11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/02/2020
11 ஆம் வகுப்பு உயிரியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Revision Model Question Paper )
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கூட்டுயிர் மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்ததை விளக்கு.
2.
தண்டுவடத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை படத்துடன் விளக்கு.
3.
DNA வின் அமைப்பை விளக்கு.
4.
நரம்பமைவு என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்குக.
5.
தொகுதி : டினோஃபோராவின் பொதுப்பண்புகளை கூறு.
6.
ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகும். C3 தாவரங்கள் 18 ATP - க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3-யை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்க்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?
7.
ஆஞ்சியோஸ் பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி?
8.
சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.
9.
தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக.
10.
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.
11.
கால்வாய் புரதங்கள் என்றால் என்ன?
12.
பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் அதன் காரணிகளை தொகுத்து அட்டவணைப்படுத்து.
13.
பறவைகளில் காணப்படும் பறப்பதற்கு உண்டான தகவமைப்பை குறிப்பிடுக.
14.
கைரை மற்றும் சல்சி இவற்றை வேறுபடுத்துக்க. அவற்றின் பணியைக் குறிப்பிடுக.
15.
மனித சுவாச மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் யாவை?
16.
ஹீமோலிஃம்ப் என்பது யாது? அதன் முக்கியத்துவம் யாது?
17.
எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீடாலிஸ் என்பது யாது?
18.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
19.
இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?
20.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
21.
மாதுளைக் கனியானது ________ வகைகளைச் சார்ந்தது.
சிலிக்குவா
சைக்கோனஸ்
சிப்செலா
பலாஸ்டா
22.
தண்டைத் தவிர தாவரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தோன்றும் மொட்டுகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.
நுனிமொட்டுகள்
பக்கவாட்டு மொட்டுகள்
வேற்றிட மொட்டுகள்
துணை மொட்டுகள்
23.
ஃபைட்டாசேஸ்கள் என்பது தாவரங்களில் _________.
மூப்படைதலை தூண்டுகிறது
விதை உறக்கத்தைத் தூண்டுகிறது
திட்டமிடப்பட்ட செல் இறப்புக்கு காரணம்
விதை முளைத்தலை தூண்டும் பொருள்
24.
அசிட்டைல் CoA எந்த பொருள் ஆக்ஸிஜனேற்றம் அடையும் பொழுது உருவாகிறது?
கார்போஹைட்ரேட்
புரதம்
கொழுப்பு
இவை அனைத்தும்
25.
மனிதன் _________ க்கு உதாரணமாகும்.
அகச்சட்டகம்
டென்டான்
நீர்மசட்டகம்
புறச்சட்டகம்
26.
இதன் விளைவாக சிறுநீரக குடல்வலி என்னும் கடுமையான வழியும் சிறுநீரகத் தழும்புகளும் தோன்றும்
சுமார் 17-30மிகி /100மிலி
நெஃப்ரோலித்யாஸிஸ்
கிளாமருலோ நெஃப்ரைடிஸ்
யூரேமியா
27.
28.
சரியான வாக்கியத்தை கண்டுபிடி
மண்புழுவில் வளர்ச்சி மறைமுக வளர்ச்சியாகும்
விந்து கொள்பைகள் ஒரு இணை காணப்படுகிறது
விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது
கருமுட்டை கூட்டை உருவாக்குவது இளம் உயிரிகள்
29.
கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.
உணவுக்கு குழல்
எபிடெர்மிஸ்
வாய்
பெண் இனப்பெருக்க உறுப்பு
30.
எரிபட்டு ______ லிருந்து பெறப்படுகின்றது.
லேஸ்ஸிஃபெர் லேக்கா
நொசிமா பாம்பிசிஸ்
அட்டாகஸ் ரிசினி
அட்டாகஸ் மைலிட்டா
31.
சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் ______.
நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்
திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்
திரவங்களின் நிகர உறிஞ்சுதல்அளவில் முடியும்
எவ்வித மாற்றமும் நிகழவில்லை
32.
நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை ______.
உயிர்ப்புத்திறன்
மூச்சுக்காற்று அளவு
எஞ்சிய கொள்ளளவு
உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு
33.
உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இனப்பெருக்கம்
வளர்ச்சி
வளர்சிதை மாற்றம்
இடப்பெயர்ச்சி
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
34.
விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்.
குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்
குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது
குரோமோசோம்கள் பிரிவுறாது
குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்
35.
பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?
பிளாஸ்மா சவ்வு
சைட்டோஸ்கெலிட்டன்
மைட்டோகாண்டிரியா
கணிகங்கள்
36.
பரவலில் மூலக்கூறுகளின் இயக்கம் எவ்வாறு இருக்கும்?
37.
ஹைபோதலாமஸையும் முன்பகுதி பிட்யூட்ரியையும் இணைப்பது எது?
38.
பகுப்பிடைக்காலம் என்றால் என்ன?
39.
முதன்மை வகைப்பாடு என்பது யாது?
40.
தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
41.
பைரினாய்டுகள் என்பவை யாவை?
42.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
43.
வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.
1.
வேர் முடிச்சு மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்தும்:
லெகூம் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் பாக்டீரியம் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுகிறது. இந்த வகையான கூட்டுயிர் வாழ்க்கையில் பாக்டீரியம் மற்றும் தாவரம் இரண்டுமே பயனடைகின்றன. வேர் முடிச்சுகள் ரைசோபியம் ஓம்புயிர் செல்லினுள் நுழைந்து பெருக்கம் அடைகிறது.அவை. ஓம்புயிர் சைட்டோபிளாசத்துடன் சேராமல், உறையால் சூழப்பட்ட தனி அமைப்புகளில் காணப்படுகின்றன.
வேர்முடிச்சு தோன்றுதலின் வெவ்வேறு நிலைகள்:
1. லெகூம் தாவரங்களின் வேர்கள் பினாலிக் வேதிப்பொருட்களை சுரந்து ரைசோபியம் பாக்டீரியங்களை வேர் நோக்கி கவர்தல்.
2. ரைசோபியம் வேர் அருகு மண்டலத்தை (Rhizosphere) அடைந்து, வேர்தூவி வழியாக நுழைந்து, வேர் தூவியை பாதித்துச் சுருளச் செய்கிறது.
3. தொற்று இழை உள்நோக்கி வளர்ந்து பாதிப்படைந்துள்ள திசுப்பகுதியைம் மற்ற திசுப்பகுதியிலிருந்து பிரிக்கிறது.
4. உறையால் சூழப்பட்ட பாக்டீரியத் தொகுப்புகள் வேர்முடிச்சின் உள்பகுதியில் உருவாகிறது.இவற்றிக்குப் பாக்டீராய்டுகள் என்று பெயர்.
5. பாக்டீரியங்கள் உருவாக்கும் சைட்டோகைனின் மற்றும் தாவரங்கள் உருவாக்கும் ஆக்ஸின்கள் வேர் செல்களில் செல்பகுப்பை தூண்டி வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கிறது.
லெகூம் அல்லாத நைட்ரஜன் நிலைநிறுத்தும்:
அல்னஸ்,, சவுக்கு போன்ற தாவரங்களில் காணப்படும் பாக்டீரியா, ஃபிரான்க்கியா சைகோட்ரியாவில் காணப்படும் கிளப்ஸியெல்லா பாக்டீரியங்கள் லெகூம் அல்லாத தாவரங்களில் வேர்முடிச்சுகள் மூலம் நைட்ரஜன் நிலை நிறுத்தம் செய்வதற்கு உதவுகின்றன.
(ii) வேர் முடிச்சு உருவாகா நைட்ரஜன் நிலைநிறுத்தும்
இதில் கீழ்கண்ட தாவரங்களும், புரோகேரியாட்டுகளும் வேர் முடுச்சுகளை உருவாக்காமல், கூட்டுயிர் வாழ்க்கை முறையில் நைட்ரஜனை நிலைநிறுத்தம் செய்கிறது.
லைக்கன்கள் -அனபீனா மற்றும் நாஸ்டாக்
ஆந்தோசிராஸ் - நாஸ்டாக்
அசோலா - அனபீனா அசோலே
சைக்கஸ் - அனபீனா மற்றும் நாஸ்டாக்
2.
1. தண்டுவடம் என்பது நீண்ட மெலிந்த உருளை போன்ற அமைப்புடைய நரம்புத்திசுவாகும். இது முதுகெலும்புத் தொடரினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
2. மூளையைப் போலவே மூன்று உறைகளால் சூழப்பட்டுள்ளது. தண்டு வடம் மூளைத்தண்டில் தொடங்கி முதுகெலும்புத் தொடரின் கால்வாயின் வழியாக முதலாவது அல்லது இரண்டாவது இடுப்பு முள்ளெலும்பு வரை நீண்டு காணப்படுகிறது.
3. மீதமுள்ள தண்டுவட நரம்புகளின் வேர்கள், முதுகெலும்புத் தொடரிலிருந்து வெளியேற எதுவாக மிகவும் நீண்டு அமைந்துள்ளன. இவ்வாறு வெளிவரும் நரம்புவேர்கள் தடித்த கற்றையாக முதுகெலும்புக் கால்வாயின் பின்பகுதியில் காணப்படுகின்றன.
4. இது குதிரை வால்போன்று தோற்றமளிப்பதால் இவை குதிரை வால் கற்றை என்று அழைக்கப்படுகிறது.
5. குறுக்குவெட்டுத்தோற்றத்தில், தண்டுவடத்தின் முன்பகுதியில் ஒரு மையப் பிளவையும் கொண்டுள்ளது. சிறு சிறு வேறுபாடுகளிருப்பினும் பொதுவாகக் குறுக்குவெட்டுதோற்றத்தில் தண்டுவடத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரே தன்மையுடையது.
6. வென்ட்ரிக்கிளின் இணைந்து கோராய்டு வலைப்பின்னலை உருவாக்குகின்றன.
7. இது இரத்தத்திலிருந்து மூளை தண்டுவடத் திரவத்தை உற்பத்தி செய்கிறது.
3.
1.DNA-வின் அமைப்பை X-கதிர் படிக வரைகலையின் தகவல்களை பயன்படுத்தி DNA மாதிரியை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்ததால் வாட்சன் மற்றும் கிரிக்கிற்கு 1962-ம் ஆண்டு மொரிஸ் வில்கின்ஸ்சுடன் சேர்ந்து நோபல் பரிசு வழங்கப்பட்டது.ரோசலின்ட் ஃபிராங்கிளின் (1920-1958) என்பவர் தெளிவான முதல் படிக வரைகலை சான்றினை DNA திருகுசுருள் அமைப்பிற்கு முன்னரே உருவாக்கினார்.
2.கேம்பிரிட்ஜ்ஜின்,கேவன்டிஷ் சோதனைக் கூடத்தில் செய்த ஆய்வின் மூலம் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் DNA -வின் இரட்டைச் திருகுச்சுருள் அமைப்பிற்கான மாதிரியை வடிவமைத்தனர்.பரவலாக அதிகம் காணப்படும் DNA வகையான B-DNA-யின் மூலக்கூறு அமைப்பு இதுவாகும்.அத்துடன் இது DNA-யின் இரண்டாம் நிலை அமைப்பாகும்.
3.ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக்கின் கருத்துப்படி DNA-வின் இரு பாலி நியூக்ளியோடைடு இழைகள் ஒரு பொது அச்சை வலமாகச் சுற்றி அமைந்துள்ளன.இவ்வகை திருகுச் சுருள் அமைப்பே B-DNA-யில் உள்ளது.இரு இழைகளின் எதிர் அமைந்த நியூக்ளியோடைடுகளின் இணைநிறைவு காரங்களில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கிடையே தோன்றும் ஹைட்ரஜன் பிணைப்புகள்,இந்த இரு இழைகளையும் கட்டுறுதியாக வைக்க உதவுகின்றன.DNA-யின் நியூக்ளியோடைடுகளில் 2'டிஆக்ஸிரைபோஸ் சர்க்கரை காணப்படுகிறது.இதன் இரண்டாவது கார்பனில் ஹைட்ராக்ஸில் தொகுப்பு இல்லாதிருப்பதே இதற்குக் காரணமாகும்.இணை சேரும் காரங்களில் அடினைன் மற்றும் தையமின்களுக்கிடையே இரு ஹைட்ரஜன் பிணைப்புகளும்,குவானைன் மற்றும் சைட்டோசின்களுக்கிடையே மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளும் உள்ளன.
4.1949-இல் எர்வின் சார்காஃப் -இன் கருத்துப்படி ஒரு பியூரின் ஒரு பிரமிடின் ஒரு பியூரினோடு இணையும்.அதிலும் அடினைன் (A) தையமினுடன் (T) இணையும், குவானைன் (G) சைட்டோசைனுடன் (C) இணையும்.
4.
நரம்பமைவு:
1. இலைத்தாள் அல்லது இலைபரப்பில் நரம்புகளும், கிளை நரம்புகளும் அமைந்திருக்கும் முறைக்கு நரம்பமைவு என்று பெயர். உள்ளமைப்பில் நரம்புகள் வாஸ்குலத் திசுக்களைப் பெற்றுள்ளன.
2. வழக்கமாக நரம்பமைவு இரண்டு வகையாக வகைப்படுத்தப்படும். அவை முறையே வலைபின்னல் நரம்பமைவு, இணைப்போக்கு நரம்பமைவு ஆகும்.
I. வலைப்பின்னல் நரம்பமைவு (Reticulate venation)
இதில் மையத்தில் ஒரு தெளிவான மைய நரம்பும் அதிலிருந்து தோன்றும் பல சிறிய இரண்டாம் நிலை நரம்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இலைப்பரப்பில் ஒரு வலைபின்னலை ஏற்படுத்த்துகின்றன. பொதுவாக இந்த வகையான நரம்பமைவை அனைத்து இருவிதையிலைத் தாவரங்களிலும் காணலாம். இது இரண்டு வகைப்படும்.
1. சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு -ஓர் நடு நரம்பமைவு (Pinnately reticulate venation -unicostate) இதில் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டுமே உள்ளது. இம்மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன. எ.கா:மாஞ்சிஃபெரா இண்டிகா, ஃபைகஸ் ரிலிஜியோஸா, நீரியம்
2. அங்கை வடிவ வலைப்நரம்பமைவு-பல நடு நரம்பமைவு (Palmate reticulate ventation - multi costate) இதில் இரண்டு அல்லது பல மைய நரம்புகள் ஒரு புள்ளியிலிருந்து தோன்றி, இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்லும், அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு மேலும் இரண்டு வகையானப் பிரிக்கப்பட்டுள்ளது.
(i) விரி நரம்பமைவு வகை (Divergent):
இவ்வகை நரம்பமைவில் அனைத்து மைய நரம்புகளும் அடிப்பகுதியிலிருந்து தோன்றி இலையின் விளிம்பு வரை விரிந்து செல்கின்றன. எ.கா: குக்கர்பிட்டா (பூசணி), லூஃபா (பீர்க்கங்காய்), காரிக்கா பப்பாயா (பப்பாளி)
(ii) குவி நரம்பமைவு வகை (Convergent):
இவ்வகை நரம்பமைவில் அணைத்து நரம்புகளும் இலையின் நுனிப்பகுதியில் குவிகின்றன. எ.கா: ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சி இலை)

(அ) சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு -ஃபைகஸ்
(ஆ) அங்கை வடிவ வலைப்பின்னல் -வரி நரம்பமைவு வகை -குக்கர்பிட்டா
(இ) அங்கை வடிவ வலைப்பின்னல் -குவி நரம்பமைவு வகை - சின்னமோயம்
(II) இணைப்போக்கு நரம்பமைவு (Parallel venation)
இவ்வகை நரம்பமைவில் அனைத்து நரம்புகளும் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்கின்றன. மேலும் இங்கு தெளிவான வலைப்பின்னல் அமைப்பு தோன்றுவதில்லை. இவ்வகை நரம்பமைவு ஒருவிதையிலைத் தாவர இலைகளின் சிறப்பமைவாகும். இதை இரண்டு துணை வகைகளாக பிரிக்கலாம்.
1. சிறகு வடிவ இணைப்போக்கு நரம்பமைவு -ஓர் நடு நரம்பமைவு (Pinnately parallel venation - Unicostate) இவ்வகை நரம்பமைவில் நடுவில் ஒரு தெளிவான மைய நரம்பு உள்ளது. இதிலிருந்து செங்குத்தாகவும், இணையாகவும் செல்லும் பல நரம்புகள் தோன்றுகின்றன. எ.கா: மியூஸா, இஞ்சி, குர்குமா, கேனா (கல்வாழை)

(அ) சிறகு வடிவ இணைப்போக்கு நரம்பமைவு -கேனா
(ஆ) அங்கை வடிவ இணைபோக்கு -குவி நரம்பமைவு வகை -மூங்கில்
(இ) அங்கை வடிவ இணைபோக்கு -விரி நரம்பமைவு வகை -பொராஸஸ்
2. அங்கை வடிவ இணைப்போக்கு நரம்பமைவு -பல நடு நரம்பமைவு (Palmate parallel venation - Multicostate) இவ்வகை நரம்பமைவில், காம்பின் நுனியிலிருந்து (இலைப்பரப்பின் அடியிலிருந்து) பல நரம்புகள் தோன்றி, பின் ஒன்றுக்கொன்று இணையாகச் சென்று நுனியில் கூடுகின்றன. இவை இரண்டு வகைப்படும்.
(i) வரி நரம்பமைவு வகை (Divergent) இவ்வகை நரம்பமைவில் அனைத்து முக்கிய நரம்புகளும் இலைப்பரப்பின் அடியிலிருந்து உருவாகி விளிம்பை நோக்கி விரிகின்றன. எ.கா: பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர்
(ii) குவி நரம்பமைவு வகை (Convergent type): இவ்வகை நரம்பமைவில் அனைத்து முக்கிய நரம்புகளும் இலைப்பரப்பின் அடியிலிருந்து உருவாக்கி இணையாகச் சென்று நுனியில் குவிகின்றன. எ.கா: மூங்கில் நெல், வெங்காயத்தாமரை.
5.
1. அனைத்தும் கடல்வாழ் உயிரிகள்
2. திசு அளவிலான உடல் அமைப்பை பெற்றுள்ளது.
3. ஆரச்சமச்சீருடைய ஈரடுக்கு விலங்குகள்
4. மிசோகிளியாவில் அமிபோசைட்டுகளும் மென்தசை செல்களும் காணப்படுகிறது.
5. இடப்பெயர்ச்சிக்கு பயன்படும் எட்டு வரிசையிலான குறியிழைகளுடன் கூடிய வெளிப்புறச் சீப்புத்தகட்டைப் பெற்றுள்ளதால், சிப்புவடிவக் கோம்ப் ஜெல்லி அல்லது கடல் வாதுமை என்று அழைக்கப்படுகிறது.
6. உயிரொளிர்தல் என்ற பண்பு உண்டு.
7. இரையைப் பிடிக்க லாஸ்ஸோ செல்கள் அல்லது கொலோபிளாஸ்ட செல்களைப் பெற்றுள்ளது..
8. செல் உள் மற்றும் வெளி செரித்தல் காணப்படுகிறது.
9. இருபால் உயிரியான இவைகளில் பால் இனப்பெருக்கம் மட்டும் நடைபெறுகிறது.
10. மறைமுக வளர்ச்சி
11. லார்வா - சிடிப்பிட்
ஏ.கா: புளூரோபிராக்கியா.
6.
| C3 மற்றும் C4 தாவரங்கள் வேறுபாடுகள் | |
| C3 தாவரங்கள் | C4 தாவரங்கள் |
| CO2 நிலைநிறுத்தும் இலையிடைத் திசுக்களில் மட்டும் நடைபெறுகிறது. |
CO2 நிலைநிறுத்தும் காற்றை உறை மற்றும் இலையிடைத் திசு ஆகியவைகளில் நடைபெறுகிறது. |
| CO2-வை நிலைநிறுத்தும் பொருள் சுருக்ஷஞ மட்டும் | PEP இலையிடைடீ திசுவிலும் கற்றை உறையில் RUBP-யும் நிலைநிறுத்தும் பொருள்களாக உள்ளன. |
| உகந்த வெப்பநிலை 200 முதல் 250C | உகந்த வெப்பநிலை 30ஸ் முதல் 45ஸ்ஊ |
| CO2 நிலைநிறுத்தும் 50 ppm சேரியில் நடைபெறுகிறது. | CO2 நிலைநிறுத்தும் 10ppm செறிவிற்குக் குறைவான செறிவில் நடைபெறுகிறது. |
| அதிக ஒளிச்சுவாசதினால் குறைவான செயல்திறன் பெற்றது | குறைவான ஒளிச்சுவாசதினால் அதிகச் செயல்திறன் பெற்றது. |
| RUBP கார்பாக்சிலேஸ் நொதி CO3 நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது. | PEP கார்பாக்சிலேஸ்மற்றும் RUBP கார்பாக்சிலேஸ் நொதிகள் CO2 நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது. |
7.
நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களைப் பெறுகின்றன.
(அ) நெப்பந்தஸ் ( Pitcher plant);
குடுவை என்பது இலையின் மாற்றரு. இக்குடுவையினுள் செரிமான நொதிகளை உருவாக்கும் வளரிகள் உள்ளன. குடுவையின் வாய் விளிம்பில் தேன் சுரப்பிகள் காணப்படுவதோடு, குடுவையின் மூடி பகுதி பூச்சிகளை கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது. பூச்சிகள் குடுவையினுள் விழுந்தவுடன் புரத செரிமான நொதிகள் பூச்சிகளின் உடலை செரிக்க உதவுகிறது.
(ஆ) ட்ரஸீரா (Drosera -Sundew plant ):
இவை நீண்ட தடித்த உணர் நீட்சிகளை கரண்டி வடிவ இலைகளில் பெற்றவை. இவை ஒட்டக்கூடிய செரிமான திரவத்தை சுரந்து, பூச்சிகளை ஈர்க்கிறது. இது பார்ப்பதற்கு சூரிய பனித்துளி போன்று உள்ளது.
(இ) யூட்ரிகுலேரியா (Bladderwort ):
இது ஒரு நீரில் மூழ்கி காணப்படும் தாவரம். இவற்றின் இலைகள் பை போன்று மற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்க செய்கிறது.
(ஈ) டயோனிய (venus fly trap ):
இவற்றின் இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது. இரண்டு மடல்களுடையே இலைகளின் உள்ளே உணர் இழைகள் காணப்படும். பூச்சிகள் உணர் இழைகளை தொட்டவுடன் இலைகள் மூடி அவை சிறைப்படைகின்றன.
8.
(i) சல்லடைக் குழாய்கள் நீண்ட ககுழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகளாகும்.
(ii) இவை வரிசையாக அமைந்த சல்லடைக் குழாய் கூறுகளின் முனைகள் ஒன்றன் மீது ஒன்று அமைந்து உண்டாக்கபப்டுகிறது.
(iii) இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன. இது சல்லடை துளைத்தட்டு எனபப்டும்.
(iv) சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணபப்டுகின்றன. இவை எளிய அல்லது கூட்டு சல்லடைத்தட்டுகளை கொண்டுள்ளன. சல்லடைக் குழாய்களின் பணிகள் துணைச் செல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என நம்பப்படுகிறது.
(v) முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை. ஆனால் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம் காணபப்டுகிறது. இதில் சிறப்பு வகை புரதம். (பு.புரதம் ஃபுளோயம் புரதம்) எனபப்டும் ஸ்லைம் உடலங்கள் காணப்படுகின்றன.
(vi) முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் எனப்படும் பொருளால் (callose plug), அடைபட்டுள்ளது உணவுப்பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலமாகக் கடத்தப்படுகிறது.
(vii) சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ் பெர்ம்களில் மட்டும் காணபப்டுகிறது.
9.
ஓரிணைக் கதுப்புகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக்கு குழலைச் சுற்றிக் குரல்வளைக்கு கீழ் அமைந்துள்ளது.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்.
இதன் பக்கத் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை. (ஒருமையில் அசினஸ்)
அசினஸ் ஒவ்வொன்றும் சுரப்புதன்மையுடைய கனசதுர (அ) தட்டையான எபிதீலிய செல்களை சுவராகப் பெற்றுள்ளன.
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
10.
தனிச் சதைக்கனி(simple fleshy fruit) : ஒற்றைமலரின் ஒரு சூலகப்பையிலிருந்து உருவாகும் கனியாகும். இவற்றின் கனித்தோல் சதைப்பற்றுடன் சாறு நிறைந்தும் காணப்படுகிறது. கனித்தோல் வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலும் இது கீழ்க்கண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ. சதைக்கனி (Berry)
1. இக்கனி இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனியாகும்.
2. கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோல் மற்றும் உட்தோல் வேறுபாடற்றும் காணப்படும்.
3.இவைகள் சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டு: தக்காளி, பேரிச்சை, திராட்சை, கத்தரி.
ஆ) உள்ஒட்டுச் சதைக்கனி (Drupe):
1.இக்கனி ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகிறது.
2. இவை பொதுவாக சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
3. இக்கனித்தோலின் வெளித்தோல் இறுக்கமான தோல் போன்றும், உட்தோல் கல் போன்று கடினமாகி விதையைச் சூழ்ந்தும் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: மா, தென்னை.
11.
1. இப்புரதங்கள் செல் சவ்வினுள் கால்வாய் அல்லது குகை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகிறது.
2. இதன் வழியாக மூலக்கூறுகள் செல்லினுள் நுழைகின்றன.
3. இக்கால்வாய்கள் திறந்தவை அல்லது மூடியவை.
எடுத்துக்காட்டு:போரின், அக்வாபோரின்
12.
| வ.எண் | நோயின் பெயர் | நோய்க் காரணி | உயிரினம் |
|---|---|---|---|
| 1. | பெப்ரின் | நொசீமா பாம்பிசிஸ் | புரோட்சோவா |
| 2. | ஃபிளாச்செரி | ஸ்ட்ரெப்டோகாக்ஸ் ஸ்டெஃபைலோகாக்ஸ் | பாக்டீரியா |
| 3. | கிராசரி | பாலிஹெட்ரோசிஸ் | வைரஸ் |
| 4. | வெள்ளை மஸ்கார்டைன் | பூஞ்சைகள் | - |
13.
1. பறவைகளின் மிக முக்கியமான பண்பு இறகுகள் மற்றும் அதன்பறக்கும் திறன் போன்றவையாகும்.
2. நெருப்பு கோழி, கிவி மற்றும் பெங்குயின் போன்ற பறக்க இயலாத பறவைகள் தவிர மற்றவைகளில் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.
14.
பெருமூளையின் புறணியின் மேற்பரப்பு பல மேடு பள்ளங்களைக் கொண்ட மடிப்புகளாக காணப்படுகிறது. மேடுகள் கைரை (ஒருமை கைரஸ்) என்றும், கைரைகளுக்கிடையே உள்ள ஆழம் குறைந்த வரிப்பள்ளங்ள் சல்சி (ஒருமை -சல்கஸ்) என்றும், மற்றும் ஆழமான பள்ளங்கள் பிளவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கைரை, சல்சி ஆகியவை பெருமூளையின் புறணி பரப்பை அதிகரிக்கின்றன.
15.
1. புறநாசித்துளைகள்
2. நாசிக்குழி
3. தொண்டை
4. குரல்வளை
5. மூச்சுக்குழல்
6. மூச்சுக்கிளைக் குழல்கள்
7. மூச்சுக்கிளை நுண்குழல்கள்
8. நுரையீரல்கள் (நுண்ணுரைகளைக் கொண்டது)
16.
1. கரப்பான் பூச்சியின் உடற்குழிமுழுவதும் நிறமற்ற திரவத்தால் நிரப்பட்டுள்ளது.
2. இது இரத்தம் அல்லது ஹீமோலிஃம்ப் என அழைக்கப்படுகிறது
3. உள்ளுறுப்புகள் அனைத்தும் இத்திரவத்தில் மிதக்கின்றன .
4. இத்திரவத்தில் பிளாஸ்மா மற்றும் செல் விழுங்கும் தன்மையுடைய இரத்தச் செல்கள் காணப்படுகிறது.
5. உள்ளுறுப்புகள் தேவையான O2 ஐ இத்திரவத்திலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்கின்றன.
17.
1. ஒரு Rh- தாய், Rh+ கருவைச் சுமக்கும்போது திசுபொருந்தாநிலை ஏற்படுகிறது.
2. முதல் கருத்தரிப்பின் போது Rh+ ஆன்டிஜென்கள் தாய்சேய் இணைப்புத் திசுவால் பிரிக்கப்படுவதால் தாயின் இரத்தத்தோடு அவை தொடர்பு கொள்ளவாய்ப்பில்லை.
3. இருந்தபோதும், முதல் குழந்தை பிறப்பின்ப்போது கருவின் Rh+ ஆன்டிஜன்களில் சிறிதளவு தாயின் இரத்தத்தில் கலப்பதால், தாயின் உடலில் D எதிர்வினைப் பொருட்களின் உற்பத்தி தொடங்குகின்றது.
4. அடுத்தக் குழந்தைக்காக கருத்தரிக்கும் பொது Rh- தாயிடமிருந்த்து Rh+ எதிர்வினைப் பொருட்கள் கருவின் இரத்த ஓட்டத்தில் கலந்து கருவின் சிவப்பணுக்களை அளிக்கின்றன.
5. எனவே கருவானது இறக்க நேரிடுகிறது.
6. இரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்ற குறைபாடுகளால் அக்கரு பாதிக்கப்படுகிறது.
7. இதற்கு எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீடாலிஸ் என்று பெயர்.
18.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
19.
இரத்தத்தின் ஆஸ்மோலாரிட்டி மூலம் கொள்ளளவை சிறுநீரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.
உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு இடையே உள்ள தொடர்பு ஊடுகலப்பு நிலைகள் மூலம் நிர்வகிக்கிறது.
20.
i) பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறை.
ii) அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
iii) லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
iv) எனவே, லெகும் வகை தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்திகின்றன.
v) ஆகவே, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகிறார்கள்.
21.
(d)
பலாஸ்டா
22.
(c)
வேற்றிட மொட்டுகள்
23.
(a)
மூப்படைதலை தூண்டுகிறது
24.
(d)
இவை அனைத்தும்
25.
(a)
அகச்சட்டகம்
26.
(b)
நெஃப்ரோலித்யாஸிஸ்
27.
(b)
28.
(c)
விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது
29.
(b)
எபிடெர்மிஸ்
30.
(c)
அட்டாகஸ் ரிசினி
31.
(b)
திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்
32.
(c)
எஞ்சிய கொள்ளளவு
33.
(e)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
34.
(c)
குரோமோசோம்கள் பிரிவுறாது
35.
(b)
சைட்டோஸ்கெலிட்டன்
36.
மூலக்கூறுகளின் இயக்கம் தொடர்ச்சியாகவும் ஒழுங்கற்றும், அனைத்து திசைகளிலும் நடைபெறும்.
37.
ஹைபோஃபைசியல் போர்ட்டல் இரத்தக்குழல் மூலம் ஹைபோதலாமஸ் பின்பக்க பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.
38.
இரண்டு மியாசிஸ் பகுப்பிற்கும் இடையே குறுகிய காலத்தைக் கொண்ட நிலை பகுப்பிடைக்காலம் எனப்படும்.
39.
இது ஆசிரியரால் நேரிடையாகக் கண்டறியப்பட்டு பெரியரிடப்பட்ட தாவர வகைப்பாடு அல்லது வரைபட விளக்கமாகும்.
40.
நேரடியாக வளர்ச்சியை அளத்தல் - சாதாரண அளவுகோல் முறை
படிநிலை 1 : சாதாரண அளவுகோல் எடுத்துக்கொள்.
படிநிலை 2 : தாவரத்தின் தரைப்பகுதி தண்டு முதல் வளர்நுனி வரை அளவீடு செய்
படிநிலை 3 : குறிப்பிட்ட கால இடைவெளியில் தாவரத்தின் வேர் மற்றும் தண்டின் நீள் வளர்ச்சி , குறுக்கு வளர்ச்சி இண்டியன் இங்க் (ஜனேயை ஜமே )பயன்படுத்திக் குறித்துக் கொண்டு அளவீடு செய்.
41.
1. பாசிகளின் நிறமித்தாங்கிகளில் காணப்படும் புரதத்தாலான உடலத்திற்கு பைரினாய்டுகள் என்று பெயர்.
2. இவை தரச உற்பத்தியிலும், சேமிப்பிலும் உதவுகிறது.
42.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
43.
| வ.எண் | வெள்ளை அடிபோஸ்திசு | பழுப்பு அடிபோஸ்திசு |
|---|---|---|
| 1 | தோலுக்கு அடியில் காணப்படுகிறது. சிறுநீரகம், கண்கோளம், இதயம் ஆகிய உறுப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. | இதும் தோலுக்கு டியில் காணப்படுகிறது. எண்ணற்ற மைட்டோகாண்ட்ரியாயாக்களை கொண்டது. |
| 2 | ஊட்டச்சத்துகளைச் சேகரித்துவைக்கும் இடமாக உள்ளது. | இரத்த ஓட்டத்தையும் உடலையும் வெப்பப்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் உடம்பில் நடுக்கத்தை ஏற்படுத்தாமல் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. |
| 3 | இதன் மறுபெயர் வெள்ளை கொழுப்பு | இதன் மறுபெயர் பழுப்பு கொழுப்பு |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards