11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
அலெக்ஸ்சாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர்_____________எனப்படுகிறது.
ஜீலம்
பாரசீக
ஹைடாஸ்பஸ் போர்
தட்சசீல
2.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.
மெளரிய
கனிஷ்க்
வர்த்தன
சிசுநாக
3.
ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
பிந்து சாரர்
பிம்பி சாரர்
சந்திர குப்தர்
அஜாகத் சத்ரு
4.
நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.
மெளரியர்கள்
சிசுநாகர்கள்
ஹர்யாங்கர்கள்
குப்தர்கள்
5.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
6.
_____________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.
முத்ராராட்சசம்
ராஜதரங்கிணி
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
7.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த _________
பிம்பிசார்
அஜாசத்ரு
அசோகர்
மகாபத்ம நந்தர்
8.
9.
குறிப்பு வரைக.பிந்துசாரர்
10.
குறிப்பு தருக: முத்ராட்சம்
11.
அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?
12.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
13.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக
14.
பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
15.
அசோகரின் மூன்றாம் பெளத்த சங்கமம் பற்றிக் கூறுக.
16.
இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?
17.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
18.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
19.
தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
20.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
21.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
22.
1.
(d)
தட்சசீல
2.
(d)
சிசுநாக
3.
(b)
பிம்பி சாரர்
4.
(b)
சிசுநாகர்கள்
5.
(a)
அர்த்தசாஸ்திரம்
6.
(a)
முத்ராராட்சசம்
7.
(a)
பிம்பிசார்
8.
(b)
9.
i) சந்திர குப்தரின் புதல்வர் பொ.ஆ.மு.297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆடசியில் அமர்ந்தார்.
ii) பிந்து சாரர் நல்ல திறமையான அரசர். மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.
10.
i) 'முத்ராட்சம்' என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
ii) இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் 'சாணக்கியர்' அல்லது 'கெளடில்யா' தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.
11.
i) அலெக்சாண்டரின் படையெடுப்பு பிற்காலத்தில் பல நூற்ராண்டுகளுக்குத தொடரப் போகும் இந்தியா மற்றும் மேற்கு உலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பமாக அமைந்தது.
ii) நான்கு வணிகப் பெருவழிகள் வாயிலாக கிரேக்க வணிகர்களும், கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
iii) இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் எடையில் நேரடி தொடர்பு ஏற்றபடி இது உதவியது.
iv) இது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் ஒரு புதிய பாணியை உருவாக்கியது.
12.
i) கிரேக்க வரலாற்றாளர்கள் மெளரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
ii) மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பறந்து விரிந்த பகுதிகள் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்.
iii) ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.
13.
i) மகாபத்ம நந்தர் நந்தபேரரசின் முதல் அரசர்.
ii) சிசுநாக அரசரைகே கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
iii) நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
iv) நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் எவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.
14.
i) ஹரியங்கா வம்சத்தில் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
ii) அவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
iii) கோசல அரசர் பிரசேனஜித்திற்கு தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம் காசியை வரதட்சணையாகப் பெற்றார்.
iv) லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவு படுத்தினார்.
15.
1.அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று.பொ.ஆ.மு 250 இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பெளத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும்.
2. அசோகரது ஆழமான பெளத்த ஈடுபாட்டால் பெளத்த மதத்திற்கு அரசு ஆதரவு கிட்டியது.
3.பெளத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பெளத்த மதத்திற்க்கு மாற்ற பிரச்சாரர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும்.
4.இவ்வாறாக பெளத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது.
16.
ஈரானில் உள்ள பெர்சிபோலசிஸ் காணப்பட்ட முதலாம் டாரியஸின் கல்வெட்டில் தான் "இந்து" என்ற வார்த்தை முதன்முறையாகக் காணப்படுகிறது. சிந்து நதியை குறிக்கும் "சிந்து" என்ற சொல் பாரசீகத்தில் "இந்து" வானத்து. கிரேக்கர்கள் Sindu என்பதில் உள்ள S ஐ நீக்கிவிட்டு, Indu என்றார்கள். அது பின்னர் ஹிந்து என்றானது. பின்னர் அதிலிருந்தது "இந்தியா" வந்தது.
17.
i) நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
ii) ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
iii) சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ராகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
iv) காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
v) சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்து துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
18.
i) அலெக்ஸ்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
ii) மேற்குலகிற்காக வணிகப் பெரு வலிகள் திறக்கப்பட்டன.
iii) இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்..
iv) இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
v) மெளரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
vi)பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
19.
i) தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் நகர்ப்புறத் தோற்றம் பற்றியும், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
ii) அக்கால மக்களுக்குத் தெரிந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் எண்டு மக்களின் தன்மையை அறிய முடிகிறது.
iii) கங்கைப் பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த சான்றுகளைத் தந்துள்ளன.
20.
.1.அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது. அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை இந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.
2. எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
3. இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசோகரின் கட்டளைகளாக இருந்தன.
4.தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
5. ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.
6.அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட்ட வேண்டும் என்று கூறினார்.
7. மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
8. தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.
9. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பிரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.
21.
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் காலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எழுத்து முறை:
1.மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.
2.இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலதுபுறம் இருந்து இடதுபுறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.
நாணயம்: 1.பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும். நாணயத்திற்க்கான சொல்லான "கார்சார்" பாரசீக டாரியாஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.
கட்டிடக்கலை:
1. மெளரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மெளரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன. தூண்களின் முகத்தில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஓத்தே உள்ளன.
22.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards