11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.
இன்சுலின் உற்பத்தி
நச்சு நீக்கம்
கிளைக்கோஜின் சேமிப்பு
பித்த நீர் உற்பத்தி
2.
எண்டிரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது.
பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில்
டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்
புரதங்களைப் பாலிபெப்டைடுகளாக மாற்றுதலில்
காசினோஜனை காசினாக மாற்றுதலில்
3.
கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது_______.
குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்
இரைப்பை சுவர்
பெருங்குடல்
குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.
4.
ஒடி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?
கல்லீரல் - கணைய நாளம்
பொதுப் பித்த நாளம்
கணைய நாளம்
சிஸ்டிக் நாளம்
5.
கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியத்தைக் குறிப்பிடவும்.
பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது
கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள செரிக்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்
கணையநீர் லிப்பிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.
என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பை தூண்டுகிறது
6.
வாந்தி என்பது யாது?
7.
இரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.
8.
ஹாஸ்டிரம் என்றால் என்ன?
9.
பேயரின் திட்டுகள் என்பது யாது?
10.
ஈறுவீக்க நோயின் அறிகுறிகள் யாவை?
11.
பிளேக் என்பது யாது?
12.
மனிதனின் பற்சூத்திரத்தை எழுது.
13.
தன்மயமாதல் என்பது யாது?
14.
செரிமான மண்டலத்தின் அவசியம் யாது?
15.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
16.
நாக்கின் பணி யாது?
17.
உமிழ்நீரின் பணிகள் யாவை?
18.
ரென்னின் என்பது யாது?
19.
ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.
20.
நாம் உண்ணும் உணவின் பயன்கள் யாவை?
21.
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

22.
கலோரி மதிப்பின் அடிப்படையில் புரத்ததிற்கும் கொழுப்பிற்கும் இடையிலான வேறுபாடு மற்றும் உடலில் இவற்றின் பங்கு குறித்து எழுதுக.
1.
(a)
இன்சுலின் உற்பத்தி
2.
(a)
பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில்
3.
(a)
குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்
4.
(a)
கல்லீரல் - கணைய நாளம்
5.
(a)
பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது
6.
1. இது எதிர் அலையியக்க நிகழ்வாகும்.
2. கேடு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் கெட்டுப்போன உணவு, ஆகியவை வயிற்றிலிருந்து வாய் வழியே வெளியேறுவது வாந்தி எனப்படும்.
3. இதனை முகுளத்தில் உள்ள வாந்திக் கட்டுப்பாட்டு மையம் கட்டுப்படுத்துகிறது.
7.
| வ.எண் | செல்களின் பெயர் | சுரப்புகள் |
|---|---|---|
| 1. | முதன்மை செல்கள் (அ) பெப்ட்டிக் செல்கள் (அ) சைமோஜன்செல்கள் | இரைப்பை நொதிகள் |
| 2. | கோப்பை வடிவ செல்கள் | கோழை |
| 3. | பெரைட்டல் செல்கள் | HCL மற்றும் காசிலின் உள்ளமைக் காரணி (வைட்டமின் B12 உட்கிரகித்தலுக்குத் தேவை) |
8.
1. பெருங்குடலின் உட்பகுதியில் பை போன்ற விரிவுகள் காணப்படுகின்றன.
2. இவைகளுக்கு ஹாஸ்டிரா என்று பெயர் (ஒருமை: ஹாஸ்டிரம்).
9.
பின்சிறுகுடலில் நுண்குடலுறிஞ்கிகளுடன் கோழைப் படலத்தில் லிம்போசைட்டுகளை உருவாக்கும் நிணநீர் திசுவிற்கு பேயரின் திட்டுகள் என்று பெயர்.
10.
1. ஈறுகள் சிவந்து ரத்தக் கசிவு ஏற்படுதல்.
2. வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல்.
11.
1. கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை பற்களின் மேல் கால்குலஸ் என்னும் கடினமான படிவை ஏற்படுத்துகிறது.
2. இந்தப் படிவிற்குப் பற்றுப்படலம் அல்லது பிளேக் என்றுப்பெயர்.
12.
பற்சூத்திரம் - \(\frac { 2123 }{ 2123 } \times 2\)
13.
உட்கிரகிக்கப்பட்ட உணவூட்டப் பொருட்களை, செல் உட்பொருட்களாக மாற்றும் செயலுக்கு தன்மயமாதல் என்றுப் பெயர்.
14.
1. பெரிய மூலக்கூறுகள் அடங்கிய உணவு அப்படியே நமது செல்களுக்குள் நுழைய முடியாது.
2. எனவே உணவைப் பகுத்து உட்கிரகிக்கும் தன்மைக்கேற்ற சிறிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு செரிமான மண்டலம் அவசியமாகிறது.
15.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
16.
1. பல்லை தூய்மைப்படுத்துகிறது.
2. உணவை தொண்டைப் பகுதிக்கு தள்ளுகிறது.
3. உணவை மெல்லுவதற்கு உதவுகிறது.
4. உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.
5. உணவை விழுங்க உதவுகிறது
6. பேசுவதற்கு பயன்படுகிறது
7. இதில் உள்ள சுவை மொட்டுகள் மூலம் சுவை அரிய முடியும்.
17.
1.உணவை ஈரப்படுத்தி, மென்மையாக்கி குழைந்த நிலைக்கு மாற்றி உயவுத் தன்மையை ஏற்றி எளிதில் விழுங்குவதற்கு ஏற்ற தன்மைக்கு உணவை மாற்றுகின்றன.
2. ஸ்டார்ச்சின் அளவில் 30% ஐ உமிழ் நீர் இரட்டைச் சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
3. லைசோசைம் பாக்டீரியாவை அழிக்கிறது
4.கோழை உணவுக்கு வழுவழுப்புத்தன்மை வழங்குகிறது.
18.
1.இரைப்பை நீரில் காணப்படும் புரதநொதி.
2.இளங்குழந்தைகளின் இரைப்பை நீரில் உள்ளது.
3. இது கால்சியம் அயனிகள் முன்னிலையில் பால் புரதமான காசினோஜனை காசினாக மாற்றுகிறது.
4. வயது அதிகரிக்கையில், இந்த நொதியின் அளவு குறைகிறது.
19.
1. வாய்க்குழியல் உமிழ்நீர் அமைலேஸ் (அ) டயலின் உதவியால் ஸ்டார்ச், மால்டோஸாக மாற்றமடைகிறது.

2. கணைய அமைலேஸ் ஸ்டார்ச்சை, மால்டோஸாக மாற்றுகிறது.

3. சிறுகுடலில் உள்ள மால்டேஸ் எனும் நொதி, மால்டோஸை குளுக்கோஸ் + குளுக்கோஸாக மாற்றுகிறது.

20.
1. ஆற்றலை அளிக்கிறது.
2. உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலையும் கரிமப் பொருட்களையும் அளிக்கிறது.
3. பழுதுபட்ட திசுக்களைப் புதுப்பிக்கத் தேவையான ஆற்றலையும் கரிமப் பொருட்களையும் அளிக்கிறது.
4. நமது உடற்செயலியல் பணிகளை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கிறது.
5. கார்போஹைட்ரேட்கள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ப்பொருட்கள் மற்றும் நீர் ஆகியவை நமக்கு உணவிலிருந்து கிடைக்கிறது.
21.
A - வலது, இடது, கல்லீரல் நாளம்,
B - பொது பித்த நீர் நாளம்,
C - கணைய நாளம்
D - கல்லீரல் கணைய நாளம்|
E - சிஸ்டிக் நாளம்.
22.
| கலோரி மதிப்பு | புரதம் | கொழுப்பு | |
|---|---|---|---|
| 1 | நமக்குத் தேவையான ஆற்றலின் அளவு(கிராம்) கிடைக்கப்பெறும் | 15% | 35% |
| 2. | நாளொன்றுக்கு தேவைப்படும் அளவு | 65 முதல் 75 கிராம் | 60 முதல் 70 கிராம் |
| 3. | கிடைக்கப்பெறும் கலோரி மதிப்பு (கலோரிகள்/கிராம்) | 5.45 கி/ கலோரிகள் | 9.45 கி/ கலோரிகள் |
| 4. | உடற்செயலில் எரிதிறன் மதிப்பு (கி.கலோரி/கிராம்) | 4 கி கலோரிகள்/ கிராம் | 9 கி. கலோரிகள்/கிராம் |
உடலில் பங்கு
கொழுப்பு: நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆற்றல் மூலம் ஆகும்.
புரதம்:
1. உடல் வளர்ச்சி மற்றும் செல்களின் பழுது நீக்கத்திற்கு தேவைப்படுகிறது.
2. ஓரளவு மட்டுமே புரதங்கள் உடலில் சேமிக்கப்படுகிறது.
3. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) மற்றும் உலகச் சுகாதார நிறுவனத்தின் படி (WHO) சராசரி இந்திய மனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் புரதம் ஒரு கிலோகிராம் எடைக்கு 1 கிராம் ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards