது B யின் வீச்சைபோல் _____ மடங்காகும்.
\(\sqrt {k_B\over 2k_A}\)
\(\sqrt {k_B\over 8k_A}\)
\(\sqrt {2k_B\over k_A}\)
\(\sqrt {8k_B\over k_A}\)
14.
கோண சீரிசை இயக்கம் என்றால் என்ன?
15.
வீச்சு வரையறு.
16.
திணிப்பு அதிர்வுகளை வரையறு. எடுத்துக்காட்டு தருக
17.
தனி ஊசலின் விதிகளைத் தருக?
18.
ஆரம்ப கட்டம் (epoch) என்றால் என்ன?
19.
தனிச்சீரிசை இயக்கத்தின் அதிர்வெண் வரையறு.
20.
சீரலைவு மற்றும் சீரற்ற அலைவு இயக்கம் என்றால் என்ன? இரு உதாரணங்கள் தருக
21.
அலைவுகளின் நான்கு வகைகளை விரிவாக விளக்குக.
22.
23.
சீரான வட்ட இயக்கத்தின் வீழல் சீரிசை இயக்கம் என்பதை விவரி.
1.
நன்மைகள்:
(i) சுரமானியைக் கொண்டு ஒத்ததிர்வைப் பயன்படுத்தி இசைக்கவை ஒன்றின் அதிர்வெண்ணைக் கணக்கிடலாம்.
(ii) வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தொட்டிச் சுற்றில் ஒத்ததிர்வைப் பயன்படுத்தி தேவையான அதிர்வெண்ணைப் பெறலாம்.
தீமைகள்:
(i) நில நடுக்கத்தின் போது ஒத்ததிர்வு அழிவை ஏற்படுத்தும். நிலநடுக்கத்தினால் ஏற்படும் சீரலைவுகளின் அதிர்வெண் கட்டிடங்களின் அதிர்வெண்ணிற்கு சமமாக இருந்தால் பெரும வீச்சுடன் கட்டிடங்கள் அலையுற்று சிதைய நேரிடும்.
(ii) கண்ணாடி குவளை ஒன்றின் அதிர்வெண்ணிற்குச் சமமான அதிர்வென்னில் பாடுபவர் பாடினால் ஒத்ததிர்வு ஏற்பட்டு குவளை உடைய நேரிடும்.
2.
எந்த ஒரு கணத்திலும் அதிர்வடையும் துகளானது நடுநிலையிலிருந்து கடந்துவந்த தொலைவு இடப்பெயர்ச்சி எனப்படும். துகள் Pயில் உள்ளபோது, y அச்சில் அதன் இடப்பெயர்ச்சி y ஆகும்.

ΔOPNல் sinθ =\(\frac { ON }{ OP } \)
ON=y=OP sinθ
y=OP sin ωt [∵ θ=ωt]
OP வட்டத்தின் ஆரம் a. எனவே அதிர்வடையும் துகளின் இடப்பெயர்ச்சி.
∴ y=a sinωt
நடுநிலையிலிருந்து துகள் மேற்கொள்ளும் பெரும இடப்பெயர்ச்சியை வீச்சு என வரையறுக்கலாம்.
3.
T ∝ √l என்பதால்
T = மாறிலி √l
\({T_f\over T_i}=\sqrt{l+{44\over 100}l\over l}=\sqrt{1.44}=1.2\)
எனவே Tf = 1.2 Ti = Ti + 20% Ti
4.
அளவிடப்பட்ட இதயத்துடிப்புகளின் எண்ணிக்கை f என்க.அலைவு நேரமானது இதயத்துடிப்புக்கு எதிர்த்தகவில் அமைவதால்
\(f={1\over T}={1\over 0.8}=1.25s^{-1}\)
1நிமிடம் என்பது 60 விநாடிகள் ஆகும்.
(1வினாடி = \(1\over 60\)நிமிடம் \(\Rightarrow\)1s-1 = 60min-1)
f=1.25s-1⇒ f=1.25 x 60min-1=75 துடிப்புகள் /நிமிடங்கள்
5.
(a)
A
6.
(c)
6 N
7.
(d)
\(\frac { 9 }{ 4 } \)
8.
(c)
முடிவில்லாதது
9.
(a)
\(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)
10.
(b)
\({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)
11.
(d)
\(\pi\)s
12.
(c)
6/5
13.
(b)
\(\sqrt {k_B\over 8k_A}\)
14.
திருப்பு விசையானது கோண இடப்பெயர்ச்சிக்கு எதிர்த்திசையில் இருப்பதை ፒ=-Cθ சமன்பாட்டில் எதிர்க்குறி குறிக்கிறது. இவ்வகை நிகழ்வு கோணச் சீரிசை இயக்கம் ஆகும்.
15.
ஒரு நிலையிலிருந்து அதிர்வடையும் துகள் அடைந்த பெரும இடப்பெயர்ச்சி வீச்சு (A) எனப்படும். தனிச்சீரிசை இயக்கத்தில் வீச்சு மாறிலியாகும். எது காலத்தைப் பொறுத்து மாறலாம்.
16.
திணிப்பு அதிர்வுகளில், பொருளானது ஆரம்பத்தில் இயல்பு அதிர்வெண்ணில் அதிர்வுறும் பின்னர் புற சீரழிவு விசையின் காரணமாக புற சீரலைவு விசையின் அதிர்வெண்ணில் அதிர்வுறும். இத்தகைய அதிர்வுகள் திணிப்பு அதிர்வுகள் என்று அழைக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு: இழுத்துக் கட்டப்பட்ட ஒலிப்பானிலிருந்து பெறப்படும் அதிர்வுகள்.
17.
தனி ஊசல் கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
நீளத்தின் விதி: கொடுக்கப்பட்ட புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பிற்கு, தனி ஊசலின் அலைவு நேரம் தனி ஊசலின் நீளத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவல் அமையும்.
\(T\propto =\sqrt { l } \)
முடுக்கத்தின் விதி: கொடுக்கப்பட்ட தனி ஊசலின் நீளம் மாறாதிருக்கும்போது ஊசலின் அலைவு நேரம் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவல் அமையும்.
\(T\propto =\frac { 1 }{ \sqrt { g } }\)
18.
\(y=Asin\left( wt+\varphi _{ 0 } \right) \)
இங்கு \(\omega t+{ \varphi }_{ 0 }=\varphi \) என்பது அதிர்வடையும் துகளின் கட்டம் என அழைக்கப்படுகிறது. t=0 s (தொடக்க காலம்) இல், துகளின் கட்டம் \(\left( \varphi ={ \varphi }_{ 0 } \right) \) தொடக்க கட்டம் என அழைக்கப்படுகிறது.
19.
துகளொன்று ஒரு நொடியில் ஏற்படுத்தும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும். இது f என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.இதன் SI அலகு S-1 அல்லது ஹெர்ட்ஸ் ஆகும்.(குறீயீடு Hz)
\(f=\frac { 1 }{ T } \)
20.
சீரலைவு இயக்கம்: சீரான கால இடைவெளியில் தானாகவே மீண்டும், மீண்டும் நிகழும் இயக்கம் சீரலைவு இயக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: ஊசல் கடிகாரத்தில் உள்ள முட்கள், தொட்டிலின் அலைவுகள், சூரியனைச் சுற்றிவரும் புவியின் இயக்கம், வளரும் மற்றும் தேயும் சந்திரன்.
சீரற்ற அலைவு இயக்கம்: சீரான கால இடைவெளியில் தானாகவே மீண்டும், மீண்டும் நிகழாத எந்த ஒரு இயக்கமும் சீரற்ற அலைவு இயக்கம் எனப்படும்.
எடுத்துக்காக்ட்டு: நிலா நடுக்க நிகழ்வு, எரிமலை வெடிப்பு போன்றவை.
21.
(i) கட்டற்ற அலைவுகள்:
அலையியற்றிய அதன் சமநிலைப் புள்ளியிலிருந்து இடம் பெயரச் செய்து அலைவுறு செய்தால் அந்த அலைவுறும் அதிர்வெண்ணானது இயல்பு அதிர்வெண்ணிற்கு சமமாக இருக்கும். இவ்வகை அலைவுகள் அல்லது அதிர்வுகள் கட்டற்ற அலைவுகள் அல்லது கட்டற்ற அதிர்வுகள் எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்: இசைக் கலவையின் அதிர்வுகள், இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள், தனி ஊசலின் அலைவுகள்.
(ii)தடையுறு அலைவுகள் :
தனி ஊசல் அலைவுறும் போது (முந்தைய நிகழ்வில்) அலைவின் வீச்சானது மாறிலி எனவும்.அலையியற்றியின் மொத்த ஆற்றல் மாறாதது எனவும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஊடகத்தின் உராய்வு மற்றும் காற்றின் இழுவையால் காலம் அதிகரிக்கும்போது வீச்சு குறைகின்றது. இதன் அலைவுகள் நிலைநிறுத்தப்படாமல் இருக்கும் மற்றும் சீரிசை அலையியற்றின் ஆற்றல் குறைகின்றது. இந்த ஆற்றல் இழப்பு அலையியற்றி சூழ்ந்துள்ள ஊடகம் உட்கவர்தலால் ஏற்படுகிறது. இந்த வகை அலை இயக்கம் தடையுறு அலைவுகள் என அழைக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டுக்கள்:
1. தனி ஊசலின் அலைவுகள் (காற்றின் தடையுடன்) அல்லது எண்ணெய் நிரப்பப்பட்ட கலணிற்குள் தனி ஊசலின் அலைவுகள்.
2. தொட்டிச் சுற்றில் ஏற்படும் மின்காந்த அலைவுகள்.
3. கால்வனா மீட்டரில் ஏற்படும் தடையுறு அலைவு.
(iii) நிலைநிறுத்தப்பட்ட அலைவுகள்:
ஊசலில் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒரு சில அலைவுகளுக்கு பிறகு அலைவு நிறுத்தப்படும். இதற்கு காரணம் தடையுறு விசையாகும். இதனைத் தவிர்க்க தள்ளு விசையைச் செலுத்தி அலைவுகளானது நிலை நிறுத்தப்படுகிறது. புற மூலத்திலிருந்து ஆற்றலை பயன்படுத்தி அலையியற்றிக் அளிப்பதனால் அலைவுகளின் வீச்சு மாறாமல் இருக்கும். இவ்வகை அதிர்வுகளை நிலை நிறுத்தப்பட்ட அதிர்வுகள் என்கிறோம்.
எடுத்துக்காட்டு: அதிர்வுறும் இசைக்கவையின் ஆற்றலை மின்கல அடுக்கு அல்லது புறதிறன் மூலத்திலிருந்து பெறச் செய்தல்.
திணிப்பு அதிர்வுகள்: எந்த ஒரு அலையியற்றி, தான் இழந்த ஆற்றலை புறச்சீரலைவு அமைப்பினால் பெற்று தொடர்ந்து இயங்கிகிறோதோ அந்த அலையியற்றியை திணிப்பு அலையியற்றி அல்லது இயக்கப்பட்ட அலையியற்றி என அழைக்கின்றோம்.
இவவகை அதிர்வுகளில், பொருளானது ஆரம்பத்தில் இயல்பு அதிர்வெண்ணில் அதிர்வுறும் பின்னர் புற சீரலைவு விசையின் அதிர்வெண்ணில் அதிர்வுறும் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: இழுத்துக் கட்டப்பட்ட ஒலிப்பானிலிருந்து பெறப்படும் அதிர்வுகள்.
22.

23.
m நிறை கொண்ட துகள் ஒன்று v என்ற சீரான திசைவேகத்தில் r ஆரம் கொண்ட வட்டத்தின் பிரிதி வழியே இடஞ்சுழித்திசையில் இயங்குவதாகக் கருதுவோம்.
அச்சு அமைப்பின் ஆதிப்புள்ளியிலிருந்து வட்டத்தின் மையம் O வுடன் பொருந்துவதாகக் கொள்க. துகளின் கோணத்திசைவேகம் ω எனவும் ஒரு குறிப்பிட்ட நேரம் tஇல் அத்துகளின் கோண இடப்பெயர்ச்சி எனவும் கொண்டால்
θ = ωt
சீரான வட்ட இயக்கத்தில் இருக்கும் ஒரு துகளின் நிலையை (position), அந்த வட்டத்தினுடைய விட்டத்தில் விழச்செய்தால் அந்த வீழல் (projection) ஒரு தனிச் சீரிஸை இயக்கத்தை மேற்கொள்ளும். இதன் மூலம் சீரான வட்ட இயக்கம் மற்றும் அதிர்வுறும் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் இணைக்க முடியும்.

இதேபோன்று எந்த ஒரு அதிர்வுறு இயக்கம் அல்லது சுழல் இயக்கத்தினை, சீரான வட்ட இயக்கத்துடன் இணைக்க முடியும். வேறுவிதமாக கூறினால் இவ்விரு இயக்கங்களும் ஒரே இயல்பாய் பெற்றுள்ளது. வட்டப்பாதையில் இயங்கும் துகளின் நிலையை (position) அவ்வட்டப் பாதையின் செங்குத்து விட்டத்தின் மீது அல்லது செங்குத்து விட்டத்திற்கு இணையாக கோட்டின் மீது வீழல் (projection) செய்வோம். இதேபோல், மேற்குறிய நிகழ்வை கிடைத்தள அச்சு அல்லது கிளைத்தள அச்சுக்கு இணையான கோட்டில் நாம் வீழ்ச்சியடையச் செய்ய முடியும்.
எனவே சீரான வட்ட இயக்கத்தில் துகளின் நிலையை அந்த வட்டத்தினுடைய விட்டத்தின் மீது (அல்லது விட்டத்திற்கு இணையான கோட்டின் மீது) விழச் செய்தால் (projection) அவ்வியக்கம் நேர்கோட்டு இயக்கமாக அமையும். இதனையே தனிச்சீரிசை இயக்கம் எனக் கருதுகிறோம். இவ்வட்டம் தனிச்சீரிசை இயக்கத்தின் மேற்கோள் வட்டம் (circle of reference)எனப்படும். தனிச்சீரிசை இயக்கமானது ஒரு குறிப்பிட்ட வட்டத்தின் எந்த ஒரு விட்டத்தின் மீதும் இயங்கும் துகள் நிலையின் வீழ்வு (projection of position) எனவும் வரையறுக்கப்பபடுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards