11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
காலாண்டு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
சீரான வடிவம் கொண்ட பொருட்களில் நிறைமையம் எங்கு அமையும் ? எ.கா தருக
2.
அளவீடு செய்தலில் 'பிழை' என்றால் என்ன? இதனால் அளவீடுகளில் ஏற்படும் தாக்கம் யாது?
3.
சோலார் வருடம், லீப் வருடம் என்பன யாவை?
4.
துப்பாக்கியை கையில் ஏந்தும் போது தோல் பட்டையின் உதவி தேவைப்படுகிறது ஏன்?
5.
படம் 1 மற்றும் 2 இல் காட்டப்பட்ட 25 kg மிதிவண்டிகளின் முடுக்கங்களைக் கணக்கிடு.

6.
திருப்புத்திறனின் தத்துவத்தை கூறுக.
7.
ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.
8.
அச்சைப் பொருத்து திருப்பு விசை செயல்படுவதை படத்துடன் விவரி.
9.
வெற்றிடத்தில் ஒரு குதிரை வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு ஓட முடியுமா?
10.
வேறு கோளில் மனிதன் உள்ளபோது எந்த அடிப்படை அளவுகளில் மாற்றம் நிகழும்?
11.
நிலைமம் விளக்குக. இயக்கத்தில் நிலைமம். ஓய்வில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம் ஒவ்வொன்றிற்கும் இரு எடுத்துக்காட்டுகள் தருக.
12.
\(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் அவற்றின் கூறுகள் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. \(\overrightarrow{A}=5\hat{i}+7\hat{j}-4\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=6\hat{i}+3\hat{j}+2\hat{k}\) எனில் கீழ்கண்டவற்றைக் காண்க.
\(\overrightarrow{A}+\overrightarrow{B},\ \ \overrightarrow{B}+\overrightarrow{A},\ \overrightarrow{A}-\overrightarrow{B}, \ \ \overrightarrow{B}-\overrightarrow{A}\)
13.
ஒரு பிளாக் B தொடக்க திசைவேகம் V யுடன் கிடைமட்டப் பரப்பில் உந்தத்துடன் தள்ளப்படுகிறது.μ- உராய்வு குணகம் பிளாக்கிற்கும் பரப்பிற்கும் இடையே ஆனது.எனில் B ஓய்வு நிலையை அடையும் கால அளவு_______
v/gμ
gμ/v
g/v
v/g
14.
ஒரு பந்தின் இயக்க ஆற்றல் E ஆனது 45o கோணத்தில் கிடைமட்டத்தில் எறியப்படுகிறது. பந்து பறக்கும் பெருமை உயரத்தில் இயக்க ஆற்றல்
E
\(\frac { E }{ \sqrt { 2 } } \)
\(\frac { E }{ 2 } \)
சுழி
15.
ஒரு பொருள் 'h' உயரத்தில் இருந்து விழுகிறது. உயரம் \(\frac {h }{2}\) ஐ அடைந்த பிறகு அது மேற்கொள்ளும் ஆற்றல்
நிலை ஆற்றல் மட்டும்
இயக்க ஆற்றல் மட்டும்
பாதி நிலை ஆற்றல் பாதி இயக்க ஆற்றல்
அதிக இயக்க ஆற்றல் குறைவான நிலை ஆற்றல்
16.
10 g நிறையுடைய ஒரு பொருளின் மீது செயல்படும் விசை 2.5 N.அப்பொருளின் முடுக்கம் யாது?
\(1.5 \times 10^{2} ms^{-2}\)
\(2.0 \times 10^{3} ms^{-2}\)
\(2.5 \times 10^{3} ms^{-2}\)
\(3.0 \times 10^{2} ms^{-2}\)
17.
2.64 x 104 kg ல் உள்ள முக்கிய எண்ணுருக்களின் எண்ணிக்கை____
2
4
5
3
18.
இரு சம வெக்டர்களின் தொகுப்பயன் விக்டரின் என்மதிப்பு அவற்றின் ஏதேனும் ஒரு விக்டரின் எண் மதிப்பிறகு சமமீனில் இரு வெக்டர்களுக்கும் இடையேயான கோணம்_____
600
900
1000
1200
19.
இரு திண்ம கோலங்கள் மீட்சியற்ற மோதலுறும் போது
மொத்த இயக்க ஆற்றல் மாறாது
மொத்த இயந்திர ஆற்றல் மாறுபடும்
நேர்கோட்டு உந்தம் மாறுபடும்
நேர்கோட்டு உந்தம் மாறுபடாது
20.
சக்கரங்கள் ஏன் வட்ட வடிவில் அமைந்துள்ளன?
அவற்றை உருவாக்க குறைந்த அளவு பொருட்கள் போதும்
உருளும் உராய்வு, நழுவும் உராய்வைவிடக் குறைவு
எளிதில் காற்றை நிரப்ப முடியும்
எதுவும் இல்லை
21.
வளைவுப் பாதையில் கார் ஒன்று திடீரென திரும்பும் போது, காரினுள் அமர்ந்திருப்பவர்கள் வெளிப்புறமாக தள்ளப்படுகின்றனர். காரணம்?
காரின் வேகம்
இயக்க நிலைமம்
இயக்க முடுக்கம்
எதுவும் இல்லை
22.
பொருளொன்றின் நீளம் 3.51m அதன் துல்லியதன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை ______
351%
1%
0.28%
0.035%
23.
சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?
1
2
4
0.5
24.
R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?
\(\sqrt { 2gR } \)
\(\sqrt { 3gR } \)
\(\sqrt { 5gR } \)
\(\sqrt { gR } \)
25.
மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
எப்பொழுதும் சுழி
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு
முடிவு செய்ய இயலாது
26.
விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு_______.
[MLT0]
[MLT-1]
[ML-2T]
[ML-1T0]
27.
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.
இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்
சுழற்சி இயக்கத்தை குறைக்கும்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
28.
கோண உந்தம் மற்றும் கோணதிசைவேகம் இவற்றிக்கான தொடர்பினைத் தருவி.
29.
இரு அளவுகளைப் பெருக்குவதால், வகுப்பதால் ஏற்படும் பிழைகளை விவரி.
30.
உராய்வுக் கோணம் விளக்குக.
31.
சென்னையிலுள்ள 60 kg நிறையுடைய மனிதரின் மீது செயல்படும் மையவிலக்கு விசையைக் காண்க
(கொடுக்கப்பட்டவை: சென்னையில் குறுக்குக் கோடு θ = 13°)
32.
i) குறைந்த தொலைவை அளப்பதற்கு பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி விவரி.
ii) நீண்ட தொலைவுகளை அளக்கும் முக்கோண முறை மற்றும் ரேடார் முறை பற்றிக் குறிப்பிடுக
1.
ஒழுங்கான வடிவம் மற்றும் சீரான நிறையைப் பெற்றிருக்கும் பொருட்களில் நிறைமையானது பொருளின் வடிவில் மையத்தில் அமைந்திருக்கும் (உ.ம்) வட்டம், கோளம்
2.
எந்த ஒரு அளவீட்டின் முடிவுகளும் சில துல்லியமற்ற தன்மையை உள்ளடக்கியிருக்கும். இயற்பியல் அளவு ஒன்றை அளவீடு செய்யும்போது ஏற்படும் நிலையற்ற தன்மை 'பிழை' எனபப்டும். எனவே இயற்பியல் அளவின் உண்மையான மதிப்பிற்கும் அளந்தறியப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு பிழையாகும்.
(Error) பிழை = உண்மையான மதிப்பு -கணக்கிடப்பட்ட மதிப்பு
இதனால், இம்மதிப்புகளைப் பயன்படுத்தி செய்யப்படும் கணக்கீடுகளும் பிழையாக அமையும்.
எந்த ஒரு ஆய்விலும் மிகச் சரியான அளவீடுகளை எடுக்க முடியாது
3.
(i) சோலார் வருடம்: பூமியால் தான் அச்சில் சூரியனை ஒரு முழு சுற்று சுற்றி வர ஆகும் கால அளவு
1 சோலார் வருடம் = 365.25 சராசரி
சோலார் நாட்கள் = 366.25 செட்ரியல் நாட்கள்
(ii) லீப் வருடம்: ஒரு வருடம் 4 ஆல் மீதியின்றி பகுபடுமானால் அது லீப் வருடம். இதில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் ஆகும்.
4.
ஏனெனில் துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் போது அதன் நிலைத் தன்மை வேறுபடுகிறது இதனை சரிசெய்யும் பொருட்டு நாம் தோள்பட்டையில் துப்பாக்கியை தாங்கிக் கொள்ளும்.
5.
படம் (1) லிருந்து
\(F-f_k =m \times a \)
500 - 400 = 25a
\(\therefore a =\frac{100}{25}=4 m / s^2\)
படம் (2) லிருந்து
\(F-f_k =m \times a \)
\(a =\frac{0}{25}=0\)
6.
ஒரு பொருளானது, சமநிலையில் இருக்கும் போது, எதிர்கடிகார திசையில் திருப்புத் திறன்களின் கூடுதல், திருப்பு புள்ளியில் கடிகார திசையில், திருப்புத் திறன்களின் கூடுதலுக்குச் சமம்.
7.
தொலைவு d = 6.3 × 1010 m
நேரம் t = 7 நிமிடம் = 7 × 60 s.
துடிப்பின் திசைவேகம் v = ?
துடிப்பின் திசைவேகம்
\(v={2d\over t}={2\times6.3\times10^{10}\over 7\times60}=3\times10^8ms^{-1}\)
8.
(i) திண்மப்பொருளில் P என்ற புள்ளியில் F விசை செயல்படுகிறது என கொள்க. விசை F ஆனது தளம் ABP ல் அமையாமல் இருக்கலாம். அச்சு AB யில் ஏதேனும் ஒரு புள்ளியை ஆதிப்புள்ளி O என எடுத்துக்கொள்வோம்.
(ii) புள்ளி O வைப்பொருத்து F ன் திருப்புவிசை \(\tau =\vec r \times \vec F \) மேலும் அச்சின் திசையில் இத்திருப்பு விசையின் கூறானது அச்சைப் பொருத்து விசையின் திருப்பு விசையாகும்.
(iii) இதனை கண்டறிய நாம் முதலில் திருப்புவிசை வெக்டர் \(\tau =\vec r \times \vec F \) க்கும் மற்றும் அச்சு AB க்கும் இடையேயான கோணம் \(\phi \) யை காணவேண்டும். (விசையின் தளம் ABP யில் இல்லை என்பதை நினைவில் கொள்க)
(iv) AB யை பொருத்து உலா திருப்புவிசை என்பது AB இன் வழியாகச் செல்லும் திருப்பு விசை \(\left| \vec r \times \vec F \right|\)யின் கிடைத்தளக்கூறு \(\left| \vec r \times \vec F \right|cos \phi \)ஆகும்.அதைபோல AB க்கு செங்குத்தான திருப்புவிசை \(\left| \vec r \times \vec F \right|sin \phi \) அச்சைபொருத்து ஒரு பொருளின்மீது செயல்படும் திருப்புவிசை அப்பொருளின் அச்சைபொருத்து சுழல்கிறது.
(v) மேலும் அச்சுக்கு செங்குத்தாக உள்ள திருப்பு விசை சூழல் அச்சை பொருத்து சுழற்றுகிறது. இவை இரண்டு ஒரே நேரத்தில் திண்மப் பொருளின்மீது செயல்படும் போது பொருளானது அச்சுச் சுழற்சியை (precession) மேற்கொள்ளும்.
9.
முடியாது. தரையானது குதிரையின் காலுக்கு கொடுக்கும் முன்னோக்கிய எதிர்விசையின் கிடைத்தளக் கூறுதான், குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு முன்னே செல்ல முடிகிறது. வெற்றிடத்தில் எதிர் விசை கிடையாது. எனவே வெற்றிடத்தில் ஒரு குதிரை, வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு ஓட முடியாது.
10.
ஏற்கனவே அணுவின் திட்ட அடிப்படையில் SI அலகு முறையில் மீட்டர் நீளத்திலும், காலம் செக்கண்டிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைகள் வேறு கோள்களிலும் மாறாது. ஆனால் நிறையின் அலகான கிலோகிராம், புரோட்டான் போன்ற அடிப்படை துகள்களின் நிறையால் இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே வேறு கோளில் மனிதன் உள்ள போது நிறையின் அடிப்படை அளவில் மாற்றம் நிகழும்.
11.
பொருளொன்றின், தானே இயங்க முடியாதத் தன்மை அல்லது தனது இயக்க நிலையைத் தானே மாற்றிக்கொள்ள, இயலாதத்தன்மைக்கு நிலைமம் என்று பெயர்.
i) ஓய்வில் நிலைமம்
ஓய்வு நிலையிலுள்ள பேருந்து ஒன்று இயங்கத்தொடங்கும் போது அப்பேருந்தில் உள்ள பயணிகள் நிலைமத்தின் காரணமாக திடீரென்று பின்னோக்கித் தள்ளப்படுகின்றன. ஏனெனில் பயணியின் உடல் நிலைமைப்பண்பின் காரணமாக தொடா்ந்து ஒய்வுநிலையிலேயே இருக்க முயல்கிறது. ஆனால் பேருந்து இயங்கத் தொடங்குகிறது. இதன் காரணமாகவே பயணிகளின் உடல் பின்னோக்கித் தள்ளப்படுகிறது.
தனது ஓய்வு நிலையைத் தானே மாற்றிக்கொள்ள இயலாத பொருளின் தன்மை, ஓய்வில் நிலைமம் எனப்படும்.
ii) இயக்கத்தில் நிலைமம்
இயக்கத்திலுள்ள ஒரு பேருந்தின் தடையை (Brake) திடீரென்று அழுத்தும்போது, பேருந்தில் உள்ள பயணிகள் நிலைமத்தின் காரணமாக முன்னோக்கித் தள்ளப்படுகின்றனர். ஏனெனில், பயணியின் உடல் நிலைமப்பண்பின் காரணமாக தொடா்ந்து இயக்க நிலையிலேயே இருக்க முயல்கிறது. ஆனால் பேருந்து ஓய்வுநிலைக்கு வரத்தொடங்குகிறது.
மாறாத்திசை வேகத்திலுள்ள ஒரு பொருள் தனது இயக்க நிலையைத் தானே மாற்றிக்கொள்ள இயலாதத் தன்மை, இயக்கத்தில் நிலைமம் எனப்படும்.
iii) இயக்கத் திசையில் நிலைமம்
ஒரு முனையில் கல் கட்டப்பட்ட, சுழற்சி இயக்கத்திலுள்ள கல்லின் கயிறு திடீரென்று அறுபட்டால், கல் தொடர்ந்து வட்டப்பாதையில் சுற்ற முடியாது. அக்கல் படத்தில் இல் காட்டியுள்ளவாறு வட்டத்தின் தொடுகோட்டுப்பாதையில் செல்லும். ஏனெனில் வெளிப்புற விசை செயல்படாதவரை பொருளினால் தானே தன்னுடைய இயக்கத்திசையை மாற்றிக் கொள்ள இயலாது.
தனது இயக்கத்திசையினைத் தானே மாற்றிக்கொள்ள இயலாத பொருளின் தன்மை, இயக்கத்திசையில் நிமைம் எனப்படும்.
12.
\(\overrightarrow{A}+\overrightarrow{B}=(5\hat{i}+7\hat{j}-4\hat{k})+(6\hat{i}+3\hat{j}+2\hat{k})=11\hat{i}+10\hat{k}-2\hat{k}\)
\(=11\hat { i } +10\hat { j } -2\hat { k } \)
\(\vec { B } +\vec { A } =\left( 6\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) +\left( 5\hat { i } +7\hat { j } -4\hat { k } \right) \)
\(=\left( 6+5 \right) \hat { i } +\left( 3+7 \right) \hat { j } +\left( 2-4 \right) \hat { k } \)
\(=11\hat { i } +10\hat { j } -2\hat { k } \)
\(\overrightarrow{A}-\overrightarrow{B}=(5\hat{i}+7\hat{j}-4\hat{k})-(6\hat{i}+3\hat{j}+2\hat{k})=-\hat{i}+4\hat{j }-6\hat{k}\)
\(\overrightarrow{B}-\overrightarrow{A}=\hat{i}-4\hat{j}+6\hat{k}\)
\(\overrightarrow{A}+\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{B}+\overrightarrow{A}\) ஒன்றுக்கொன்று சமம், ஆனால் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{B}-\overrightarrow{A}\) ஆகியவை ஒன்றுக்கொன்று எதிராக உள்ளதை கவனிக்கவும்.
13.
(a)
v/gμ
14.
(c)
\(\frac { E }{ 2 } \)
15.
(c)
பாதி நிலை ஆற்றல் பாதி இயக்க ஆற்றல்
16.
(c)
\(2.5 \times 10^{3} ms^{-2}\)
17.
(d)
3
18.
(d)
1200
19.
(d)
நேர்கோட்டு உந்தம் மாறுபடாது
20.
(b)
உருளும் உராய்வு, நழுவும் உராய்வைவிடக் குறைவு
21.
(b)
இயக்க நிலைமம்
22.
(c)
0.28%
23.
தானாக விழும் பொருளுக்கு, செங்குத்தான கீழ்நோக்கிய தொடக்க திசைவேகம் = 0. அதே போன்று கிடைத்தளத்தில் எறியப்பட்ட பொருளின் செங்குத்தான கீழ்நோக்கிய தொடக்க திசைவேகம் = 0. எனவே எந்தவொரு கணத்திலும் அவை கடக்கும் செங்குத்துத் தொலைவுகள் சமமாக அமையும்.
24.
ஆரம் = R
\(v_1^2-v_2^2 =4 \mathrm{gr}\) ....(1)
இழுவிசை \(\mathrm{T}_2=\frac{m v_2^2}{r_2}-m g\)
T2 = 0 உண்மையான திசைவேகம்
\(0 =\frac{m v_2^2}{r}-m g \)
\(\frac{m v^2}{r} =m g \)
\(v_2^2=\operatorname{rg} \therefore v_2=\sqrt{g r} \) ....(2)
(2) யை (1) இல் பிரதியிட
\(v_1^2-(\sqrt{g r})^2 =4 \mathrm{gr} \)
\(v_1^2-g r =4 \mathrm{gr} \)
\(v_1^2 =4 \mathrm{gr}+\mathrm{gr}=5 \mathrm{gr} \)
\(\mathrm{v}_1 =\sqrt{5 g r}\)
25.
(b)
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
26.
\(\mathrm{F}=\mathrm{kv}^2\)
k- இன் பரிமாணம்
= F- இன் பரிமாணம் / V2- இன் பரிமாணம்
\(=\frac{M L T^{-2}}{\left(L T^{-1}\right)^2}=\frac{M L T^{-2}}{L^2 T^{-2}} \)
\(=M L^{1-2} T^{-2+2}=M L^{-1} T^0\)
27.
(d)
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
28.
(i) கோண உந்தம் மற்றும் கோணதிசைவேகம் திண்மப் பொருள் ஒன்று நிலையான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஒரு புள்ளி நிறை m ஆனது படத்தில் காட்டியுள்ளவாறு வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது.
(ii) சுழலும் அச்சிலிருந்து r தொலைவில் புள்ளிநிறை m அமைந்துள்ளது. வட்டப்பாதையில் எந்தவொரு கணத்திலும் நேர்கோட்டு உந்தமானது தொடுகோட்டு திசையில் இருக்கும்.
(iii) கோண உந்தம் \(\vec L\)ஆனது \(\vec r\)மற்றும் \(\vec p\)க்கு வட்டப்பாதையில் செங்குத்தாக இருக்கும். எனவே கோண உந்தம் சுழலும் அச்சின் திசையில் அமையும். இந்நிகழ்வில் θ என்பது \(\vec r\)க்கும் p க்கும் இடைப்பட்ட கோணம் உந்தம் (L) இன் எண் மதிப்பு θ = 900 எனும்போது
L = r mv sin 900 = r mv
(iv) இங்கு v என்பது நேர்கோட்டு திரைவேகம் வட்ட இயக்கத்தில் கோண திசை வேகத்திற்கும் நேர்கோட்டு திசை வேகத்திற்கான தொடர்பு v = rω
L = r mr ω
L = (mr2) ω
(v) L மற்றும் ω ஆகியவற்றின் திசை சுழலும் அச்சின் திசையிலேயே இருக்கும், மேய்ந்த சமன்பாட்டின் வெக்டர் வடிவம்.
\(\vec L(mr^2)\vec ω\)
சமன்பாடு mr2 ω, mr2 \(\vec ω\) கோவை உறுப்பு mr2 புள்ளி நிறையின் நிலைமத் திருப்புத்திறன் ஆகும். திண்மப் பொருளானது புள்ளி நிறைபோன்ற பல துகள்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.
(vi) எனவே திண்மப் பொருளின் நிலைம திருப்புத்திறன் என்பது அப்புள்ளி நிறைகளின் நிலைமத் திருப்புத்திறன் கூட்டுத் தொகை \((I=∑m_ir_i^2)\)ஆகும், எனவே பொருளின் கோண உந்தமானது.
\(\vec L=(∑m_ir_i^2)\vec ω\)
\(\vec L=I\vec ω\)
29.
இரு அளவுகளைப் பெருக்குவதால் ஏற்படும் பிழைகள்:
1.\(\triangle A \)மற்றும் \(\triangle B\) என்பன முறையே A, B என்ற அளவுகளின் தனிப் பிழைகள் என்க
அவற்றின் பெருக்கல்பலன் Z=AB
Z இன் பிழை \(\triangle Z\) ஆகும்.
\(Z \pm \triangle Z=(A\pm \triangle A)(B\pm \triangle B)\)
\(=(AB)\pm (A \triangle B )\pm (B\triangle A)\pm (\triangle A. \triangle B)\)
இடது புறத்தை Z ஆலும் வலது புறத்தை AB யிலும் வகுக்க நாம் பெறுவது.
\(1\pm {\triangle Z\over Z }=1\pm {\triangle B \over B}\pm {\triangle A \over A}\pm {\triangle A \over A}.{\triangle B\over B}\)
\({\triangle A \over A},{\triangle B \over B}\) ஆகியவை மிகக் குறைந்த அளவு.எனவே அவற்றின் பெருக்கல் \({\triangle A \over A}.{\triangle B \over B}\) புறக்கணிக்கப்படுகிறது.
இன் பெரும பின்னப் பிழை \({\triangle Z \over Z }=\pm ({\triangle A \over A}+{\triangle B \over B})\) இரு அளவுகளைப் பெருக்குவதால் ஏற்படும் பெருமப் பின்னப் பிழையானது தனித்தனி அளவுகளின் பின்னப் பிழைகளின் கூடுதலுக்குச் சமம்.
2.இரு அளவுகளை வகுப்பதால் ஏற்படும் பிழைகள்
1.\(\triangle A \)மற்றும் \(\triangle B\) என்பன முறையே A, B என்ற அளவுகளின் தனிப் பிழைகள் என்க
அவ்வற்றின் பின்னம் \(Z={A\over B}\)
Z ன் \(\triangle Z \) பிழை ஆகும்.
\(Z \pm \triangle Z ={A \pm \triangle A\over B \pm \triangle B}={{A(1\pm {\triangle A \over A})\over B(1 \pm {\triangle B \over B})}}\)
\(={A\over B}(1\pm {\triangle A \over A})(1 \pm {\triangle B \over B})^{-1}\)
அல்லது
\(Z \pm \triangle Z =Z (1\pm {\triangle A \over A})(1 \mp {\triangle B \over B})\)
[x<<1] ஆக இருக்கும்போது (1+x)n \(\approx 1+nx]\)
இருபுறமும் Z ஆல் வகுக்க,
\(=1\pm {\triangle Z\over Z}=(1\pm {\triangle A \over A})(1 \mp {\triangle B \over B})\)
\(=1\pm{\triangle A\over A}\mp{\triangle B \over B}\mp {\triangle A \over A}.{\triangle B \over B}\)
\(\triangle A/ A , \triangle B / B\) மிகக் குறைவு, எனவே அவற்றின் பெருக்கல்பலன் புறக்கணிக்க தக்கது. Z இன் பெரும பின்னப்பிழை, \({\triangle Z\over Z}=( {\triangle A \over A}+{\triangle B \over B})\)
இரு அளவுகளை வகுப்பதால் பெறப்படும் பெருமபின்னப் பிழையானது தனித்தனி அளவுகளின் பின்னப்பிழைகளின் கூடுதலுக்குச் சமம்.
30.
1.செங்குத்து ஏத்தி விசை மற்றும் பெரும உராய்வு விசை (fs max)ஆகிய இரண்டின் தொகுபயனுக்கும் (R) செங்குத்து எதிர்விசை (N) க்கும் இடையேயான கோணம் உராய்வுக் கோணம் எனப்படுகிறது.
2.\(R=\sqrt { ({ f }_{ s }^{ max })^{ 2 } } +N^{ 2 }\)
3.\(tan\theta=\frac{f_s^{max}}{N}\)
4.உராய்வுத் தொடர்புகளிலிருந்து fsmax=\(\mu_k N\) ஆக இருக்கும்போது பொருள் சறுக்கத் துவங்கும் அதனை கீழ்காணுமாறும் எழுதலாம்.
5.\(\frac{f_s^{max}}{N}=\mu_s\)
6.ஆகியவற்றிலிருந்து ஓய்வுநிலை உராய்விற்கான குணகம்.
7.\(\mu_s=tan\theta\)
8.ஓய்வுநிலை உராய்விற்கான குணகம் உராய்வுக் கோணத்தின் டான்ஜென்ட் (tan θ) சமமாக இருக்கும்.
31.
மையவிலக்கு விசை Fcf = mω2 R cosθ
புவியின் கோணத் திசைவேகம் \((ω)={2\pi \over T }\)
இங்கு T என்பது புவியின் அலைவு நேரம் (24 மணிநேரம்)
\(ω={2\pi\over 24\times60\times60}={2\pi\over 86400}\)
= 7.268 x 10-5rad sec-1
புவியின் ஆரம் R = 6400 km = 6400 × 103 m
சென்னையின் குறுக்கு கோடு (Latitude) = 13°
Fcf = 60 × (7.268 × 10-5)2 × 6400 × 103 × cos (13°) = 1.9678 N
60 kg நிறையுடைய மனிதரொருவர் உணரும் மையவிலக்குவிசை தோராயமாக 2 நியூட்டனாகும். ஆனால் புவியின் ஈர்ப்பு விசையின் காரணமாக 60 kg நிறையுடைய அம்மனிதர் உணரும் விசை = mg = 60 × 9.8 = 588 N. இந்த விசைமையவிலக்கு விசையை விட மிக அதிகம்
32.
(i) சிறிய தொலைவுகளை அளவிடுதல் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி திருகு அளவி
திருகு அளவியானது 50 mm வரையிலான பொருட்களின் பரிமாணங்களை மிகத்துல்லியமாக அளவிடப் பயன்படும் கருவியாகும். இக்கருவியின் தத்துவம் திருகின் வட்ட இயக்கத்தைப் பயன்படுத்தி பெரிதாக்கப்பட்ட நேர்க்கோட்டு இயக்கமாகும். திருகு அளவியின் மீச்சிற்றளவு 0.01 mm ஆகும்.
வெர்னியர் அளவி
துளையின் ஆழம் அல்லது துளையின் விட்டம் போன்ற அளவீடுகளை அளக்கப்பயன்படும் பன்முகமத்தன்மை (versatile) கொண்டகருவி வெர்னியர் அளவி ஆகும். வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு 0.1 mm (பொதுவாக)
(ii) நீண்ட தொலைவுகளை அளவிடுதல்
முக்கோண முறை (Triangulation method) இடமாறு தோற்றமுறை (Parallax method) துடிப்பு முறை (Radar method) ஆகிய முறைகளைப் பயன்படுத்தி மிக நீண்ட தொலைவுகளை அளவிடலாம்.
முக்கோண முறையின் மூலம் ஒரு பொருளின் உயரத்தை அளவிடுதல்
AB = h என்பது அளக்க வேண்டிய மரத்தின் உயரம் அல்லது கோபுரத்தின் உயரம் எனக். B யிலிருந்து x தொலைவில் உள்ள C என்ற இடத்தில் உற்று நோக்குபவர் இருப்பதாகக் கொள்வோம்.
C -லிருந்து வீச்சை அளப்பவர் A -வுடன் ஏற்படுத்தும் ஏற்றக் கோணம் <\(ACB=\theta\)
செங்கோண முக்கோணம் ABC-யிலிருந்து
\(\tan \theta ={AB\over BC}={h\over x}\) அல்லது உயரம் h = x tan θ
தொலைவு x ஐ அறிந்திருந்தால்,உயரம் h ஐப் பெறலாம்.
ரேடார் துடிப்பு முறை
ரேடாா் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்பதன் சுருக்கமாகும்.
ரேடாரைக் கொண்டு செவ்வாய் போன்ற புவிக்கு அருகில் உள்ள கோளின் தொலைவை துல்லியமாக அளவிட முடியும்.
இம்முறையில் புவிப்பரப்பிலிருந்து ரேடியோ பரப்பி (Transmitter) மூலம் ரேடியோ அலைத்துடிப்புகள் பரப்பப்பட்டு, கோளிலிருந்து எதிரொளிக்கப்பட்ட துடிப்புகள் ஏற்பி (Receiver) மூலம் உணரப்படுகிறது.
ரேடியோ அலை பரப்பியிலிருந்து அனுப்பப்பட்டதற்கும் ஏற்பியல் பெறப்பட்டதற்கும் இடையேயான நேர இடைவெளி t எனில் கோளின் தொலைவினை கீழ்க்கண்ட தொடா்பு மூலம் பெற முடியும்.
வேகம் = கடந்த தொலைவு / எடுத்துக் கொண்ட நேரம்
தொலைவு (d) = ரேடியோ அலைகளின் வேகம் x எடுத்துக்கொண்ட நேரம் எனவே கோளின் தொலைவு
\(\mathrm{d}=\frac{v \times t}{2}\)
இங்கு v என்பது ரேடியோ அலைகளின் வேகம். ரேடியோ அலைகள் சென்று வந்தடைய ஆகும் நேரம் t.
இம்முறை மூலம் புவிப்பரப்பிலிருந்து ஓர் விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது எண்பதையும் கண்டறியலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards