11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 13/03/2019
+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மையோப்பியா - கிட்டப்பார்வை பற்றி ஒரு குறிப்பு வரைக.
2.
இயற்கை முறை இனப்பெருக்கம் என்பது யாது?
3.
நெஃப்ரானின் அமைப்பை பற்றி விளக்குக.
4.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.
5.
கிளையாக்ஸிசோம்கள் என்பவை யாவை?
6.
உட்கருவின் தனித்துவம் யாது?
7.
இரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்றால் என்ன?
8.
நீரின் வேதியியல் பண்புகளைப் பட்டியலிடு?
9.
சைபனோஸ்டில் என்பது யாது?அதன் வகைகள் யாவை?
10.
ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சூழல் என்றால் என்ன?
11.
கணையத்தின் சுரப்பிகளைக் கூறு.
12.
குவாஷியார்கர் நோயின் அறிகுறிகளைக் கூறு.
13.
வைரஸ்களின் அளவினைக் குறிப்பிடு.
14.
உயிரிய முறைமையின் நோக்கங்கள் யாவை?
15.
மைக்க்கோபிளாஸ்மாவின் பண்புகள் யாவை?
16.
தண்டின் முதல்நிலை பணிகள் யாவை?
17.
மலரின் வட்ட அடுக்கு எண்ணிக்கை என்பது யாது?
18.
போலி உடற்குழி விலங்குகள் என்பது யாது?
19.
ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும்.
20.
தாவரத் தொகுப்பு புத்தகம் அளிக்கும் விவரங்கள் யாவை?
21.
ஸ்கிளிரைட்டுகள் என்பது யாது
22.
ஆண் மற்றும் பெண் தவளைகளில் காணப்படும் பால்வழி வேறுபாடுகள் யாவை.
23.
ஹிப்பாரின் என்பது யாது?
24.
25.
உருமாறும் தன்மை என்றால் என்ன?
26.
எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?
27.
நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?
28.
மனிதன் வகைப்பாட்டு படிநிலையை எழுதுக.
29.
எபிதீலிய திசுக்களின் பணிகள் யாவை?
30.
செயற்கை முறை விந்தூட்டத்தின் பயன்கள் யாவை?
31.
அரக்குப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
32.
சம இழுப்பு சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?
33.
கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
34.
கிரிடினிசத்தின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
35.
கோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது.அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.
36.
செரிமான நொதி்கள் தேவையின்போது மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்
37.
டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.
38.
மீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து
39.
மூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.
40.
41.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
42.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
43.
புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
44.
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
45.
ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக
46.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
47.
நிடோபிளாஸ்டுகளின் பயன் யாது?
48.
கிளைடெல்லம் அடிப்படையில் மண்புழுவின் உடல் பகுதிகள் யாவை?
49.
முழுமைபெறாச் செரிமான மண்டலம் என்பது யாது?
50.
செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.
51.
சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?
52.
தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
53.
நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?
54.
மூலக்கூறு அளவிலான வகைப்பாட்டு கருவிகளின் சிறப்புகள் யாவை?
55.
தொடக்க காலத்தில் வகைப்பாட்டிற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவை எவை?
56.
தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு
57.
அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு
58.
எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின் பெயர்களை கூறுக
59.
அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.
60.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?
61.
மனித உடலில் சிறுநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
62.
நாம் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிகிறது.ஏன்?
63.
மீண்டும் உறிஞ்சப்படுத்தல் நெஃப்ரானின் எப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது?
64.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
65.
66.
வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.
67.
'நாங்கூழ் கட்டிகள்’ என்பது என்ன?
68.
இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.
69.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
70.
கருவளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது?
71.
வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?
72.
73.
பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.
74.
நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக
75.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
76.
இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்
77.
ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
78.
மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக
79.
80.
ஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?
1.
இதனால் பாதிப்படைந்த நபரால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியும். தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாகக் காண முடிவதில்லை. கண்கோளம் நீண்டிருப்பதாலும் விழிலென்ஸ் அதிகமாகத் தட்டிப்புற்றிருப்பதாலும் தொலைவில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மஞ்சள் பகுதிக்கு முன்பாகக் குவிக்கப்படுகிறது. அதனால் பார்வை தெளிவற்றுக் காணப்படுகிறது. இக்குறைபாட்டை நீக்க குழிலென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை விரித்துப் பின் விழித்திரையில் விழச்செய்கிறது.
2.
1. இவை வளர்ப்பு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கப்படும் சிறப்புத் தன்மை வாய்ந்த குணங்களாகும்.
2. அதிக அளவு மழைநீரைத் தேக்கி வைக்கக்கூடிய பெரிய தாழ்மட்டப்ட பகுதிகளில் இவற்றின் வரப்புகள் அமைக்கப்படுகின்றன.
3. இவ்வமைப்பின் ஆழம் குறைந்த பகுதிகள் குஞ்சு பொரிப்பு இடமாக பயன்படுத்தப்படுகின்றன.
3.
ஒவ்வொரு சிறுநீரகமும் சிக்கலான குழல்களை கொண்ட ஒரு மில்லியன் நெஃப்ரான்கள்தான் சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் வடிகட்டும் பகுதியான ரீனல் கார்பசல் அல்லது மால்பிஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல் ஆகிய இரு பகுதிகள் உண்டு. சிறுநீரக நுண்குழல் சேகரிப்பு நாளம் என்னும் நீண்ட குழலில் திறக்கிறது. சிறுநீரக நுண்குழல் இரட்டை சுவருடைய கிண்ண வடிவ அமைப்பான பௌமானின் கிண்ணம் எனும் அமைப்பில் தொடங்குகிறது.பௌமானின் கிண்ணத்திலுள்ள இரத்த நுண் நாளங்களாக ஆன் கிளாமருலஸ் காணப்படுகிறது. இது சிறுநீரக நுண்குழலுக்கு வடித்திரவதை அனுப்புகிறது.
4.
(i) இறந்த மற்றும் மக்கிய உடல்களிலிருந்து உணவைப் பெறுவது சாறுண்ணி (Saprophytyic) அல்லது மட்குண்ணி உணவூட்டம் எனப்படுகிறது.
(ii) பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் சாறுண்ணி உணவூட்டத்திற்கான முதன்மை உயிரினங்களாகும்.
(iii) சில ஆஞ்சயோஸ்பெர்முகளும் சாறுண்ணி வகை உணவூட்டதை மேற்கொள்கின்றன.
எடுத்துக்காட்டு:நியோட்டியா (பறவைக்கூடு ஆர்க்கிடு). நியோட்டியாவின் வேர்களானது வேரி பூஞ்சைகளுடன் இணைந்து ஊட்டச்சத்துக்களை சாறுண்ணி போன்று எடுத்துக்கொள்கிறது.
5.
1. இவை தாவர செல்களில் மட்டுமே காணப்படுகிறது.
2. ஒற்றைச் சவ்வைக் கொண்ட துணை செல் நுண்ணுறுப்பு.
3. கிளையாக்சிலேட் வழித்தடத்திற்கு தேவையான நொதிகளை கொண்டுள்ளது.
4. முளைக்கும் விதைகளில் காணப்படுகிறது.
6.
1.செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
2. செல்பகுப்படையும் போது மரபுச் செய்திகள் நகலாக்கம் செய்யபப்ட்டு ஒரு செல்லிலிருந்து மறறொரு செல்லிற்கு எடுத்துச் செல்லபப்டுகிறது.
3.பாலினப் பெருக்கத்தின் போது கேமீட்டுகளின் இணைவு நிகழ்ந்து புதிய தோன்றல்களுக்கு மரபுப் பண்புகளை கடத்துகிறது.
7.
1.நுண்ணோக்கியின் இரண்டாவது உருப்பெருக்கம் கண்ணருகு லென்சு மூலம் உண்டாகிறது.
2. இது இரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்று பெயர்.
3. இதன் மூலம் தலைகீழான மாயபிம்பம் உருவாகிறது.
8.
1.நீர், சவ்வின் ஊடே எளிதில் கடந்து செல்லும் துருவத் தன்மை கொண்ட மூலக்கூறாகும்.
2.ஒரு நீர் மூலக்கூறின் இரட்டை எதிர்மின் சுமை பெற்ற O2 அணு அருகமைந்த இரு மூலக்கூறுகளின் H2 அணுக்கருவுடன் எலக்ட்ரான்களை பகிர்வதன் மூலம் H2 பிணைப்புகள் ஏற்படுகின்றன.
3.இப்பிணைப்பால் நீர் மூலக்கூறுகள் கூட்டிணைய முடிகிறது.
4.இக்கூட்டிணைவு மூலம் நீர் மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அடுக்குற்ற அமைப்பாகின்றது.
9.
சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டு, மையத்தில் பித் காணப்பட்டால், அவ்வகை ஸ்டில் சைபனோஸ்டில் எனப்படும்.
வகைகள்:
1.வெளிப்புற ஃபுளோயம் சூழ் சைபனோஸ்டீல்
2.இரு பக்க ஃபுளோயம் சூழ் சைபனோஸ்டீல்
3.சொலினோஸ்டீல்
4.அடாக்டோஸ்டீல்
5.பாலிசைக்ளிக்ஸ்டீல்

10.
1.கேமீட்டகத்தாவரநிலை (n) ஓங்கி காணப்பட்டு,ஒளிச்சேர்க்கைத் திறனுடன் சார்பின்றி காணப்படுகிறது.
2.வித்தகத்தாவரநிலை ஒரு செல்லால் ஆன கருமுட்டையை மட்டும் குறிப்பிடுகிறது.
3.கருமுட்டை குன்றல் பகுப்படைந்து ஒற்றை மடிய நிலையை தக்க வைத்துக்கொள்கிறது.
எ.கா.வால்வாக்ஸ், ஸ்பைரோகைரா.
11.

12.
1. உலர்ந்த தோல்
2. பானை போன்ற வயிறு
3.கால்கள் மற்றும் முகத்தில் நீர் கோர்த்தல்
4.குன்றிய வளர்ச்சி
5. ரோமத்தின் நிற மாற்றம்
6. பலவீனம்
7. எரிச்சல்
13.
1.வைரஸ்கள் மிக நுண்ணிய துகள்களாகும்.
2.இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை.
3.பொதுவாக 20 nm முதல் 30 nm வரை விட்டமுடையவை.
4.பாக்டீரியோஃ பாஜ்கள் - 10nm முதல் 100 nm வரை அளவுடையவை.
5.TMV வைரஸ் அளவு 300\(\times \)20nm.
14.
1.இயற்கை உயிர் அலகுகளின் வரையறைகளை நிர்ணயித்தல்.
2. பரிணாம வளர்ச்சி மற்றும் மரபுவழியைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு தாவரக் குழுமத்தின் பரிணாமத்தை நிறுவுவதற்கு வழி செய்தல்.
3. புற அமைப்பில் மற்றும் உள்ளமைப்பில் மட்மின்றி நவீன கருத்துகளை அடிப்படையாக கொண்ட தரவுகளை உள்ளடக்குதல்.
4. பல்வேறு குழுக்களாகச் சூழ்நிலைச் சிற்றினம், சூழ்நிலை வகை , கூட்டுச் சிற்றினம் மற்றும் கம்பேரியம் போன்றவற்றைத் தனி உயிரிய முறைமையின் அமைப்புகளாக அங்கீகரித்தல் முதலியனவாகும்.
15.
1. இவைகளில் செல்சுவர் காணப்படுவதில்லை.
2. வளர் ஊடகத்தில் பொரித்த முட்டை போன்று காட்சியளிக்கின்றன.
3. DNA குறைந்த குவனைகள் மற்றும் சைடோசைனைப் பெற்றுள்ளது.
16.
1. தாவரத்திற்கு நிலை ஆதாரத்தை வழங்கி இலைகள் மலர்கள் மற்றும் கனிகளைத் தாங்க உதவுகின்றது.
2. வேரிலிருந்து நீரையும், கனிமங்களையும் மற்ற பகுதிகளுக்குத் கடத்த உதவுகிறது.
3. இலைகள் தயாரிக்கும் உணவைத் தாவரத்தின் பிற பகுதிகளுக்கு கடத்துகிறது.
17.
மலரில், மலர் உறுப்புகள் கொண்ட வட்ட அடுக்குகளின் எண்ணிக்கையை குறிப்பது மலரின் வட்ட அடுக்கு எனப்படும்.
1. ஓரடுக்கு மலர்கள்
2. ஈரடுக்கு மலர்கள்
3. பல அடுக்கு மலர்கள்
4. ஒத்த அடுக்கு மலர்கள்
5. வேறு அடுக்கு மலர்கள்
6. இதலற்ற மலர்கள்.
18.
சில விலங்குகளில், உடற்குழி முழுமையும் நடு அடுக்கு சுவரினைப் பெற்றிருக்கவில்லை. இவ்வகை விளங்குகல் போலி உடற்குழி விளங்குகல் எனப்படும்.
எ.கா: உருளைப் புழுக்கள்
19.

20.
1. தாவரங்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.
2. அத்தாவரங்களின் பூக்கும் காலங்கள் , கனி தரும் பருவங்கள் , புவியியல் ரீதியாகப் பரவியிருத்தல்
3. ஓரிடத்தின் அரிதான மற்றும் குறும்பரப்பு அல்லது வரை இட சிற்றினங்கள் பற்றிய விவரங்களை அளிக்கின்றன.
எ.கா கே.எம் மாத்யூவின் தமிழ்நாடு கர்னாடிக் தாவர வளம்.
21.
1. கரப்பான் பூச்சியின் மொத்த உடலும் உறுதியான பழுப்பு நிறமுடைய கைட்டினால் ஆன பிரச்சட்டகத்தால் மூடப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு கண்டத்திலும் காணப்படும் கடினமான தட்டுகள் ஸ்கிளிரைட்டுகள் எனப்படும்.
3. இவை மீள்தன்மையுடைய இணைப்புகள் (அ) ஆர்த்தோடியல் சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
4. வயிற்றுப்புற ஸ்கிளிரைடுகளுக்கு ஸ்டர்னைட்டுகள் என்று பெயர்.
5. முதுகுப்புற ஸ்கிளிரைடுகளுக்கு டெர்கிட்கள் என்று பெயர்.
6. பக்கவாட்டில் உள்ள ஸ்கிளிரைடுகளுக்கு புளூரைட்டுகள் என்று பெயர்
22.
| வ.எண் | ஆண் தவளை | பெண் தவளை |
|---|---|---|
| 1 | ஓரிணைய குரல்பையை உள்ளது. | குரல்பை கிடையாது |
| 2 | குரல்பையின் மூலம் கரகர ஒலியை ஏற்படுத்துகிறது | ஒலி ஏற்படுத்துவதில்லை |
| 3 | முன்னங்கால் முதல் விரலின் கீழே கலவித் திண்டு காணப்படுகிறது. | கலவித்திண்டு கிடையாது |
23.
1. இரத்தம் உறைதலை தடைசெய்யும் இரத்த உறைவு எதிர்ப்பொருள் ஹிப்பாரின் ஆகும்.
2. இணைப்புத் திசுக்களிலுள்ள மாஸ்ட் செல்களினால் உருவாக்கப்படுகிறது.
3. இது சிறிய இரத்தக் குழாய்களில் இரத்த உறைதலைத் தடைசெய்கிறது.
24.
25.
தாவரங்களில் சூழ்நிலை அல்லது வளர்ச்சி நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு உறவை அமைப்புகள் தோன்றுகிறது.இத்தகைய திறனுக்கு உருமாறும் தன்மை (பிளாஸ்டிசிடி என்று பெயர்). எடுத்துக்காட்டு ஹெட்டிரோ∴பிலி (ஈருவ இலை ) காணப்படும் தாவரங்கள் பருத்தி மற்றும் கொத்தமல்லி இத்தகைய தாவரங்களில் இளந்தவரா இலையின் உருவ அமைப்பும் அதே தாவரத்தின் முதிர்ந்த தாவர இலையின் உருவ அமைப்பும் வேறுபாட்டுக் காணப்படுகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக ரனன்குலஸ் (Butercup) எனும் தாவரத்தில் சூல்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இலைகள் உருவாகிறது, இத்தாவரத்தில் நீரில் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் , நீர் பரப்பிற்கு மேல் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது. இத்தகைய ஹெட்டிரோ∴பிலி உருமாறும் (Plasticity) தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
26.
(i) வசந்தக் காலத்தில் கேம்பியத்தின் அதிகமான செயல்பாடே அகன்ற உள்வெளி கொண்ட திக எண்ணிக்கை சைலக்கூறுகளையும் வெசல்கள்/டிராக்கீடுகள் கொண்ட அதிக அளவிலான சைலக்கூறுகளையும் தோற்றுவிக்கின்றன.
(ii) இவற்றில் சைலக்கூறுகள் மிகவும் மெல்லிய சுரவ் கொண்டவை. இந்தக் காலத்தில் உருவாகும் கட்டை வசந்தகாலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை (spring wood or early wood) எனப்படும்.
(iii) குளிர் காலத்தில் கேம்பியத்தின் செயல்பாடு வெகுவாகக் குறைந்து, குறுகலான செல் உள்வெளி கொண்ட வெசல்கள்/டிராக்கீடுகளை பெற்ற, குறைந்த அளவிலான சைலக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றன.
(iv) இவற்றில் சைலக்கூறுகள் மிகவும் தடித்த சுவர் கொண்டவை. இந்தக் காலத்தின் உருவாகும் கட்டை குளிர்காலக் கட்டை அல்லது பின்பருவாக் கட்டை (autumn wood or late wood) எனப்படும்.
27.
இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியாவாக மாற்றும் செயல்முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர். இது முதல் நிலையாகும்.
நைட்ரோஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக் கூடியது. காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சிகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (leghaemoglobin )ஆக்ஸிஜன் நீக்கியாக(Oxygen Scavenger ) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்ப்படுத்துகிறது.
28.
உலகம்: விலங்குலகம் (அனிமாலியா)
தொகுதி: முதுகு நாணிகள்
வகை (வகுப்பு): பாலூட்டிகள்
வரிசை: பிரைமேட்டா
குடும்பம்: ஹோமினிடே
பேரினம்: ஹோமோ
சிற்றினம்: சேப்பியன்ஸ்
29.
1. உடலின் மேற்பரப்பில் உரைப்போன்று அமைந்துள்ளது.
2. உடலின் மேற்பரப்பில் மெல்லிய பாடலை எபிதீலியமாக அமைந்துள்ளது
3. உடலின் மேற்பரப்பில் சுரப்பு எபிதீலிய,மாக காணப்படுகிறது.
4. பாதுகாப்பு மற்றும் உணர்வறிதல் போன்ற பணிகளை செய்கிறது.
30.
1. இது கருவுறுதல் வீதத்தை உயிர்த்துகின்றது
2. இதனால் இனப்பெருக்க நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.
3. விரும்பத்தக்க பண்புகள் கொண்ட காளைகள் காயம்பட்டு இருந்தாலும் அவற்றிடமிருந்து விந்து நிர்மம் சேகரிக்கலாம்.
4. உயர்பண்புகள் கொண்ட விலங்குகள் தொலைவில் இருந்தாலும் அவற்றின் விந்து நீர்மத்தைக் கொண்டு கருவுறச் செய்யலாம்.
31.
1. முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகின்றது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.
2. காலணி தயாரிப்பிலும் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.
3. புகைப்படங்கள், செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள் மற்றும் அடுக்குப்பலகைத் தாள் படலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தங்க நகைகளில் உள்ளீட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது.
32.
1. இவ்வகை சுருக்கத்தின்போது தசைகளின் நீளத்தில் மாற்றம் ஏற்படுகின்றது.
2. ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
3. இங்கு உருவாக்கப்படும் விசையில் எந்த மாற்றமுமில்லை.
4. எ.கா. பளு தூக்குதல் மற்றும் டம்பெல் தூக்குதல்
33.
உணவிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தை பொறுத்து முன்சிறு குடலில் கோலிசிஸ்ட்டோகைனின் (CCK) சுரக்கின்றது. CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலினுள் வெளியிடுகிறது.
மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது. கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளை சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. GIP இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.
34.
குறைவான எழும்புவளர்ச்சி பால் பண்பில் முதிர்ச்சியின்மை மனவளர்ச்சி குறைதல் தடித்த சுருங்கிய தோல் தடித்த துருத்திய நாக்கு உப்பிய முகம் குட்டையான தடித்த கை மற்றும் கால்கள் ஆகியவை தோன்றுகின்றன. இதன் பிற அறிகுறிகள் குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்றுவீதன் குறைந்த நாடித்துடிப்பு குறைந்த உடல் வெப்பநிலை மற்றும் இரத்த கொலஸ்டிரால் அளவு அதிகரிப்பு போன்றவையாகும்.
35.
1. வெண்ட்டிரிக்கிளின் கூரையில் உள்ள இரத்த நுண் நாளங்கள் இணைந்து கோராய்டு வலைப்பின்னலை உருவாக்குகின்றன.
2. இது இரத்தத்திலிருந்து மூளை தண்டுவடத் திரவத்தை உற்பத்தி செய்கிறது.
3. மைய நரம்பு மண்டலப்பகுதிகளுக்கு மிதத்தல் தன்மையை இத்திரவம் அளிக்கிறது.
4. மூளை மற்றும் தண்டுவடத்திற்குப் பாதுகாப்பாக அதிர்ச்சி தாங்கியதாகவும் இத்திரவம் பயன்படுகிறது.
5. அதுமட்டுமல்லாமல், மூளை செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து கடத்துகிறது.
6. அதே வேளையில் மூளையின் வளர்சிதை மாற்றக் கழிவுகளை இரத்தத்திற்கு அனுப்பும் வேலையையும், மூளை நாளங்களின் உள் அழுத்தத்தை நிலையாகப் பராமரிக்கும் வேலையையும் மூளை தண்டுவடத் திரவம் செய்கிறது.
36.
உணவுப் பொருட்கள் உணவுப்பாதையில் செல்லும் போது அதன் பகுதிப் பொருட்களாக மாற்றப்படவேண்டிய வேளையில் மட்டுமே சுரக்கின்றது. தேவையில்லாத நேரத்தில் சுரக்காமலிருப்பதால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
37.
1. கரப்பான் பூச்சியின் முதுகுப்புறத்திலுள்ள ஸ்கிளீரைடுகளுக்கு டெர்கிட்கள் அல்லது டெர்கம் என்று பெயர்.
2. கரப்பான்பூச்சியின் வயிற்றுப்புறமுள்ள ஸ்கிளீரைடுகளுக்கு ஸ்டர்னைட்கள் அல்லது ஸ்டெர்னம் என்று பெயர்.
38.
I. மீள்தன்மை நாரிழைகள்:
1. எலும்புத்தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது.
2. ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து அளிக்கப்படும் இழுவிசை அழுத்தத்தை தாங்கும் வகையில் அமைந்துள்ளது.
3. இவ்விணைப்புத் திசுவானது எலும்புத்தசைகளோடு எலும்பை இணைக்கும் தசை நாண்களிலும் எலும்பினைப்பு நார்களிலும் காணப்படுகிறது.
4.எலும்பினைப்பு நார்கள் ஒரு எலும்பை மற்றோர் எலும்புடன் இணைகின்றன.
II. மீள்தன்மை இணைப்புத்திறன்:
1. மீள்தன்மை நாரிழைகள் அதிகம் காணப்படுகின்றன.
2. இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் பழைய நிலையை அடைதல் மீள்தன்மை நாரிழையால் நடைபெறுகிறது.
3. தமனிகளில் அலை போன்ற துடிப்புடன் இரத்தம் பாய்வதற்கும் உட்சுவாசத்தைத் தொடர்ந்து நடைபெறும் வெளிசுவாசத்தால் நுரையீரல் சுருங்குவதற்கும் இவ்வகை நாரிழைகள் தான் காரணமாகும்.
4. பெரிய தமனிகளின் சுவரிலும், முதுகெலும்புத் தொடரில் காணப்படும் எலும்பினைப்பு நார்களிலும் சுவாசக்குழல் சுவர்களிலும் இவ்வகை இணைப்புத் திசுக்கள் காணப்படுகின்றன.
39.
| வ.எண் | திறந்த வகை இரத்த காற்றோட்டம் மண்டலம் | மூடிய வகை இரத்த காற்றோட்ட மண்டலம் |
|---|---|---|
| 1. | இவ்வகையில் இரத்தநாளங்கள் ரத்தத்தை எடுத்துச் செல்லாது | இரத்தம் பல்வேறு அளவுகளையுடைய ரத்த நாளங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. (தமனி, சிரை, தந்துகிகள்) |
| 2. | ஆதலால் இரத்தம் திசு இடைவெளிகளில் நிரம்பிக் காணப்படும். | அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. |
| 3. | எ.கா. கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் வால் நாணிகள் | எ.கா. வளைதசைப் புழுக்கள் தலை நாணிகள், முதுகு நாணிகள். |
40.
41.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
42.
1.நிலைத்த மரபுத்தன்மை: சேய் செல்களின் மரபுப்பொருளானது தாய் செல்லை ஒத்துக் காணப்படுகிறது.
2. வளர்ச்சி: பல செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது. இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
3. திசு சிதைவதைச் சீர் செய்தல்: திசு சிதைவடையும் போது புதிய உருவொத்த செல்கள் மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிச் சிதைவு சரி செய்யப்படுகிறது.
4. பாலிலா இனப்பெருக்கம்: தாய் செல்லை ஒத்த வழித்தோன்றல்கள், பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் தோன்ற இப்பகுப்பு உதவுகிறது.
எடுத்துக்காட்டு: ஈஸ்ட் மற்றும் அமீபா.
5. பூக்கும் தாவரங்களில் குமிழ்த்தண்டு, தண்டடிக் கிழங்கு,கிழங்குகள், மட்டநிலத் தண்டுகள், ஓடுகொடிகள் ஆகிய அனைத்தும் மைட்டாடிக் பகுப்பினால் தோன்றியவை. இவை தாய்த் தாவரத்தை விட்டு விலகிப் புதிய தாவரங்கள் தோன்ற உதவுகின்றன. எனவே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித் தோன்றல்களை மைட்டாசிஸ் பகுப்பின் மூலமே உருவாக்க இயலும். மரபு பொறியியல், உயிர் தொழில்நுட்பவியலில் கையாளப்படும் திசு வளர்ப்பில் இப்பகுப்பே முக்கியப் பங்காற்றுகிறது.
6. இழப்பு மீட்டல்: நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீள் உருவாதல்.
43.
1. புரோட்டோபிளாசம் செல்லின் உயிருள்ள பொருள். இது பிளாஸ்மா சவ்வினால் சூழ்ந்து காணப்படுகிறது. இது ஒரு நிறமற்ற பொருளாகும்.
2. இது செல் முழுவதும் பரவி.சைட்டோபிளாசம் உட்கரு மற்றும் பல உள்ளுறுப்புக்களைக் கொண்டுள்ளன.
3. புரோட்டோபிளாசம் சிறிய துகள்களான அயனிகள் அமினோ அமிலங்கள் , ஒற்றைச் சர்க்கரைகள் மற்றும் நீரையும் .பெரும் மூலகூறுகளான நீயுக்ளிக் அமிலங்கள் , புரதங்கள் , லிப்பிடுகள் மற்றும் பல்கூட்டுச் சர்க்கரைகள் போன்ற கூட்டுப் பொருள்களை உள்ளடக்கியது
4. இவை நிறமற்ற தோற்றத்துடன் ஜெல்லி போன்ற மீள்பாகு நிலை கொண்ட துகள்களால் ஆனது.இவை அதிக எண்ணிக்கையிலான வாக்குவோல்கள் கொண்டுள்ளதால் நுரை போன்று காணப்படுகிறது.இது வெப்பம். மின் அதிர்ச்சி வேதிப் பொருள் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு ஏற்பத் துலங்கலாகச் செயல் படுகிறது
44.
| வரம்பற்ற கிளைத்தல் | வரம்புடைய கிளைத்தல் | |
| 1. | இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. |
இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குதிசுக்களின் மூலமாகவோ, மொட்டுகளின் நடைபெறுகிறது. |
| 2. | எ.கா. பாலியால்தியா, ஸ்வைடீனியா, ஆன்ட்டியாரிஸ் | எ.கா. சைகஸ். |
45.
1. வேர், தண்டு, இலைகளைக் கொண்டு நன்கு வரையறுக்கப்பட்ட தாவர உடல் காணப்படுதல்.
2. இரு விதையிலைத் தாவரங்களில் உள்ளது போலவே ஜிம்னோஸ்பெர்ம்களிலும் கேம்பியத்தைக் கொண்டிருத்தல்.
3. தண்டில் யூஸ்டீல் காணப்படுதல்.
46.
47.
1. ஒட்டிக்கொள்ளுதல்
2. பாதுகாப்பு.
3. இரைபிடித்தல்.
48.
கிளைடெல்லம் முன்பகுதி - 1 முதல் 3 வரையிலான கண்டங்கள்
கிளைடெல்ல பகுதி - 14 முதல் 17 கண்டங்கள்
கிளைடெல்லம் பின் பகுதி - 18 முதல் இறுதி வரை.
49.
உயிரிகளின் உடலில் ஒரேயொரு வெளிப்புறத்துளை மட்டும் காணப்பட்டு அதுவே வாயாகவும், மலத்துளையாகவும் செயல்பட்டால் அந்த செரிமான மண்டலம் முழுமைபெறாச் செரிமான மண்டலம் எனப்படும்.
எ.கா: தட்டைப்புழுக்கள்
50.
51.
சில சதைப்பற்றுள்ள தாவரங்களான ஒபன்ஷியா, பிரையோஃபில்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் பகுதியாக ஆக்சிஜனேற்றமடைந்து கரிமஅமிலமாகக் குறிப்பாக மாலிக் அமிலமாக மாறுவதால் இத்தாவரங்களின் சசுவாசித்தில் CO2வெளியிடுவதில்லை ஆனால் O2பயன்படுத்தப்படுகிறது. இதில் சுவாச ஈவு மதிப்பு சுழியாக உள்ளது.
52.
53.
(i) நைட்ரஜன் சுழற்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சுழற்சியாகும். இப்புவியின் உயிரிங்கள் நைட்ரஜன் சுழற்சியைப் பெரிதும் சார்ந்துள்ளன. வளிமண்டலத்தில் நைட்ரஜனானது (N2) என்ற தனி நைட்ரஜனாக உள்ளது.
(ii) இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியவாக மாற்றும் செயல் முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர்.
54.
1. அதிகத் துல்லியம்
2. நம்பகத் தன்மை
55.
உயிரினங்களின் 1. வாழிடம், 2. புறத்தோற்றம்
56.
1. இராணி தேனீ,
2. ஆண் தேனீக்கள்
3. வேலைக்கார தேனீக்கள்
57.
1. கருங்காலி
2. கருவேலை
3. கும்பாதிரி
58.
1. ஆக்டின்
2. மையோசின்
3. ட்ரோபோமையோசின்
4. ட்ரோபோனின்
59.
பருவம் எய்தும் போது பெண் இன உறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை பால்பண்புகள் வளர்ச்சியில் ஈஸ்ட்ரோஜன் பங்காற்றுகிறது.
ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோனுடன் இணைந்து மார்பக வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் மாதவிடாய் சுழற்சியையும் துவங்குகின்றது.
60.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்தக்குழாய் சிறுநீரக சிரை ஆகும்.
61.
அமினோ அமிலங்கள் சிதைக்கப்படுவதால் உருவாகும் நைட்ரஜன் கழிவுகள் யூரியாவாக மாற்றப்படுகிறது.
62.
கண் இமைகளுக்குக் கீழே உள்ள கண்ணீர் சுரப்பிகள் நமது உடலில் ஏற்படும் மாற்றமான அழுதலின் போது கண்ணீர், கண்ணீர் நாளங்களின் வழியே வெளியேற்றப்பட்டு மூக்கின் மூலமாக வடிகிறது.
63.
ஹென்லே வளைவில் மீண்டும் உறிஞ்சப்படுதல் அதிகமாக நடைபெறுகிறது.
64.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
65.
66.
| வ.எண் | வெள்ளை அடிபோஸ்திசு | பழுப்பு அடிபோஸ்திசு |
|---|---|---|
| 1 | தோலுக்கு அடியில் காணப்படுகிறது. சிறுநீரகம், கண்கோளம், இதயம் ஆகிய உறுப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. | இதும் தோலுக்கு டியில் காணப்படுகிறது. எண்ணற்ற மைட்டோகாண்ட்ரியாயாக்களை கொண்டது. |
| 2 | ஊட்டச்சத்துகளைச் சேகரித்துவைக்கும் இடமாக உள்ளது. | இரத்த ஓட்டத்தையும் உடலையும் வெப்பப்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் உடம்பில் நடுக்கத்தை ஏற்படுத்தாமல் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. |
| 3 | இதன் மறுபெயர் வெள்ளை கொழுப்பு | இதன் மறுபெயர் பழுப்பு கொழுப்பு |
67.
மண்புழுவின் குடலில் உணவுப் பொருட்கள் உறிஞ்சப்பட்ட பின்பு, செரிக்கப்படாத பொருட்கள் மற்றும் மண்துகள்கள் மண் பரப்பிற்கு மேலே வெளியேற்றப்படுகின்றன. இதற்கு நாங்கூழ் கட்டிகள் என்று பெயர்.
68.
கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
69.
குரல்வளை மூடி
70.
உணவு மண்டலமாக மாறுகிறது.
71.
1. வலது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜனற்ற இரத்தம் இதயத்தின் அருகில் உள்ள நுரையிரலுக்கு செல்வதால், குறைவான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டுவதால் இதன் சுவர் சற்று மெல்லியது.
2.இடது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜன் உள்ள இரத்தம் இதயத்தை விட்டு தூரமான உறுப்புகளுக்கு அனுப்பப்படவேண்டுமானதல், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், அதன் சுவர் தடிமனாக உள்ளது.
72.
73.
| வ.எண் | பயன்தரும் பாக்டீரியா | நோயூக்கி பாக்டீரியா |
|---|---|---|
| 1. | வீடுகளில் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது | நோய்களை ஏற்படுத்துகிறது |
| 2. | தயிர், கயிறு, நொதி, எதிர் உயிரி உற்பத்தியில் பயன்படுகிறது. | காசநோய், காலரா, ஆன்ந்ராக்ஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தும். |
74.
1.நைட்ரோஜீனஸ் காரத்தில் நைட்ரஜன் காணப்படும்.
எ.கா. பியூரைன்காரம், பிரிமிடின் காரம்.
2.கரிம வேதியியலில் பயன்படும் காரத்தில் நைட்ரஜனுக்குப் பதிலாக -OH தொகுதி காணப்படும்.
75.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
76.
வகுப்பு : டைக்காட்டியிடனே
துணைவகுப்பு : பாலிப்பெட்டாலே
வரிசை : காலிசி∴ புளோரே
77.
சைலமும், ஃபுளோயமும் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும். ஸ்டீல், பிளெக்டோ ஸ்டீல் எனப்படும். எ.கா. லைக்கோபோடியம் கிளாவேட்டம்.

78.
I) மொனிரா உயிரின உலகத்தின் அனைத்து புரோகாரியோடிக் உயிரினங்களையும் உள்ளடக்கியது.
II) இவை ஒரு செல் உயிரிகள்.
III) இவை இடப்பெயர்ச்சி அடையும் திறன் கொண்டவை. சில பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள்ளாகவும், மற்றவை உடனுண்ணிகள்ளாக வாழ்கின்றன.
எடுத்துக்காட்டு : ஆர்க்கி பாக்டீரியா.
79.
80.
1. உடல் உலர்ந்த உறுதியான தோலால் மூடப்பட்டுள்ளது.
2. தோலில் செதில்கள் காணப்படுகிறது.
3. மாறும் உடல் வெப்பமுடையவைகள்
4. ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.
5. யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றுகிறது.
6. சிறுநீரகம் மெட்டாநெஃப்ரிக் வகை
7. உட்கருவுருவுதல் நடைபெறுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards