11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/12/2018
11th Revision Test Biology
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பாலிடீன் குரோமோசோமின் அமைப்பை படுத்துடன் விளக்கு?
2.
திசு வேதியலில் பயன்படுத்தப்படும் சாயங்கள் எவை ?
3.
புரதத்தில் காணப்படும் பல்வேறு பிணைப்புகளை படத்துடன் விளக்கு.
4.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவம் யாது?
5.
தாவர செல் பகுப்பிற்கும், விலங்கு செல் பகுப்பிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்து.
6.
பாசிகளில் பொதுப்பண்புகள் யாவை?
7.
பெந்தாம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டின் சுருக்கம்.
8.
நொதியின் செயல்பாட்டை விளக்கு பூட்டு - சாவி கோட்பாட்டை படத்துடன் விளக்கு.
9.
இரைப்பையில் உணவு செரித்தல் நடைபெறும் முறையை விளக்கு.
10.
திரள் கனி என்றால் என்ன? அதனை விளக்கு.
11.
தரைமேல் தண்டின் உருமாற்ற வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
12.
13.
சைகோமைசீட்ஸின் பண்புகள் யாவை?
14.
ஆஸ்திரேலியாவில் 2011ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 18வது பன்னாட்டு தாவரவியல் மாநாட்டில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் யாவை?
15.
இலையின் பண்புகளை பட்டியலிடு.
16.
ஸய்யாத்த்யம் வகை மஞ்சரியை விளக்கு.
17.
லாம்பிட்டோ மாரிட்டீ (மண்புழு) வின் புறத்தோற்ற அமைப்பை விளக்குக.
18.
எபிதீலிய செல்களை வகைப்படுத்தி, அவை காணப்படும் இடம் மற்றும் பணியினை அட்டவணைப்படுத்து.
19.
தொகுதி : துளையுடலிகளின் பொது பண்புகள் யாவை?
20.
பூஞ்சைகளால் தாவரங்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை அட்டவணைப்படுத்து.
21.
காற்று நுண்ணறைகளில் ஆக்ஸிஹீமோகுளோபின் உருவாவதற்கும் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஹீமோகுளோபினிலிருந்து O2 பிரிவதற்கும் இடையே உள்ள சூழல்கள் வேறுபாட்டைக் கூறு.
22.
இதயச் செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?
23.
மூன்று உலக வகைப்பாட்டினை உருவாக்கியவர் யார்? அதனை விளக்குக.
24.
சொல் சோதனை: லிம்போசைட்டுகள், சிவப்பு செல்கள், லியூக்கோசைட்டுகள், பிளாஸ்மா, எரித்ரோசைட்டுகள், வெள்ளை அணுக்கள், ஹீமோகுளோபின், ஃபேகோசைட், பிளேட்டுலெட்டுகள், இரத்த உறைவு.
01. இருபக்கமும் குழிந்த தன்மை கொண்ட தட்டுவடிவ செல்கள்
02. இவற்றில் பெரும்பாலானவை பெரிய, இரு கதுப்புகளைக் கொண்ட உட்கருவைப் பெற்றுள்ளன -
03. இரத்தத்தில் கடத்துவதற்குப் பயன்படும். சிவப்பு செல்கள் -
04. இரத்தத்தின் நீர்மப் பகுதி -
05. பெரும்பாலானவை அமீபாவைப்போல் இடம்பெயர்ந்து, வடிவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவை –
06. நீர் மற்றும் முக்கியக் கரைபொருட்களைக் கொண்டது -
07. நான்கு மாதங்கள் இரத்தத்தின் சுற்றோட்டத்தில் இருந்த பின்னால் கல்லீரலிலும், மண்ணீரலிலும் சிதைக்கப்படுகிறது -
08. சிவப்பு செல்களுக்கு அந்நிறத்தை அளிப்பது -
09. இரத்தச் சிவப்பு செல்களின் இன்னொரு பெயர்-
10. ஜெல்லியாக மாறிய இரத்தம் -
11. செல்லை உண்ணும் செல்-
12. உட்கருவற்ற செல் -
13. நிணநீர்த்திசுவில் உருவாகும் வெள்ளை அணுக்கள் -
14. காயங்களை அடைத்து இரத்தப்போக்கைக் குறைப்பது-
15. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படும் செல் துண்டுகள் -
16. இரத்த வெள்ளையணுக்களின் இன்னொரு பெயர் -
17. இரத்தச் செல்களுக்கு நிதானமாக ஆக்ஸிஜனை வெளிவிடுதல் -
13. காயம் பட்ட இடங்களில் இரத்த உறைவை உருவாக்குவது இவற்றின் வேலை-
25.
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

26.
27.
இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.
28.
கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?
29.
நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?
30.
புரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.
1.
1. C.G பால்பியானி (1881) என்பவர் டிரோசோஃபைலா என்ற பழப் பூச்சியின் உமிழ் நீர் சுரப்பில் இதனை கண்டறிந்தார்.இது பல்வேறு பூச்சிகளின் லார்வாக்கள் , மிட்ஜஸயில் காணப்படுகின்றன.
2. உட்கரு பகுப்பு ஏற்படாமல் இடைக்கால நிலையில் குரோசோம்கள் இரட்டித்தலில் ஈடுபடுகின்றன.ஒரு குரோசோம் பல நகல்களை உருவாக்குவதால் தோன்றும் அமைப்பே பாலிடீன் குரோமோசோம் ஆகும்.இதை ஒளி நுண்ணோக்கியிலும் காண இயலும் மரபியல் செயல்பாடு கொண்டுள்ளதாக இவை காணப்படுகின்றன.
3. இதில் அடர்த்தியான சாயம் ஏற்கும் பட்டைகள் மற்றும் சாயம் ஏற்கா இடைப்பட்டைகள் அடுத்தடுத்துக் காணப்படடுகின்றன.இவற்றுள் அடர்த்தியான பட்டையும் 95 DNA -வையம் சாயம் ஏற்கா இடைப்பட்டையில் 5 DNA வையம்கொண்டுள்ளன.கைரோனோமஸ் லார்வாவில் உள்ள பாலிடீன் குரோமோசோம்ங்களில் மிகபெரிய புடைப்புகள் காணப்படுகின்றன.இவற்றதிற்கு பால் பியாணி வலையங்கள் என்று பெயர்.இதுற்கு குரோமோசோம் புடைப்புகள் என்று அழைக்கலாம்.
4. இவை துரிதமாக RNA உற்பத்தி நிகழும் இலக்குகளாகும் குறிப்பாக இது உமிழ்நீர் சுரப்பியில் காணப்படுவதால் இவற்றிற்கு உமிழ்நீர் சுரப்பி குரோமோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது
5.உட்கரு பகுப்பு நடைபெறாமல் குரோமோசோம் DNA தொடச்சியாக இரட்டிப்படைத்து தோன்றும் சகோதர குரோமாட்டிட்கள் பக்கவாட்டில் தொகுக்கப்பட்டு , இந்தப் பாலிடீன் குரோமோசோம் உருவாகிறது.இந்த நிகழ்விற்கு எண்டோமைட்டாசிஸ் என்று பெயர்.ஜீன் வெளிப்பாடு , ஜூன்கள் படியெடுத்தல் மற்றும் RNA உருவாதல் போன்றவை பாலிடீன் குரோமோசோமில் நிகழ்கின்றன.
6. உடலச் செல்களில் தாய்வழி மற்றும் தந்தைவழித் தோன்றிய ஒத்திசைவு குரோமோசோம்கள் பக்கவாட்டில் ஒன்றொடொன்று தொடர்புடையதாக்க காணப்படுகின்றன.இதற்கு உடல இணைவு என்று பெயர்.
2.
| வரிசை எண் | சாயம் | சாயத்தின் நிறம் | ஏற்கும் திறன் |
|---|---|---|---|
| 1. | இயோசின் | இளஞ்சிவப்பு , சிவப்பு | சைட்டோ பிளாசம் , செல்லுலோஸ் |
| 2. | அசிட்டோ கார்மைன் ஹிமோ ட் டாக்சிலின் | இளஞ்சிவப்பு , சிவப்பு | உட்கரு, குரோமோசோம்கள் |
| 3. | மெத்திலீன் நீலம் | நீலம் | உட்கரு |
| 4 |
சாஃப் ரானின் |
சிவப்பு | செல்சுவர் (லிக்னி ன் ) |
| 5. | காட்டன் நீலம் | நீலம் | பூஞ்சையின் ஹைப்பாக்கள் |
| 6 | சூடான் IV, சூடான் கருப்பு | கருஞ்சிவப்பு , கருப்பு | லிப்பிடுகள் |
| 7 | கோமாஸ்சி அடர் நீலம் | நிலம் | புரதம் |
| 8. | ஜென் ஸ் பச்சை | பசுமை கலந்த நீலம் | மைட்டோகாண்ட்ரியா |
| 9. | I2KI | கருநீலம் முதல் பழுப்பு | தரசம் |
| 10. | டால்யூடின் நீலம் | நீலம் , நீல பச்சை | சைலம் , பாரங்கைமா , புறத் தோல் |
3.
1.ஹைட்ரஜன் பிணைப்பு: பாலிபெப்டைடு சங்கிலியில் உள்ள சில ஹைட்ரஜன் அணுக்களுக்கும், ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் அணுக்களுக்கிடையே தோன்றுகிறது.ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்த நேர்மின்தன்மையும், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்கள் குறைந்த எதிர்மின்தன்மையும் உடையவை.எதிரெதிர் மின்தன்மையால் ஈர்ப்பு உண்டாகி ஹைட்ரஜன் பிணைப்பு ஏற்படுகிறது.இப்பிணைப்புகள் வலுவற்றவையாக இருந்தாலும் பெரும் எண்ணிக்கையில் மூலக்கூறின் முப்பரிமாண வடிவத்தை நிலைப்படுத்துகின்றன.
2.அயனிப்பிணைப்பு: பெப்டைடு பிணைப்பால் இணையாத மின்தன்மை கொண்ட தொகுப்புகளுக்கிடையே இது உருவாகிறது.ஹைட்ரஜன் பிணைப்பை விட இது வலுவானது.pH மாற்றங்கள் மற்றும் வெப்பநிலை மாற்றங்களால் துண்டிக்கப்படும் பிணைப்பு இதுவாகும்.
3.டைசல்ஃபைடு பிணைப்பு: சிஸ்டீன், மீத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் சல்ஃபர் அணுக்களுக்கும் அமினோ அமிலங்களுக்கும் இடையே இரட்டைச் சல்ஃபர் இணைப்பு பாலத்தினை அமைக்கின்றன.
4.நீர் வெறுக்கும் பிணைப்பு: இந்தப் பிணைப்பு புரதத்தின் அமைப்பைத் தக்கவைக்க உதவுகிறது.கோளப் புரதங்கள் கரைசல் ஒன்றின் வைக்கப்படும் போது அவற்றின் நீர்வெறுக்கும் தொகுப்புகள் நீர் மூலக்கூறுகளை வெறுத்துக் கோளத்தின் உள்நோக்கி அமைந்து ஈர்க்கப்படுகின்றன.இதற்கு நீர் வெறுக்கும் பிணைப்பு என்று பெயர்.
4.
| வ.எண். | தாவரங்கள் | கிடைக்கும் பொருட்கள் | பயன்கள் |
| 1. | சைகஸ் சிர்சினாலிஸ் சைரெவல்யூட்டா | சாகோ | தரசம் நிறைந்த உணவாகப் பயன் படுகிறது. |
| 2. | பைனஸ் ஜெரார்டியானா | வறுத்த விதைகள் | உணவாகப் பயன் படுகின்றன |
| 3. | ஏபிஸ் பால்சாமியா | கனடாபால்சம்(ரெசின்) | நிலையான கண்ணாடித் துண்டம் (permanent slide)தயாரித்தலில் பொதித்தல் பொருளாக (mounting medium)பயன் படுகிறது. |
| 4. | பைனஸ் இன்சுலாரிஸ், பை, ராக்ஸ் பரோயியை | ரோசின்,டர்பன்டைன் | தாள்(காகித)அள வீட்டிலும், வார்னிஷ் தயாரிக்கவும் உதவுகின்றன. |
| 5. | அரகேரியா, பில்லோ கிளாட்ஸ,பைசியா | டானின்கள் | பட்டையி லிருந்து பெறப்படும் டானின்கள் தோல் துறையில் பயன்படுத்தப் படுகின்றன. |
| 6. | டாக்ஸஸ் பிரேபிஃ போலியா | டாக்ஸால் | புற்றுநோய் சிகிச்சைக்கு பயன் படுகிறது. |
| 7. | எபிட்ரா ஜெரார்டியானா | ஏஃபிடிரின் | ஆஸ்த்துமா மூச்சுக் குழாய் அழற்சி ஆகிய நோய்களை குணப்படுத்தும் மருத்தாகப்பயன்படுகிறது. |
| 8. | பைனஸ் ராக்ஸ்பரோயியை | ஒலியோ ரெசின் | கோந்து, வார்னிஷ்கள், அச்சுமை தயாரித்தலில் உதவுகிறது. |
| 9. | பைனஸ் ராக்ஸ்பரோயியை பைசியா ஸ்மித்தியானா |
மரக்கூழ் | காகிதம் தயாரிக்க உதவுகிறது. |
| 10. | செட்ரஸ் டியோடரா | மரக்கட்டை | கதவுகள், படகுகள், தண்டவாள அடிக் கட்டைகள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது. |
| 11. | செட்ரஸ் அட்லாண்டிகா | எண்ணெய் | வாசனை திரவத் தயாரிப்பில் பயன்படுகிறது. |
| 12. | துஜா, குப்ரசஸ், அரகேரியா, கிரிப்டோமீரியா | முழு தாவரம் | அலங்காத் தாவரங் களாகப் பயன்படுகிறது. |
5.
தாவர செல் பகுப்பிற்கும், விலங்கு செல் பகுப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு.
| தாவர செல் பகுப்பு | விலங்கு செல் பகுப்பு |
| சென்ட்ரியோல்கள் காணப்படுவதில்லை | சென்டிரியோல்கள் காணப்படுகின்றன. |
| நட்சத்திர இழைகள் உருவாவது இல்லை. | நட்சத்திர இழைகள் உருவாகின்றன. |
| செல் பகுப்பின்போது செல்தட்டு உருவாகிச் சைட்டோபிளாச பகுப்பு நிகழ்கிறது. | செல் பகுப்பில் சைட்டோபிளாச பகுப்பு சவ்வில் நிகழும் உட்குழிவு மூலம் நிகழ்கிறது. |
| இப்பகுப்பு பொதுவாக ஆக்குத்திசு செல்களில் நிகழ்கிறது. | உடல் முழுவதிலும் உள்ள திசுக்களில் நிகழ முடியும். |
6.
1.பாசிகள் அளவு, வடிவம், அமைப்பு ஆகியவற்றில் பெரிதும் வேறுபட்டு காணப்படுகிறது.(ஒரு செல்,பல செல்,காலனி சூழல், இழை, இரு வடிவ உடலம், வட்டு வடிவம், இலை வடிவம், இராட்சச கடல் பாசி)
2.நீலப்பசும் பாசிகளைத் தவிர பிற பாசிகள் மெய்யுட் கரு உயிரிகள்.
3.உடலத்தில் திசுத்தொகுப்பு வேறுபாடு காணப்படுவதில்லை.
4.செல்சுவர் செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோசால் ஆனது.
5. டயாட்டம்களில் செல்சுவர் சிலிகாவால் ஆனது.
6.கேராவின் உடலம் கால்சியம் கார்பனேட்டால் சுழப்பட்டுள்ளது.
7.செல்சவ்வினால் சூழப்பட்டுள்ள உட்கரு, பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியங்கள், எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள் போன்றவை காணப்படுகின்றன.
8.பைரினாய்டுகள் காணப்படுகின்றன.
9. பாசிகள் உடல், பாலிலா பால் இனப் பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கிறது.
10.உடல இனப்பெருக்கமானது, இரு பிளவுறுதல், துண்டாதல், மொட்டு விடுதல், சிறுகுமிழ் மொட்டுகள், உறக்க நகராவித்து கிழங்குகள் மூலம் நடைபெறுகிறது.
11. பாலிலா இனப்பெருக்கமானது, இயங்குவித்துக்கள், நகராவித்து, சுயவித்து மூலம் நடைபெறுகிறது.
12. பால் இனப்பெருக்கம், ஒத்த கேமீட்டுகளின் இணைவு, சமமற்ற கேமீட்களின் இணைவு, மற்றும் முட்டை கருவுருதல் முறை மூலம் நடைபெறுகிறது.
13. வாழ்க்கைச் சுழற்சி தெளிவான சந்ததி மாற்றத்தைக் கொண்டுள்ளது.
7.
விதைத்தாவரங்கள் , இரு விதையிலைத் தாவரங்கள் , திறந்த விதைத் தாவரங்கள் , ஒரு விதையிலைத் தாவரங்கள் என் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
வகுப்பு 1- இரு விதையிலைத் தாவரங்கள் (dicotylednae) விதைகள் இரண்டு விதையிலைகளையும் , இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவையும் , ஆணி வேர்த் தொகுப்பையம் நான்கு அல்லது ஐந்து அங்கமலர் தொகுப்பிணையும் கொண்டுள்ள தாவரங்கள் இவ் வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்படடுள்ளன.இவ்வகுப்பு அல்லி தனித்தவை , அல்லி இணைந்தவை வேறுபாடற்ற பூவித்ழ்க்குழுமம் என மூன்று துணை வகுப்புகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
துணைவகுப்பு 1 - அல்லி தனித்தவை (polypetalae) தனித்த இணையாத அல்லிகளைக் கொண்ட ஈரூறை மலர்கள் இத்துணை வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இது மேலும் , பூத்தளக் குழுமம் , பூத்தட்டு குழுமம் , கோப்பைவடிவ பூத்தளக் குழுமம் என மூன்று வரிசைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வரிசை (i)பூத்தளக் குழுமம்(thalamiflorae): வட்ட வடிவ அல்லது கூம்பு அல்லது வடிவப் பூத்தளத் தையும் மேல் மட்டச் சூலகத்தையும் உடைய மலர்களைக் கொண்ட தாவரங்கள் இதில் அடங்கும் .இது 6 துறைகளையும் 34 குடும்பங்களையும் கொண்டது
வரிசை (ii) - பூத்தட்டு குழுமம் (disciflorae) சூலகத்தின் கீழ்ப்புறத்தில் தெளிவான வட்டு போன்ற பூத்தள அமைப்பிணையும் , மேல் மட்டச் சுல்கத்தை யும் உடைய மலர்களை கொண்டால் தாவரங்கள் இதில் அடங்கும் .இது 4 துறைகளையும் 23 குடும்பங்களையும் கொண்டது
வரிசை (iii) கோப்பைவடிவ பூத்தளக் குழுமம்(calyciflorae) கோப்பை வடிப் பூத்தளத்தையும் மேல்மட்ட/கீழ்மட்ட இடைமட்ட சூலகத்தை உடைய மலர்கள் இதில் அடங்கும் இது 5 துறைகளையும் 27 குடும்பங்களையும் கொண்டது.
துணை வகுப்பு 2 - அல்லி இணைந்தவை (gamopetalea) முழுமையாகவோ பகுதியாகவோ இணைந்த அல்லிகள் , ஈருறை மலர்கள் கொண்ட தாவரங்கள் இதில் அடங்கும் .இவ்வகுப்பு கீழ்மட்டச் சூலகக் குழுமம் என மூன்று வரிசைகளைக் கொண்டது.
வரிசை (i)- கீழ்மட்டச் சூலகக் குழுமம் (inferae)கீழ்மட்டச் சூலககத்தையுடைய சூலகககீழ் மலர்களைக் கொண்டது,
கீழ்மட்டச் சூலகக் குழுமத்தில் 3 துறைகளும் 9 குடும்பங்களும் உள்ளன.
வரிசை (ii) பல் சூலக இலைக் குழுமம் மேல்மட்டச் சூலகத்தையுடைய சூலக மேல் மலர்களையும் , இரண்டிற்கு மேற்பட்ட சூலக இலைகளையும் உடைய மலர்களை கொண்டது.இதில் 3 துறைகளும் 12 குடும்பங்களும் உள்ளன.
வரிசை (iii) இரு சூலக இலைக் குழுமம் (bicarpellate) மேல்மட்டச் சூலகமும் , இரண்டு சுழிலைகளையுடைய மலர்களை கொண்டது,இதில் துறைகளும் 24 குடும்பங்களும் உள்ளன.
துணைவகுப்பு 3- வேறுபாடற்ற பூவிதழ்க் குழுமம் அல்லி அற்ற அல்லது அல்லி -புல்லி வேறுபாடற்ற ,முழுமையற்ற மலர்களை கொண்ட தாவரங்கள் இத்துணை வகுப்பில் இடம் பெற்றுள்ளன.இம்மலர்களில் புல்லி , அல்லி இதழ்கள் தெளிவாக காணப்படாதல் பூவிதழ் வட்டம் என அழைக்கப்டுகிறது.புல்லி -அல்லி வேறுபாடற்ற குழுமம் 8 வரிசைகளையும் 36 குடும்பங்களையும் கொண்டது.
வரிசை(ii) திறந்த விதைக் குழுமம் (Gymnospermae) திறந்த விதைகளை கொண்ட தாவரங்கள் இதில் உள்ளன,இவ்வகுப்பில் சைக்கடேசி , கோணிஃபெரே , நீட்டேசி என மூன்று குடும்பங்கள் உள்ளன.
வரிசை (iii) - ஒருவிதையிலைத் தாவரங்கள் விதைகள் ஒரு விதையிலையையும் சல்லிவேர்தொகுப்பையும் இலைகள் இணை நரம்பமைவையும் முவங்க மலர்களையும் கொண்ட தாவரங்கள் இவவகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.ஒருவிதையிலைத் தாவர 7 வரிசைகளையும் 34 குடும்பங்களையும் கொண்டது.
பெந்தாம் மற்றும் ஹுக்கர் வகைப்பாடு காலனி ஆதிக்க நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு அந்நாடுகளின் உலர் தாவர சேமிப்புகளை வகைப்படுத்த நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்தது.உலகின் சில உலர்தாவர சேமிப்பு நிலையங்களில் இன்றளவும் தாவரங்களை அடையாளம் காணப் பின்வரும் காரணங்கள் இவவகைப்பாடு பின்பற்றப்பட்டு வருகின்றது.
1. தாவரங்களின் விளக்கங்கள் மிகவும் துல்லியமகவும் ஏற்புடையதாகவும் இருந்தன .ஏனென் றால் இது வெறும் ஒப்பிடுகளின் அடிப்படையில் அல்லாமல் தாவரங்களை நுண்ணிய நேரடி ஆய்விற்கு உட்படுத்தி வகைப்படுத்தப்பட்டது.
2. இவ்வகைப்பாடு பின்பற்றுவதற்கு எளிமையாகவும் தாவரங்களை இனங்கண்டறிய ஒரு திறவுகோலாகவும் இவவகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது.
இது ஓர் இயற்கை முறை வகைப்பாடாக இருந்தாலும் இன்வகைப்பட்டை ஒரு பரிணாம வகைப்பாடாக்க கருத இயலாது.
8.
1.நொதியால் ஊக்குவிக்கப்படும் வினையின் ஆரம்பப்பொருள் தளப்பொருள் (Substrate) எனப்படும்.அது மாற்றமடைந்து விளைப்பொருள் (Product) ஆகிறது.
2.தளப்பொருளானது நொதியின் மீது உள்ள ஊக்குவிப்பு தளம் (Active site) என்ற பகுதியோடு பிணைந்துக் கொள்கிறது.
3.இது பூட்டு - சாவி இயக்க முறையில் நிகழும் நொதி செயலாகும்.(Lock and key mechanism) இவ்வாறு நொதி - தளப்பொருள் கூட்டுத்தொகுதி உருவாகும் போது தளப்பொருளின் ஆற்றல் உயர்ந்து இடைநிலையை அடைந்து பின்னர் விளைப்பொருட்களாக மாறுவதுடன் நொதி எந்த மாற்றமும் அடையாமல் விடுவிக்கப்படுகிறது.
9.
1. இரைப்பையில் 4 முதல் 5 மணி நேரம் தங்கியுள்ள உணவு தொடர் அலையியக்கத்தின் மூலம் இரைப்பை நீருடன் கலந்து கடையப்படுகிறது.
2. இதனால் உணவு இரைப்பைப்பாகு என்னும் கூழ்ம நிலையை அடைகிறது.
3. தானியங்கு அனிச்சை செயல் மூலம் இரைப்பை நீர் சுரப்பு ஓரளவிற்குக் கட்டுப் படுத்தப்படுகிறது.
4. உணவு வாயினுள் இருக்கும் பொழுது இரைப்பை நீர் சுரப்பு துவங்குகிறது.
5. இரைப்பை நீரில் HCl அமிலமும் மற்றும் பல முன்னோதிகளும் உள்ளன.
6. செயல்படாத முன்னோதியான பெப்ஸினோஜனை செயல்படும் நொதியான பெப்ஸினாக HCI அமிலம் மாற்றுகின்றது.
7. பெப்ஸின் உணவிலுள்ள புரதத்தை புரோட்டியோஸ்களாகவும், பெப்டோன்களாகவும் (பெப்டைடுகள்) மாற்றுகிறது.
8. HCI அமிலம் உணவை அமிலத்தன்மையுடன் (pH. 1.8) இருக்கச் செய்து பெப்சின் செயல்பாட்டிற்கு உகந்த நிலையை அளிக்கிறது.
9.கேடுவிளைவிக்கும் பாக்ட்டீரியா மற்றும் பிற கிருமிகளை அழித்து உணவு அழகுதலை தடுக்கின்றது.
10. இரைப்பை நீரில் உள்ள கோழை மற்றும் பைகார்பனேட்டுகள் உயவுப் பொருளாகி, அதிக அமிலத்தன்மையுடைய HCl பாதிப்பிலிருந்து இரைப்பையின் கோழை படல எபிதீலியத்தை பாதுகாக்கிறது
11 ரென்னின் எனும் புரதநோதி இளங்குழந்தைகளின் இரைப்பை நீரில் உள்ளது.
12. ரென்னின் கால்சியம் அயனிகளின் முன்னிலையில் பால் புரதமான காசினோஜனை காசினாக மாற்றுகிறது.
13. வயது அதிகரிக்கையில் ரென்னின் அளவு குறைகிறது.
10.
திரள் கனிகள் (Aggregate fruit): இது இணையாச் சூலகங்கள் கொண்ட ஓர் தனி மலரில் இருந்து உருவாகும் கனியாகும். ஒவ்வொரு தனிச் சூலகமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. இத்தகைய சிறுகாணிகளின் தொகுப்பு திரள் கனியை உண்டாக்கும். ஒவ்வொரு சூலகமும் ஒரு உள்ஒட்டு சதைக்கனி, உறைஒட்டா வெடியாக்கனி, ஒரு புற வெடிகனி அல்லது சதைக்கனி வகை கனியாக உருவாகும். ஒரு தனி மலரால் உருவாக்கப்படும் இச்சிறு கனிகளின் திரள் கனித்தொகுப்பு (Etaerio) எனப்படும்.
எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பலியால்தியா
11.
1. படர்செடிகள் (Creepers): தரையை ஒட்டிக் கிடைமட்டமாகப் படர்ந்து வளர்ந்து ஒவ்வொரு கணுவிலும் வெற்றிட வேரினை உண்டாக்கும். செடிகளுக்குப் படர் செடிகள் என்று பெயர்.
எ.கா: சைனோடான் சென்டெல்லா (வல்லாரை)
2. தரைவழ்தண்டுச் செடிகள் (Trailers or Stragglers): வலுவற்ற தண்டினைக் கொண்ட இவை தரையை ஒட்டியே படர்ந்து வளரும் செடிகளாகும். ஆனால் இவ்வகை செடிகள் கணுக்களில் வேர்களைத் தோற்றுவிக்காது. இவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
(i) தரைபடர் அல்லது நிலம் படர் செடிகள் (Prostrate or Procumbent): இவ்வகை தாவரங்களில் முழுத் தாண்டும் தரையே ஒட்டியே படர்ந்து வளர்வதால் இவற்றிற்குத் தரைபடர் அல்லது நிலம் படர் செடிகள் என்று பெயர். எ.கா: இவால்வுலஸ் அல்சினாய்டஸ் (விஷ்ணு கிரந்தி) இண்டிகோஃபெரா புராஸ்ட்ரேட்டா.
(ii) நுனி நிமிர் படர் தாவரங்கள் (Decumbent): இவ்வகை தாவரங்களில் தண்டானது சிறிது தூரம் தரையுடன் படர்ந்து வளர்ந்து பின் இனப்பெருக்கத்தின்போது நுனியில் செங்குத்தாக நிமிர்ந்து வளர்கின்றது. எ.கா: போர்டுலகா (பருப்பு கீரை) டிரைடாக்ஸ் (வெட்டுக்காயப் பூண்டு), லிண்டன்பெர்ஜியா.
(iii) கிளைபரவு தண்டு தாவரங்கள் (Diffuse): இவை படரும் கிளைகளைக் கொண்ட படர் தாவரங்களாகும். எ.கா:போஹர்ஹேவியா டிஃயூசா (மூக்கிரட்டை), மெரிமியா ட்ரைடென்டேட்டா.
3. ஏறுகொடிகள் (Climbers): இவை பெரிய, நலிந்த தண்டுகளைக் கொண்ட தாவரங்களாகும். ஏறுகொடிகள் ஆதாரத்தைப் பற்றி சில சிறப்புத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தத் தகவமைப்புகள் இலையை சூரிய ஒளிபடுமாறு செய்யவும், மகரந்தச் சேர்க்கைக்கு மலர்களை வெளிப்படுத்திக் காட்டவும் உதவுகின்றன.

(i) வேர் ஏறுகொடிகள் (Root climbers): இவ்வகை தாவரங்கள் கணுக்களிலிருந்து தோன்றும் வெற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி ஏறுகின்றன. எ.கா: பைப்பர் பீடல், பைப்பர் நைக்ரம், ஹீடிரா ஹெலிக்ஸ், போதாஸ், ஹோயா.
(ii) தண்டு சூழல் கொடி அல்லது பின்னு கொடிகள் (Stem climbers /twiners): இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டுப் பகுதியே ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றது. எ.கா: ஐபோமியா, கன்வால்வுலஸ், டாலிகஸ், கிளைடோரியா, குவிஸ்குவாலிஸ், தண்டு ஏறுகொடிகள் ஆதாரத்தை வலம்புரியாகவோ அல்லது இடம்புரியாகவோ சுழன்று வளர்கின்றன. வலம்புரியாகச் சுழன்று வளரும் சூழல்கொடிகளுக்கு வலம்புரிச் சூழல் கொடிகள் (Dextrose) என்று பெயர். எ.கா: டயாஸ்கோரியா அலாட்டா, இடம்புரியாகச் சுழன்று வளரும் சூழல்கொடிகளுக்கு இடம்புரிஸி சூழல் கொடிகள் (Sinistrose) என்று பெயர். எ.கா: டயாஸ்கோரியா பல்பிஃபெரா (காய்வள்ளிக்கொடி)
(iii) கொக்கி ஏறுகொடிகள் (Hook climbers): இவ்வகை தாவரங்கள் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கு ஏதுவாகச் சில சிறப்பான கொக்கி போன்ற அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன. இந்தக் கொக்கி போன்ற அமைப்புகள் தாவரத்தின் பல்வேறு உறுப்புகளின் உருமாற்றமாகும்.
ஆர்டாபாட்ரிஸ் (மனோரஞ்சிதம்) தாவரத்தில் மஞ்சரியின் அச்சு (பூக்காம்பு ) கொக்கியாக உருமாறியுள்ளது. கலாமஸ் (பிரம்பு) தாவரத்தில் இல்லை நுனியானது வளைந்த கொக்கியாக உருமாறியுள்ளது. ஹீகோனியா தாவரத்தில் கோண மொட்டுகளானது கொக்கியாக உருமாறியுள்ளது.
(iv) முள் ஏறுகொடிகள் (Thorn climers): இவ்வகை தாவரங்கள் முட்களின் உதவியால் ஆதாரத்தைப் பற்றி ஏறுகின்றன. எ.கா: போகன்வில்லா, காரிசா
(v) வன்கொடிகள் (Lianas /Woody stem climbers): வெப்பமண்டலக் காடுகளில் காணபப்டும் தடித்த, கட்டைதன்மையுடைய பல்லாண்டு வாழும் கொடிகளுக்கு வன்கொடிகள் என்று பெயர். இவ்வகை கட்டைத்தன்மையுடைய தண்டுகள் தானாகவே கயிறு போல் சுழன்று காடுகளிலுள்ள மிக உயர்ந்த மரங்களைச் சுற்றிச் சூரிய ஒளி படுவதற்கு ஏதுவாக வளர்கின்றன. எ.கா: ஹிப்டேஜ் பெங்காலென்சிஸ் (குருக்கத்தி), பாஹீனியா வாலி (மந்தாரை), எண்டாடா பர்சீதா.
(vi) பற்றுக்கம்பி கொடிகள் (Tendril climbers): பற்றுகம்பிகள் சுருண்ட நூல் போன்று காணப்படும் அமைப்புகளாகும். தாவரங்கள் ஆதாரத்தைப் பற்றி ஏற இப்பற்றுக்கம்பிகள் உதவுகின்றன. தாவரத்தின் பல உறுப்புகள் பற்றுக்கம்பிகளாக உருமாறுகின்றன. பாசிஃபுளோரா (சிறுபூனைக்காக்காலி), வைடிஸ், மற்றும் சிஸ்சஸ்குவாட்ராங்குலாரிஸ் (பிரண்டை) போன்ற தாவரங்களில் தாண்டும் ஆன்டடிகோனான் தாவரத்தில் மஞ்சரி அச்சும், லத்தைரஸ் தாவரத்தில் சிற்றிலையும், கிளிமாடிஸ் (பெருங்குறும்பை) தாவரத்தில் இலைக்காம்பும், குளோரியோசா (காந்தள்) தாவரத்தில் சிற்றிலையும், கிளிமாடிஸ் (பெருங்குறும்பை) தாவரத்தில் இலைக்காம்பு, குளோரியோசா (காந்தள்) தாவரத்தில் இலை நுனியும், ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் இரு இலையடிச் செதிலும் பற்றுக்கம்பியாக உருமாறியுள்ளன.
குடுவைத் தாவரத்தில் (நெப்பந்தஸ்) இலையின் நடு நரம்பானது சில சமயங்களில் பற்றுக்கம்பி போல் சுருண்டு குடுவை பகுதியை நேராக நிறுத்த உதவுகிறது.
4. இலைத்தொழில் தண்டு (Phylloclade): இவை பசுமை நிற தட்டையான உருண்ட அல்லது கோணங்களுடன் கூடிய தண்டாகும். பல கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் குறுகிய அல்லது நீண்ட இடைவெளியில் கொண்ட கிளையாகும். இலைத்தொழில் தண்டு வறண்ட நிலத் தாவரங்களின் ஒரு சிறப்பு தகவமைப்பாகும். இத்தாவரங்களில் நீராவி
போக்கை கட்டுப்படுத்த இலைகள் பெரும்பாலும் விரைந்து உதிர்பவையாகவோ, முட்களாகவோ அல்லது செதில்களாகளாகவோ உருமாறுகின்றன. எனவே இலைத்தொழில் தண்டு இலைகளின் வேலையான ஒளிச்சேர்க்கையைச் செய்கிறது. இலைத் தொழில் தண்டினை கிளை இலை (Cladophyll) என்றும் அழைப்பர்.

தட்டையான ஃபில்லோகிளாடிற்கு எ.கா:ஒபன்சியா
ஃபில்லோகாக்டஸ், முகலன்பெக்கியா, உருளையான ஃபில்லோகிளாடிற்கு எ.கா: கேசுரைனா, யுஃபோர்பியா திருக்கள்ளி, சதுரக்கள்ளி -யூஃபோர்பியாயா ஆண்ட்டிகோரம்.
5. குறு இலைத் தொழில் தண்டைப் போன்றே தட்டையான அல்லது உருண்டை தண்டாகும். ஆனால் இவை ஒன்று அல்லது இரண்டு கணுவிடைப்டைப் பகுதிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றின் தண்டின் தன்மையை மொட்டுகள், செதில் இலைகள், மலர் போன்றவற்றைப் பெற்றிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எ.கா: உருளை வடிவக் குறு இலைத்தொழில் தண்டு-அஸ்பராகஸ், தட்டையான குறு இலைத்தொழில் தண்டு -ரஸ்கஸ்.

6. முட்கள் (Thorns): முட்கள் கட்டையான, கூர்மையான உருமாறிய தண்டாகும். கக்க மொட்டோ அல்லது நுனி மொட்டோ முள்ளாக உருமாற்றம் அடைகிறது. காரிசா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாகளாக உருமாறியுள்ளது. சிட்ரஸ் மற்றும் அடலான்சியா (காட்டுக் கிச்சில்) தாவரங்களில் கக்க மொட்டு முட்களாக உருமாற்றம் பெறுகிறது.
12.
13.
1.பெரும்பாலான சிற்றினங்கள், மட்குண்ணிகளாக மண்ணில் உள்ள அழுகிய தாவர, விலங்கின உடல்களின் மீது வாழ்கின்றன.சில ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை.(வீட்டு ஈக்களில் வாழும் எண்டமஃப்தேரா).
2ரொட்டி மீது வளரக் கூடியவை (மியூக்கர்,ரைசோபஸ்), சாணத்தில் வாழ்பவை (Coprophilous fungi)எ.கா: பைலோபோலஸ் இந்தத் தொகுப்பைச் சார்ந்தவைகளாகும்.
3.மைசீலியம் கிளைத்து பல்உட்கரு நிலையைப் பெற்றுள்ளது.
4.பாலிலா இனப்பெருக்கம் வித்தகங்களில் (sporangia) வித்துக்களைத் தோற்றுவிப்பதன் மூலம் நடைபெறுகிறது.
5.பாலினப்பெருக்கத்தின்போது கேமீட்டகங்கள் இணைந்து தடித்த சுவருடைய உறக்ககருமுட்டை(Zygospore) தோற்றுவிக்கின்றன.இவை நீண்ட காலம் ஓய்வு நிலையில் இருந்து குன்றல் பகுப்பிற்குப் பிறகு வித்துகளைத் தோற்றுவிக்கின்றன.
14.
1. புதிய தாவர பெயர்களின் வெளியிடு மின்னணு முறை பதிப்பாக வெளியிட விதிகள் அனுமதியளிக்கின்றது.
2.39வது சட்ட விதிப்படி ஒரு புதிய பெயரின் வழக்கம் அல்லது வரையறை இல்லத்தின் மொழி மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வெளியிட அனுமதியளிக்கின்றது.
3. ஒரு பூஞ்சை ஒரே பெயர் மற்றும் ஒரு தொல்லுயிர் ஒரே பெயர் என்ற முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒரே பூஞ்சையின் பாலிலா அமைப்பிற்கு (அனாமார்ப்) என்ற பெயரும் பாலின அமைப்பிற்கு (டீலோமார்ப்) என்ற பெயரும் முன்னர் நடைமுறையில் இருந்தது.அதே போல் ஒரே தொல்தாவரத்தின் பல பகுதிகள் பல பெயிரிடப்பட்டு (மார்போ டேக்ஸா ) வந்தன.இவை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.
அனாமார்ஃப் - பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை.
டீலோமார்ஃப் - பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை.
4.இன்டெக்ஸ் ஃபங்கோரம் மற்றும் பூஞ்சை அல்லது மைக்கோ வங்கி என அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புக்களஞ்சியங்கள் இரண்டு உள்ளன.புதிய பூஞ்சை பற்றிய விளக்கங்கள் மற்றும் பெயர் பதிவு ஓர் பூஞ்சையினைக் கண்டறிபவர் மூலம் பூஞ்சை களஞ்சியத்தில் பதியப்பட வேண்டும்.
15.
1. இலைகள் தண்டின் பக்கவாட்டு வளரிகள் ஆகும்.
2. இவை தண்டின் கணுவிலிருந்து உருவாகின்றன.
3. இவை தண்டின் புறத்தோன்றிகளாக உருவாகின்றன.
4. இவை வரையறுக்கப்பட்ட வளர்ச்சியினைக் கொண்டுள்ளன.
5. நுனிமொட்டு அற்றவை
6. இவை மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை முறையே இலையடிபகுதி, இலைக்காம்பு மற்றும் இலைப்பரப்பு ஆகும்.
7. இலைப்பரப்பில் வாஸ்குல இழைகளைப் பெற்ற முக்கிய அமைப்பு ஊடுருவி பரவிச் செல்கின்றன. இவற்றிற்கு நரம்புகள் என்று பெயர்.
16.
1. இது ஒரு சிறப்பு வகை மஞ்சரியாகும்.
2. முழு மஞ்சரியும் ஒரு தனி மலரைப்போல் காணப்படும்.
3. சிறிய ஒரு பால் மலர்கள் கோப்பை வடிவ வட்டப் பூவடிச்செதில் சுழக் காணப்படும்.
4. ஆண் மலர்கள் ஸ்கார்பியாய்டு முறையில் அமைந்திருக்கும்.?
5. பெண்மலர் தனித்து, மையப்பகுதியில் நீண்ட பூக்காம்புடன் காணப்படும்.
6. ஆண் மலர்கள் மகரந்தத்தாள் மட்டும், பெண் மலர் சூலகவட்டம் மட்டுமே கொண்டவை.
7. மஞ்சரி ஆரச் சமச்சீராகவோ காணபப்டும்.
8. தென் சுரப்பி வட்ட பூவடிச் செதில்கள் மேல் காணப்படும்.
17.
1. நீண்ட, உருளை வடிவ உடல் அமைப்பை கொண்டது.
2. இருபக்க சமச்சீரமைப்பு கொண்டது.
3. சுமார் 80மிமீ முதல் 210மிமீ வரையிலான நீளத்தையும் 3.5மிமி முதல் 5மிமீ வரையிலான விட்டதையும் உடையது
4. வெளிறிய பழுப்பு நிறம் கொண்டது.
5. முன்முனை போர்ஃபைரின் எனும் நிறமி காரணமாக ஊதா நிறத்துடன் காணப்படுகிறது.
6. உடலின் குறுக்காக பல சிறுபள்ளங்களால் ஆன வளைய வடிவ வரிப்பள்ளங்கள், உடலை பல பிரிவுகளாக பிரிகிறது.
7. இவை கண்டங்கள் அல்லது மெட்டாமியர்கள் எனப்படும்.
8. உடலில் சுமார் 165 முதல் 190 வரை கண்டங்கள் காணப்படும்
9. முதுகுப்புறத்தில் இரத்த நாளத்தினால் அடர்த்தியான நிறமுடையதாக காணப்படுகிறது.
10. வயிற்று புறப் பரப்பில் இனப்பெருக்கைத்துளைகள் உள்ளது.
11. முதல் கண்டமான பெரிஸ்டோமியத்தில் வாய் உள்ளது.
12. கடைசிகண்டமான பைஜிடியதில் மலவாய் உள்ளது.
13. முதல் கண்டத்தின் முனையில் புரோஸ்டோமியம் எனும் மேல் உதடு உள்ளது.
14. முதிர்ச்சியான புழுவில் 14 முதல் 17 வரையிலான கண்டங்கள் தடித்த தோல் சுரபிகளுடன் உள்ளது. இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
15. கருமுட்டைகள் உருவாக்க கிளைடெல்லம் துணைபுரிகிறது.
16. உடல் கிளைடெல்லம் முன்பகுதி (1-13 கண்டங்கள், கிளைடெல்லம் பகுதி (14-17 கண்டங்கள்) மற்றும் கிளைடெல்ல பின்பகுதி (18-இறுதி கண்டம்) பிரிக்கப்பட்டுள்ளது.
17. கைட்டினாலான சீட்டாக்கள் எல்லாகண்டங்களிலும் காணப்படுகிறது.(முதல் கண்டம், கடைசி கண்டம், கிளைடெல்லம் தவிர)
18. இது இடப்பெயர்ச்சிக்கு உதவுகிறது.
19. S வடிவ சீட்டவை வெளியே நீட்டவும் உள்ளிழுத்து கொள்ளவும் முடியும்.
20. உடலில் புறத்தே வாய் மலவாய் முதுகுப்புறத் துளைகள் விந்து கொள்பை திறப்புகள், இனப்பெருக்கத் திறப்புகள், நெஃப்ரீடியத் துளைகள் உள்ளது.
21. 10வைத்து கண்டத்திலிருந்து முதுகுப்புற துளைகள் காணபடுகின்றன.
22. உடற்குழி திரவம் முதுகுப்புற துளைகள் வழியாக வெளியேறி உடலினை ஈரப்பதத்துடன் வைப்பதோடு நுண்ணுயிரிகளின் தொற்றுகளில் இருந்து பாதுகாக்குகிறது.
23. விந்து கொள்பை துளைகள் முறையே 6/7, 7/8, 8/9 கண்டகளுக்கிடையே உள்ளது (3 இணைகள்)
24. ஓர் இணை பெண் இனப்பெருக்கத்துளை 14வது கண்டத்திலுள்ளது.
25. ஓர் இணை ஆண் இனப்பெருக்கத் துளை 18வது கண்டத்திலுள்ளது.
26. சில முன்பகுதி கண்டங்கள் தவிர அணைத்து கண்டங்களிலும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற நெஃப்ரீடியத் துளைகள் உள்ளது.
18.
| வ.எண் | எபிதீலியம் | காணப்படும் இடம் | வேலை | |
|---|---|---|---|---|
| I | எளிய எபிதீலியம் | |||
| 1 | தட்டை வடிவ எபிதீலியம் | சிறுநீரகக் கிளாமருலஸ், நுரையீரல் காற்றுப்பை, இதயம் , இரத்தக் குழல், நிணநீர் நாளங்கள் | உரை(பாதுகாப்பு) ஊடுருவல், வடிகட்டுதல் | |
| 2 | கனசதுர வடிவ எபிதீலியம் | சிறுநீரகக் குழல்கள், நாளங்கள் சிறிய சுரப்பிகள் அண்டக பரப்பு | சுரத்தல் உறிஞ்சுதல் | |
| 3 | தூண் வடிவ எபிதீலியம் | செரிமான மண்டலத்தில் உட்புறம் | உறிஞ்சுதல் பாதுகாப்பு கோழை நொதி சுரத்தல் | |
| 4 | குறுயிழை எபிதீலியம் | கருப்பை ஆண்ட நாளங்கள் சிறுநீர் நாளம் சிறிய சுவாசக் குழல்கள் | கோழை திரவத்தை உந்தித் தள்ளுகிறது. | |
| II | பொய் அடுக்கு எபிதீலியம் | சுவாசக் குழல், சுவாசப் பாதை, எபிடிடிமிஸ், பெரிய சுரப்பிகளின் குழல்கள் ஆண்களின் சிறுநீர் நாளம் | பாதுகாப்பு, சுரப்பு, உறிஞ்சுதல் | |
| III | சுரப்பு எபிதீலியம் | உணவுப்பாதையில் காணப்படும் கோப்பை வடிவ செல்க, உமிழ்நீர் சுரப்பிகள் | ||
| கூட்டு எபிதீலியம் | ||||
| IV | 1 | தட்டை எபிதீலியம் | உணவுக்குழல், வாய், பெண் இனப்பெருக்க உறுப்பு | சுரப்பு கடத்துதல் |
| 2 | அடுக்கு கன சதுர வடிவ எபிதீலியம் | வியர்வை சுரபிக் குழல் பால் சுரப்பிகள் | சுரப்பு | |
| 3 | தூண் வடிவ செல்கள் | தொண்டை ஆன் சிறுநீர் நாளம், சுரப்பிகளின் நாளங்கள் | சுரப்பு, கடத்தல் | |
19.
1. கடல்நீரிலும் நன்னீரிலும் வாழ்பாவை
2. ஓரிடத்தில் ஒட்டிவால்பவை
3. செல் அளவிலான அமைப்புடையவை
4. செல்கள் சமச்சீரற்றது
5. நீரோட்ட மண்டலமாக கால்வாய் மண்டலம் சிறப்பானது.
6ஆஸ்டியோ எனும் துளை வழியாக நீர் உடலுக்குள் நுழைந்து ஸ்பான்ஞ்சோசீல் எனும் மையக்குழியை அடைந்து பின்னர் ஆஸ்குலம் வழியாக வெளியேறுகிறது
7. உணவூட்டம், காற்றோட்டம், சுவாசம் மற்றும் கழிவு நீக்கம் இந்நீரோட்டம் மூலம் நடைபெறுகிறது.
8. கொயனோசைட்டுகள் அல்லது கழுத்துப்பட்டை செல்கள் ஸ்பான்ஞ்சோசீல் மற்றும் கால்வாய் பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
9. கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பான்ஞ்சினோலோ அல்லது இரண்டும் கலந்தோ ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
10. செல்உள் அல்லது ஹோலோசோயிக் உணவூட்ட முறை காணப்படுகிறது.
11. இவைகள் இருபால் உயிரிகள்.
12. பாலிலா இனப்பெருக்கம் மொட்டு விடுதல் அல்லது ஜெம்மியூல் மூலம் நடைபெறுகிறது.
13. பால் இனப்பெருக்கம் இனச் செல் உருவாக்கம் மூலம் நடைபெறுகிறது.
14. லார்வாக்கள் - பாரன்கைமுலா, ஆம்பிபிளாஸ்டுலா.
15. மறைமுக வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
எ. கா. 1. சைக்கான்
2. ஸ்பான்ஜிஜில்லா (நன்நீர் கடற்பஞ்சு)
3. யூஸ்பான்ஜி (குழியில் கடற்பஞ்சு)
20.
| நோயின் பெயர் | நோய்க் காரணி | ||
| I.தாவர நோய்கள் | |||
| 1. | நெல்லின் கருகல் நோய் | மாக்னபோர்தே கிரைசியே | |
| 2. | கரும்பின் செவ்வழுகல் நோய் | கோலிட்டோடிரைக்கம் ஃபால்கேட்டம் | |
| 3. | பீன்ஸின் ஆந்த்ரக்னோஸ் நோய் | கொலிட்டோ டிரைக்கம் லிண்டிமுத்தியானம் | |
| 4. | குருசிபெரே குடும்பத் தாவரதாவரங்களின் வெண்துரு நோய் | அல்புகோ கேண்டிடா | |
| 5. | பீச் இலைச்சுருள் நோய் | டாப்ரினா டிபார்மன்ஸ். | |
| 6. | கோதுமையின் துரு நோய் | பக்சீனியா கிராமினிஸ் - டிரிட்டிசை | |
| II. மனிதர்களின் ஏற்படும் நோய்கள் | |||
| 1. | சேற்றுப்புண் | எபிடெர்மோபைட்டான் | |
| 2. | கேண்டிடியாசிஸ் | கேண்டிடா அல்பிகன்ஸ் | |
| 3. | கோகிடியோய்டோ மைகோசிஸ் | கோகிடியயோய்டிஸ் இம்மிட்டிஸ் | |
| 4. | ஆஸ்பர்ஜில்லோசிஸ் | ஆஸ்பர்ஜில்லஸ் ஃபியுமிகேட்டஸ் | |
21.
| வ.எண் |
ஆக்ஸிஹீமோ குளோபின் உருவாவதற்குச் சூழல் (காற்று நுண்ணறைகளில்) |
ஆக்ஸி ஹீமோ குளோபினிலிருந்து O2 பிரிவதற்கானச் சூழல் (திசுக்களில்) |
| 1. | அதிக ஆக்ஸிஜன் பகுதி அழுத்தம் | குறைவான ஆக்ஸிஜன் பகுதி அழுத்தம் |
| 2. | குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடு பகுதி அழுத்தம் | அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு பகுதி அழுத்தம் |
| 3 | குறைவான வெப்பநிலை | அதிகமான வெப்பநிலை |
| 4. | குறைவான ஹைட்ரஜன் அயனி அடர்த்தி | அதிகமான ஹைட்ரஜன் அயனி அடர்த்தி |
22.
மனிதனின் இதயத்துடிப்பானது, இதயத்தின் திசைகளிலிருந்து தோன்றுவதால் மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சார்ந்தது.
நரம்பு மண்டலம், நலமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகியவற்றோடு அருகருகே செல்களுக்கு இடையேயான சமிக்ஞைகளும் இணைந்து நுண்தமனிகளின் விட்டத்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தி இரத்தம் பாய்வதை மாற்றுகிறது.
1. தானியங்கு நரம்பு மண்டலம் வழியாக இதயச் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
அ. பரிவு நரம்பு மண்டலம் நார்-எபிஃநெப்ரினையும்,அட்ரீனல் மெடுல்லா எபிஃநெப்ரினையும் வெளிவிடுகின்றன. இவை இரண்டும் அட்ரினர்ஜிக் உறை வேற்பிகளோடு இணைந்து இதயத்துடிப்பின் விதத்தை அதிகரிக்கின்றன.
ஆ. இணைப்பிரிவு நரம்பு மண்டலம் சுரக்கும் அசிட்டைல் கோலின் ஆனது மஸ்காரினிக் உணர்வேற்பிகளோடு இணைந்து இதயத்துடிப்பின் விதத்தை குறைகிறது.
2. சிறுநீரகச் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் வாஸோப்பிரஸ்ஸின் மற்றும் ஆஞ்சியோ டென்சின் II ஆகியவை இரத்த நாளத்தை சுருங்க்கின்றன.
3. நாட்ரியூரிடிக் பெப்டைடு இரத்த நாளத்தை விரிவடையச் செய்கிறது.
4. இணைப்பிரிவு நரம்பு மண்டலத்திலிருந்து வேகஸ் நரம்புகள் சைனு ஆரிக்குலார் கணு மற்றும் ஆரிக்குலோ வென்டிரிக்குலார் கணுவுக்கு செல்கிறது.
23.
இதனை கார்ல் வோயிஸ் உருவாக்கினார்.
1. பேருலகு -ஆர்க்கியா (Domain Archaea)
(i) ஒரு செல் உயிரிகளான புரோகேரியோட்டுகள் இவ்வகைபாட்டில் அடங்கும்.
(ii) இவை எரிமலை வாய்ப்பகுதி, வெந்நீரூற்றுகள், துருவப் பனிப்பாளங்கள் போன்ற சாதகமற்ற சூழ்நிலைகளிலும் வாழும் திறனுடையதால் இவை எக்ஸ்ட்ரிமோஃபைல்கள் என அழைக்கப்படுகின்றன.
(iii) இவை தனக்குத் தேவையான உணவைச் சூரிய ஒளி மற்றும் ஆக்சிஜனின்றி எரிமலை சாம்பலிருந்து வரும் ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் வேறு சில வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரித்துக் கொள்கின்றன.
(iv) இவற்றுள் சில உயிரிகள் மீத்தேன் வாயுவை (மெத்தனோஜன்) உற்பத்தி செய்கின்றன.
(v) உப்புத்தன்மையுள்ள சூழ்நிலையில் வாழும் சில உயிரினங்கள் ஹேலோஃபைல்கள் எனவும்
(vi) அதிக வெப்பம் மற்றும் அமிலத்தன்மையில் வாழும் உயிரினங்கள் தெர்மோ அஸிடோபைல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
2. பேருலகு - பாக்டீரியா
(i) இவையனைத்தும் புரோகேரியோட்டுகள் வகையைச் சேர்ந்தவை.
(ii) தெளிவான உட்கருவும்.
(iii) ஹிஸ்டோன்களும் கிடையாது. குரோமோசோம் வட்டவடிவ DNA வாக காணப்படுகிறது.
(iv) 70 s வகை ரைபோசோம்களைத் தவிரச் சவ்வினால் சூழப்பட்ட செல் உறுப்புகள் எதுவும் கிடையாது.
(v) பெப்டிடோகிளைக்கன் (Peptidoglycans) கொண்ட செல்சுவரைப் பெற்றுள்ளன.
(vi) பெரும்பாலானவை சிதைப்பவைகளாகவும் (Decomposers)
(vii) சில ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிப்பவையாகவும் (Photo synthesizers)
(viii) சில நோய் உண்டாக்கக் கூடியனவாகவும் உள்ளன.
(ix) பயன்தரும் புரோபையோடிக் பாக்டீரியாக்களும் (Probiotic bacteria) தீங்கு பயக்கும் நோயூக்கி பாக்டீரியாக்களும் (Pathogenic bacteria) அதிக அளவில் பரவிக் காணப்படுகின்றன.
(x) சையனோபாக்டீரியாக்கள் எனப்படும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக் கூடிய நீலப் பச்சைப் பாசிகள் புவியின் தொடக்கக் காலமான ஜியோலாஜிக் காலத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ததன் மூலம் புவியைக் காற்றற்ற சூழலிலிருந்து காற்றுள்ள சூழலுக்கு மாற்றியதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
3. பேருலகு - யூகேரியா (Eukarya)
(i) செல்களில் உண்மையான உட்கருவையும் சவ்வினால் சூழப்பட்ட செல் உள்ளுறுப்புகளையும் கொண்டுள்ளவை யூகேரியோட்டுகள் எனப்படும்.
(ii) இதன் உட்கருவில் ஹிஸ்டோன் புரதத்துடன் கூடிய வரிசையாக அமைந்த DNA க்களை கொண்ட குரோமோசோம் காணப்படுகின்றது.
(iii) மேலும், சைட்டோபிளாசத்தில் 80 s வகை ரிபோசோம்களும், பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்ட்ரியங்களில் 70 s வகை ரைபோசோம்களும் உள்ளன.
(iv) இப்பேருலகின் கீழ் வரும் உயிரிகள் புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
24.
1. சிவப்பு செல்கள்
2. வெள்ளை அணுக்கள்
3. எரித்ரோசைட்டுகள்
4. பிளாஸ்மா
5. வெள்ளை அணுக்கள்
6. பிளாஸ்மா
7. எரித்ரோசைட்டுகள்
8. ஹீமோகுளோபின்
9. எரித்ரோசைட்டுகள்
10. இரத்த உறைவு
11. ஃபேகோசைட்
12. எரித்ரோசைட்டுகள்
13. லிம்போசைட்டுகள்
14. இரத்த உறைவு
15. பிளேட்டுலெட்டுகள்
16. லியூகோசைட்டுகள்
17. ஹீமோ குளோபின்
18. பிளேட்டுலெட்டுகள்
25.
A - வலது, இடது, கல்லீரல் நாளம்,
B - பொது பித்த நீர் நாளம்,
C - கணைய நாளம்
D - கல்லீரல் கணைய நாளம்|
E - சிஸ்டிக் நாளம்.
26.
27.
| I. தளர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | ஏரியோலார் திசு | - எப்பீதிலிய செல்களுக்கு தாங்கு சட்டகம் - உடல் திசுக்களுக்கு நீர், உப்பினை தேக்குகிறது |
| 2 | அடிபோஸ் திசு | - கொழுப்பையும், பயன்படுத்தப்படாத உணவை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. - உணவுண்ணாத நிலையில் ஆற்றலை கொடுக்கிறது. |
| 3 | ரெட்டிகுலார் திசு | - நிணநீர் கணுக்கள், மண்ணீரல், எலும்பு மஞ்சை போன்ற உறுப்புகளில் இரத்த செல்களுக்கு அகசட்டமாக பயன்படுகிறது. |
| II. அடர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | அடர்வான சீரான திசு | - தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது. - எலும்பினையும் எலும்புபினையும் இணைகிறது. |
| 2 | அடர்வான சீரற்ற திசு | - சிறுநீரகம், எலும்பு, குருத்தெலும்பு, தசைகளுக்கு நாரிழை உரையாக அமைகிறது. |
| 3 | மீள்தன்மை திசு | - இழுக்கப்பட்ட தசைகளை மீண்டும் சுருண்ட உறையாக அமைகிறது. - தமனிகள் சுருங்கி விரிய, நுரையீரல் சுருங்க காரணமாகிறது. |
| III. சிறப்பு வகை இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | குருத்தெலும்புகள் | - வளையும், அழுத்தத்தை தாங்கும் - காதுமடல், மூக்கின் ஆதரவு மற்றும் அமைப்பைத் தருகிறது. |
| 2 | எலும்புகள் | - அகச்சட்டமாக அமைந்து உடலுக்கு உருவத்தை கொடுக்கிறது. |
| 3 | இரத்தம் | - திரவ இணைப்புத்திசு - உடலில் உள்ள அணைத்து உறுப்புகளையும் இணைகிறது. |
28.
அ. கடல் சாமந்தி (ஆடம்கியா) (தொகுதி: நிடோரியா)
ஆ. இருபக்க சமச்சீரமைப்புடைய விலங்கு
இ. தலை காணப்படவில்லை
ஈ. ஈரடுக்கு கொண்ட உயிரி
உ. ஒன்று மட்டும் (வாய் அல்லது ஹைப்போஸ்டோம்).
ஊ. வலைப் பின்னல் அமைப்பாக பரவியுள்ள மிக எளிய நரம்பு மண்டலம் உள்ளது.
29.
1. புதிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, பாரம்பரிய வகைப்பாட்டுக் கருவியிலிருந்து மூலக்கூறு அளவிலான வகைபாட்டுக் கருவிகளை உருவாக்க உதவியுள்ளன. அதிகத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை இம்முறைகளின் சிறப்பம்சங்களாகும். கீழ்கண்ட முறைகள் வகைப்பாட்டியலில் பயன்படுத்துகின்றன.
2. ஒரு உயிரியின் டி.என்.ஏ வில் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை வைத்துக் கொண்டு அவ்வுயிரினம் குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்ததா என்று அறிய டி.என்.ஏ வரிக்குறியீடு (DNA barcoding) தொழில் நுட்பம் உதவுகிறது.
3. ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை, டி.என்.ஏ வரிசை அமைப்பு மூலம் கண்டறிய, டி.என்.ஏ கலப்பு ஆக்கம் (DNA hybridization) எனும் தொழில் நுட்பம் உதவுகிறது.
4. டி.என்.ஏ வில் உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிடுவதன் மூலம், உயிரியை அடையாளம் காண, டி.என்.ஏ கைரேகை தொழில் நுட்பம் (DNA Finger printing) உதவுகிறது.
5. ஒத்தமைவு டி.என்.ஏ மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை, டி.என்.ஏ மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம்முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வு (Restriction Fragment Length polymorphisms analysis) என்று பெயர்.
6. ஒற்றை ஜீனையோ அல்லது ஜீனின் பகுதியையோ பாலிமரஸ் சங்கிலி வினையை (PCR) பயன்படுத்தி, பெருக்கி பின் அதனை வகைபாட்டுக் கருவியாக பயன்படுத்தலாம்.
30.
பாக்கிடீன்: இந்த நிலையில் பைவாலண்ட் குரோமோசோம்களின் நான்கமை நிலை (Tetrads) தெளிவாகப் புலப்படுகிறது. மியாசிஸ் I ல் பைவாலண்ட் ஒவ்வொன்றும் 4 குரோமாட்டிட்கள், 2 சென்ட்ரோமியர்களைக் கொண்டுள்ளது. ஒத்திசைவு குரோமோசோமின் (Homologous chromosome ) சகோதரி குரோமாட்டிட்கள் குறுக்கெதிர் மாற்றம் (Crossing over ) நடைப்பெற்ற பகுதியில் மீள்சேர்க்கைக்கு உதவும் இலக்குகள் (Recombination
nodules) தோன்றுகிறது. இந்தத் துணை நிலையின் முடிவில் ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே மீள் சேர்க்கை நிகழ்வது முடிவுற்றுக் குறுக்கெதிர் மாற்றம் நடந்த பகுதியில் மட்டும் குரோமோசோம்கள் இணைந்துள்ள நிலை ஏற்படுகிறது. இந்நிகழ்விற்கு ரிகாம்பினேஸ் என்ற நொதி உதவுகிறது.

டிப்லோட்டீன்: சினாப்டினிமல் தொகுப்பு கலைந்து கரையத் தொடங்கிறது. குறுக்கெதிர் மாற்றம் நடந்து, ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட புள்ளிகளில் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிணைந்த நிலையிலேயே உள்ளன. இவ்விலக்கில் "X" வடிவ அமைப்பு காணப்படுகிறது. இவ்விலக்குகள் கயாஸ்மாக்கள் (Chiasmata) எனப்படுகின்றன. குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழ்ந்த இலக்கை இந்தக் கயாஸ்மாக்கள் குறிக்கின்றன. சகோதரி குரோமாட்டிகள் நெருக்கமாக இணைவுற்றிருந்தாலும் ஒத்திசைவு குரோமோசோம்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிய நிலையில் காணப்படும். இருப்பினும் இவை காயஸ்மா இலக்குகளில் இணைந்தே காணப்படுகின்றன. இந்த துணை நிலையில் பால் தன்மை மற்றும் உயிரிகளுக்கேற்ப நாட்கள் அல்லது வருடங்கள் வரை நீடிக்கும்.

பெண் கேமீட்டான முட்டையில் கருவளர்ச்சிக்கான ஊட்டப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் குரோமோசோம்களில் அதிவேகமாக படியெடுத்தல் நடைபெறுகிறது. இதனால் ஏற்படும் குரோமோசோம் அமைப்பே விலங்கு செல்களில் காணப்படும் விளக்கு தூரிகை குரோமோசோம் உருவாக உதவுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards