11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
தாவரவியல் - செல் சுழற்சி
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பிராக்மோபிளாங்களினால் உருவாக்கப்படும் செல்தட்டு தோன்றும் நிலை.
இடைக்கால நிலை
சைட்டோகைனசிஸ்
கார்யோகைனசிஸ்
டீலோஃபேஸ்
2.
குரோமோசோமில் அதன் மரபுப் பொருள் இரட்டிப்படைவது
செல்பகுப்பின் போது
இரு உட்கரு பகுப்புகளுக்கிடையே
செல்பகுப்பிற்கு முன்பு
இரு சைட்டோபிளாச பகுப்புகளுக்கிடையே
3.
நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு______.
கீழ்நிலை விலங்குகள்
உயர்நிலை விலங்குகள்
உயர்நிலைத் தாவரங்கள்
அனைத்து உயிருள்ள உயிரினங்கள்
4.
குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.
டிப்ளோட்டீன்
பாக்கிடீன்
லெப்டோட்டீன்
சைக்கோட்டீன்
5.
சென்ட்ரோமியர் இதற்கு தேவை.
படியெடுத்தல்
குறுக்கே கலத்தல்
சைட்டோபிளாசம் பிளவுறுதல்
குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.
6.
செல் சுழற்சியின் சரியான வரிசை ______.
S - M - G1 - G2
S - G1 - G2 - M
G1 - S - G2 - M
M - G - G2 - S
7.
நட்சத்திர இழையற்ற பகுப்பு என்றால் என்ன?
8.
குரோமாட்டின் என்பது யாது?
9.
உட்கருவின் தனித்துவம் யாது?
10.
G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக
11.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
12.
வேறுபடுத்து: மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ்.
13.
இடைக்கால நிலை என்பது யாது? அதன் துணை நிலைகளை படத்துடன் விளக்கு.
14.
தாவரசெல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் - வேறுபடுத்துக.
15.
மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து வேறுபடுத்துக.
16.
மியாசிஸ் II, மைட்டாடிக் மியாசிஸ் என அழைக்கப்படுகிறது?
17.
குறுக்கெதிர் மாற்றம் என்றால் என்ன?
18.
G1 நிலையில் உருவாக்கப்படுபவை எவை?
19.
செல் பகுப்பினைச் செயல்படச் செய்யும் செல்லினுள் காணப்படும் உயிர்வேதிப் பொருட்கள் யாவை?
20.
வரையறு: செல் சுழற்சி
21.
இரட்டை மடிய நிலை என்பது யாது?
1.
(a)
இடைக்கால நிலை
2.
(b)
இரு உட்கரு பகுப்புகளுக்கிடையே
3.
(c)
உயர்நிலைத் தாவரங்கள்
4.
(b)
பாக்கிடீன்
5.
(d)
குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.
6.
(c)
G1 - S - G2 - M
7.
1.தாவர செலகில் இவ்வகை பகுப்பு நடைபெறுகிறது.
2.தாவர செல்களில், சென்ட்ரியோல்கள் இல்லாமையால் நட்சத்திர இழைகள் செல் பகுப்பின் போது உருவாதில்லை.
3.கதிர்கோல் இழைகள் மட்டும் மைட்டாசிஸ்சிஸ் உருவாகிறது.
8.
1. செல்பகுப்படையாத நிலையில், குரோமோசோம்கள் மிக நீண்ட மெல்லிய சுருள்களற்ற இழைகளாக காணப்படும்.
2. இந்த நிலையில் செல்களை சாயமேற்றும் போது நுண்மணிகளைப் பொல் உட்கருவானது தோற்றமளிக்கிறது.
3. இந்த நுண்மணிகளுக்கு குரோமாட்டின் என்று பெயர்.
9.
1.செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
2. செல்பகுப்படையும் போது மரபுச் செய்திகள் நகலாக்கம் செய்யபப்ட்டு ஒரு செல்லிலிருந்து மறறொரு செல்லிற்கு எடுத்துச் செல்லபப்டுகிறது.
3.பாலினப் பெருக்கத்தின் போது கேமீட்டுகளின் இணைவு நிகழ்ந்து புதிய தோன்றல்களுக்கு மரபுப் பண்புகளை கடத்துகிறது.
10.
1. சில செல்கள் G1 நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்குச் செல்கின்றன. இந்நிலைக்கு G0 நிலை என்று பெயர்.
2. G0 நிலையில் செல்கள் நீண்ட காலம் செல் பெருக்கமடையாமல் இருந்து வளர்சிதை மாற்றத்தை மட்டுமே செய்கின்றன. ஆனால் பெருக்கம் அடைவதில்லை.
3. G0 நிலையில் உள்ள செல்கள் RNA மற்றும் புரதச்சேர்க்கை செயல்களைக் குறைந்த அளவில் செய்வதுடன் வளர்ச்சியற்ற நிலையில் உள்ளன.
4. G0 நிலை நிலையற்றது. முதிர்ந்த நியூரான், எலும்புத் தசை ஆகியவற்றின் செல்கள் G0 நிலையில் நிலைத்துவிடுகின்றன. உகந்த செல் சாரா சமிக்ஞை மற்றும் வளர்ச்சிக் காரணிகள் கிடைத்தால் மட்டும் G0 நிலைக்குப் பெரும்பாலான விலங்கினச் செல்கள் செல்ல இயலும்.
5. இல்லையெனில் G0 நிலையிலேயே நின்று விடும். G0 செல்களை வளர்வடக்க நிலையில் (Dormant) உள்ள செல்களாகக் கருதப்படுவதில்லை.
11.
1.நிலைத்த மரபுத்தன்மை: சேய் செல்களின் மரபுப்பொருளானது தாய் செல்லை ஒத்துக் காணப்படுகிறது.
2. வளர்ச்சி: பல செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது. இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
3. திசு சிதைவதைச் சீர் செய்தல்: திசு சிதைவடையும் போது புதிய உருவொத்த செல்கள் மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிச் சிதைவு சரி செய்யப்படுகிறது.
4. பாலிலா இனப்பெருக்கம்: தாய் செல்லை ஒத்த வழித்தோன்றல்கள், பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் தோன்ற இப்பகுப்பு உதவுகிறது.
எடுத்துக்காட்டு: ஈஸ்ட் மற்றும் அமீபா.
5. பூக்கும் தாவரங்களில் குமிழ்த்தண்டு, தண்டடிக் கிழங்கு,கிழங்குகள், மட்டநிலத் தண்டுகள், ஓடுகொடிகள் ஆகிய அனைத்தும் மைட்டாடிக் பகுப்பினால் தோன்றியவை. இவை தாய்த் தாவரத்தை விட்டு விலகிப் புதிய தாவரங்கள் தோன்ற உதவுகின்றன. எனவே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித் தோன்றல்களை மைட்டாசிஸ் பகுப்பின் மூலமே உருவாக்க இயலும். மரபு பொறியியல், உயிர் தொழில்நுட்பவியலில் கையாளப்படும் திசு வளர்ப்பில் இப்பகுப்பே முக்கியப் பங்காற்றுகிறது.
6. இழப்பு மீட்டல்: நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீள் உருவாதல்.
12.
தாவர செல் பகுப்பிற்கும், விலங்கு செல் பகுப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு.
| மைட்டாசிஸ் | மியாசிஸ் |
| ஒரு முறை பகுப்படைகிறது | இரு முறை பகுப்படைகிறது |
| குரோமோசோம்கள் எண்ணிக்கை தாய் செல்லில் இருப்பதை போன்றே இரு சேய் செல்களிலும் இருக்கின்றது. | குரோமோசோம்களின் எண்ணிக்கை நான்கு சேய் செல்களில் பாதி அளவாகக் குறைக்கப்படுகிறது |
| மெட்டாஃபேஸ் தட்டில் ஒத்திசைவு குரோமோசோம்கள் மையப்பகுதியில் தனித்தனியாக மையப்பகுதியில் | மெட்டாஃபேஸ் தட்டில் ஒத்திசைவு குரோமோசோம்கள் இணையாக மையப்பகுதியில் மையப்பகுதியில் |
| ஒத்திசைவு குரோமோசோம்கள் இணை சேர்வதில்லை | ஒத்திசைவு குரோமோசோம்கள் இணை சேர்ந்து பைவாலண்டுகள் தோன்றுகினறன. |
| கையாஸ்மாக்கள் தோன்றுவதில்லை, எனவே குறுக்கெதிர் மாற்றம் நடைபெறுவதில்லை. | கையாஸ்மாக்கள் தோன்றுவதால் குறுக்கெதிர் மாற்றம் நிகழ்கிறது. |
| சேய் செல்கள் தாய் செல்லைப் போலவே மரபுப் பொருளைப் பெற்றிருக்கிறது. | சேய் செல்கள் தாய் செல்களிலிருந்து மாறுபட்ட மரபுப் பொருளைப் பெற்றவை. |
| இரண்டு சேய் செல்கள் உருவாகின்றது. | நான்கு சேய் செல்கள் உருவாகின்றது. |
13.
இடைக்கால நிலை செல் பகுப்பில் அதிகக் காலம் கொண்ட நிலை ஆகும். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு உட்கரு ஓய்வு நிலையில் இருப்பது போன்று தோன்றும். ஆனால் இது உண்மையல்ல. இழை போன்ற அமைப்பிலிருந்து குரோமோசோம்கள் இந்நிலையில் விரவிய அமைப்பாக உள்ளன. பெரும்பாலான நேரங்களில் இந்நிலையில் போது இவை புரத உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
G1 நிலை:G1 நிலையில் இருக்கும் செல்களில் DNA- வின் அளவானது 2C ஆக உள்ளது. இந்நிலையில் செல்லானது வளர்சிதை மாற்றச் செயலில் ஈடுபட்டு வளர்ச்சிக்குத் தேவையான புரதம், லிப்பிடுகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் செல் நுண்ணுறுப்புகளான மைட்டோ கான்டிரியங்கள், எண்டோபிளாச வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.
பல்வேறு தடைப் புள்ளிகள் செல் சுழற்சியைக் கட்டுப்படுத்துகின்றன. G1 படிநிலையில் முடிவில் ஏற்படும் தட்டைப்புள்ளி "வரையறு புள்ளி" (Restriction point) என்று அழைக்கப்படுகிறது. ஒரு செல்லானது செல் சுழற்சியில் தொடர்ந்து செயல்படுவதை அல்லது G0 என்ற அமைதி நிலைக்குச் செல்வதை மற்றும் குறிப்பிட்ட செல்லாக மாற்றம் அடைவதாகி அல்லது பகுபடாமல் இறந்து விடுவதைத் தீர்மானிப்பதாக இந்தத் தட்டைப்புள்ளி திகழ்கிறது. G1 நிலையில் செல்கள் பகுபடாமல் தடைபடுவதற்குக் காரணம்:
1. ஊட்டம் இல்லாமை
2. வளர்ச்சி ஊக்கிக்காரணிகள் இல்லாமை அல்லது செல்களின் செறிவு சார்ந்த தடை.
3. வளர்ச்சிதை மாற்றம் அடைந்த G0 நிலைக்குச் செல்கின்றன.
செல்லினுள் காணப்படும் உயிர்வேதிப் பொருட்கள் செல் பகுப்பினைச் செயல்படச் செய்கிறது. கைனேசஸ் மற்றும் சைக்ளின்கள் என்ற புரதங்கள் ஜீன்களையும் அவற்றின் புரதங்களையும் செயல்படச் செய்து செல் பகுப்பினைச் செயல்படுத்துகிறது. சைக்ளின்கள் G1 நிலையில் முக்கியத் தட்டைப்புள்ளியாக செயல்பட்டு ஒரு செல்லானது பகுப்படைகிறதா அல்லது பகுப்படையாமல் இருக்கின்றதா என்பதை தீர்மானிக்கிறது.
S நிலை:
DNA உற்பத்தியில் இருப்பதால், 2C க்கும் 4C க்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளதாக இது கருதப்படுகிறது. DNA இரட்டிப்பால் செல்லின் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்வதுடன் ஹிஸ்டோன் என்ற புரத மூலக்கூறுகள் உருவாக்கப்பட்டு DNA வுடன் இணைக்கப்படுகின்றன. சைட்டோபிளாசத்தில் சென்ட்ரியோல்கள் இரட்டிப்படைகின்றன. இறுதியில் DNA அளவானது 2C யிலிருந்து 4C ஆக பெருக்கமடைகிறது.
G2 நிலை:
புரதச் சேர்க்கை மற்றும் செல் நுண்ணுறுப்புகள் உருவாதல் மைட்டோகாண்டிரியம், பசுங்கணிகம் பகுப்படைதல் கதிர்கோல் இழைகள் உருவாதல் ஆகியவை இந்நிலையில் சிறப்புப்பண்புகளாகும். இதைத் தொடர்ந்து உட்கரு பகுப்பு, சைட்டோபிளாச பகுப்பு நடைபெறுகிறது. DNA அளவு 4C ஆகவே உள்ளது. டியூபியூலின் புரத ஆக்கத்தின் மூலம் நுண் நுண்குழல் இழைகள் என்று சேர்ந்து கதிர்கோல் இழைகளை உருவாக்குகின்றன செயல்படுத்துகின்றன.
முதிர்ச்சியை ஊக்கப்படுத்தும் காரணிகள்(Maturation promoting Factors-MPF) என்ற ஒரு வகை புரதம் G2 காலநிலையில் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. இக்காரணிகள் இடைக்காலநிலை குரோமோசோம் இழைகள் செறிவுற்று அது மைட்டாடிக் குரோமோசோம்களாக உருவெடுக்க உதவுகின்றன.செல் சுழற்சியில் G1 , S மற்றும் G2 நிலைகளில் DNA சிதைத்தல் தட்டைப்புள்ளி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
14.
| வ. எண் | விலங்கு செல் சைட்டோகைனசிஸ் | தாவர செல் சைட்டோகைனசிஸ் |
| 1. | விலங்கு செல்களில் இது பிளாஸ்மா சவ்வு சுருங்குவதால் நடைபெறுகிறது. | டீலோஃபேஸ் நிலையில் சைட்டோ பிளாசம் பிரியத் துவங்குகிறது. |
| 2. | பிளாஸ்மா சவ்வினால் ஏற்படும் சுருக்கு வளையம் ஆக்டின் மற்றும் மையோசின் சேர்ந்த நுண் இழைகளால் ஆனது. | தாவரங்களில் செல்தட்டு செல்லின் மையப்பகுதியில் தோன்றுகிறது |
| 3. | இந்த இழைகள் உள்நோக்கிச் சுருங்க உதவும் விசை ஒன்று தோன்றி இறுதியில் சைட்டோபிளாசம் இரு சம அளவில் சவ்வினால் பிரிக்கப் படுகிறது. | செல்தட்டு வெளிநோக்கி வளர்ந்து நகர்ந்து பக்கவாட்டில் செல்சுவரை அடைகிறது. இதன் மூலம் செல்சுவரை அடைகிறது. இதன் மூலம் செல்லில் உள்ள சைட்டோபிளாசம் இரண்டாகப் பிரிகிறது. |
15.
| வ.எண் | நேர்முகப்பகுப்பு / எமைட்டாசிஸ் | மறைமுகப்பகுப்பு / மைட்டாசிஸ் |
| 1. | தாய்செல்லின் குரோமோசோம்கள் சமமற்ற அளவில் சேய் செல்களை சென்றடைவதால்,தெளிவிலாச் செல் பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. | தாய் செல்லின் குரோமோசோம்கள் எண்ணிக்கையை சேய் செல்கள் சமநிலை பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. |
| 2. | உட்கருவின் இடைப் பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு இரண்டாக முதலில் பகுப்படைகிறது. | உட்கருவானது புரோஃபேஸ் மெட்டாஃபேஸ், அனாஃபேஸ் மற்றும் டீலோஃபேஸ்போன்ற நிலைகளைக் கடக்கும் போது உட்கரு சவ்வு மறைந்து, குரோமோசோம் சமமாக பிரிகிறது. |
| 3. | பிளாஸ்மா சவ்வில் இறுக்கம் தோன்றி மையம் நோக்கி விரிவடைந்து, இறுதியில் சைட்டோபிளாசம் இரு பகுதிகளாக பிரிந்து இரு செல்கள் உருவாகிறது. | பிரியும் தாவர செல்லின் மையத்தில் செல்தட்டு தோன்றி விளிம்பை நோக்கி நகர்ந்து சைட்டோபிளாசத்தை பிரிவடையச் செய்கிறது. பிரியும் விலங்கு செல்லின் விளிம்பில் இறுக்கங்கள் தோன்றி மையத்தை நோக்கி நகர்ந்து சைட்டோபிளாசத்தை இரண்டாகப் பிரிவடையச் செய்கிறது. |
| 4. | கதிர்கோல் இழைகள் தோன்றுவதில்லை | கதிர்கோல் இழைகள் தோன்றுகின்றது. |
| 5. | குரோமாட்டின் பொருள் செறிவுற்று குரோமோசோம்கள் உருப்பெருவதில்லை | குரோமோசோம்கள் தோன்றுகிறது. |
| 6. | எ.கா. 1. பாலூட்டிகளின் குறுத்தெலும்பு செல்களின் பகுப்பு. 2. பரமேசியத்தின் பெரிய உட்கரு பகுப்பு 3. உயர்நிலை தாவரங்களில் காணப்படும் முதுமை யடைந்து சிதைந்து கொண்டிருக்கும் செல்களில் நிகழும் பகுப்பு |
தாவரத்தின் தண்டு, வேர், நுனி மற்றும் ஆக்குத் திசுவில் நடைபெறுகிறது. |
16.
மியாசிஸ் II, மைட்டாசிஸ் பகுப்பைப் போல் நிகழ்வதனால் மைட்டாடிக் மியாசிஸ் என்று பெயர்.
17.
1.மியாசிஸ் I, புரோஃபேஸ் I, பாக்கிடீன் துணை நிலையில் சகோதரி அல்லாத குரோமாட்டிட்களுக்கிடையில் ஜீன்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
2.இதற்கு குறுக்கெதிர் மாற்றம் என்று பெயர்.
18.
1.வளர்ச்சிக்குத் தேவையான புரதம், லிப்பிடுகள், கார்போஹைட்ரேட்டுகள்.
2. மைட்டோகாண்ட்ரியா, எண்டோபிளாச வலை.
19.
1.கைனேசஸ்
2.சைக்லின்கள்
20.
1. புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான நிகழ்விரு செல் சுழற்சி என்று பெயர்.
2. செல் சுழற்சியின் போது பல மாறுதல்கள் ஏற்பட்டு புதிய செல் தொகை உருவாக்கப்படுகிறது.
21.
1.மைட்டாசிஸ்சின் போது தோன்றிய சேய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை பெற்றோர் செல்லை போன்றே அமைந்துள்ளது.
2.இந்நிலைக்கு இரட்டை மதிய (2n) நிலை என்று பெயர்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards