11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/07/2019
திசு அளவிலான கட்டமைப்பு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தவறான ஜோடியை கண்டுபிடி
எலும்பு - எரித்ரோசைட்
குருத்தெலும்பு - காண்ட்ரோசைட்
அடிபோஸ் - திசு
திரவ இணைப்புத் திசு - இரத்தம்
2.
செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.
நொதி
கோழை
உமிழ்நீர்
இரைப்பை நீர்
3.
நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு
எண்ணெய் சுரக்கும் சுரப்பி
ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
நொதிகளை சுரக்கும் சுரப்பி
மெழுகினை சுரக்கும் சுரப்பி
4.
இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?
கொல்லாஜன்
ஏரியோலார்
குருத்தெலும்பு
குழல் வடிவ நாரிழை
5.
குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.
தோல்
செரிப்புபாதை
பித்தப்பை
மூச்சுக்குழல்
6.
செரிமான மண்டலத்தில் காணப்படும் தூண்வடிவ எபிதீலியத்தின் மாறுபாடுகள் யாவை?
7.
திசுக்கள் ஏதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
8.
திசுவியல் என்றால் என்ன?
9.
உறுப்பு மண்டலம் என்றால் என்ன?
10.
வரையறு: திசு
11.
சிலவகை எபிதீலியங்கள் பொய்யடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன?
12.
மீள் தன்மை இணைப்புத்திசுவின் பயன் யாது?
13.
பொய் அடுக்கு எபிதீலியம் என்பது யாது?
14.
எபிதீலிய திசு வகைகளையும் அது காணப்படும் இடத்தை குறிப்பிடு
15.
எபிதீலிய திசுக்களின் பணிகள் யாவை?
16.
எளிய எபிதீலியத்திசு வகைகள் யாவை?
17.
மீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து
18.
எபிதீலிய செல்களை வகைப்படுத்தி, அவை காணப்படும் இடம் மற்றும் பணியினை அட்டவணைப்படுத்து.
19.
அடர்வான சீரான இணைப்புத்திசுவின் பண்புகளை பட்டியலிடு.
20.
இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.
1.
(a)
எலும்பு - எரித்ரோசைட்
2.
(b)
கோழை
3.
(b)
ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
4.
(a)
கொல்லாஜன்
5.
(d)
மூச்சுக்குழல்
6.
1. செரிமான மண்டலத்தில் முகவுரையில் உள்ள செல்கள், உறிஞ்சும் தன்மையுடைய செல்களின் உச்சிப்பரப்பில் மைக்ரோவில்லை என்னும் நீட்சிகளாகவும்.
2. பாதுகாப்பிற்கான உயவுத் தன்மையுடைய கோழைப் பொருளைச் சுரக்கும் கோப்பை வடிவாகி செல்களாகவும் மாறுபாடு அடைந்துள்ளது
7.
செல்களின்
1. அளவு
2. வடிவம், மற்றும்
3. செயல்
8.
திசுக்களை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு திசுவியல் எனப்படும்.
9.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் இணைந்து பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளைச் செய்தால் அவை உறுப்பு மண்டலம் எனப்படும்.
எ.கா: செரிமான மண்டலம், கழிவுநீக்க மண்டலம்
10.
ஒத்த அமைப்புடைய, பொதுவான அல்லது தொடர்வுடைய செயல்களை ஒன்றுபட்டுச் செய்யும் ஒரேய வகையான செல் தொகுதி திசு எனப்படும்.
11.
1.இவைகள் தூண்வடிவத்தில் சமமற்ற அளவுகளில் காணப்படுகிறது.
2.இவை ஒரே அடுக்கினால் ஆனது.
3.ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்குகள் போன்று தோற்றமளிக்கிறது.
4.இதற்கு காரணம் இதன் செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுகிறது.
12.
1. தமனிகளில் அலை போன்ற துடிப்புக்கு காரணமாகிறது.
2. சுவாசித்தலின்போது நுரையீரல் சுருங்குவதற்கு காரணமாகிறது.
3. எலும்பினைப்பு நார்கள் மூலம் முதுகெலும்புத் தொடர் இணைக்கப்பட்டுள்ளது.
4. சுவாசக் குழல் சுருங்கி விரிய காரணமாகிறது.
13.
தூண் வடிவத்திலும் அளவுகளிலும் காணப்படும் ஒரேய அடுக்காலான செல்களைக் கொண்டது. ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்குகள் போன்று தோற்றமளிக்கிறது.இதற்கு காரணம் இதன் செல்களில் உள்ள உட்கருக்கள் வெவேறு மட்டங்களில் காணப்படுகிறது. இதனால் இவை பொய் அடுக்கு எபிதீலியம் எனப்படுகிறது.
14.
| வ.எண் | எபிதீலிய திசு வகைகள் | காணப்படும் இடம் |
|---|---|---|
| 1 | எளிய தட்டை வடிவ எபிதீலியம் | நுரையீரலின் காற்றுப்பைகள் |
| 2 | எளிய கனசதுர வடிவ எபிதீலியம் | சிறுநீரகம் |
| 3 | எளிய தூண் வடிவ எபிதீலியம் | குடல் |
| 4 | தட்டை வடிவ எபிதீலியம் | உணவுக்கு குழல் |
| 5 | குறு இழை கொண்ட பொய் அடுக்கு தூண் வடிவ எபிதீலியம் | சுவாசப் பாதை |
15.
1. உடலின் மேற்பரப்பில் உரைப்போன்று அமைந்துள்ளது.
2. உடலின் மேற்பரப்பில் மெல்லிய பாடலை எபிதீலியமாக அமைந்துள்ளது
3. உடலின் மேற்பரப்பில் சுரப்பு எபிதீலிய,மாக காணப்படுகிறது.
4. பாதுகாப்பு மற்றும் உணர்வறிதல் போன்ற பணிகளை செய்கிறது.
16.
1. தட்டை வடிவ செல்கள்
2. கனசதுர வடிவ செல்கள்
3. தூண் வடிவ செல்கள்
4. குறு இழை கொண்ட செல்கள்
5. பொய் அடுக்கு செல்கள்
17.
I. மீள்தன்மை நாரிழைகள்:
1. எலும்புத்தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது.
2. ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து அளிக்கப்படும் இழுவிசை அழுத்தத்தை தாங்கும் வகையில் அமைந்துள்ளது.
3. இவ்விணைப்புத் திசுவானது எலும்புத்தசைகளோடு எலும்பை இணைக்கும் தசை நாண்களிலும் எலும்பினைப்பு நார்களிலும் காணப்படுகிறது.
4.எலும்பினைப்பு நார்கள் ஒரு எலும்பை மற்றோர் எலும்புடன் இணைகின்றன.
II. மீள்தன்மை இணைப்புத்திறன்:
1. மீள்தன்மை நாரிழைகள் அதிகம் காணப்படுகின்றன.
2. இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் பழைய நிலையை அடைதல் மீள்தன்மை நாரிழையால் நடைபெறுகிறது.
3. தமனிகளில் அலை போன்ற துடிப்புடன் இரத்தம் பாய்வதற்கும் உட்சுவாசத்தைத் தொடர்ந்து நடைபெறும் வெளிசுவாசத்தால் நுரையீரல் சுருங்குவதற்கும் இவ்வகை நாரிழைகள் தான் காரணமாகும்.
4. பெரிய தமனிகளின் சுவரிலும், முதுகெலும்புத் தொடரில் காணப்படும் எலும்பினைப்பு நார்களிலும் சுவாசக்குழல் சுவர்களிலும் இவ்வகை இணைப்புத் திசுக்கள் காணப்படுகின்றன.
18.
| வ.எண் | எபிதீலியம் | காணப்படும் இடம் | வேலை | |
|---|---|---|---|---|
| I | எளிய எபிதீலியம் | |||
| 1 | தட்டை வடிவ எபிதீலியம் | சிறுநீரகக் கிளாமருலஸ், நுரையீரல் காற்றுப்பை, இதயம் , இரத்தக் குழல், நிணநீர் நாளங்கள் | உரை(பாதுகாப்பு) ஊடுருவல், வடிகட்டுதல் | |
| 2 | கனசதுர வடிவ எபிதீலியம் | சிறுநீரகக் குழல்கள், நாளங்கள் சிறிய சுரப்பிகள் அண்டக பரப்பு | சுரத்தல் உறிஞ்சுதல் | |
| 3 | தூண் வடிவ எபிதீலியம் | செரிமான மண்டலத்தில் உட்புறம் | உறிஞ்சுதல் பாதுகாப்பு கோழை நொதி சுரத்தல் | |
| 4 | குறுயிழை எபிதீலியம் | கருப்பை ஆண்ட நாளங்கள் சிறுநீர் நாளம் சிறிய சுவாசக் குழல்கள் | கோழை திரவத்தை உந்தித் தள்ளுகிறது. | |
| II | பொய் அடுக்கு எபிதீலியம் | சுவாசக் குழல், சுவாசப் பாதை, எபிடிடிமிஸ், பெரிய சுரப்பிகளின் குழல்கள் ஆண்களின் சிறுநீர் நாளம் | பாதுகாப்பு, சுரப்பு, உறிஞ்சுதல் | |
| III | சுரப்பு எபிதீலியம் | உணவுப்பாதையில் காணப்படும் கோப்பை வடிவ செல்க, உமிழ்நீர் சுரப்பிகள் | ||
| கூட்டு எபிதீலியம் | ||||
| IV | 1 | தட்டை எபிதீலியம் | உணவுக்குழல், வாய், பெண் இனப்பெருக்க உறுப்பு | சுரப்பு கடத்துதல் |
| 2 | அடுக்கு கன சதுர வடிவ எபிதீலியம் | வியர்வை சுரபிக் குழல் பால் சுரப்பிகள் | சுரப்பு | |
| 3 | தூண் வடிவ செல்கள் | தொண்டை ஆன் சிறுநீர் நாளம், சுரப்பிகளின் நாளங்கள் | சுரப்பு, கடத்தல் | |
19.
1.முக்கிய பொருளாக கொல்லாஜன் இழைகள் காணப்படுகிறது.
2. இணையாக அமைந்த தசைக்கற்றைகளுக்கும் சில மீள்தன்மையுடைய இழைகளுக்கும் இடையில் காணப்படுகிறது.
3. இதன் முக்கிய செல்வாக்கை ஃபைப்ரோபிளாஸ்ட் ஆகும்.
4. எலும்புத்தசையையும் எலும்புகளையும் இணைக்கிறது.
5. குறிப்பிட்ட திசையிலிருந்து அளிக்கப்படும் இழுவிசை அழுத்தத்தை தாங்கும் வகையில் அமைந்துள்ளது.
6. தசை நாண்களிலும், எலும்பிணைப்பு நார்களிலும் காணப்படுகிறது.
20.
| I. தளர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | ஏரியோலார் திசு | - எப்பீதிலிய செல்களுக்கு தாங்கு சட்டகம் - உடல் திசுக்களுக்கு நீர், உப்பினை தேக்குகிறது |
| 2 | அடிபோஸ் திசு | - கொழுப்பையும், பயன்படுத்தப்படாத உணவை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. - உணவுண்ணாத நிலையில் ஆற்றலை கொடுக்கிறது. |
| 3 | ரெட்டிகுலார் திசு | - நிணநீர் கணுக்கள், மண்ணீரல், எலும்பு மஞ்சை போன்ற உறுப்புகளில் இரத்த செல்களுக்கு அகசட்டமாக பயன்படுகிறது. |
| II. அடர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | அடர்வான சீரான திசு | - தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது. - எலும்பினையும் எலும்புபினையும் இணைகிறது. |
| 2 | அடர்வான சீரற்ற திசு | - சிறுநீரகம், எலும்பு, குருத்தெலும்பு, தசைகளுக்கு நாரிழை உரையாக அமைகிறது. |
| 3 | மீள்தன்மை திசு | - இழுக்கப்பட்ட தசைகளை மீண்டும் சுருண்ட உறையாக அமைகிறது. - தமனிகள் சுருங்கி விரிய, நுரையீரல் சுருங்க காரணமாகிறது. |
| III. சிறப்பு வகை இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | குருத்தெலும்புகள் | - வளையும், அழுத்தத்தை தாங்கும் - காதுமடல், மூக்கின் ஆதரவு மற்றும் அமைப்பைத் தருகிறது. |
| 2 | எலும்புகள் | - அகச்சட்டமாக அமைந்து உடலுக்கு உருவத்தை கொடுக்கிறது. |
| 3 | இரத்தம் | - திரவ இணைப்புத்திசு - உடலில் உள்ள அணைத்து உறுப்புகளையும் இணைகிறது. |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards