11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
முதன்மைப் பதிவேடுகள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கீழ்கண்டவைகளுக்கு ஏதேனும் ஒரு தொகையுடன் நடவடிக்கைகளைத் தருக.
அ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு கூடுதல்.
ஆ] சொத்துக்களின் மதிப்பு கூடுதல் மற்றும் குறைதல்
இ] சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்பு கூடுதல்.
ஈ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு குறைதல்.
2.
குறிப்பேட்டின் நன்மைகள் யாவை?
3.
இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
4.
குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.
5.
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
| (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 60,000 |
| (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ 20,000 |
| (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது | ரூ 15,000 |
| (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது | ரூ 500 |
6.
குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.
| ரொக்கம் | ரூ 2,000 |
| இயந்திரம் | ரூ 50,000 |
| அறைகலன் | ரூ 5,000 |
| கடனீந்தோர்கள் | ரூ 13,000 |
| கடனாளிகள் | ரூ 18,000 |
7.
பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கவும்.
(i) ரொக்கம் ரூ 80,000 மற்றும் சரக்குகள் ரூ 75,000 கொண் டு வியாபாரம் தொடங்கப்பட்டது.
(ii) சண்முகத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ 50,000.
(iii) சண்முகத்திடமிருந்து ரூ 49, 000 பெற்றுக் கொண் டு அவரது கணக்குத் தீர்க்கப்பட்டது.
(iv) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 3,000.
(v) ரூ 1,000 மதிப்புள்ள சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
(vi) காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ 3,000.
(vii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 500.
8.
செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 1,00,000 |
| (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் | ரூ 60,000 |
| (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது | ரூ 25,000 |
| (iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது | ரூ 10,000 |
| (v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது | ரூ 5,000 |
| (vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது | ரூ 3,000 |
9.
நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது
ஆதார ஆவணங்கள்
குறிப்பேடு
கணக்கியல் சமன்பாடு
கணக்கியல் கருத்துக்கள்
10.
முருகன் என்பவரிடம் கடனாக அறைக்கலன் வாங்கியதற்கு வரவு வைக்க வேண்டிய கணக்கு.
முருகன் க/கு
அறைக்கலன் க/கு
கொள்முதல் க/கு
ரொக்க க/கு
11.
கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
சொத்துக்கள் = பொறுப்புகள் - முதல்
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
12.
நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது
பெயரளவுக் கணக்கிற்கு
ஆள்சார் கணக்கிற்கு
புலனாகும் சொத்து கணக்கிற்கு
புலனாக சொத்து கணக்கிற்கு
13.
ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.
பற்றுத்தன்மை
வரவுத்தன்மை
ரொக்கத்தன்மை
இவற்றில் ஏதும் இல்லை
14.
ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது
பற்றுத்தன்மை
வரவப்புதன்மை
ரொக்கத்தன்மை
இவற்றில் ஏதும் இல்லை
15.
இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
ஒரே கணக்கின் இரு பக்கங்களில்
குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்
16.
கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?
இரட்டைத் தன்மை
நிலைத்தன்மை
நிறுவனத் தொடர்ச்சி
நிகழ்வுத்தன்மை
17.
சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தோகையால் ஏற்படும் நிலை.
சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்
சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்
18.
19.
இடாப்பு என்றால் (Invoice)?
20.
ரொக்கச் சீட்டு என்றால் என்ன (Cash Memo)?
21.
பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.
22.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
23.
ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
1.
அ) ரொக்கம் ரூ 50,000 முதல் போட்டு தொழில் தொடங்கியது.
ஆ) ரொக்கம் ரூ 20,000 கொடுத்து அறைகலன் வாங்கியது.
இ) ரூ 20,000 மதிப்புள்ள சரக்கினை கடனாக கொள்முதல் செய்தது.
ஈ) ரூ 5,000 வாடகை செலுத்தியது.
2.
குறிப்பேட்டின் நன்மைகள் பின்வருமாறு:
(i) நடவடிக்கைகள் நிகழ்ந்த காலவரிசையில் நாள் வாரியாகப் பதிவு செய்வதால் வணிக நடவடிக்கைகள் பற்றிய முழுமையானத் தகவல்களை பெறமுடிகிறது.
(ii) விளக்க குறிப்பின் மூலமாக பதிவின் துல்லியத்தன்மை சரி பார்க்கப்படுகிறது.
(iii) பேரேட்டில் எடுத்தெழுத, குறிப்பேட்டுப் பதிவுகள் அடிப்படைடையாக உள்ளன.
3.
ஒவொரு நடவடிக்கையும் பணம் அல்லது பணமதிப்பு சம்பந்தப்பட்ட இரண்டு தன்மைகளை கொண்டுள்ளன. மதிப்பினை பெறுதல் ஒரு தன்மையாகவும், அதே மதிப்பில் செலுத்துதல் இன்னொரு தன்மையாகவும் இருக்கும். அனைத்து நடவடிக்கைகளிலும் உலா இந்த இரு தன்மைகளும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுவதால் இரட்டைப் பதிவு முறை எனப்படும்.
இரட்டைப் பதிவு முறையின் நன்மைகள்:
(i) துல்லியத் தன்மை
இரட்டைத் தன்மை முறையில் வணிகத்தின் அனைத்து நடவடிக்கைகளும், இரு தன்மைகளோடு கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.இது கணக்கியலின் துல்லியத் தன்மை பரிசோதிக்க உதவுகிறது.
(ii) வணிக முடிவுகளை உறுதிப்படுத்துதல்
வணிகத்தில் ஏற்படும் செலவுகள், இழப்புகள், வருவாய் இலாபங்கள் , சொத்துக்கள், பொறுப்புகள் போன்ற விவரங்களை உடனுக்குடன் பெற முடியும்.இதன் உதவியால் ஒரு குறிப்பிட்ட கணக்காண்டின் நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நிதி நிலையினை கணக்கிட முடியும்.
(iii) ஒப்பீட்டு ஆய்வு
வணிக நிறுவனங்களின் தற்கால முடிவுகளை முந்திய ஆண்டுகளின் முடிவுகளோடும், மேலும் வேறு பல நிறுவனங்களின் முடிவுகளோடு ஒப்பீட்டு பார்க்க முடியும்.
(iv) பொதுவான ஏற்புத்தி தன்மை:
இம்முறையில் கணக்கினை பதிவு செய்வதை நிதி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.ஏனெனில், இது ஒரு முறையான, அறிவியல் பூர்வமான கணக்கு பராமரிப்பு முறையாகும்.
4.
1. நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதிலுள்ள கணக்குகளை (தன்மையின் அடிப்படையில்) அடையாளம் காண வேண்டும்.
2. மேலே அடையாளம் கண்டா கணக்குகளை ஆள்சார் க/கு, சொத்துக் க/கு அல்லது பெயரளவுக் க/கு என்று பாகுபடுத்தி வேண்டும்.
3. மேலே பாகுபடுத்தப்பட்ட (ஒரு நடவடிக்கைக்கு தேவையான) இரண்டு கணக்குகளுக்கும் பற்று, வரவு விதிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
4. இரட்டைப் பதிவு முறையின் விதிகளைப் பயன்படுத்தி எந்த கணக்கினைப் பற்று வைக்க வேண்டும், எந்த கணக்கினை வரவு வைக்க வேண்டும் என கண்டறிய வேண்டும்.
5. நடவடிக்கை நடந்த நாளினை, நாள் பத்தியில் பதிவு செய்திட வேண்டும்.
6. பற்று வைக்க வேண்டிய கணக்கின் பெயரை விவரப் பத்தியின் இடது பக்கத்தில் மிகவும் நெருக்கமாக எழுத ஆரம்பித்து, இறுதியில் "ப" என்று பதிவு செய்ய வேண்டும். இதற்கு எதிரான அதே வரியில் பற்று பத்தியில் பற்று வைக்கும் தொகையினை பதிவு செய்திட வேண்டும்.
7. வரவு வைக்க வேண்டிய கணக்கின் பெயரை இரண்டாவது வரியில் பக்க ஓரத்திலிருந்து சிறிது இஅடைவேளி விட்டு, விவர பத்தியில் எழுத வேண்டும்.அதே வரியில் எதிராக உலா வரவு பத்தியில் வரவு வைக்கும் தொகையினை பதிவு செய்திட வேண்டும்.
8. அடுத்த வரியில் விவரப் பத்தியில் சிறு விளக்கத்தினை பிறை அடைப்பில் கொடுக்க வேண்டும்.
5.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
||
|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +60,000 | +60,000 | ||
| சமன்பாடு | +60,000 | = | +60,000 | |
| (ii) ரொக்கக் கொள்முதல் | +20,000 | +20,000 | ||
| சமன்பாடு | +40,000 | +20,000 | = | +60,000 |
| (iii) ரொக்க விற்பனை | +15,000 | -10,000 | +5,000 | |
| சமன்பாடு | +55,000 | +10,000 | = | +65,000 |
| (iv) வாடகை ரொக்கமாக செலுத்தியது | -500 | -500 | ||
| சமன்பாடு | +54,500 | +10,000 | = | +64,500 |
6.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| ரொக்கக் க/கு | ப | 2,000 | |||
| இயந்திரக் க/கு | ப | 50,000 | |||
| அறைகலன் க/கு | ப | 5,000 | |||
| கடனாளிகள் க/கு | ப | 18,000 | |||
| கடனீந்தோர் க/கு | 13,000 | ||||
| முதல் க/கு | 62,000 | ||||
| (இருப்புத் தொகை) (சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கொணரப்பட்டது) |
7.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | முன்கூட்டி செலுத்திய செலவுகள் ரூ | கடனாளர்கள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| i) | ரொக்க மற்றும் சரக்கு கொண்டு தொழில் தொடங்கியது | +80,000 | +75,000 | +1,55,000 | ||||||
| இருப்புகள் | +80,000 | +75,000 | +1,55,000 | |||||||
| சமன்பாடு | +1,55,000 | = | +1,55,000 | |||||||
| ii) | கடன் விற்பனை | -50,000 | +50,000 | |||||||
| இருப்புகள் | +80,000 | +25,000 | +50,000 | +1,55,000 | ||||||
| சமன்பாடு | +1,55,000 | = | +1,55,000 | |||||||
| iii) | சண்முகத்திடம் இருந்து பெற்ற ரொக்கம் | +49,000 | +49,000 | |||||||
| இருப்புகள் | +1,29,000 | +25,000 | +50,000 | +2,04,000 | ||||||
| சமன்பாடு | +2,04,000 | = | +2,04,000 | |||||||
| iv) | கொடுபட வேண்டிய சம்பளம் | -3,000 | +3,000 | |||||||
| இருப்புகள் | +1,29,000 | +25,000 | +50,000 | +2,01,000 | +3,000 | |||||
| சமன்பாடு | +2,04,000 | = | +2,04,000 | |||||||
| (v) | சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது இருப்புகள் | -1,000 | -1,000 | |||||||
| இருப்புகள் | +1,29,000 | +24,000 | +50,000 | +2,00,000 | +3,000 | |||||
| சமன்பாடு | +2,03,000 | = | +2,03,000 | |||||||
| vi) | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | -3,000 | -3,000 | |||||||
| இருப்புகள் | +1,26,000 | +24,000 | +50,000 | +1,97,000 | +3,000 | |||||
| சமன்பாடு | +2,00,000 | = | +2,00,000 | |||||||
| vii) | முன்கூட்டி செலுத்திய காப்பீட்டு முனைமம் | +500 | +500 | |||||||
| இருப்புகள் | +1,26,000 | +24,000 | +500 | +50,000 | +1,97,500 | +3,000 | ||||
| சமன்பாடு | +2,00,500 | = | +2,00,500 |
8.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் | |||
|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
வங்கி ரூ |
||||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +1,00,000 | +1,00,000 | ||||
| சமன்பாடு | +1,00,000 | = | +1,00,000 | |||
| (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் | -60,000 | +60,000 | ||||
| சமன்பாடு | +40,000 | +60,000 | = | +1,00,000 | ||
| (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது | +25,000 | +25,000 | ||||
| சமன்பாடு | +40,000 | +85,000 | = | +1,00,000 | +25,000 | |
| (iv) காசோலை மூலம் சரக்கு வாங்கியது | +10,000 | -10,000 | ||||
| சமன்பாடு | +40,000 | +10,000 | +75,000 | = | +1,00,000 | +25,000 |
| (v) சொத்து பயனுக்காக ரொக்கம் எடுத்தது | -5,000 | -5,000 | ||||
| சமன்பாடு | +35,000 | +10,000 | +75,000 | = | +95,000 | +25,000 |
| (vi) அலுவலகத் தேவைக்காக ரொக்கம் வங்கியிலிருந்து எடுத்தது | +3,000 | -3,000 | ||||
| சமன்பாடு | +38,000 | +10,000 | +72,000 | = | +95,000 | +25,000 |
9.
(a)
ஆதார ஆவணங்கள்
10.
(a)
முருகன் க/கு
11.
(b)
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
12.
(d)
புலனாக சொத்து கணக்கிற்கு
13.
(b)
வரவுத்தன்மை
14.
(a)
பற்றுத்தன்மை
15.
(a)
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
16.
(a)
இரட்டைத் தன்மை
17.
(a)
சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
18.
(d)
19.
1. இடாப்பு, கடன் கொள்முதல் மாற்றும் கடன் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் தேதி, தொகை மற்றும் கடன் கொள்முதல் அல்லது கடன் விற்பனை குறித்த சரக்குகளின் விவரம் இடம் பெற்றிருக்கும்.
2. பெரும்பாலும் இடாப்பினை மூன்று படிகளில் தயாரிப்பார். முதல் படியினை வாங்குபவருக்கு தருகின்றனர். இரண்டாவது படியினை சோதனைச் சாவடிக்கென சரக்குதான் அனுப்பி வைப்பர். மூன்றாவது படியினை விற்றவர் தம்மிடம் வைத்துக் கொள்கிறார்.
3. இது நடவடிக்கையினை ஏடுகளில் பதிவு செய்யும் ஆதார ஆவணமாக பயன்படுகிறது.
20.
1. ரொக்கச் சீட்டு என்பது ஒரு ஆவணம். ஒரு வியாபாரி பொருட்களை ரொக்கத்திற்கு விற்பனை செய்யும் பொழுது அவர் ரொக்கச் சீட்டைத் தருகிறார்.அது போல பொருள்களை ரொக்கத்திற்கு கொள்முதல் செய்யும் பொழுது ரொக்கச் சீட்டைப் பெறுகிறார்.
2. சரக்கின் தன்மை, அளவு, விலை மற்றும் மொத தொகை, தேதி உள்ளிட்டவை ரொக்கச்ச சீட்டில் அடங்கியிருக்கும்.
21.
1. செலவிற்கும் நட்டத்திற்கும் - பற்று வை.
2. வருமானத்திற்கும் ஆதாயத்திற்கும் - வரவு வை.
22.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
23.
1. நிதி சார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள், ஆதார ஆவணங்கள் ஆகும்.
2. இந்த ஆவணங்கள் நடவடிக்கைகளின் தன்மை, தேதி, தொகை தொடர்புடைய நபர்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும்.
3. ரொக்கச்சீட்டு, இடாப்பு, பற்றுக்குறிப்பு, வரவுக் குறிப்பு, செலுத்துச் சீட்டு, சம்பளப்பட்டியல், கூலிப்பட்டியல் காசோலைப் பட்டியல் போன்றவை ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards