11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
CI- அயனியின் கடைசி எலக்ட்ரானின் Z செயலுறு மதிப்பு.
8.75
5.75
6.75
7.75
2.
ஃப்ளுரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ப்ளுரின்
அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
அதே அளவு அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
இவற்றில் எதுவுமில்லை
3.
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
போரானை விட கார்பனின் அணுக்கரு மின்சுமை அதிகம்
போரானை விட காப்பரின் உருவ அளவு பெரியது
கார்பன் எலக்ட்ரான் குறை சேர்மங்களை உருவாக்குகின்றது
கார்பன் அயனிகி சேர்மங்களை உண்டாக்கும்
4.
A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2,3p5 ஆகும்.இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.
AB
AB2
A2B
எதுவும் இல்லை
5.
அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்
bibibiium
bididium
didibium
bibibium
6.
உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?
7.
ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக க் காணப்படுகிறது. உன் விடைக்கான காரணத்தை நியாயப்படுத்துக.
8.
சோடியம் மற்றும் மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிட்டால், சோடியத்தை விட மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம். இதற்கான காரணங்களை பட்டியலிடுக.
9.
அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?
10.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.
11.
முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?
12.
எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.
13.
"தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.
14.
வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
15.
இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
16.
குவாண்டம் எண்களை அடிப்படையாகக் கொண்டு தனிம வரிசை அட்டவணையின் 5வது வரிசையில் 18 தனிமங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிறுவுக.
17.
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
18.
அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் நாட்டத்தினை பாதிக்கும் காரணிகளுள் முக்கியமான ஒரு காரணி அணுவின் எலக்ட்ரான் அமைப்பு - விளக்குக.
19.
இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.
20.
இணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலையை வரையறுத்து அதில் காணப்படும் ஆவர்த்தன தன்மையை விளக்குக.
21.
மூலைவிட்ட தொடர்பினை விவரி.
1.
(b)
5.75
2.
(a)
அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
3.
(a)
போரானை விட கார்பனின் அணுக்கரு மின்சுமை அதிகம்
4.
(b)
AB2
5.
(d)
bibibium
6.
(i) தனிம வரிசை அட்டவணையின் இடமிருந்து வலமாகச் செல்லும்போது உட்கருமின்சுமை அதிகரிப்பதாலும், உருவளவு குறைவதாலும் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகரிக்கின்றது.
(ii) அலோகங்கள் அட்டவணையின் வலப்புறத்திலும் உலோகங்கள் இடப்புறத்திலும் காணப்படுகின்றன.
(iii) எனவே அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் அதிகமாகக் காணபப்டுகின்றன.
7.
(i) ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அணு பருமன் அதிகம்.
(ii) லித்தியத்தின் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s1 இது தன் இணைதிற எலக்ட்ரானை எளிதில் இழந்து He-ன் எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
(iii) லித்தியத்தின் 2s1 எலக்ட்ரான் அதன் எலக்ட்ரான்களால் 1s2 பயனுள்ள வகையில் மறைக்கப்படுகிறது. எனவே அதன் மீது செயல்படும் உட்கரு கவர்ச்சி விசை குறைவு.
8.
(i) மெக்னீசியத்தின் உட்கரு மின்சுமை (z=12) சோடியத்தின் உட்கரு மின்சுமையை (z=12) விட அதிகம்.
(ii) சோடியத்தை விட மெக்னீசியம் சிறிய அணு பருமன் கொண்டது.
(iii) Na ன் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s22p63s1 இது எளிதில் 3s1 எலக்ட்ரானை இழந்து நிலையான Ne எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
(iv) Mg ன் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s22p63s2 இது முழுவதும் நிரம்பிய 3s ஆர்பிட்டாலை பெற்று இருப்பதால் நிலைத்தன்மை அடைகிறது.
9.
(i) ஓர் அயனிப் படிகத்தில் உள்ள நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் ஒன்றையொன்றுதொட்டுக்கொண்டிருக்குமாறு கருதும்போது அவற்றின் அயனி ஆரங்களின் கூடுதல் ஆனது அவற்றிற்கிடையேயான அணுக்கருக்களின் தொலைவிற்கு சமமாக இருக்கும்.(ii) ஓர் அயனியின் அபாரமானது அதன் அணுக்கருவின் நிகர மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
10.
(i) லாந்தனைடுகள்: [54Xe] 4f1-145d1 6s2
(ii) ஆக்டினைடுகள்: [86Rn] 5f0-14 6d0-2 7s2
11.
(i) தனிமங்களின் இயற் மற்றும் வேதிப்பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன. ஒரு நேர்மின்சுமையுடைய அயனியில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது, அதன் நடுநிலை அணுவில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தபோதிலும் அவைகளின் அணுக்கரு மின்சுமை சமமாக இருக்கும்.
(ii) எனவே, நேர்மின்சுமையுடைய அயனியின் செயலுறு அணுக்கவர்ச்சி விசையானது, தொடர்புடைய நடுநிலை அணுவின் செயலுறு கவர்ச்சி விசையினை விட அதிகம்.
(iii) எனவே, தொடர்ச்சியான அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் எப்போதும் பின்வரும் ஏறுவரிசையில் அமைகின்றன.
IE1 < IE2 < IE3 ..........
12.
(i) சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள ஒரு அணுவானது, சகப்பிணைப்பில் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினைச் தன்னை நோக்கி ஒப்பீட்டு அளவில் கவரும் பண்பு எலக்ட்ரான் கவர்தன்மை எனப்படும்.
(ii) எலக்ட்ரான் கவர்தன்மை ஒரு அளவிடத்தக்க பண்பு அல்ல.
13.
(i) ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தது.
உதாரணம்:
டெல்லூரியம் (127.6) ஆறாவது தொகுதியிலும் அயோடின் (127) ஏழாவது தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
14.
(i) அனுவின் உருவளவு
(ii) நிகர அணுக்கரு மின்சுமை
(iii) மறைத்தல் விளைவு
(iv) எலக்ட்ரான் அமைப்பு
15.
(i) பெரிலியத்தைக் காட்டிலும் போரான் அதிகமான அணுக்கரு மின்சுமையினைப் பெற்றிருப்பதால் போரானின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம் என எதிர்பார்த்தலுக்கு முரணாக பெரிலியம் அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
(ii) நைட்ரஜன் அயனியாக்கும் ஆற்றல் (1402 Kmol-1) ஆக்ஸிஜனின் அயனியாக்கும் ஆற்றல் (1314 Kmol-1) மதிப்பைக் காட்டிலும் அதிகம்.
16.
(i) ஆஃபா தத்துவத்தின்படி 5வது வரிசையில் ஒன்பது ஆர்பிட்டால்கள் நிரப்பப்படலாம். (ஒரு 5s, ஐந்து 4d மற்றும் மூன்று 6p ஆர்பிட்டால்கள்)
(ii) ஒன்பது ஆர்பிட்டால்கள் அதிகபட்சமாக 18 எலக்ட்ரான்களை அடைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
(iii) எனவே 5வது வரிசையில் ருபிடியம் (z=37) முதல் செனான் (z=54) வரை 18 தனிமங்கள் உள்ளன.
17.
(i) z=118 என்ற தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
86[Rn] 5f14 6d10 7s2 7p6
(ii) தனிம வரிசை அட்டவணையில் இது p-தொகுதியில் இடம்பெற்றுள்ளது. (இறுதி எலக்ட்ரான் p ஆர்பிட்டாலில் சேர்க்கப்படுவதால்)
(iii) வரிசை எண் =7 (n =7 என்பதால்)
(iv) தொகுதி எண் =18
(nd ஆர்பிட்டால் +ns ஆர்பிட்டால் +np ஆர்பிட்டால்)
(10) (2) (6)
18.
(i) அணுவில் எலக்ட்ரான்கள் நிரப்பப்பட்டுள்ள விதம் அணுவின் எலட்ரான் அமைப்பு எனபப்டும்.
(ii) அணுவின் வெளிக்கூட்டில் காணப்படும் எலட்ரான்கள் இணைதிற எலட்ரான்கள் எனப்படுகின்றன.
(iii) இந்த இணைதிற எலட்ரான்களில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் அயனியாக்கும்.
(iv) எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் அயனியாக்கும் ஆற்றலை நோக்கினால் சரிபாதியளவு மற்றும் முழுவதும் நிரப்பப்பட்ட எலட்ரான் அமைப்பு அதிக அயனியாக்கும் ஆற்றலையும், பகுதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பு குறைந்த அயனியாக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
(v) இதேபோல் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானை சேர்த்து அதன் எதிர் அயனியை உருவாக்கும்போத வெளிப்படும் ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் எனப்படுகிறது.
(vi) சரிபாதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பில் மேலும் ஒரு எலக்ட்ரான் அமைப்பு இழக்கப்படும் நிலை ஏற்படும்.
(vii) மேலும் முழுவதும் நிரப்பப்பட்ட நிலையான எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளவற்றுடன் கூடுதலாக ஓர் எலக்ட்ரானை சேர்த்தல் சாதகமானதல்ல.
19.
E1=-2.8 x 10-18 J
E∞=0
ΔE=E∞-E1
0-(-2.8 x 10-18J)
H-ன் அயனியாக்கும் ஆற்றல் =2.8 x 10-18 J
ஒரு மோல் H அணுவின் அயனியாக்கும் ஆற்றல்
=2.8 x 10-18J x 6.023 x 1023
=13.13 x 105 J mol-1
20.
இணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலை:
(i) ஒரு அனுவின் இணைதிறன் என்பது ஹைட்ரஜனுடன் ஒப்பிடும்போது அவ்வணுவின் இணையக்கூடிய திறன் எனபப்டும்.
(ii) பொதுவாக இது இணைதிற கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அல்லது எட்டிலிருந்து அந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை கழித்துவிட்டு வரும் எண்ணிக்கையாகும்.
(iii) இணைதிறனுக்கு பதிலாக ஆக்ஸிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுவது எளிமையானதாக இருக்கும்.
ஆவர்த்தன தன்மை:
(i) ஒரு அணுவின் இணைதிறன் என்பது அதன் இணைதிற கூட்டில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து அமைகிறது.
(ii) ஒரு தொகுதியில் உள்ள தனிமங்களில் இணைதிற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமம் என்பதால், அதிகபட்சமாக இணைதிறன் என்பது மாறாமல் அதே மதிப்பினை பெற்றிருக்கும்..
(iii) எனினும் ஒரு வரிசையில் இணைதிற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இணைதிறனும் அதிகரிக்கிறது.
21.
(i) தனிம வரிசை அட்டவணையில் மூலைவிட்டமாகச் செல்லும்போது இரண்டாம் மற்றும் முன்றாம் வரிசையில் உள்ள தனிமங்கள் சில பண்புகளில் ஒத்துக் காணப்படுகின்றன.
(ii) ஒரு தொகுதியில் காணப்படும் தனிமங்களுக்கிடையே நாம் காணும் பண்புகளைப் போன்ற அதிக அளவில் ஒற்றுமைத் தன்மை காணப்படாவிட்டாலும் கூட, பின்வரும் தனிம இணைகளில் இப்பண்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

(iii) மூலைவிட்டதில் அமைந்துள்ள தனிமங்களின் பண்புகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமைத் தன்மை மூலைவிட்டத் தொடர்பு என்றழைக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards