11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
தாவரவியல் - சுவாசித்தல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.
2.
ஆல்கஹாலிக் நொதித்தலின் தொழிற்சாலை பயன்களை எழுதுக.
3.
சுவாச ஈவு வரையறு.
4.
கிரப்ஸ் சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.
5.
சுவாசித்தலின் படிநிலைகளை எழுதுக.
6.
ATP அமைப்பு என்றால் என்ன?
7.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
8.
பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் பற்றி எழுதுக.
9.
காற்றிலா சுவாசித்தலின் பண்பினை எழுதுக.
10.
கிராப்ஸ் சுழற்சி பற்றி எழுதுக.
11.
கிளைக்காலைசிஸ் என்றால் என்ன?
12.
காற்று சுவாசித்தல் என்றால் என்ன?
13.
சுவாசித்தல் என்றால் என்ன?
14.
சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?
15.
காற்று சுவாசித்தலின் ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய்.
16.
மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி.
17.
NAD மற்றும் குஹனு எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டோ அல்லது இழந்தோ நடைபெறும் வினை________ எனப்படும்.
சுவாசித்தல்
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை
இணைப்பு வினை
குளுக்கோ நியோஜெனிசிஸ்
18.
CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.
சுவாசித்தல்
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை
இணைப்பு வினை
குளுக்கோ நியோஜெனிசிஸ்
19.
கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்தச் சேர்மம்______.
சக்சினிக் அமிலம்
பைருவிக் அமிலம்
அசிட்டைல் CoA
சிட்ரிக் அமிலம்4
20.
21.
ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ______.
12
13
14
15
1.
1. HMP ஷண்ட் இரண்டு முக்கியமான விளைபொருள்களான NADPH மற்றும் பெண்டோஸ் சர்க்கரைகள் உருவாக்கத்துடன் தொடர்புடையது. கட்டப்படும் வளர் வினைகளுக்கு இது முக்கியப் பங்காற்றுகிறது.
2. உருவாக்கப்பட்ட இணைநொதி NADPH ஒடுக்க உயிர் உற்பத்தி வினைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஆக்ஸிஜன் தனி மூலக்கூறுகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
3.ரைபோஸ் 5-ஃபாஸ்பேட் மற்றும் அதன் வழிப்பொருள்கள் DNA, RNA, ATP, NAD+, FAD மற்றும் இணைநொதி A ஆகிய உருவாக்கத்திற்குப் பயன்படுகிறது.
2.
1.ரொட்டி, கேக், பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்குப் பேக்கரிகளில் பயன்படுகிறது.
2.ஒயின் மற்றும் ஆல்கஹாலிக் மதுபானங்கள் தயாரிக்க மதுபானத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
3.வினிகர், மற்றும் டானிங்கள் தோல், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
3.
சுவாசித்தலின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கும் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவுக்கும் ஊள்ள விகிதமே சுவாச ஈவு அல்லது சுவாச விகிதம் எனப்படும். சுவாச தளப்பொருள்களின் தன்மை மற்றும் அதன் ஆக்சிஜனேற்றத்தை பொருத்து சுவாச ஈவு மதிப்பு மாறுபடும்.

4.
1. TCA சுழற்சியானது ஆற்றலை ATP வடிவத்தில் தாவரங்களின் அனைத்து வளர்சிதை மாற்றங்களுக்கும் அளிக்கிறது.
2. பல்வேறு வளர்சேர்க்கை செயல்களை உருவாக்கும் கார்பன் சேர்மங்களின் மூலப் பொருளாகத் திகழ்கின்றன.
3. TCA சுழற்சியின் பல்வேறு இடைபொருள்கள் மீண்டும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் நியுக்ளிக் அமிலங்களை உருவாக்க உதவுகின்றன.
5.
1. கிளைக்காலைசிஸ்- செல்லின் சைட்டோபிளாசத்தில் உள்ள குழுக்கோஸிப் பைருவிக் அமிலமாக மாற்றுகிறது.
2. இணைப்பு வினை-மைட்டோகாண்ட்ரியா உட்கூழ்மத்தில் (ஆயவசனஒ) பைருவிக் அமிலத்தை அசிட்டைல் ஊடி ஹ வாக மாற்றுகிறது.
3. கிரப்ஸ் சுழற்சி-மைட்டோகாண்ட்ரியா மேட்ரிக்ஸில் அசிட்டைல் ஊடி ஹ வை கார்பன்-டை-ஆக்ஸைடாகவும் நீராகவும் மாற்றுகிறது.
6.
ATP உற்பத்தி சுவாசித்தல் நிகழ்ச்சி காரணமாக உள்ளது, கார்ல் லோமென் (Karl Lohman) (1929) என்பவர் ATP யைக் கண்டறிந்தார். ATP(Adenosine Tri Phosphate) ஒரு நியுக்ளியோடைடு இதில் அடினைன் என்ற ஒரு காரம். ரைபோஸ் எனும் பென்டோஸ் சர்க்கரை மற்றும் மூன்று ஃபாஸ்பேட் தொகுதிகள் காணப்படும். மூன்று ஃபாஸ்பேட் தொகுதிகளில் இறுதியில் உள்ள இரண்டு ஃபாஸ்பேட்டுகள் உயர் ஆற்றல் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.
7.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
8.
சுவாசித்தலின் போது சைட்டோசோலில் குளுக்கோஸ் உடைவது கிளைக்காலைசிஸ் (2/3 பகுதி) மற்றும் ஆகிஸிஜனேற்ற பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் (1/3 பகுதி) ஆகிய இரண்டிலும் நடைபெறுகிறது.பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் வார்பர்க், டிக்கன்ஸ், லிப்மேன் (1938)என்பவர்களால் கண்டறியப்பட்டது. எனவே இது வார்பர்க்-டிக்கன்ஸ்-லிப்மேன் வழித்தடம் எனவும் அழைக்கப்படும்.
9.
1. காற்று சுவாசத்தை விடக் காற்றிலா சுவாசித்தல் குறைந்த திறனுடையவை
2. ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து குறைந்த எண்ணிக்கையுடைய ஹகூஞ மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
10.
இணைப்பு வினையில் உருவான இரண்டு மூலக்கூறு அசிட்டைல் CoA வானது கிரப்ஸ் சுழற்சியில் நுழைகின்றன. இது ஜெர்மனி நாட்டின் உயிர் வேதியியலார் சர் ஹான்ஸ் அடால்ப் கிராப்ஸ் (Sir Adolf Krebs) அவர்களால் கண்டறியப்பட்டதால் இப்பெயர் பெற்றது. TCA சுழற்சிக்கு தேவையான நொதிகளில் சக்சினேட் டிஹைட்ராஜினேஸ் என்ற நொதி மட்டும் மைட்டோகான்ட்ரியத்தின் உட்சவ்வில் காணப்படுகிறது.
11.
கிளைக்காலைசிஸ் என்பது 6-கார்பன் கொண்ட குளுக்கோஸ் இரண்டு மூலக்கூறு 3-கார்பன் கொண்ட பைருவிக் அமிலமாக உடையும் நிகழ்வு தொடர்வினைகள் ஆகும்.கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சிக்குத் தேவையான நொதிகள் அனைத்தும் சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
12.
ஆக்ஸிஜன் உள்ள போது நடைபெறும் சுவாசித்தல் காற்று சுவாசித்தல் எனப்படும். காற்று சுவாசித்தலின் போது உணவுப் பொருட்களான கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் முழுவதும் ஆக்ஸிஜனேற்றமடைந்து CO2, H2O மற்றும் ஆற்றல் வெளியிடப்படுகிறது. காற்று சுவாசித்தல் மிகச் சிக்கலான ஒரு நிகழ்ச்சியாகும். இது நான்கு படிநிலைகளில் நடைபெறுகிறது.
13.
சுவாசித்தல் என்ற வார்த்தை பெபிஸ் (Pepys) (1996) என்பவரால் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. சுவாசித்தல் என்பது ஒரு உயிரியல் நிகழ்ச்சி,இதில் பலதரப்பட்ட உணவுப் பொருட்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றமடைந்து இந்த நிகழ்ச்சியின் போது O2 உள்ளெடுக்கப்பட்டு CO2 வெளியிடப்படுகிறது.
14.
சில சதைப்பற்றுள்ள தாவரங்களான ஒபன்ஷியா, பிரையோஃபில்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் பகுதியாக ஆக்சிஜனேற்றமடைந்து கரிமஅமிலமாகக் குறிப்பாக மாலிக் அமிலமாக மாறுவதால் இத்தாவரங்களின் சசுவாசித்தில் CO2வெளியிடுவதில்லை ஆனால் O2பயன்படுத்தப்படுகிறது. இதில் சுவாச ஈவு மதிப்பு சுழியாக உள்ளது.
15.
காற்று சுவாசித்தலின் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் உருவாகும் நிகர மூலக்கூறுகளின் அளவு
| நிலைகள் | CO2 | ATP | ஒடுக்க நிலையிலுள்ள NAD | ஒடுக்க நிலையிலுள்ள FAD | மொத்த ATP உற்பத்தி |
| கிளைக்காலைசிஸ் | 0 | 2 | 2(2x2=4) | 0 | 6 |
| இணிப்பு வினை | 2 | 0 | 2(2x3=6) | 0 | 6 |
| கிரப்ஸ் சுழற்சி | 4 | 2 | 6(6x3=18) | 2(2x2=4) | 24 |
| மொத்தம் | 6 | 4 ATP கள் | 28 ATP கள் | 4 ATP கள் | 36 ATP கள் |
சுவாச ஈவு (Respiratory Quotient)
சுவாசித்தலின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கும் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவுக்கும் உள்ள விகிதமே சுவாச் ஈவு அல்லது சுவாச விகிதம் எனப்படும். சுவாச தளப்பொருள்களின் தன்மை மற்றும் அதன் ஆக்சிஜனேற்றத்தை பொருத்து சுவாச் ஈவு மதிப்பு மாறுபடும்.

16.
TCA சுழற்சியின் தொடக்கத்தில் அசிட்டைல் CoA வானது ஒரு நீர் மூலக்கூறினைப் பயன்படுத்தி ஆக்ஸலோ அசிட்டேட்டுடன் இணைந்து சிட்ரேட் அல்லது சிட்ரிக் அமிலம் உருவாகிறது. ஆகவே கிரப்ஸ் சுழற்சியைச் சிட்ரிக் அமிலச் சுழற்சி (CAC)(அ) ட்ரை கார்பாக்ஸிலிக் அமில (TCA) சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியாவில் நிகழும் இணைப்பு வினை மற்றும் கிரப்ஸ்சுழற்சியின் ஒட்டுமொத்த நிகழ்வு பின்வருமாறு:
பைருவிக் அமிலம் 4NADH+FAD+4H2O+ADP+Pi
மைட்டோண்ட்ரிய மேட்ரிக்ஸ்
3CO2+4NADH+4H++FADH2+H2O+ATP
கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியின் இறுதியில் உருவான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் மைட்டோகாண்ட்ரியத்தின் மேட்ரிகஸில் நுழைவதால் இவை இரண்டும் தனித்தனியே கிரப்ஸ் சுழற்சியை நிகழ்த்தி, மொத்தமாக ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து ஆறு மூலக்கூறு CO2 எட்டு மூலக்கூறு NADH + H+,இரண்டு மூலக்கூறு FADH2 மற்றும் இரண்டு மூலக்கூறு ATP ஆகியவை உருவாகின்றன.
17.
(b)
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை
18.
(a)
சுவாசித்தல்
19.
(c)
அசிட்டைல் CoA
20.
(c)
21.
(d)
15
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards