11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
3 m நீள தண்டின் ஒரு அலகு நீளத்தின் நிறை அதன் ஒரு முனையில் இருந்து உள்ள தொலைவு x- க்கு நேர்த்தகவில் இருக்கின்றது எனில், அதன் ஒரு முனையிலிருந்து ஈர்ப்பின் மையத்தின் தொலைவு யாது?
1.5 m
2 m
2.5 m
3 m
2.
ஒரு அமைப்பின் நிறையின் மையம்
அமைப்பின் மையத்தில் இருக்கும்
அமைப்பிற்கு வெளியே இருக்கும்
அமைப்பிற்கு உள்ளே இருக்கும்
அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும்
3.
ஒரே நேரத்தில் காற்றில் இரு பந்துகள் எறியப்பட்டால் அவற்றின் நிறை மையத்தின் முடுக்கம்
இரு பந்துகளின் இயக்கத் திசைகளைச் சார்ந்து அமையும்
இரு பந்துகளின் நிறைகளைச் சார்ந்து அமையும்
இரு பந்துகளின் வேகங்களைச் சார்ந்து அமையும்
புவியீர்ப்பு முடுக்கம் g க்கு சமமாக இருக்கும்
4.
பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்தல்ல?
கோணதிசைவேகம்
நிறை
சுழற்சியின் அச்சு
நிறையின் பரவல்
5.
பொருளின் கோண உந்தமானது ______
எப்போதும் மாறாது
மாற்றமடைந்து கொண்டே இருக்கும்
புராதிருப்புவிசை இல்லாதபோது மாறாது
புராதிருப்புவிசை உள்ளபோது மாறாது
6.
M நிறையும் R ஆரமும் உடைய வட்டத்தட்டு ஒன்றின், தளத்திற்குச் செங்குத்தாகவும் மையத்தின் வழியாகவும் செல்லும் அச்சைப் பொருத்த நிலைமத் திருப்புத்திறன் ________
1/2MR2
MR2
1/4MR2
5/4MR2
7.
திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதி நிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்______.
\(\sqrt { \frac { 4 }{ 3 } gh } \)
\(\sqrt { \frac { 10 }{ 7 } gh } \)
\(\sqrt { 2gh } \)
\(\sqrt { \frac { 1 }{ 2 } gh } \)
8.
ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது ______.
சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
ஆரத்தின் வழியாக இருக்கும்
பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்
9.
உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்______.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழலும் திசையைச் சார்ந்தது
10.
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.
துகள்களின் நிலை
துகள்களுக்கிடையே உள்ள தொலைவு
துகள்களின் நிறை
துகளின் மீது செயல்படும் விசை
11.
திண்மப் பொருட்களின் மீது திருப்பு விசையின் விளைவு.
12.
பரவலாக அமைந்த புள்ளி நிறைகளின் நிறைமையம் சுமணப்பாட்டை பெறுக.
13.
நான்கு உருளை வடிவ பொருட்களான வளையம் வட்டத்தட்டு உள்ளீடற்ற கோளம் மற்றும் திண்மக் கோளம் ஆகியவை ஒத்த ஆரம் R உடன் ஒரே நேரத்தில் சாய்தளத்தின் உருள ஆரம்பிக்கிறது. எந்த பொருள் சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் வந்தடையும் என்பதைக் காண்க.
14.
M நிறையும் l நீளமும் கொண்ட சீரான நீள் அடர்த்தி கொண்ட (uniform rod) தண்டின் நிறை மையத்தைக் கண்க.
15.
திருப்பு விசையை உருவாக்காத விசைகளுக்கான நிபந்தனை யாது?
16.
ஹைட்ரஜன் மூலக் கூறு ஒன்றின் நிலைமத்திருப்புத்திறனை அதன் நிறைமையத்தின் வழியாகவும் அணுக்களுக்கிடையேயான அச்சிற்கு செங்குத்தாகவும் செல்லும் அச்சைப் பொருத்து காண்க. ஹைட்ரஜன் அணுவின் நிறை 1.7 x 10-27 kg மற்றும் அணுவிடைத் தொலைவு = 4 x 10-10 m என கொள்க.
17.
AB,CD என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான O வில் இணைக்கப்பட்ட சட்டங்கள் படத்தில் காட்டியுள்ளவாறு தரையில் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கம்பி D என்ற புள்ளியில் கட்டப்பட்டுள்ளது. கம்பியின் தனித்த முனை E யானது விசை \(\vec {F}\) இனால் இழுக்கப்படுகிறது. விசை உருவாக்கிய திருப்பு விசையின் எண் மதிப்பையும். திசையையும்,
(i) E, D, O மற்றும் B புள்ளிக்களைப் பொருத்து
(ii) DE, CD, AB மற்றும் BG அச்சுகளைப் பொறுத்து காண்க.
18.
50 kg நிறையுள்ள ஒரு மனிதர் நிலையான நீரின் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் 300 kg நிறையுடைய படகில் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறார். அவர் தரையில் நிலையாக உள்ள ஒருவரை பொருத்து படகின் மறுமுனையை நோக்கி 2 m s-1 என்ற மாறா திசைவேகத்தில் நடந்து செல்கிறார். (a) நிலையான உற்றுநோக்குபவரை பொருத்தும் (b) படகில் நடந்து கொண்டிருக்கும் மனிதரைப் பொருத்தும் படகின் திசைவேகம் என்ன?

[தகவல்: படகுக்கும் மனிதருக்கும் இடையே உராய்வு உள்ளது. ஆனால் படகுக்கும் நீருக்கும் இடையே உராய்வு கிடையாது.]
19.
20 kg நிறையும் 0.25 m ஆரமும் கொண்ட ஒரு திண்மக் கோளகமானது மையம் வழிச் செல்லும் அச்சைப் பற்றி சுழல்கிறது. அதன் கோண திசைவேகம் 5rads-1 எனில் கோண உந்தத்தின் மதிப்பு யாது?
20.
திண்மப் பொருட்களில் குறிப்பிடும் வகையில் புறவிசையால் உருவ மாற்றம் நிகழாததற்கு காரணம் யாது?
21.
இணை அச்சுகள் தேற்றத்தை கூறுக.
22.
சூழல் இயக்கம் என்றாள் என்ன?
23.
இரு சமமான அளவு பாட்டில்களில் ஒன்றை நீர் நிரப்பியும் மற்றொன்றை காலியாகவும் கொண்டு சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுமாறு அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் எது சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் அடையும்? விளக்குக.
1.
(a)
1.5 m
2.
(d)
அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும்
3.
(b)
இரு பந்துகளின் நிறைகளைச் சார்ந்து அமையும்
4.
(a)
கோணதிசைவேகம்
5.
(a)
எப்போதும் மாறாது
6.
(a)
1/2MR2
7.
நிலை ஆற்றல் = நேர்க்கோட்டு இயக்க ஆற்றல் + சுழற்சி இயக்க ஆற்றல்
\(m g h= \frac{1}{2} m v^2+\frac{1}{2} I \omega^2 \)
\(=\frac{1}{2} m v^2+\frac{1}{2} \times \frac{2}{5} M R^2 \times \frac{v^2}{R^2}\left(\omega=\frac{v}{R}\right) \)
\(= \frac{1}{2} m v^2+\frac{1}{5} m v^2 \)
\(= \frac{7}{10} M v^2 \)
\(m g h =\frac{7}{10} m v^2 \)
\(g h =\frac{7 v^2}{10} \quad v^2=\frac{10 g h}{7} \)
\(\therefore v =\sqrt{\frac{10 g h}{7}}\)
8.
(a)
சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
9.
(a)
அதிகரிக்கும்
10.
(d)
துகளின் மீது செயல்படும் விசை
11.
i) திண்மப் பொருள் ஒன்றின் மீது சுழலும் அச்சைப் பொருத்து புறதிருப்பு விசை செயல்படும்போது சுழலும் பொருளானது அச்சைப் பொறத்து கோண முடுக்கத்தைப் பெறுகிறது.
ii) திருப்பு விசைக்கும் கோண முடுக்கத்திற்கும் இடையோன தொடர்பு எண்மதிப்பில் \(\tau =l\alpha \)
iii) இங்கு l என்பது திண்மப்பொருளின் நிலைமைத்திருப்புத்திறன் ஆகும்.
iv) சுழற்சி இயக்கத்தில் திருப்பு விசை என்பது நேர்க்கோட்டு இயக்கத்தில் விசைக்குச் சமானமானது.
12.
i) ஒரு புள்ளி நிறை என்பது எவ்விதவடிவமும் அளவும் இல்லாமல் சுழியற்றநிறையைக் கொண்டதாக அனுமானிக்கப்பட்ட ஒரு புள்ளியாகும்.
ii) M1, M2, M3 .... Mn என்ற புள்ளி நிறைகளைக் கொண்ட தொகுப்பின் நிறை மையத்தைக் கண்டறிய, முதலில் நாம் அதிப்புள்ளியையும் தகுந்த ஆயு அச்சு அமைப்பையும் தெரிவு செய்யவேண்டும்.
iii) படத்தில் காட்டியுள்ளபடி X1, X2, X3 ...... Xn ஆகியவை X அச்சில் புள்ளி நிறைகளின் ஆயு அச்சு நிலைகளாகக் கருதுவோம்.
iv) Xcm என்பது எல்லாபுள்ளி நிறைகளின் நிறை மைய நிலையின் X ஆயத் தொலைவு.
v) \(X _{cm} =\frac {\Sigma m_ix _i }{\Sigma m _i }\) எனில் அதன் சமன்பாடு
vi) இங்கு \(\Sigma m_i \) என்பது எல்லாத் துகள்களின் மொத்தநிறை அதாவது M என்பது
vii) \(\Sigma m_i \) = M ஆகும்
viii) \(X _{cm} =\frac {\Sigma m_ix _i }{M }\)
ix) இதைப்போன்றே பரவலாய் அமைந்துள்ள புள்ளி நிறைகளின் நிறை மையத்திற்கான y, z ஆயத்தொலைவுகளையும் நாம் கண்டறியலாம்.
x) \(Y _{cm} =\frac {\Sigma m_iy _i }{M }\)
xi) \(Z _{cm} =\frac {\Sigma m_iz _i }{M }\)
xii) ஆகவே, கார்ட்டீசியன் ஆய அச்சு அமைப்பில் இப்புள்ளி நிறைகளின் நிறை மையத்தின் நிலை (Xcm, Ycm, Zcm) ஆகும். பொதுவாக, நிறைமையத்தின் வெக்டர் வடிவம்
xiii) \(\vec { { r }_{ cm } } =\frac { \Sigma { m }_{ \overrightarrow { { ir }_{ l } } } }{ M } \)
13.
வளையம் வட்டத்தட்டு உள்ளீடற்ற கோலம் மற்றும் திண்ம கோளம் ஆகிய நான்கின் சுழற்சி ஆரங்கள் K ஆனது R, \(\sqrt{1\over 2}R,\ \sqrt{2\over 3}R, \sqrt{2\over 5}R\)
இதன் எண்வடிவு முறையே 1R, 0.707R, 0.816R, 0.632R ஆகும்.நேரத்திற்கான சமன்பாடு
\(t=\sqrt{2h\left(1+{K^2\over R^2}\right)\over g\ \sin^2\theta}\)
சுழற்சி ஆரம் குறைவாகப் பெற்றுள்ள பொருள் அடிப்பகுதியை அடைய குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் சாய்தளத்தில் பொருட்கள் வந்தடையும் வரிசை. முதலில் திண்மக்கோளம் இரண்டாவது வட்டத்தட்டு மூன்றாவது உள்ளீடற்ற கோளம் நான்காவது வளையம் என அமையும்.
14.
M நிறையும் l நீளமும் உடைய ஒரு சீரான நீள் அடர்த்தி கொண்ட தண்டினைக் (uniform rod) கருதுக. அதன் ஒரு முனை படத்தில் காட்டியுள்ளபடி ஆதிப்புள்ளியுடன் ஒன்றியிருப்பதாக எடுத்துக்கொள்வோம். தண்டானது X அச்சில் வைக்கப்பட்டுள்ளது. தண்டினுடைய நிறை மையத்தைக் கண்டறிய, ஆதிப்புள்ளியிலிருந்து x தொலைவில் dx நீளமும் dm என்ற மீநுண் நிறையும் கொண்ட சிறுபகுதியை எடுத்துக் கொள்வோம்.

தண்டின் நீள் அடர்த்தி (ஓரலகு நீளத்திற்கான நிறை) \(\lambda =\frac { M }{ l } \).
சிறிய பகுதியின் நிறை \(dm=\frac { M }{ l } dx\) தண்டின் நிறை மையத்திற்கான சமன்பாட்டை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
\({ X }_{ CM }=\frac { \int { xdm } }{ \int { dm } } \)
\({ X }_{ CM }=\frac { \int _{ 0 }^{ t }{ \left( \frac { M }{ l } dx \right) } }{ M } =\frac { 1 }{ l } \int _{ 0 }^{ l }{ x } dx\)
=\(\frac { 1 }{ l } \left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 0 }^{ l }=\frac { 1 }{ l } \left( \frac { { l }^{ 2 } }{ 2 } \right) \)
\({ X }_{ CM }=\frac { l }{ 2 } \)
நிலை \(\frac { l }{ 2 } \) என்பது தண்டின் வடிவியல் மையமாகும். இதிலிருந்து சீரான தண்டினைப் பொறுத்தவரை அதன் வடிவியல் மையத்திலேயே (Geometric center) நிறை மையம் அமையும் என்ற முடிவிற்கு வரலாம்.
15.
1. பொருளானது ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்பட்டுள்ள போது திண்மப் பொருளில் உள்ள எல்லா புள்ளி நிறைகளின் மீது செயல்படும் திருப்புவிசைகளின் தொகுபயன் சுழியாகும்.
2. மேலும் பொருளின் எடையானது சுழலியக்கப்புள்ளியில் செயல்படும் செங்குத்து விசையினால் சமன்செய்யப்படுகிறது.
3. பொருளானது உறுதி சமநிலையில் கிடைக்கை நிலையிலேயே அமைந்திருக்கும்.
16.
ஒவ்வொரு H-அணுவின் நிறை =1.7 x 10-27 Kg
சுழலும் அச்சிலிருந்து ஒவ்வொரு H-அணுவின் தொலைவு = 2 x 10-10 m
ஹைட்ரஜன் மூலக்கூறுவின் நிலைமத் திருப்புத்திறன் \(\mathrm{I}=\mathrm{mr}^2+\mathrm{mr}^2\)
\(\mathrm{I} =2 \mathrm{mr}^2 \)
\(\mathrm{I} =2 \times 1.7 \times 10^{-27} \times\left(2 \times 10^{-10}\right)^2 \)
\(=3.14 \times 4 \times 10^{-27-20} \)
\(=13.6 \times 10^{-47} \)
\(\therefore \mathrm{I} =1.36 \times 10^{-46} \mathrm{~kg} \mathrm{~m}{ }^2\)
17.
(i) புள்ளி E யைப் பொருத்து திருப்புவிசை சுழி.
(E வழியாக \(\vec {F}\) செயல்படுவதால்).
புள்ளி D யைப் பொருத்து திருப்புவிசை சுழி.
(D வழியாக \(\vec {F}\)செயல்படுவதால்).
புள்ளியைப் பொருத்து திருப்புவிசை \((\vec{OE}) \times \vec {F}\) அச்சுகள் AB மற்றும் CD க்கு செங்குத்தாக அமையும்.
புள்ளி B யைப் பொருத்து திருப்புவிசை \((\vec{BE}) \times \vec {F}\) அச்சுகள் AB மற்றும் CD க்கு செங்குத்தாக அமையும்.
(ii) அச்சு DE யைப் பொருத்து திருப்புவிசை சுழி
( \(\vec {F}\)ஆனது DE க்கு இணையாக உள்ளதால்).
அச்சு CD யைப் பொருத்து திருப்புவிசை சுழி
(\(\vec {F}\) ஆனது CD யை வெட்டிச் செல்வதால்).
அச்சு AB யைப் பொருத்து திருப்புவிசை சுழி
(\(\vec {F}\)ஆனது AB க்கு இணையாக உள்ளதால்).
அச்சு BG யைப் பொருத்து திருப்புவிசை சுழி
(\(\vec {F}\) ஆனது BG யை வெட்டிச் செல்வதால்)
ஓர் அச்சைப் பற்றிய விசையின் திருப்பு விசை ஆதிப்புள்ளியை அந்த அச்சிலேயே தேர்ந்தெடுத்தால் ஆதியை தேர்ந்தெடுப்பதை சார்ந்திராமல், அமையும். இதனை கீழ்க்கண்டவாறு காணலாம்.
திண்மப் பொருளொன்றில் உள்ள AB என்ற சுழற்சி அச்சில் உள்ள O என்ற ஆதிப்புள்ளியை எடுத்துக்கொள்வோம். புள்ளி P யின் மீது விசை \(\vec {F}\) செயல்படுவதை படத்தில் காட்டியுள்ளவாறு கருதுவோம்.
இப்போது அச்சில் ஏதேனும் ஒரு இடத்தில் மற்றொரு புள்ளி O' ஐ படத்தில் காட்டியுள்ளவாறு, தேர்வு செய்ய வேண்டும்.

O' யைப் பொருத்த விசையின் திருப்பு விசை
\(\vec { O'P } \times \vec { F } =(\vec { O'O } +\vec { OP } )\times \vec { F } \)
=\((\vec { O'O } \times \vec { F } )+(\vec { OP } \times \vec { F } )\)
\(\vec { O'O } \times \vec { F } \) என்பது \(\vec { O'O } \) க்கு செங்குத்தாக இருப்பதால், இப்பகுதியானது AB வழியாக எந்த கூறையும் பெற்றிருப்பதில்லை. எனவே \(\vec { O'P } \times \vec { F } ,\vec { OP } \times \vec { F } \) ஆகியவை AB வழியாக சம கூறினைப் பெற்றிருக்கும்.
18.
மனிதரின் நிறை m1 = 50 kg
படகின் நிறை m2 = 300 kg
நிலையான உற்றுநோக்குபவரைப் பொருத்து மனிதர் நகரும் திசைவேகம் v1 = 2 m s-1 மேலும் படகு நகரும் திசைவேகம் v2 (கண்டறியப்பட வேண்டியது) என்க.
(i) தரையில் நிலையாக உள்ள உற்றுநோக்குபவரைப் பொருத்து படகின் திசைவேகத்தைக் கணக்கிடுதல்.
அமைப்பின் மீது புறவிசைகள் செயல்படாதபோது, படகு – மனித அமைப்பின் அகவிசையாக செயல்படும் உராய்வின் காரணமாக மனிதன் - படகு அமைப்பு (boat – man system) இயங்குகிறது. ஆகவே நிறை மையத்தின் திசைவேகம் சுழியாகும். ((vCM = 0).
நிறைமையத்தின் சமன்பாடு (5.7) லிருந்து,
0 = \(\frac { \sum { { m }_{ 1 }{ v }_{ 1 } } }{ \sum { { m }_{ 1 } } } =\frac { { m }_{ 1 }{ v }_{ 1 }+{ m }_{ 2 }{ v }_{ 2 } }{ { m }_{ 1 }+{ m }_{ 2 } } \)
0 = m1v1 + m2v2 - m2v2 = m1v1
v2 =\(\frac { { m }_{ 1 } }{ { m }_{ 2 } } { v }_{ 1 }\)
v2 =\(\frac { 50 }{ 300 } \times 2=\frac { 100 }{ 300 } \)
v2=-0.33 ms-1
இங்கே, நிலையாக உள்ள உற்றுநநோக்குபவருக்கு எதிர் திசையில் படகு செல்வதை எதிர்குறி காட்டுகிறது.
(ii) நடக்கும் மனிதரைப் பொருத்து படகின் திசைவேகத்தைக் கண்டறிதல் : படகின் சார்புத் திசைவேகத்தை பின்வருமாறு கணக்கிடலாம்.
V21 = V2 - V1
இங்கே, V21 என்பது நடக்கும் மனிதரைப் பொருத்து படகின் சார்புத் திசைவேகமாகும்.
V21 =(-0.33) - (2)
V21 = -2.33 ms-1
மனிதர் தன்னுடைய வலப்புறம் நகரும்போது படகு அவரின் இடதுபுறமாக நகர்வதை விடையில் உள்ள எதிர்குறி காட்டுகிறது.
19.
கோளகத்தின் நிறை m=20kg
ஆரம் r=0.25m
கோணத்தின் திசைவேகம் =ω=5rad s-1
கோணத்தின் உந்தம் L=Iω=\(\frac{2}{5}\)mr2ω
=\(\frac{2}{5}\)x20x(0.25)2x5=40x(0.0625)=2.5
L=2.5kgm2s-1
20.
புற விசைகள் செயல்படும் போது திண்மப் பொருளின் அணுவிடைத் தொலைவு மாறாது
21.
ஒரு பொருளின் எந்தவொரு அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத்திறனானது அதற்கு இணையாக செல்லும் ஈர்ப்பின் மைய அச்சைப் பற்றிய நிலைமைத்திருப்புத்திறன் மற்றும் பொருளின் நிறை, இரு அச்சுகளுக்கிடைப்பட்ட தொலைவில் இருமடியின் பெருக்கற்பலன் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.
22.
பொருள் ஒன்று தன் நிலையான அச்சைப் பற்றி சுழலுமாயின் அது சூழல் இயக்கம் எனப்படும்.
23.
நீர் நிரப்பப்பட்ட பாட்டில் சாய்தளத்தின் அடிப்பகுதி முதலில் அடைகிறது.
ஏனெனில் நீர் நிரப்பப்பட்ட பாட்டிலின் நிலைமதிருப்புத்திறன் மேலும் நீர் நிரப்பிய பாட்டில் சாய்தளத்தில் உருளும் போது அதன் இடம் பெயர்வு இயக்க ஆற்றல் சுழலும் இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது.
காலி பாட்டிலின் நிறை மிகக் குறைவாக இருப்பதால் அதன் நிலைமத் திருப்புத்திறன் மிக மிகக் குறைவாக இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards