11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Model Test
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.
2.
வேர் அழுத்தக் கோட்பாட்டினை எழுதுக.
3.
சைலம் வரையறு.
4.
பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்றால் என்ன?
5.
மொசைக் பார்வை என்றால் என்ன?
6.
செயற்கை முறை விந்தூட்டத்தின் பயன்கள் யாவை?
7.
இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?
8.
புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து
9.
நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
10.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
11.
ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?
12.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
13.
இத்தொட்டியின் நான்கு மூலைகளும் மூங்கில் கழிகளால் வலுவூட்டப்பட்டு ஆற்றில் பொருத்தப்படும் அமைப்பு ஆகும்.
பென்சிஜால்
பொரிப்புக்குழி
பொரிப்புக்குளம்
பொரிப்பக ஹாப்பா
14.
பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
15.
இவை எலும்புத்தசையின் செயல் அலகு ஆகும்.
H எனும் மையப்பகுதி
M என்னும் அடர்த்தி மிகு கோடு
Z கோடு என்னும் பரப்பு
சார்கோமியர்கள்
16.
தாவர உடலில் அவற்றின் இருப்பிடத்தைப் பொருத்து இல்லாமல் ஒரே விதமான பணியை மேற்கொள்கின்ற பல திசுக்கள் சேர்ந்த தொகுதி ______ எனப்படும்.
கேலோஸ்
திசுத் தொகுப்பு
சின்சைட்
பாஸ்ட் நார்கள்
17.
தாவரங்களின் விதை உறக்கம்______.
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
வளமான விதைகளை உருவாக்குதல்
வீரியத்தை குறைகிறது
விதைச்சிதைவை தடுக்கிறது
18.
மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
கால்சியம்
நைட்ரஜன்
19.
போரின்கள் எனும் புரதங்கள் இதன் சவ்வில் காணபடுகின்றன.
லைசோசோம்
உட்கரு
கோல்கை உடலம்
மைட்டோகாண்ட்ரியா
20.
கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.
உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.
சுவாசத்திற்கு பயன்படுகிறது
உணவூட்டத்திற்கு பயன்படுகிறது
நீரோட்டத்தை உருவாக்குகிறது
21.
கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.
இரத்தச் சிவப்பணுக்கள்
இரத்த வெள்ளை அணுக்கள்
இரத்தத் தட்டுகள்
இவை அனைத்தும்
22.
இந்த வைரஸ்களில் உட்கரு அமிலம் சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுகிறது.
காயக்கழலை வைரஸ்
இன்புளுயன்சா வைரஸ்
புகையிலை தேமல் வைரஸ்
மைக்ரோஃபாஜ்கள்
23.
மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் எதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது?
லூட்டினைசிங் ஹார்மோன்
ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன்
ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்
வளர்ச்சி ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்
24.
25.
சரியான இணைகளை உருவாக்குக
| வரிசை –I | வரிசை –II |
| P) லிபேஸ் | i) ஸ்டார்ச் |
| Q)பெப்சின் | ii) காசின் |
| R) ரென்னின் | iii) புரதம் |
| S) டயலின் | iv) லிபிட் |
| P | Q | R | S |
| iv | ii | i | iii |
| P | Q | R | S |
| iii | iv | ii | i |
| P | Q | R | S |
| iv | iii | ii | i |
| P | Q | R | S |
| iii | ii | iv | i |
26.
உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இனப்பெருக்கம்
வளர்ச்சி
வளர்சிதை மாற்றம்
இடப்பெயர்ச்சி
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
27.
கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன
அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.
ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.
28.
பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன.
குரோட்டலேரியா ஜன்சியா
சைகஸ் ரெவலூட்டா
சைசர் அரிட்டினம்
கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா
29.
சுவாசித்தலின் ஒட்டு மொத்த சுருக்க வரைபடம் வரைக?
30.
நரம்பு மண்டலம் குறிப்பு எழுதுக?
31.
புற பூஞ்சைவேரிகளின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி?
32.
அக பண்புகளில் உலா வேறுபாட்டினை அட்டவணைப்படுத்து.
33.
மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் 60 அடர் வளையங்களும் 60 அடர்வற்ற வளையங்களும் உள்ளன. அந்த மரத்தின் வயதைக் கணக்கிடுக.
34.
இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக
35.
யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?
36.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
37.
முன் சைனாப்டிக் நியூரான், பின் சைனாப்டிக் நியூரான் வேறுபடுத்துக்க.
38.
ஒட்டுமொத்த மூப்படைதல் பற்றி எழுதுக.
39.
சைக்ளோசிஸ் (அல்லது)சைட்டோபிளாச நகர்வு என்றால் என்ன?
40.
ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.
41.
இரைப்பையில் காணப்படும் 3 பகுதிகள் எவை?
42.
சைமோஸ் வகை மஞ்சரியின் வகைகள் யாவை?
43.
டி.என்.ஏ. வரிக்குறியீடு தொழில்நுட்பம் எதற்கு உதவுகிறது?
44.
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?
45.
46.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
1.
(i) இறந்த மற்றும் மக்கிய உடல்களிலிருந்து உணவைப் பெறுவது சாறுண்ணி (Saprophytyic) அல்லது மட்குண்ணி உணவூட்டம் எனப்படுகிறது.
(ii) பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் சாறுண்ணி உணவூட்டத்திற்கான முதன்மை உயிரினங்களாகும்.
(iii) சில ஆஞ்சயோஸ்பெர்முகளும் சாறுண்ணி வகை உணவூட்டதை மேற்கொள்கின்றன.
எடுத்துக்காட்டு:நியோட்டியா (பறவைக்கூடு ஆர்க்கிடு). நியோட்டியாவின் வேர்களானது வேரி பூஞ்சைகளுடன் இணைந்து ஊட்டச்சத்துக்களை சாறுண்ணி போன்று எடுத்துக்கொள்கிறது.
2.
நன்கு நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட தாவரத்தினை தரைமட்டத்திலிருந்து சில அங்குல உயரத்தில் துண்டிக்கும்போது, துண்டிக்கப்பட்ட பகுதியிலிருந்து சிறிது விசையுடன் நீர் வருவதைக் காணலாம்.
இது நீர்வடிதல் (Bleeding) எனப்படும்.
தாவர செயலியலின் தந்தையான ஸ்டீபன் ஹேலஸ் இதனைக் கண்டறிந்து "வேர் அழுத்தம்" என்ற சொல்லை பயன்படுத்தினார்.
3.
(i) வாஸ்குலத் தாவரங்களில் நீரைக் கடத்துகின்ற முதன்மையான திசு சைலம் ஆகும். சைலம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். இது "சைலோஸ் கட்டை" (GK, Xylos-wood) என்ற கிரேக்கச் சொல் ஆகும்.
(ii) புரோகேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் முதலாம் நிலை சைலம் (primary xylem) என்றும் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் இரண்டாம் நிலை சைலம் (secondary xylem) என்றும் அழைக்கப்படுகின்றன.
4.
1.DNA வின் இரண்டு இழைகள் திருகுச்சுருள் அமைப்பில் ஒன்றோடொன்று பிணைத்து காணப்படுகிறது.
2.இதில் ஒன்றிலிருந்து மற்றொன்ற எளிதில் பிரிக்க முடியாதவாறு காணப்படுகிறது.
3.இதற்கு பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்று பெயர்.
5.
1. கரப்பான் பூச்சியின் ஒவ்வொரு கூட்டுக் கண்ணிலும் சுமார் 2000 எளிய கண்களான ஒம்மட்டிடியா காணப்படுகிறது.
2. இதன் வழியாகவே கரப்பான்பூச்சிகள் பொருளின் பல பிம்பத்தை உணர்கின்றன.
3. இத்தகைய பார்வைக்கு மொசைக் பார்வை அல்லது முழுமையற்ற பகுதிப்பார்வை என்று பெயர்.
4. இப்பார்வையில் உணர் தன்மை அதிகமிருப்பினும் குறைவான தெளிவு திறன் கொண்டதாகவே உள்ளது.
6.
1. இது கருவுறுதல் வீதத்தை உயிர்த்துகின்றது
2. இதனால் இனப்பெருக்க நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.
3. விரும்பத்தக்க பண்புகள் கொண்ட காளைகள் காயம்பட்டு இருந்தாலும் அவற்றிடமிருந்து விந்து நிர்மம் சேகரிக்கலாம்.
4. உயர்பண்புகள் கொண்ட விலங்குகள் தொலைவில் இருந்தாலும் அவற்றின் விந்து நீர்மத்தைக் கொண்டு கருவுறச் செய்யலாம்.
7.
இரத்தத்தின் ஆஸ்மோலாரிட்டி மூலம் கொள்ளளவை சிறுநீரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.
உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு இடையே உள்ள தொடர்பு ஊடுகலப்பு நிலைகள் மூலம் நிர்வகிக்கிறது.
8.
புரோட்டோ நெஃப்ரீடியாக்கள் - எளிய குழல் வடிவிலான தொன்மையான சிறுநீரகங்கள்.
மெட்டா நெஃப்ரீடியாக்கள் - குழல் வடிவ சிறுநீரகங்கள்.
9.
A. உட்கருமணியுடன் உட்கரு
B. ஆக்ஸான்
C. டென்ரைட்டுகள்
D. மயலின் உறை
E. ஆக்ஸோபிளாசம்
F. ரான்வியர் கணு
10.

11.
1. இரத்த சோகையினால் பாதிக்கப்படுவார்.
2. இரும்புச் சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இன்றியமையாததாகும்.
3. இதன் பற்றாக்குறைவினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.
4. இதனால் அனீமியா அல்லது இரத்தச் சோகை ஏற்படும்.
12.
| வ.எண் | திரள் கனி | கூட்டுக்கனி |
| 1 | ஓர் தனிமலரின் இணையாத சூலகங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு தனி சூல்கமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. |
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் |
| 2 | எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பாலியால்தியா | எ.கா: அன்னாசி, பலா, மல்பெரி, ஃபைகஸ். |
13.
(d)
பொரிப்பக ஹாப்பா
14.
(a)
வீரிய சுவாசம்
15.
(d)
சார்கோமியர்கள்
16.
(b)
திசுத் தொகுப்பு
17.
(a)
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
18.
(c)
கால்சியம்
19.
(d)
மைட்டோகாண்ட்ரியா
20.
(d)
நீரோட்டத்தை உருவாக்குகிறது
21.
(d)
இவை அனைத்தும்
22.
(b)
இன்புளுயன்சா வைரஸ்
23.
(b)
ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன்
24.
(c)
25.
(a)
| P | Q | R | S |
| iv | ii | i | iii |
26.
(e)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
27.
(b)
அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
28.
(d)
கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா
29.

30.
1. நியூரான்கள் எனப்படும் அதி சிறப்படைந்த செல்களால் ஆக்கப்பட்டது நரம்பு மண்டலம் ஆகும்.
2. இச்செல்களே பல்வேறு தூண்டல்களை பெற்று அதன் தன்மைகளைக் கண்டறிந்து செயல்படுத்தி அவற்றைக் கடத்துகின்றன.
3. கீழ்நிலை முதுநாணற்றவைகளில் நரம்பு வலையாக எளியவகை நரம்பு மண்டலம் அமைந்துள்ளது.
4. உயர்நிலை விலங்குகளில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள நரம்பு மண்டலம் கீழ்கண்ட மூன்று அடிப்படைப் பணிகளைச் செய்கின்றன.
5. உணர்ச்சியறிதல் பணிகள்: புற மற்றும் அகச் சூழலிருந்து வரும் உணர்வுகளை உள்வாங்குதல்
6. இயக்கு பணிகள்: மூளையிலிருந்து வரும் கட்டளைகளைப் பெற்று எலும்பு மற்றும் தசை மண்டலத்துக்கு அனுப்புதல்.
7. தானியங்கு பணிகள்: அனிச்சை செயல்கள்.
31.
32.
| வ.எண் | பண்புகள் | லாம்பிட்டோ மாரிட்டீ | மெடாபையர் போஸ்துமா |
|---|---|---|---|
| 1 | தொண்டை | 2வது முதல் 4வது கண்டம் வரை | 4வது கண்டம் வரை நீளும் |
| 2 | உணவுக்குழல் | 5வது கண்டம் | 8வது கண்டம் |
| 3 | அரைவைப்பை | 6வது கண்டம் | 8வது - 9வது கண்டம் |
| 4 | குடல் | 7வது கண்டம் முதல் மலவாய் ஈறாக | 15வது கண்டம் முதல் மலவாய் ஈறாக |
| 5 | குடல் பிதுக்கம் / சீக்கம் | இல்லை | 26வது கண்டத்தில் உண்டு |
| 6 | பக்கவாட்டு இதயங்கள் | 8 இணைகள் 6வது முதல் 13வது வரையிலான கண்டங்கள் | 3 இணைகள் 7வது முதல் 9வது வரையிலான கண்டங்கள் |
| 7 | தொண்டைப்பகுதி நெஃப்ரீடியா | 5வது 9வது வரையிலான கண்டங்கள் | 4வது முதல் 6வது வரையிலான கண்டங்கள் |
| 8 | மைக்ரோ நெஃப்ரீடியா | 14வது முதல் கடைசி கண்டம் வரை | 7வது முதல் கடைசி கண்டம் வரை |
| 9 | மெகா நெஃப்ரீடியா | 19வதுமுதல் கடைசி கண்டம் வரை | 15வது முதல் கடைசி கண்டம் வரை |
33.
மரத்தின் வயது 60 வருடம்.
காரணம்:
1. ஆண்டு வளையம் என்பது முன்பருவக் கட்டையும் பின்பருவக் கட்டையும் கொண்ட தொகுப்பைக் குறிக்கும்.
2. மேலும் பின் பருவக்கட்டையின் அடர்த்தி மிகுதியால் வளையங்கள் நம் கண்ணிற்குத் தெளிவாகப் புலப்படுகிறது.
3. சில நேரங்களில், ஆண்டு வளையங்கள் வளர்ச்சி வளையங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
4. ஒவ்வொரு ஆண்டு வளையமும் ஒரு வருடத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
5. இந்த வளையங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வயது எளிமையாகக் கணக்கிடப்படுகிறது.
6. ஒரு மரத்தின் வயதை ஆண்டு வளையங்களின் எண்ணிக்கைகளாக கொண்டு உறுதி செய்யப்படுவது "மர வயதில்"என அழைக்கப்படுகிறது.
34.
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலை வேர் | ஒரு விதையிலை வேர் |
| 1. | பெரிசைக்கிள் | பக்கவேர்கள், பெல்லோஜென் மற்றும் வாஸ்குலக் கேம்பியத்தின் ஒரு பகுதி பெரிசைக்களிலிருந்து தோன்றுகின்றன. |
பக்கவேர்கள் மட்டும் தோன்றுகின்றன. |
| 2. | வாஸ்குலத் திசு | பெரும்பாலும் ஃபுளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. |
பெரும்பாலும் சைலம் ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. |
| 3. | இணைப்புத் திசு | பாரங்கைமாவால் ஆனது. இந்தச் செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடடைகிறது. | பெரும்பாலும் ஸ்கிலிரங்கைமாவால் ஆனது. ஆனால் சில சமயங்களில் பாரங்கைமாவால் ஆனது. இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடு அடைவதில்லை. |
| 4. | கேம்பியம் | இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது. | முற்றிலும் இல்லை. |
| 5. | சைலம் | நான்கு முனை கொண்டவை. | பொதுவாகப் பல முனை கொண்டவை |
35.
1. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.
2. காடுகள் அழிக்கப்படுவதால், உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
3. மழைபொழிவு மற்றும் நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால்
4. அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால்
5. மனிதர்கள் காட்டுக்குள் சென்று அவைகளுக்கு இடையூறு செய்வதால்.
36.
| வ.எண் | பொதுப் பண்புகள் | குடும்பம் : சொலானேசி | குடும்பம் : லில்லியேசி |
|---|---|---|---|
| 1. | வளரியல்வு | பெரும்பாலும் ஒரு பருவச் சிறுகொடிகள் புதர் செடிகள், சிறிய மரங்கள் | பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகள் |
| 2 | வேர் | கிளைத்த அனிவேர் தொகுப்பு | வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு |
| 3. | தண்டு | மென்மையானது (அ ) கடைத்தன்மை கொண்டது, நிமிர்ந்து பின்னுக் கொடிகள் (அ) ஊடுருவி வளர்பவை | தரை தரைக்கீழ் குமிழ் தண்டு , சில வற்றின் மட்டநிலத்தண்டு |
| 4. | இலை | மாற்றிலை யடுக்கமைவு , தனியிலை அரிதாக இதற்கு வடிவ கூட்டிலை கள் , இலையடிச் செதிலற்றது.எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு | வேரண்மை இலைகள் காலைன் மாற்றிலை யடுக்கமைவு எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு இலையடிச் செதில் அற்றது |
| 5. | மஞ்சரி | இலைக்கோண (அ ) நுனி சைம்கள் (அ ) தனி மலர் , தேளுறு (அ )ரைபிடியம் (அ) சை மோஸ் (அ ) அம்பெல் லேட் சைம் | தனித்த (அ)கிளைத்த ரெசிமோஸ் (அ ) ஸ்பைக் (அ ) கூட்டு ரசிம் |
| 6 | மலர் | பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது , பூக்காம்பு டையது, இரு பால் மலர் இரு பூவிதழ் அடுக்குடையது | காம்புடையது. பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது,இரு பால் மலர் முவங்கமலர் சூலக மேல் மலர் |
| 7 | புல்லிவட்டம் (அ ) பூவிதழ் வட்டம் | புல்லிகள் 5,அரிதாக 4(அ ) இணைந்த புல்லி , தொடு இதழமைவு நிலைத்த புல்லி | பூவிதழ்கள் - 6 இணை யாதவை அரிதாக இணைந்தவை தோடு (அ )தழுவு இதழமைவு |
| 8 | அல்லிவட்டம் | அல்லிகள் 5 இணைந்த அல்லிகள் சூழல் இதழமைவு , சக்கர வடிவம் (அ ) மணி வடிவம் (அ ) புனல் வடிவம் தொடு (அ ) திருகு இதழமைவு | காணப்படுவதில்லை |
| 9 | மகரந்தத்தாள் வட்டம் | மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டிவை சம நீலமற்ற மகரந்த கம்பிகளை யடைவை மகரந்தபை இரு அறைகள்களை உடைவை | மகரந்ததாள் 6 பூவிதலுக்கு எதிராக அமைத்துள்ளது.மகரந்தப்பை இரு மடல்கள் உடையது.நீள வாக்கில் வெடிப்பவை வெளி உள் நோக்கியது |
| 10 | கனி | வெடிகனி (அ ) சதைக்கனி | அறைவழி வெடிகனி (அ ) சதைகனி (அ ) தடுப்புச் சுவர் வழி வெடிகனி |
37.
சைனாப்ஸில் தூண்டலைத் தரும் நியூரான் முனை சைனாப்டிக் நியூரான் என்றும், தூண்டலைப் பெறும் நியூரான் பின் சைனாப்டிக் நியூரான் என்றும் அழைக்கப்படுகின்றன.
38.
ஒரு பருவத் தாவரங்களில் இந்த வகையான மூப்படைதல் நடைபெறுகிறது. முழு தாவரமும் பாதிக்கப்பட்டு இறக்கிறது. எடுத்துக்காட்டு கோதுமை மற்றும் சோயமொச்சை சில பல்பருவத் தாவரங்களிலும் கூட இது நடைபெருகிறது. எடுத்துக்காட்டி : அகேவ் மற்றும் மூங்கில்.
39.
1.செல்லினுள் நடைபெறும் சைட்டோபிளாச இயக்கம் சைக்ளோசிஸ் அல்லது சைட்டோபிளாச நகர்வு என்று பெயர்.
2.எ.கா: வாலிஸ்னேரியாவின் இலையில் உள்ள செல்கள், மற்றும் கேரா.
40.
மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுவது என்பது சத்தியம் இல்லை. அப்படி எந்த மரமும் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிருபிக்கவும் இல்லை.
41.
1. கார்டியாக் பகுதி.
2. ஃபன்டிக் பகுதி.
3. பைலோரிக் பகுதி.
42.
1. தனிசைம்
2. ஒரு கைக்கிளைக்கும் மஞ்சரி
அ. ஹெலிக்காய்டு சைம் (போஸ்டிரிக்ஸ்)
ஆ.ஸ்கார்பியாய்டு சைம் (சின்சின்னஸ்)
3. தனிடைக்கேஷியம் (இருவகைக் கிளைத்தல்)
4. பல்வகைக்கிளைக்கும் மஞ்சரி
5. கூட்டு டைக்கேஷியம்.
43.
ஒரு உயிரியின் டி.என்.ஏ.வில் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை வைத்துக் கொண்டு அவ்வுயிரினம் குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்ததா என்று அறிய உதவுகிறது.
44.
சிறுநீரக தமனி சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழையாகும்.
எடுத்துச்செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
45.
46.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards