11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 07/09/2019
வங்கிச் சரிகட்டும் பட்டியல்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
2.
வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?
3,000 மேல்வரைப்பற்று
3,000 சாதகமான இருப்பு
1,000 மேல்வரைப்பற்று
1,000 சாதகமான இருப்பு
3.
பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல
காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு
சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
4.
5.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.
வங்கியரால்
வணிகத்தால்
வணிகத்தின் கடனாளிகளால்
வணிகத்தின் கடனீந்தோரால்
6.
கீழ்கண்ட வாக்கியத்திற்கு ஒரு வார்த்தையில் விடை தருக
(அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
(ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
(இ) ரொக்க ஏட்டின் படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை
7.
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் இரண்டை கூறுக
8.
வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?
9.
பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக
| விவரம் | ரூ | |
|---|---|---|
| (i) | வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,000 |
| (ii) | டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் | 2,000 |
| (iii) | டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை | 3,000 |
| (iv) | வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 4,000 |
| (v) | கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது | 1,000 |
| (vi) | வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை | 500 |
10.
வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.
11.
‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ரஹீம் நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
(அ) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று ரூ 2,500
(ஆ) ரொக்க ஏட்டின் பற்று பக்கம் ரூ 700 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
(இ) நிகழ் நேர மொத்த தீர்வகம் (RTGS) வழியாக வங்கியில் பெறப்பட்ட தொகை ரூ 2,00,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) 2018 மார்ச் 29 அன்று விடுத்த இரு காசோலை ரூ 1,800 மற்றும் ரூ 2,000-இல் இரண்டாவது காசோலை மட்டுமே செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
(உ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய சிற்றுந்து மீதான காப்பீட்டு முனைமம் ரூ.1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
13.
பின்வரும் தகவல்களிலிருந்து 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயாரித்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
|---|---|---|
| 1 | ரொக்க ஏட்டின் படி இருப்பு | 15,000 |
| 2 | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 1,000 |
| 3 | 2017 டிசம்பர் 31-க்கு முன்னர் விடுத்த காசோலை ரொக்க ஏட்டில் பதியப்பெற்று அந்நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில் | 1,500 |
| 4 | வங்கியால் நேரடியாகப் பெற்ற பங்காதாயம் | 200 |
| 5 | வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பெற்ற வாடகை | 1,000 |
| 6 | வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை ரொக்க ஏட்டில் பதியப்படவில் | 1,200 |
| 7 | 2017 டிசம்பர் 30 அன்று வங்கியால் செய்யசெய்யப்பட்ட தவறுதலான பற்று | 500 |
| 8 | இணைய வங்கி வாயிலாக செலுத்தியது ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டது | 300 |
1.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
2.
(b)
3,000 சாதகமான இருப்பு
3.
(d)
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
4.
(a)
5.
(b)
வணிகத்தால்
6.
(அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல் வங்கி அறிக்கை அல்லது செல்லேடு என அழைக்கப்படுகிறது.
(ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு என்பது மேல்வரைப் பற்று ஆகும்.
(இ) ரொக்க ஏட்டின்படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின்படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை வங்கிச் சரிகட்டும் பட்டியல் ஆகும்.
7.
| வ.எ. | ரொக்க ஏட்டின் வங்கி பத்தி | வங்கி அறிக்கை |
|---|---|---|
| 1. | இது வணிக நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. | இது வங்கியால் தயாரிக்கப்படுகிறது. |
| 2. | ரொக்க வைப்பு என்பது பற்று பக்கத்தில் பதிவு செய்யப்படும். | ரொக்க வைப்பு வரவு பக்கத்தில் பதிவு செய்யப்படும். |
8.
(1) வங்கிக் கணக்கில் உண்மையான இருப்புக்கு அதிகமாக எடுப்பு செய்யும்போது அவ்விருப்பினை இது குறிக்கின்றது.
(2) நடப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும் இத்தகைய வசதி அளிக்கப்படுகின்றது. இவ்வாறு அதிகப்படியாக எடுத்த தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது.
(3) இத்தொகை ரொக்க ஏட்டில் வரவிருப்பாகவும் அதாவது பாதக இருப்பாகவும் செல்லேட்டில் பற்றிருப்பாகவும் காண்பிக்கப்படும்.
9.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,000 | |
| கூட்டுக: செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை | 2,000 | |
| கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது | 1,000 | 3,000 |
| கழிக்க: | 9,000 | |
| விடுத்த காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தப்படவில்லை | 3,000 | |
| கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்டது | 4,000 | |
| வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை | 500 | 7,500 |
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 1,500 |
10.
(அ) விடுத்த காசோலை வங்கியில் செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைபடுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும் வங்கி அறிக்கையும் ரூ.20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது.
(ஆ) வங்கியில் வசூலுக்கு அனுப்பிய காசோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது
காசோலை வங்கியில் வைப்பு செய்யப்படும் பொழுது ரொக்க ஏட்டில் அதே நாளில் பற்று வைக்கப்படும். ஆனால், இது வங்கி அறிக்கையில் அதே நாளில் தோன்றாமல் இருக்கலாம். ஏனெனில், காசோலை வசூலான பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'x' நிறுவனத்தின் ரொக்க ஏடும் வங்கி அறிக்கையும் ரூ.20,000 இருப்பாகக் காட்டியது. 'x' நிறுவனம், 2016 மார்ச் 25 அன்று ABC நிறுவனத்திடமிருந்து ரூ.5,000 ற்கான காசோலையைப் பெற்றது. அதே நாளில் 'x' நிறுவனம் தனது ரொக்க ஏட்டில் ரூ.5,000 வரவு வைத்தது.
(இ) வங்கிக் கட்டணம், வங்கிக் கடன் மீதான வட்டி மற்றும் மேல்வரைப்பற்று மீதான வட்டி
வங்கி, தனது வாடிக்கையாளர்களின் கணக்கினை பராமரிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதனால், வங்கிக் கட்டணம் வணிகத்தின் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.
உதாரணம்:
2017 மார்ச் 1ஆம் நாளன்றைய ரொக்க ஏடு மற்றும் வங்கி அறிக்கையின் ஆரம்ப இருப்பு ரூ.7,000 . வங்கி மார்ச் 27, 2017 அன்று வங்கி கட்டணமாக ரூ.300 பற்று செய்தது.
(ஈ) வங்கி வசூல் செய்த வட்டி மற்றும் பங்காதாயம்
வாடிக்கையாளரின் பங்கு முதலீட்டின் மீதான பங்காதாயம் மற்றும் எந்த ஒரு முதலீடுகளின் மீதான வட்டியும் வங்கியால் வசூலிக்கப்படலாம். வசூலான நாளன்று இவ்விவரங்கள் வங்கி அறிக்கையில் பதியப்படும்.
உதாரணம்:
ரொக்க ஏடு மற்றும் அறிக்கையின் படியான இருப்பு ரூ.15,000, வங்கி வசூலித்த பங்காதாயம் ரூ.1,000. இதன் விளைவாக வங்கி அறிக்கையின் படியான இருப்பு ரூ.16,000 ஆக உயர்ந்துள்ளது.
11.
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைப்படுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும், வங்கி அறிக்கையும் ரூ. 20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது. அதனால் 27 மார்ச் 2017 அன்று 'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் காசோலையானது 2 ஏப்ரல் 2017ம் நாளன்று தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
12.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி மேல்வரைப்பற்று | 2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கியில் பெறப்பட்ட ரொக்கம் பதியப்படாதது | 2,00,000 | |
| காப்பீட்டு முனைமம் பதியப்படாதது | 1,000 | 2,01,000 |
| 2,03,500 | ||
| கழிக்க: | ||
| காசோலை முன்னிலைப்படுத்தப்பட்டது (2000+1800) |
3,800 | |
| ரொக்க ஏட்டின் பற்றுப்பக்கம் குறைவாக கூட்டப்பட்டது |
700 | 4,500 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 1,99,000 |
13.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 15,000 | |
| கூட்டுக: | ||
| விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தப்படாதது |
1,500 | |
| பங்காதாயம் பெற்றது | 200 | |
| ரொக்க ஏட்டில் இருமுறை பதியப்பட்டது | 300 | 2,000 |
| 17,000 | ||
| கழிக்க: | ||
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது |
1,000 | |
| வங்கியில் செலுத்தப்பட்ட வாடகை | 1,000 | |
| பெட்டக வாடகை பதியப்படாதது | 1,200 | |
| வங்கியால் செய்யப்பட்ட தவறுதலான பற்று |
500 | 3,700 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 13,300 |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards