11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
11th Public Model Exam March 2019
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?
சொத்துக்களுடன்
பொறுப்புகளுடன்
சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன்
சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்
2.
வருவாயினச் செலவு பயன்தருவது_________________
அடுத்த ஆண்டுக்கு
முந்தைய ஆண்டுக்கு
நடப்பு ஆண்டுக்கு
இவை எதுவுமில்லை
3.
கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________
ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை
இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்
இவை இரண்டும்
இரண்டும் இல்லை
4.
பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________.
வரவு/ஆதாயம்
செலவு / நட்டம்
சொத்து
பொறுப்பு
5.
PASCAL மற்றும் COBOL போன்றவை _______ க்கு உதாரணம்.
இயக்கமுறைமை
நிரலாக்க மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள்
இவை எதுவுமில்லை
6.
இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.
ஒரு இடம்
இரு இடங்களில்
மூன்று இடங்களில்
இவை எதுவுமில்லை
7.
கணக்காளரின் பணி __________________
ஏடுகளைப் பராமரிப்பவர்
நிதி ஆலோசகர்
வரி மேலாளர்
மேற்கூறிய அனைத்தும்
8.
இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.
அடக்க விலையில்
சந்தை விலையில்
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
9.
வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்
சுட்டி
அச்சுப்பொறி
ஒளியியல் வருடி
விசைப் பலகை
10.
வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்
எடுப்புகளை
பெறுதல்களை
பொறுப்புகளை
முதலினை
11.
வங்கி வைப்புகள் மீதான வட்டி
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
12.
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்ள்முதல் கணக்கு
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
13.
நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?
இலாப நட்டக் கணக்கு
நிலைச் சொத்து கணக்கு
தேய்மானக் கணக்கு
வங்கி கணக்கு
14.
வங்கி அறிக்கை என்பது
ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
15.
விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது
விற்பனை கணக்கு
ரொக்க கணக்கு
கொள்முதல் கணக்கு
உரிய குறிப்பேடு
16.
இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்
அனாமத்து கணக்கில் பற்று செய்வார்
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
17.
ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
18.
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
பண மதிப்பீட்டுக் கருத்து
அடக்கவிலை கருத்து
வணிகத்தனித்தன்மை கருத்து
இரட்டைத்தன்மை கருத்து
19.
ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
எதிர்ப்பதிவு
கூட்டுப் பதிவு
ஒற்றைப் பதிவு
சாதாரணப் பதிவு
20.
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
21.
கணக்கியல் தரநிலையின் இலக்கணம் தருக.
22.
குறிப்பு வரைக: அ. கொள்முதல், ஆ. கொள்முதல் திருப்பம்
23.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?
24.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
25.
வருவாயினச் செலவு என்றால் என்ன?
26.
தேய்மானம் என்றால் என்ன?
27.
முழு விடு பிழை என்றால் என்ன?
28.
விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?
29.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
30.
இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன
31.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
32.
மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் என்றால் என்ன?
33.
வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.
34.
இருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.250 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டில் ரூ.120 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
(இ) விற்பனை ஏட்டில் ரூ.130 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ரூ.75 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) கொள்முதல் ஏட்டில் ரூ.35 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
35.
ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை 2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
(இ) ரொக்க ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
(ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
36.
37.
இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
38.
2018, ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன.
| சொத்துகள்: | ரூ |
|---|---|
| ரொக்கம் | 40,000 |
| சரக்கிருப்பு | 50,000 |
| ராம் என்பவரிடமிருந்து பெற வேண்டியது | 20,000 |
| இயந்திரம் | 40,000 |
| பொறுப்புகள்: | |
| விஜய் என்பவருக்கு செலுத்த வேண்டியது | 10,000 |
தொடக்கப் பதிவினைத் தந்து வினோத்தின் முதல் கணக்கில் எடுத்து எழுதவும்.
39.
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
| (அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ? | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ? | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ? | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
40.
ரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக
41.
திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.
| டிசம்பர் 2017 | ரூ | |
| 3 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | 84,500 |
| 7 | தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது | 55,000 |
| 9 | கழிவு பெற்றது | 3,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 1,09,000 |
| 12 | மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது | 60,000 |
| 15 | ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது | 2,000 |
| 20 | ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது | 2,000 |
| 28 | ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது | 5,000 |
42.
பின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.
[அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.
[ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.
[இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.
[ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
[உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.
[ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.
43.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து ராமசுந்தரி என்பவரின் ஏடுகளில் 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபர இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 2,500 | விற்பனை | 7,000 |
| கூலி | 2,700 | கொள்முதல் | 3,300 |
| இறுதிச் சரக்கிருப்பு | 4,000 | சம்பளம் | 2,600 |
| பெற்ற தள்ளுபடி | 2,500 | முதல் | 52,000 |
| இயந்திரம் | 52,000 | வங்கி ரொக்கம் | 6,400 |
| கடனீந்தோர் | 8,000 |
44.
கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.
(அ) கொடுபட வேண்டிய கூலி ரூ 5,000
(ஆ) இயந்திரம் மீதான தேய்மானம் ரூ 1000
(இ) முதல் மீது வட்டி 5% (முதல் ` 20,000)
(ஈ) எடுப்புகள் மீது வட்டி ரூ 50
(உ) வாராக்கடன் போக்கெழுத வேண்டியது ரூ 500
45.
மூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(அ) பை விளக்கப்படம்
(ஆ) டோனட் விளக்கப்படம்
| A | B | C | D | E | F | G | |
|---|---|---|---|---|---|---|---|
| 1 | City | Chennai | Coimbatore | Madurai | Trichy | Tanjore | Tirunelveli |
| 2 | SALES (ரூ in lakhs) |
500 | 350 | 250 | 250 | 200 | 150 |
46.
ஒரு நிறுவனத்தின் கணக்காளர் இருப்பாய்வு சமன்படாமல் ரூ.922 வித்தியாசம் (கூடுதல் வரவு) இருப்பதை அறிந்தார். அவர் அந்தத் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து விட்டு, அதைத் தொடர்ந்து பின்வரும் பிழைகளைக் கண்டறிந்தார்.
(அ) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.78 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.1,000 குறைவாக உள்ளது.
(இ) கடனுக்கு நடராஜனுக்கு ரூ.375 க்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.735 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஈ) மேகலாவுக்கு கடனுக்கு ரூ.700 க்கு சரக்கு விற்றது கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிழை திருத்தப் பதிவுகளை தந்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.
47.
ஏப்ரல் 1, 2014 அன்று இராகுல் இயந்திரம் ஒன்றை ரூ. 2,00,000 க்கு வாங்கினார். அக்டோபர் 1, 2015 அன்று மற்றொரு இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு வாங்கினார். செப்டம்பர் 30, 2016 அன்று, ஏப்ரல் 1, 2014 அன்று வாங்கிய இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு விற்றார். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். 2014 – 15 லிருந்து 2016 – 2017 வரை மூன்று ஆண்டுகளுக்கான இயந்திர கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.
48.
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
(i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
(ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
(iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
(iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.
49.
பின் வரும் நடவடிக்கைகளிலிருந்து விற்பனை கணக்கு தயாரிக்கவும்.
| 2018 ஜன 1 | சாம் என்பவருக்கு கடனுக்கு விற்றது | ரூ.4,000 |
| 4 | சுரேஷ் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது | 2,500 |
| 11 | ஜாய் என்பவருக்கு கடனுக்கு விற்றது | 8,000 |
| 17 | ராஜன் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது | 3,000 |
50.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
(ஆ) ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
(இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 5,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
(உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
(ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
(எ) ரொக்க விற்பனை தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000
51.
பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரியான குகன் என்பவரின் விற்பனை ஏடு மற்றும் விற்பனை திருப்ப ஏட்டில் பதிவு செய்க.
| 2017 | |
| மே 2 | கரண் என்பவருக்கு கடனுக்கு விற்றது |
| ஒன்று ரூ. 280 வீதம் 100 துண்டுகள் | |
| மீட்டர் ரூ. 270 வீதம் 200 மீட்டர் சட்டைத் துணி | |
| மே 5 | வீரன் என்பவருக்கு கடனுக்கு விற்றது |
| ஒன்று ரூ. 1,500 வீதம் 10 ஆயத்த ஆடைகள் | |
| மே 16 | ஜெயின் நிறுவனத்திடம் கடன் விற்பனைச் செய்தது |
| ஒன்று ரூ. 240 வீதம் 50 போர்வைகள் | |
| மே 20 | சேதம் அடைந்தடைந்த காரணத்தினால் 10 துண்டுகள் கரணுக்குத் திருப்பி அனுப்பியது. அதற்கான ரொக்கம் பெறப்படவில்லை |
| மே 25 | சரண் என்பவருக்கு பழைய அறைகலன்களை கடனுக்கு விற்றது ரூ. 18,000 |
| மே 27 | தரம் குறைவு காரணமாக இரண்டு ஆயத்த ஆடைகள் வீரனிடமிருந்து திரும்பப்பெற்றது. அதற்கு பணம் செலுத்தவில்லை. |
52.
வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சசிகுமாரின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவு தருக.
| 2017 அக் |
ரூ | |
| 1 | வியாபாரம் தொடங்குவதற்கா இட்ட சரக்கின் மதிப்பு | 40,000 |
| 3 | வணிகத்தில் இட்ட ரொக்கத்தின் மதிப்பு | 60,000 |
| 4 | அருளிடமிருந்து கடனுக்கு வாங்கிய சரக்கின் மதிப்பு | 70,000 |
| 6 | அருளிற்கு திருப்பிய சரக்கின் மதிப்பு | 10,000 |
| 10 | அருளின் கணக்கில் செலுத்தியத | 60,000 |
| 15 | சந்தருக்கு கடனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு | 30,000 |
| 18 | சந்தர் திருப்பி அனுப்பிய சரக்கின் மதிப்பு | 6,000 |
| 20 | சந்தரிடமிருந்து ரொக்கம் ரூ 23,000 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது | |
| 25 | மின்னனு பரிவர்த்தனை மூலம் சம்பளம் வழங்கியது | 2,000 |
| 30 | சசிகுமார் தமது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்ட சரக்கின் மதிப்பு | 10,000 |
53.
2017 ஜுன் மாதத்திற்கான பாண்டீஸ்வரி என்பவரின் பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்
| 2017 ஜூன் | ரூ | |
| 1 | ரொக்கத்துடன் வணிகம் தொடங்கியது | 50,000 |
| 8 | வாடகை ரொக்கமாகச் செலுத்தியது | 4,000 |
| 10 | ரொக்கம் செலுத்தி அச்சுப்பொறி வாங்கியது | 7,500 |
| 11 | ரொக்கக் கொள்முதல் | 15,000 |
| 14 | ரொக்க விற்பனை | 10,000 |
| 17 | ரொக்கமாகப் பெற்ற கழிவு | 6,000 |
| 19 | கடன் மீதான வட்டி ரொக்கமாகச் செலுத்தியது | 2,000 |
| 20 | சொந்த செலவுக்கு பணம் எடுத்தது | 3,000 |
| 21 | துரித அஞ்சல் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது | 3,500 |
54.
பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| முதல் | 44,000 | முதலீடு மீதான வட்டி | 2,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | சுங்க வரி | 3,000 |
| கூலி | 800 | கணிப்பொறி | 20,000 |
| எடுப்புகள் | 4,000 | விற்பனை | 72,000 |
| கொள்முதல் | 75,000 | தொடக்கச் சரக்கிருப்பு | 10,200 |
1.
(d)
சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்
2.
(c)
நடப்பு ஆண்டுக்கு
3.
(a)
ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை
4.
(a)
வரவு/ஆதாயம்
5.
(b)
நிரலாக்க மென்பொருள்
6.
(b)
இரு இடங்களில்
7.
(d)
மேற்கூறிய அனைத்தும்
8.
(d)
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
9.
(b)
அச்சுப்பொறி
10.
(d)
முதலினை
11.
(b)
வருவாயின வரவு
12.
(c)
அதியமான் கணக்கு
13.
(b)
நிலைச் சொத்து கணக்கு
14.
(c)
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
15.
(a)
விற்பனை கணக்கு
16.
(b)
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
17.
(d)
இருப்புக் கட்டுதல்
18.
(c)
வணிகத்தனித்தன்மை கருத்து
19.
(a)
எதிர்ப்பதிவு
20.
(b)
காரியதரிசிகளின் கணக்கியல்
21.
கோஹ்லர் என்பவரின் கூற்றுப்படி, பொதுக் கணக்காளர் மற்றும் கணக்காளர்களின் நலனுக்காக, வழங்கும் சட்டம் மற்றும் தொழில்சார் அமைப்புகளால் பொதுவாக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே கணக்கியல் தரநிலைகளாகும்.
22.
அ. கொள்முதல்:
விற்பனை செய்யும் நோக்கத்துடன் சரக்குகளை வாங்குதல் கொள்முதல் எனப்படும்.
ஆ. கொள்முதல் திருப்பம்:
கொள்முதல் செய்த சரக்கு குறைவாகவோ அல்லது கொள்முதல் நிபந்தனைக்கு மாறாக இருக்கும் நிலையில் சரக்கீந்தோருக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதனைக் கொள்முதல் திருப்பம் (அ) வெளித்திருப்பம் என்கிறோம்.
23.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள்
(i) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் பற்றிய தகவல்களைத் தருகிறது
(ii) வரக்கூடிய நட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
(iii) நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருமானங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
24.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
25.
(i) வணிக நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டிற்கான செலவும், வருவாய் ஈட்டும் திறனைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் செலவும் வருவாயினச் செலவு எனப்படும். இச்செலவு திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது.
(ii) வருவாயினச் செலவு வருவாயுடன் தொடர்புடையது அல்லது குறிப்பிட்ட கணக்காண்டோடு தொடர்புடையது.
(iii) உதாரணமாக, கொள்முதல் மீதானச் செலவு ஒரு வருவாயினச் செலவு.
26.
(i) நிலைச்சொத்தின் அடக்கவிலையை அதனுடைய பயனளிப்புக் காலத்திற்கு ஒதுக்கீடு செய்யும் செயல்முறை தேய்மானம் ஆகும்.
(ii) இது, ஒரு கணக்காண்டில் நிலைச்சொத்துகளிலிருந்து கிடைக்கக்கூடிய பயன்களுக்குரிய அடக்கவிலையை ஒதுக்கீடு செய்வது ஆகும்.
27.
ஒரு நடவடிக்கையை குறிப்பேட்டில் அல்லது துணை எட்டிலோ பதிவு செய்யத் தவறுவது அல்லது பேரேட்டில் எடுத்து எழுதும்போது இரு தன்மைகளையும் பதிவு செய்யத் தவறுவதே முழுவிடு பிழையாகும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை பாதிக்கும்.
28.
1. விற்பனைத் திருப்ப ஏடு, துணை ஏடுகளில் ஒன்றாகும். இது விற்பனைச் செய்த சரக்குகள் உடனடியாக ரொக்கம் அளிக்காமல் திருப்பிப் பெறப்படுவதைப் பதிவு செய்ய உதவுகிறது.
2. சரக்குகளை வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப் பெறுவது 'உள் திருப்பம்' எனப்படும்.
3. சொத்துக்கள் திரும்பப் பெறுவது அல்லது சரக்குகள் ரொக்கம் அளிக்கப்பட்டு திரும்பப் பெறுவது இந்த ஏட்டில் பதிவு செய்யப்படமாட்டாது.
29.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
30.
(i) இது ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளையுடைய ரொக்க ஏடு ஆகும்.தள்ளுபடி மற்றும் ரொக்கம் என்ற இரு பத்திகளை, பற்று மற்றும் வரவு என்ற இராணு பக்கங்களிலும் கொண்டிருப்பதால் இதனை ரொக்க ஏடு என்று அழைக்கிறோம்.
(ii) சாதாரண ரொக்க ஏடு தயாரிக்கப்படும் முறையிலேயே இருபத்தி ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது. இதில் தள்ளுபடி பத்தி என்ற ஒரு பத்தி என்ற ஒரு பத்தி கூடுதலாகயிறு பக்கங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
31.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
(ii) வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
(iii) வணிக நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் நிலைமை அறிதல்
(iv) பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
(v) நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும்,
(vi) நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத்தன்மையை அறிதல்.
32.
மொத்த இலாபம்:
வணிக நிறுவனத்தின் வியாபாரக் கணக்கிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடப்படுகிறது. பிரிதொரு வகையில் கூறுவோமானால் விற்பனையிலிருந்து விற்ற பொருளின் அடக்க விலையைக் கழிப்பதன் மூலம் மொத்த இலாபத்தைக் கணக்கிடலாம்.
நிகர இலாபம்:
நிகர இலாபம் என்பது வணிக நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்கிலிருந்து எடுப்பதாகும் அல்லது மொத்த இலாபத்திலிருந்து நிர்வாகச் செலவுகள் விற்பனை பகிர்வுச் செலவுகள் மற்றும் நிதிசார் செலவுகளை கழித்த பின் இதர வருவாயை கூட்டுவதன் மூலம் கணக்கிடப்பட்டதாகும்.
33.
வாரக் கடன்:
1. கடன் விற்பனைக்குப் பின், வாடிக்கையாளர் அல்லது கடனாளிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகை, நிச்சியமாக கிடைக்கப் பெறாது என தெரிய வந்தால் அதனை வாராக் கடன் என கருதலாம்.
2. இது வியாபாரத்திற்கு ஒரு இழப்பாகும். இதனை இலாபத்தை கணக்கிடுவதற்கு முன்பாக உள்ள செலவாகக் கருத வேண்டும்.
வாராஐயக்கடன் ஒதுக்கு:
1. எதிர்காலத்தில் வரக்கடனால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய இலாபம் கணக்கிடுவதற்கு முன் உருவாக்கப்படும் ஒரு தொகையை வாரா ஐயக்கடன் ஒதுக்கு எனப்படும்.
2. பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாராஐயக்கடன் ஒதுக்கு, அதற்கான ஆண்டின் இறுதியில் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வாராக் கடனைக் கழித்த பிறகு கணக்கிட வேண்டும்.
கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு:
1. கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு இலாபம் கணக்கிடுவதற்கு முன் உள்ள ஒரு செலவாகக் கருதப்படுவதால், இலாப நட்டக்கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
2. பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு என உருவாக்கப்படுகிறது.
3. வாராக்கடன் மற்றும் வாராஐயக்கடன் ஒதுக்கு ஆகியவற்றை பற்பல கடனாளிகளிலிருந்து கழித்த பிறகு இத்தள்ளுபடியைக் கணக்கிட வேண்டும்.
34.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 250 | ||
| விற்பனை க/கு | 250 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தியது) | |||||
| ஆ | கொள்முதல் க/கு | 120 | |||
| அனாமத்துக் க/கு | 120 | ||||
| (கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | விற்பனை க/கு | ப | 130 | ||
| அனாமத்துக் க/கு | 130 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை அதிகமாக கூட்டப்பட்டது திருத்தம் செய்தது) | |||||
| ஈ | பெறுதற்குரிய மாற்றுசீட்டு க/கு | ப | 75 | ||
| அனாமத்துக் க/கு | 75 | ||||
| (பெறுதற்குரிய மாற்றுசீட்டின் கூட்டுத் தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | அனாமத்துக் க/கு | 35 | |||
| கொள்முதல் க/கு | 35 | ||||
| (கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை அதிகமாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) |
35.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 12,000 | |
| கூட்டுக: காசோலை புத்தகத்திற்கான கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்பட்டவில்லை | 200 | |
| பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம் வங்கியால் பற்று வைக்கப்பட்டது | 1,000 | 1,200 |
| 13,200 | ||
| கழிக்க: வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட பங்காதாயம் | 3,000 | |
| விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 7,000 | |
| ரொக்க ஏட்டின் பற்றிருப்பு தவறுதலாக வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது | 8,200 | 18,200 |
| வங்கி அறிக்கையின் படி சாதகமான இருப்பு | -5,000 |
36.
37.
(i) கணக்கீட்டின் சரித்தன்மையை பரிசோதனை செய்ய உதவுகிறது.
இருபாய்வு என்பது கணக்கீடுகள் பராமரிப்பு பணியில் கணக்கீட்டின் சரித்தன்மையை சரிபார்க்க உதவும் ஒரு வழிமுறையாகும்.
(ii) இறுதி கணக்குகளை தயாரிக்க அடிப்படையாக உள்ளது
இருபாய்விலிருந்து எடுக்கப்பட்ட பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை அறிக்கைகளான வியாபார மற்றும் இலாப நட்டக்கணக்குகளையும் மற்றும் இருப்புநிலைக்குறியையும் தயாரிக்க முடியும்.
(iii) பிழைகளை கண்டுபிடிக்க உதவுகிறது
இருபாய்வு சமன்படாவிட்டால் அது கணக்கீடுகளில் பிழைகள் நேர்ந்திருக்கும் என்பதனை உணர்த்தும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணையால் செயல்முறை நிலைகளில் பிழைகள் ஏற்பைருக்கலாம். எனவே, அப்பிழைகளை கண்டறிந்து அவை இறுதிக்கு கணக்குகளை தயாரிக்கும் முன்பு சரி செய்யப்பட வேண்டும்.
(iv) பேரேட்டுக் கணக்குகள் குறித்த தகவல்களை சுருக்கமாக தருகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் தொகுப்பை இருபாய்வு காட்டுகிறது ஒரு குறிப்பிட்ட கணக்கின் முழுவிவரங்களையும் அறிய வேண்டுமானால் பேரேட்டுக் கணக்குகளை தன பார்க்க வேண்டும்.
38.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2018 | ரொக்கக் க/கு | ப | 40,000 | ||
| ஜனவரி | சரக்கிருப்பு க/கு | ப | 50,000 | ||
| 1 | ராம் க/கு | ப | 20,000 | ||
| இயந்திரம் க/கு | ப | 40,000 | |||
| விஜய் க/கு | 10,000 | ||||
| வினோத் முதல் க/கு (சென்ற ஆண்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டு வரப்பட்டது) |
1,40,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 1,80,000 | 2018 ஜனவரி 1 | பற்பல சொத்துகள் க/கு | 1,40,000 | ||
| 1,40,000 | 1,40,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 1,40,000 |
39.
| அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ரூ 20,000 | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,40,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
40.
1. ரொக்கப் பத்திகள் வழங்கும் போல இருப்புக் கட்டப்பட்டு அத்யு அடுத்த நாள் அல்லது காலத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
2. இருந்த போதிலும் தள்ளுபடி பத்திகள் இருப்புக்கட்டப்படமாட்டாது.அவைகள் பற்றுப் பக்கம் தனியாகவும் மற்றும் வரவு பக்கம் தனியாகவும் கூட்டப்பட்ட வேண்டும்
3. பற்றுப்பக்கத்தில் உள்ள தள்ளுபடி பத்தியின் மொத்தம் வாடிக்கையாளர்களுக்கு அளித்த தள்ளுபடியைக் காட்டுகிறது.இத்தொகை அளித்த தள்ளுபடி கணக்கில் பற்று செய்யப்பட வேண்டும்.
4. வரவு பக்கத்தில் உள்ள தள்ளுபடியில் மொத்தம் பெட்ரா தள்ளுபடியை காட்டுகிறது. இத்தொகை பெட்ரா தள்ளுபடி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
தள்ளுபடி பத்திகளில் பருவகால மொத்தம் கீழ்கண்டவாறு எடுத்துக் எழுதப்படுகிறது.
அளித்த தள்ளுபடி கணக்கில் பற்று பக்கத்தில் 'ரொக்க ஏடின்படி பற்பல கணக்கு'என்று பற்று செய்யப்படும்.
பெட்ரா தள்ளுபடி பத்தியின் பருவ கால மொத்தம் பெட்ரா தள்ளுபடி கணக்கில் வரவுப் பக்கத்தில் 'ரொக்க ஏட்டின் படி பற்பல கணக்கு' என்று வரவு செய்யப்படும்.
41.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017 டிசம்பர் 3 | கொள்முதல் க/கு | ப | 84,500 | ||
| ரொக்கம் க/கு | 84,500 | ||||
| (ரொக்கக் கொள்முதல்) | |||||
| 7 | தனலட்சுமி க/கு | ப | 55,000 | ||
| விற்பனை க/கு | 55,000 | ||||
| (கடன் விற்பனை) | |||||
| 9 | கடனீந்தோர் க/கு | ப | 3,000 | ||
| பெற்ற கழிவு க/கு | 3,000 | ||||
| (கழிவு பெற்றது) | |||||
| 10 | ரொக்கக் க/கு | ப | 1,09,000 | ||
| விற்பனை க/கு | 1,09,000 | ||||
| (ரொக்க விற்பனை) | |||||
| 12 | கொள்முதல் க/கு | ப | 60,000 | ||
| மகாலட்சுமி க/கு | 60,000 | ||||
| (கடன் கொள்முதல்) | |||||
| 15 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| ரேவதி அண்டு கோ க/கு | 2,000 | ||||
| (கடனுக்கு வாங்கியது) | |||||
| 20 | ரேவதி அண்டு கோ க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (கடனை தீர்த்தது) | |||||
| 28 | ஊதியக் க/கு | ப | 10,000 | ||
| வாடகை க/கு | ப | 5,000 | |||
| ரொக்கக் க/கு | 15,000 | ||||
| (செலவினங்கள் செலுத்தியது) |
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு | 11,500 | |
| கூட்டுக: | ||
| விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை | 1,750 | |
| வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி | 275 | |
| உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது | 250 | 2,275 |
| 13,775 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்திய காசோலைகள் தீர்வு செய்யப்படாதது | 2,150 | |
| வங்கிக் கட்டணம் | 95 | 2,245 |
| செல்லோட்டின் படி வங்கியிருப்பு | 11,530 |
43.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 2,500 | விற்பனை | 7,000 |
| கூலி | 2,700 | இறுதி சரக்கிருப்பு | 4,000 |
| கொள்முதல் | 3,300 | ||
| மொத்த இலாபம் கீ/இ | 2,500 | ||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றுவது) | |||
| 11,000 | 11,000 | ||
| சம்பளம் | 2,600 | மொத்த இலாபம் | 2,500 |
| கீ/கொ (வியாபார கணக்கிலிருந்து மாற்றியது) | |||
| நிகர இலாபம் | 2,400 | பெற்ற தள்ளுபடி | 2,500 |
| (முதல் கணக்கிக்கு மாற்றுவது ) | |||
| 5,000 | 5,000 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| கடனீ ந்தோர் | 8,000 | இயந்திரம் | 52,000 | ||
| முதல் | 52,000 | வங்கி ரொக்கம் | 6,400 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 2,400 | 54,400 | இறுதிச் சரக்கிருப்பு | 4,000 | |
| 62,400 | 62,400 |
44.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ) | கூலி க/கு | ப | 5,000 | ||
| கொடுபட வேண்டிய கூலி க/கு | 5,000 | ||||
| (கொடுபட வேண்டிய கூலி) | |||||
| ஆ) | தேய்மானம் க/கு | ப | 1,000 | ||
| இயந்திரம் க/கு | 1,000 | ||||
| (இயந்திரம் மீதான தேய்மானம்) | |||||
| இ) | முதல் மீது வட்டி க/கு | ப | 1,000 | ||
| முதல் க/கு | 1,000 | ||||
| (முதல் மீது வட்டி 5%) | |||||
| ஈ) | முதல் க/கு | ப | 50 | ||
| எடுப்பு மீதான வட்டி க/கு | 50 | ||||
| (எடுப்புகள் மீதான வட்டி) | |||||
| உ) | வாராக் கடன் க/கு | ப | 500 | ||
| பற்பல கடனாளிகள் க/கு | 500 | ||||
| (வாராக்கடன் போக்கெழுதியது) |
45.
(அ) பை விளக்கப்படம்
(i) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை புதிய விரிதாளில் உள்ளீடு செய்யவும்
(ii) அறை A1 முதல் G2 வரையிலான தரவு பரப்பை தேர்வு செய்யவும்
(iii) Insert Menu சென்று Pie Chart (3D Type) தேர்வு செய்யவும்
(iv) Pie விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யவும்

(ஆ) டோனட் விளக்கப்பக்கப்படம்
(i) அறை A1 முதல் G2 வரையிலான தரவுப் பரப்பை தேர்வு செய்யவும்
(ii) Insert Menu – Other Charts – Doughnut தேர்வு செய்யவும்
(iii) Doughnut விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யவும்

46.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 78 | ||
| பெற்ற தள்ளுபடி க/கு | 78 | ||||
| (ரொக்க ஏட்டின் வ்ருப் பக்கம் உள்ள தள்ளுபடி பத்தியின் கூட்டுத் தொகை பேரேட்டில் எழுதப்படாதது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | கொள்முதல் க/கு | ப | 1,000 | ||
| அனாமத்துக் க/கு | 1,000 | ||||
| (கொள்முதல் குறைவாக ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | விற்பனை க/கு | ப | 360 | ||
| நடராஜன் க/கு | 360 | ||||
| (நடராஜனுக்கு ரூ.375 க்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.735 எனப் பதிவு செய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | மேகலா க/கு | ப | 1,400 | ||
| விற்பனை க/கு | 700 | ||||
| கொள்முதல் க/கு | 700 | ||||
| (மேகலாவுக்கு கடனுக்கு சரக்கு விற்றது கொள்முதல் செய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | விற்பனை க/கு | ப | 350 | ||
| அறைக்கலன் க/கு | 350 | ||||
| (அறைகலன் விற்றது தவறாக விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) |
| விவரம் | தொகை ரூ | விவரம் | தொகை ரூ | ||
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | ப | 922 | கொள்முதல் | ப | 1,000 |
| பெற்ற தள்ளுபடி | 78 | ||||
| 1,000 | 1,000 |
47.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| இயந்திரத்தின் அடக்கவில்லை (ஏப்ரல் 2014) | 200000 |
| கழிக்க: தேய்மானம் 2014-15 | 20000 |
| 180000 | |
| கழிக்க: தேய்மானம் 2015-16 | 20000 |
| 160000 | |
| கழிக்க: தேய்மானம் 30.09.2016 | 10000 |
| 200000 x \({10\over 100}\times {6\over 12}\) | |
| எட்டு மதிப்பு | 150000 |
| விற்ற விலை | 120000 |
| விற்ற இயந்திரத்தின் மீதான நட்டம் | 30000 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 2014 ஏப்ர 1 | வங்கி க/கு | 200000 | 2015 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 20000 |
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 180000 | |||
| 200000 | 200000 | ||||
| 2015 ஏப்ர 1 | இருப்பு கீ/கொ | 180000 | 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு (20000+6000) | 26000 |
| அக் 1 | வங்கி க/கு | 120000 | மார்ச் 31 | இருப்பு கீ/இ | 274000 |
| 300000 | 300000 | ||||
| 2016 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 274000 | 2016 செப் 30 | தேய்மானம் க/கு | 10000 |
| 2016 செப் 30 | வங்கி க/கு | 120000 | |||
| 2016 செப் 30 | இலாப நட்டக் க/கு (விற்ற இயந்திரம் மீதான நட்டம்) | 30000 | |||
| 2017 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 12000 | |||
| 2017 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 102000 | |||
| 274000 | 274000 | ||||
| 2016 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 102000 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இயந்திர க/கு | 20000 | 2015 மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 20000 |
| 20000 | 20000 | ||||
| 2016 மார்ச் 31 | இயந்திர க/கு | 26000 | 2016 மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 26000 |
| 26000 | 26000 | ||||
| 2017 செப் 30 | இயந்திர க/கு | 10000 | 2017 மார்ச் 30 | இலாப நட்டக் க/கு | 22000 |
| மார்ச் 31 | இயந்திர க/கு | 12000 | |||
| 22000 | 22000 |
48.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம். | முதலினச் செலவு |
| (ii) | வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள். | முதலினச் செலவு |
| (iii) | சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம். | வருவாயினச் செலவு |
| (iv) | கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள். | முதலினச் செலவு |
49.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 17,500 | 2018 ஜனவரி 1 | சாம் க/கு | 4,000 | ||
| 4 | சுரேஷ் க/கு | 2,500 | |||||
| 11 | ஜாய் க/கு | 6,000 | |||||
| 17 | ராஜன் க/கு | 3,000 | |||||
| 17,500 | 17,500 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 17,500 |
50.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| வங்கி மேல்வரைப் பற்று | 4,000 | |
| கூட்டுக: | ||
| வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை பதியப்பட்டது |
2,000 | |
| வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது | 3,000 | |
| தவறுதலாக ரொக்க விற்பனை பதியப்பட்டது | 4,000 | 9,000 |
| 13,000 | ||
| கழிக்க: | ||
| வங்கியால் பெறப்பட்ட ரொக்கம் பதியப்படாதது |
5,000 | |
| மாற்றுச்சீட்டு வரவு வைக்கப்பட்டது | 4,000 | |
| மின்சாரக் கட்டணம் தவறுதலாக பதியப்பட்டது | 900 | 9,900 |
| ரொக்க ஏட்டின்படி மேல்வரைப் பற்று | 3,100 |
51.
| நாள் | விவரம் | வெளிச்செல் இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | கரண் | ||||
| மே 2 | 100 துண்டுகள் ரூ 280 வீதம் | 28,000 | |||
| 200 மீட்டர் சட்டைத்துணி 270 வீதம் | 54,000 | 82,000 | |||
| மே 5 | வீரன் | ||||
| 10 ஆயத்த ஆடைகள் ரூ.1,500 வீதம் | 15,000 | ||||
| மே 16 | ஜெயின் நிறுவனம் | ||||
| 50 போர்வைகள் ரூ.240 வீதம் | 12,000 | ||||
| விற்பனை க/கு வ | 1,09,000 | ||||
| நாள் | விவரம் | பே.ப.எண் | வ.கு.எண் | தொகை (ரூ) | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 | கரண் | |||||
| மே 20 | 10 துண்டுகள் 280 வீதம் | 2,800 | தரம் குறைவு | |||
| மே 27 | வீரன் | |||||
| 2 ஆயத்த ஆடைகள் 1,500 வீதம் | 3,800 | தரக்குறைவு | ||||
| விற்பனைத் திருப்பக் க/கு ப | 5,800 | |||||
52.
| நாள் | விவரம் | பே.ப.எண். | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017 அக் 1 | சரக்கிருப்பு க/கு | ப | 40,000 | ||
| சசிகுமார் முதல் க/கு | 40,000 | ||||
| (வியாபாரம் தொடங்குவதற்காக இட்ட சரக்கு) | |||||
| 3 | ரொக்க க/கு | ப | 60,000 | ||
| முதல் க/கு | 60,000 | ||||
| (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) | |||||
| 4. | கொள்முதல் க/கு | ப | 70,000 | ||
| அருள் க/கு | 70,000 | ||||
| (கடனுக்கு கொள்முதல் செய்தது) | |||||
| 6 | அருள் க/கு | ப | 10,000 | ||
| கொள்முதல் திருப்பம் க/கு | 10,000 | ||||
| (அருளிற்கு சரக்கு திருப்பி அனுப்பியது) | |||||
| 10 | அருள் க/கு | ப | 60,000 | ||
| ரொக்க க/கு | 60,000 | ||||
| (அருளுக்கு செலுத்தியது) | |||||
| 15 | சந்தர் க/கு | ப | 30,000 | ||
| விற்பனை க/கு | 30,000 | ||||
| (கடனுக்கு விற்பனை செய்தது) | |||||
| 18 | விற்பனை திருப்பம் க/கு | ப | 6,000 | ||
| சந்தர் க/கு | 6,000 | ||||
| (சந்தர் சரக்கு திருப்பி அனுப்பியது) | |||||
| 20 | ரொக்க க/கு | ப | 23,000 | ||
| அளித்த தள்ளுபடி க/கு | ப | 1,000 | |||
| சந்தர் க/கு | 24,000 | ||||
| (ரொக்கம் பெற்றுக் கொண்டு தள்ளுபடி அளித்தது) | |||||
| 25 | சம்பளம் க/கு | ப | 2,000 | ||
| வங்கி க/கு | 2,000 | ||||
| (சம்பளம் வழங்கியது) | |||||
| 30 | எடுப்புகள் க/கு | ப | 10,000 | ||
| கொள்முதல் க/கு | 10,000 | ||||
| (சொந்த பயன்பாட்டிற்க்காக சரக்கு எடுத்தது) |
53.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 |
பாண்டீஸ்வரி முதல் க/கு | 50,000 | 2017 ஜூன் 8 |
வாடகை க/கு | 4,000 | ||||
| 14 | விற்பனை க/கு | 10,000 | 10 | அச்சுப்பொறி க/கு | 7,500 | ||||
| 17 | கழிவு க/கு | 6,000 | 11 | கொள்முதல் க/கு | 15,000 | ||||
| 19 | கடன் மீதான வட்டி க/கு | 2,000 | |||||||
| 20 | எடுப்புகள் க/கு | 3,000 | |||||||
| 21 | அஞ்சல் கட்டணம் க/கு | 3,500 | |||||||
| 30 | இருப்பு கீ/இ | 31,000 | |||||||
| 66,000 | 66,000 | ||||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 31,000 |
54.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எ. | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | முதல் | 44,000 | ||
| 2 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | ||
| 3 | கூலி | 800 | ||
| 4 | எடுப்புகள் | 4,000 | ||
| 5 | கொள்முதல் | 75,000 | ||
| 6 | முதலீடு மீதான வட்டி | 2,000 | ||
| 7 | சுங்க வரி | 3,000 | ||
| 8 | கணிப்பொ்பொறி | 20,000 | ||
| 9 | விற்பனை | 72,000 | ||
| 10 | தொடக்கச் சரக்கிருப்பு | 10,200 | ||
| மொத்தம் | 1,18,000 | 1,18,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards