11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
First Volume Important Question +1
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வேறுபடுத்து:பூரித மற்றும் அபூரித கொழுப்பு அமிலங்கள்.
2.
கயாஸ்மாக்கள் என்பது யாது?
3.
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் பயனகள் யாவை?
4.
உரு பேரினம் என்றால் என்ன?
5.
மராஸ்மஸ் என்பது யாது? தன அறிகுறிகள் யாவை?
6.
பாக்டீரியத்தின் மைல்கற்களைக் குறிப்பிடு.
7.
இலையின் முதன்மை பணிகள் யாவை?
8.
உலர் கனிகள் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
9.
சைசோசீலோமேட்டுகள் என்பவை யாவை?
10.
ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும்.
11.
கரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலையை எழுது.
12.
இனப்பரிணாம சிற்றினம் என்பது யாது?
13.
இதய ஒலிகள் ஏற்படக் காரணம் யாது?
14.
இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?
15.
எளிய எபிதீலியத்திசு வகைகள் யாவை?
16.
மூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.
17.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
18.
ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக
19.
20.
ஆட்டோசோம்கள் என்றால் என்ன?
21.
மியாசிஸ் II, மைட்டாடிக் மியாசிஸ் என அழைக்கப்படுகிறது?
22.
கோல்கை உறுப்பு எங்கிருந்து உருவாகிறது?
23.
நியூக்ளியோடைடில் காணப்படும் பொருட்கள் யாவை?
24.
நொதிகளுக்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது? எ.கா தருக.
25.
பித்தநீரின் பயன்கள் யாவை?
26.
ஜிம்னோஸ்பெர்ம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள் யாவை?
27.
இரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.
28.
அரைநாணிகளின் உடல் பகுதிகள் யாவை?
29.
லைக்கென்களின் உடலத்தில் உள்ள பூஞ்சைகளின் அடிப்படையில் வகைப்படுத்து.
30.
மேல்கீழ் வேறுபாடு இலைகள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
31.
கரு சூல் புரதமற்ற அல்லது கருவூண் அற்ற விதை என்பது யாது?
32.
எம்ஃபைசீமா என்பது யாது?
33.
ஆஸ்துமா நோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எவை?
34.
உயிரிய முறைமை என்பது யாது?
35.
மீசோசோம்கள் என்பது யாது?
36.
தாவரவியல் தோட்டங்கள் என்பது யாது?
37.
அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு வகைப்படுத்தினார்?
38.
'நிக்டிடேட்டிவ் சவ்வு' என்பது யாது?
39.
தவளையின் வகைப்பாட்டு நிலையை எழுதுக.
40.
கரோனரி திராம்பஸ் என்பது யாது?
41.
சராசரி தமனி அழுத்தம் என்பது யாது?
42.
கல்லட் என்றால் என்ன?
43.
ரெய்மர் 1954 முன்மொழிந்த டெரிடோஃபைட்டாவின் ஐந்து துணை பிரிவுகள் யாவை?
44.
வேற்றிட வேர்கள் தாவரங்கள் எங்கிருந்து தோன்றுகிறது?
45.
குளும்கள் என்பது யாது>
46.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.
47.
திசுத்திரவம் எனப்படுவது யாது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
48.
செரிமான மண்டலத்தில் காணப்படும் தூண்வடிவ எபிதீலியத்தின் மாறுபாடுகள் யாவை?
49.
வகைப்பாட்டியலின் அறிவியல் படிநிலைகளாக அமைந்துள்ளவை எவை?
50.
பல்லுயிர்தன்மை என்றால் என்ன?
51.
கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?
52.
இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.
53.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
54.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து
55.
மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.
1.
| வ.எண் | பூரித கொழுப்பு அமிலங்கள் | அபூரித கொழுப்பு அமிலங்கள் |
|---|---|---|
| 1. | இதில் உள்ள ஹைட்ரோ கார்பன் சங்கிலியின் அனைத்து கார்பன்களுக்கிடையே ஒற்றைச் சகப்பிணைப்பு காணப்படும். | இதில் உள்ள ஹைட்ரோ கார்பன் சங்கிலியின் அனைத்து கார்பன்களுக்கிடையே இரட்டைப் பிணைப்பு மட்டுமாவது காணப்படும். |
| 2. | எ.கா: பால்மிடிக் அமிலம் ஸ்டீரிக் அமிலம் | எ.கா.ஒலியிக் அமிலம் லிலோனிக் அமிலம். |
2.
1.மியாஸ் I, புரோஃபேஸ் I, டிப்லோட்டீன் துணை நிலையில். குறுக்கெதிர் மாற்றம் நடந்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிணைந்த நிலையிலேயே உள்ளன.
2.இவ்விலக்கில் 'X' வடிவ அமைப்பு காணப்படுகிறது.
3. இவ்விலக்குகள் கயாஸ்மாக்கள் எனப்படும்.
3.
1. பொருளை நன்கு வேறுபடுத்திப் பார்த்தறிய முடிகிறது.
2. உயிருள்ள செல்கள்,திசுக்களை படித்தறியவும் வளர்ப்பு ஊடகத்தில் உள்வளர்ப்பின் மூலம் திசுவளர்ப்பு செய்து , செல்வகுப்பின் நிலைகளை (மைட்டாசிஸ் பகுப்பின் நிலைகள் ) படித்தறிய உதவுகிறது.
4.
1.உரு பேரினம் என்ற சொல் தொல்லுயிர் எச்சத்தாவரங்களுக்கு பெயர் சூட்டப் பயன்படுகிறது.
2. ஏனெனில் தொல்லுயிர் எச்சங்கள் முழுத்தாவரங்களாகக் கிடைப்பதில்லை.
3.பதிலாக அழிந்து போன தாவரப் பகுதிகள், உறுப்புகள் சிறுசிறு துண்டுகளாக பெறப்படுகின்றன.
5.
1. மராஸ்மாஸ் தீவிரமான புரதக் குறைபாடாகும்.
2. உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதப் பற்றாக்குறைவால் தோன்றுகிறது.
3. குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
1.வயிற்றுப் போக்கு
2.உடல் மெலிதல்
3.பலவீனம்
4.தசைகளில் கொழுப்பின்மையால் மடிப்புகளுடன் கூடிய தோல்.
6.
1.1829-C.G. எஹ்ரன்பெர்க்,பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
2.1884-கிறிஸ்டியன் கிராம், கிராம் சாயமேற்றும் முறையை அறிமுகப்படுத்தினார்.
3.1923-டேவிட் H.பெர்ஜி "பெர்ஜி கையேட்டின் " முதல் பாதிப்பை அறிமுகப்படுத்தினார்.
4.1828-பிரட்ரிக் கிரிஃபித், [பாக்டீரியத்தின் மரபணு மாற்றத்தைக் கண்டறிந்தார்.
5. 1952-ஜோஸ்வா லெடர்பர்க், பிளாஸ்மிட்டைக் கண்டறிந்தார்.
7.
1. ஒளிச்சேர்க்கை
2. நீராவிப்போக்கு
3. வாயு பரிமாற்றம்
4. மொட்டுகளைப் பாதுகாத்தல்
5. நீரையும், நீரில் கரைந்துள்ள பொருட்களையும் கடத்துதல்.
8.
1. இக்கனி ஒரு சூலகத்திலிருந்து உருவாகிறது.
2. ஏதன் கனித்தோல் உலர்ந்து காணப்படுகிறது.
3. வெளித்தோல், நடுத்தொல், உட்தோல் என வேறுபாடற்று காணப்படும்.
(i) உலர் வெடிகனிகள்
(ii) உலர் வெடியாக் கனிகள்
(iii) பிளவுறு கனிகள்
9.
நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்ற உடற்குழியை உடைய விலங்குகள் சைசோசீலோமேட்டுகள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: வாழைத்தசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள். முதுகுநாணிகள்
10.

11.
தொகுதி : கணுக்காலிகள்
வகுப்பு : பூச்சிகள்
வரிசை : ஆர்தரப்டீரா
பேரினம் : பெரிப்பிளனெட்டா
சிற்றினம் : அமெரிக்கான
12.
1. இந்தக் கோட்பாடு மெக்லிட்ஜ் , சிம்சன் , வைலி ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
2. இனபரிணாம வழிச் சிற்றினம் என்பது ஒரு பரிணாமச் சிற்றினம்
3. இது மூதாதையரின் வழி தோன்றிய ஒரு தனி இனத் தோன்றலாகும்.
13.
1. ஒவ்வொரு இதயச் சுழற்சியின் போதும் வால்வுகள் இதயக்கத்தால் உண்டாகும் இருவகை இதய ஒலிகளை ஸ்டெத்தாஸ்கோப்பின் உதவியுடன் கேட்கலாம்.
2. வென்டிரிக்கிள்கள் சுருங்கும் பொது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்வதால் 'லப்' எனும் ஒலி தோன்றுகிறது.
3. வென்ட்ரிகுலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் 'டப்' எனும் இரண்டாவது ஒலி தோன்றுகிறது.
14.
1. உயிரினங்களை அடையாளம் கண்டு, விளக்கி, பெயரிட்டு, வரிசைப்படுத்தி பாதுகாத்து ஆவணப்படுத்துவது.
2. சிற்றினங்களின் பரிணாம வரலாறு, சூழ்நிலை தொடர்பு, சூழ்நிலை தகவமைப்புகள் மற்றும் சிற்றினங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை ஆய்வு செய்வது.
15.
1. தட்டை வடிவ செல்கள்
2. கனசதுர வடிவ செல்கள்
3. தூண் வடிவ செல்கள்
4. குறு இழை கொண்ட செல்கள்
5. பொய் அடுக்கு செல்கள்
16.
| வ.எண் | திறந்த வகை இரத்த காற்றோட்டம் மண்டலம் | மூடிய வகை இரத்த காற்றோட்ட மண்டலம் |
|---|---|---|
| 1. | இவ்வகையில் இரத்தநாளங்கள் ரத்தத்தை எடுத்துச் செல்லாது | இரத்தம் பல்வேறு அளவுகளையுடைய ரத்த நாளங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. (தமனி, சிரை, தந்துகிகள்) |
| 2. | ஆதலால் இரத்தம் திசு இடைவெளிகளில் நிரம்பிக் காணப்படும். | அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. |
| 3. | எ.கா. கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் வால் நாணிகள் | எ.கா. வளைதசைப் புழுக்கள் தலை நாணிகள், முதுகு நாணிகள். |
17.
1.நிலைத்த மரபுத்தன்மை: சேய் செல்களின் மரபுப்பொருளானது தாய் செல்லை ஒத்துக் காணப்படுகிறது.
2. வளர்ச்சி: பல செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது. இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
3. திசு சிதைவதைச் சீர் செய்தல்: திசு சிதைவடையும் போது புதிய உருவொத்த செல்கள் மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிச் சிதைவு சரி செய்யப்படுகிறது.
4. பாலிலா இனப்பெருக்கம்: தாய் செல்லை ஒத்த வழித்தோன்றல்கள், பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் தோன்ற இப்பகுப்பு உதவுகிறது.
எடுத்துக்காட்டு: ஈஸ்ட் மற்றும் அமீபா.
5. பூக்கும் தாவரங்களில் குமிழ்த்தண்டு, தண்டடிக் கிழங்கு,கிழங்குகள், மட்டநிலத் தண்டுகள், ஓடுகொடிகள் ஆகிய அனைத்தும் மைட்டாடிக் பகுப்பினால் தோன்றியவை. இவை தாய்த் தாவரத்தை விட்டு விலகிப் புதிய தாவரங்கள் தோன்ற உதவுகின்றன. எனவே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித் தோன்றல்களை மைட்டாசிஸ் பகுப்பின் மூலமே உருவாக்க இயலும். மரபு பொறியியல், உயிர் தொழில்நுட்பவியலில் கையாளப்படும் திசு வளர்ப்பில் இப்பகுப்பே முக்கியப் பங்காற்றுகிறது.
6. இழப்பு மீட்டல்: நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீள் உருவாதல்.
18.
1. வேர், தண்டு, இலைகளைக் கொண்டு நன்கு வரையறுக்கப்பட்ட தாவர உடல் காணப்படுதல்.
2. இரு விதையிலைத் தாவரங்களில் உள்ளது போலவே ஜிம்னோஸ்பெர்ம்களிலும் கேம்பியத்தைக் கொண்டிருத்தல்.
3. தண்டில் யூஸ்டீல் காணப்படுதல்.
19.
20.
1. ஒரு உயிரியின் உடல பண்பை கட்டுப்படுத்தும் எல்லா உடல் செல்களில் காணப்படும் குரோமோசோம் ஆட்டோசோம் எனப்படும்.
2. இரட்டை மைய செல்களில் , 44 ஆட்டோசோம்கள் காணப்படுகின்றன(மனிதர்கள்).
21.
மியாசிஸ் II, மைட்டாசிஸ் பகுப்பைப் போல் நிகழ்வதனால் மைட்டாடிக் மியாசிஸ் என்று பெயர்.
22.
1 சொரசொரப்பான எண்டோபிளாச வலையின் வளிம்பிலிருந்து சிறு பைகள் போன்ற அமைப்புகள் , வெசிக்கிள்களாக மாறுகின்றன.
2. இந்த வெசிக்கிள்கள் யாவும் இணைந்து கோல்கை உறுப்பைத் தோற்றுவிக்கிறது.
23.
1. நைட்ரஜன்காரம் (பியூரின் அல்லது பிரமிடின்)
2. பெண்டோஸ் சர்க்கரை
3. பாஸ்ஃபேட்
24.
பல நொதிகளின் பெயர்கள் அவை ஊக்குவிக்கும் தளப்பொருளின் பெயரோடு -யேஸ் என்று பின்னொட்டு சேர்க்கப்பட்டு பெயரிடப்படுகின்றன.
எ.கா:
1.லாக்டேஸ் என்ற நொதி லாக்டேஸ் என்ற சர்க்கரையை நீராற் பகுக்கிறது.
2. அமைலேஸ் அமைலோஸை நீராற் பகுக்கிறது.
25.
1. பித்தநீர் உணவிலுள்ள கொழுப்பைப் பால்மமடையச் செய்கின்றது.
2. பித்த உப்புகள் கொழுப்புத் துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலைகளாக மாற்றுகின்றன.
3. லிப்பேஸ் நொதியைத் தூண்டிக் கொழுப்பைச் செரிக்கச் செய்கிறது.
26.
1.சைக்கடாப்சிடா
2.கோணிஃபெராப்சிடா
3.நீட்டாப்சிடா
27.
| வ.எண் | செல்களின் பெயர் | சுரப்புகள் |
|---|---|---|
| 1. | முதன்மை செல்கள் (அ) பெப்ட்டிக் செல்கள் (அ) சைமோஜன்செல்கள் | இரைப்பை நொதிகள் |
| 2. | கோப்பை வடிவ செல்கள் | கோழை |
| 3. | பெரைட்டல் செல்கள் | HCL மற்றும் காசிலின் உள்ளமைக் காரணி (வைட்டமின் B12 உட்கிரகித்தலுக்குத் தேவை) |
28.
1. புரோபோஸிஸ்
2. கழுத்துப் பகுதி (குட்டையான பட்டை)
3. நீண்ட உடல் பகுதி
29.
1.ஆஸ்கோலைக்கென் - ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை.
2.பசிடியோலைக்கென் - பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை
30.
இலையானது தட்டையாகவும், இலைபரப்பு கிடைமட்டமாகவும் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு என வேறுபாடுகளுடன் காணப்படும் இலைகள் மேல்கீழ் வேறுபாடு இலைகள் எனபப்டும். எ.கா: இருவித்திலைத் தாவரங்கள்.
31.
1. விதைகளின் விதையிலைகளில் உணவு சேமிக்கப்பட்டு தடிப்புற்று, சதைப்பற்றுமிக்கவையாக காணப்படுகிறது.
2. இதில் வளரும் கருவிற்கு தேவையான உணவுப்பொருள் உள்ளதால் இதனைப் பயன்படுத்தி வளர்கின்றன. அதனால் முதிர்ந்த விதைகளில் கருவூண் இருப்பதில்லை.
எ.கா. பட்டாணி, நிலக்கடலை
32.
1. எம்ஃபைசீமா என்பது நாள்பட்ட மூச்சுவிடத் திணறுகின்ற நிலையைச் குறிக்கிறது. இதன் மறுபெயர் நுரையீரல் அடைப்பு நோய் ஆகும்.
2. காற்று நுண்ணறைகளின் மெல்லிய சுவர் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வாயு பரிமாற்றத்திற்கான சுவாசப்பரப்பு குறைவதன் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.
3. அதாவது காற்று நுண்ணறைகள் அகலப்படுதலே எஃபைசீமா எனப்படுகிறது.
4. இந்நோய்க்கான முக்கிய காரணம் புகைப்பிடித்தலாகும். ஏனெனில் இப்பழக்கம், காற்று நுண்ணறைகளின் சுவரின் சுவாசப்பரப்பைக் குறைத்துவிடும்.
33.
1. தூசு
2. மருந்து பொருட்கள்
3. மகரந்தத்துகள்கள்
4. சிலவகை உணவுப்பொருட்களான மீன்கள், இறால்கள்
5. சில பழங்கள்
34.
பரிசோதனை சுற்றுசுழல் மற்றும் செல்லியல் வகைப்பாடு மூலம் உயிரின வங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றிற்கிடையேயான இனபரிணாம நிலை உயிரிய முறைமை எனப்படும்.
35.
பாக்டீரியாவில் பிளாஸ்மா சவ்வில் குறிப்பிட்ட சில இடங்களில் குமிழ்கள்,சிறுகுழல்கள்,மென் அடுக்குகள் போன்ற வடிவங்களில் செல்லினுள் உள்நோக்கி சில மடிப்புகள் காணப்படுகின்றன.இதற்கு மீசோசோம்கள் என்று பெயர்.
36.
தாவரங்கள் பல நிலைகளில் பல வகைகளில் அமைந்த இடத்தை குறிப்பது தாவரவியல் தோட்டம் ஆகும்.
37.
1.சிவப்பு நிற இரத்த உயிரிகள் - எனைமா என்றும்
2. சிவப்பு நிறமற்ற உயிரிகள் - அனைமா என்றும் வகைப்படுத்தினார்.
38.
1. இது தவளையின் மூன்றாவது இமையாகும்.
2. இது ஒளி ஊடுருவக்கூடியது.
3. நீரில் இருக்கும்போது கண்களை பாதுகாக்குகிறது
39.
தொகுதி : முதுகு நாணிகள்
வகுப்பு : இருவாழ்விகள்
பேரினம் : ரானா
சிற்றினம் : ஹெக்ஸாடேக்டைலா (இந்திய பச்சைத்தவளை)
40.
1. அதிக கொழுப்புப் பொருட்களால் ஆன அதிரோமோ தமனிகளின் உட்புறச் சுவரில் பற்றுப் படிவுகள் தமனிகளின் மீள்தன்மையைக் குறைத்து இரத்த பாய்வைக் குறைக்கிறது.
2. இப்பற்றுப் படிவுகள் பெரிதாகி இதய இரத்தக் குழாய்களுக்குள் இரத்த உறைவைக் கட்டிகளை உருவாக்கும்.
3. இதற்கு கரோனரி திராம்பஸ் என்று பெயர்.
41.
இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு மற்றும் அச்சமயத்தில் நுண் தமனிகளின் சுவரில் தோன்றும் எதிர்ப்பு ஆகியவற்றினால் ஏற்படுவது சராசரி தமனி அழுத்தம் எனப்படும்.
42.
1. தொண்டையின் பின்பகுதியில் காணப்படும் அகன்ற உணவுக் குழல் திறப்பு கல்லட் எனப்படும்.
2. இதன் வழியே உணவு உணவுக்குழலுக்குள் உட்செலுத்தப்படுகிறது.
43.
1. சைலோஃபைட்டாப்சிடா
2. சைலோடாப்சிடா
3.லைகாப்சிடா
4.ஸ்பீனாப்சிடா
5. டீராப்சிடா
44.
1. தண்டின் அடிப்பகுதி
2. கணுக்கள்
3. கணுவிடைப் பகுதிகள்
எ.கா: ஃபைகஸ் பெங்காலன்சிஸ் -ஆலமரம்
பைப்பர் நைக்ரம் -மிளகு
45.
குளும்கள் என்பது மஞ்சரி அடிச் செதில்கள் ஆகும்.
46.
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
|---|---|
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவி காணப்படும் | வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்குகள் காணப்படும். |
47.
- எரியோலார் இணைப்புத் திசு
- எரியோலார் இணைப்புத் திசு எபிதீலியத்திற்கு தாங்கு சட்டமாகவும் சூழ்ந்துள்ள உடல் திசுக்களுக்கு நீர், உப்பு போன்றவற்றை தேக்கி வைக்கும் இடமாகவும் அமைவதால் திசுத்திரவம் என அழைக்கப்படுகிறது.
48.
1. செரிமான மண்டலத்தில் முகவுரையில் உள்ள செல்கள், உறிஞ்சும் தன்மையுடைய செல்களின் உச்சிப்பரப்பில் மைக்ரோவில்லை என்னும் நீட்சிகளாகவும்.
2. பாதுகாப்பிற்கான உயவுத் தன்மையுடைய கோழைப் பொருளைச் சுரக்கும் கோப்பை வடிவாகி செல்களாகவும் மாறுபாடு அடைந்துள்ளது
49.
1. பண்பாக்கம் 2. அடையாளம் காணல் 3. பெயரிடுதல், 4. வகைப்பாடு செய்தல்
50.
பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் வாழ்வது பல்லுயிர்தன்மை எனப்படும்.
51.
1. காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய், டைபாய்டு நுண்ணுயிரிகளை எடுத்துச் செல்கிறது.
2. ஆஸ்துமா நோய் வருவதற்கு இப்பூச்சிகள் காரணமாக இருப்பதால் இவைகளை நாம் தீங்குயிரி என அழைக்கின்றோம்.
52.
கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
53.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
54.
லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல். | வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல். |
55.
| வ.எண் | மிட்ரல் வால்வு | அரைச்சந்திர வால்வு |
| 1 | இடது அரிக்கிகளுக்கு இடது வெண்றிக்கிள்களும் இடையில் காணப்படுகிறது. | பெருந்தமனி துவக்கம், நுரையீரல் தமனியின் துவக்கம் மற்றும் சிரைகளில் காணப்படுகிறது. |
| 2 | இதன் மறுபெயர் ஈரிதழ் வால்வு | - |
| 3 | வெண்ட்ரிக்கிள் சுருங்கும் போது வெண்ட்ரிக்கிளில் இருந்து ஆரிக்கிளினுள் இரத்தம் செல்வதை தடுக்கிறது. | வெண்ட்ரிக்கிள் விரிவடையும் போது இரத்தம் பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமையிலிருந்து பின்னோக்கி செல்வதை தடுக்கிறது |
| 4 | கார்டோடென்டினே என்ற அமைப்பு தாங்குகிறது. | காணப்படவில்லை |
| 5 | வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது இவ்வால்வுகள் மூடுவதால் 'லப்' என்ற ஒலி ஏற்படுகிறது. | வெண்ட்ரிக்கிள்கள் விரிவடையும் போது இவ்வால்வுகள் மூடுவதால் 'டப்' என்ற ஒலி ஏற்படுகிறது. |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards