11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Model Question Paper
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.
கூட்டுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்பு கட்டுதல்
எடுத்தெழுதுதல்
2.
பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________
இருப்பாய்வு
இருப்பு நிலைக்குறிப்பு
இலாப நட்டக் கணக்கு
வியாபாரக் கணக்கு
3.
விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
முதலின வரவு
4.
இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை _________________ வெளிப்படுத்துவதில்லை.
குறிப்பேடு
பேரேடு
இருப்பாய்வு
இறுதிக்கணக்குகள்
5.
________ பராமரிக்கப்படுவது யைரல் எழுதும் முறையானாலும் அல்லது கணினிமயக் கணக்கியல் முறையானாலும், கணக்கியளலின் அடிப்படைகள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அறிக்கைகள்
இருப்பாய்வு
கணக்குகள்
கணக்கேடுகள்
6.
இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.
ஒரு இடம்
இரு இடங்களில்
மூன்று இடங்களில்
இவை எதுவுமில்லை
7.
எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது
சொத்து கணக்கு
ஆள்சார் கணக்கு
பெயரளவு கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
8.
இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.
அடக்க விலையில்
சந்தை விலையில்
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
9.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?
அணுகக் குறிமுறை
தொடர்ச்சியான குறிமுறை
தொகுப்புக் குறிமுறை
மதியயோட்டுக் குறிமுறை
10.
வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?
வியாபாரக் கணக்கில்
இலாப நட்டக் கணக்கில்
கடன் பக்கத்தில்
சொத்து பக்கத்தில்
11.
நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை.
முதலினச் செலவுகள்
வருவாயினச் செலவுகள்
வருவாயின வரவுகள்
முதலின வரவுகள்
12.
எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்
சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்
சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்
13.
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்ள்முதல் கணக்கு
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
14.
பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல
காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு
சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
15.
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
அனைத்து சரக்குகளின் விற்பனை
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
16.
கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
18.
19.
கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?
சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை
வங்கி எடுத்துக் கொண்ட வட்டி
20.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
21.
இலாப நட்டக் கணக்கு வரையறு.
22.
கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
23.
குறிப்பு வரைக: அ. கடனாளிகள், ஆ. கடனீந்தோர்
24.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
25.
ஜுலை 1, 2016 அன்று, அறைகலன் ரூ. 60,000 க்கு வாங்கப்பட்டது. அதன் வாழ்நாள் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் முடிவில் அதன் இறுதி மதிப்பு ரூ. 4,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
26.
முழு விடு பிழை என்றால் என்ன?
27.
பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
(ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
(v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.
28.
வரவு குறிப்பு என்றால் என்ன?
29.
இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.
30.
வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?
31.
நிலைச் சொத்தின் வகைகளை விளக்குக.
32.
கணக்கியலின் பணிகளை விளக்குக.
33.
இருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.250 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டில் ரூ.120 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
(இ) விற்பனை ஏட்டில் ரூ.130 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ரூ.75 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) கொள்முதல் ஏட்டில் ரூ.35 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
34.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
35.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
36.
பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஜன | ரூ | |
| 1 | கை இருப்பு ரொக்கம் | 11,200 |
| 5 | இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது | 300 |
| 7 | வாடகை செலுத்தியது | 30 |
| 8 | ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது | 300 |
| 10 | மோகனுக்கு செலுத்தியது | 700 |
| 27 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 200 |
| 31 | சம்பளம் கொடுத்தது | 100 |
37.
‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?
38.
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
| (அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ? | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ? | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ? | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
39.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
40.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
| வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
| உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
| தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
| அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
41.
கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.
| அ] | ரொக்கக் க/கு | ப |
| அறைகலன் க/கு | ||
| ஆ] | வாடகை க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| இ] | வங்கி க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| ஈ) | தமிழ்ச் செல்வி க/கு | ப |
| விற்பனை க/கு |
42.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
[அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
[ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
[இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
[ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20
43.
கணேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து, வியாபார இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| சரக்கிருப்பு (01.01.2017) | 8,000 | வாராக்கடன் | 1,200 |
| கொள்முதல் | 22,000 | வியாபாரச் செலவுகள் | 1,200 |
| விற்பனை | 42,000 | அளித்த தள்ளுபடி | 600 |
| கொள்முதல் மீதான செலவுகள் | 2,500 | கழிவு கொடுத்தது | 1,100 |
| நிதிசார் செலவுகள் செலுத்தியது | 3,500 | விற்பனைச் செலவுகள் | 600 |
| விற்பனை மீதான செலவுகள் | 1,000 | அலுவலக வாகனங்கள் மீதான பழுதுபார்ப்புச் செலவுகள் |
600 |
2017 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,500
44.
தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன:
| பற்று இருப்புகள் | ரூ | வரவு இருப்புகள் | ரூ |
|---|---|---|---|
| கொள்முதல் | 75,000 | முதல் | 60,000 |
| உள் திருப்பம் | 2,000 | கடனீந்தோர் | 30,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 10,000 | விற்பனை | 1,20,000 |
| உள் ஏற்றிச்செல் செலவு | 4,000 | வெளித் திருப்பம் | 1,000 |
| கூலி | 2,000 | ||
| முதலீடுகள் | 10,000 | ||
| வங்கிக் கட்டணம் | 1,000 | ||
| நிலம் | 30,000 | ||
| இயந்திரம் | 30,000 | ||
| கட்டடம் | 25,000 | ||
| வங்கி ரொக்கம் | 18,000 | ||
| கை ரொக்கம் | 4,000 | ||
| 2,11,000 | 2,11,000 |
கூடுதல் தகவல்கள்:
(அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ 9,000
(ஆ) இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்குக
(இ) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 2,000
வியாபார, இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்க.
45.
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
4. Practical Auditing – B N Tandon - 30 Nos.
46.
பின் வரும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்கக் ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத் தொகை ரூ.1,100 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(ஆ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தத்தில் ரூ.500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) அன்புச் செல்வனிடமிருந்து ரூ.700 க்கு கடனுக்கு சரக்கு வாங்கியது அவரின் கணக்கில் பற்று பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.
(ஈ) பொன்முகிலுக்கு கடனுக்கு ரூ.78 க்கு சரக்கு விற்றது அவருடைய பேரேட்டுக் கணக்கில் ரூ.87 என எடுத்து எழுதப்பட்டுள்ளது..
(உ) விற்பனைத் திருப்ப ஏட்டின் மொத்தம் ரூ.550 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது
47.
பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
(iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
(iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.
48.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
(ஆ) ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
(இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 5,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
(உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
(ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
(எ) ரொக்க விற்பனை தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000
49.
ஆனந்த் என்பவர் 1.1.2015 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள ஒரு இயந்திரத்தை வாங்கினார். 1.7.2016 அன்று ரூ. 50,000 மதிப்புள்ளள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். மேலும் 1.10.2017 அன்று
ரூ. 20,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். நேர்க்கோட்டு முறையில் 10% தேய்மானம் ஆண்டுதோறும் நீக்கப்பட வேண்டும். 2015 முதல் 2017 வரை இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும். கணக்குகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.
50.
பின்வரும் கடன் நடவடிக்கைகளை பல்பொருள் வணிகம் செய்யும் மனோகரன் அவர்களின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.
| 2017 | |
| மே 2 | வாசுவிடமிருந்து மூட்டை ஒன்று ரூ. 800 வீதம் 100 மூட்டைகள் அரிசி வாங்கியது |
| மே 8 | செய்யாறு, சர்க்கரை ஆலையிடமிருந்து மூட்டை ஒன்று ரூ. 2,600 வீதம் 20 மூட்டைகள் சர்க்கரை வாங்கியது |
| மே 10 | கோவை, இராம் மாவு உற்பத்தி ஆலையிடம், மூட்டை ஒன்றின் விலை ரூ. 750 வீதம் 10 மூட்டைகள் கோதுமை மாவு வாங்கியது |
| மே 15 | நீலகிரியிலுள்ள நீலகிரி தேயிலை நிறுவனத்திடமிருந்து பெட்டி ஒன்றின் விலைரூ. 900 வீதம் 15 பெட்டிகள் தேயிலைத் தூள் வாங்கியது. |
| மே 25 | சாய்ராம் காபித்தூள் நிறுவனத்திடம் ஒரு கிலலோ ரூ. 190 வீதம் 100 கிலலோ காபித்தூள் வாங்கியது. |
| மே 29 | X நிறுவனத்திடம் ரூ. 2,000 மதிப்புள்ள அறைகலன்கள் வாங்கியது |
51.
ரோகினி என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2016 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| முதல் | 60,000 | விற்பனை | 82,000 |
| பெற்றத் தள்ளுபடி | 3,250 | மின்கட்டணம் | 800 |
| கொள்முதல் | 58,000 | எடுப்புகள் | 5,250 |
| பொறி இயந்திரம் | 40,000 | வாகனச் செலவுகள் | 1,200 |
| விளம்பரச் செலவுகள் | 5,000 | மகிழுந்து | 35,000 |
52.
கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்
| 2015 மார்ச் 1 | சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது | ரூ.5,000 |
| 7 | ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | 300 |
| 15 | வட்டி பெற்றது | 1,800 |
53.
பின்வரும் நடவடிக்கைகளுக்கு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்குக.
(i) இராகேஷ் ரூ 1,50,000 முதலுடன் தொழில் தொடங்கினார்.
(ii) வங்கியில் இட்ட தொகை ரூ 80,000.
(iii) மகேஷிடமிருந்து கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது ரூ 25,000.
(iv) 10,000 மதிப்புள்ள சரக்குகள் ரூ 14,000க்கு மோகனிடம் விற்பனை செய்யப்பட்டது. இத்தொகையினை அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்தினார் .
(v) காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு ரூ 2,000 உடனடியாக வங்கியில் வசூலிப்பதற்காக செலுத்தப்பட்டது.
(vi) அலுவலக வாடகை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது ரூ 6,000.
(vii) இராமனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு ரூ 15,000-ல், ரூ 5,000 உடனடியாக பணமாகப் பெறப்பட்டது.
54.
இராமலிங்கம் என்பவரின் 2017 ஜுலை மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.
| 2017 ஜூலை | ரூ | |
| 1 | கை ரொக்கம் | 32,000 |
| 5 | கீர்த்தனாவிடமிருந்து ரொக்கம் பெற்றது | 5,000 |
| 6 | கட்டுமச் செலவுக்காக பணம் கொடுத்தது | 300 |
| 7 | ரொக்கக் கொள்முதல் | 12,400 |
| 8 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 2,600 |
| 10 | மேலாளருக்கு சம்பளம் ரொக்கமாகத் தரப்பட்ட்பட்டது | 7,000 |
| 11 | பாலா என்பவருக்கு ரொக்கம் கொடுத்தது | 3,000 |
| 12 | போஸ் என்பவரிடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது | 2,500 |
| 24 | பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் வங்கிக்கு செலுத்திய ரொக்கம் | 4,000 |
| 27 | வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 2,000 |
| 31 | அலுவலக வாடகை ரொக்கமாகச் செலுத்தியது | 6,000 |
1.
(d)
எடுத்தெழுதுதல்
2.
(a)
இருப்பாய்வு
3.
(c)
நீள்பயன் வருவாயினச் செலவு
4.
(c)
இருப்பாய்வு
5.
(d)
கணக்கேடுகள்
6.
(b)
இரு இடங்களில்
7.
(b)
ஆள்சார் கணக்கு
8.
(d)
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
9.
(a)
அணுகக் குறிமுறை
10.
(c)
கடன் பக்கத்தில்
11.
(d)
முதலின வரவுகள்
12.
(a)
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
13.
(c)
அதியமான் கணக்கு
14.
(d)
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
15.
(c)
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
16.
(b)
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
17.
(c)
18.
(b)
19.
(b)
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
20.
(b)
பணியாளர்
21.
பேராசிரியர் கார்ட்டர் அவர்களின் கூற்றுப்படி இலாப நட்டக் கணக்கு என்பது, நட்டங்களுக்கு அதிகமாக உள்ள ஆதாயங்களை அறிவதற்காக அல்லது ஆதாயங்களுக்கு அதிகமாக உள்ள நட்டங்களை அறிவதற்காக ,அணைத்து ஆதாயங்களையும் மற்றும் நட்டங்களையும் ஒரு சேரக் காட்டும் கணக்கு இலாப நட்டக் கணக்கு ஆகும்
22.
1. இது வணிக நடவடிக்கைக்கள், கணக்கேடுகளில் பதிவு செய்வதற்கான செயல்முறை ஆகும்.
2. பணமதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.
3. கணக்கேடுகள் பராமரிப்பே, கணக்கியல் செயல்பாட்டின் முதனமை நிலை ஆகும்.
4. கணக்கேடுகள் பராமரிப்பு, குறிப்பேட்டில் பதிதல் மற்றும் பேரேட்டில் எடுத்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
23.
கடனாளிகள்:
பணத்தையோ (அ) அதற்கு நிகரான மதிப்பையோ தராமல் பலன் ஒன்றை ஒருவர் வியாபார நிறுவனத்திடமிருந்து பெற்றால் அவர் கடனாளி எனப்படுகிறார்.
கடனீந்தோர்:
பணத்தையோ (அ) அதற்கு நிகரான மதிப்பையோ பெறாமல் பலன் ஒன்றை ஒருவர் வியாபார நிறுவனத்திற்கு அளித்தால் அவர் கடனீ ந்தோர் எனப்படுகிறார்.
24.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
25.

\(={60000-4000\over 5}={56000\over 5}\)
= ரூ. 11,200

\(={11200\over 60000}\times 100\)= 18.67%
26.
ஒரு நடவடிக்கையை குறிப்பேட்டில் அல்லது துணை எட்டிலோ பதிவு செய்யத் தவறுவது அல்லது பேரேட்டில் எடுத்து எழுதும்போது இரு தன்மைகளையும் பதிவு செய்யத் தவறுவதே முழுவிடு பிழையாகும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை பாதிக்கும்.
27.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக் கட்டியதற்கானத் தொகை ரூ 5,000 முதலினச் செலவாகும்.
(ii) பழைய மகிழுந்து வாங்கியது மற்றும் அதை உடனடியாக பழுதுபார்ப்புச் செய்த செலவு மொத்தம் ரூ 32,000 முதலினச் செலவாகும்.
(iii) புதிய தொழிற்சாலைக்கான வண்ணம் பூசியதற்கானச் செலவு ரூ 10,000 முதலினச் செலவாகும்.
(iv) ஏற்றிச் செல் செலவு வண்டிக்கட்டணம் மற்றும் நிறுவுகைச் செலவு முதலினச் செலவாகும்.
(v) பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுதுபார்த்தது ரூ 150 முதலினச் செலவாகும்.
28.
வரவுக்குறிப்பு என்பது விற்பனையாளர், வாடிக்கையாளரிடமிருந்து சரக்கினைப் பெற்றுக் கொண்டதற்கான அறிக்கை ஆகும். இதில், திருப்பிப்பெறப்படும் சரக்கின் விவரம், திருப்பும் அளவு மற்றும் அதன் மதிப்பு போன்ற விவரங்கள் இருக்கும்.
29.
| வ.எண் | கணக்கு | பற்றுத் தன்மை | வரவுத் தன்மை |
|---|---|---|---|
| 1. | ஆள்சார் கணக்கு | பெருவருக்கு பற்று | தருபவருக்கு வரவு |
| 2. | சொத்து கணக்கு | உள்வருவனவற்றிற்கு பற்று | வெளிச்செல்பவை வரவு |
| 3. | பெயரளவுக் கணக்கு | செலவுக்கும் நட்டத்திற்கும் பற்று | வருமானத்திற்கும், ஆதாயத்திற்கும் வரவு |
30.
1. பொருளை அளிப்பவர், அப்பொருளை வாங்கியவருக்கு பட்டியல் விலையில் குறைதல் அல்லது விலைபட்டியலில் உள்ள விலையைவிட குறைவாக வழங்கினால் அதுவே வியாபாரத் தள்ளுபடி ஆகும்.
2. இது வியாபார வழக்கப்படி அல்லது வாங்குபவர் அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும்போது அளிக்கப்படுகிறது. இத்தள்ளுபடி இடாப்பில் கழித்துக் காட்டப்படும்.
31.
நிலைச் சொத்துக்களை (i)புலனாகும் நிலை சொத்துக்கள் (ii)புலனாகா நிலை சொத்துக்கள் என்று வகைப்படுத்தப்படுத்தலாம்.
(i)புலனாகும் நிலை சொத்துக்கள்
1.புலனாகும் நிலை சொத்துகளுக்கு உருவ வடிவம் உண்டு.இவற்றை பார்க்கவும் , தொட்டு உணர்வும் முடியும்.
2.எடுத்துக்காட்டு : இயந்திரத் தளவாடங்கள், கட்டடம் மற்றும் அரைகலன்.
(ii)புலனாகா நிலை சொத்துக்கள்
1.புலனாகா நிலை சொத்துகளுக்கு உருவ வடிவம் கிடையாது. .இவற்றை பார்க்கவும் , தொட்டு உணர்வும் முடியாது.
2. எடுத்துக்காட்டு : நற்பெயர் வணிகக்குறி பதிப்புரிமை மற்றும் காப்புரிமை.
3.புலனாகாச் சொத்துகளும் புலனாகும் சொத்துக்களைப் போன்று அதிக மதிப்புடையது.
32.
கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன:
(i) அளவிடுதல்:
வணிக நடவடிக்கைகள் குறித்து முறையான ஆவணங்களை வைத்திருத்தல், பதிவு செய்தல் எடுத்தெழுதுதல், கடைசியாக இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் ஆகியவையே கணக்கியலின் முதன்மையான பணியாகும்.
(ii) முன்னறிதல்:
வணிக நிறுவனங்களின் எதிர்கால செயல் திறன் மற்றும் நிதிநிலை பற்றி கணக்கியலின் பல்வேறு கருவிகளின் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது.
(iii) ஒப்பிடுதல்:
கணக்கியல், நிகழ்ந்த செயல்திறனுடன், திட்டமிட்ட செயல்திறனை ஒப்பிட உதவுகிறது. மேலும், இது கணக்கியல் கொள்கைகளுடனும் ஒப்பிட உதவுகிறது.
(iv) முடிவெடுத்தல்:
திட்டமிடுதல், செயல்திறன் மதிப்பீடு, கட்டுப்பாடு ஆகிய மேலாண்மை பணிகளுக்கான தகவல்களை நிர்வாகத்திற்கு கணக்கியல் வழங்குகிறது.
(v) கட்டுப்பாடு:
கணக்கியல் ஒரு கட்டுப்பாட்டுக்கு கருவியாக இருப்பதால், கையாண்ட பல்வேறு வழிமுறைகள் குறித்த பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, கருத்து தெரிவிக்க முடிகிறது. மேலும், வணிக கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்யும் கருவியாக இது பயன்படுகிறது.
33.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 250 | ||
| விற்பனை க/கு | 250 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தியது) | |||||
| ஆ | கொள்முதல் க/கு | 120 | |||
| அனாமத்துக் க/கு | 120 | ||||
| (கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | விற்பனை க/கு | ப | 130 | ||
| அனாமத்துக் க/கு | 130 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை அதிகமாக கூட்டப்பட்டது திருத்தம் செய்தது) | |||||
| ஈ | பெறுதற்குரிய மாற்றுசீட்டு க/கு | ப | 75 | ||
| அனாமத்துக் க/கு | 75 | ||||
| (பெறுதற்குரிய மாற்றுசீட்டின் கூட்டுத் தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | அனாமத்துக் க/கு | 35 | |||
| கொள்முதல் க/கு | 35 | ||||
| (கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை அதிகமாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) |
34.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
35.
நேர்கோட்டு தேய்மான முறையின் நன்மைகள் பின்வருமாறு:
(அ) புரிந்து கொள்வதற்கு எளிது மற்றும் சுலபம்
இம்முறையில் தேய்மானக் கணக்கீடு புரிந்துக் கொள்வதற்கு எளிமையாகவும், சுலபமாகவும் உள்ளது.
(ஆ) சமமான தேய்மான தாக்கம்
1. இம்முறையில் ஆண்டுதோறும் சமமான தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
2. ஆகையால், இலாபத்தின் மீதான தேய்மான தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் சமமாக உள்ளது.
(இ) சொத்தின் மதிப்பு முழுவதும் நீக்கப்படுகிறது
இம்முறையில், இறுதி மதிப்பு இல்லா நிலையில் சொத்தின் ஏட்டு மதிப்பானது பூஜ்ஜியத்திற்கும் அல்லது சொத்தின் பயனளிப்பு காலம் முடிவில் இறுதி மதிப்பளவிற்கும் குறைக்கப்படுகிறது.
குறைபாடுகள்
நேர்கோட்டு முறையின் குறைபாடுகள் பின்வருமாறு:
(அ) சொத்தின் உண்மை பயன்பாட்டினை எடுத்துக் கொள்வது இல்லை
1. சொத்தின் ஆரம்ப அடக்கவிலை மீது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தேய்மான விகிதம் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தேய்மானத் தொகை ஒதுக்கப்படுகிறது.
2. ஆகையால் தேய்மானம் கணக்கிடப்படும் போது சொத்தின் உண்மையான பயன்பாடு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.
(ஆ) வட்டி காரணியை எடுத்துக்கொள்வது இல்லை
1. சொத்திற்காக முதலீடு செய்வதால் ஏற்படும் வட்டி இழப்பை இம்முறை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.
2. இந்தத் தொகை வணிக நிறுவனத்திற்கு வெளியே முதலீடு செய்திருந்தால் வட்டி ஈட்டப்பட்டிருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வது இல்லை.
(இ) இறுதி மதிப்பினை தீர்மானிப்பது கடினம்
சொத்தினை நிறுவும் பொழுதே, நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர், சொத்தின் நிகர இறுதி மதிப்பினை தீர்மானிப்பது மிகவும் கடினம்.
36.
குணால் என்பவரின் ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ. | தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | பே.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 11,200 | ஜன 7 | வாடகை க/கு | 30 | ||
| ஜன | இரமேஷ் க/கு | 300 | ஜன | மோகன் க/கு | 700 | ||
| ஜன | விற்பனை க/கு | 300 | ஜன | அறைகலன் க/கு | 200 | ||
| ஜன | சம்பளம் க/கு | 100 | |||||
| ஜன | இருப்பு கீ/இ | 10,770 | |||||
| 11,800 | 11,800 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 10,770 |
37.
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைப்படுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும், வங்கி அறிக்கையும் ரூ. 20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது. அதனால் 27 மார்ச் 2017 அன்று 'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் காசோலையானது 2 ஏப்ரல் 2017ம் நாளன்று தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
38.
| அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ரூ 20,000 | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,40,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
39.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
40.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | விற்பனை | 35,000 | ||
| 2 | வட்டி செலுத்தியது | 350 | ||
| 3 | உள் திருப்பு | 2,500 | ||
| 4 | தேய்மானம் | 2,400 | ||
| 5 | அலுவலக வாடகை | 2,000 | ||
| 6 | தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| 7 | நகர நுழைவு வரி | 8,000 | ||
| 8 | நிலம் | 90,000 | ||
| 9 | முதல் | 60,000 | ||
| 10 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 | ||
| மொத்தம் | 1,06,250 | 1,06,250 |
41.
அ) அறைகலன் விற்றது.
ஆ) வாடகை செலுத்தியது.
இ) வங்கியில் செலுத்தியது
ஈ) தமிழ்ச் செல்வி என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது.
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 1,500 | |
| கூட்டுக: | ||
| அளித்த காசோலைகள் | ||
| செலுத்துகைக்கு | 150 | |
| முன்னிலைப்படுத்தப்படவில்லை | 20 | 170 |
| வங்கி அளித்த வட்டி | 1,670 | |
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது | 100 | |
| செல்லேட்டின் படி வங்கி இருப்பு | 1,570 |
43.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 8,000 | விற்பனை | 42,000 |
| கொள்முதல் | 22,000 | இறுதிச் சரக்கிருப்பு | 4,500 |
| கொள்முதல் மீதான செலவுகள் | 2,500 | ||
| மொத்த இலாபம் கீ/இ | 14,000 | ||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றுவது ) | |||
| 46,500 | 46,500 | ||
| நிதிசார் செலவுகள் | 3,500 | மொத்த இலாபம் | 14,000 |
| கீ/கொ (வியாபாரக் கணக்கிலிருந்து மாற்றியது ) | |||
| விற்பனை மீதான செலவுகள் | 1,000 | ||
| வராக்கடன் | 1,200 | ||
| வியாபார செலவுகள் | 1,200 | ||
| கழிவு கொடுத்தது | 600 | ||
| அளித்த தள்ளுபடி | 1,100 | ||
| விற்பனை செலவுகள் | 600 | ||
| பழுது பார்ப்புச் செலவுகள் | 600 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 4,200 | ||
| 14,000 | 14,000 |
44.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 10,000 | விற்பனை | 1,20,000 | ||
| கொள்முதல் | 75,000 | கழிக்க: உள் திருப்பம் | 2,000 | 1,188,000 | |
| கழிக்க: வெளித்திருப்பம் | 1,000 | 74,000 | |||
| உள் ஏற்றிச்செல் செலவு | 4,000 | இறுதிச் சரக்கிருப்பு | 9,000 | ||
| கூலி | 2,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 37,000 | ||||
| 1,27,000 | 1,27,000 | ||||
| இயந்திரம் மீதான தேய்மானம் | 3,000 | மொத்த இலாபம் கீ/க | 37,000 | ||
| வங்கிக் கட்டணம் | 1,000 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி | 2,000 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 35,000 | ||||
| 39,000 | 39,000 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 60,000 | நிலம் | 30,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 35,000 | 95,000 | கட்டடம் | 25,000 | |
| கடனீந்தோர் | 30,000 | இயந்திரம் | 30,000 | ||
| கழிக்க: தேய்மானம் | 3,000 | 27,000 | |||
| முதலீடுகள் | 10,000 | ||||
| கூட்டுக: கூடியுள்ள வட்டி | 2,000 | 12,000 | |||
| இறுதிச் சரக்கிருப்பு | 9,000 | ||||
| வங்கி ரொக்கம் | 18,000 | ||||
| கை ரொக்கம் | 4,000 | ||||
| 1,25,000 | 1,25,000 |
45.
செயல்முறை
(i) விற்பனையாளரின் பெயர் மற்றும் முகவரி, இடாப்பு எண் மற்றும் தேதியை உள்ளீடு செய்யவும்.
(ii) வாங்குபவரின் முகவரியை தட்டச்சு செய்யவும்.
(iii) அட்டவணையைட்டவணையை உருவாக்க – Insert தேர்வு செய்து Table / Insert Table அழுத்தவும். எத்தனை Column மற்றும் Row என்று தேர்வு செய்த பின் Ok பொத்தானை அழுத்தவும்.
(iv) எடுத்துக்காக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தட்டச்சு செய்யவும்.
வெளியீடு
SOUTH INDIA Ltd., INVOICE
100, Kamarajar Salai,
Chennai – 600006.
Invoice # 009876
Invoice date 31-12-2017
Bill To
Prof. A. Rajesh
HSC College,
123, PH Road,
Chennai – 600001.
| S. No. | Description | Qty | Unit Price Rs | Amount Rs |
|---|---|---|---|---|
| 1 | Financial Accounting – RL Gupta | 40 | 200 | 8,000 |
| 2 | Advanced Accounting – MC Shukla | 20 | 300 | 6,000 |
| 3 | Income Tax Law & Practice -– HC Mehrothra | 20 | 400 | 8,000 |
| 4 | Practical Auditing – B N Tandon | 30 | 150 | 4,500 |
| Sub total | 26,500 | |||
| Less: Discount at 20% | 5,300 | |||
| Invoice total | 21,200 | |||
| (Rupees twenty one thousand two hundred only) | ||||
| Thank you |
Cashier
46.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | அளித்த தள்ளுபடி க/கு | ப | 1,100 | ||
| அனாமத்துக் க/கு | 1,100 | ||||
| (ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடி பத்தியின் கூட்டுத் தொகை ரூ.1,100 பேரேட்டில் எழுதப்படாமல் உள்ளது திருத்தியது) | |||||
| ஆ | அனாமத்துக் க/கு | ப | 500 | ||
| பெற்ற தள்ளுபடி க/கு | 500 | ||||
| (ரொக்க ஏட்டின் வரவுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடி பத்தி குறைவாக கூட்டப்பட்டுள்ளது திருத்தியது ) | |||||
| இ | கொள்முதல் க/கு | ப | 1,400 | ||
| அனாமத்துக் க/கு | 1,400 | ||||
| (அன்புத் செல்வனிடமிருந்து ரூ.700க்கு கடனுக்கு சரக்கு வாங்கியது) | |||||
| ஈ | பொன்முகில் க/கு | ப | 9 | ||
| அனாமத்துக் க/கு | 9 | ||||
| (பொன்முகிலுக்கு கடனுக்கு ரூ.78க்கு விற்றது. அவருடைய பேரேட்டுக் கணக்கில் ரூ.87 என எழுதியது திருத்தியது) | |||||
| உ | அனாமத்துக் க/கு | ப | 550 | ||
| விற்பனைத் திருப்ப க/கு | 550 | ||||
| (விற்பனைத் திருப்ப ஏட்டின் மொத்தம் இருமுறை பேரேட்டில் எழுதியது திருத்தியது) |
47.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000. | வருவாயினச் செலவு |
| (ii) | வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000. | முதலினச் செலவு |
| (iii) | முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000. | முதலினச் செலவு |
| (iv) | கழிவுப் பெற்றது ரூ 30,000. | வருவாயினச் செலவு |
| (v) | புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400. | முதலினச் செலவு |
48.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| வங்கி மேல்வரைப் பற்று | 4,000 | |
| கூட்டுக: | ||
| வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை பதியப்பட்டது |
2,000 | |
| வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது | 3,000 | |
| தவறுதலாக ரொக்க விற்பனை பதியப்பட்டது | 4,000 | 9,000 |
| 13,000 | ||
| கழிக்க: | ||
| வங்கியால் பெறப்பட்ட ரொக்கம் பதியப்படாதது |
5,000 | |
| மாற்றுச்சீட்டு வரவு வைக்கப்பட்டது | 4,000 | |
| மின்சாரக் கட்டணம் தவறுதலாக பதியப்பட்டது | 900 | 9,900 |
| ரொக்க ஏட்டின்படி மேல்வரைப் பற்று | 3,100 |
49.
பேரேட்டுக் கணக்குகள்
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||
| ஜனவரி 1 | வங்கி க/கு | 1,00,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 10,000 |
| டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 90,000 | |||
| 1,00,000 | 1,00,000 | ||||
| 2016 | 2016 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 90,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 12,500 |
| ஜுலை 1 | வங்கி க/கு | 50,000 | டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 1,27,500 |
| 1,40,000 | 1,40,000 | ||||
| 2017 | 2017 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 1,27,500 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 15,500 |
| அக்டோபர் 1 | வங்கி க/வ | 20,000 | டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 1,32,000 |
| 1,47,500 | 1,47,500 | ||||
| 2018 | |||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 1,32,000 |
50.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | வாசு | ||||
| மே 2 | 100 முட்டைகள் அரசி ரூ.800 வீதம் | 80,000 | |||
| 8 | செய்யாறு சர்க்கரை ஆலை | ||||
| 20 மூட்டைகள் கோதுமை மாவு ரூ.750 வீதம் | 52,000 | ||||
| 10 | இராம் மாவு உற்பத்தி ஆலை | ||||
| 10 மூட்டைகள் கோதுமை மாவு ரூ.750 வீதம் | 7,500 | ||||
| 15 | நீலகிரி தேயிலை நிறுவனம் | ||||
| 15 பெட்டிகள் தேயிலைத்துள் ரூ.900 வீதம் | 13,500 | ||||
| 25 | சாய்ராம் காபித்தூள் நிறுவனம் | ||||
| 100 கிலோ காபித்தூள் ரூ.190 வீதம் | 19,000 | ||||
| கொள்முதல் க/கு ப | 1,72,000 | ||||
51.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | 60,000 | ||
| 2. | பெற்றத் தள்ளுபடி | 3,250 | ||
| 3. | கொள்முதல் | 58,000 | ||
| 4. | பொறி இயந்திரம் | 40,000 | ||
| 5. | விளம்பரச் செலவுகள் | 5,000 | ||
| 6. | விற்பனை | 82,000 | ||
| 7. | மின்கட்டணம் | 800 | ||
| 8. | எடுப்புகள் | 5,250 | ||
| 9. | வாகனச் செலவுகள் | 1,200 | ||
| 10. | மகிழுந்து | 35,000 | ||
| மொத்தம் | 1,45,250 | 1,45,250 |
52.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2015 | சோமு க/கு | ப | 5,000 | ||
| மார்ச் 1 | விற்பனை க/கு (கடன் விற்பனை) |
5,000 | |||
| 7 | அறைகலன் க/கு | ப | 300 | ||
| ரொக்கக் க/கு (ரொக்கக் கொள்முதல்) | 300 | ||||
| 15 | ரொக்கக் க/கு | ப | 1,800 | ||
| பெற்ற வட்டி க/கு (வட்டி பெற்றது குறித்து) |
1,800 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 1 | விற்பனை க/கு | 5,000 | 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 15 | பெற்ற வட்டி க/கு | 1,800 | 2015 மார்ச் 7 | அறைகலன் கீ/இ | 300 | ||
| 31 | இருப்பு கீ/இ | 1,500 | |||||
| 1,800 | 1,800 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 5,000 | 2015 மார்ச் 1 | சோமு க/கு | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | ரொக்கக் க/கு | 300 | 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 300 | ||
| 300 | 300 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 300 | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,800 | 2015 மார்ச் 15 | ரொக்கக் க/கு | 1,800 | ||
| 1,800 | 1,800 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,800 |
53.
| வ.எண். | நடவடிக்கை | ரொக்கம் ரூ | வங்கி ரூ | சரக்கிருப்பு ரூ | கடனாளர்கள் | மொத்த சொத்துகள் | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| (i) | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +1,50,000 | +1,50,000 | ||||||
| இருப்புகள் | +1,50,000 | +1,50,000 | |||||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (ii) | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | -80,000 | +80,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +80,000 | +1,50,000 | ||||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (iii) | கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது | -25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +55,000 | +25,000 | +1,50,000 | |||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (iv) | கடன் விற்பனை | -10,000 | +14,000 | +4,000 | |||||
| இருப்புகள் | +70,000 | +55,000 | +15,000 | +14,000 | +1,54,000 | ||||
| சமன்பாடு | +1,54,000 | = | +1,54,000 | ||||||
| (v) | காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு | +2,000 | +2,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +57,000 | 15,000 | +14,000 | +1,56,000 | ||||
| சமன்பாடு | +1,56,000 | = | +1,56,000 | ||||||
| (vi) | அலுவலக வாடகை மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது | -6,000 | -6,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +51,000 | 15,000 | +14,000 | +1,50,000 | ||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (vii) | ரொக்க விற்பனை | +5,000 | -15,000 | -10,000 | |||||
| இருப்புகள் | +75,000 | +51,000 | +14,000 | +1,40,000 | |||||
| சமன்பாடு | +1,40,000 | = | +1,40,000 |
54.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 32,000 | 2017 ஜூலை 6 | கட்டுமரச் செலவு க/கு | 300 | ||||
| 5 | கீர்த்தனா க/கு | 5,000 | 7 | கொள்முதல் க/கு | 12,400 | ||||
| 8 | விற்பனை க/கு | 2,600 | 10 | சம்பளம் க/கு | 7,000 | ||||
| 27 | வங்கி க/கு | 2,000 | 11 | பாலா க/கு | 3,000 | ||||
| 24 | வங்கி க/கு | 4,000 | |||||||
| 31 | அலுவலக வாடகை க/கு | 6,000 | |||||||
| 31 | இருப்பு கீ/இ | 8,900 | |||||||
| 41,600 | 41,600 | ||||||||
| ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/இ | 8,900 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards