11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நடப்புப் பொறுப்புகள் இருப்பு நிலைக் குறிப்பில்
இடம் பெறாது
பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும்
சொத்துக்கள் பக்கத்தில் பதிய வேண்டும்
இவை எதுவுமில்லை
2.
கூலி என்பது உதாரணமாக இருப்பது.________
முதலினச் செலவிற்கு
மறைமுகச் செலவிற்கு
நேரடி செலவிற்கு
இவை எதுவுமில்லை
3.
______ அறிக்கை ஒரு கணக்கியல் காலத்திற்கு எவ்வாறு இலாபம் அல்லது நட்டம் கணக்கிடப்படுகிறது என்பதைக் காட்டுகின்றது
வருமான
இலாப நட்ட
செலவின
இவை ஏதுவுமில்லை
4.
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஓர் நடப்புச் சொத்து
ஓர் நீர்மைச் சொத்து
புலனாகும் சொத்து
புலனாகாச்சொத்து
5.
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
ரொக்கம்
சரக்கிருப்பு
அறைகலன்
முன்கூட்டிச் செலுத்திய செலவு
6.
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
கொள்முதலோடு கூட்டப்படும்
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
முதலோடு கூட்டப்படும்
முதலிலிருந்து கழிக்கப்படும்
7.
வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?
வியாபாரக் கணக்கில்
இலாப நட்டக் கணக்கில்
கடன் பக்கத்தில்
சொத்து பக்கத்தில்
8.
இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________
நிலையான சொத்து
நடப்புச் சொத்து
கற்பனைச் சொத்து
புலனாகாச் சொத்து
9.
இருப்பு நிலைக் குறிப்பு தயாரித்தலின் நன்மைகள் யாவை?
10.
“இருப்பு நிலைக் குறிப்பு ஓர் கணக்கல்ல” – விளக்குக
11.
மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் என்றால் என்ன?
12.
இறுதிக் கணக்குகள் என்றால் என்ன? அதன் பகுதிகள் யாவை?
13.
நிரூபனின் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| பொறி மற்றும் இயந்திரம் | 8,00,000 | |
| நிலம் மற்றும் கட்டடம் | 6,00,000 | |
| அறைகலன் | 1,50,000 | |
| கைரொக்கம் | 20,000 | |
| வங்கி மேல்வரைப்பற்று | 1,80,000 | |
| கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் | 3,20,000 | 2,40,000 |
| பெறுதற்குரிய மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,00,000 | 60,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 4,00,000 | |
| குறுகிய கால முதலீடுகள் | 80,000 | |
| முதல் | 15,00,000 | |
| எடுப்புகள் | 1,30,000 | |
| நிகர இலாபம் | 6,20,000 | |
| 26,00,000 | 26,00,000 |
14.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் கீ/கொ | 1,50,000 | விளம்பரச் செலவுகள் | 3,800 |
| வெளித் தூக்குக்கூலி | 25,500 | வாராக்கடன் | 8,500 |
| அலுவலக வாடகை | 7,000 | பங்காதாயம் பெற்றது | 9,000 |
| அலுவலக எழுதுபொருள் | 3,500 | பெற்ற தள்ளுபடி | 4,600 |
| வழங்கல் செலவுகள் | 2,000 | பெற்ற வாடகை | 7,000 |
15.
2018, மார்ச் 31 ஆம் நாளன்று டெரி என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| சரக்கிருப்பு | 10,000 | விற்பனை | 1,22,500 |
| ரொக்கம் | 2,500 | கடனீந்தோர் | 5,000 |
| வங்கி | 5,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,000 |
| உள்ஏற்றிச் செல் செலவு | 750 | முதல் | 1,00,000 |
| கொள்முதல் | 95,000 | ||
| எடுப்புகள் | 4,500 | ||
| கூலி | 27,500 | ||
| இயந்திரம் | 50,000 | ||
| கடனாளிகள் | 13,500 | ||
| அலுவலக அஞ்சல் செலவுகள் | 150 | ||
| பல்வகைச் செலவுகள் | 850 | ||
| வாடகை கொடுத்தது | 2,500 | ||
| அறைகலன் | 17,250 | ||
| 2,29,500 | 2,29,500 |
இறுதிச் சரக்கிருப்பு ( 31.12.2017) ரூ.8,000.
16.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விபரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்தம் இலாபம் | 50,000 | வட்டி பெற்றது | 2,000 |
| அலுவலக வாடகை | 10,000 | தள்ளுபடி பெற்றது | 3,000 |
| அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் | 8,000 | வெளிதூக்குக் கூலி | 2,500 |
| தள்ளுபடி கொடுத்தது | 12,000 | அலுவலக கட்டடம் மீதான காப்பீடு | 3,500 |
| விளம்பரம் | 4,000 | பொதுச் செலவுகள் | 3,000 |
| தணிக்கைக் கட்டணம் | 1,000 | உள் ஏற்றிச் செல் செலவு | 1,000 |
17.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | கொள்முதல் மீதான | |
| உற்பத்தி செய்த சரக்கின் | துறைமுகக் கட்டணம் | 4,000 | |
| மீதான அடக்கவிலை | 12,000 | கொள்முதல் மீதான | |
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | இறக்குமதி வரி | 3,500 |
| ரொக்க விற்பனை | 85,000 | கூலி | 11,000 |
| கொள்முதல் திருப்பம் | 2,000 | விற்பனைத் திருப்பம் | 3,000 |
| உள்தூக்குக் கூலி | 4,000 | கடன் கொள்முதல் | 35,000 |
| வெளி ஏற்றிச்செல் செலவு | 3,000 | கடன் விற்பனை | 60,000 |
| நிலக்கரி மற்றும் எரிபொருள் | 2,500 | பிற நேரடிச் செலவுகள் | 7,000 |
18.
முதலீடுகள் என்றால் என்ன?
19.
இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?
20.
இலாப நட்டக் கணக்கு தயாரித்தலின் தேவை என்னன்ன?
21.
ஏதேனும் இரண்டு நேரடிச் செலவுகள் மற்றும் மறைறைமுகச் செலவுகளை குறிப்பிடுக
22.
கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
23.
நிலைச் சொத்துகள் என்றால் என்ன?
24.
வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.
25.
கடன் கொள்முதல்
26.
நிகர லாபம்
27.
தொடக்க சரக்கிருப்பு
28.
கடன் மீது வட்டி
29.
முதலீடு
1.
(b)
பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும்
2.
(c)
நேரடி செலவிற்கு
3.
(a)
வருமான
4.
(d)
புலனாகாச்சொத்து
5.
(c)
அறைகலன்
6.
(d)
முதலிலிருந்து கழிக்கப்படும்
7.
(c)
கடன் பக்கத்தில்
8.
(b)
நடப்புச் சொத்து
9.
(i) இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், ஒரு குறிப்பிட்ட நாளில் நிறுவனத்தின் உண்மையான நிதிநிலையை அறிந்து கொள்ளுதல்.
(ii) இது நிறுவனத்தின் பல்வேறு சொத்துகளின் அடக்க விலையை ஒப்பிடுவதற்கு உதவுகிறது. அதாவது இறுதி சரக்கிருப்புத் தொகை, கடனாளிகளிடமிருந்து பெற வேண்டிய தொகை, கற்பனைச் சொத்துகள் தொகை போன்றவை. இது நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளையும் ஒப்பீடு செய்யவும் உதவுகிறது.
(iii) இது நிருமத்தின் கடன் தீர்க்கும் சக்தியை கண்டறிய உதவுகிறது. சொத்துகள் பொறுப்புகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் போது நிறுமத்தின் கடன் தீர்க்கும் சக்தி சாதகமாக இருக்கிறது.
10.
(i) இருப்பு நிலைக் குறிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் வணிகத்தில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் நிலை பற்றிய அறிக்கையாகும்.
(ii) சொத்துகள் வணிகத்திற்கு சொந்தமான வளங்களைக் குறிக்கிறது.
(iii) பொறுப்புகள் என்பது வணிகம் மீது எழுதப்படும் கோரிக்கை உரிமைகள் ஆகும்.
(iv) வணிக நிறுவனத்தின் நிகர இலாபம் மற்றும் நிகர நட்டம் கண்டறிந்த பிறகு, வணிகத்தின் உரிமையாளர் வணிகத்தின் நிதி நிலையை அறிய விரும்புகிறார். இதற்காக இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படுகிறது.
(v) இது வணிக நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் தொகை உள்ளடக்கிய அறிக்கை ஆகும். இவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கை இருப்புநிலைக் குறிப்பு என்று அழைக்கப்படுகிறது.
11.
மொத்த இலாபம்:
வணிக நிறுவனத்தின் வியாபாரக் கணக்கிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடப்படுகிறது. பிரிதொரு வகையில் கூறுவோமானால் விற்பனையிலிருந்து விற்ற பொருளின் அடக்க விலையைக் கழிப்பதன் மூலம் மொத்த இலாபத்தைக் கணக்கிடலாம்.
நிகர இலாபம்:
நிகர இலாபம் என்பது வணிக நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்கிலிருந்து எடுப்பதாகும் அல்லது மொத்த இலாபத்திலிருந்து நிர்வாகச் செலவுகள் விற்பனை பகிர்வுச் செலவுகள் மற்றும் நிதிசார் செலவுகளை கழித்த பின் இதர வருவாயை கூட்டுவதன் மூலம் கணக்கிடப்பட்டதாகும்.
12.
(i) வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் வணிக நடவடிக்கைகளின் முடிவுகளையும், நிதி சார்ந்த நிலைப்பு தன்மையும் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகின்றன. அதாவது வணிகத்தின் இலாபத் தன்மையையும் நிதிநிலையையும் அறிந்து கொள்ள விரும்புகின்றன. அதாவது, வணிகத்தின் இலாபத் தன்மையையும் நிதிநிலையையும் அறிந்து கொள்ள விரும்புகின்றன. இவற்றை இறுதிக் கணக்குகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
(ii) இருப்பாய்வு காட்டும் பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் அடிப்படையில் இறுதிக் கணக்குகள் ஒவ்வொரு ஆண்டிறுதியில் வழக்கமாக தயாரிக்கப்படுகிறது.
(iii) இறுதிக் கணக்குகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
(அ) வருமான அறிக்கை அல்லது வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு.
(ஆ) நிதி நிலை அறிக்கை அல்லது இருப்புநிலைக் குறிப்பு.
13.
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 15,00,000 | நிலம் மற்றும் கட்டடம் | 6,00,000 | ||
| கூட்டுக:நிகர இலாபம் | 6,20,000 | பொறி மற்றும் இயந்திரம் | 8,00,000 | ||
| 21,20,000 | அறைகலன் | 1,50,000 | |||
| கழிக்க: எடுப்புகள் | 1,30,000 | 19,90,000 | குறுகிய கால முதலீடுகள் | 80,000 | |
| கடனீந்தோர் | 2,40,000 | இறுதிச் சரக்கிருப்பு | 4,00,000 | ||
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | கடனாளிகள் | 3,20,000 | ||
| வங்கி மேல்வரைப் பற்று | 1,80,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,00,000 | ||
| கைரொக்கம் | 20,000 | ||||
| 24,70,000 | 24,70,000 |
14.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| வெளித் தூக்குக்கூலி | 25,500 | மொத்த இலாபம் கீ/கொ | 1,50,000 |
| அலுவலக வாடகை | 7,000 | பங்காதாயம் பெற்றது | 9,000 |
| அலுவலக எழுதுபொருள் | 3,500 | பெற்ற தள்ளுபடி | 4,600 |
| வழங்கல் செலவுகள் | 2,000 | பெற்ற வாடகை | 7,000 |
| விளம்பரச் செலவுகள் | 3,800 | ||
| வாராக்கடன் | 8,500 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 1,20,300 | ||
| 1,70,600 | 1,70,600 |
15.
| விவரம் | தொகை | விவரம் | தொகை |
|---|---|---|---|
| தொடக்க சரக்கிருப்பு | 10,000 | விற்பனை | 1,22,500 |
| கொள்முதல் | 95,000 | இறுதி சரக்கிருப்பு | 8,000 |
| மொத்த நட்டம் | |||
| கூலி | 27,500 | கீ/இ (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றுவது ) | 2,750 |
| உள் ஏற்றிச் செல் செலவு | 750 | ||
| 1,33,250 | 1,33,250 | ||
| மொத்த நட்டம் கீ/கொ | 2750 | நிகர நட்டம் | 6,250 |
| (வியாபார கணக்கிலிருந்து மாற்றுவது) | (முதல் கணக் கிற்கு மாற்றுவது ) | ||
| அலுவலக அஞ்சல் செலவுகள் | 150 | பெற்ற தள்ளுபடி | 3,000 |
| பல்வகைச் செலவுகள் | 850 | ||
| வாடகை பெற்றது | 2,500 | ||
| 6,250 | 6,250 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
| கடனிந்தோர் | 5,000 | ரொக்கம் | 2,500 | ||
| செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 2,000 | வங்கி | 5,000 | ||
| முதல் | 1,00,000 | இயந்திரம் | 50,000 | ||
| கிழிக்க : நிகர நட்டம் | 6,250 | கடனாளிகள் | 13,500 | ||
| 93,750 | அறைகலன் | 17,250 | |||
| கழிக்க : எடுப்புகள் | 4,500 | இறுதிச் சரக்கிருப்பு | 8,000 | ||
| 96,250 | 96,250 |
16.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| அலுவலக வாடகை | 10,000 | மொத்த இலாபம் | 50,000 |
| அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் | 8,000 | வட்டி பெற்றது | 2,000 |
| தள்ளுபடி கொடுத்தது | 12,000 | தள்ளுபடி பெற்றது | 3,000 |
| விளம்பரம் | 4,000 | ||
| தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| வெளிதுக்குக் கூலி | 2,500 | ||
| அலுவலக கட்டடம் மீதான காப்பீடு | 3,500 | ||
| பொது ச் செலவுகள் | 3,000 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 11,000 | ||
| 55,000 | 55,000 |
17.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | ரொக்க விற்பனை | 85,000 | ||
| உற்பத்தி செய்த சரக்கின் | கடன் விற்பனை | 60,000 | |||
| மீதான அடக்கவிலை | 12,000 | 1,45,000 | |||
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | கழிக்க : விற்பனைத் | |||
| கடன் கொள்முதல் | 35,000 | திருப்பம் | 3,000 | 1,42,000 | |
| 95,000 | மொத்த நட்டம் கீ/இ | 45,000 | |||
| கழிக்க: கொள்முதல் | |||||
| திருப்பம் | 2,000 | 93,000 | |||
| உள்தூக்குக் கூலி | 4,000 | ||||
| நிலக்கரி மற்றும் | |||||
| எரிபொருள் | 2,500 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| துறைமுகக் கட்டணம் | 4,000 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| இறக்குமதி வரி | 3,500 | ||||
| கூலி | 11,000 | ||||
| பிற நேரடிச் செலவுகள் | 7,000 | ||||
| 1,87,000 | 1,87,000 |
18.
(i) பிற நிறுவனங்களின் பங்குகள் , கடனீட்டுப் பத்திரங்கள் , பிணையங்கள் மற்றும் பிற பத்திரங்களில் முதலீடு செய்வது முதலீடுகள் என்று அழைக்கப்படுகின்றது
(ii) இந்த முதலீடு இரு வருடத்திற்கு அதிகமான காலத்திற்கு செய்யப்பட்டால் அது நீண்ட கால முதலீடுகள் என அழைக்கப்படுகின்றது
(iii) இந்த முதலீடு இரு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு செய்யப்பட்டால் அது குறுகிய கால முதலீடுகள் என அழைக்கப்பட்டு நடப்புச் சொத்தாக காண்பிக்கபடுகிறது.
19.
ஒரு வணிக நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை கீழ்க்கண்ட இரண்டு வழிமுறைகளில் தயாரிக்கலாம்.
(அ) கிடைமட்ட முறையில்
(ஆ) செங்குத்து முறையில்
20.
(i) நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் கண்டறிய
(ii) இலாபம் ஒப்பீடு செய்ய
(iii) செலவுகளை கட்டுப்படுத்த
(iv) இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பதற்கு உதவுகிறது.
21.
(i) நேரடிச் செலவுகள்:
அ) கூலி
ஆ) துறைமுகக் கட்டணம்
(ii) மறைமுகச் செலவுகள்:
அ. அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள்
ஆ. விற்பனை மற்றும் வழங்கல் செலவுகள்
22.
கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு, சரக்களித்தோருக்கு திருப்பப்பட்டால் கொள்முதல் திருப்பம் அல்லது வெளித்திருப்பம் எனப்படும்.
23.
வணிகத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட சொத்துகள் நிலைச் சொத்துகள் ஆகும். இவை பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய சொத்துகள். உதாரணமாக, நிலம் மற்றும் கட்டடம், பொறி மற்றும் இயந்திரம், மோட்டார் வாகனங்கள், அறைகலன் முதலியன.
24.
வியாபாரம் என்பது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலைக் குறிக்கின்றது. வியாபாரக் கணக்கு கணக்காண்டிற்குரிய சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலின் முடிவினைக் காட்டும் ஒரு பெயரளவுக் கணக்கு ஆகும்.
25.
மொத்த கடனீந்தோர்
26.
இலாப நட்டக் கணக்கு
27.
பொறுப்புகள் பக்கம்
28.
வியாபாரக் கணக்கின் பற்றுபக்கம்
29.
இலாப நட்ட கணக்கின் வரவு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards