11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
வெப்ப இயக்கவியல்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியை கூறு.
2.
படிகக்கூடு ஆற்றல் என்றால் என்ன?
3.
எரிதல் என்தால்பியை வரையறு
4.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு
5.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.
6.
சயனமைடை (NH2CN) பாம் கலோரி மீட்டரில், அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி எரிக்கும்போது ஏற்படும் \(\triangle U \) மதிப்பு -742.4 KJ mol -1 ,என கண்டறியப்பட்டது 298K வெப்பநிலையில் பின்வரும் வினையின் என்தால்பி மாற்றத்தை கணக்கிடுக.
\(NH_2CN(S)+\frac{3}{2}O_2(g)\rightarrow N_2(g)+CO_2(g)+H_2O(I)\triangle H=?\)
7.
4.1 வளிமண்டல அழுத்தம்,மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு,3710J ஆற்றலை உறிஞ்சி,2L விரிவடைகிறது.இந்த விரிவடைதலின்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக .
8.
தன்னிச்சை செயல்முறைகள் என்றால் என்ன ? தன்னிச்சை செயல்முறைகளுக்கான நிபந்தனைகளை தருக
9.
ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.
10.
நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.
11.
3.67 லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்திலீன் மற்றும் மீத்தேன் வாயுக்கலவையை 250C மற்றும் 1 வளிமண்டல அழுத்தத்தில் முழுமையாக எரிக்கும் போது 6.11L கார்பன்டைஆக்ஸைடு வாயுவை உருவாக்குகிறது. எரிதலின் போது வெளிப்படும் வெப்பத்தின் அளவை kJ அலகில் கணக்கீடுக.ΔHC (CH4) = − 890 kJ mol−1 மற்றும் ΔHC (C2H4)= −1423 kJ mol−1
12.
ஒரு நல்லியல்பு வாயுவிற்கு \(\triangle H \) க்கும் \(\triangle U \) க்கும் இடையே உள்ள தொடர்பை வருவி. சமன்பாட்டிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் விளக்குக.
13.
CaCl2 உருவாதல்செயல்முறைக்கு பார்ன்-ஹேபர் சுற்றை எழுதுக.
14.
திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றம் \(\triangle G^o\)ஆனது சமநிலை மாறிலி kp உடன் கொண்டுள்ள தொடர்பு
\(\triangle G^o =- RT \ In \ K_p\)
\(k_p =({e \over RT})\triangle G^o\)
\(k_p ={-\triangle G \over RT} \)
\(k_p ={\triangle G \over RT} \)
15.
cgs முறையில் என்ட்ரோபியின் அலகு
Cal K-1mol-1
Cal K-1
JK-1
Cal mol-1
16.
எந்த சூழ்நிலையில் ஒரு அமைப்பின் செயல்முறை தன்னிச்சையானது?
S=+Ve
S=-ve
H=+ve
T2>T1
17.
தன்னிச்சையான வினைகள் நிகழும் விதம்
என்ட்ரோபி அதிகரிக்கும்
வினைவெப்பம் எதிர்குறியீடு
கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறியீடு
இவை அனைத்தும்
18.
Al2O3 மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே -1596kj மற்றும் -1134 kJ எனில் 2AI+Cr2O3 ⟶ 2Cr+Al2O3 என்ற வினைக்கு ΔH மதிப்பு
-1365 kJ
2730 kJ
-2730 kJ
-462 kJ
19.
ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்
w=-Δu
w=Δu+ΔH
Δu=0
w=0
20.
ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது
வெப்பநிலை மாறா விரிவடைதல்
வெப்பநிலை மாறா சுருங்குதல்
வெப்பம் மாறா விரிவடைதல்
வெப்பம் மாறா சுருங்குதல்
21.
மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே, 360 kJ mol-1 மற்றும் 620 kJ mol-1 எனில் C-C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்
170 kJ mol–1
50 kJ mol–1
80 kJ mol–1
220 kJ mol–1
22.
2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு
-250R
-500R
500R
+250R
23.
ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில்
\(\Delta\)H>\(\Delta\)U
\(\Delta\)H-\(\Delta\)U=0
\(\Delta\)H+\(\Delta\)U=0
\(\Delta\)H<\(\Delta\)U
1.
1. வெப்ப இயக்கவியல் மூன்றாம் விதிப்படி தனி பூஜ்ஜிய வெப்பநிலை ஒரு குறைபாடற்ற படிகத்தின் என்ட்ரோபி மதிப்பு பூஜ்ஜியம்.
2. மாறாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படிகளில் ஒரு பொருளின் வெப்பநிலையை தனி பூஜ்ஜிய வெப்பநிலையை குறைக்க முடியாது எனவும் இதனைக் கூறலாம்.
3. ஒரு மிகச் சரியாக அமைந்துள்ள படிகநிலைக்கு.
\(^{lim}_{T\rightarrow 0}S=0\)
2.
1. ஒரு படிகத்தில் உள்ள அயனிகளை அதன் படிக அணிக்கோவை புள்ளிகளிலிருந்து முடிவிலா தொலைவிற்கு நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலின் அளவு அப்படிகத்தின் படிகக்கூடு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
2. இது படிகக்கூடு என்தால்பி எனவும் அழைக்கப்படுகிறது.
3.
ஒரு மோல் சேர்மமானது அதிக அளவு காற்று அல்லது ஆக்ஸிஜனில் முழுமையாக எரிக்கப்படும்போது ஏற்படும் என்தால்பி மாற்றல் எரிதல் என்தால்பி (அ) எரிதல் வெப்பம் என வரையறுக்கப்படுகிறது.
4.
1. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை பின்வருமாறு வரையறுக்கலாம்.
\(\boxed{G=H-TS}\)
2. G ஒரு பொண்மை சார் பண்பாகும். மேலும் G என்பது ஒற்றை மதிப்புடைய நிலைச்சார்பாகும்.
5.
1. ஒரு வகையான ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாறினாலும் ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி ஆகும்.
2. இது " ஆற்றல் அழிவின்மை விதி" என அறியப்படுகிறது.
6.
கொடுக்கப்பட்டவை
\(T=298k;\triangle U=-742.4 KJ mol^{-1} \\ \triangle H=? \\ \triangle =\triangle U+\triangle n_g RT \\ \triangle H=\triangle U+(n_p+n_r)RT \\ \triangle H=-742.4+(2-\frac{3}{2}) \times 8.314 \times 10^{-3}\times 298 \\
=-742.4+(0.5\times8.314 \times 10^{-3}\times 298) \\ =-742.4+1.24 \\ =-741.16 KJ mol^{-1}\)
7.
கொடுக்கப்பட்டவை
n=1mol
P=4.1 atm
V=2 Lit
T =?
q=3710J
\(\triangle S=\frac { q }{ T } \)
\(\triangle S=\frac { q }{ \left( \frac { PV }{ nR } \right) } \)
\(\triangle S=\frac { nRq }{ PV } \quad \)
\(\triangle S=\frac { 1\times 0.082litatm{ K }^{ -1 }\times 3710J }{ 4.1atm\times 2lit } \)
\(\triangle S=37.10J{ K }^{ -1 }\)
8.
தன்னிச்சை செயல்முறை:
குறிப்பிட்ட நிபந்தனையில், எந்தவித புறத்தூண்டு விசையின் உதவியும் இல்லாமல் ஒரு செயல்முறை நிகழுமாயின் அச்செயல்முறை தன்னிச்சை செயல்முறை என அழைக்கப்படுகிறது.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான நிபந்தனைகள்
1. ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருத்தல் அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிழலாம் \((\triangle H<O)\)
2. ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருத்தல் அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிழலாம் \((\triangle S<O)\)
3. கட்டிலா ஆற்றல் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால் அச்செயல்முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.\((\triangle G<O)\)
9.
1. எந்த ஒரு வலிமை மிக அமிலம் மற்றும் வலிமை மிக காரம் ஆகியவற்றின் நடுநிலையாக்கள் வெப்ப மதிப்பு ஏறக்குறைய-57.32 KJ.
2.அமிலம் அல்லது காரத்தின் தன்மையைப் பொறுத்து இம்மதிப்பு மாறுவதில்லை.
சான்று:
(i) \(HCl_{(aq)}+KOH_{(aq)} \rightarrow KCl_{(aq)}+H_2O_{(l)}[ \)
\(\triangle H \simeq -57.32 kJ\)
(ii) \(HNO_{3_{(aq)}}+KOH_{(aq)} \rightarrow KNO_{3_{(aq)}}+H_2O_{(l)}\)
\(\triangle H \simeq -57.32 kJ\)
(iii) \(H_2SO_{_4{(aq)}}+2KOH_{(aq)}\rightarrow K_2SO_{4_{(aq)}}+2H_2O_{l}\)
\(\triangle H \simeq -57.32 kJ\)
காரணம்:
1. அமில கரங்கள் பற்றிய அர்ஹீனியஸ் கொள்கை மூலம் இதற்கான காரணத்தினை விளக்க முடியும்.
2. இக்கொள்கைபடி ""வலிமை மிக அமிலங்கள் மற்றும் வலிமை மிகு அமிலங்கள் மற்றும் வலிமைமிகு காரங்கள் அவற்றின் நீர்க்கரைசல்களில் முற்றிலும் அயனிகளாக பிரிகையுற்று முறையே மற்றும் அயனிகளைத் தருகின்றன.
3.நடுநிலையாக்கல் வினை
\(H^{+}_{(aq)}+OH^+_{(aq)} \rightarrow H_2O_{(l)}\) \(\triangle H = -57.32 kJ\)
10.
நிலைச்சார்பு:
நிலைச்சார்பு என்பது அமைப்பின் ஒரு வெப்ப இயக்கவியல் பண்பாகும். இது அமைப்பின் கொடுக்கப்பட்ட ஒரு நிலைக்கு ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய பின்பற்றப்பட்ட விதியினை பொறுத்து அமைகின்றன.
எடுத்துக்காட்டு:
1. அழுத்தம் (P)
2. கனஅளவு (V)
3. வெப்பநிலை (T)
4. அகஆற்றல் (U)
5. என்தால்பி(H)
6. கட்டியா ஆற்றல்(G)
வழிச்சார்பு:
வழிச்சார்பு என்பது ஒரு வெப்ப இயக்கவியல் பண்பாகும். அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றமடையும் வழியினைப் பொறுத்து இதன் மதிப்பு அமையும்.
எடுத்துக்காட்டு:
1. வேலை (W)
2. வெப்பம் (q)
11.
ΔHC (CH4) = − 890 kJ mol−1
ΔHC (C2H4) = −1423 kJ mol−1
CH4 + 2O2 → CO2 + 2H2O
C2H4+3O2→ 2CO2 + 2H2O
x + 2 (3.67−x) = 6.11 லிட்டர்
x + 7.34 − 2x = 6.11
7.34 − x = 6.11
x = 1.23 லிட்டர்
கொடுக்கப்பட்டக் கலவையானது 1.23 லிட்டர் மீத்தேனையும் 2.44 லிட்டர் எத்திலீனையும் கொண்டுள்ளது. எனவே
ΔHC=\([\frac{ΔHC(CH_4)}{22.4}\times{x}]+[\frac{ΔHC(C_2H_4)}{22.4}\times(3.67-x)]\)
ΔHC=\([\frac{-890kJmol^{-1}}{22.4}\times1.23]+[\frac{-1423}{22.3}\times(3.67-1.23)]\)
=ΔHC = [−48.87 kJ mol−1]+ [−155kJ mol−1]
ΔHC = −203.87 kJ mol−1
12.
1. ஒரு அமைப்பானது மாறாத அழுத்தத்தில் ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றத்திலிருக்கும்போது ஏற்படும் என்தால்பி மாற்றத்தை பின்வருமாறு கணக்கிட முடியும்
H=U+PV
2. ஆரம்ப நிலையில்
H1=U2+PV1 ............(1)
3. இறுதி நிலையில்
H2=U2+PV2 ............(2)
4. என்தால்பியில் ஏற்படும் மாற்றம் (2)-(1)\(\Rightarrow\)
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+P\triangle V\).....(3)
5. வெப்ப இயக்கவியல் முதல் விதிப்படி
\(\triangle U=q+w\) .....(4)
6. சமன்பாடு (4)-ஐ (3)-ல் பிரதியிட
\(\triangle H=q+w+p \triangle v\) .....(5)
இங்கு
w=-\(p \triangle v\)
7.சமன்பாடு (5)ல் பிரதியிட

\(\triangle H=q_p\) ....(6)
qp=மாறாத அழுத்த நிலையில் உறிஞ்சப்பட்ட வெப்பம். இது உள்ளுறை வெப்பம் அல்லது வெப்ப அடக்கம் எனப்படுகிறது.
8. மாறாத வெப்ப அழுத்த நிலையில் ஒன்றுடன் ஒன்று வேதிவினை புரிந்து வாயு நிலையுள்ள விளைபொருட்களை தரும் வாயுக்கள் அடங்கிய மூடிய அமைப்பு ஒன்றை கருதுக.
9. வினைபடு வாயுக்களின் ஆரம்ப கனஅளவு Vi எனவும் வினைவிளை வாயுக்களின் கனஅளவு Vf எனவும் அவற்றின் மோல் எண்ணிக்கை முறையே ni மற்றும் nf எனக் கொண்டால்
10. வினைபடுபொருட்களுக்கு (ஆரம்ப நிலை)
PVi =ni RT .........(7)
11.வினைபடுபொருட்களுக்கு (இறுதி நிலை)
PVf =nf RT .........(8)
12. சமன்பாடு(8)-(7) எனில்
P(Vf- Vi) = (nf- ni) RT
P\(\triangle\)V=\(\triangle\)n(g)RT.......(9)
13.சமன்பாடு (9) ஐ (6)ல் பிரதியிட
\(\triangle\) H=\(\triangle\)U+\(\triangle\)n(g)RT..........(10)
13.
CaCl2 -ன் படிகக்கூடு ஆற்றலை கணக்கிடுவதால் பார்ன்-ஹோபர் சுற்றை பின்வருமாறு பயன்படுத்தலாம்.

1. \(\triangle ^oH_1=Ca_{(s)}\) பதங்கமாதல் வெப்பம்
2.\(\triangle ^oH_1=Ca_{(s)}\)பிரிகையடைதலுக்கான என்தால்பி மாற்றம்
3.\(\triangle ^oH_3=Ca_{(g)}\)அயனியாக்கும் ஆற்றல்
4.\(\triangle ^oH_4=2Cl_{(s)}\)எலக்ட்ரான் நாட்டம்
5.\(\triangle ^oH_5=Cacl_{2}\) உருவதாலுக்கான படிகக்கூடு ஆற்றல்
\(\triangle ^oH_f=\triangle ^oH_1+\triangle ^oH_2+\triangle ^oH_3+\triangle ^oH_4+\triangle ^oH_5\)
14.
(a)
\(\triangle G^o =- RT \ In \ K_p\)
15.
(b)
Cal K-1
16.
(a)
S=+Ve
17.
(d)
இவை அனைத்தும்
18.
(d)
-462 kJ
19.
(a)
w=-Δu
20.
(c)
வெப்பம் மாறா விரிவடைதல்
21.
(c)
80 kJ mol–1
22.
(b)
-500R
23.
(d)
\(\Delta\)H<\(\Delta\)U
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards