11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
அலைகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.
2.
கேட்பவர் ஒருவர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் நின்று கொண்டு இரண்டு தொடர் வண்டிகளை நோக்குகிறார். ஒன்று நிலையத்தை நோக்கியும் மற்றொன்று நிலையத்திலிருந்து வெளிநோக்கியும் சாம் திசைவேகம் 8ms-1 ல் செல்கின்றன. இரண்டு தொடர் வண்டிகளும் வெளியிடும் விசில்கள் அதிர்வெண் 240Hz எனில் கேட்பவர் உணரும் விம்மல்களின் எண்ணிக்கை யாது?
3.
ஒத்ததிர்வு காற்று தம்ப கருவியில் ஒரு இசைக்கவையை பயன்படுத்தி காற்று தம்பத்தின் ஒத்ததிர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கு குழாயிலான இக்கருவியில் அதன் நீளமானது ஒரு பிஸ்டன் மூலம் மாற்றப்படுகிறது. அறை வெப்பநிலையில் இரு அடுத்தடுத்த ஒத்ததிர்வுகள் 20cm மற்றும் 85cm களில் ஏற்படுகிறது. காற்றுக் தம்பத்தின் அதிர்வெண் 256Hz. அறை வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் காண்க.
4.
மூடிய ஆர்கன் குழாயில் 3வது சீரிசையின் அதிர்வெண் திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் அடிப்படை அதிர்வெண்ணுக்குச் சமம் எனில் திறந்த குழாயின் நீளம் 30cm எனக் கொள்க.
5.
புல்லாங்குழல் ஒன்று ஏற்படுத்தும் ஒலியின் அதிர்வெண் 450Hz இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சீரிசைகளின் அதிர்வெண்களை காண்க. கிளாரினெட் ஒன்று ஏற்படுத்தும் ஒலியின் அதிர்வெண்ணும் 450Hz எனில் முதல் மூன்று சீரிசைகளின் அதிர்வெண்கள் யாவை?
6.
ஒலித்துக் கொண்டுள்ள இசைக்கருவி ஒன்றின் ஒலி மட்டம் 50dB. மூன்று ஒத்த இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கும்போது தொகுப்பயன் செறிவைக் காண்.
7.
நாயைப் பார்த்து அழும் குழந்தையின் அழுகுரலை 3.0m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு 10-2 W m-2 குழந்தையின் அழுகுரலை 6.0m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு எவ்வளவாக இருக்கும் .
8.
எஃகு கம்பி ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை கணக்கிடுக. எஃகின் யங்குணகம் Y = 2 x 1011 Nm-2 மற்றும் அடர்த்தி ρ = 7800kgm-3
9.
படத்தில் காட்டியபடி நீள் நிறை அடர்த்தி 0.25kgm-1 கொண்ட கம்பியில் இயக்கத்தில் உள்ள துடிப்பின் திசைவேகம் காண்க. மேலும் துடிப்பு 30cm யைக் கம்பியில் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் காண்க.
10.
ஒரு முனை சுவரில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்றைக் கருதுவோம். படத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்கண்ட இரு சூழல்களிலும் (அலைகள் ஒரு வினாடியில் இந்த தொலைவைக்க கடப்பதாக கருதுக)
a) அலைநீளம் b) அதிர்வெண் c) திசைவேகம் ஆகியவற்றை கணக்கிடுக.
1.
மூடிய ஆர்கன் குழாயில் அடிப்படை அதிர்வெண்
\({ \gamma }_{ c }=\frac { V }{ 4L } \) = 250 Hz
திறந்த ஆர்கன் குழாயில் அடிப்படை அதிர்வெண்
\({ \gamma }_{ 0 }=\frac { V }{ 2L } \) = ?
\(\frac { { \gamma }_{ c } }{ { \gamma }_{ 0 } } =\frac { V }{ 4L } \times \frac { 2L }{ V } =\frac { 1 }{ 2 } \)
\({ \gamma }_{ 0 }=2{ \gamma }_{ c }\) = 2 x 250 = 500 Hz
2.
கேட்பவர் ஓய்வில் உள்ளார்
(i) மூலம் (தொடர்வண்டி) கேட்குநரை நோக்கி இயங்குகிறார்:
தோற்ற அதிர்வெண்
\(f_{in} ={v \over \left(v -{v_1}\right)} f ={330\over \left(8- 330\right)} \times 240=246Hz\)
(ii) மூலம் (தொடர்வண்டி கேட்குநரிடமிருந்து விலகிச் செல்லும்போது
தோற்ற அதிர்வெண்
\(f_{out}={v \over \left(v +{v_2}\right)} f ={330\over \left(8+ 330\right)} \times 240=234Hz\)
விம்மல்களின் எண்ணிக்கை
= | fin - fout| = (246-234) = 12
3.
அடுத்தடுத்த ஒத்ததிர்வு நீளங்கள்
L1 = 20cm மற்றும் L2 = 85cm
அதிர்வெண் f = 256Hz
v = f⋋= 2f ΔL = 2f (L2 − L1)
= 2 × 256 × (85 − 20) × 10−2 ms−1
v = 332.8 m s−1
4.
l2 என்பது திறந்த ஆர்கன் குழாயின் நீளம் என்க. l2 = 30cm என்பது மூடிய ஆர்கன் குழாயின் நீளம். கொடுக்கப்பட்ட மூடிய ஆர்கன் குழாயின் 3வது சீரிசையானது திறந்த ஆர்கன் குழாயின் அடிப்படை அதிர்வெண்ணுக்கு சமம்.
மூடிய ஆர்கன் குழாயின் 3வது சீரிசை
\(f_2={v\over ⋋_2}={3v\over 4l_1}=3f_1\)
திறந்த ஆர்கன் குழாயின் அடிப்படை அதிர்வெண்
\(f_1={v\over ⋋_1}={v\over 2l_2}\)
எனவே
\({v\over 2l_2}={3v\over 4l_1}⇒l_2={2l_1\over 3}=20cm\)
5.
புல்லாங்குழல் என்பது திறந்த ஆர்கன் குழாய். எனவே
2 வது சீரிசை f2 = 2 f1 = 900 Hz
3 வது சீரிசை f3 = 3 f1 = 1350 Hz
4 வது சீரிசை f4 = 4 f1 = 1800 Hz
கிளாரினெட் என்பது மூடிய ஆர்கன் குழாய்
2 வது சீரிசை f2 = 3 f1 = 1350 Hz
3 வது சீரிசை f3 = 5 f1 = 2250 Hz
4 வது சீரிசை f4 = 7 f1 = 3150 Hz
6.
\(ΔL=10 \log_{10}\left[I_1\over I_0\right]=50dB\)
\(\log_{10}\left[I_1\over I_0\right]=5dB\)
\({I_1\over I_2}=10^5⇒I_1=10^5\ I_0=10^5\times10^{-12}Wm^{-2}\)
I1 = 10-7 Wm-2
மூன்று இசைக்கருவிகள் இணைந்து ஒலிப்பதால்
Iதொகுப்பயன் = 3I1 = 3 × 10-7 Wm-2.
7.
I1 என்பது 3.0ம் தொலைவிலுள்ள ஒலிச்செறிவு என்க. அதன் மதிப்பு 10-2 W m-2
I1 என்பது 6.0ம் தொலைவிலுள்ள ஒலிச்செறிவு என்க.
r1 = 3.0 m, r2 = 6.0 m
எனவே \(I ∝{1\over r^2}\)
வெளியீடு திறன் கேட்பவரை பொறுத்தது அல்ல, குழந்தையை மட்டுமே பொறுத்தது
\({I_1\over I_2}={r^2_2\over r^2_1}\)
\(I_2=I_1{r^2_1\over r^2_2}\)
I2 = 0.25 × 10-2 W m-2
8.
\(v=\sqrt{Y\over \rho}=\sqrt{2\times10^{11}\over 7800}=\sqrt{0.2564\times10^8}\)
= 0.506 x 104ms-1 = 5 x 103 ms-1
எனவே நெட்டலைகள் திண்மததில், திரவம் அல்லது வாயுவை விட வேகமாக செல்கின்றன. ஆடு மேய்ப்பவன் ஆடுகளுடன் தொடரவண்டி பாதையை கடக்கும் போது, தண்டவாளததில் காதை வைத்து கேட்பதன் காரணத்தை தற்போது புரிந்திருப்பீரகள்.
9.
கம்பியின் இழுவிசை
T = mg = 1.2 x 9.8 = 11.76N
ஓரலகு நீளத்திற்கான நிறை μ=0.25kgm-1
எனவே அலைத்துடிப்பின் திசைவேகம்
\(v =\sqrt {T \over \mu }=\sqrt {11.76\over 0.25}=6.858ms ^{-1}=6.8ms ^{-1}\)
30செ.மீ தொலைவைக் கடக்க துடிப்பு எடுததுக் கொள்ளும் நேரம்
\(t={d\over v}={30\times10^{-2}\over6.8}=0.044=44ms\) இங்கு ms = மில்லி வினாடி
10.
| முதல் நேர்வு | இரண்டாம் நேர்வு | |
|---|---|---|
| (a) அலைநீளம் | ⋋ = 6m | ⋋ = 2m |
| (b) அதிர்வெண் | f = 2Hz | f = 6Hz |
| (c) திசைவேகம் | v = 6 x 2 = 12ms-1 | v = 2 x 6 = 12ms-1 |
இதிலிருந்து நாம் அறிவது கம்பியில் ஏற்படும் அலையின் திசைவேகம் மாறிலி. அதிர்வெண் அதிகரிக்கும்போது அலைநீளம் குறைகிறது. மறுதலைக்கும் (vice vrsa) இது பொருந்தும். அவற்றின் பெருக்குத்தொகையான திசைவேகம் நிலையாக (மாறாமல் இருக்கிறது)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards