11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
சுவாசம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தசை மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் __________________ ஏற்படுகிறது.
நைட்ரஜன் நார்கோஸிஸ்
அழுத்த மீட்சி நோய்
அழுத்த மீட்சி விடுவிப்பு நோய்
மலை நோய்
2.
இயல்பான சுவாச வீதம் _______________ முறை / நிமிடம்.
6
8
10
12
3.
மார்பறையை உருவாக்குவது எது?
மார்பு எழும்பு
விலா எழும்பு, முள்ளெலும்புகள்
உதரவிதானம்
இவை அனைத்தும்
4.
குரல்வலைத்துளை இதனுள் திறக்கிறது.
குரல்வளை
தொண்டை
உணவுக்குழல்
மூச்சுக்குழல்
5.
உடற்குழி திரவத்தால் தம்முடைய தோலை சுவாசத்திற்கென ஈரப்பதமாக வைத்திருக்கும் விலங்கு_________________
மண்புழு
பறவைகள்
தவளை
கடற்பஞ்சுகள்
6.
நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால்
இரத்தத்தில் அதிக O2 இருப்பதால்
இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்
7.
நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை ______.
உயிர்ப்புத்திறன்
மூச்சுக்காற்று அளவு
எஞ்சிய கொள்ளளவு
உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு
8.
உட்சுவாசத்தின் போது உதரவிதானம் ______.
விரிவடைகிறது
எந்த மாற்றமும் இல்லை
தளர்ந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது
சுருங்கித் தட்டையாகிறது
9.
ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் வடிவமானது ______.
சிக்மாய்டு
நேர்க்கோடு
வளைந்தது
நீள்சதுர மிகை வளைவு
10.
பூச்சிகளின் சுவாச உறுப்புகள் ______.
மூச்சுக்குழல்கள்
செவுள்கள்
பச்சை சுரப்பிகள்
நுரையீரல்கள்
11.
சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது______.
பெருமூளை
முகுளம்
சிறுமூளை
பான்ஸ்
12.
குரல்வளை மூடியின் பணியாது?
13.
வரையறு: நிமிடச் சுவாசக் கொள்ளளவு (Minute Respiratory Volume).
14.
இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.
15.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
16.
தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.
17.
ஹீமோகுளோபின் பற்றி எழுது.
18.
ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு [மி.மீ. பாதரசம்] பகுதி அழுத்தம் மற்றும் வளிமண்டல வாயுக்களுடன் ஒரு ஒப்பீடு அட்டவணையை எழுது.
19.
கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?
20.
புகைப்புடித்தலினால் ஏற்படும் விளைவுகளைக் கூறு.
21.
மனித சுவாசப் பாதையை படம் வரைந்து பாகம் குறி.
22.
சுவாச மாண்டலத்தின் பணிகளைப் பட்டியலிடு.
23.
சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .
1.
(b)
அழுத்த மீட்சி நோய்
2.
(d)
12
3.
(d)
இவை அனைத்தும்
4.
(d)
மூச்சுக்குழல்
5.
(a)
மண்புழு
6.
(c)
இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
7.
(c)
எஞ்சிய கொள்ளளவு
8.
(d)
சுருங்கித் தட்டையாகிறது
9.
(a)
சிக்மாய்டு
10.
(a)
மூச்சுக்குழல்கள்
11.
(b)
முகுளம்
12.
மெல்லிய, மீள் தன்மையுடைய குரல்வளை மூடி, உணவு விழுங்கப்படும் போது உணவுத்துகள் குரல் வளையினுள் சென்று விடாமல் தடுக்கிறது.
13.
1. ஒரு நிமிடத்தில் சுவாசக் பாதையினுள் செல்லும் காற்றின் அளவிற்கு நிமிடச் சுவாசக் கொள்ளளவு என்று பெயர்.
2. இயல்பான மூச்சுக்காற்று அளவு = 500 மி.லி.
3. இயல்பான சுவாச வீதம் = 12 முறை / நிமிடம்
நிமிட நுரையீரல் கொள்ளளவு = 6 லிட்டர் / நிமிடம்
14.
கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
15.
குரல்வளை மூடி
16.
சுவாச உறுப்புகள்:
1. தட்டை புழு - உடல் பரப்பு
2. மண்புழு - ஈரப்பதமான தோல்
3. மீன் - செவுள்
4. இறால் - செவுள்
5. கரப்பான் பூச்சி - மூச்சுக்குழல்
6. பூனை - நுரையீரல்
17.
1. இது இணைவுச் புரத வகையைச் சார்ந்தது.
2. 4% இரும்பும், மீதம் பகுதி ஹிஸ்டோன் வகையைச் சார்ந்த குளோபின் எனும் பொருளால் ஆனது.
3. இதன் மூலக்கூறு எடை 68,000 டால்ட்டன்கள்.
4. இதில் உள்ள நான்கு இரும்புஅணுக்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் இணையும் தன்மையுடையது.
18.
| பகுதி அழுத்தம் மி.மீ, பாதரசம் | |||||
| சுவாச வாயுக்கள் | வளிமண்டலக் காற்று | காற்று நுண்ணறை | ஆக்ஸிஜனற்ற (அசுத்த) இரத்தம் | ஆக்ஸிஜனுள்ள (தூய்மை) இரத்தம் | திசுக்கள் |
| O2 | 159 | 104 | 40 | 95 | 40 |
| CO2 | 0.3 | 40 | 45 | 40 | 45 |
19.
1. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் நீண்ட காலம் வாழக்கூடியச் சூழலில் அதற்கேற்ற சுவாசமும், இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கமும் சரி செய்யப்படுகின்றன.
2. இத்தகைய சூழலைச் சமாளிக்கவே சிறுநீரகங்களிலிருந்து அதிக அளவு எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3. இந்த ஹார்மோன், எலும்பு மஞ்சையைத் தூண்டி அதிக இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
20.
1. கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின் இரத்தக் குழாய்களை மிகக் கடுமையாகச் சேதப்படுத்துகின்றன.
2. தார் நச்சுப்பொருள் சுவாசத்தின் வாயு பரிமாற்றத்தை பாதிக்கிறது.
3. நிக்கோடின், புகைப்பிடித்தலைத் தூண்டக்கூடிய போதைப்பொருளாகும்.
4. நிக்கோடின், இதயத் துடிப்பை அதிகரிப்பதுடன், இரத்த நாளங்களை குறுகச் செய்து, மிகை இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை தோற்றுவிக்கின்றது.
5. கார்பன் மோனாக்ஸைடு திசுக்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தைக் குறைகிறது.
6. நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப் புற்று நோய் ஏற்படுகிறது.
7. கணையம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளிலும் புற்று நோய் உண்டாகிறது.
8. விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது.
9. சுவாசப்பாதை மற்றும் காற்றுப்பைகளையும் சிதைப்பதால் நுரையீரல் அடைப்பு மற்றும் நாள்பட்ட மார்புச் சளி நோய் ஏற்படுகிறது.
10 ஆஸ்த்துமா மற்றும் முற்றிய நுரையீரல் பாதை அடைப்பு நோயை ஏற்படுத்துகிறது.
21.

22.
1. வளிமண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றைப் பரிமாற்றம் செய்கிறது.
2. உடலின் pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது.
3. உட்சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்ட நோய்கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. இயல்பான குரலொலிக்கான குரல் ஒலி நாண்களை பராமரிக்கிறது.
5. செல் சுவாசத்தால் உருவாக்கப்படும் வெப்பத்தை சுவாசத்தின் மூலம் வெளியேற்றுகிறது.
23.

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards