11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/03/2019
11th Public Exam March 2019 Important 5 Marks Questions
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மூட்டுகளின் வகைகளை விவரி?
2.
இறால் வளர்ப்பு பற்றி எழுதுக.
3.
ஜிம்னோஸ்பெர்ம்களில் பொதுப்பண்புகள் யாவை?
4.
கார்போஹைட்ரேட்கள் [அ] சாக்கரைடுகளை வகைபடுத்து.
5.
செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் செயல்முறைகள் பற்றிய விளக்கப்படம் வரைக.
6.
கூட்டிலை என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்குக.
7.
அல்லி வட்டத்தின் வடிவங்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
8.
பூஞ்சைகளின் தீய விளைவுகள் யாவை?
9.
மண்புழுவின் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளின் தொகுப்பு அட்டவணையை பட்டியலிடு
10.
இரத்தத்தின் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு கடத்தப்படுதலை விளக்கு.
11.
விலங்கு திசுக்களின் வகைப்பாட்டின் அட்டவணையை எழுது
12.
தொகுதி : பிளாட்டிஹெல்மின்தாஸின் சிறப்பு பண்புகள் எவை?
13.
வேர் உருமாற்றத்தின் வகைகளை வகைப்படுத்து. [வழித்தடம் மட்டும் வரையவும்].
14.
வைரஸ்களால் தாவரங்களுக்கு, விலங்குகளுக்கு மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கூறு.
15.
சுவாச மாண்டலத்தின் பணிகளைப் பட்டியலிடு.
16.
இரத்தம் உரைதல் நடைபெறும் முறையை விளக்கு.
17.
வேறுபடுத்து தமனிகள் மற்றும் சிரைகள்.
18.
நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?
19.
20.
காற்று சுவாசித்தலின் ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய்.
21.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
22.
இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக
23.
24.
ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி,அதன் நிறை,குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
25.
பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
26.
மார்புக்கூட்டை உருவாக்கும் விலாஎலும்புகளின் வகைகள் யாவை?
27.
28.
நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி.
29.
தவளையின் பெண் இனப்பெருக்க மண்டலத்தை விளக்குக.
30.
இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.
31.
சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .
32.
இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி
33.
விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?
34.
நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?
35.
36.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
37.
லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
38.
தசைமண்டலத்தின் கோளாறுகளை பட்டியலிடுக
39.
குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.
40.
1.
(i) உடலில் உள்ள எலும்புப்பகுதிகளின் அனைத்து வகை இயக்கங்களும் மூட்டுகள் அவசியமானது.எலும்புகள் இணையும் புள்ளிகளுக்கு மூட்டுகள் என்று பெயர்.
(ii) சில சமயங்களில் மூட்டுகள் பாதுகாப்புப் பணிகளை மேகொள்கின்றன. தசைகளில் உருவாகும் விசைகளைக் கொண்டு மூட்டுகள் இயங்குகின்றன.
(iii) மனிதனின் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளுக்கு இவை பெரிதும் உதவுகின்றன.
(iv) மூட்டுகள் நெம்புகோலின் சூழல் புள்ளியாக செயலாற்றுகின்றன.
(v)அமைப்பு அடிப்படையில் மூட்டுகளை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
நாரிணைப்பு மூட்டுகள்
(i) இவ்வகை மூட்டுகள் அசையா மூட்டுகள் ஆகும்.எனவே எழுப்புகளுக்கிடையே எந்த அசைவுமிருக்காது.
(ii) மண்டையோடு எலும்புகளில் உள்ள தையல் போன்ற மூட்டுகள் நாரிணைப்பு வகையானவை.
குருத்தெலும்பு மூட்டுகள்
(i) இவ்வகை மூட்டுகள் சிறிதளவு அசையும் தன்மைபெற்றவை , இவற்றின் மூட்டுப்பரப்புகள் குருத்தெலும்பால் பிரிக்கப்பட்டுள்ளன,
எ.கா முதுகெலும்புத் தொடரில் உள்ள அடுத்தடுத்த முள்ளெலும்பு களுக்குகிடையேயான இணைப்பு.
உயவு மூட்டுகள் அல்லது திரவ மூட்டுகள்அல்லது சைனோவியல் மூட்டுகள்
(i) இவ்வகை மூட்டுகள் நன்கு அசையும் தன்மை கொண்டவை
(ii) எலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் சைனோவியல் திரவத்தால் நிர்ப்பப்பட்டுள்ளன.
(iii) இம்மூட்டுகளின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| மூட்டு | விளக்கம் | |
|---|---|---|
| 1 | மூளை அச்சு மூட்டு அல்லது சூழலச்சு மூட்டு | முதல் கழுத்து முள்ளெலும்பு மற்றும் அச்செழும்புக்கிடையிலான மூட்டு |
| 2 | நழுவு மூட்டு | மணிக்கட்டு எலும்புகளுக்குகிடையிலான மூட்டு |
| 3 | சேண மூட்டு | மணிக்கட்டு எலும்பு மற்றும் உள்ளங்கை எலும்பிற்கும் இடையேயான மூட்டு |
| 4 | பந்துகிண்ண மூட்டு | தோள்பட்டை வளையத்திற்கும் மேற்கை எலும்புக்கும் இடையிலான மூட்டு |
| 5. | கில் மூட்டு | முழங்கால் முட்டு இணைப்பு |
| 6 | கோண மூட்டு | ஆர எலும்புக்கும் மணிக்கட்டு எலும்புக்கும் இடையிலான மூட்டு |
2.
3.
1.பெரும்பாலானவை பசுமை மாறா மரங்கள் அல்ல புதர்ச்செடிகளாக உள்ளன. ஒரு சில வன்கொடிகளாக (Lianas)உள்ளன. எடுத்துக்காட்டு:நீட்டம்.
2.தாவர உடல் வித்தகத்தாவரச் (2n) சந்ததியைச் சார்ந்தது. இது வேர், தண்டு, இலை என வேறுபாடுற்று காணப்படுகிறது.
3. நன்கு வளர்ச்சியடைந்த ஆணி வேர்த்தொகுப்பு காணப்படுகிறது. சைகஸ் தாவரத்தில் காணப்படும் பவழவேர்கள் நீலப்பசும்பாசிகளுடன் ஒருங்குயிரி வாழ்க்கை மேற்கொள்கிறது. பைனஸ் தாவரத்தின் வேர்கள் பூஞ்சைவேரிகளைக் (Mycorrhizae) கொண்டுள்ளன.
4. தரை மேல் காணப்படும் நிமிர்ந்த கட்டைத்தன்மையுடைய தண்டு கிளைத்தோ, கிளைக்காமலோ (சைகஸ்) இலைத்தழும்புடன் காணப்படும்.
5. கோனிஃ பெர் தாவரங்களில் வரம்பு வளர்ச்சி கொண்ட கிளைகள் (Dwarf shoots), வரம்பற்ற வளர்ச்சி கொண்ட கிளைகள் (Long shoots) என இருவகைக் கிளைகள் காணப்படுகின்றன.
6.மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலைகள் காணப்படுகின்றன. அவை தழை மற்றும் செதில் இலைகளாகும். தழை இலைகள் பசுமையான, ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும் வரம்பு வளர்ச்சி கொண்ட கிளைகளில் தோன்றுகின்றன. இவை வறள்தாவர பண்புகளைக் கொண்டுள்ளன.
7.சைலத்தில் டிரக்கீடுகள் காணப்படுகின்றன. நீட்டம் மற்றும் எபிட்ராவில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.
8.பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது. பாரங்கைமா அதிகம் கொண்ட மனோசைலிக் (Manoxylic)- துளையுடைய மென்மையான அதிகப் பாரங்கைமா பெற்று அகன்ற மெடுல்லரி கதிர் கொண்டது (சைகஸ்) அல்லது பிக்னோசைலிக் (Pycnoxylic)- குறுகிய மெடுல்லரி கதிர் கொண்டு அடர்த்தியாக உள்ளவை (பைனஸ்)கட்டைகள் காணப்படுகின்றன.
9.இவை மாற்று வித்துத்தன்மையுடையவை. இருபால் வகை தாவரங்கள் (பைனஸ்)அல்லது ஒருபால் வகை தாவரங்கள் (பைனஸ்) காணப்படுகின்றன.
10.நுண்வித்தகம் மற்றும் பெருவித்தகம் முறையே நுண்வித்தகயிலை மற்றும் பெருவித்தகயிலைகளில் தோன்றுகின்றன.
11.ஆண் மற்றும் பெண் கூம்புகள் தனித்தனியே உண்டாக்கப்படுகின்றன.
12.காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
13.ஆண் உட்கருக்கள் மகரந்தக் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு (சைஃபனோகேமி) கருவுறுதல் நடைபெறுகிறது.
14.பல்கருநிலை (Polyembryony)காணப்படுகிறது.திறந்த சூல்கள் விதைகளாக மாற்றமடைகின்றன.ஒற்றைமடிய (n) கருவூண்திசு (Endosperm)கருவுறுதலுக்கு முன்பாகவே உருவாகிறது.
15.வாழ்க்கைச் சுழற்சியில் ஓங்கிய வித்தகத்தாவர சந்ததியும், மிகக் குறுகிய கேமீட்டகத்தாவர சந்ததியும் கொண்ட தெளிவான சந்ததி மாற்றம் நிகழ்கிறது.
4.
5.

6.
ஒரு இலைக்காம்பில் ஒரே ஒரு இலைத்தாள் மட்டும் இருந்தால் அதற்குத் தனி இலை என்று பெயர். ஓர் இளைக்காம்பில் பல இலைத்தாள்கலிருந்தால் அதற்குத் கூட்டிலை என்று பெயர். அதிலுள்ள ஒவ்வொரு இலைத்தாளிற்கும் சிற்றிலை என்று பெயர். கூட்டிலைகள் மொத்த இலைப்பரப்பை அதிகரிக்கச் செகின்றன/ மொத்தக் கூட்டிலைக்கும் ஒரே ஒரு கோணமொட்டும் காணப்படுகிறது. ஆனால் சிற்றிலைகளில் எவ்விதக் கோணமொட்டும் கிடையாது.
1. சிறகு வடிவ கூட்டிலைகள் ( Pinnately compound leaf) சிறகு வடிவக் கூட்டிலைகள் என்பவை கூட்டிலைக் காம்பு (Rachis) என்ற அச்சில் பல பக்கவாட்டுச் சிற்றிலைகளை மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ கொண்டு அமைத்திருக்கும். எ.கா. டாமாரின்ஸ் (புளி). கேசியா.
(i) ஒரு மடிக்கூட்டிலை(Unipinnate): இவற்றுள் கூட்டிலை காம்பு தனித்தும், கிளைகழற்றும், சிற்றிலைகள் நேரடியாக நடுஅச்சில் பல மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ அமைத்திருக்கும். எ.கா. ரோஜா, வேம்பு, ஒருமடிக்கூட்டிலை இரண்டு வகைபடும்.
(a) சிற்றிலைகள் இரட்டைப்படை எண்ணிக்கையில் அமைந்திருந்தால் அடர்க்கு இரட்டைபடை ஒருமடிக்கூட்டிலை (Paripinnate) என்று பெயர். எ.கா:டாமரின்டஸ், ஆப்ரஸ், செஸ்பேனியா, சராகா, கேஷியா
பி. சிற்றிலைகள் ஒற்றைப் படையில் அமைந்திருந்தால் அதற்கு ஒற்றைப்படை ஒருமடிக்கூட்டிலை (Imparipinnate) என்று பெயர் எ.கா: ரோசா, அசாடிராக்டர், முரைய்யா
(ii) இருமடிக்கூட்டிலை (Bipinnate): முதல்நிலை கூட்டிலை அச்சிலிருந்து இரண்டாம் நிலை அச்சுகள் உருவாகி, அதிலிருந்து சிற்றிலைகள் தோன்றுகின்றன. இரண்டாம் நிலை அச்சுகளுக்குப் பின்னா என்று பெயர். சிற்றிலைகளைப் பொறுத்து இந்தப் பின்னாக்களின் எண்ணிக்கை மாறுபடும். எ.கா: டெலோனிக்ஸ் (செம்மயிர் கொன்றை) மைமோசா அகேஷியா நிலோட்டிகா (கருவேலம்), சீசல்பினியா.
(iii) மும்மடிக்கூட்டிலை (Tripinnate): இவ்வகையில் கூட்டிலை அச்சு மூன்றாகக் கிளைக்கிறது. அதாவது இரண்டாம் நிலை அச்சு கிளைத்து இலைகளைத் தங்கும் மூன்றாம் நிலை அச்சுகளை உருவாக்குகிறது. எதற்கு மும்மடிக்கூட்டிலை என்று பெயர். எ.கா: மொரிங்கா (முருங்கை), ஒரசைலம்
(iv) பன்மடிக்கூட்டிலை (Decompound): கூட்டிலைகள் மூன்று முறைக்கும் மேலாகக் கிளைத்திருந்தால் அதனை பன்மடிக்கூட்டிலை என்கிறோம். எ.கா: டாக்கஸ் கரோட்டா, கொரியாண்டர் சட்டைவம் (கொத்தமல்லி) ஃபியுனிகுலம் வல்கேர் (சோம்பு)

2. அங்கை வடிவக் கூட்டிலை (palmately compound leaf): அனைத்துச் சிற்றிலைகளும் இலைக்காம்பின் நுனியில் ஒரே புள்ளியில் இணைக்கப்பட்டிருந்தால் அதை அங்கை வடிவக் கூட்டிலை என்கிறோம். உள்ளங்கையிலிருந்து விரல்கள் தோன்றுவது போல இங்கு சிற்றிலைகள் ஆரநீட்சிகளாக தோன்றுகிறது. இக்கூட்டிலை பல வகைப்படும். அவையாவன.
(i) ஒருசிற்றிலை அங்கைக்கூட்டிலை (Unifoliolate): இலைக்காம்பில் ஒரே ஒரு சிற்றிலை மட்டுமே அமைந்திருந்தால் அதற்கு ஒருசிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எ.கா: சிட்ரஸ், டெஸ்மோடியம் கான்ஜிடிகம்
(ii) இருசிற்றிலை அங்கைக்கூட்டிலை (Bifoliolate): இலைக் காம்பில் இரண்டு சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு இருசிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எ.கா:பலனைடிஸ் ராக்ஸ்பெர்கியை, ஹார்விக்கியா பைனேட்டா, ஜோர்னியா டைஃபில்லா
(iii) முச்சிற்றிலை அங்கைக்கூட்டிலை (Trifoliolate):
இலைக்காம்பில் மூன்று சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு முச்சிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எ.கா. ஏகில் மார்மிலஸ் (விளாம்பழம்), டிரைஃபோலியம், லாப்லாப், ஆக்சாலிஸ்

7.
| வ.எண் | வகைகள் | வடிவம் | எடுத்துக்காட்டு |
| I | ஆரச்சீர் கொண்ட ஏனய்யா அல்லிகள் | சிலுவை வடிவம் | பிராசிக்கா, கடுகு, முள்ளங்கி. |
| கேரியோபில் லேஷியஸ் | டயான்தஸ் | ||
| ரோசேஷியஸ் | ரோஜா, தேயிலை | ||
| II | இருபக்கச் சீருடைய இணையா அல்லிகள் | பாப்பிலியோ னேஷியஸ் | பட்டாணி, பீன்ஸ், க்ளைட்டோரியா டெர்னேஷியா |
| III | சமச்சீருடை இணைந்த அல்லிகள் | குழல் வடிவம் | சூரியகாந்தி -வட்டு சிறுமலர் . |
| மணி வடிவம் | பைசாலிஸ் | ||
| புனல் வடிவம் | டாட்டூரா | ||
| சக்கர வடிவம் | கத்தரி | ||
| நீள்குழல் தட்டு வடிவம் | இக்ஸோரா | ||
| தாழிவடிவம் | பிரையோஃபில்லம். | ||
| IV | சமச்சீரற்ற இணைந்த அல்லிகள் | ஈருதடு வடிவம் | ஆசிமம், லியூக்காஸ் |
| பெர்சோனேட் | ஆன்ட்டிரைனம் | ||
| நாவடிவம் | ஹீலியாந்தல் கதிர் சிறுமலர் |
8.
பூஞ்சைகளின் தீய விளைவுகள்
அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்,அமானிட்டா வெர்னா, போலிட்டஸ் சடானஸ் போன்றவை அதிக நச்சுத்தன்மையுடைய காளான்களாகும்.இவை பொதுவாவாக "தவளை இருக்கை பூஞ்சைகள்" (toad stools) என்ற பெயரில் அறியப்படுகின்றன.அஸ்பெர்ஜில்லஸ்,ரைசோபஸ்,மியூக்கர்,பெனிசிலியம் போன்றவை உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாகின்றன.அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ் பூஞ்சை உலர்ந்த உணவுப்பொருட்களில் புற்றுநோயைத் தூண்டும் 'அப்ளாடாக்சின்' (Adlatoxin) நச்சுப்பொருளை உண்டாக்குகிறது.பாட்டுலின், ஆக்ராடாக்சின் A போன்றவை பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் சில நச்சுப்பொருட்களாகும்.பூஞ்சைகள் மனிதர்களிலும் தாவரங்களிலும் நோய்களை உண்டாக்குகின்றன.
9.
| வ.எண் | கண்ட எண் | காணப்படும் உறுப்பு |
|---|---|---|
| 1 | முதல் கண்டம் | (பெரிஸ்டோமியம்) வாய் உள்ளது |
| 2 | கடைசி கண்டம் | (பைஜிடியம்) மலவாய் உள்ளது |
| 3 | 14 முதல் 17 | முதிர்ந்த புழுக்களில் கிளைடெல்லம் |
| 4 | 1 முதல் 13 | கிளைடெல்ல முன்பகுதி |
| 5 | 14 முதல் 17 | கிளைடெல்ல பகுதி |
| 6 | 18 முதல் கடைசி | கிளைடெல்ல பின்பகுதி |
| 7 | எல்லாகண்டத்திலும் | சீட்டாகள் (முதல், கடைசி, கிளைடெல்லம் தவிர) |
| 8 | 1வது, 2வது | வாய்க்குழி |
| 9 | 3வது, 4வது | தொண்டைப்பகுதி |
| 10 | 5வது | உணவுக்குழல் |
| 11 | 6வது | அரைவாய்ப்பை |
| 12 | 7வது முதல் கடைசி | குடல் |
| 13 | 6வது முதல் 13வது | பக்கவாட்டு இதயங்கள் |
| 14 | 3வது | தொண்டை மேல் நரம்பு செல் திரள் (மூளை) |
| 15 | 4வது | தொண்டை கீழ் நரம்பு செல் திரள் |
| 16 | 5வது முதல் 9வது | தொண்டை (அ) தோல் கொத்து நெஃப்ரீடியா |
| 17 | 14வது முதல் கடைசி | நுண் (அ) இடைசுவர் நெஃப்ரீடியா |
| 18 | 19வது முதல் கடைசி | மெகா (அ) இடைச்சுவர் நெஃப்ரீடியா |
| 19 | 10வது 11வது | இரண்டு இணை விந்தகம் |
| 20 | 18வது 19வது | புரோஸ்டேட் சுரப்பி |
| 21 | 13வது | ஓர் இணை அண்டகம் |
| 22 | 7வது 8வது 9வது | மூன்று இணை விந்து கொள்பைகள் |
10.
செல்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தினால் வெளிப்படும் CO2 ஐ, திசுக்களிலிருந்து நுரையீரலுக்குப் பின்வரும் மூன்று வழிகளில் இரத்தம் கடத்துகிறது.
1. பிளாஸ்மாவில் கரைந்த நிலையில்:
சுமார் 7-10% அளவிலான CO2 பிளாஸ்மாவில் கரைந்த நிலையில் கடத்தப்படுகிறது.
2. ஹீமோ குளோபினுடன் இணைந்த நிலையில்:
சுமார் 20-25% அளவிலான CO2 இரத்தச் சிவப்பணுக்களுடன் இணைந்து, அவற்றால் கார்பைமினோ ஹீமோ குளோபின் (HbCO2) எனும் கூட்டுப்பொருளாகக் கடத்தப்படுகிறது.
CO2 + Hb \(\rightleftharpoons \) HbCO2
3. இரத்தப் பிளாஸ்மாவில் பை கார்பனேட் அயனிகளாக:
(i) சுமார் 70% அளவிலான CO2, பை - கார்பனேட் அயனிகளாக இரத்தத்தின் மூலம் கடத்தப்படுகிறது.
(ii) ஹிமோகுளோபின் மூலம் கார்பமைனோ ஹீமோகுளோபினாக எடுத்துச் செல்லப்படுவதற்கு, CO2 ன் பகுதி அழுத்தமும், ஹீமோகுளோபினின் O2 ஏற்புத்திறனும் உதவுகின்றன.
(iii) கார்பானிக் அன்ஹைட்ரேஸ் எனும் நொதி இரத்தச் சிவப்பணுக்களில் அதிகமாகவும், இரத்தபிளாஸ்மாவில் குறைந்த அளவிலும் உள்ளது.
(iv) திசுக்களில் சிதைவு மாற்ற நிகழ்ச்சியின் விளைவாக உருவாகும் CO2 ன் பகுதி அழுத்தம் அதிகமாக இருப்பதால், இரத்தத்திற்குள் ஊடுருவி பைகார்பனேட் (HCO3) மற்றும் ஹைட்ரஜன் அயனி (H+) களாகிறது.
(v) இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களுக்குள் CO2 நுழைந்ததும் அங்கு நீருடன் இணைந்து கார்பானிக் அமிலமாகிறது.
(vi) இவ்வினைக்ககு, வினையூக்கியாகக் கார்பானிக் அன்ஹைட்ரேஸ் செயல்படுகிறது.
(vii) கார்பானிக் அமிலம் நிலையானல்ல, ஆதலால் அது H+ மற்றும் HCO3- அயனிகளாகப் பிரிகின்றது.
(viii) கார்பானிக் அன்ஹைட்ரேஸ் இரு வழிகளிலும் வினைபுரிய உதவுகிறது.

(ix) இரத்தச் சிவப்பணுக்களிலிருந்து விரைந்து பிளாஸ்மாவிற்குள் நுழையும் HCO3- அயனிகள் நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லபடுகின்றன.
(x) pCO2 குறைவாக உள்ள காற்று நுண்ணறைகளில் கார்பானிக் அன் ஹைட்ரேஸ் நொதியானது பின்னோக்கிய வினையாக HCO3- அயனிகளை.
(xi) CO2 ஆகவும் நீராகவும் மாற்றுகிறது.
(xii) இவ்வாறு திசுக்களில் பெற்றப்பட்ட CO2 ஆனது HCO3 யாக மாற்றப்பட்டு காற்று நுண்ணறைகளை அடைந்து மீண்டும் CO2 ஆக விடுவிக்கப்படுகிறது.
11.
12.
1. தட்டையான உடலமைப்பை பெற்றுள்ளது.
2. உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்புடன், உடற்குழியற்ற, இருபக்கச் சமச்சீருடைய மூவடுக்கு விலங்கு.
3. மனிதன் உள்ளிட்ட விலங்குகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
4. கொக்கிகளும், உறிஞ்சிகளிலும் ஒட்டுறுப்புகளாகச் செயல்படுகிறது.
5. போலியான உடற்கண்டங்களை பெற்றுள்ளது.
6. ஒட்டுண்ணிப் புழுக்கள் விருந்தோம்பியின் உடலிலிருந்து உணவூட்டப் பொருட்களை நேரடியாக தோல்பரப்பின் வழியாக உறிஞ்சிக் கொள்கின்றன.
7. சுடற்செல்கள் மூலம் கழிவுநீக்கம் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்குபாடும் நடைபெறுகிறது.
8. இருபால் உயிரினம்.
9. லார்வா-மீரசிடியம், ஸ்போரோசிஸ்ட், ரீடியா, சேர்க்கேரியா.
10. பிளனேரியாவில் இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.
எ.கா: டீனியா (நாடப்புழு), ஃபேசியோலா (கல்லீரல் புழு)
13.

14.
| வைரஸ் நோய்கள் | |||
|---|---|---|---|
| தாவர நோய்கள் | விலங்கு நோய்கள் | மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் | |
| 1. | புகையிலை தேமல் நோய் | கால் நடைகளில் கோமாரி நோய் | சளி |
| 2. | காலிஃபிளவர் தேமல் நோய் | வெறி நாய்க்கடி | ஹெப்பட் டைட்டிஸ் B |
| 3. | கரும்பு தோல் நோய் | குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய் | புற்றுநோய் |
| 4. | உருளைக் கிழங்கின் இலைச் சுருள் நோய் | சார்ஸ் (அதிதீவிர சுவாசக் குறைபாடு) | |
| 5. | வாழையின் உச்சிக்கொத்து நோய் | எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி குறை நோய்) | |
| 6. | பப்பாளியின் இலைச்சுருள் நோய் | வெறி நாய்க்கடி | |
| 7. | வெண்டையின் நரம்பு வெளிர்தல் நோய் | பொன்னுக்கு வீங்கி | |
| 8. | நெல்லியின் துங்ரோ நோய் | இளம்பிள்ளை வாதம் | |
| 9. | வெள்ளரியின் தேமல் நோய் | சிக்கன்குன்யா | |
| 10. | தக்காளியின் தேமல் நோய் | பெரியம்மை | |
| 11. | சின்னம்மை | ||
| 12. | தட்டம்மை | ||
15.
1. வளிமண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றைப் பரிமாற்றம் செய்கிறது.
2. உடலின் pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது.
3. உட்சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்ட நோய்கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. இயல்பான குரலொலிக்கான குரல் ஒலி நாண்களை பராமரிக்கிறது.
5. செல் சுவாசத்தால் உருவாக்கப்படும் வெப்பத்தை சுவாசத்தின் மூலம் வெளியேற்றுகிறது.
16.
1. ஒரு காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு இரத்தக்கட்டி உருவாகி அதிகமான இரத்தப்போக்கை நிறுத்தும் நிகழ்வு இரத்தம் உறைதல் எனப்படும்.
2. இரத்தக் குழாயிலுள்ள எண்ட்டோதீலியம் சிதைவடைந்து அதன் சுவரிலுள்ள இணைப்புத் திசுக்களை இரத்தம் நனைக்கும் போது, இரத்த உறைதல் பொருட்களை (காரணிகளை) வெளியிடுகின்றன.
3. இப்பொருட்கள் இரத்தத்தட்டு கொத்துக்களால் ஆன அடைப்பைப் ஏற்படுத்தி உடனடியாக இரத்த இழப்பைத்தடுக்கின்றன.
5. இவ்வாறு திரட்சியடைந்த இரத்தத்தட்டுகள் அல்லது சேதமடைந்த செல்களால் வெளியிடப்பட்ட இரத்த உறைதல் காரணிகள் பிளாஸ்மாவிலுள்ள புரோத்ராம்பின் என்னும் புரதம், கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் K ஆகியவற்றின் முன்னிலையில் செயல்படும் திராம்பினாக மாற்றமடைகிறது.
6. திராம்பின், இரத்தப் பிளாஸ்மாவில் கரைந்த நிலையிலுள்ள ஃபைப்ரின் இழைகளாக்குகின்றன.
7. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணைந்து இரத்தச் செல்களை சூழ்ந்து ஒரு வலைப்பின்னல் அமைப்பை உண்டாக்குகிறது.
8. மேலும் ஃபைப்ரின் வலைப்பின்னல் காயம்பட்ட இரத்தக் குழலில் குணமாகும் வரை அடைப்பை ஏற்படுத்தி இரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.
9. சிறிது நேரத்திற்குப் பிறகு ஃ பைப்ரினில் உள்ள நுண்ணிழைகள் சுருங்கி வெளிர் மஞ்சள் நிறச் சீரம் எனும் திரவத்தை வலைப் பின்னல் வழியே வெளியேற்றுகின்றது.
10. சீரம் என்பது ஃபைப்ரினோஜன் இல்லாத பிளாஸ்மா ஆகும்.
11. இரத்தம் உறைதலை தடைசெய்யும் இரத்த உறைவு எதிர்ப் பொருளான ஹிப்பாரின் இணைப்புத் திசுக்களிலுள்ள மாஸ்ட் செல்களில்னால் உருவாக்கப்படுகிறது.
12. இது சிறிய இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைதலைத் தடைசெய்கிறது.

17.
| வ.எண் | தமனிகள் | சிரைகள் |
| 1 | இவைகள் இதயத்திலிருந்து இரத்ததை வெளியே எடுத்துச் செல்லும். | உடலிருந்து இரத்ததை இதயத்திற்கு எடுத்துச்செல்லும். |
| 2 | உடலின் ஆழப்பகுதியினல் அமைந்துள்ளது. | மேற்பரப்பில் அமைந்துள்ளது. |
| 3 | சுவர் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள தடித்துக் காணப்படுகிறது. | சுவர்கள் மெல்லியதாக உள்ளது. |
| 4 | சுவர்கள் எளிதில் சிதையாவண்ணம் காணப்படுகிறது. | எளிதில் சிதைவடையக் கூடியது. |
| 5 | இக்குழாய்களின் உட்பகுதி குறுகலாக காணப்படுகிறது. | உட்பகுதி அகன்று காணப்படுகிறது. |
| 6 | வால்வுகள் இல்லை. | அரைச்சந்திர வால்வுகள் காணப்படுகிறது. ரத்தம் பின்னோக்கிச் செல்வதை வால்வுகள் தடுக்கிறது. |
| 7 | ஆக்ஸிஜன் மிகுந்த (சுத்த)ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. விதிவிலக்கு-நுரையீரல் தமனி | அசுத்தம் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. விதிவிலக்கு-நுரையீரல் சிரை |
| 8 | இந்நாளங்களுக்குள் இரத்தக் கொள்ளவு அதிகம். | குறைவு |
| 9 | இரத்த அழுத்தம் அதிகம் | இரத்த அழுத்தம் குறைவு. |
| 10 | இடை அடுக்கு (டியூனிக்காமீடியா)அகன்றது. | மெல்லியது. |
18.
நீரியல் திறன் (\(\Psi \)) இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
\(*W=*s+*p\)
நீரியல் திறன் கரைபொருள் உள்ளார்ந்த திறன் + அழுத்தம் உள்ளார்ந்த திறன்
(i) கரைபொருளின் அடர்த்தி அல்லது கரைபொருள் உள்ளார்ந்த திறன் (*)
(ii) அழுத்தம் உள்ளார்ந்த (*) மேற்கண்ட இரு காரணிகலையும் இணைத்து நீரியல் திறனை இவ்வாறு குறிப்பிடலாம்.
(i) கரைபொருள் திறன் (*s) (Solute polential) : கரைபொருள் திறன் என்பது ஒரு கரைபொருள் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும். இது சவ்வூடு பரவல் இயல்திறன் (Osmotic Potential) என்றும் அழைக்கப்படுகிறது. தூய நீரில், கரைப்பொருளினைச் சோர்க்கும்போது அது னீரின் தனி ஆற்றலை (Free Energy) குறைப்பதால் நீரியல் திறன் பூஜ்ஜியத்திலிருந்து குறைந்து எதிர்மறையாகவே இருக்கும்.
திட்ட வளிமண்டல அழுத்தத்தின் உள்ள ஒரு கரைசலின் நீரியல் திறனானது அக்கரைசலின் கரைபொருள் திறனுக்குச் சமமாகவே இருக்கும் (*w = *s).
2. அழுத்தம் உள்ளார்ந்த திறன் (*p) (Pressure Potential) : கரைபொருள் உள்ளார்ந்த திறனின் செயல்பாட்டிற்கு எதிராக செயல்படும் இயங்கு விசையை அழுத்தயியல் திறன் /அழுத்தம் உள்ளார்ந்த திறன் ஆகும். ஒரு செல்லில் அழுத்த இயல் திறன் அதிகரித்தால் நீரியல் திறனும் அதிகரிக்கும், எனவே நீர் செல்லுக்குஸ் சென்று செல் விறைப்புத் தன்மையினை அடைகிறது.
செல்லுனுள் உருவாகும் இவ்வகை நேர்மறை நீரியல் அழுத்தம் (Positive hydrostatic pressure), விறைப்பு அழுத்தம் எனப்படும்.
இதேபோன்று செல்லில் இருந்து நீர் வெளியேறுவதால் நீரின் உள்ளார்ந்த திறன் குறைகிறது. இந்நிலையில் செல் நெகிழ்வு நிலை(flaccid)அடைகிறது.
3.ஊடக உட்திறன் (*m) (Matric Potential) : செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் (hydrating colloid) அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு ஊடக உட்திறன் எனப்படுகிறது.
ஊடக உட்திறனை உள்ளீ ர்த்தல் அழுத்தம் (imbibition pressure) எனவும் அழைக்கலாம்.
ஊடக உட்திறன் அதிகபட்சமாக (எதிர்மறை அலகில்) உலர்ந்த பொருட்களின் காணப்படும்.
எடுத்துக்காட்டு: நீரில் ஊறவைத்த விதைகள் பொருக்கமடைதல் .
19.
20.
காற்று சுவாசித்தலின் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் உருவாகும் நிகர மூலக்கூறுகளின் அளவு
| நிலைகள் | CO2 | ATP | ஒடுக்க நிலையிலுள்ள NAD | ஒடுக்க நிலையிலுள்ள FAD | மொத்த ATP உற்பத்தி |
| கிளைக்காலைசிஸ் | 0 | 2 | 2(2x2=4) | 0 | 6 |
| இணிப்பு வினை | 2 | 0 | 2(2x3=6) | 0 | 6 |
| கிரப்ஸ் சுழற்சி | 4 | 2 | 6(6x3=18) | 2(2x2=4) | 24 |
| மொத்தம் | 6 | 4 ATP கள் | 28 ATP கள் | 4 ATP கள் | 36 ATP கள் |
சுவாச ஈவு (Respiratory Quotient)
சுவாசித்தலின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கும் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவுக்கும் உள்ள விகிதமே சுவாச் ஈவு அல்லது சுவாச விகிதம் எனப்படும். சுவாச தளப்பொருள்களின் தன்மை மற்றும் அதன் ஆக்சிஜனேற்றத்தை பொருத்து சுவாச் ஈவு மதிப்பு மாறுபடும்.

21.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்:
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலைத் தண்டு | ஒருவிதையிலைத் தண்டு |
| 1. | பபுறத்தோலடித்தோல் | கோலங்கைமா செல்களானது. | ஸ்கிலிரங்கைமா செல்களானது. |
| 2. | அடிப்படைத்திசு | புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது. |
வேறுபடாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது. |
| 3. | தரசு அடுக்கு | காணப்படுகிறது | காணப்படவில்லை. |
| 4. | மெடுல்லா கதிர்கள் | காணபப்டுகிறது | காணப்படவில்லை. |
| 5. | வாஸ்குலக் கற்றைகள் | (i) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை. (ii) ஒரு வளையமாக அமைந்துள்ளன. (iii) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. |
(i) ஒருங்கமைந்தவை மற்றும் மூடிய வை. (ii) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது. (iii) இரண்டாம் நிலை பொதுவாக நடைபெறுவதில்லை. |
22.
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலை வேர் | ஒரு விதையிலை வேர் |
| 1. | பெரிசைக்கிள் | பக்கவேர்கள், பெல்லோஜென் மற்றும் வாஸ்குலக் கேம்பியத்தின் ஒரு பகுதி பெரிசைக்களிலிருந்து தோன்றுகின்றன. |
பக்கவேர்கள் மட்டும் தோன்றுகின்றன. |
| 2. | வாஸ்குலத் திசு | பெரும்பாலும் ஃபுளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. |
பெரும்பாலும் சைலம் ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. |
| 3. | இணைப்புத் திசு | பாரங்கைமாவால் ஆனது. இந்தச் செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடடைகிறது. | பெரும்பாலும் ஸ்கிலிரங்கைமாவால் ஆனது. ஆனால் சில சமயங்களில் பாரங்கைமாவால் ஆனது. இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடு அடைவதில்லை. |
| 4. | கேம்பியம் | இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது. | முற்றிலும் இல்லை. |
| 5. | சைலம் | நான்கு முனை கொண்டவை. | பொதுவாகப் பல முனை கொண்டவை |
23.
24.
| ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டின் ஒப்பீடு | |||||
|---|---|---|---|---|---|
| பண்புகள் | மொனிரா | புரோட்டிஸ்டா | பூஞ்சைகள் | பிளாண்டே | அனிமெலியா |
| செல்லின் தன்மை | தொல்லுட்கரு உயிரிகள் Prokaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic | மெய்யுட்கரு உயிர்கள் Eukaryotic |
| உடல் அமைப்பு | ஒரு செல் உயிரினங்கள் | ஒரு செல் உயிரினங்கள் | ஒரு செல்பலசெல் உயிரினங்கள் | திசு அல்லது உறுப்புகள் கொண்டவை | திசுக்கள் உறுப்பு / உறுப்பு மண்டலங்கள் கொண்டவை |
| செல் சுவர் | செல் சுவர் உண்டு (பெப்டிடோ கிளைக்கான் மியுகோபெப் டைட்களால் ஆனது) | ஒரு சில உயிரினங்களில் செல் சுவர் உண்டு.(செல்லுலோஸ் ஆனது)சில உயிரினங்களில் செல் சுவர் காணப்படுவதில்லை | செல் சுவர் உண்டு (செல்லுலோஸ் அல்லது கைட்டினால் ஆனது) | பொதுவாக செல் சுவர் உண்டு (செல்லுலோஸ் ஆனது) | செல் சுவர் இல்லை |
| உணவூட்ட முறை | தற்சார்பு ஊட்ட முறை (ஒளிச்சார்பு வேதிச்சார்பு) சார்பூட்ட ஊட்டமுறை (ஒட்டுண்ணிகள்,சாற்றுண்ணிகள்) |
தற்சார்பு ஊட்டமுறை (ஒளிச்சார்பு,பிறசார்பு) | சார்பூட்ட முறை(ஒட்டுண்ணிகள்,சாற்றுண்ணிகள்) | தற்சார்பு ஊட்ட முறை(ஒளிச்சார்பு) | சார்பூட்ட முறை (விழங்கூட்ட உயிரினங்கள்) |
| இடப் பெயர்ச்சி அடையும் திறன் | இடப்பெயர்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை |
இடப்பெயர்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை | இடப்பெயர்ச்சி திறன் அற்றவை | பெரும்பாலும் இடப்பெயர்ச்சி திறன் அற்றவை | இடப்பெயர்ச்சி திறன் உடைவை |
| எடுத்துக்காட்டு உயிரினங்கள் | ஆர்க்கிபாக்டீரியா,யூபாக்டீரியா, சயனோஃபாக்டீரியா, ஆக்டினோமை சீட்கள், மைக்கோ பிளாஸ்மா |
கிரைசோபைட்கள்,டைனோபிளா, ஜெல்லேட்கள் சளி,பூஞ்சைகள், அமீபா,பிளாஸ்மோடியம், டிரைபனோசோமோ,பாரமீசியம் |
ஈஸ்ட்கள்,காளான்கள், இதர பூஞ்சைகள் |
பாசிகள்,பிரையோ ஃபைட்கள்,டெரிடொஃபைட்கள், ஜிம்னோஸ்,பெர்ம்கள்,ஆஞ்சியோஸ் பெர்ம்கள் |
கடற்பஞ்சுகள்,முதுகெலும்பு அற்றவை.முதுகெலும்பு உடையவை. |
ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டின் நிறைகள்
1.இந்த வகைப்பாடு சிக்கலான செல் அமைப்பு,உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
2.உணவூட்டமுறையின் அடிப்படையில் இவ்வகைப்பாடு அமைந்துள்ளது.
3.பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
4.உயிரினங்களிக்கிடையே காணப்படும் இனப்பரிணாம குழுத்தொடர்பினை எடுத்துக்காட்டுகிறது.
ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டின் குறைகள்
1.தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள்,செல் சுவருடைய,செல் சுவரற்ற உயிரினங்கள் மொணிரா, புரோஸ்டிஸ்டா எனும் பெரும்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.இதனால் இவ்விரண்டு பெரும்பிரிவுகளும் மாற்றுப்படித்தான பண்பை (Heterogenous) பெறுகின்றன.
2.வைரஸ்கள் இந்த வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை.
25.
1. பட்டு நூல்கள் பட்டுத் துணிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
2. தற்பொழுது பட்டு நூலினை இயற்கை மற்றும் செயற்கை இழைகளுடன் இணைந்து டெரிபட்டு, காட்டன்பட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
3. பட்டு, நிறம் சேர்க்கப்பட்டு ஆடை அலங்கார பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் எரி அல்லது ஸ்பன் வகை பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
4. தொழிற்ச்சாலைகளிலும் இராணுவத் துறையிலும் பட்டு பயன்படுத்தப்படுகிறது.
5. மீன்பிடி வலைகள், பாராசூட்டுகள், கார்ட்ரிட்ஜ் பைகள், தொலை தொடர்பு கம்பிகளின் மேலுறைகள் மற்றும் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள், பந்தய காரின் டயர்கள், வடிகட்டி இழைகள், மருத்துவத் துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுவதற்கும் பட்டு பயன்படுகிறது.
26.
I. உண்மை விலா எலும்புகள்
II. போலி விலா எலும்புகள்
III. மிதக்கும் விலா எலும்புகள்
1. 12 இணைவிலா எலும்புகள் உள்ளன.
2. மெல்லிய தட்டையான ஒவ்வொரு விலா எலும்பும் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடருடனும் வயிற்றுப்புறத்தில் மார்பெலும்புடனும் இணைந்துள்ளது.
3.இவற்றின் முதுகுப்புறத்தில் இரு அசையும் இணைவுப் பகுதிகள் உள்ளதால் இவை இருதலைக் கொண்டன எனப்படுகின்றன.
உண்மை விலா எலும்புகள்:
1. முதல் 7 இணை விலா எலும்புகள் உண்மை விலா எலும்புகள் அல்லது முள்ளெலும்புகள் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
2. இவை முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடரின் மார்பு முள்ளெலும்புகளுடனும் வயிற்றுப்பகுதியில் மார்பெலும்புடனும் ஹையலின் குருத்தெலும்பால் இணைக்கப்பட்டுள்ளன.
போலி விலா எலும்புகள்:
1. 8,9,10 ஆவது இணை விலா எலும்புகள் நேரடியாக மார்பெலும்புடன் இணையாமல் 7 ஆவது விலா எலும்பின் ஹையலின் குருத்தெலும்பு பகுதியோடு இணைந்துள்ளது. இதற்குப் போலி விலா எலும்புகள் என்று பெயர்.
மிதக்கும் விலா எலும்புகள்:
1. கடைசி இரு இணைகள் (11 மற்றும் 12 ஆவது இணை) வயிற்றுப் பகுதியில் மார்பெலும்புடன் இணையாமல் இருப்பதால் இவற்றிற்கு மிதக்கும் விலா எலும்புகள் என்றும் பெயர்.
2. மார்பு முள்ளெலும்புகள், விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு ஆகியவற்றால் விலா எலும்புக்கூடு உருவாகியுள்ளது. நுரையீரல் , இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத்திலும் விலா எலும்புக்கூடு பங்கேற்கின்றது.
27.
28.
1. சுவை மற்றும் மணம் இவற்றிற்கான உணரவேற்பிகள் எனப்படுகின்றன. காற்றில் கரையச் கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.
2. நாசியறைகளின் கூரைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
3. நுகர்ச்சி எபித்தீலியமானது கீழ்புறம் கோழைப்படலத்தாலும், மேல்புறம் நுகர்ச்சி சுரப்பிகளைக் கொண்ட இணைப்புத்திசுக்களாலும் சூழப்பட்டுள்ளது.
4. நுகர்ச்சி உறுப்பில் மூன்று வகையான செல்கள் காணப்படுகின்றன. அவை
1.ஆதரவு செல்கள்,
2. அடிப்படை செல்கள்,
3. ஆயிரக்கணக்கான ஊசி வடிவ நுகர்ச்சி உணர்வேற்பி செல்கள்.
5. மயலினுறை அற்ற இந்த உணர்வேற்பிகளின் மெல்லிய இழைகள் இணைந்து நுகர்ச்சி நரம்பாக மாறியுள்ளது. இது நுகர்ச்சி குமிழில் இணைகிறது.
6. மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
7.மூளையின் முன்நெற்றி பகுதிக்கு செல்லும் அதே நேரம் தூண்டல்கள் லிம்பிக் தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்க்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
29.
1. ஓரிணை அண்டக்கண்கள் பெண் இனப்பெருக்க உறுப்புகளாகும்.
2. மீசோவேரியம் என்றும் பெரிடோனிய சவ்வு மடிப்புகள், அண்டகங்களை சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப்புற சுவரில் இணைந்துள்ளன.
3. சிறுநீரகங்களின் பக்கவாட்டில் ஓரிணை சுருண்ட ஆண்ட நாளங்கள் அமைந்திருக்கின்றன.
4. அண்டநாளம் ஒவ்வொன்றும் முன்புறத்தில் உடற்குழியில் திறக்கக்கூடிய புனல் வடிவத்தில் தீர்ப்பையும், பொதுக்கழிவுப் பையில் திறக்கும் பின் பகுதியையும் கொண்டுள்ளன.
5. ஆண் தவளைகளில் காணப்படுவது போலன்றி, பெண் தவளைகளில் அண்ட நாளங்கள் சிறுநீரக நாளங்களிலிருந்து தனித்து காணப்படுகின்றன.
6. அண்ட நாளங்கள், பொதுக்கழிவு பையில் திறப்பதற்கு முன்பாகச் சற்று விரிவடைந்து ஒரு அண்டப்பையாக உருவாகியுள்ளது.
7. உயிரியில் இருந்து வளர்ச்சியடைந்த முட்டைகள், பொதுக் கழிவுத்துளை வழியாக வெளியேற்றப்படுவதற்கு முன்பு வரை தற்காலிகமாக அண்டப்பையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
8. தவளையை புற கருவுறுதல் நடைபெறுகிறது.
9. கருவுறுத்தலுக்குப் பின் சில நாட்களிலேயே கருமுட்டைகளிலிருந்து தாளிப்பிரட்டை என்னும் சிறிய வளர் இளவுயிரிகள் வெளிவருகின்றன.
10. இவை உடலில் சேமிக்கப்ட்டுள்ள கருவனவையே உணவூட்டத்திற்கு சார்ந்துள்ளன.
11. இவை படிப்படியாக வளர்ந்தபின் மூன்று இணை செவுள்களை பெறுகின்றன.
12. தலைப்பிரட்டை வளர்ந்து முதிர்ந்து காற்றை சுவாசிக்கும் ஊனுண்ணும் முதிர் தவளையாகிறது.
13. இம்மாற்ற நிகழ்வுகளே வளர் உருமாற்றம் என்படும்.
14. உடலில் கால்கள் வளர்ச்சியடைகின்றன.
15. வால், செவுள்கள் ஆகியவை மறைந்து விடுகின்றன.
16. வாய் அகன்று, தாடைகளும் பற்களும் வளர்ச்சியடைகின்றன.
17. நுரையீரல் செயல்படத் துவங்குகிறது.
18. இவ்வாறு முதிர் தவளை உருவாகிறது.
30.
| I. தளர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | ஏரியோலார் திசு | - எப்பீதிலிய செல்களுக்கு தாங்கு சட்டகம் - உடல் திசுக்களுக்கு நீர், உப்பினை தேக்குகிறது |
| 2 | அடிபோஸ் திசு | - கொழுப்பையும், பயன்படுத்தப்படாத உணவை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. - உணவுண்ணாத நிலையில் ஆற்றலை கொடுக்கிறது. |
| 3 | ரெட்டிகுலார் திசு | - நிணநீர் கணுக்கள், மண்ணீரல், எலும்பு மஞ்சை போன்ற உறுப்புகளில் இரத்த செல்களுக்கு அகசட்டமாக பயன்படுகிறது. |
| II. அடர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | அடர்வான சீரான திசு | - தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது. - எலும்பினையும் எலும்புபினையும் இணைகிறது. |
| 2 | அடர்வான சீரற்ற திசு | - சிறுநீரகம், எலும்பு, குருத்தெலும்பு, தசைகளுக்கு நாரிழை உரையாக அமைகிறது. |
| 3 | மீள்தன்மை திசு | - இழுக்கப்பட்ட தசைகளை மீண்டும் சுருண்ட உறையாக அமைகிறது. - தமனிகள் சுருங்கி விரிய, நுரையீரல் சுருங்க காரணமாகிறது. |
| III. சிறப்பு வகை இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | குருத்தெலும்புகள் | - வளையும், அழுத்தத்தை தாங்கும் - காதுமடல், மூக்கின் ஆதரவு மற்றும் அமைப்பைத் தருகிறது. |
| 2 | எலும்புகள் | - அகச்சட்டமாக அமைந்து உடலுக்கு உருவத்தை கொடுக்கிறது. |
| 3 | இரத்தம் | - திரவ இணைப்புத்திசு - உடலில் உள்ள அணைத்து உறுப்புகளையும் இணைகிறது. |
31.

32.
1.மனித இதயம் மயோஜெனிக் வகைச் சார்ந்தது. (இதயத் தசையில் உள்ள கார்டியோமயோசைட்டுகள் முனைப்பிக்க நீக்கம் இயல்பான, சீரான இதயத் துடிப்பைத் துவக்குகின்றன).

2. விரைவான சீரியக்கம் கொண்ட இதயத்தசை செல்கள் இதயத் தூண்டி செல்கள் அல்லது பேஸ் மேக்கர் எனப்படும்.
3. ஏனெனில் மொத்த இதயத்தின் துடிப்பு விதத்தை இந்த செல்கள் தீர்மானிக்கின்றன.
4. இந்த பேஸ்மேக்கர் செல்கள் வலது சைனு ஏட்ரியல் கணுவில் அமைந்துள்ளன.
5. வலது ஆரிக்கிளின் இடது பகுதியில் ஆரிக்குலே வென்ட்ரிகுலார் முடிச்சு (AV node) உள்ளது.
6. ஆரிக்குலோ வென்ட்ரிகுலார் முடிச்சிலிருந்து தோன்றும் இரு சிறப்பு இதயத் தசையிழைகளுக்கு ஹிஸ்ஸின் கற்றை என்று பெயர்.
7.இது வென்ட்ரிகுலார் இடைச்சுவர் வழியாக கீழ்நோக்கிச் சென்று வென்ட்ரிக்கிளின் சுவர் பகுதியில் நுண்ணிழைகளாக பரவியுள்ளது.
8. இதற்கு பர்கின்ஜி நாரிழைத் தொகுப்பு என்று பெயர்.
9.பேஸ்மேக்கர் செல்கள், மின்முனைப்பியக்க நீக்கம் மூலம் செல் சவ்வை கிளர்ச்சியடையச் செய்கின்றன.
10. சோடியம் உள்ளே நுழைவதாலும் பொட்டாசியம் வெளியேற்றம் குறைவதாலும் தொடக்கத்தில் மின்முனைப்பியக்க நீக்கம் மெதுவாக நிகழ்கிறது.
11. குறைந்தபட்ச மின்னழுத்த வழி மூலம் கால்சியம் கால்வாயைத் தூண்டுவதன் விளைவாக துரித மின் முனைப்பியக்க நிக்கம் தோன்றுகிறது.
12. இதனால் செயல்நிலை மின்னழுத்தம் தோன்றுகிறது.
13. பேஸ்மேக்கர் செல்கள், வெளியேற்றத்தால் மீண்டும் மெதுவாக மின்முறைப்பியக்கம் அடைகிறது.
33.
| வ.எண் | விலங்கு காட்சி சாலை | வன விலங்கு சரணாலயம் |
|---|---|---|
| 1. | மனித மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான வனப்பகுதியில் காட்டு விலங்குகள் வைக்கப்பட்டிருக்கும் | பாதுகாக்கப்பட்ட இடம், மனிதர்களுடைய செயல்கள் குறைவு |
| 2. | விலங்குகள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருக்கும் | தடை செய்யப்பட்டிருக்கும் மரங்கள் வெட்ட அனுமதி இல்லை. விவசாயத்திற்கு காடுகளை அழிக்க கூடாது. மனிதர்கள் தங்கள் தேவைக்கு விறகு, உணவுப் பொருட்கள், மருத்துவத் தாவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். |
| 3. | எ.கா: அறிஞர் அண்ணா மிருகக் காட்சி சாலை வண்டலூர். | எ.கா: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். |
34.
1.வெப்ப நிலை
2. pH
3.தளப்பொருட்களின் செறிவு
4.நொதிகளின் செறிவு
5.மிக்கலிஸ் - மெண்டன் மாறிலி
6.நொதிச் செயல் ஒடுக்கிகள்
7.போட்டி ஒடுக்கிகள்
8. போட்டியிலா ஒடுக்கிகள்
9.வேற்றுத்தள ஒடுக்கிகள்
35.
36.
வளரியல்பு: பின்னுக் கொடி
வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்து மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது
தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி
இலை: ஒற்றைப்படை ஒருமடிககூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு , இலையடிச் செதிலுடையது .வலைப் பின்னால் இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும் அதைப்புடையன.
மஞ்சுரி ; கக்க மலர்
மலர் : பூவடிச்செதிலுடையது. புககாம்புச் செதிலுடையது . புககாம்புச் செதில்கள் அளவில் பெரியது,மலர்காம்புடையது.இரு பூவிதழடுக்குடையது.முழுமையானது, இருபால்மலர் , ஐந்தங்கமலர். இரு பக்கச்சிருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.
புல்லிவட்டம் ; புல்லிகள் 5,இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைத்துள்ளது .தனிப்புள்ளி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும் .
அல்லிவட்டம்: அல்லிகள் 5,வெண்மை அல்லது நீல நிறத்தாலானது.தனித்தது ,ஒழுங்கற்றவை , வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை இறங்குதழுவு இதழமைவில் உள்ளன
மகர்ந்ததாள் வட்டம் : மகர்ந்ததாள் கள் 10 இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகர்ந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வந்து தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன.மகரந்தப்பை ஈரறையுடையது. தாள்அடி இணைந்தவை.நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.
சூலவட்டம் : ஒற்றச்சூலக இலையானது மேல்மட்டசூலகம், ஒரு சூலக அறை ,சூல்கள் பல விளிம்பு சூள் ஒட்டு முறையில் அமைத்துள்ளன.சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது , சூலக முடி தூவிகளுடையது கனி: இருபுற வெடிகனி
விதை :சிறுநீரக வடிவிலானது.கருவூன் அற்றது
37.
லைக்கென்களின் பொதுப்பண்புகள்
i) லைக்கென்கள் பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிர் அமைப்பு.
ii) இதில் காணப்படும் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி எனப்படுகிறது.
iii) இதில் காணப்படும் பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி எனப்படுகிறது.
iv) பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தை தரும்.
v) அதே போன்று பூஞ்சை உயிரி பாசிக்கு பாதுகாப்பை தரும்.
vi) பாசி உயிரி உறக்க நகராவித்துக்கள் ஹார்மோகோனியங்கள் நகராவித்துக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
vii) பூஞ்சை உயிரி பாலினப்பெருக்கத்தில் ஈடுபட ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகிறது.
வகைகள் :
I.வாழிடத்தின் அடிப்படையில்
1.கார்ட்டிகோலஸ் - மரப்பட்டை மீது காணப்படுபவை.
2.லிக்னிகோலஸ் - கட்டை மீது வாழ்பவை
3.சாக்ஸிகோலஸ் - பாறை மீது வாழ்பவை
4. டெர்ரி கோலஸ் - நிலத்தில் வாழ்பவை
5.கடலில் வாழ்பவை - கடலில் உள்ள சிலிகா பாறை மீது வாழ்பவை
6.நன்னீர் வகை - நன்நீரில் உள்ள சிலிகா பாறை மீது வாழ்பவை.
II.உடலப்புற அமைப்பின் அடிப்படையில்
1.லெப்ரோஸ் - வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை.
2.கிராஸ்டோஸ் - ஓடு போன்ற அமைப்பு
3. ஃபோலியோஸ் - இலை ஒத்த வகை
4. புருட்டிகோஸ் - கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு.
III.உடலத்தில் பாசி செல்கள் பரவலின் அடிப்படையில்
1.ஹோமியோமிரஸ் - பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்
2.ஹெட்டி ரோமிரஸ் - வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்
IV.பூஞ்சை உயிரி அடிப்படையில்
1.ஆஸ்கொலைக்கென் - ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை.
2.பசிடியோலைக்கென் - பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை
V.பாறைகளில் வாழும் உயிரி அடிப்படையில்
1.லைக்கென்கள் பாறைகள் மீது படிந்து வாழும் பொழுது, ஆக்சாலிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களைச் சுரப்பதால் பாறைகளின் தளம் அரிக்கப்பட்டு மண் உருவாகிறது.
2.சீரோசீர் எனும் வறள் நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி உயிரினங்களாகத் திகழ்கின்றது.
38.
1. மையாஸ்தீனியா கிரேவிஸ்
2. டெட்டனி
3. தசைச்சோர்வு
4. தசைச்செயலிழப்பு
5. தசைப்பிடிப்பு
6. தசைச்சிதைவு நோய்
39.
குழலில் உள்ள வடிவத்திரவதில் வெளியிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி, குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் பை-காட்பனேட்டுகள், பை-பாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் இணைந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
40.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards