11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
தேய்மானக் கணக்கியல்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
2.
3.
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.
4.
ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ரூ. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.
5.
ஆனந்த் என்பவர் 1.1.2015 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள ஒரு இயந்திரத்தை வாங்கினார். 1.7.2016 அன்று ரூ. 50,000 மதிப்புள்ளள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். மேலும் 1.10.2017 அன்று
ரூ. 20,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். நேர்க்கோட்டு முறையில் 10% தேய்மானம் ஆண்டுதோறும் நீக்கப்பட வேண்டும். 2015 முதல் 2017 வரை இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும். கணக்குகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.
6.
சொத்தின் இறுதி மதிப்பு என்பது, பயனளிப்புக் காலத்தின் ____________ அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்.
ஆரம்பத்தில்
இறுதியில்
மத்தியில்
இவைகளில் ஏதுமில்லை
7.
8.
தேய்மான வழிமுறை என்பது
சொத்தின் அடக்க விலையை, சொத்தின் பயனளிப்புக் காலம் முழுவதும் நீக்குதல்
சொத்துகளை மதிப்பீடு செய்தல்
நல்ல நிலையில் சொத்தினைப் பராமரித்தல்
சொத்தின் மதிப்பினை அதிகரித்தல்
9.
தேய்மானம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் நீக்கப்படுகிறது?
நிலைச் சொத்துகள்
நடப்புச் சொத்துகள்
கொடுபடபட வேண்டிய செலவுகள்
அனைத்து சொத்துகள் மீது
10.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
ஆண்டுதோறும் குறையும்
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
ஆண்டுதோறும் மாறக்கூடியது
11.
ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?
12.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் கணக்கிட உதவும் சூத்திரங்கள் யாவை?
13.
தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?
1.
(i) தேய்வு மற்றும் உராய்வு
1. சாதாரணமாக புலனாகும் நிலைச் சொத்தை பயன்படுத்தும்போது அதன் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அது தேய்வு மற்றும் உராய்வு என்று அழைக்கப்படுகிறது.
2. தேய்வு ஏற்படும்போது நிலைச் சொத்தின் மதிப்பு விகிதாச்சாரப்படி குறைகிறது.
(ii) காலப்போக்கு
காலப்போக்கு காரணமாக ஒரு சில சொத்துகளை பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாவிட்டாலும், அவற்றின் பயன்பாட்டு நிலை குறையும்.
(iii) வழக்கொழிவு
1. நவீன பதிலி சொத்துகளின் வருகையால், சொத்துகளின் மதிப்பு குறைவது வழக்கொழிவு எனப்படும்.
2. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான செயல்முறைகள் காரணமாக இது ஏற்படுகிறது.
(iv) நோக்கத்திற்கு போதுமானதாக இல்லாமல் இருப்பது:
1. தேவைக்கான நோக்கத்திற்கு போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது, அச்சொத்தின் பயன்பாடு நிறுத்தப்படுகிறது.
2. நிறுவனத்தின் திறனை விரிவாக்கம் செய்யும் போது இச்சொத்துகளின் திறன் போதுமானதாக இல்லாமல் போகலாம்.
(v) பராமரிப்பின்மை
1. சொத்துகள் சரிவர பராமரிக்கப்படும் போது அச்சொத்தின் வாழ்நாள் அதிகரிக்கிறது.
2. சொத்துகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றால், அதிக அளவு தேய்மானத்திற்கான வாய்ப்புகள் உண்டு.
(vi) அசாதாரணமான காரணிகள்
1. தீ விபத்து, இயற்கைச் சீற்றங்கள் போன்ற அசாதாரண காரணிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில், நிலைச் சொத்தின் பயன்பாடு குறையலாம்.
2. இது சொத்துகள் நீக்கப்படும் நிலைக்கும் கொண்டு செல்லலாம்.
2.
3.
சொத்தின் அடக்க விலை = 9,000 + 1,000 = ரூ. 10,000
தேய்மான விகிதம் = 15%
சொத்தின் வாங்கிய நாள் = 1.1.2018
சொத்து பயன்படுத்திய மாதங்கள் = 1.1.2018 முதல் 31.3.2018 வரை 3 மாதங்கள்
தேய்மானத் தொகை = 10,000 மீது 15%, 3 மாதங்களுக்கு
= 10,000 × 15% × 3/12 = ரூ. 375
4.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| அடக்கவிலை | 450000 |
| கூட்டுக : நிறுவுதல் செலவு | 50000 |
| 500000 | |
| கழிக்க:தேய்மானம் 2010-11(500000 x \({15\over 100}\)) | 75000 |
| 425000 | |
| கழிக்க:தேய்மானம் 2011-12 | 75000 |
| 350000 | |
| கழிக்க:தேய்மானம் 2012-13 எட்டு மதிப்பு | 75000 |
| எட்டு மதிப்பு | 275000 |
| கழிக்க:விற்ற விலை | 385000 |
| இயந்திரம் விற்றதில் | 110000 |
5.
பேரேட்டுக் கணக்குகள்
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||
| ஜனவரி 1 | வங்கி க/கு | 1,00,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 10,000 |
| டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 90,000 | |||
| 1,00,000 | 1,00,000 | ||||
| 2016 | 2016 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 90,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 12,500 |
| ஜுலை 1 | வங்கி க/கு | 50,000 | டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 1,27,500 |
| 1,40,000 | 1,40,000 | ||||
| 2017 | 2017 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 1,27,500 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 15,500 |
| அக்டோபர் 1 | வங்கி க/வ | 20,000 | டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 1,32,000 |
| 1,47,500 | 1,47,500 | ||||
| 2018 | |||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 1,32,000 |
6.
(b)
இறுதியில்
7.
(b)
8.
(a)
சொத்தின் அடக்க விலையை, சொத்தின் பயனளிப்புக் காலம் முழுவதும் நீக்குதல்
9.
(a)
நிலைச் சொத்துகள்
10.
(c)
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
11.
(i) ஆண்டுத் தொகை தேய்மானம் கணக்கிடும் போது சொத்தின் ஆரம்ப அடக்கவிலை மட்டுமல்லாமல் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
(ii) தொடர்புடைய நிலைச் சொத்தில் முதலீடு செய்யாமல் வேறு ஏதாவது சொத்தில் முதலீடு செய்திருந்தால் குறிப்பிட்ட வட்டி பெறப்பட்டிருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் வட்டியானது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
(iii) தேய்மானத் தொகையை கணக்கிட ஆண்டுத்தொகை காரணி பயன்படுத்தப்படுகிறது.
(iv) தேய்மானத் தொகை- ஆண்டுத் தொகை காரணி x சொத்தின் ஆரம்ப அடக்க விலை.
12.


13.
கீழ்கண்டவைகள் தேய்மானம் கணக்கிடுவதற்கான பல்வேறு முறைகள்:
(i) நேர்க்கோட்டு முறை அல்லது நிலைத்தவணை முறை அல்லது ஆரம்ப அடக்கவிலை முறை.
(ii) குறைந்து செல் மதிப்பு முறை அல்லது குறைந்து செல் இருப்பு முறை
(iii) ஆண்டுகளின் இலக்கங்களின் கூட்டுத்தொகை முறை
(iv) இயந்திர மணி நேர வீத முறை
(v) வெறுமையாதல் முறை
(vi) ஆண்டுத் தொகை முறை
(vii) மறுமதிப்பீட்டு முறை
(viii) ஈடு நிதி முறை
(ix) காப்பீட்டு முனைம முறை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards